Wednesday, July 21, 2010

40 அடிக்கு மேல ஊஊஊஊலலல்லா!!


(மிஸ்கின்: கேமிராவை பார்க்காம மேலே பார்த்து லாலாலால்லால்லான்னு வாய் அசைங்க)

அக்பர் என்ன செஞ்சாராம் குளிர் அதிகமான ஒரு மாதத்தில் அரண்மனைக்கு அருகில் இருக்கும் குளத்தில் ஒரு இரவு முழுவதும் யார் கழுத்தளவு தண்ணியில் நிற்கிறானோ அவனுக்கு 1000 பொற்காசுகள் என்று சொன்னாராம். குளத்து தண்ணி ப்ரிஜில் இருந்து எடுத்த தீபிகாபடுகோன் மாதிரி ஜில்ல்ல்ல்லுன்னு இருக்குமாம். பல பேர் போட்டிக்கு வந்துட்டு தோத்து போய்ட்டானுங்க. ஒரே ஒருவன் மட்டும் ஜெயிச்சான், அவனை கூப்பிட்டு பரிசு கொடுக்க போகும் பொழுது நக்கீரர் மாதிரி ஒரு அமைச்சர் குபீர் என்று நடுவில் புகுந்து, நீ இரவு முழுவதும் எப்படி குளிரில் தாக்குபிடிச்ச என்ன செஞ்சே என்று கேட்டாராம், அவனும் அதோ அரண்மனை கோபுரம் மேல் எரியும் விளக்கு ஆடுவதை அசைவதையும் பார்த்துக்கிட்டே இருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, குளிரும் தெரியவில்லை என்றானாம். உடனே அமைச்சர் மன்னா அந்த விளக்கில் இருந்து வரும் சூட்டினை பெற்றே இவன் இரவு முழுவது குளத்தில் தங்கியிருக்கான் என்று சொல்லி பரிசு கொடுக்காம அடிச்சிட்டார்.


கொஞ்ச நாள் கழிச்சு பீர்பால் வீட்டுக்கு அக்பரை விருந்துக்கு அழைச்சிக்கிட்டு போனார்.காலையில் போனவங்களுக்கு நல்லா பசி எடுக்க இஞ்சி கசாயம் கொடுத்துட்டு வேற எதுவும் கொடுக்காமல் விட்டுவிட்டார், நேரம் ஆகிட்டே போகுது சாப்பாடு வருகிறமாதிரி தெரியவே இல்ல, அக்பர் ரொம்ப நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு சாப்பாடு போடுய்யா ரொம்ப பசிக்குதுன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டார்...இவரும் வரும் வரும் என்றார் ரொம்ப நேரம் கழிச்சும் சாப்பாடு வரவில்லை. என்னது இவ்வளோ நேரம் ஆவுது வாங்க மன்னா போய் சமையல் எவ்வளோ முடிஞ்சிருக்கு என்று பார்ப்போம் என்றார் பீர்பால், பின்புறம் போனா மரத்து உச்சி கிளையில் ஒரு பானை கட்டி தொங்குது,கீழே கொஞ்சமா விறகு எரியுது. என்னய்யா இதுன்னா? இதுல எப்படிய்யா சமைக்க முடியும் என்று கேட்டதுக்கு. ஏன் மன்னா ஒருவன் தூரத்தில் இருக்கு விளக்கின் மூலம் சூட்டை பெற்று ஒருவன் குளிரில் தாக்குபிடிக்கமுடியும் என்றால் இதுவும் சாத்தியம் தானே என்றார்...தவறை உணர்ந்தார் அக்பர். குளத்தில் நின்ற ஆளை கூப்பிட்டு 1000 பொற்காசுகளையும் கொடுத்தார்.


ரைட்டு இப்ப எதுக்கு இந்த நீதி கதை எங்களுக்கு எல்லாம் தெரியாது பாருன்னு சொல்றீங்களா?

நானும் அமீரும் நீத்துவும் ஒரு செம துள்ளல் ஆட்டம் போட்டோம் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னாருப்பா ஒருத்தர். இப்ப என்ன சொல்லியிருக்கிறார் என்றால்

//40 அடி உயரத் தில் ஒரு மரத்தின் மேல் பலகை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதாவது, ஒரு 'ஒய்' வடிவ மரத் தில்... இலை, கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு அதை ஒரு மரத் தூண் மாதிரி செதுக்கி இருந் தார்கள். //அங்க ஆடவேண்டும் என்று சொல்லிட்டாங்க:)

ஆடியது எங்கே?? 40 உயர மரத்தின் மேலே...

நீத்து & அமீர் ஆடியது எங்கே? 40 அடிக்கு கீழே...

