Monday, May 31, 2010

பதிவுலக அரசர்களுக்கு கோமாளியின் மடல்!

பிரச்சினைகளுக்குள் போகும் முன்பு என்னை பற்றி, எழுதவந்து எல்லாம் கூட சொல்லமாட்டேன் மொக்கை போட ஆரம்பிச்சு நான்கு வருடம் ஆகிறது 400பதிவுகள், ஒரு பதிவில் கூட எங்கேயும் எந்த சகபதிவரையும் திட்டியோ அல்லது குட்டியோ எழுதியது இல்லை. அதுபோல் எனக்குபின்னூட்டமும். நான் மொக்கை போட வந்தது தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவோ அல்லது இணையம் மூலம் பிரச்சினைகளை சரி செய்யவோ அல்ல.முதலில் எனக்கு பிளாக் என்பது பொழுதுபோக்கு அது மற்றவர்களுக்கும் எனக்கும் சந்தோசத்தை தரனும். அந்த வகையில் நான்கு வருடமாக சரியாக இருந்திருக்கிறேன். எங்கேயும் எப்பொழுதும் எல்லை மீறியது இல்லை, ஒரு முறை தமிழச்சி, அடுத்த முறை சஞ்சய் இவர்கள் வருத்தப்பட்டார்கள் என்று எழுதிய பதிவையும் டெலிட் செய்து இருக்கிறேன். மற்றவர்கள் மனசு வருந்தும் படி என் பதிவில் எது இருந்து யார் என்ன சொன்னாலும் செவி கொடுத்து கேட்டு அந்த தவறை திருத்திக்கும் பக்குவத்தில் தான் இருக்கிறேன். இதுவரை இவன் இந்த குரூப் இவுங்களை இவனுக்கு பிடிக்காது என்று எல்லாம் பெயர் வாங்காமல் அனைவருடனும் நட்பாகதான் இருந்திருக்கிறேன்.
இனி வினவு அவர்களுக்கு...

இதுவரை பதிவுலகில் நடந்து வந்த பிரச்சினைகளின் பொழுது எல்லாம் அந்த அந்த சமயத்தில் பிரச்சினனகளள பற்றி பதிவு போட்டே வந்திருக்கிறேன், எவ்வித உள்நோக்கமும் இன்றி, இப்பொழுதும் அதன் படியே செய்திருக்கிறேன். சம்மந்தப்பட்ட நாட்டாமை பதிவு தோழர்களுக்கோ, அல்லது தோழிகளுக்கோ வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
அடுத்து நடந்த சம்பவங்களில் சம்மந்தப்பட்ட இருவர் பதிவிலும் "கும்மி அடிக்க குசும்பன்" இல்லையே என்று சம்மந்தப்பட்டவர்களே கூப்பிடும் அளவுக்கு அனைவரிடமும் நட்பாகதான் இருந்திருக்கிறேன். இரு நண்பர்கள் சண்டை போடும் பொழுது தவறு செய்த நண்பர்கள் நர்சிமையோ, கார்க்கியையோ நான் பொதுவில் திட்டனும் என்ற அவசியம் இல்லை அது எனக்கு வரவும் வராது. என் எதிர்ப்பை மூவரும் உறுப்பினராக இருக்கும் குழுமத்தில் நான் பதிவு செய்தேன் எதிர் வாதமும் செய்தேன், இதுக்கு மேல் இதில் கருத்து சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அந்த அளவுக்கு நான் ஒர்த்தும் இல்லை.

//நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள்//

அய்யா இதுவரை நகைச்சுவை என்ற லேபிளின் கீழ் குசும்பன் நகைச்சுவை மட்டுமே செய்து வந்திருக்கிறான், அதனால் தான் அவர்கள் சந்தோசத்தை தெரிவிச்சிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

//பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.//

அய்யா எனக்கு எவனும் அரசனும் இல்லை எனக்கு எவனையும் மகிழ்விக்கனும் என்ற அவசியமும் இல்லை, இதுவரை நான் மகிழ்விச்சதால் எந்த அரசுனும் எனக்கு பொற்கிழி என்ன பொறை டீ கூட வாங்கி கொடுத்தது இல்லை.என் வலைதளத்துக்கு வரும் ஒரு சிலர் சந்தோசமாக திரும்பனும் அதே சமயத்தில் அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்யனும் இதுதான் என் நோக்கமாக இருந்திருக்கிறதே தவிர எனக்கு எவனும் அரசனும் இல்லை படி அளக்கவும் இல்லை.நான் அரசர்களுக்கு கூஜா தூக்கவும் இல்லை.

//இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். //
இதுக்கு முன்பும் பலபிரச்சினைகளின் பொழுது இதைதான் செய்திருக்கிறேன், பெருந்தலைகள் பாலபாரதி, செந்தழல் ரவி கூட என்ன குசும்பா மொக்கை போட்டு ஆட்டத்தை கலைச்சிடுவோமாஎன்று கேட்பார்கள் சில சமயங்களில் அப்படி செய்திருக்கிறோம். அதுபோல் தான் இப்பொழுதும் செய்தேன். நர்சிம் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை பதிவுலக பிரச்சினையாகதான்பார்த்தேன்.

//ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள்//

சகோதரிகளை பற்றி இப்படி ஒரு புனைவு வந்திருந்தால் என்னால் இப்படி ஒரு நாட்டாமைகள் தேவை என்ற பதிவை எழுதியிருக்க முடியாது, என்னோடு தொடர்பில் இருந்த முல்லையின் மனநிலையை யோசிக்காமல் மொக்கக போட்டது தவறு. ஆகவே இப்படி ஒரு பதிவு எழுதியதுக்காக வருந்துகிறேன். நீங்கள் சொல்வதுபோல் வெட்கமும் படுக்கிறேன் இதில் மாற்று கருத்து இல்லை தோழர்களே. என்னை அரசனை மகிழ்விக்கும் அரசவை கோமாளி என்று சொன்னது எனக்கு வருத்தத்தை தந்தது அதுக்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பீர்களா?

//ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? //

இருமுறை அல்லது இதுவரை அனைத்து பதிவர்களையும் கலாய்த்துதான் எழுதியிருக்கிறேன், இதுவரை எந்த பதிவரும் வருந்தியது இல்லை, ஏன் என்றால் கலாய்த்தலை மட்டுமே நான் செய்துவருகிறேன், எங்கு பின்னூட்டம் போட்டாலும் கலாய்த்துதான் பின்னூட்டமும் போட்டு இருக்கிறேன் இதுதான் என் அடையாளம், எங்கயாவது நல்லபதிவுன்னு மட்டும்சொன்னால் என்ன குசும்பா உடம்பு சரி இல்லையா சும்மா போய்விட்ட என்று சம்மந்தப்பட்ட நபர்களே கேட்கும் அளவுக்குதான் என் அடையாளம் இருக்கிறது. அதை மீறி நான் எங்கும் எதிலும் கருத்து சொன்னது இல்லை.

//குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா? //
இதுபோல் பிரச்சினைகள் வரும்பொழுது எல்லாம் பலரும் இதேயே சொல்கிறார்கள், என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருவேளை நண்பர்களை மட்டும் கலாய்ப்பதால் அப்படிஒரு பிரச்சினை வந்தது இல்லை போல. அதுக்கு மேல் எதுவும் தெரியவில்லை.

கோமாளிகளை கோமாளிகளாகவே இருக்க விடுங்கள். எனக்கும் வருத்தங்கள் உண்டு, எனக்கும் சந்தோசங்கள் உண்டு அதை எல்லாம் மறைத்துதான் இந்த குசும்பன் என்ற தாங்கள் சொன்னது போல் கோமாளி வேடம் கோமாளிகளுக்கு பதிவுலக அரசியலும் தெரியாது, ஜாதி மதம சாயமும் பிடிக்காது. நான் நானகவே இருக்கிறேன் என்னை தயவு செய்து இந்த சண்டைகளுக்கு இழுக்காதீங்க!

நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி.

நல்லா துப்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!

நைனா! டைட்டானிக்கில் துப்பி துப்பி விளையாடுவாங்களே அது மாதிரி விளையாடுவோமா?
நீ என்னய்யா என்மேல துப்புவது, இப்ப பாரு நானே என்மேல துப்பிப்பேன்!

