Wednesday, July 25, 2007

குங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி

இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தழல் ரவி இதுபோலவே ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்தும் நண்பர்கள் & பாசகார குடும்பம்.

தலைவர் கொரியா போனதில் இருந்து ஒரு மார்கமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே!!!


நேற்று குங்கும் இல்லை என்று போட்டோ போட்டவர் இன்று அந்த பெண்களுக்கு இவர் பிறந்த நாள் பரிசாக குங்குமம் வைத்துவிட்டு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் எப்படி என்று பாருங்கள்...வயிறார சாரி மனமார வாழ்துங்கள்.






Monday, July 23, 2007

பசி











Friday, July 20, 2007

தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...

கடைசியாக தீர்மானித்து விட்டேன் தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுவது என்று. இத்தனை நாள் நீங்கள் எனக்கு கொடுத்து வந்த ஆதரவையும் மீறி, உங்கள் அன்பையும் மீறி இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டேன்.

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு இந்த முடிவு,
பல நாள் இதனால் தூங்காமல் இருந்திருக்கிறேன்,
ஏன் இப்படி? எதனால்? எதற்கும் விடை இல்லை.

ஏன் இந்த முடிவு என்று பலருக்கு ஆச்சிர்யமாக இருக்கலாம்,
இருந்தாலும் வேறு வழி இல்லை.

பல பேர் பல முறையில் விடை பெற்று இருக்கிறார்கள், நான்
கொஞ்சம் வித்தியாசமாக விடை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு சந்தோசமாக விடை கொடுங்கள்.


1 + 1 = ???

தயவு செய்து விடை கொடுங்கள்.

(இளா போட்டோம்ல ஒரு மொக்கை)

Thursday, July 19, 2007

தொட்டில் கைதி------no குசும்பு

இதை பல நாட்களாக கவனித்து வந்தாலும் இன்றைக்கு தான் கோபப்படும் படி அதை பார்க்க நேர்ந்தது.

அப்படி என்ன பார்த்தாய் என்கிறீர்களா, குழந்தையை வைத்து தள்ளி போகும் தள்ளு வண்டி, ஒரு 1 வயது குழந்தை அழகா, கொழு கொழுன்னு இருந்துச்சு. பார்க்கவே ஆசையா இருந்துச்சு தள்ளிக்கிட்டு போய் கிட்டு இருந்தவன் பெடஸ்ட்ரீயன் கிராஸ்யை கவனிக்காமல் இறங்கினப்ப டப்புன்னு வண்டி
குப்புற விழுந்துட்டு, விழுந்ததுல குழந்தைக்கு அடி பட்டுச்சா இல்லையான்னு தெரியவில்லை வண்டியை தூக்கி நிமிர்த்தி விட்டு அப்படியே அந்த குழந்தையை அதிலேயே வைத்து ரெண்டு பேரும் சண்டை, அட பாவிங்களா தூக்கி புள்ளைய எங்க அடி பட்டு இருக்குன்னு பார்பீங்களா அத விட்டுட்டு சண்டை.
மிஞ்சி மிஞ்சி போனா அந்த குழந்தை என்ன ஒரு ஐந்து கிலோ இருக்குமா, கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறந்து சில மாசமே ஆன குழந்தைகளை அந்த வண்டியில் வச்சு தள்ளிக்கிட்டு
போற அழகை பார்கனுமே, அப்படியே பத்திக்கிட்டு வரும்.

பச்ச புள்ளய அந்த வண்டியில் போட்டு கைகளை ஒரு டேப்பால் அசைக்க முடியாத படி கட்டி, கால்களை கட்டி,பார்க்க ஏசுவை சிலுவையில் அறைந்த மாதிரி. அந்த வண்டிய ரோட்டுலேந்து நடை பாதைக்கும், பின் ஷாப்பிங்
மால்க்கும் அங்க இங்கன்னு போட்டு அலைகழிச்சு, அந்த பிஞ்சு குழந்தைகளை பார்த்தா பாவமா இருக்கு, வண்டியில் போகும் பொழுது குலுங்கினா நமக்கே இப்படி இருக்கே குட்டி பாப்பாங்களுக்கு எப்படி இருக்கும், அத அழகா அம்மா கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போன பெண்கள் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொடிந்து போய் விடும் போல...

