Friday, April 22, 2011

கோ- பட விமர்சனம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு நானும் மனைவியும் சேர்ந்து போய் பார்த்தபடம், மகன் வயிற்றில் 3 மாதமாக இருந்த பொழுது கடைசியாக பார்த்த படம் அதே டைரக்டர் எடுத்த அயன். திரும்ப அதே டைரக்டர் எடுத்த “கோ” படத்தை வியாழன் அன்று இரவு பார்த்தோம். அப்ப இப்பவும் திரும்ப பாப்பா ஏதும் வயித்தில் இருக்கான்னு கேட்டிங்க பிச்சி பிச்சி! ஷார்ஜா மெகா மால் கிராண்ட் சினிமாஸில் கோ 11.30 ஷோ போகலாம் என்று நண்பர்கள் குடும்பத்தையும் அழைச்சிக்கிட்டு போனோம். போனதும் தான் தெரிஞ்சுது ஷோ கேன்சல். பிறகு துபாயில் இருக்கும் கலேரியாவில் போன் செஞ்சி கேட்டதுக்கு ”கோ” 12 மணிக்கு ஒரு ஷோ, 1 மணிக்கு ஒரு ஷோ என்றான். மணி 11.30 ஆவுது போய் ட்ரை செஞ்சி பார்க்கலாம் என்று ஒரு முடிவோடு கிளம்பினோ. 11.30 வரை இனியன் தூங்கவில்லை. சரி நாம இன்னைக்கு வெளியில்தான் நிக்கனும் என்று நினைச்சிக்கிட்டே போனோம், வழியில் கொஞ்சம் ட்ராபிக் இருந்ததால் கொஞ்சம் லேட் ஆகி சரியாக 12.00மணிக்கு போனோம். நண்பர் டிக்கெட் எடுக்க போனார் பார்த்தால் 1 மணி ஷோ கேன்சல் 12 மணி ஷோ மட்டும் தான் என்றார்கள் படம் போட்டு 5 நிமிடம் ஆகும் என்றார்கள்.

படம் பார்த்தால் டைட்டில் ஓடுவதிலிருந்து பார்க்கவேண்டும் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டு போனோம் பார்த்தால் அப்பொழுதுதான் டைட்டில் ஓடிக்கிட்டு இருந்தது. வரும் பொழுது இனியன் காரிலேயே தூங்கிவிட்டது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஆனால் சரியா 30 நிமிடத்தில் முழித்ததும் பக்குன்னு இருந்துச்சு...ஆனா அழாம அப்படியே உட்காந்து 2.30 வரை படம்பார்த்தான்.

படம் ஆரம்பமே பேங் கொள்ளை ...கொள்ளையர்களை சேஸ் செஞ்சி பாஞ்சி, எம்பி , எகிறி என்று எல்லா ஆங்கிளிலும் போட்டோ எடுக்கும் பிரஸ் போட்டோ கிராப்பராக ஜீவா அறிமுகம் ஆகிறார். இவர் எடுத்த போட்டோக்களின் உதவியால் கொள்ளைக்கூட்டம் பிடிபடுகிறது. செம ஜாலியான கொலிகாக பியா, அடக்கமான பொண்ணாக கார்த்திகா. (சிம்பு சொன்னது சரிதான், இந்த பெண் ஹீரோயினாக மட்டும் இல்ல ஹீரோயின் பிரண்டாக நடிக்கக்கூட லாயக்கு இல்லை) படத்தில் இந்த பெண்ணை தவிர மீதி அனைத்தும் அருமையாக இருந்தது.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று அனைவரும் செய்யும் தில்லுமுள்ளு திருகுதாளங்களை எல்லாம் தின அஞ்சல் பேப்பர் முதல் பக்கத்தில் ஜீவாவின் அதிரடி போட்டோக்களால் போட்டு டார்டாராக கிழிக்கப்படுகிறது. IIM, DR என்று படித்தவர்கள் கொண்ட டீம் ஒன்று ”இறகு” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
பலதடைகள்,பல அவமானங்கள், பல இழப்புகளை சந்திக்கநேரிடுகிறது. அதையெல்லாம் மீறி தேர்தலை சந்திக்கிறார்கள். முடிவு என்ன ஆனது என்பதை மே 13 தேதிவரை காத்திருக்காமல் தியேட்டரில் போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க.

அமளி துமுளி பாட்டுக்கான லொக்கேசனும் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அவ்வளோ அருமை. பாம் வெடித்து நண்பர்கள் இறந்தசோகத்தில் ஜீவா இருக்கும் பொழுது ஜீவா கார்த்திகாவுடன் டூயட் பாடுவது போல் வருவது படத்தில் ஒட்டவே இல்லை. தியேட்டரில் இருப்பவர்கள் கூட என்ன கொடுமை இது என்றார்கள்.