த்தூஊஊஊ இது எல்லாம் ஒரு பொழப்பு!

செத்தாலும் இதுமாதிரி ஆளுங்க கையால வெட்டு வாங்கி சாவனும் :))

Sunday, May 30, 2010

நாட்டாமைகள் அவசரதேவை!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...பதிவுலகில் நடந்துவரும் பிரச்சினைகள் அவ்வளோ ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கிறது(டாக்டரிடம் சொல்லி குளுக்கோஸ் ஏத்தமுடியாத அளவுக்கு). ஆனால் இந்த முறை எந்த நாட்டாமைகளும் இதுவரை ஆஜர் ஆகாமல் பிரச்சினை அப்படியே பிரச்சினையாகவே இருக்கிறது, சனி ,ஞாயிறு லீவ் தானே கோர்ட் விடுமுறை என்று சொல்லி சமாளித்து அதற்குள் பிரச்சினையின் சூடு தனிந்துவிடும் என்று நினைத்தால், மேலும் மேலும் பதிவுகள் வந்து நிலமையை மோசமாக்கிக்கொண்டு இருக்கின்றன.

முன்பு எல்லாம் சண்டை போடுபவர்களை விட நாட்டாமைகள் சண்டையை பற்றி போடும் பதிவுகள் தான் அதிகமாக இருக்கும், ஆனால் இந்த முறை எந்த பாவி புள்ள கண் பட்டதோ இதுவரை ஒரு நாட்டாமை கூட சொம்பை தூக்கவில்லை, நாட்டாமை இல்லாத சண்டையும், பெல்ட் இல்லாத பேண்டும் நின்னதா சரித்திரமே இல்ல, ஆகவே இதுக்கு முன்னாடி நடந்த சண்டைகளில் நாட்டாமைகளாக பணி புரிந்த முக்கியமாக நடுநிலையான நபர்கள் வேலைக்கு தேவை!

வேலை இடம்: தமிழ் வலையுலகம்
வேலை நேரம்: காலை 8 மணி முதல், மாலை 8 மணி வரை
சம்பளம்: நெளிஞ்ச சொம்பு

பொதுநலன் கருதி வெளியிடுவோர் நாட்டாமைகள் அங்கிகார ஆனையம்!

டிஸ்கி: சண்டையா எங்கே எப்போன்னு அதிர்ச்சி ஆகி கேள்வி கேட்கும் ஆட்களுக்கு தண்டனையாக சுறாவை 100 தடவை பார்க்கவைக்கபடுவார்கள்!

Saturday, May 29, 2010

இலக்கிய குடும்பத்தின் புதுவரவு!


காலையில் எழுந்ததும் காபியோடு நியுஸ் பேப்பர் படிப்பது பலருக்கு பழக்கம் என்றால், இந்த குடும்பத்தில் இருக்கும் ரெண்டு டிக்கெட்டுக்கும் காலையில் காப்பியோடு கம்பராமாயணமும், கபிலரும் எழுதிய புக்கு தேவைப்படும்.


இருவரும் வீட்டில் பேசிப்பது தலைவன் தலைவி என்று தமிழ்பாடத்தில் வரும் செய்யுள் ரேஞ்சுக்கு இருக்கும் என்று நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தன.

ஊருக்கு போகிறோம் என்றால் நாம எல்லாம் துணி, பணம் எல்லாம் எடுத்து வைப்போம், இந்த குடும்பம் புக்கை தவிர வேற எதுவும் எடுத்துவைக்காது, இதுல தலைவர் ஆங்கில கவிதையை தமிழில் மொழிபெயர்ப்பார் என்றால், தலைவி தமிழ் கவிதையை புரிகிற மாதிரி எழுதிகிறேன் என்று நம் முழியை பெயர்ப்பார்.. நல்ல சோடி பொருத்தம். இப்படி இம்சையை கொடுக்கும் இருவருக்கும் நேற்று புதிய வரவாக "அமுதினி" என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய் & சேய் இருவரும் நலம்.

குழந்தை அழுவும் பொழுது குற்றால குறவஞ்சி பாடி தூங்க வைக்கிறார்களாம். அமுதினிக்கு தாய்பாலை அம்மா தருகிறார்கள் என்றால் சித்தார்த் தமிழ்பாலை தருகிறார். குழந்தைக்கும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த இப்பொழுதே அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை எல்லாம் வாங்கி போய் கொடுத்து குழந்தைக்கு படிக்க சொல்லி தருகிறாராம். குழந்தை பிறந்து ஜஸ்ட் 24 ஹவர்ஸ் தான் ஆகிறது.

வாழ்த்துக்கள் காயத்ரி & சித்தார்த்

Monday, May 24, 2010

இராவணன் பதிவர்களின் பார்வையில்!!!

எல்லாம் உங்களால் தான் இதோ 200000000000 லட்சம் ஹிட்ஸ் 23222 பாலோயர்ஸ் கொடுத்த உங்களுக்கு நன்றி!

மணியின் 20வது படம், தமிழில் ரொம்ப நாட்களுக்கு பிறகு அவர் எடுத்து வந்திருக்கும் படம்,விக்ரம், ஐஸ்வர்யா ராய், ARR என்ற பெரும் கைகள் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம். என்ற எதிர்பார்ப்பில் தான் சென்றேன் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கா என்றால்..விடை கடைசியில்.

கதைக்கு அவ்வளோவாக கஷ்டப்படவில்லை, கதையின் கரு இராமாயணத்தில் இருந்தே உருவப்பட்டு இருக்கிறது. சீதைக்கு பதிலாக ஐஸ், இராவணனாக விக்ரம், இராமனாக பிருதிவிராஜ். இதில் முக்கியமாக அனுமார் பாத்திரம் பற்றி எதுவுமே இல்லை. ஐஸ்ஸை கடத்துவது வரை ஓக்கே அதன் பிறகு மீட்கும் காட்சியில் சரி சொதப்பல்.இந்த மாதிரி கதை என்று முடிவு செய்தவுடன் கொஞ்சம் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இராவணன் வென்று இருப்பான்.

ஹீரோ சுடும் பொழுது வில்லன் தப்பிப்பது ஹிரோஷிமா நாகசாகி என்ற ஜப்பான் படத்தில் இருந்தும், ஹீரோயின் அப்பா வீடு செட் வாஷிங்டன் என்ற அமெரிக்க படத்தில் இருந்தும் அப்பட்ட காப்பி! ARR கொஞ்சம் சொந்த பாட்டில் இருந்தே காப்பி அடிப்பதை நிறுத்திக்கலாம், அதுமட்டும் இன்றி சீதையிடம் காதலை இராவணன் சொல்லும் பொழுது இசை இல்லாமல் இருந்திருக்கலாம்,சில நேரங்களில் இசை என்பது ஒன்றும் இல்லாம இருப்பது நன்றாக இருக்கும், இனி ARR கொஞ்சம் இசையில் கவனம் செலுத்தவேண்டும்.

படத்தில் நிறைகளே இல்லாமல் இல்லை விக்ரம் அப்படியே விக்ரமாக வந்துபோகிறார், பிரிதிவிராஜ் கொஞ்சம்தமிழில் பேசுகிறார்.
மொத்தத்தில் இராவணன் - மீண்டும் மரணம்

(The End இங்கிலீஸிலும் ஏதும் பஞ்ச் சொல்லனுமுல்ல)

டிஸ்கி: தியேட்டரில் சீட்டில் யாரோ பப்பிள்காம் ஒட்டி என் பேண்ட் வீனாக போய்விட்டது, அதுக்கு காரணம் கேட்டுமெயில் அனுப்பியிருக்கேன். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் சத்யம் நிர்வாகிகள்.முதல் காட்சியை மணி,விக்ரம், ஐஸ் ஆகியோருடன் பார்த்தேன். அவர்கள் தேவியில் பார்த்தார்கள், நான் சத்யத்தில் முதல்காட்சி பார்த்தேன்.