Wednesday, July 18, 2007

டிராண்ஸ்பார்மர்

எனக்கு என்னவென்று தெரியவில்லை நம்ம சனி பகவான் உச்சத்துல நின்னுக்கிட்டு டிஸ்கோ ஆடுகிறார், ஆமாங்க என்னத்த சொல்லுறது எங்க போனாலும், ஆப்பு தேடி வந்து பர்பெக்டா அது அது இடத்துல பிக்ஸ் ஆகிக்கிறது.


இப்படி தான் போன வாரம் மின்னலின் அன்பின் அனைவரும் விறைத்து வந்தது தெரியும், தெரியாதவுங்க இங்க படிச்சுக்குங்க.

அங்க எல்லாரும் போய் ஒரு இடத்துல போய் உட்கார்ந்தாங்க நான் மிகவும் கஷ்டப்பட்டு உட்கார முடியாம உட்கார்ந்தா அங்க பார்த்தா கட்டெறும்பு புற்று இருக்கனும் அதுங்க பங்குக்கு ரெண்டு கடிச்சுடுச்சு ய்ப்பா புள்ளைங்களா எறும்பு கடிக்குது இங்க படுக்காதீங்கய்யான்னா எங்களை எல்லாம் கடிக்காது என்று படுத்து இருந்தாங்க அது மாதிரி அவுங்கள எல்லாம் கடிக்கவில்லை. இந்த கடியாவது பரவாயில்லை



போன வாரம் போய் பார்கலாம் என்று பார்த்த படம் டிரான்ஸ் பார்மர்ஸ்.
அவன் அடிச்ச ஆப்பு இருக்கே, அம்மா சாமி எங்க தானே தலைவர் விஜயகாந்தின் நரசிம்மாவை கூட 10 முறை பார்த்துவிடலாம் இத ம்ம்ம்ம்ம்

கதை முதல்ல Gulfல் ஸ்டார்ட் ஆகிறது, Gulf டேரா போட்டு இருக்கும் அமெரிக்கா ஆர்மி இருக்கும் இடத்துக்கு சொன்ன பேச்சு கேட்காம ஒரு பிளைட் வருகிறது அதை எல்லாரும் ரவுண்ட் கட்டுகிறார்கள், அது என்னடான்னா டக்குன்னு காத்தாடி எல்லாத்தையும் டக் டக்குன்னு சுருட்டிக்கிட்டு கம்பீரமாய் ஒரு ரோபவா எழுந்து நிக்குது, ஆகா படம் ஜூப்பர் போல என்று நினைத்தேன். அங்க இருக்கிற எல்லாத்தையும் காலி செய்கிறது அந்த ரோபோ.

அதே நேரத்தில் காலேஜில் படிக்கும் ஒருவன் தாத்தாவோட கண்ணாடிய ஏலம் விட பார்கிறான், அந்த கண்ணாடிக்குள் தான் எல்லா மர்மமும் அடங்கி இருக்கு ,அந்த கண்ணாடிய தேடி கெட்ட ரோபோஸுக்கும் , நல்ல ரோபோஸுக்கும் போட்டி. நல்ல ரோபோ என்ன செய்கிறது இந்த பேராண்டிக்கு கார் மாதிரி உருவம் எடுத்து வந்து மக்களை காக்க வந்து
இருக்கிறது நல்ல ரோபோ.

பிறகு வழக்கம் போல என்ன செய்வது என்று பெண்டகனில் மண்டைய உடைத்து கொள்கிறார்கள்.

இந்த படத்துல என்ன விசேசம் என்றால் நல்ல ரோபோங்களுக்கும் கெட்ட ரோபோங்களுக்கும் நடக்குற சண்டையில் உடைகிறது நம்ம மண்டை அப்படி இருக்கிறது சண்டை.

கடைசியா நம்ம ஹீரோ ரக்பி பால எடுத்துகிட்டு ஓடிவது போல் ஒரு சதுர வடிவ டிரான்ஸ்பார்மரை எடுத்துக்கிட்டு ஓடுகிறார் ஓடுகிறார் வாழ்கையின் விளிம்புக்கே ஓடுகிறார். கடைசியா அத கெட்ட ரோபோ நெஞ்சுக்கு நேரா காட்டி அத சாக அடிக்கிறார் ஹீரோ. (நம்மளையும் தான்).

கிராபிக்ஸ் கலக்கலா இருக்கு...அதுக்கா படம் பார்க்க போகலாம் என்று முடிவு செஞ்சீங்கன்னா. "விதி வலியது"

Tuesday, July 17, 2007

ஜெயா டீவி பின்னொலி

வணக்கம் நேயர்களே! இது கடந்த வாரத்தில் ஓளி பரப்பான நிகழ்சிய பற்றி ஆயிரகணக்கான நேயர்கள் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் தெரிய படுத்தி இருக்காங்க அதை பற்றிய நிகழ்சி தான் இந்த பின்னொலி.

