Saturday, August 11, 2007

பண வீக்கம் & மதிப்பு சில சந்தேகங்கள்

நண்பர்களே சில சந்தேகங்கள் இருக்கிறது. யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!

1) பண வீக்கம் என்றால் என்ன? அது குறைவது நல்லதா? அல்லது வீங்குவது நல்லதா?

2) ஒரு நாட்டின் பண மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது. அதன் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் ஏன்?

3) அன்னிய செலவானி மதிப்பு என்றால் என்ன?

(கட்டையால் அடித்தால் வீங்கும் அதுதான் வீக்கம் பதில் சொல்லாமல் ஒழுங்கா சொல்லுங்க)

Tuesday, August 7, 2007

கட்டுடைக்கும் சுகுணாதிவாகர்,அய்யனாருக்கு ஒரு பகிரங்க சவால்

நான் அடிக்கடி நம்ம அய்யனாரிடம் பேசும் பொழுது கேட்பேன் என்ன அய்யானார் நீங்கள் எழுதும் கவிதைகள் பல புரியாமையும், புரியும் வார்தைகள் கொஞ்சம் மோசமாகவும் இருக்கிறதே என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் நான் சுகுணா திவாகர், எல்லாம் ஒரெ (ரு) மாதிரியாகதான் எழுதுவோம். நாங்க எல்லாம் கட்டுடைக்கும் ஆளுங்கள் என்பார்.
அதனால் அவர்களுக்கு நான் வைக்கும் சவால்..

இது நம்ம கவிதாயினி காயத்ரி தலைக்கு பொருந்தாத கீரிடம் என்று எழுதிய விமர்சனத்துக்குகாக ஆட்டோ அனுப்பி சரியாக கவனித்தார் ஒரு சக பதிவர்.
அதனால் அவர் இருக்கும் நிலை. சுகுணா திவாகர் நீங்க இந்தியாவில் இருப்பதால் முடிந்தால் இந்த கட்டை உடையுங்கள் பார்கலாம்,

வெறும் கையால் முடியவில்லை என்றால் சுத்தியல், கடப்பாறை எல்லாம் எடுத்துக்கலாம் ஆட்சேபனை இல்லை எங்களுக்கு தெரிய வேண்டியது நீங்கள் எப்படி கட்டுடைப்பீர்கள் என்றுதான்.

அய்யனார் இனி உங்களுக்கு அடுத்த சவால். எங்க இந்த கட்டை வெறும் கையால் உடைக்கனும் அப்பதான் நாங்க நீ கட்டுடைக்கும் ஆள் என்று ஒத்துகொள்வோம்...


(சுகுணா திவாகர் கோச்சுக்கமாட்டீங்க என்று நினைக்கிறேன்:)

Monday, August 6, 2007

என் பார்வையில் பதிவர் பட்டறை + பாலபாரதிக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை பதிவர் பட்டறை என் பார்வையில்.