காமெடிக்கு என்று தனியாக ஆள் எதுவும் இல்லாமல் அதையும் ஜீவாவே செய்திருக்கிறார்... அவரோட ஹெட் என்னாடா போட்டோ எடுத்திருக்க எல்லா போட்டோவும் ஷேக் ஆகியிருக்கு என்று சொல்லும் பொழுது சரி சார் அடுத்த பேங் கொள்ளையடிக்கும் பொழுது கொள்ளையனுங்களை போஸ் கொடுக்க சொல்லி நின்னு நிதானமா ஜூம் போட்டு எடுக்கிறேன் என்று சொல்லுவதும். பேப்பரில் வந்த அழகிகள் நியூஸை நான் தான் எழுதினேன் அவுங்க எல்லாம் ஒரு நைட்டுக்கு நைட்டுக்கு 10 ஆயிரமாம் சம்பாரிக்கிறாங்களாம்...அப்படின்னா நீ எனக்கு எவ்வளோ தருவ என்று பியா கேட்கும் பொழுது 108 ரூபாய் என்று சொல்லிட்டு...பக்கத்திலிருக்கும் கார்த்திகாவுக்கு எவ்வளோ தரலாம் என்று கேட்டதுக்கு...எல்லாம் ஓக்கே ஆனா ஹைட்தான் கொஞ்சம் சாஸ்தி வருகிறவனுக்கு என்னா ஸ்டூலா கொடுத்து அனுப்பமுடியும் என்று சொல்லும் பொழுது தியேட்டரே அதிருகிறது.

முதல் பாதி விறுவிறுப்புடன் போனது...இரண்டாம் பாதி சற்று நீளம். ஆனால் படம் ஓக்கே. பொலிட்டிக்கள் த்ரில்லர்.

13 comments:

said...

Firsta!!!????

said...

Rightae.. Aaga padam nalla irukkungareenga.. ok.. paathuralaam :D

@Iniyan, Ippadiya appava nimmadhiya padam paaka vuduradhu!!! Very bad very bad :(((

said...

கேபிள் சங்கர் என்னைக்காச்சும் கார்டூன் போட்ருக்காரா மாப்ள?

said...

பட் சினிமா விமர்சனம்னு தலைப்பு வைச்சுட்டு நீ சினிமாவுக்கு போன கதைய எல்லாம் சொல்லிருக்கது நல்லா தான் இருந்துச்சு.

said...

இனியனுக்கு ஒரு சகோதரனோ / சகோதரியோ விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்.

said...

//இனியனுக்கு ஒரு சகோதரனோ / சகோதரியோ விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்

said...

சரவணன் எப்படியிருக்கீங்க?குடுமபத்துல அனைவரும் சுகமா?

said...

:))

said...

"அழகிகள் நியூஸை நான் தான் எழுதினேன் அவுங்க எல்லாம் ஒரு நைட்டுக்கு நைட்டுக்கு 10 ஆயிரமாம் சம்பாரிக்கிறாங்களாம்...அப்படின்னா நீ எனக்கு எவ்வளோ தருவ என்று பியா கேட்கும் பொழுது 108 ரூபாய் என்று சொல்லிட்டு...பக்கத்திலிருக்கும் கார்த்திகாவுக்கு எவ்வளோ தரலாம் என்று கேட்டதுக்கு...எல்லாம் ஓக்கே ஆனா ஹைட்தான் கொஞ்சம் சாஸ்தி வருகிறவனுக்கு என்னா ஸ்டூலா கொடுத்து அனுப்பமுடியும்"

ஜி ... இதுக்கு முதல ஜீவா சொல்லுவரே "எனக்கு எப்புடி தெரியும் ...இது வரைக்கும் நான் வாங்கினதும் இல்லை ..குடுத்ததும் இல்லை" ன்னு அது இன்னும் சிரிப்பா இருக்கும் பாஸ்

said...

இப்ப இருக்கிற குயந்தைங்க நம்மள விட ஸ்மார்ட் பாஸ்....

தியேட்டர்ல அமைதியா இருக்கானுங்க.... பாட்டு வந்தா ரசிப்பானுங்க.....

என் மகன ஆறே மாசத்துல சுறா கூப்பிட்டு போயிட்டேன்.... அதுக்கப்பறம் எந்த படத்துக்கு போனாலும்
ரசிச்சு பாக்கிறான்....

said...

ரைட்டு...

said...

நானும் பார்த்தேன் நல்ல விறுவிறுப்பு, பட் எதார்த்தம் மிஸ்ஸிங், எப்படியோ ஓகே

said...

enna boss ....ipidi soollitinga.........karthika enna supera nadichirukanga........ponga boss.........awa mattum olunga nadikkalenu solreenga.......enna figaruppaaa.....