அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு குழந்தையை முதன் முதலில் கையில் கொண்டுவந்து கொடுத்தபொழுது.
ஒரு புதுவரவு அதுவும் முதல் வரவு வீட்டில் எத்தனை மகிழ்ச்சியை கொண்டுவருகிறது. நான் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே ஆண் குழந்தை, அடிக்கடி மனைவி சொல்வார்கள் சண்டை போட்டு விளையாட ஆண் பிள்ளை வேண்டும் என்று கேட்கும் ஒரே ஆள் நீங்கதான் என்று.
சொந்த சகோதரனுக்கு, சகோதரிக்கு குழந்தை பிறந்தது போல் தொலை பேசியில் பேசிய அனைத்து நண்பர்கள் குரலிலும் தெரிந்தது அத்தனை அன்பு. மறக்காமல் அனைவரும் கேட்ட முதல் கேள்வி பையன் உன் கலரில் இல்லைதானே என்று:) நல்லா இருங்க மக்கா!:)
மகனுக்கு இனியன் என்ற பெயரை முடிவு செய்து இருக்கிறோம். தூய தமிழில்தான் பெயர் வைக்கனும் என்று கொள்கை எல்லாம் இல்லை, முதலில் கருவில் இருக்கும் பொழுதே முடிவு செய்து இருந்த ஹர்ஷன் என்ற பெயர் எங்களை தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. ஆகையால் பெயரை மாற்றிவிட்டோம். பெயர் வைக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் தான், அதற்கு முன்பு நண்பர்களிடம் சொல்லிவிடலாம் என்று உங்களுக்கு சொல்லிவிட்டேன். மற்றபடி இனியன் சொன்ன பேச்சு ஒழுங்காக கேட்கும் பிள்ளையாக இருக்கிறான்.
தம்பி நிப்பாட்டாம ஒரு ஒரு மணி நேரம் அழுவுடா என்றால் சரியாக செய்கிறான்.
தம்பி இரவு எல்லாம் முழிச்சுக்கிட்டு அம்மாவை தூங்கவிடாம பார்த்துக்கடா குட்டி என்றால் சரியாக செய்கிறான்.
ஒழுங்கா பால் குடிக்காம அடம்பிடிடா என்றால் சரியாக செய்கிறான். இப்படி சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட தவறு இல்லாமல் சரியாக செய்கிறான்.
குழந்தைகளை லூலுலுலு , டடாடா டா, ஜூஜூஜூ என்று என்ன என்னமோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சுபவர்களை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருந்தது. இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை. அம்மா சமாதான படுத்தும் பொழுது அப்பா அடிச்சாரா செல்லம் இரு இரு நாம அடிச்சிடலாம் என்று மஞ்சுவும், நான் கொஞ்சும் பொழுது அம்மா ங்கா கொடுக்கலீயாப்பா இரு இரு அம்மாவை நாலு போடு போடலாம் என்று நானும்...மாறி மாறி ஒருத்தரை அடிக்க சப்போர்ட்டுக்கு ஆள் சேர்த்துக்கிட்டு இருக்கோம்.
வாழ்த்திபதிவு போட்ட நண்பர்கள் , வாழ்த்து செய்தி அனுப்பியவர்கள், போனில் பேசி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி!
பிறகு அடுத்த வாரம் ஊர் திரும்பியதும் மொக்கைய ஆரம்பிச்சுடலாம்! அதுவரை வெயிட்டீஸ்... தம்பி அழுவுகிறான் அவனை பார்த்துக்க போகிறேன்... ஹி ஹி ஹி பொறுப்பான தகப்பன் என்று எப்படி எல்லாம் உங்களை நம்ப வைக்க வேண்டியிருக்கு!
Saturday, October 24, 2009
Tuesday, October 13, 2009
நாளைக்கு சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நாளை (15/10/2009 ) அண்ணாத்த குசும்பன் தீபாவளியை கொண்டாட ஊருக்கு விஜயம் செய்கிறார், ஆகையால் அவரை வரவேற்று பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் கட்டவுட் பேனர், போன்றவைகளை வைக்கவேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கிறேன். அவர் வரும் நேரம் இரவு 11.30க்கு ஆகையால் வெடி வெடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தி மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்காமல் தீபாவளி அன்று அவர் ஊருக்கு வந்த சந்தோசத்தை அனைவரும் வெடி வெடிச்சு கொண்டாடுங்க என்றும் கேட்டுக்கிறேன். புது சொக்காவும் போட்டுக்கலாம்:)
மொக்கை போட விரும்பம் இருப்பவர்கள் 9585161266 இந்த நம்பருக்கு (16/10/2009 )வெள்ளி கிழமை காலை முதல் மொக்கை போடலாம்.