பின்னூட்டம்:
பாஸ் அப்ப நாங்க தப்பிச்சிட்டோம்?--சூரக்கோட்டை சிங்ககுட்டி

உங்கள் விமர்சனத்துக்காகதான் வெயிட்டிங்!-- காத்திருக்கும் காத்தவராயன்

ஆக டீவிடி வந்த பிறகு பார்த்துக்கலாம்-- கண்டுபிடிப்பு கண்ணன்

முடிவா என்ன சொல்றீங்க படம் பார்க்கலாமா வேண்டாமா?--- கொக்கி குமாரு

புறாவை விட படம் நல்லா இருக்குல்ல!--- சந்தோச சந்தாணம்

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க படத்தை குடும்பத்தோட தியேட்டருக்கு போய் போஸ்டர் பார்க்கலாம் என்று இருந்தோம்!

விமர்சனம் செய்கிறேன் என்று இப்படி எழுதுவதுதான் முறையா? இதோ ஒருவர் டீவிடியில் பார்க்கலாம் என்கிறார் இதுக்குதான்ஆசைப்பட்டிங்களா?

ச்சே ஒருபடத்தை கூட காப்பி அடிக்காமல் எடுக்க மாட்டாங்களா?
******************


பதிவின் தலைப்பு: மணி என்கிற பாப்பார பாடுவின் அபத்தம்
இராவணன் இதை பற்றிய என் கருத்தை பின்னால் பதியலாம் என்றுதான் இருந்தேன் ஆனால் பூனூல் போட்ட பார்பன சக்திகள் இராவணனை அழிக்க திரும்ப இராமன் அவதரித்து விட்டதாக கூக்குரல் இடுவதுக்கு எதிர் கருத்து பதியவில்லை என்றால் பார்பனீயம் தலைவிரித்து ஆடும் என்பதுக்காகவே இந்த பதிவு, மணிரத்தினம் இல்லை மணிவிஷம், இவர் யார் என்று பார்த்தால் எல்லா படத்திலும் சூத்திரர்களை கேவலமாக சித்தரித்துக்கொண்டு வரும் ஒரு விஷம், இந்த விஷம் இந்த படத்திலும் தன் புத்தியைகாட்டாமல் இல்லை இவர் எத்தனன சட்டை போட்டாலும் சட்டைக்குள் நெளியும் பூனூல் வெளியில் தெரியாமல் இல்லை. இருவரில் பெரியார் பற்றி டீடெயிலாக எதுவும் சொல்லாத பொழுதே இவரின் சுயரூபம் தெரியும். ஆக மொத்தத்தில் இராவணன் ஒரு மலக்குவியல்.


பின்னூட்டம்
சிறந்த ஒரு மாற்று பார்வை!

வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதுக்காகவே எழுதியது போல் இருக்கு!
*********************


படத்தின் தலைப்பு: இராவணன் சொல்லப்படாத பெண் உணர்வின் வலி


உலக தரத்தில் வெளிவந்திருக்கும் முதல் படம் என்றே சொல்லலாம், இராவணன் வாழ்ந்தானா இல்லையா என்ற விவாதத்தில் நுழைவது தேவை இல்லாதசெயல், படத்தை ஒரு குறியீடாக அனுகவேண்டும் அனுகினேன்! இன்னும் அந்த மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை. இராவணனாக நடிக்கும் புதுமுகம் விக்ரம் என்ற பையன் அருமையாக நடித்திருக்கிறான். இவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று நிச்சயமாக சொல்லலாம்.

மிகுந்த வன்மத்தோடும் சற்றே மிகையோடுமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். வறுமையும் காமமும் தத்தமது கோரத் தாண்டவங்களை நிகழ்த்திக் காட்டும் பிரதான இடமாக இவர்களின் வாழ்விருக்கிறது. இவர்களின் வாழ்வை மொத்தமாய் உறிஞ்சிக் குடித்து வீங்கிப் பெருத்திருக்கும் பண முதலைகளையும், அதிகார வர்க்கத்தினரையும் இப்படம் கடுமையாய் சாடியிருக்கிறது. சீதையாக வரும் குறீயிடு படத்தில் சொன்ன செய்தியை விட சொல்லாத செய்தியும் அந்த காதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதமும் அருமை.


முழுக்க சிதறியிருக்கும் கதாபாத்திரங்களுக்கு விரிவாய் சொல்லப்படாது விட்ட அழுத்தமான பின்புலம் இருக்கிறது. அதை ஒரு காட்சியின் மூலமோ, சிறியதொரு உரையாடலின் மூலமோ மொத்தமாய் பார்வையாளனுக்கு கடத்தி விட முடிவது அதி நேர்த்தியான இயக்கமாகத்தான் இருக்க முடியும்.


பின்னூட்டம்
திரைப்படத்தை விமர்சனமாய் பதிவு செய்தலில் தேவையான நேர்த்தி மிகச் சிறப்பாய் இந்தப் பதிவில் பங்கு கொண்டிருக்கிறது.



மிகச் சிறப்பான அங்கீகாரம்.

என்னை அழ வைத்த திரைப்படம்.. ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கத்தை திருடி சென்றுவிட்டது.


****************


பதிவின் தலைப்பு: இராவணன்-350கோடி -எடுத்தவன் கேடி
இராவணன் பட்ஜெட் 120கோடியாம், விற்பனை ஆனது 350கோடியாம் எதிர்பார்க்கும் வசூல் 550கோடியாம், தெருகோடியில் இருக்கும் ஒருவனுக்கு இந்த கோடிக்கு எத்தனை சைபர் என்று கூட தெரியாது. ஆனால் சினிமா வியாபாரம் கோடிகளில் நடக்கிறது, இந்த படத்தை வாங்கியிருப்பது யார் என்று பார்த்தால் ரிலையன்ஸ், ரிலையன்ஸ் சுரண்டல் பற்றி நம் தோழர் ஏற்கனவே இங்கு எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

அம்பானி சகோதரர்களுக்குள் சண்டை என்றதும் பங்கு சந்தை சரிகிறது, மத்திய அரசு பேசுகிறது. அம்பானி சகோதர்களுக்குள் சண்டை என்றதும் நீதிமன்ற கதவுகள் இரவில் கூட திறந்திருந்து தீர்பு சொல்கிறது, தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை லட்சத்தி சொச்சம் ஆனால் அம்பானிக்கள் வழக்குகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. ஆற்றுபடுகை வாயுவை பங்கு பிரிப்பதில் தகறாராம் அதுக்கு உடனடி தீர்ப்பாம், இங்கே பின்பக்கம் வழியாக வாயு வரக்கூட தெம்பு இல்லாமல் கிடக்கிறான் பாமரன்.அவன்குடிக்க கஞ்சி இல்லாமல் கிடக்கும் பொழுது வாய் திறக்க மறுக்கிறது இந்த மத்திய மாநில அரசுகள், பண முதலைகளின் கறுப்பு பணங்கள்புழங்கும் இடத்தினை பற்றி அரசுகள் எதும் கண்டுக்காமல் இருப்பது பற்றி நம் தோழர்கள் விரைவில் போராட்டம் நடத்துவார்கள்.
பின்னூட்டம்:
அன்றும், இன்றும் வல்லான் வகுத்ததே வாய்க்கால் ..

இந்த கட்டுரைக்கான ஆதாரங்களும் மேற்கோள்களும் எங்கிருந்து பெறப்பட்டன என்று தெளிந்தால் நலம்.
******************


பதிவின் தலைப்பு: எழுதிமுடிக்கப்பட்ட சரித்திரம்



இராவணன் என்ற பெயரே எத்தனையோ செய்திகள் சொல்கின்றன, இராவணன், இரா-வணன் ,ணன், இரா என்றால் இராவில் உலா வருபவன்,வணன் என்றால் வணத்தில் இருப்பவன், வணத்தில் இரவில் உலாவருபவன் எப்படிபட்டவனாக இருப்பான் என்பதுக்கு கபிலர் ஒரு பாட்டில்சொல்கிறார்.



