Sunday, June 28, 2009

கோலபாரதி, பாரு,கொக்கி,குதிஷா தோன்றும் லூசுப்பையன்

இது ஆனந்தவிகடனில் வரும் லூசுப்பையன் மாதிரி யாரும் தப்பா எடுத்துக்காதீங்க மக்கா...

கோலபாரதி நன்றாக தூக்கத்தில் இருக்கிறார் கோ.க.ச தலைவர் கோசிப் போன் செய்கிறார்...

தூக்கத்தில் இருந்த கோலபாரதி.. என்ன கோசிப்? காலைலங்காட்டியும் போன் செஞ்சு எழுப்பிவிடுறீர்.

கோசிப்: யோவ் தல ரொம்ப சந்தோசமான நியுஸ்யா, இது தெரியாம தூங்கிக்கிட்டு இருக்க!

கோலபாரதி: என்ன கோசிப் திரும்ப நீர் துபாய் போக போகிறீரா?

கோசிப்: அது இல்லய்யா அப்படி நடந்தா அது உனக்கு சந்தோசம், அங்கிருக்கும் பசும்பனுக்கு துக்கமான செய்தி. நான் சொல்லப்போகும் செய்தி அனைவருக்கும் சந்தோசமான செய்தி!

கோலபாரதி: அப்படி என்னய்யா சந்தோசமான விசயம்?

கோசிப்: உன் பிளாக்கை யாரோ பிரஞ்சுகாரான் ஹேக் செஞ்சுட்டான். இனி நீ பதிவு போட முடியாதே...

கோலபாரதி: என்னது பிளாக்கை ஹேக் செஞ்சுட்டாங்கலா?

கோசிப்: ஆமாய்யா ரொம்ப சந்தோசமாக இருக்கேன், ரொம்ப நாள் வேண்டுதல் நிறைவேறிட்டு, உனக்கு கோ.க.ச சார்பாக அலகு குத்த போறோம்.

கோலபாரதி:கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(உலகம் முழுவதும் இருக்கும் பதிவர்கள்SMS செய்தும், போன் செய்தும் கோலபாரதிக்கு வாழ்த்துசொல்லிக்கிட்டு இருக்காங்க)

************
ஷார்ஜாவில் இருந்து குன்ஷி போன் செய்கிறான்...

குன்ஷி: தல உன் பிளாக்கை ஹேக் செஞ்சவன் போன் செஞ்சானா தல?, சொல்லு தல உன் பிளாக்கை திரும்ப கொடுக்க எவ்வளோ கேட்டான்?

கோலபாரதி: அவன் ஒருலட்ச ரூபாய் கேட்கிறான் குன்ஷி:(

குன்ஷி: கவலையவிடு தல அவன் போன் நம்பர் அக்கவுண்ட் நம்பர் கொடு தல! நான் பார்த்துக்கிறேன்

கோலபாரதி: அடேய் அப்பரண்டிஸ் இவ்வளோ நாளா எங்கடா போய் இருந்த ....

குன்ஷி: ரொம்ப உணர்சிவசப் படாத தல, முதலில் மேட்டரை முடிச்சுட்டு பேசுறேன்...

கோலபாரதி:8545774343 (அக்கவுண்ட் நம்பர் சொல்கிறார் )

குன்ஷி: கவலைய விடு தல நாங்க ரெண்டு லட்சமா அனுப்பிடுறோம் மாசா மாசம் அவனுக்கு சம்பளமும் தந்துடுறோம் ஆனா உன் பிளாக்கை திருப்பி தரவேண்டாம் என்று சொல்லிடுறோம். இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்.

கோலபாரதி: ங்கொயால....

**********
சிங்கபூரில் இருந்து மோர்ராஜ் போன் செய்கிறான்...

மோர்ராஜ்: தல நான் சாப்ட்வேரில் பெரிய ஆளு உன் பிளாக்கை ஹேக் செஞ்சவன் ஐடி எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன் அவன் பேசினா அவனிடம் நைசா பேசி அவனோட போட்டோவை மட்டும் கேட்டு வாங்கு தல மீதிய நான் பார்த்துக்கிறேன்.

கோலபாரதி: நீ ஒருத்தவன் தான்யா நல்லவனா இருக்க... அவன் போட்டோ கிடைச்சுதுன்னா அதை வெச்சு இண்ட்ர்நேசனல் போலீஸில் கேஸ் கொடுக்கதானே போற? சைபர் கிரைமில் அவனுக்கு பெரிய தண்டனையா வாங்கி தரனும்...

