வலையுலக மக்கள் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கலந்துக்கிற மாதிரியான ஒரு கற்பனை, இங்கு டீலே வேற!
வால்பையனுக்கு ரூல்ஸை சொல்லுகிறார் ரிஷி, இங்க பாருங்க இந்த பக்கம் புகையிலை, பீடி, சிகரெட், பில்டர், கஞ்சா, சாராயம், கள்ளு, பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி, ஓட்கா, டகிளா,ஷாம்பெயின் என்று ஒவ்வொரு பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியிலும் ஒன்னு ஒன்னு இருக்கும். நீங்க ஒரு பெட்டிய எடுத்து இங்க வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் ஓப்பன் செய்ய சொல்லனும். அப்படி ஓப்பன் செய்யும் பொழுது டீல் பேசுவோம், உங்க பெட்டியில் விலை அதிகமான ஷாம்பெயினும் இருக்கலாம், இல்ல பீடி கட்டும் இருக்கலாம். உங்க லக்கை பொருத்து.
ரிஷி: இப்ப முதல் ரவுண்ட்
வால்: எனக்கு ஒரு லார்ஜ்
ரிஷி: யோவ் இது விளையாட்டோட முதல் ரவுண்ட், இப்ப என்ன செய்யனும் நீங்க அங்க நிக்கிற பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியை ஓப்பன் செய்யனும்!
வால்: முதலில் அவுங்களை எனக்கு பாலோயரா ஆக சொல்லுங்க அப்புறம் நான் அவுங்க பாலோயரா ஆகி அப்புறம் ஓப்பன் செய்கிறேன், எனக்கு பாலோயரா இல்லாதவங்க பொட்டிய எல்லாம் நான் ஓப்பன் செய்வது இல்லை!
ரிஷி: நீங்க ரூல்ஸை பாலோ செய்யாததால் உங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்.
வால்: ஹல்லோ அப்ப முதலில் ரூல்ஸை என்னை பாலோ செய்ய சொல்லுங்க, நான் உடனே ரூல்ஸை பாலோ செய்யுறேன், இதுதான் என் கொள்கை!
ரிஷி: ஆண்டவா...........
************
அடுத்து தண்டோரா!ரிஷி: சார் உங்களை அறிமுக படுத்திக்குங்க!
தண்டோரா: என் அடுத்தவரி பெயர் அடுத்தவரி தண்டோரா அடுத்தவரி ஆச்சரியகுறி.
ரிஷி: என்ன சார் அது அடுத்தவரி அடுத்தவரின்னு சொல்றீங்க?
தண்டோரா: என் பெயரை கவிதையா சொன்னேனுங்க, எழுதும்பொழுது என்றால் ஒரு Enter தட்டி தட்டி கவிதையா மாத்திடுவேன், பேசும்பொழுது இப்படி சொன்னாதானே கவிதைன்னு புரியும்.
ரிஷி: என்ன கொடுமை சார் இது?
தண்டோரா: ஆஹா பின்னூட்டம் வேற போட்டுவிட்டீங்களா?
ரிஷி: என்னது பின்னூட்டமா?
தண்டோரா: ஆமா நான் சொன்ன கவிதைக்கு நீங்க சொன்ன பின்னூட்டம் என்ன கொடுமை இது! இதையும் கவிதையா என்ன அடுத்த வரி கொடுமை அடுத்தவரி இது அடுத்தவரி கேள்விகுறின்னு சொல்லி இருந்தீங்கன்னா நீங்களும் கவிஞரா ஆகி இருக்கலாம்.
ரிஷி: ஆஹா வேண்டாம் சார் வாங்க ஆட்டத்துக்கு போகலாம். இப்ப அங்க நிக்கும் பொண்ணுங்க கையில் இருக்கும் பொட்டிய எதையாவது ஒன்னை ஓப்பன் செய்ய சொல்லுங்க.
தண்டோரா: மூன்றாவது அடுத்தவரி வரிசையில் அடுத்தவரி இரண்டாவதாக அடுத்தவரி நிற்கும் அடுத்தவரி பெண்ணின் அடுத்தவரி கையில் அடுத்தவரி இருக்கும் அடுத்தவரி பெட்டி அடுத்த வரி எண் அடுத்தவரி இருபத்தி அடுத்தவரி மூன்று அடுத்தவரி திறங்க.
ரிஷி: போன் ரிங் ஆகிறது... சார் இப்ப கால் வந்துச்சு... நீங்க இதுமாதிரி கவிதை சொல்லாம இருந்தா இப்பவே ஷாம்பெயின் பாட்டிலை உங்களுக்கு தருவதாக சொல்லுகிறார், சொல்லுங்க டீலா, நோ டீலா!