பால பாரதிக்கு சில ஆலோசனைகள்:
1) மேற்கண்ட படங்கள் என் பார்வையில் இப்படிதான் நான் எங்க வீட்டில் இருந்து பார்தால் தெரிந்தது, ஆகையால் அடுத்த முறை பட்டறை நடத்தும் பொழுது எங்கிருந்து பார்தாலும் தெரியும் படி உயரமான இடத்தில் நடத்தவும்.
(தள உலகில் இருக்கும் அனைவருக்கும் நீ கண்ணுக்கு தெரிவாய் ஏன்னா நீதானே எங்கள் ஸ்டார் மற்றவர்களும் தெரியும் படி ஏற்பாடு செய்யவும்.)
***************************************
2) உலகெங்கும் இருக்கும் வலை பதிவர்களும் பங்கு பெற வசதியாக நீங்கள் இலவச விமான டிக்கெட்டும் கூட ரெண்டு டிக்கெட்டுகளும் (குடும்பத்துக்குப்பா தப்பா நினைக்காதிங்க) அனுப்பி அவர்களையும் பங்கு பெற செய்யவேண்டும் (உன் சொந்த செலவில்) என்பதுதான் உன் கணவு என்று எனக்கு தெரியும் அதை உலகுக்கும் சொல்லிவிடு தள.
************************************
3) சாப்பாட்டுக்கு ஒரு டோக்கன் மட்டும் வாங்கி கொண்டு இரண்டாம் முறை சாப்பிட போன பொழுது "........................" வாங்கியதை நான் வெளியில் சொல்ல மாட்டேன், ஆனால் எங்கள் பா.க.ச தலைவருக்கே இந்த கதியா என்று அனைவரும் கொந்தளித்து போய் இருக்கிறோம், ஆகையால் அடுத்த முறை இரண்டு டோக்கன் கொடுக்கவும்.
************************************
4)இந்த முறை இந்தியன் எக்ஸ்பிரஸில் மட்டும் தான் நம் பா.க.ச பெயர் வந்துள்ளது அடுத்த முறை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கன்யாகுமரி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்பதி எக்ஸ்பிரஸ் முடிந்தால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸிலும் உன் பெயர் வர செய்யவேண்டிய பொருப்பை பொன்ஸ் அக்கா, வினையூக்கு, JK, சிபி ஆகியோருக்கு கொடுத்துவிடவும்.
**************************************
இங்கனம்
அன்புடன்
தலைவர்
பா.க.ச கிளை
துபாய்.

தொலைந்து போன......சில

டைட்டில் ஓடுகிறது 11.11.2004 அன்றுகாலை அந்த இடமே பரப்பரப்பாக இருக்கிறது.எல்லோரும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

மீசைகாரர் எலே அங்க என்ன டா நின்னுக்கிட்டு மச மசன்னுபேச்சு போய் வேலைய கவனிங்கடா, என்று ஓடி ஆடி விரட்டிகொண்டு இருக்கிறது.

வாங்க வாங்க என்று எல்லோருக்கு சிரித்த முகத்துடன் பன்னீர் தெளித்துகல்கண்டு, சந்தனம் கொடுக்கும் பட்டுசேலை கட்டிய பெண்கள்.

குளேசப்பில் அருண் vs புனிதா திருமண நாள் 11.11.2004 இடம்கும்பகோணம் ராணி மஹால், தெர்மாகோல் கொண்டு செய்ய பட்டதட்டி தெரிகிறது.
நேரம் ஆச்சு பெண்னை அழைச்சுகிட்டு வாங்க...
மாங்கல்யம் தந்துநானே .....கெட்டிமேளம் கெட்டிமேளம்.

................................................................................
அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு போட்டு பார்ப அப்படி என்னத்த இதில இருக்கு...

உங்க அம்மாவின் பணிவு!!!

Sunday, August 5, 2007

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

அன்புள்ள அண்ணி
இதோ இன்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. உங்கள் முகத்தை பார்க்காமல் நாட்களை ஓட்டிவிட்டேன். உங்கள் முகத்தை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. இன்று நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்பதால்.

அவன் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னான் உங்கள் காதலை பற்றி. அண்ணி பெயர் என்ன என்று கேட்ட பொழுது சமீரா பானு என்றான், என்ன டா எப்படி டா மதம் விட்டு மதம் கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா என்றதற்கு அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

முதன் முதலாய் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்து வந்த பொழுது நீங்கள் முகத்தைமறைக்க முயன்றீர்கள், அப்பொழுது உங்களை தடுத்து இவன் எனக்கு தம்பி இது போல் மீண்டும்
ஒரு முறை செய்யாதே என்றான். அப்பொழுது கேட்டிர்கள் "ஏங்க கொஞ்சம் இவங்க கிட்ட சொல்ல கூடாதா இந்த அடிதடி எல்லாத்தையும் விட சொல்லி. இத பாருங்க கையில் எப்படி அடி பட்டு இருக்கு என்று அவன் அடி பட்ட கையை காட்டினீர்கள்" நேற்று நடந்த சண்டையே எனக்காகத்தான் என்று எப்படி நான் உங்களிடம் சொல்ல முடியும்.