அவ்வளோதான்பா இந்த கதை:))
(படம் உதவி: ஆனந்தவிகடன்)

Monday, July 19, 2010

பொண்ணுங்கன்னா இப்படிதான்!

முன்குறிப்பு: இந்த பதிவுவை எழுத காரணமாக இருந்த நண்பர் சஞ்சய்க்கு நன்றி! ஊக்கமும் தைரியமும் கொடுத்த நண்பர் ஆதிக்கு நன்றி, அப்ப அப்ப பல ஆலோசனைகள் சொன்ன நண்பர் அப்துல்லாவுக்கும் நன்றி. வரப்போகும் திட்டுகளையும் பாராட்டுகளையும்(வந்தாதானே?:)) இவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன். மூவரும் சரி சமமாக பிரிச்சுக்குங்கோ. (பேரை போல்ட் செஞ்சு எல்லாம் போட்டு இருக்கேன் குறிபார்த்து தாக்குங்கப்பா)

இவர் எழுதிய இந்த பதிவுக்கு எதிர் பதிவுதான் இது.

1)யாராவது டைம் கேட்டா, வேண்டுமென்றே என்னிடம் வந்து டைம் கேட்கிறான் பாரு என்று சொல்லுவாங்க, (ஆனா வேறு யாரும் டைம் கேட்கமாட்டாங்களான்னு உள்ளுக்குள் நினைப்பாங்க)

2)எந்த புத்தகத்தோட அட்டையில் அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.

3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.

4)எங்கயாவது 9 மணிக்கு போகணும் என்றால் முதல் நாள் 9 மணியில் இருந்து எந்த ட்ரஸ் போடனும் என்ற ஆராய்சியில் இறங்கிடுவாங்க. 8.55 வரை முடிவு செய்ய மாட்டாங்க.

5)பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று மொட்டை மாடிக்கு போனா, செல்போன் பேட்டரி லோ ஆகி கத்தும்வரை கீழே வரமாட்டாங்க. வந்ததும் என்ன மொபைல் இது ஒரு 3 மணி நேரம் கூட தொடர்ந்து பேச முடியல என்று திட்டுவார்கள்.

6)பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் இவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்.

7)டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும் பொண்ணோட தோடு, நெக்லஸ், புடவை கலரை நோட் செஞ்சுக்கிட்டு மேட்சிங்கா இருக்குல்ல இதுமாதிரி ஒரு செட் வாங்கனும் என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

8)எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா அதை தவிர மீதி எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு அடுப்பில் சட்டிய வெச்ச பிறகு நினைப்பு வந்து நம்மை கடைக்கு அனுப்புவாங்க.

9)திடிர் என்று புது புது வெரைட்டியா சமைக்க ஆரம்பிப்பாங்க எல்லாம் நாலு வேலைக்குதான், திரும்பவும் போன வாரம் வெச்ச சாம்மாரை பிரிஜில் இருந்து எடுத்து சூடு செஞ்சு கொடுப்பாங்க.

10)குழந்தைக்கு ஹோம் வெர்க் சொல்லி கொடுக்க சொன்னா எல்லா சீரியலும் முடிஞ்ச பிறகு பத்து மணிக்கு நம்மையும் தூங்க விடாம, குழந்தையையும் தூங்க விடாம சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தி எடுப்பாங்க.

11)அழகா இருக்கும் அசின் கூட இவுங்களுக்கு அட்டுபிகருதான், இதெல்லாம் ஒரு மூஞ்சி இதை எல்லாம் எப்படிதான் ரசிக்கிறார்களோ என்று திட்டிக்கிட்டே, அசின் வரும் சேனலை மாத்துவாங்க.

12) நாம என்னைக்காவது கிரிக்கெட் மேட்ச் அல்லதும் புட் பால் மேட்ச் பைனல் இருக்குன்னு சீக்கிரம் வந்து டீவி முன்னாடி உட்காந்தா, பாருங்க புள்ளை சாப்பிடமாட்டேங்கிறான் கார்ட்டூன் நெட் ஒர்க் வையுங்க என்று சொல்லி குழந்தைக்கு ரொம்ப பொறுப்பா சாப்பாடு ஊட்டுவாங்க.

13) சாம்பார் வைப்பதுக்கே அம்மாவுக்கு போன் போட்டு டவுட் கேட்டு போன் பில்லை ஏத்துவாங்க, ஆபிஸ் வேலையா ஒரு போன் செஞ்சாபோன் பில் நம்மால் ஏறுவது போல் முனுமுனுப்பாங்க.

14) ஒன்னுவிட்ட சித்தி பொண்ணு கல்யாணம் என்றால் ஒருவாரம் லீவ் போட சொல்லியாவது அழைச்சிக்கிட்டு போய்டுவாங்க, நம்ம தம்பி கல்யாணத்துக்கு LKG படிக்கும் பையனுக்குஸ்கூல் லீவ் எடுத்தா பிரச்சினை என்று ஒரு நாள் லீவ் எடுப்பாங்க.

15) அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, வீட்டில் இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க இப்பதான் அடுப்படியில் இருந்து வந்து உட்காந்தேன் பொறுக்காதேன்னு திட்டுவாங்க.

பின் குறிப்பு: குறைந்தது இதில் 15 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் அவுங்களை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.

பங்கு பிரிக்க முடியாத படி வரும் எதிர்பதிவுகளை அல்லது திட்டுகளை கீழே இருப்பவர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிடவும்.

(நன்றி தலைப்பில் உதவி - ஆசிப் அண்ணாச்சி)

நன்றி முதல் பாயிண்ட் : பால பாரதி

நன்றி 2 வது பாயிண்ட்: பரிசல்

நன்றி 3 வது பாயிண்ட்: வடகரைவேலன்

நன்றி 4வது பாயிண்ட் : சென்ஷி

நன்றி 5வது பாயிண்ட்: அணில் குட்டி கவிதா

நன்றி 6வது பாயிண்ட்: வெண்பூ & ஜீவ்ஸ்

நன்றி 7 வது பாயிண்ட்: கென் & அய்யனார்

நன்றி 8 வது பாயிண்ட்: சுந்தர்ஜி

நன்றி 9வது பாயிண்ட்: கேவிஆர் ராஜா

நன்றி 10வது பாயிண்ட்: மயில் விஜி & ராம்

நன்றி 11 வது பாயிண்ட் : கண்ணா & சோசப்பு

நன்றி 12 வது பாயிண்ட்: மின்னுது மின்னல் & கார்க்கி

நன்றி 13 வது பாயிண்ட் சந்தோஷ் & மங்களூர் சிவா

நன்றி 14 வது & 15 வது: வலையுலக அனைத்து ஆண் நண்பர்களும்

Sunday, July 18, 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு


http://www.vinavu.com/2010/07/17/uma-shankar-ias/
நேற்று வினவின் இந்த போஸ்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன், தமிழ்மண நட்சத்திர வாரத்தில் கூட உமாசங்கரை பற்றி எழுதவேண்டும் என்று இருந்தேன் ஆனால் முடியாமல் போய்விட்டது.

"உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழி வாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்." இதுதான் உமா சங்கருக்கு பிரச்சினை.

உமாசங்கர் அதிமுக ஆட்சியின் சுடுகாட்டு கொட்டகை ஊழலை அம்பலபடுத்தியவர், இதற்காகவே பந்தாடப்பட்டவர். பின் ஆட்சி மாறியதும் கலைஞர் தன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமித்து அழகு பார்த்தார், அதுவரை வேறு ஏதோ டம்மி போஸ்டிங்கில் இருந்தார். இவரை போல் எங்கள் ஊர் மக்கள் இன்று வரை ஒரு கலெக்டரை பார்த்தது இல்லை.


திருவாரூர் அருகே இருக்கும் குடவாசல் தாலுக்காவை சேர்ந்த திப்பணம்பேட்டை தான் சொந்த ஊர். எங்கள் பகுதி மக்களிடம்
தன்னோட செயல்பாடுகளால் மனதில் நீங்கா இடம்பிடித்தார். திருவாரூரில் ஒரு படம் 10 நாள் ஓடியது என்றால் அது மற்ற ஊர்களில் சூப்பர் டூப்பர் ஹிட் என்று அர்த்தம், அங்கிருக்கும் தைலமை, நடேஷ்,சோழா தியேட்டர்களில் அப்பொழுது அவர்கள் படம் ரிலீஸ் ஆகும் பொழுது வைத்ததுதான் விலை, அதில் ஒரு வசதி எல்லா டிக்கெட்டும் ஒரே விலைதான். எங்கு இடம் கிடைக்குதோ அங்கு சென்று உட்காந்துவிடலாம். விலை அதிகமாக விற்பதை நிறுத்த சொல்லி பார்த்தார் உமாசங்கர், தியேட்டர் அதிபர்கள் கேட்கவில்லை, ஒரு நாள் விஜயகாந்த் படம் ரிலீஸ் என்று நினைக்கிறேன்.. மாறுவேடத்தில் சென்றார் டிக்கெட் வாங்கிய கையோடு விலை அதிகம் விற்ற குற்றத்துக்காக தைலமை தியேட்டரை பூட்டி சீல் வைத்தார். திருவாரூரே அதிர்ந்தது புதுபடம் ரிலீஸின் பொழுது தியேட்டரை சீல் வைப்பதா என்றும் அனைத்து தியேட்டர் நிர்வாகிகளும் சேர்ந்து தியேட்டரை மூடிவிட்டு ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள், உமாசங்கரை மாற்று என்று. அடுத்த சில தினங்களில் உமா சங்கரை மாத்த கூடாது என்று சங்கருக்கு ஆதரவாக போஸ்டர்கள்.