(பழய பாலுதேவனா இருந்தா என்பது போல் பழய சரவணனா இருந்தா ரவுசு கொடுக்கும் பிகருங்க வீட்டில் இந்த வெடிய கொளுத்தி போட்டு ரப்சர் கொடுக்கலாம்...ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாகாலாம்... அதைபற்றி படிக்க
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Sunday, October 11, 2009
ஒபாமா ஸ்பெசல் கார்ட்டூன் 12-10-2009
ஒன்னியிம் புரியல!
விக்காத பாம் எல்லாம் எப்படி இனி யூஸ் செய்வது?
இதுவரை நாம செஞ்ச ஒரே சமாதானம்!
பயபுள்ளைங்க எப்பவும் இப்படிதான்!
***********************
இலவச இனைப்பு!
(பிரபல பதிவரின் காதலி)
Thursday, October 8, 2009
இதிலிருந்து என்ன தெரியுது???
எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனைகள் வகுப்பு இருக்கும், எப்பொழுதும் எதாவது ஒரு கதைய சொல்லி இதுல இருந்து என்ன தெரிகிறது சொல்லு, எங்க மணி நீ சொல்லுடா பார்ப்போம், எங்க குமாரு நீ சொல்லுடா பார்ப்போம் என்று ஒவ்வொரு வாரமும் பிளேடு போடுவார் எங்க வாத்தியார். அன்னைக்கும் வழக்கம் போல ஒரு கதை சொன்னார் ஒரு வீட்டில் ஒரு சோம்பேறி எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பானாம் அவனுக்கு வேலைக்கு போவதே பிடிக்காதாம், அப்ப லெட்சுமி சாமி என்ன செஞ்சுச்சாம் ஒரு தேவதைய அனுப்பி அவன் வீட்டு கதவை தட்டிட்டு வீட்டு வாசல் முன்னாடி ஒரு ஓட்ட பானைய வைக்க சொன்னுச்சாம் தேவதையும் போய் கதவை தட்டிட்டு பானையவெச்சுட்டு ஒளிஞ்சுக்கிச்சாம், இந்த சோம்பேறியும் மெதுவா வந்து பார்த்தா ஓட்ட பானை இருந்துச்சாம் காலால் ஒரு உதை விட்டுவிட்டு திரும்ப போய் படுத்துக்கிட்டானாம், திரும்ப வேற ஒரு தேவதைய தட்ட சொல்லி ஒரு அலுமினிய பாத்திரத்தை வைக்க சொன்னுச்சாம் இப்படியே கதை போய்க்கிட்டு இருந்துச்சு கடைசியா லெட்சுமி ஒரு பானை நிறையா தங்க காசை போட்டு அதை அவன் வீட்டுக்கு முன்னாடி வெச்சு கதவை தட்ட சொன்னுச்சாம் இவனும் எழுந்து போய் பார்க்க அலுப்பு பட்டுக்கிட்டு படுத்தே கிடந்தானாம், அப்ப அந்த வழியா வேலைக்கு போய்ட்டு திரும்ப வந்த பக்கத்து வீட்டுக்காரன் அதை பார்த்து எடுத்துக்கிட்டு போய் பெரிய பணக்காரனாக ஆகிட்டான். இதுல இருந்து என்ன தெரியுது என்றார்... என்னை பார்த்து கொடுக்கனும் என்று நினைச்சா சாமி முதல் முறையே கொடுத்துடும் என்று தெரியுது சார் என்றேன்.**&&###@@@%%%^%%^%^*
பத்தாவது படிக்கும் பொழுது ஒருத்தரிடம் டியூசன் போனோம் அப்ப அவரு நடராஜ் என்பவனை கூப்பிட்டு கடைக்கு போ, இதமாதிரி சார் வாங்கி வரசொன்னாருன்னு சொல்லு அவன் ஒரு பொட்டலம் கொடுப்பான் அதை வாங்கிட்டு வா,பிரிச்ச கொன்னேப்புட்டேன் என்று அனுப்புவார். அவனும் ரொம்ப பயந்தபுள்ள ஒழுங்கா வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான், ஒருநாள் அவன் லீவு என்னை கூப்பிட்டு போய்ட்டு வர சொன்னார் போய் கேட்டேன் இதுமாதிரி