Saturday, April 2, 2011

ஜம்கே பகட், ஜோர் சே லகட் லகாவ்! ஹே லகாவ்! ரிவீட் சாட்


சிலநேரங்களில் ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்...அதுமாதிரி தான் நேற்றைய உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி அமைந்தது.

ஸ்ரீசாந்த் முதல் மேட்சில் பங்களாதேஷ்க்கு எதிராக காட்டிய பர்மான்சில் ஆடிப்போய் இருந்த நமக்கு தோனி என்ன நம்பிக்கையில் இறுதிப்போட்டியில் ரிஸ்க் எடுக்கிறார் என்று கோவம் கோவமா வந்துச்சு. அந்த கோவத்தை விட காலையில் இருந்து இன்று இறுதிப்போட்டியில் நம்ம ஸ்ரீசாந்த் களிக்குமா களிக்கனும் என்ற அனைத்து மலையாளிதாரங்களின் விருப்பம் என்று எல்லாம் புலம்பிக்கிட்டு இருந்த ரேடியோ சானல்ஸ், மற்றும் சேட்டன்களை நினைச்சால் தான் எனக்கு வயிறு கலக்கியது. இவன் பாட்டுக்கு இரண்டு விக்கெட் எடுத்துட்டா
ங்கொயாலுங்க கிரிக்கெட்ன்னு ஒரு விளையாட்டு அழிஞ்சு போனாலும் வாய் ஓயாம பேசுவானுங்களேன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

ஆனா ஸ்ரீசாந்த் ஓவரை உட்டு பிரி பிரின்னு பிரிச்சதில் பயபுள்ளைங்க இன்னைக்கு வாயே திறக்கவில்லை. அவனுங்களையும் ஆப் செஞ்சாச்சு, நம்ம கப்பையும் ஜெயிச்சாச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

***********
5 முறை வேர்ல்ட் கப்பில் விளையாடியும் கப் வாங்காவில்லையே என்ற சச்சின் குறை தீர்ந்ததுதான் மிகப்பெரிய சந்தோசம்...போன முறை வேர்ட்ல் கப்பில் டாப் ஸ்கோர் அவருதான், இந்த முறை 18 ரன் வித்தியாசத்தில் இரண்டாமிடம்.

*********
ஒரு சிறந்த தலைவனுக்கான பண்பு தோனியின் பேச்சில் நேற்று தெரிந்தது...ஏன் அஸ்வினுக்கு பதில் ஸ்ரீசாந்த், ஏன் யுவராஜுக்கு பதில் நீ முன்னாடி இறங்கின என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டியிருந்திருக்கும் அதனால் தான் பொறுப்பா ஆடினேன் என்றார். அதுமாதிரி ஜெயித்ததும் ஆர்பட்டமும் இல்லை, ஆர்பாட்டத்திலும் இல்லை.

********
350 எடுத்திருந்தாலும் இவிங்ககிட்ட ஜெயிச்சிருக்க முடியாது போலன்னு ஸ்ரீலங்கா கேப்டன் சொன்னதுதான் ஹைலைட்.

********
சேவாக் முதல் ஓவரிலேயே டக், சச்சின் 18 ரன்னில் அவுட் என்றதுமே ஸ்ரீலங்கன்ஸ் அனைவரும் கப்பு நமக்குதான் என்று கனவில் இருந்திருப்பானுங்க..நம்மில் பலரும் அட அவ்வளோதான் என்று நினைத்திருப்போம்... ஆனால் நம்பிக்கையோட போராடிய கம்பீர், கோலி, தோனி தான் ரியல் ஹீரோஸ். ஒரு வேர்ல்ட் கப் பைனலில் அதுவும் இரண்டு விக்கெட் இழந்த நிலையில் சேசிங்கில் அத்தனை பிரஸ்சரோடு 97 வரை ஸ்கோர் செய்த கம்பீர், அவரோடு களத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விக்கெட் எதுவும் விழாமல் நின்ற கோலி அதன் பிறகு வந்த தோனி ஆகியோர் ஸ்ரீலங்கன்ஸ் கனவை தகர்த்துவிட்டார்கள்.

*******

8 comments:

said...

Radiola Comentry kekamothu ore sreesanthu than, engada evan nala potta aprom avangala kaila pudikkamudiathu, ethu avaruthan cup vangi kudutha mathuri peela ottu tu erpanunga, irunthalum, avan groundla panna alapare thanga mudialappa

said...

//ஆனா ஸ்ரீசாந்த் ஓவரை உட்டு பிரி பிரின்னு பிரிச்சதில் பயபுள்ளைங்க இன்னைக்கு வாயே திறக்கவில்லை///

இதே ஃபீல்தான் பாஸ் இங்கேயும் :))

said...

//350 எடுத்திருந்தாலும் இவிங்ககிட்ட ஜெயிச்சிருக்க முடியாது போலன்னு ஸ்ரீலங்கா கேப்டன் சொன்னதுதான் ஹைலைட்//
இந்த கெத்து மெயின்டைன் ஆகணுமே ஆண்டவா

இந்த ஸ்ரீசாந்த் பண்ணுற அளப்பறய பார்த்தா ஓங்கி அப்பணும்போலதான் இருக்கு. இவன் பால போடுற அழகுக்கு ஒவ்வொரு பாலுக்கும் சேவாக்,முனாப் , ஜாகிர்ன்னு மாறி மாறி என்கரேஜ் வேற பண்ணனும். கொடுமைடா சாமி

//ஜம்கே பகட், ஜோர் சே லகட் லகாவ்! ஹே லகாவ்! ரிவீட் சாட்//

இந்த லகாவ் பிரதர்ஸ்,பகட்,சாட் எல்லாம் யாரு தல

said...

Correcta சொன்னீங்க... எனக்கும் ஸ்ரீசாந்த் ஒவ்வொரு தடவையும் பந்து போட தோனி கூப்பிடும் போதும் ஒரே பதற்றமா இருந்துசு எங்க விக்கெட் எடுத்துடுவானொன்னு... கடவுள் காப்பாத்திட்டார்... தோனி lastla ரவி ட்ட சொன்னத கேட்ட ஒடனே ஸ்ரீசாந்த் க்கு எப்படி இருந்து இருக்கும்னு நினைச்சு பாருங்க... ஹி ஹி ஹி

said...

good Humor.
Paavam sreesanth. romba thaan ottaraeeenga.

said...

நன்றி Busy

நன்றி ஆயில்யன்

நன்றி Rajasurian

நன்றி maduraikaran

நன்றி Shankar

said...

//சேவாக் முதல் ஓவரிலேயே டக், சச்சின் 18 ரன்னில் அவுட் என்றதுமே ஸ்ரீலங்கன்ஸ் அனைவரும் கப்பு நமக்குதான் என்று கனவில் இருந்திருப்பானுங்க..நம்மில் பலரும் அட அவ்வளோதான் என்று நினைத்திருப்போம்//

ஹி...ஹி...

http://jeeno.blogspot.com/2011/04/blog-post.html

said...

ஸ்ரீசாந்த்..?!!