தண்டோரா: டீ அடுத்தவரி
ரிஷி: அய்யய்யோ
****************
கேபிள் சங்கர்ரிஷி: மனசுக்குள்(ஆஹா இவரிடம் அறிமுக படுத்திக்க சொல்லலாமா வேண்டாமா? இவரும் அவரை போல் கவிஞரா இருந்துட்டா?)
(கேபிள் சங்கர், ரிஷியிடம் இன்னொரு சேர் கொண்டு வர சொல்லுங்க என்கிறார், ரிஷி இல்ல சார் நீ மட்டும் தான் இதில் கலந்துக்கமுடியும் வேறு யாரும் ஹெல்புக்கு எல்லாம் வெச்சுக்க கூடாது என்கிறார், இல்லை இல்லை எனக்குதான் இன்னொரு சேரும் என்று சொல்லியபிறகு அவர் கொண்டு வந்த சேரில் தன் தொப்பையை பார்க் செஞ்சுட்டு ஆரம்பிக்கிறார்)
கேபிள்: ஹல்லோ இரண்டாவது வரிசையில் மூன்றாவதா நிற்க்கும் பியூட்டி உன் தலை முடியில் இரண்டு முடி லைட்டா கலைஞ்சு போய் இருக்கு பாரு, அந்தா நாலாவது பொண்ணு மேக்கப் கொஞ்சம் ஹார்டா இருக்கு பாருங்க அதை கொஞ்சம் டச்சப் செய்யுங்க, அந்த கடைசி வரிசையில் நிக்கும் இரண்டாவது பொண்ணு சூப்பரா இருக்கு அதை முதல் வரிசைக்கு கொண்டு வாங்க, மூன்றாவது வரிசையில் இருக்கும் பெண் மேல் படும் லைட்டிங் கொஞ்சம் அவுட்டாப்போக்கசில் இருக்கு அதை கொஞ்சம் சரி செய்யுங்க....
ரிஷி: சார் நிறுத்துங்க...சார் நிறுத்துங்க
கேபிள்: கொஞ்சம் லைட்டிங்கில் கிரீன் டோன் இருக்கிறமாதிரி பார்த்துக்குங்க...அப்புறம் கடைசியில் நாலாவதா நிக்கிறபொண்ணு பிரா கொஞ்சம் வெளியில் தெரியுது இன்னும் நல்லா தெரியுற மாதிரி அட்ஜெஸ் செய்யுங்க..
ரிஷி: சார் நீங்க டைரக்டரா?
கேபிள்: ஆமாம், இதுவரை ஒரு 20 இங்கிலீஸ் படம், ஒரு 30 தமிழ்படம், ஒரு 10 தெலுங்குபடம்...
ரிஷி: இவ்வளோ படம் டைரக்ட் செஞ்சு இருக்கீங்களா? சார் பிளீஸ் சார் எனக்கு அடுத்த படத்தில் சான்ஸ் கொடுங்க சார்...
கேபிள்: இதுக்கு எல்லாம் விமர்சனம் எழுதி இருக்கிறேன்னு சொல்ல வந்தேன்...முதலில் நீங்க மூனு நாளா டாய்லெட் போகாதவன் போல மூஞ்ச வெச்சுக்கிட்டு டீலா நோ டீலான்னு கேட்பதைமாத்தனும், தானாவே உங்களுக்கு சான்ஸ் தேடிவரும்.
ரிஷி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*********************
பைத்தியக்காரன்
ரிஷி: சார் வணக்கம்
பைத்தியக்காரன்: வணக்கம்மா! நல்லா இருக்கியாம்மா?
ரிஷி: நல்லா இருக்கேன் சார்! ஆட்டத்துக்கு போகலாமா சார்?
பைத்தியக்காரன்: இரும்மா, (பொண்ணுங்களை பார்த்து) ஏம்பா கையில் இருக்கும் பொட்டிய மூடி வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் திறந்து வெச்சு இருக்கீங்களே? இது நல்லாவா இருக்கு?கொஞ்சம் ஒழுங்கா உடம்பை மூடுவது போல் ட்ரஸ் போட கூடாதாப்பா?
ரிஷி: மனசுக்குள் (என்ன இவரு என்னை என்னமாங்கிறார், பொண்ணுங்களை என்னப்பா என்கிறார்) சார்...
பைத்தியக்காரன்: மன்னிக்கனும், நான் விளையாட வரவில்லை என் கருத்தினை இங்கு பதிவு செய்யவே வந்தேன். இது என்னோட கருத்து மட்டுமே, கருத்தினை யார் மேலும் நான் திணிக்கவில்லை, கருத்து சொல்வது என் கடமை அதை கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் உரிமை. நன்றி வருகிறேன்.
ரிஷி: நன்றி நான் சொல்லனும் சார்! ரொம்ப நன்றி!(நல்லவேளை போர்வையோட வந்து எல்லோரையும் போத்திவிட்டு போகாம போகிறாரே)