நிகழ்சிக்கு போகலாம் ...ம்ம்ம் படிங்கம்மா.

சார் குவாட்டர் கோவிந்தன் என்பவர் எழுதி இருக்கிறார்.
நான் தவறாமல் ஜெயா டீவியை பார்த்து வருகிறேன், அதில் ஒளிப்பரப்பாகும் எல்லா நிகழ்சியும் நன்றாக இருக்கிறது, குறிப்பா நைட் 12 மணிக்கு மேல போடும் மிட் நைட் மசாலவை, சிக்கன் மசால வச்சுக்கிட்டு ஒரு குவாட்டர் பாட்டிலோடு பாரு சார் அப்ப தான் அதன் அருமை தெரியும், என் கூட்டாளிங்க கூட இதையே நீங்க "புல்" டைம்மா போட மாட்டீங்களான்னு கேட்கிறாங்க சார்.

நன்றி குவாட்டர் கோவிந்தன் உங்கள் யோசனைக்கு நாங்கள் செயல் படுத்த முயற்சி செய்கிறோம்.

அடுத்து வியாழன் அன்று ஓளி பரப்பான வலைப்பூ பற்றி பல கடிதங்கள் வந்து இருக்கிறது.
அதுல குறிப்பா பூக்கடை தெரு பூபாண்டி என்பவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

ஐயா கடந்த பல வருடங்களாக உங்க டீவியில் ஓளி பரப்பாகும் பல விவசாய நிகழச்சிகளை பார்த்து சிறந்த முறையில் பூ விவசாயம் செய்து பூ வியாபாரம் செய்து வருகிறேன், ஆனால் வியாழன் அன்று ஒளி பரப்பான வலைபூ பற்றி நிழச்சியில் வந்த பால பாரதி என்பரிடம் பல பேர் பல கேள்வி கேட்டாங்க(ஒழுங்கா பதில் சொல்ல அது வேற விசயம்), ஆனா வலை பூ பதிய விதை எங்கே கிடைக்கும், அது பூக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்ற கேள்விய கேட்கவில்லை, அதன் விபரங்களை கேட்டு சொன்னால் உபயோகம் ஆக இருக்கும்.

நன்றி பூபாண்டி, பல பேர் பல கேள்வி இது சம்மந்தமாக கேட்டு இருக்கிறார்கள் அவரிடம் கேட்டு விவரம் புரிந்தால் சொல்கிறோம்.

(முதல் கேள்வியும் அடுத்த கேள்வியும் ஏதேச்சையாக தான் அடுத்து அடுத்து படிக்க பட்டது இதில் எந்த உள் குத்தும் இல்லை)

Friday, July 13, 2007

ஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு

வியாழக் கிழமை
மாலை 4 மணி போல் மகேந்திரன்.பெ போன் செய்து இன்று இரவு சந்திக்கலாமா என்றார், சரி சந்திப்போம் அபி அப்பாவும் அவர் இருக்கும் அல்கூஸ் (அவர் தங்கி இருக்கும் இடம்)வர சொல்லி இருக்கிறார், நீங்க என் ஆபிஸ்க்கு மாலை 7 மணிக்கு வந்தால் நாம் இருவரும் அங்கு செல்வோம் என்று "பிளான்" செஞ்சு மகி சரியாக 9.45 க்கு வந்தார், 8 மணிக்கு வண்டி அனுப்புகிறேன் என்று சொல்லிய அபி அப்பா சரியாக 7.59 க்கு போன் செய்து நீங்க இரண்டு பேரும் ஒரு டேக்ஸியில் வந்து விடுங்க காலையில் இங்கிருந்து மின்னலை பார்க்க போகலாம் என்றார். அடிக்கடி தம்பி போன் செய்து அபி அப்பாவை நம்பி போகிறாயா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்றார்.

ஒரு வழியாக என் ஆபிஸ் காரிலேயே அபி அப்பா இருக்கும் இடம் அடைய 10.15 ஆனது. அவர் காத்திருந்து எங்களை அழைத்து சென்றார், பின் சாப்பிட்டு விட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து மூன்று பேரும் பேசினோம், பல முறை "HOT" ஆனா விவாதங்கள் நடந்தது இது இப்ப முடியாது போல இருக்கு என்று நான் ஒரு இரண்டு மணி போல் கிளம்ப முயன்ற பொழுது வலை பதிவர் மாநாடு நடக்கும் பொழுது வெளி நடப்பு செய்தால் குசும்பனை கொளுத்துவோம் என்றார்கள், முதல் அதிர்சி இப்ப நாம பேசிக்கிட்டு இருந்தது மாநாட்டிலா என்று. பின் ஒரு வழியாக 3 மணிக்கு நான் போய் படுத்தேன், இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று . இப்படியாக முதல் வலை பதிவர் (????) முடிந்தது.

