சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)
ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)
உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.பிரிவோம் என நினைத்திருந்தால் உன்னைப் பற்றிய நினைவுகள்எனக்குள் வேர்விட்டிருக்காது காதல் பூத்தும் இருக்காது கொட்டியச் சிதறிய சருகுகள் மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோலஉன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளேபுதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டுஉன் நினைவுகளை என்னுள் ஆழமாய் வேறூன்றச் செய்கின்றன.தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.
இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்இருந்தன எனக்குஉன்னிடம் பேசும் வரைபேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்காரணமே தெரியாமல்.பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள் ஏராளம்.இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்இருந்தன எனக்குஅதை எடுத்து சாப்பிடும் வரைசாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்காரணமே தெரியாமல்..வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்ருசி அதிகம்.கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோஎனப் பார்த்திருப்பதும்மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில் எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத் தேடுவதுமேஎன் வாடிக்கையாகிப் போகிறதுகவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.
இலையுதிர் காலங்களுக்குப் பிறகு வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.காத்திருக்கிறேன் வரும்வரைஎனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)
டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதைடிஸ்கி: எனக்கான ஆப்பாயில்