"கன்றும் உண்ணாது கலத்தினும் படாதுநல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குல் என் மாமைக் கவினே "



தழுவிக்கொள்ள இனிமைதரும் தலைவியாம். காந்தள் கண்கள், பசுமை முதிர்ந்த முல்லையின் செவ்விப்பூக்கள், குவளைமலர்களுடன் இடையிடையே இணைத்துக்கட்டிய அழகிய மாலைபோல நறுமணம் உடையவளாம். ஹும்ம்ம். படத்தின் கதை பற்றி நாம் புதுசாக சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் மணி எப்படி புதிதாய் கதை சொல்வது என்று பார்க்கும் பொழுது பிரம்மிப்பே மிஞ்சுகிறது. ஒரு அரக்கனால் கடத்தப்பட பெண்ணின் மணதில் கணவனை பற்றிய எண்ணங்களும் காமமும் எப்படி பொங்கும் என்று சொல்லியிருப்பது அழகு.



இராவணன் தூக்கி சென்றதால் சீதை கற்பு போனதா என்ற சந்தேகத்தில் இராமன் சீதையை சீ (சி)தை ஏற்றினா ச்சீ ச்சீ தை (அ)தை என்னவென்று சொல்வது?,கற்பு என்ற உடன், அது பெண் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதான கருத்தில் இருந்து வெளியே வர இன்னும் காத்திருக்கிறோம். அரை நூற்றாண்டாவது ஆகும் என்றும் தோன்றுகிறது.
நன்றி மரகதம் அம்மாள்! இப்படி ஒரு படத்தை எடுக்க குழந்தையை பெத்து தந்ததுக்கு.

பின்னூட்டம்
வழக் கலக்

தல டச்

வார்த்தை விளையாட்டு

இது உங்க ஏரியா அடிச்சுக்க ஆளே இல்லை!
*****************


படத்தின் தலைப்பு: இராவணன் காட்டின் நிழலும், நதியில் ஓடும் அழகியலும்!


கம்பரின் படைப்புலகம் பெரும்பாலும் அகவுணர்வுகளின் போராட்டம் சார்ந்து இயங்கக்கூடியது. இதை எழுத்தில் வாசகனிடம் கடத்திக் கொண்டு வருவதே சவாலானது எனும் போது பல விவரணைகளுடன் சாவகாசமாக உருவாக்கப்படும் இந்த எழுத்தைச் சிதைக்காமல் திரையில் கொண்டு வருவது இன்னுமொரு மகத்தான சவாலை எதிர்கொள்வதற்கு ஒப்பானது.


நான் கம்பரின் சில குறுங் கவிதைகளை மாத்திரம் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலை வாசித்ததில்லையென்பதால் திரைப்படத்தைப் பின்தொடர சிரமமாயிருந்தது. ஆனால் நாவல் திரைப்படமாகும் போது மூலப்படைப்பை படித்திருக்க வேண்டும் என்பது பொது விதியல்ல. அது அல்லாமலே திரைப்படமும் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சமயங்களில் கூடுதலாகவே ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு சத்யஜித்ரேவின் 'சாருலதா'வை ரசிக்க வேண்டுமெனில் தாகூரின் 'சிதைந்த கூடு' சிறுகதையை வாசித்திருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்.


அதுபோல் லெமன் ட்ரீ என்ற ஒரு ஆங்கில படம் நான் பார்த்த பொழுது எலுமிச்சையின் அற்புத மணம் படம் முழுவதும் நான் உணர்ந்தேன் அதுமாதிரி இதில் இராவணன் சீதையை காட்டுக்குள் தூக்கி சென்றதும் நானும் காட்டுக்குள்ளேயே ஒரு மரம் போல் ஒரமாக நிற்பது போல் உணர்ந்தேன்.


பல வருடங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு சூழ்நிலை காரணமாக விலகுகிற இளைஞனின் மனக்கொந்தளிப்பும் சோகமும்தான் இத்திரைப்படம் முக்கிய புள்ளி. ஆனால் 'புகுந்த வீட்டிற்கு' செல்கிற பெண் சமூகமும் ஏறக்குறைய இதே வேதனையை இயல்பாக ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.


பின்னூட்டம்:
எலுமிச்சையின் அற்புத மணம் / இதுல என்னய்யா அற்புதம் இருக்கு :) :)
உங்கள் பதிவு படித்துவிட்டு படம் பார்த்தது உபயோகமாய் இருந்தது.ஆனாலும், நீங்கள் உபயோகிக்கும் ஜெமோத்தனமான ‘முதிர்ச்சியடைந்த பார்வையாளன்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் லேசான எரிச்சலைத் தருகிறது :(


இந்த படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிடீர்கள்.Before sunrise and Before sunset படங்களை பார்த்திருகிறீர்களா ?


திரைப்பட விழாக்களில் இதை அச்சிட்டே தந்து விடுகிறார்கள். கதைச்சுருக்கத்தை அறிந்து கொண்டாலும் இதை இயக்குநர்கள் எவ்வாறு நுணுக்கமான காட்சிகளினாலும் உணர்வுகளினாலும் திரைப்படமாக்கியிருக்கிறார் என்பதையே ஒரு முதிர்ச்சியடைந்த பார்வையாளன் கவனிப்பான்
***************************


நேற்று ட்விட்டரில் நான் சொன்ன
"சுகுணா, அய்யனார்,வினவு, இவங்களிடம் இருந்து இராவணனை காப்பாற்ற வரம் கொடு சிவனே!!!" இதுவே இந்த போஸ்ட் எழுத வைத்தது!:))
அப்புறம் இன்னொரு மேட்டர் இங்கே ஒளிப்பரப்பாகும் ஒரு மலையாள ரேடியோ சேனலில் இராவணன் 350 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருப்பதுக்கு முக்கியமாக நால்வர் காரணம் என்றார்கள்.
1)மணி 2)அபிஷேக் 3) ARR 4)??????? இந்த பதிலை கேட்டு நெஞ்சு வலியே வந்துட்டு ரசூல் பூக்குட்டியாம், அடேய் பாவிங்களா ரசூல் பூக்குட்டியோட எடுபுடிதான் ARR என்றும் சொல்றீங்களா டா?
**************************************

Saturday, May 22, 2010

பிளாக் ஹூயுமர்

சனியா: பன்மோகன் நான் கேட்ட லிஸ்ட் எங்கே?

பன்மோகன்: இதோ வந்துடும் மேடம்!

சனியா: நீங்க ஒருமுறை அதை செக் செஞ்சுடுங்க குரணாப்!

குரணாப்: நிச்சயமா அதானே வழக்கம்.

பன்மோகன்: பப்புபட்டேல் எங்கே நான் கேட்ட லிஸ்ட்?

பப்புபடேல்: இதே எடுத்துக்கிட்டே இருக்கோம் சார், ஒரு 2 நிமிடத்தில் வந்துடும்.

பன்மோகன்: மேடம் லிஸ்ட் கைக்கு வந்துட்டு, அப்படி யாரும் இல்லை ஆனா ஒரே ஒரு பேர் மட்டும் குழப்பமா இருக்கு.

சனியா: குரணாப்கிட்ட கொடுங்க, அந்த ஆளோட நேட்டிவ் எங்க என்னா என்று செக் செஞ்சுட்டுங்க.

குரணாப்: ஆமாம் மேடம் பன்மோகன் சொல்ற மாதிரி "அசோக்" என்ற பெயர் கொஞ்சம் குழப்பமா இருக்கு.

சனியா: சீக்கிரம் டைம் ஆகிட்டே இருக்கு வேற உலகத்தலைவர்கள் ஏதும் சொல்லும் முன்பு நாம சொல்லனும்.

குரணாப்: அப்படி அவரோட நேட்டிவ் நாம பயப்படுற மாதிரி இருந்துட்டா?

சனியா: நானே டென்சனில் இருக்கேன் நீங்க வேற ஏன் குரணாப், நல்லபடியாவே நினைப்போம்!

(பல போன்கால்கள், பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு)

குரணாப்: கவலைப்படாதீங்க நீங்க பயந்த மாதிரி இந்த விமான விபத்தில் எந்த தமிழரும் இல்லை.

சனியா: அப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு, நாளைக்கு தமிழன் இறந்ததுக்கு வருத்தம் தெரிவிச்ச சனியா என்று வரலாறு தப்பா சொல்லிடுமோன்னு ரொம்ப பயத்தில் இருந்தேன்.

குரணாப்: இனி அந்த கவலையே வேண்டாம் நீங்க தாராளமாக வருத்தம் தெரிவிக்கலாம் விமான விபத்தில் இறந்தவங்க அனைவரும் கேரளா, கர்நாடகா ஆட்கள் தான்.