வெள்ளி கிழமை

காலை சரியாக 7 மணிக்கு எழுந்து அபி அப்பாவை தேடினால் அபி அப்பா மாநாடு நடந்த இடத்திலேயே ரொம்ப டயர்ட் ஆகி படுத்து இருந்தார். போய் எழுப்பினால் குசும்பன் எப்ப வந்திங்க என்றார்(??? அவர நான் எழுப்ப பட்ட பாடு இருக்கே அத எழுதனும் என்றால் மூன்று பக்கம் ஆகும்). பின் ஒரு வழியாக எல்லாரும் வந்து புறப்பட மணி 11 மணி ஆகி விட்டது , பின் அங்கிருந்து அனைவரும் மின்னுது மின்னல் இருக்கும் அல் அலைன் போய் சேருவதற்குள் மணி 1 ஆகி விட்டது.

அங்கு மின்னல் வேலை செய்யும் fun city சென்றோம், மின்னல் லேசாக ஆட்டம் கண்டார் ஏன் ஏன்றால் போய் இறங்கியது 14 பேர். அனைவரையும் அங்கு இருக்கும் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து சென்று முழு கோழி(கவிதாயினிக்கு கொடுக்கு) ஒன்றை சாதத்தில் புதைத்து வைத்து அவர் அன்பை அதில் போட்டு கலக்கி ஒரு விருந்து கொடுத்தார். (இது வரை நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு!!!)

சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன் நான் கேட்ட படி தாயம் விழுந்தது அதனால் சொன்ன படி தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றோம்.

மின்னல் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை எங்களை எல்லாம் ஒரு பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்றார்.அப்பயே எனக்கு மாப்பு வைக்க போறான் ஆப்பு என்று தம்பியிடம் சென்னேன். உள்ளே போனால் உறை பணி விளாயாட்டு மைதானம் நாம எல்லாம் எங்க ஊர்லேயே கோடை காலத்தில் வாக்கிங்கும் குளிர் காலத்தில் ஸ்கேட்டிங்கும் போன ஆள் அதானால் சும்மா தில்லாக ஸ்கேட்டிங் டூல்ஸ் கேட்டால் அங்கு இருந்தவன் என் ஷூவை பிடுங்கி வைத்து கொண்டு கீழே இரும்பு பட்டை வைத்த ஷூவைக் கொடுத்தான்.

கால்ல மாட்டிக்கிட்டு போய் மைதானாத்தில் இறங்கினால் "டமார்" என்று சத்தம் என்னடான்னு பார்த்தா நான் கீழே விழுந்து கிடக்கிறேன்.சரி எழுந்திருக்கிலாம் என்று முயற்சி செய்து முயற்ச்சி செய்து ரொம்ப டையர்ட் ஆகி அப்பா முடியல மின்னல் ஏம்பா இப்படி செஞ்சிட்ட என்றால் நீ எட்டு போட என்னை ஏன் கூப்பிட்ட அதுக்கு தான் என்றார். எங்க இதுல ஒரு எட்டு போடு குசும்பா என்கிறார், நானே தவழ்ந்து கிட்டு இருக்கேன் என்ன போய்!!! உன்ன 8 போட கூப்பிட்டதுக்காக காதலன்ல பிரபு தேவாவுக்கு ஐஸ் படுக்கை போல என்னை வச்சுட்டியே என்று சொல்லி முடிக்ககிறதுக்குள் டமால் டமால் டமால்.... கோபி, அபி அப்பா, சென்சி எல்லாம் அப்பதான் நம்ம பொசிசனுக்கு வந்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு இரண்டு மணி நேரம் எழுந்து நிற்க போராடி போராடி "பாடி டோட்டல் டேமேஜ்" சரி எல்லாம் அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைய பற்றி பேசினார்கள். ஆக முதன் முதலில் ஐஸ் கட்டியில் படுத்து, உட்கார்ந்து கொண்டு மாநாடு நடத்திய பெருமையை அமீரகம் தட்டி செல்கிறது.