குடவாசல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் குடவாசலில் வசிப்பவர் அங்கேயே அவருடைய கிளினிக் வெச்சிருந்தார், அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு கையெழுத்து போட போவதோடு சரி, யாரையும் கவனிப்பது இல்லை புகார் சென்றது உமா சங்கருக்கு, ஒரு நாள் காலை அய்யா வயிறு வலி என்று கைலி துண்டோடு அரசு ஆஸ்பத்திரியில் நின்றார், டாக்டர் அங்கு இல்லை, டாக்டர் வீட்டுக்கு சென்று கூப்பிட்டார் டாக்டர் இங்கேயே வைத்தியம் பார்த்துக்க சொன்னார், அதே இடத்தில் டாக்டருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழக்கிவிட்டு முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் சென்றார் கைலி துண்டோடு வந்திருந்த உமாசங்கர்.

இப்படி மாறுவேடத்தில் பல இடங்களுக்கு சென்று திருவாரூர் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார், திருவாரூர் மக்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று வைக்கோலை ரோட்டில் காயப்போடுவது, போகும் வரும் பஸ் அதில் ஏறி போர் அடித்த மாதிரி ஆகிடும் ஆகவே அப்படி போடுவார்கள், பல பஸ்,லாரிகளில் வைக்கோல் சிக்கி பாதி வழியில் நின்று விடுவதாலும், அதனால் விபத்துகள் ஏற்பட்டதாலும் ரோட்டில் இனி அப்படி ஏதும் காயப்போடக்கூடாது என்று அப்படி போட்டால் அபராதம் என்று ரூல்ஸ் போட்டார். பெரும்பான்மையானோர் கேட்டார்கள். அது உமாசங்கர் என்ற ஒரு நல்லவர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக.

உமாசங்கர் கலெக்ட்டராக இருந்த சமயம் திருவாரூர் பகுதியில் பல நல திட்டங்களை செய்தார் அவை அனைத்தும் முதல்வன் பட அர்ஜுன் செயல்பாடுகள் மாதிரியே இருக்கும்(படம் அப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை), கலெக்டருக்கு தனி அலுவலகம் வர ஏற்பாடு செய்ததும் அவர்தான் என்று நினைவு அதை முன் மாதிரியாக வைத்துதான் அனைத்து கலெக்ட்டர் அலுவலங்களும் மாறின. ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை கேட்கும் நாள், அடுத்த ஒருவாரத்துக்குள் அந்த குறை நிறைவேற்றப்படும். யாராலும் எளிதில் சந்திக்ககூடிய கலெக்டராக இருந்தார்.

12வது வகுப்பிலும் கல்லூரியிலும் என்றோ செத்துபோன போர்ட்டான், பேசிக் கம்பியூட்டர் பாட திட்டங்களை மாற்றனும் என்றும் கோரிக்கை வைத்தார். ஏழை மாணவர்களுக்கு மேற்கல்வி படிக்க பல சலுகைகள் வாங்கி தந்தார். அன்றைய தேதியில் ஏதும் ஒரு குறை என்றால் உமாசங்கரிடம் மனு கொடுத்தால் போதும் அது நிறைவேறிவிடும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். திருவாரூரில் இருந்து மாற்றல் ஆக கூடாது என்று மக்கள் சார்பாக பல போராட்டங்கள் நடந்தது.

உமாசங்கருக்கு அன்று அ.தி.மு.க ஊழலுக்கு பதில் இன்று தி.மு.கவின் ஊழல்,ஆட்சிதான் வேற ஆனால் நல்ல மனிதரும் ஊழலும் அப்படியேதான் இருக்கிறது.

எத்தனை தடைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டுவரவேண்டும்.

Tuesday, July 6, 2010

புனைவு ஸ்பெசல் கார்ட்டூன் 6-7-2010




திருவள்ளுவர்: நான் தான் பெரியவன்!
பாரதியார்: இல்லை இல்லை நான் தான் பெரியவன்!
திருவள்ளூவர்: இதுவரை என் திருக்குறளை வைத்து 5 புனைவு வந்திருக்கு, 4 பதிவுகளுக்கு தலைப்பாக ஆகியிருக்கு..
பாரதியார்: முடிவில் நீதி சொல்ல என் பாட்டுதான் உபயோகம் ஆகியிருக்கு...
டிஸ்கி: பிளாக்கரில் பின்னூட்டங்கள் தெரியமாட்டேங்குது, பிளாக்கரை பத்தி ஒரு புனைவு எழுதிட வேண்டியதுதான்.