சனியா: அப்ப விபத்து நடந்த இடத்துக்கும் போய்விடலாம் கிளம்புங்க!

Tuesday, May 18, 2010

எழுத்தின் வலி

ஒருவருடம் முடிவடைகிறது, தலைவர் பிரபாவை எப்பொழுது பிடிக்க ஆரம்பித்தது? எதனால்? என்று எல்லாம் நினைவு இல்லை, தஞ்சையில் இருக்கும் பொழுது இயக்கத்தில் இருந்த அண்ணன் குமார் மூலம் தலைவர் என்னுல் நுழைந்துவிட்டார், அவர் சொல்லிய பல கதைகள் நினைவு இருக்கு. தலைவரை பற்றி எத்தனை குறைகள் எத்தனை ஆதரங்களோடு யார் என்ன சொன்னாலும் அவர் செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நம்புகிறவன் நான். அவரை எவ்வளோ பிடிக்கும் எதனால் பிடிக்கும் என்று எல்லாம் எழுத்தில் சொல்லமுடியாது, அம்மாவை பிடிக்கும் அதுபோல் அவரை பிடிக்கும் அவ்வளோ தான், டீவியில் காட்டிய முகம் அவரோடது இல்லை என்று இன்னமும் நம்புகிறேன். நம்புவேன்!

இன்னமும் அவர்களை வைத்து அரசியல் செய்யும் உத்தமர்களை பற்றி பேசி எதுவும் பயன் இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இலங்கை, இந்திய வெளியுறவு துறை அமைச்சர்கள் பேசினார்களாம், விரைவில் முகாமில் இருக்கும் அனைவரும் மீள் குடியமர்த்தப்படுவார்களாம். சொல்லுவார்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாய் இருக்கும் வரை பேசிக்கிட்டே இருப்பார்கள், நல்லா இருப்பீங்க, நல்லாவே இருப்பீங்க!

சோகமான படங்கள்,பாடல்கள் கூட பார்க்க மாட்டேன், சில சமயம் அப்படி நேரும் பொழுது கண்கள் கலங்கிவிடும், இதுவரை நினைவு தெரிந்து எதையும் படித்து அழுகை வந்ததாக நினைவு இல்லை, அப்படி எதையும் படித்தது இல்லை, முதல் முறையாக தமிழ் நதி அவர்கள் எழுதிய
http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_9826.html இந்த பதிவை பாதி படிக்கும் பொழுதே அலுவலகத்தில் ஆட்கள் இருந்ததால் பாதியில் நிறுத்திவிட்டேன், பின் யாரும் இல்லாத பொழுது படித்தேன் என்னை அறியாமல் கடைசி வரியை படிக்கும் பொழுது...

காலம்தான் எல்லாத்துக்கும் மருந்து என்று சொல்கிறார்கள் இந்த ஒருவிசயத்தை தவிர.

வாழ்க இந்திய ஜனநாயகம்!

Friday, May 14, 2010

ரீ எண்டரி நம்ம ஹீரோ!

திரும்பவும் நம்ம ஹீரோ வருகிறார். எங்கே? திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக! அப்படின்னா என்னா? பேக் போர்சனை காட்டிக்கிட்டா? ச்சே ச்சே அவரு என்னா ஹீரோயினா அப்படி எண்ட்ரி ஆக? இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காரு!

ஏன் இப்படி ஒரு நிலமை? சொய்ங்ங்ங்ங்ங்.. சில பல வருடங்களுக்கு முன்னாடி, இண்டர்நெட்டில் எல்லாம் ரிசல்ட் பார்க்கும் பழக்கம் வராத காலகட்டத்தில் +12 படிச்சார் நம்ம ஹீரோ. எங்கே படிச்சாரு படிக்கிறமாதிரி நடிச்சார். ஹீரோ ஸ்டேட் பர்ஸ்ட் ரேங் வாங்கனும் பேப்பரில் அவரு போட்டோ வரனும் என்று கனவும் கானும் அம்மா. அந்த அம்மாவின் கனவில் ஒரு லாரி டிப்பர் மண்ணை கொண்டுவந்து கொட்டினார் நம்ம ஹீரோ! எப்படி?

ஹீரோவின் போட்டோ பேப்பரில் வரனும் என்று ஆசைப்பட்டா, நம்ம ஹீரோ அவரோட நம்பரையே பேப்பரில் வராம செஞ்சுட்டார்! எப்படி பார்த்தாலும் நம்ம ஹீரோ நம்பர் பேப்பரில் மிஸ் ஆகியிருக்கு, சரி மாலை பேப்பரில் தான் மிஸ் ஆகிட்டு காலை பேப்பரிலாவது வந்திடும் என்று நினைச்சா அதிலும் மிஸ் ஆயிட்டு, ஹீரோ பெயில் ஆன விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு, நம்ம ஹீரோவை யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் நம்ம ஹீரோவுக்கு சேம் சேம் பப்பி சேம்மா போச்சு...அப்படியே கொல்லை பக்கம் போனவரு வயலுக்கு அடிக்க வெச்சிருந்த டெமக்ரானையும் இன்னொரு மருந்தையும் மிக்ஸ் செஞ்சு கருமாந்திரமா இருந்த அந்த கலவைய மூக்க பொத்திக்கிட்டு ஒரே கல்பா குடிச்சிட்டு சமத்து புள்ளையா போய் அவுங்க சித்தப்பா வீட்டில் உட்காந்துக்கிட்டார்.அவுங்க எல்லாம் பெயில் ஆன கவலைய காட்டிக்காம ஹீரோவை தேத்துவதிலேயே குறியா இருந்தாங்க, டக்குன்னு பூச்சி மருந்து ஸ்மெல் அடிச்சதை சித்தப்பா மோப்பம் புடிச்சு, ரெண்டு அறை விட்டு வண்டியில் தூக்கி முன்னாடி வெச்சிக்கிட்டு கொண்டு போய் போட்டாரு அருகில் இருந்த ஹாஸ்பிட்டலில், ஹீரோவுக்கு கொஞ்சம் கொஞ்சமா எங்கேயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு, ஒரு பக்கெட்டில் உப்பை கொட்டி கரைச்சு வாயில் ஊத்தவந்தா ஹீரோ வாயை திறக்க மாட்டேங்கிறார்.

இது சரியாவராதுன்னு டாக்டர் ஒரு புனலில் டியூப் கனெக்ட் செஞ்சமாதிரியும் அதில் ஒரு மரக்கட்டையும் இருந்ததை ஹீரோ வாயில் உட்டு அதில் உப்பு கரைசலை ஊத்தி வாந்தி எடுன்னா, ஹீரோ என்ன மாசமாவா இருக்கிறார் வாந்தி எடுக்க? ஹீரோவுக்கு வாமிட் வரல. டாக்டர் அந்த புனலை அப்படியோ ஒரு சுத்து சுத்தினா அடியிறு வரை போய் நின்ன டியூப் அப்படியே உள்ளே ஒரு சுத்து சுத்தி பிரட்டிக்கிட்டு வாமிட் வந்துச்சு திரும்ப உடுடாங்கடா அந்த டீயுபை, திரும்ப ஊத்துங்கடா அந்த உப்பு கரைசலைன்னு விளையாடிக்கிட்டு இருக்காங்க, ஹீரோ குடம் குடமா வெளியில் எடுக்கும் உப்பு கரைசலை புடிச்சு மோந்து பார்த்துட்டு இன்னும் பூச்சி மருந்து ஸ்மெல் இருக்கு இருக்குன்னு அந்த ஸ்மெல் இல்லாம தண்ணி வரும் வரை இந்த விளையாட்டு நடந்துச்சு.

அப்புறம் என்ன என்னமோ செஞ்சு ஹீரோவை டயர்ட் ஆக்கி கொண்டு போய் படுக்கையில் போட்டுவிட்டார்கள். மயக்கம் எல்லாம் தெளிஞ்சு கண் முழிச்சு பார்த்தா ஹாஸ்பிட்டல் முழுவது ஊர் சனங்க மற்றும் சொந்தகாரனுங்க கவலையோட நிக்கிறாய்ங்க. ஹீரோ பிழைச்சதுக்காகயா இல்லை இப்படி செஞ்சதுக்காகயா என்று தெரியாம ஹீரோ அப்படியோ தூங்க ஆரம்பிக்கிறார்.