சார் வாங்கிவர சொன்னாருன்னு,அவனும் என்னத்தையோ ஒரு பேப்பரில் சுற்றி கொடுத்தான், என்னதான் இருக்குன்னு வரும் வழியில் பிரிச்சு பார்த்தேன் அதில் இருந்தது காண்டம் திரும்ப அதே மாதிரி மடிச்சுட்டதா நினைச்சு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன் வாங்கிட்டு உள்ளே போனவர், என்னை பார்த்து டேய் இதை பிரிச்சியா என்றார் இல்ல சார் என்றேன், டேய் ஒழுங்கா உண்மைய சொல்லு என்றார் இல்ல சார் என்றேன், நாலு அடிய போட்டார் சார் அடிக்காதீங்க அப்புறம் சார் ஏன்டா உன்னை உள்ளே கூப்பிட்டு அடிச்சாரு என்றால் உண்மைய சொல்லிடுவேன் என்றேன். அத்தோட அடிக்கிறத நிப்பாட்டிட்டார். மறுநாள் டியூசனுக்கு போனா அடிபோட்டு நிமித்தினார் அடிக்கும் பொழுது சொன்னார், அடிச்சா சொல்லுவேன் என்று சொன்ன அடிக்காம விட்டேன் அப்படியும் எல்லோரிடமும் சொல்லி ஸ்கூல் வாத்தியார் எல்லாம் கேட்கிறானுங்க பையனை விட்டு வாங்கி வரசொன்னீயா, ஒரே ஒருநாள்தானே உன்னை அனுப்பினேன் என்று போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினார்..
காலேஜ் முடிச்சுட்டு தஞ்சாவூரில் ஒரு கம்பெணியில் மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சேன், எங்க எம்.டி, சரவணன் உங்க காலேஜில் ஒரு செமினார் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் யாரையும் தெரியுமா? பர்மிசன் வாங்கி தரமுடியுமா என்றார், என்ன சார் இப்படி கேட்டுப்புட்டிங்க என்னா நேமு எனக்கு ,எப்ப தேதி வேண்டும் என்று சொல்லுங்க வாங்கி தருகிறேன் என்றேன். இல்ல நீங்க புதுசு எப்படி சொல்லி கேட்கனும் என்று தெரியாது நானும் வருகிறேன் வாங்க போகலாம் என்றார். சரிவாங்க என்று அவரையும் அழைச்சுக்கிட்டு எங்க CS டிப்பார்ட்மெண்ட் HOD ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனேன், எப்பயும் அவரை பார்க்க நாலஞ்சு பேரு நின்னுக்கிட்டு இருப்பாங்க, நானும் மார்கெட்டிங் ஆனதால டை கட்டி ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு அவரு ரூமுக்கு போனேன். எங்க எம்.டியையும் அழைச்சுக்கிட்டு, எதோ எழுதிக்கிட்டு இருந்தவரு என்னை எதிரில் டை எல்லாம் கட்டி பார்த்ததும் என்ன டா டை எல்லாம் கட்டிக்கிட்டு இந்த பக்கம் என்றார், இதமாதிரி மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சு இருக்கேன் என்றேன், உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஹி ஹின்னு நின்னார். HODயும் இதை எதிர்பார்க்கல...அப்புறம் ஒருவழியா பேசி டேட் வாங்கி கொடுத்தேன் பேசுறேன்னு வந்தவர் ஒன்னும் பேசல. அதன் பிறகு ரொம்ப நாள் கிண்டலா சொல்லிக்கிட்டே இருந்தார் என்னை உங்க HODக்கு அறிமுகம் செஞ்சு வெச்ச மாதிரி யாரும் இப்படி அறிமுகம் செஞ்சு வெச்சு இருக்கமாட்டாங்க என்று...
இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))

Subscribe to:
Posts (Atom)