மின்னல் ஒரு சின்ன பையனை கூப்பிட்டு இவருக்கு எப்படி ஸ்கேட்டிங் போகனும் என்று சொல்லிகுடேன் என்றார் அவன் முதல்ல எழுந்து இவன ஒரு நிமிசம் நிற்க சொல் மிச்சத்த அப்புறம் பார்கலாம், இவனுக்கு சொல்லி கொடுக்க முடியாது என்னையும் சேர்த்து தள்ளி விட்டுவிடுவான் என்றான். உடம்பு தான் டேமேஜ் என்றால் என் இமேஜயும் டோட்டல் டேமேஜ்.

(அவன் தான் இவன்)


அடுத்து ஒரு ராட்டினத்துக்கு அழைச்சுக்கிட்டு போனார் ஏற்கனவே சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி...முடியல மின்னல் இருய்யா என்று சொன்னால். ஒரு ஸ்ப்ரே எடுத்து அடித்து விட்டார் வீக்கம் குறைந்து, லேசா வலியும் குறைந்தது. இதுக்கு பேர் தான் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறது போல...

அடுத்து ஒரு கூண்டுக்கு அழைச்சிக்கிட்டு போனார். போய் உட்காந்ததும் அது சுத்த ஆரம்பிச்சு பாருங்க அம்மே...சொம்புக்குள் ஒரு கல்லை போட்டு உண்டியல் குலுக்கவது போல் குலுக்கி எடுத்துச்சு இறங்கி கெத்தா ஆங் இன்னொரு ரவுண்ட் போகலாமா என்று சொல்ல நான் பட்ட பாடு. யப்பா கண்ண கட்டிடுச்சு.

எல்லாருக்கும் ஆரத்தி தட்டு தான் சுத்துவாங்க ஆனா இவரு டிபிரண்டா, ஆரத்தி தட்டுல உட்கார வச்சி இப்படி பத்து சுத்து அப்படி பத்து சுத்து சுத்தி நிப்பாட்ட போகும்பொழுது என்னமோ போய் அந்த ஆப்ரேட்டர் கிட்ட காதில் கிசு கிசுத்தார்... அடிச்சான் பாருங்க அடுத்து இன்னொரு 20 சுத்து...எல்லாம் கலங்கி போச்சு..அப்புறமா அவன் கிட்ட போய் என்னய்யா சொன்னார் மின்னல் என்றால் ..எல்லாம் எனக்கு வேண்டியவுங்க நல்லா "கவனி" என்று சொன்னார் என்றான்..மின்னல் அம்புட்டு நல்லனாய்யா நீ...

இப்படி எல்லாரையும் நன்றாக கவனித்து பதிவர் சந்திப்பை சிறப்பு செய்த மின்னலை தனியாக எல்லாரும் வாழ்தினோம்.
அப்பொழுது கோபி மாயவரம் சந்திப்பை பற்றி சொல்ல நான் ரொம்ப மிஸ் செஞ்சுட்டேன் என்று பீல் செய்வதை பார்த்த அபி அப்பா,அங்கு சந்திப்புக்கு வந்த கண்மணி அக்கா, முத்துலெச்சுமி அக்கா, காயத்ரி பாட்டி, ஜெயந்தி, ராம் எல்லோருக்கும் டிக்கெட், விசா எடுத்து வந்து உனக்காக இங்கு ஒரு மாநாடு நடத்துகிறேன் குசும்பா கவலை படாதே என்றார். ஆகையால் சம்பந்த பட்டவர் அனைவரும் அபி அப்பாவுக்கு பாஸ்போர் காப்பி அனுப்பும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

மாலை புறப்படும் முன்பு முத்துகுமரன் போன் செய்து விசாரித்தார். காலையில் மங்கை அக்காவிடம் போனில் சந்திப்பு பற்றிய விவரங்களை சென்ஷியும், அபி அப்பாவும் சொன்னார்கள்.

இப்படியாக பல நல்ல விசயங்கள் பேசி (அது தனி பதிவு) முடிவுக்கு வந்தோம்.

ஏ ஏ எல்லாம் பாத்துக்குங்க பாத்துக்குங்க பாத்துக்குங்க நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் மாநாட்டுக்கு(????) எல்லாம் போய் வந்து இருக்கிறேன்.

சந்தித்தவர்கள்
அபி அப்பா, மகேந்திரன்.பெ ,அய்யனார்,தம்பி, கோபி ,சென்ஷி, மின்னல், லியோ சுரேஷ் ,நான், பிறகு அனானி 5 பேர்.