வீட்டுக்கு போனாலும் சாப்பாடு எல்லாம் கிடையாது எது குடிச்சாலும் தொண்டையில் இருந்து வயிறு வரை ஒரே எரிச்சல், அடபாவிங்களா இனி எத்தனை சப்ஜெக்டில் பெயில் ஆனாலும் பூச்சிமருந்தை மட்டும் குடிக்கமாட்டேன் டா என்ற சபதத்தோடு ஊரை விட்டு போய் ஒருவருடம் அவரோட மாமாவீட்டில் இருந்து படிச்சி பாஸ் ஆகி காலேஜில் சேர்ந்தபிறகுதான் ஊர் பக்கமே வந்தார்.. அதன் பிறகு சக்கையா படிச்சு ஹீரோ காலேஜ் படிப்பை முடிச்சார்.

பெயில் ஆனவன் இனி என்ன படிச்சு உருப்பட போறான் என்று நினைச்சவங்க எல்லாம் ஊரில் அவனை நல்லபடியா உதாரணமாக காட்டும் அளவுக்கு கஷ்டப்பட்டு முன்னேறி இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார். 7G ரெயிண்போ காலனியில் ஹீரோவிடம் உனக்குன்னு ஒரு தனி திறமை இருக்கும் அதை கொண்டுவந்து நீ பெரிய ஆளா ஆகனும் என்று சொன்ன ஹீரோயினையே லவ்ஸ் & டூயட் எல்லாம் பாடி ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு கல்யாணமும் செஞ்சு இப்ப ஜாலியா இருக்கார் ஹீரோ, அப்ப அப்ப +12 ரிசல்ட் வரும் பொழுது மட்டும் இந்த ப்ளாஸ் பேக் அவருக்கு நினைவுக்கு வந்துட்டு போகும்.

நொட்ட நீதி: பெயில் ஆனால் தான் இப்படி டேமேஜர் ஆக முடியும்:))

நல்ல நீதி: தோல்வியினால் எதுவும் முடிந்துவிடுவது இல்லை...

Wednesday, May 12, 2010

தேர்வுக்கு துணை வருவான் தென்றல் நண்பன்!

எங்கள் ஸ்கூல் கோ-எஜிகேசன் ஸ்கூல் ஆகையால் முழுபரிட்சை ரிசல்ட்டை விட கால் பரிட்சை,அரை பரிட்சை, மாத தேர்வுங்களுக்குதான் பயம் இருக்கும்.ஏன்னா? முழுபரிட்ச்சை ரிசல்ட் ஒன்லி பாசா?பெயிலான்னுதான் தெரியும் மார்க் வராததால் அந்தபயம் இருக்காது, ஆனா இந்த நடுவில் வரும் குட்டிசாத்தானுங்க என்றால் ஒரே டென்சன் தான். பேப்பரை கொடுக்கும் பொழுது மார்க்கை சொல்லி பொம்பள புள்ளைங்க முன்னாடி அடிவிழுமே அதுக்காக இருக்கும் டென்சன் தான், அப்படியே சில வருடங்களில் அது பழகி போய்விட்டது.இந்த டென்சன் ஒருபக்கம் என்றால் அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு வான்னு ஒரு அட்டைய கொடுப்பாய்ங்களே அது ஒரு பெரிய டென்சன் இதுக்காகவே பரிட்சை என்றால் ஒரு பயம் வந்துவிடும்.சரியா ஸ்கூல் கிளம்பும் நேரம் அவசர அவசரமாக அட்டைய காட்டி கையெழுத்து வாங்கிட்டு போனாலும் மாலை வீட்டுக்குவரும் பொழுது அர்சனை பலமா இருக்கும்.


இது எல்லாம் பத்தாவது வரும் வரைதான். அதன் பிறகு ஒரு டெக்னாலஜியை கண்டுபிடிச்சேன் முதலில் கொடுத்த பிராக்கிரஸ்ரிப்போர்ட் கார்ட் தொலைஞ்சுட்டுன்னு சொல்லி வேற புது பிராக்கிரஸ் ரிப்போர்ட் ஒன்னு வாங்கி அதில் இருக்கும் ஒரிஜினல் மார்க்கில் நான் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன், பழைய ரிப்போர்ட்டில் நல்ல மார்க்கா நானே அதில் போட்டு அதை அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு இருந்தேன்.


பத்தாம் வகுப்பு வரை எக்ஸாம் எழுதும் பொழுது பெஞ்சின் இரண்டு மூலைகளிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன், இப்படிதான் உட்கார வைப்பாங்க பெரியவங்களுக்கு அப்பவே தெரியும்போல ஒரு ஆணின் முன்னேற்றத்துக்கு பெண் எந்த வகையிலும் உதவி செய்யமாட்டா என்று:). அதுவும் பொண்ணுங்களிடம் நமக்கு இருக்கும் ரொம்ப நல்லபெயருக்கு பேப்பரை காட்டிட்டுதான் மறுவேலை பாப்பாங்க:( சரி இனி பொண்ணுங்களை நம்பினால் வேலைக்கு ஆவாதுன்னு எக்ஸ்ட்ரா ரெண்டு அடிஸ்னல் சீட் வாங்கி அதில் முதல் நாளே பித்தாகரஸ் தேற்றம் போன்ற கடினமான கேள்விகளுக்கு எல்லாம் பதிலை எழுதி அதை எடுத்து போய் திரும்ப வேறொரு பேப்பரில் எழுதி கொடுத்துக்கிட்டு இருந்தேன்,கூட படிச்ச ஒரு மாங்காமடையன் திரும்ப எழுத அலுப்பு பட்டுக்கிட்டு வராத கேள்விக்கு எழுதி வந்த பக்கத்தை மட்டும் அடிச்சிட்டு பேப்பரை கட்டி கொடுத்துட்டான், அதில் இருந்து அடிஸ்னல் ஷீட்டில் அப்பொழுது ஹாலுக்கு வரும் ஆசிரியரும் கையெழுத்து போட்டு தரனும் என்று ரூல்ஸ் போட்டுட்டாய்ங்க.


+1 +12 படிக்கும் பொழுது எல்லாம் ஆசிரியர் வெவரமா பொண்ணுங்க பக்கத்தில் நம்மை உட்காரவிடவில்லை. ஆனா பேப்பர் கொடுக்கும் பொழுது மட்டும் நல்லா நாக்கைபுடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டு அடிச்சு கொடுப்பாங்க ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் வடிவேல் மாதிரி நீ அடி நான் ஒரு கணக்கு வெச்சுக்க வேண்டாமா என்கிற லெவலுக்கு வந்துட்டோம். என்ன இருந்தாலும் எக்ஸாம் என்றால் கொஞ்சம் பயமாகதான் இருக்கும் நமக்கு பின்னாடி உட்காரும் செந்தில் ஒழுங்கா படிச்சுக்கிட்டு வரனுமே என்று ரொம்ப டென்சனா இருக்கும். அவனை மட்டும் நம்பி போக முடியுமா அவன் எழுதி முடிக்கும் வரை சும்மாவா உட்காந்திருக்க முடியும் என்று கொஞ்சம் பிட்டும் பிரிப்பேர் செஞ்சுக்கிட்டு போகனும் இப்படி ரொம்ப டென்சனா இருக்கும். நைட் முழுக்க கண் முழிச்சு கை வலிக்க எழுதிக்கிட்டு போன பிட்டில் இருந்து எந்த கேள்வியும் வராம இருந்தா மனசு எவ்வளோகஷ்டப்படும் என்று அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.


