Tuesday, May 18, 2010

எழுத்தின் வலி

ஒருவருடம் முடிவடைகிறது, தலைவர் பிரபாவை எப்பொழுது பிடிக்க ஆரம்பித்தது? எதனால்? என்று எல்லாம் நினைவு இல்லை, தஞ்சையில் இருக்கும் பொழுது இயக்கத்தில் இருந்த அண்ணன் குமார் மூலம் தலைவர் என்னுல் நுழைந்துவிட்டார், அவர் சொல்லிய பல கதைகள் நினைவு இருக்கு. தலைவரை பற்றி எத்தனை குறைகள் எத்தனை ஆதரங்களோடு யார் என்ன சொன்னாலும் அவர் செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நம்புகிறவன் நான். அவரை எவ்வளோ பிடிக்கும் எதனால் பிடிக்கும் என்று எல்லாம் எழுத்தில் சொல்லமுடியாது, அம்மாவை பிடிக்கும் அதுபோல் அவரை பிடிக்கும் அவ்வளோ தான், டீவியில் காட்டிய முகம் அவரோடது இல்லை என்று இன்னமும் நம்புகிறேன். நம்புவேன்!

இன்னமும் அவர்களை வைத்து அரசியல் செய்யும் உத்தமர்களை பற்றி பேசி எதுவும் பயன் இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இலங்கை, இந்திய வெளியுறவு துறை அமைச்சர்கள் பேசினார்களாம், விரைவில் முகாமில் இருக்கும் அனைவரும் மீள் குடியமர்த்தப்படுவார்களாம். சொல்லுவார்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாய் இருக்கும் வரை பேசிக்கிட்டே இருப்பார்கள், நல்லா இருப்பீங்க, நல்லாவே இருப்பீங்க!

சோகமான படங்கள்,பாடல்கள் கூட பார்க்க மாட்டேன், சில சமயம் அப்படி நேரும் பொழுது கண்கள் கலங்கிவிடும், இதுவரை நினைவு தெரிந்து எதையும் படித்து அழுகை வந்ததாக நினைவு இல்லை, அப்படி எதையும் படித்தது இல்லை, முதல் முறையாக தமிழ் நதி அவர்கள் எழுதிய
http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_9826.html இந்த பதிவை பாதி படிக்கும் பொழுதே அலுவலகத்தில் ஆட்கள் இருந்ததால் பாதியில் நிறுத்திவிட்டேன், பின் யாரும் இல்லாத பொழுது படித்தேன் என்னை அறியாமல் கடைசி வரியை படிக்கும் பொழுது...

காலம்தான் எல்லாத்துக்கும் மருந்து என்று சொல்கிறார்கள் இந்த ஒருவிசயத்தை தவிர.

வாழ்க இந்திய ஜனநாயகம்!

13 comments:

மோனி said...

ஓராண்டு நினைவஞ்சலிகள்..:'(

மோனி said...

மனதின் எங்கோ ஒரு மூலையில் திரும்பவும் இழந்தது அனைத்தும் வரும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது!

மோனி said...

http://www.photofunia.com/output/3/1/N/R/t/NRtezPw1wK4-55HDnPga4w.jpg

Unknown said...

வாழ்க இந்திய ஜன“நாய”கம்

Kumky said...

இந்திய ஜனநாயகத்தை இப்போதாவது தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்வது எதிர்காலத்திற்க்கு நல்லது...

நானும் தமிழ்நதியின் பதிவை படித்தேன்..மனம் கணத்துப்போனது...என்ன பின்னூட்டமிடுவது எனக்கூட தோன்றாமல் சிறிது நேரம் பொங்கும் நினைவுகளுடன் அமைதியாகிவிட்டேன்..

எது சொல்லி தேற்றவும் கையாலாகதவர்களாக இருக்கின்றோம்.

நமது சூழல் குறித்து இன்னமும் உணராதவர்களாக, உலகில் தமது இனம் அழிவதை அருகிலிருந்து வேடிக்கை பார்க்கும் இனமாக வேறு யாரும் இருந்ததாக நினைவில்லை.

தமிழின் பழம் பெருமைகளுக்கு ஈடானதாகவே இருக்கிறது இந்த இன அழிப்பும்..

வாழ்க இந்திய சனநாயகம்.

Kiruthigan said...

உயிரெரு முறை தான் போகும் அது உரிமைக்காக போகட்டும்
உடல் தான் எரியும் உருவமும் எரியும் உரிமைக்காக எரியம்டும் இனிவரும் காலங்கள் எங்களின் காலங்கள்..
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே பூக்கும் சின்ன பூக்கள் வாடாது..
என்று கூறி மண்ணுள் உரமாகிய எம் சகோதரர்களே...
உங்கள் கனவு பொய்யாகாது...
வாசலில் காற்றென வீசுங்கள்..
வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள்...

அமுதா கிருஷ்ணா said...

நிஜமான வலி...

தமிழ்நதி said...

நான் சிரிப்பதற்காக உங்கள் வலைத்தளத்திற்கு வருவதுண்டு. என் வலைத்தளத்திற்கு வந்து கலங்கிச் சென்றிருக்கிறீர்கள். என்ன செய்வது? காத்திருப்பதற்கு எந்த நம்பிக்கையும் மிச்சமில்லை.

joe vimal said...

நெஞ்சம் கனக்கிறது என்ன சொல்ல வரலாறு திரும்பும் தலைவன் இருக்கிறான் .

கலகலப்ரியா said...

//தலைவரை பற்றி எத்தனை குறைகள் எத்தனை ஆதரங்களோடு யார் என்ன சொன்னாலும் அவர் செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நம்புகிறவன் நான். அவரை எவ்வளோ பிடிக்கும் எதனால் பிடிக்கும் என்று எல்லாம் எழுத்தில் சொல்லமுடியாது, அம்மாவை பிடிக்கும்//

அதே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நதியின் பதிவு கலங்க வைத்தது என்பது உண்மை ..

Manion said...

//தலைவரை பற்றி எத்தனை குறைகள் எத்தனை ஆதரங்களோடு யார் என்ன சொன்னாலும் அவர் செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நம்புகிறவன் நான். அவரை எவ்வளோ பிடிக்கும் எதனால் பிடிக்கும் என்று எல்லாம் எழுத்தில் சொல்லமுடியாது, அம்மாவை பிடிக்கும் அதுபோல் அவரை பிடிக்கும் அவ்வளோ தான்,//
Me too.....

தரிசு said...

இன அழிப்பின் வலி.:'-(