அன்று தேதி சரியாக தெரியவில்லை டேய் மாப்பிள்ள பானுவ கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று நினைக்கிறேன் அவுங்க வீட்டுல ஓக்கே சொல்லிட்டாங்க இதுக்கு மேல காத்திருக்க முடியாதுன்னுட்டாங்க. அடுத்த மாசம் அவுங்க அப்பா இந்தியா வருகிறார் அப்ப கல்யாணம் வைக்கனும் என்கிறார்கள். என்ன சொல்கிறாய் என்றான். எப்படி டா இன்னும் நீயும் செட்டில் ஆகல முஸ்லீமா மாறி கல்யாணம் செஞ்சா பின்னாடி நம்ம வீட்டில் பிரச்சினை என்றேன். அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

சரி டா அண்ணனுக்கு தெரிந்தால் என்றதற்கு அவன் ரிலீஸ் ஆகி வருவதற்கு இன்னும் ஒரு 6 மாசம் ஆகும் அத பிறகு நாகூர் போய் கல்யாணம் நம்ம வீட்டுல தங்கச்சி கல்யாணம் முடியும் வரை சொல்லவேண்டாம், அதன் பிறகு சொல்லிக்கலாம் பானு கல்யாணத்துக்கு பிறகு அங்கேயே இருக்கட்டும் என்றான்.

அன்று மதம் மாறும் சடங்குகள் முடிந்த பின் அன்று உங்கள் கல்யாணம் நடந்தது. வீட்டுக்கும் வந்தோம், அவன் வீட்டில் என்னோடு ஊட்டிக்கு போவதாக சொல்லிவிட்டு இரவு உங்கள் வீட்டுக்கு வந்து விட்டு விட்டு ஏதோ பெரிய சாகசம் நடத்தியது போல் மகிழ்ச்சியோடு திரும்பினேன்.
அந்த மகிழ்ச்சி 1 வருடம் கூட நிலைக்க வில்லை ஆகஸ்ட் 6 காலை 11.30 மணிக்கு நண்பனிடம் இருந்து போன், மாப்பிள்ளை நம்ம நம்ம செந்தில் பானு, வீட்டுக்கு போய்ட்டு திரும்ப வரும் பொழுது .........

உன் காதல் கல்யாணம் சீக்கிரம் முடிந்தாலும் நீ செய்து வைத்த காதல் திருமணங்களில் இன்னும் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய டா என் அருமை நண்பனே.

(என்றும் உன் நீங்காத நினைவுகளுடன், பூண்டி கல்லூரி நண்பர்கள்).

Friday, August 3, 2007

இன்னொரு உலகம்

பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு
என் அருகில் வந்து காலில் விழும்
ஒரு அறுபது வயது வாலிபர்.

குச்சியை ஊன்றிய படி எழுந்து
நின்று தத்தி தத்தி என் அருகில் வந்து
என் கையை தடவி தான் போட்டு இருந்த
மோதிரத்தை எனக்கு மாட்டி விடும்
இன்னொரு எழுபது வயது வாலிபர்.

கட்டு கட்டாக பணத்தை டோக்கனாக
மாற்றி வைத்து வீசும் மற்றொறு
ஐம்பது வயது விடலை.

முதல் வரிசை சில இருக்கைகள் இது
போன்ற வாலிபர்களுக்காகவே
முன்பதிவு செய்யபட்டு காத்திருக்கிறது.

கடைசி வரிசையில் அமர்ந்து ஆரஞ்சு பழ
சாராயம் குடிக்கும்இருப்பத்தைந்து
வயது பெரியவர்கள் கூட்டம்.
குடும்பத்தோடு வந்து ஆணுக்கு பெண்
சமம் என்று பீர் ஜூஸ் குடிக்கும் குலவிளக்குகள்.

உடை குறைச்சலாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் அதிகமாக
உடுத்து அப்பொழுதான் செயின் கிடைக்கும்
என்று ஆலோசனை சொல்லும் சக தோழி.

இந்த உலகம் விந்தையாகவே
இருக்கிறது என்று அவள் உறங்கியும்
உறங்காமல் விடை தேடும்
நாட்டியகாரியின் மனசாட்சி.

Thursday, August 2, 2007

வார்தைகள் இல்லை

ஆசிப் அண்ணாச்சி என்ன சொல்வது, எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.