கல்லூரிக்கு வந்த பிறகு நாமலும் கொஞ்சம் இம்ரூவ் ஆகி புது புது மெத்தேட் எல்லாம் யூஸ் செய்ய ஆரம்பிச்சோம், எங்கள் பூண்டி கல்லூரியில் பிட் அடிச்சு பிடிச்சிட்டா 3 வருடம் முடிக்கும் வரை செமஸ்டர் எழுத முடியாது, இருந்தாலும் அடங்கவில்லை. ஸ்கூல் போல என் பின்னாடி உட்காரும் பையன் பெயர் ஆனந்த், அய்யர் வூட்டு புள்ளநல்லா படிப்பான் ஆனா பேப்பரை கொடுக்க பயப்படுவான், ரெண்டு மூனு முறை கேட்டு பாப்பேன் தர பயப்படுவான், அய்யரே பேப்பரை தரல பிட்டை உன் கால் அடியில் போட்டுவிடுவேன்என்று வலுகட்டாயமாக பேப்பரை புடுங்கி எழுதுவேன். ரிசல்ட் வரும் பொழுது அவனை விட கூட மார்க் வாங்கியிருப்பேன், வாய் ஓயாம திட்டிக்கிட்டே இருப்பான்.எலே நீ உன்னை மட்டும் நம்பி எக்ஸாமுக்கு வர, நான் உன்னை மாதிரி நாலு பேரை நம்பி வருகிறேன் எல்லோரிடம் இருந்தும் வாங்கி எழுதுவதால் தான் மார்க் கூட வருது நெக்ஸ்ட் டைம் வேண்டும் என்றால் நீயும் ட்ரை செய்யுன்னு சொன்னா போதும் ஓடிடுவான்.


ஒரு முறை எடுத்து போன பிட்டை வெச்சி 15 மார்க் கொஸ்டின் எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது, 5 மார்க் கொஸ்டின் பிட்டை கொடுக்க சொல்லி கேட்டான் பிரண்ட், இருடா எழுதிட்டு பேப்பரை தருகிறேன் என்றேன் இல்ல இப்பவே கொடு என்றான். சரின்னு பிட்டை கொடுத்தேன். வெளியில் வந்ததும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினான் ஏன் டா இந்த ஒரு பிட்டை படிச்சு எழுதங்காட்டியும் டைம் முடிஞ்சு போச்சுச்சு... பெரிசா எழுதினாலா என் கையெழுத்து என்னை மாதிரி அழகா இருக்கும், இதுல பிட் உன்னால புரிஞ்சுக்க முடியாதுன்னுதான் பேப்பரை தருகிறேன் என்றேன் நீதான் அடம்பிடிச்ச நான் என்ன செய்ய என்றேன்...

அப்புறம் ஒரு முறை பிராக்டிகளுக்கு எழுதிக்கிட்டு போன புரோகிராம் பிட்டில் அடுத்த லைன் என்று புரிய / போட்டு வரிசையாஎழுதி வெச்சேன், பிட்டை வாங்கி எழுதிய பிரண்ட் அந்த / சேர்த்து எழுதி அதை எண்டரும் செஞ்சு ஏகப்பட்ட எர்ரர் காட்டியதும் கடுப்பாகி வந்து அடிச்சான். இப்ப HCLல் வேலை பார்க்கிறான்:)

எழுதிட்டு போன பிட் எல்லாம் வந்துட்டா எதை முதலில் ஆரம்பித்து எதை கடைசியா முடிப்பதுன்னு ஒரு டென்சன் வரும் பாருங்க..அதை எல்லாம் சொன்னா புரியாது!அப்புறம் சில பேர் எந்த பிட் எங்க இருக்குன்னு அதுக்கு ஒரு பிட் எடுத்து வருவாங்க. இது உட்சக்கட்ட காமெடி.

இப்படிதான் நம்ம எக்ஸாம் வாழ்கை ரொம்ப டென்சனா இருந்தது.

டிஸ்கி: வினவு அண்ணா நீங்க ஆரம்பிச்சதுன்னு தெரியாம இப்படி விளையாட்டு தனமா, சந்தனமுல்லை கேட்டாங்கன்னு எழுதிட்டேன், இவன் சமூகத்தில் இருக்கும் களைன்னு இந்தியன் தாத்தா மாதிரி கிளம்பிடாதீங்க, இனி எக்ஸாம் எல்லாம் எழுத முடியாது:)

எக்ஸாம் டென்சன் பத்தி எழுதனுமாம்... இனம் இனத்தோடதான் சேரும் என்பதுமாதிரி என்னை மாதிரி பிர்லியண்ட் பாய்ஸ்

1)கார்க்கி (இவரு ஸ்டேட் அளவில் பர்ஸ்ட் மார்க் வாங்கியவர்)

2)அப்துல்லா (இவரு இந்திய அளவில் முதல் ரேங்க் வாங்கியவர்)

3) ஆதிமூலகிருஷ்ணன் (இவரு உலக அளவில் மெடல் வாங்கி சாதனை செய்தவர்) யோவ் இதிலும் வந்து சிக்சிக்மா இல்ல சிக்காம போவுமா அது இதுன்னு சீக்கு கோழியாட்டம் அனத்துன வாயிலேயே குத்துவேன்.

Sunday, May 9, 2010

செல்வேந்திரன் கார்ட்டூன்ஸ் 10-5-10

வரும் ஆனா வராது!!!


எதா இருந்தாலும் பிளான் செஞ்சு செய்யனும்!



கவிஞர்களை காதலிக்கும் காதலிகள் எல்லாம் பாவம்:))




மேல் ஜன்னல் மட்டும் தான் ஓப்பனில் இருக்கு!




உட்கார முடியல போல!




ஒய் பிளட்? சேம் பிளட்!






படிச்சாலும் தண்டனை,படிக்காட்டியும் தண்டனையா?அவ்வ்



நரேஷ்குப்தா உங்களுக்கு அண்ணன் முறை வேண்டுமா?



ஸ்ஸ்ப்பா இவ்வவே கண்ணை கட்டுதே!!!



அண்ணாச்சியும் மண்டைய சொறிகிறார், பேச ஆரம்பிச்சிடுவார் போலயே!



தேடினாலும் கிடைக்காது!




Saturday, May 8, 2010

ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்க...

வருசம் முழுவதும் நடக்கும் கொள்ளை பத்தாதுன்னு அட்சயத்ருதியைன்னு ஒரு நாள் ஒன்னை பிக்ஸ் செஞ்சு ஊர்ல இருக்கிறவங்க எல்லோரையும் மொட்டை அடிக்க என்றே விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.

அட்சயத்ருதியை அன்னைக்கு தங்கம் வாங்கினா அந்த வருசம் முழுவது தங்கமா வந்து சேருமா சேராதா என்ற நம்பிக்கைக்குள் நாம் நுழைய வேண்டாம், இந்த தங்கம் விற்பனையில் நடக்கும் கொள்ளையை மட்டும் பார்ப்போம்.


8கிராம் தங்க நகை வாங்கினால் 1 கிராம் சேதாரம் என்று ஒன்னு போடுறாய்ங்க, என்னடா சேதாரம் என்றால் நகையை செய்யும் பொழுது கொஞ்சம் தங்கம் வேஸ்டா போவுமாம் அதுக்குதான் போடுவது சேதாரம் என்கிறார்கள், நகை செய்யும் பொழுது 0.01 மில்லி கிராம் தங்கத்தை கூட வேஸ்ட் ஆகவிடமாட்டார்கள். சரி அந்த வேஸ்டேஜையாவது கொடுங்க நாங்க உருக்கி தங்க பஸ்பம் சாப்பிட்டாவது கொஞ்சம் கலரை மெருகேத்திக்கலாம் என்றால் அதையும் கொடுக்க மாட்டார்கள்.

எல்லா பொருட்களுக்கும் இருக்கும் எடைக்கு மட்டுமே நாம் காசு கொடுத்து வாங்குகிறோம் ஆனா தங்கம் வாங்கும் பொழுது மட்டும் இருக்கும் எடையை விட எக்ஸ்ட்ரா காசு கொடுக்கிறோம்.

இங்கு (துபாயில்)நகை வாங்கும் பொழுது இருக்கும் எடைக்கு மட்டுமே காசு கொடுக்கிறோம் சேதாரம் என்ற ஒன்னுமே இல்லை, ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் வித்தியாசம் இல்லை, இந்தியாவில் என்ன விலையோ அதே விலைதான் கிட்டத்தட்ட இருக்கும். அது எப்படி இங்கு மட்டும் இப்படி விற்பனை செய்யமுடிகிறது???? இவ்விங்களுக்கு மட்டும் சேதாரம் ஆவது இல்லையா?

கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா? நம்ம ஊரில் மட்டும் ஏன்? இந்த கொள்ளையை கோர்ட்டில் ஏதும் வழக்கு மாதிரி போட்டு தடுக்க முடியுமா? இதில் இருக்கும் சூது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வான்னு யாரும் சொன்னா, அப்படியே என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!:)))

அதிஷாவுக்கு: பிளாக்குன்னு ஒன்னு வெச்சிருந்தா பொதுநலனுக்காக பொங்கனும் என்று பித்தானந்தசாமிகள் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இல்லாட்டி பிளாக்கரா சேத்திக்கமாட்டாய்ங்களாம், அதுக்காகதான் இந்த பொங்கலூர் பழனிசாமி அவதாரம். இன்னும் பல அவதாரம் எடுக்கலாம் என்று ஐடியா இருக்கு உங்கள் மேலான ஆலோசனைகள் வேண்டும்:)))) (மகனே இதுக்கு நன்றி நல்ல பதிவு கேபிள்ஜின்னு பின்னூட்டம் போட்ட கொன்னுபுடுவேன் கொன்னு)

Monday, May 3, 2010

கும்மோ கும் கும் கும்!

என்னையா வாழ்கை இது வீடு, மனைவி,புள்ளை குட்டிங்களை எல்லாம் பிரிஞ்சு இங்க கஷ்டப்படனுமா இதோ கிளம்புறேன், இதோ அடுத்த மாசம் கிளம்புறேன் என்று 20 வருசமா இங்கிருக்கும் ஆளுங்களை பார்க்கும் பொழுது அனுதாபம் வராமல் எரிச்சல் தான் வருகிறது, அது போல் பைத்தியக்காரன் அண்ணாச்சி & சுந்தர் இருவரும் தேர்வு செய்யும் உலகதிரைப்படங்கள் வரிசையில் இடம்பிடிக்க கூடிய படங்களில் நடிப்பவர் விஜய் இல்லை என்று தெரியும், கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்த இவர் மசாலா படங்கள் பேரரசு படத்தில் நடிக்க ஆரம்பிச்சதும் படு மொக்கையாக மாறிவிட்டது அதில் இருந்து விஜய் படங்களை பார்ப்பது இல்லை. அனைவரும் நல்லா இருக்கு என்று சொன்னதால் பார்த்தது "போக்கிரி". சும்மா பதிவு எழுதனும் என்று முதல் நாளே போட்டி போட்டு டிக்கெட் வாங்கி முதல் ஷோவில் படம் பார்த்துவிட்டு திரும்ப திரும்ப ஒரே டைப் ஒப்பாரி வைக்கும் ஆளுங்களை கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இனி விஜய் படம் பார்ப்பது இல்லை என்பதும் போல் இதுமாதிரி ஆளுங்க விமர்சனத்தை கூட படிக்க கூடாது போல:))

*****************
சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம் தி எஸ்கேபிஸ்ட், ஒரு ஜெயிலில் இருக்கும் 5 பேர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார்கள், எப்படி திட்டத்தினை செயல்படுத்தினார்கள்? தப்பித்தார்களா இல்லையா என்பதை மிகவும் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். முடிவு எதிர்பார்க்காத ஒன்று மிகவும் அருமையாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்!
(லைட்டிங் அருமை, மஞ்சா கலர் டோண்ட் அருமை, கேமிரா கோணம் அருமை, BGM அருமையோ அருமை, வேறு ஏதும் டெக்னிக்கல் வார்த்தைகள் விடுபட்டு இருந்தால் சொல்லுங்க அதையும் சேர்த்துவிடலாம். )
************
எனக்கு இங்க பல பேர் வெச்சிருக்கும் நிஸான் ஆர்மடா என்ற காரை கண்டால் கொஞ்சம் பயம், நாம துக்குனீயோண்டு காரை ஓட்டிக்கிட்டு போகும் பொழுது இந்த ஆர்மடா என்ற யானை குட்டி மாதிரி காரை வெச்சிக்கிட்டு சர்ர்ர்ர்ன்னு நமக்கு முன்னாடி இண்டிக்கேட்டர் கூட போடாம லைன் சேஞ்ச் செய்யும் பொழுது பகீர் என்று இருக்கும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஜெர்மனி பெண் என்று நினைக்கிறேன் ஆர்மடாவை விட கொஞ்சம் சின்ன மாடல் வண்டியை ஓட்டிக்கிட்டு திடிர் என்று என் லைனுக்கு வர நினைத்த பொழுது நான் ஹாரன் அடித்ததால் பயந்து போய் கடுப்பாகி ஆங்கில கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு வேகமாக சென்றது... "ஹி ஹி நானா வேண்டாம் என்று சொன்னேன் இவ்வளோ கோவமா திட்டிட்டு போற" என்றேன் அருகில் இருந்த நண்பர் சிரிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆனது.
*****************
மனைவியை டெலிவரிக்கு ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்த பொழுது வளைகாப்புக்கு போட்ட கிளாஸ் வளையலை டாக்டர் கழட்டிவிட சொன்னாங்க, அம்மணி ரெண்டு சுத்து பெருத்து இருந்ததால் கழட்ட முடியவில்லை சரி உடைச்சு எடுத்திடுங்க என்று டாக்டர் சொல்லிட்டாங்க, அவுங்க அப்பா ஒவ்வொரு வளையலா உடைச்சிக்கிட்டு இருந்தார் ஒரு வளையல் சட்டென்று குத்தி அவர் விரலில் லைட்டா இரத்தம் வந்துட்டு, அருகில் இருந்த அத்தை டக்கென்று பையில் இருந்த பழைய புடவையை கிழித்து விரலில் சுற்றினார்கள், ம்ம்ம்ம் பொண்ணு டெலிவரிக்கு வந்திருப்பதால் பையில் இருக்கும் பழைய புடவை கிழியுது, இதே 25 வருசம் முன்னாடின்னா கட்டியிருக்கும் புடவை முந்தானை கிழிஞ்சியிருக்கும் என்றேன். கட்டு போட்டுக்கிட்டு இருந்ததை பாதியில் விட்டுவிட்டார்கள்!

*******************

விடுமுறை நாட்களில் அம்மாவை சீண்டுவது வழக்கம் போன முறை மனைவி செய்திருந்த பிரியாணி அருமையா இருந்தது சாப்பிட்டுக்கிட்டே வீட்டுக்கு போன் போட்டு அம்மா நீயும் இத்தனை வருசம் பிரியாணின்னு ஒன்னை எனக்கு செஞ்சு போட்டு ஏமாத்திட்ட என் பொண்டாட்டி செஞ்சா பாரு பிரியாணி அடா அடா என்னா ருசி என்னா ருசின்னு அம்மாவை வெறுப்பேத்தினேன், டேய் இங்க வரும் பொழுது விரால் மீன் வறுவல் கேட்பில்ல அப்ப கவனிச்சிக்கிறேன் டா உன்னைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பேசி முடிஞ்சதும் மனைவியிடம் அந்த புளிசாதம் இன்னும் கொஞ்சம் வை என்றேன்...$#$#$#$#@@@@#

***********************

சில விசயங்கள் அனுபவித்து பார்த்தால் தான் புரியும் அதில் ஒன்று தாய்மை, மாசமாக இருக்கும் மனைவியின் அருகில் இருப்பது, பின் குழந்தையோடு இருப்பது. அழகான உலகமாக இருக்கிறது அம்மாக்களின் உலகம். குழந்தை ஏதும் அடம்பிடிச்சால் "பாரு உன் பிள்ளையை" என்றும் சமத்தா இருக்கும் பொழுது "பாரு என் பிள்ளை எப்படி சமத்தா இருக்கான்" என்றும் மாறிவிடுகிறது. நேற்று பட்டாம் பூச்சிக்கு பல் முளைத்து வெளியில் தெரிகிறது அதுக்கு எத்தனை சந்தோசம் எத்தனை போல் கால்ஸ் செய்திருக்கிறார்கள் இதுவரை. அம்மாக்கள் ஆல்வேஸ் அம்மாக்கள்!:))) . அருகில் இருந்து அத்தனையையும் அழகாக ரசித்துக்கொண்டும் நினைவுகளை சேமித்துக்கொண்டும் இருக்கிறேன்.