மோர்ராஜ்: அட நீங்க வேற தல இதுவரைக்கும் ஒரு 5 லட்ச ரூபாய் கலெக்சன் ஆகியிருக்கு அவனுக்கு தங்க சிலை வைக்கனுமாம், சிலை செய்ய போட்டோ வேணுமே அதான்...

கோலபாரதி: அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீயுமாஆஆஆஆ

(ரொம்ப சோகமான கோலபாரதி அண்ணன் குகுந்துவை பார்த்து விபரத்தை சொல்கிறார் ஒன்னும் பிரச்சினை இல்லை உன் பிளாக் தானா கிடைக்க வழி இருக்கு என்று காதில் ஒரு ரகசியத்தை சொல்கிறார்)

கோலபாரதி அதன்படி ஒரு அறிக்கை விடுகிறார் ஒரு பிளாக்தானே ஹேக் செய்யப்பட்டுவிட்டது அதனால் என்ன! நாளை முதல் கோலபாரதி. காம், கோலபாரதி.நெட், கோலபாரதி.ஓஆர்ஜி, கோலபாரதி.இன், கோலபாரதி.gov என்று பல வெப்சைட் உருவாக்கி ஒன்னு ஒன்னுலேயும் என் போட்டோவோடு விடுபட்டவை, அடிபட்டவை, உதைபட்டவை என்று எழுதப்போறேன் முக்கியமா ஒரு சைட்டில் கவிதை மட்டும் எழுதப்போறேன் என்று அறிக்கை கொடுக்கிறார்.

அடுத்த 30 நிமிடத்தில் ஒரு பிரஞ்சு காரன் ஓடி வருகிறான் ... அவன் என்னமோ பேச அதை மொழிபெயர்க கோண்டு வருகிறார். தல தெரியா தனமா உங்க பிளாக்கை ஹேக் செஞ்சுட்டானாம் இனி இப்படி தப்பு நடக்காதாம் அதனால நீங்க பல வெப்சைட்டில் எழுதும் முடிவை மாத்திக்கனும் என்று கேட்கிறான், இல்லேன்னா கோ.க.ச ஆட்கள் இவனை கொன்றுவிடுவாங்களாம்.

கோலபாரதி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு பாசக்கார பயபுள்ளைங்க இருக்காங்களா?

*****************
பாரு சோகமே உருவாக டாஸ்மாக்கில் உட்காந்து சரக்கடிச்சுக்கிட்டு இருக்கார் அங்கு வரும் அவரது தீவிர ரசிகர்கள் கொக்கியும், குதிஷாவும் என்ன தலைவரே ஏன் சோகமாக உட்காந்து தண்ணி அடிக்கிறீங்க, நீங்க படம் பாக்காம விமர்சனம் எழுதிவிட்டதாக குய்யனார் எழுதினதை நினைச்சு சோகமாக இருக்கீங்களா? சொல்லுங்க தலைவரே குய்யனாரை வூடு கட்டிவிடுவோம், கோசிப் உங்களை திட்டி எழுதினார் அவரை வீரப்பனா மாத்தியாச்சு சொல்லுங்க அதுபோல வேற யாரையும் மாத்தனுமா? உங்களை யார் என்ன சொன்னாங்க சொல்லுங்க அந்தர் செஞ்சுடுவோம் என்கிறார்கள்...அதுக்கு பாரு சொல்கிறார் "இல்லப்பா இந்த தயமோகனுக்கு மட்டும் சினிமா சான்ஸ் கிடைக்குது, அமெரிக்கா போக சான்ஸ் கிடைக்குது நம்ம ஒரு பயபுள்ளயும் மதிச்சு கூப்பிடமாட்டேங்கிறானுங்களே".கொக்கி: சினிமாவில் சான்ஸ் கிடைக்குனும் என்றால் நீங்க யாரோடயாவது நட்பு வெச்சுருந்திருக்கனும், தமிழ் பட ஆட்கள் அனைவரையும் திட்டுறீங்க குவாஜிக்கு நடிக்க தெரியலைன்னு சொல்றீங்க, பமல்ஹாசனுக்கும் நடிக்க தெரியலைன்னு சொல்றீங்க, கோலாவுக்கு படமே எடுக்க தெரியலைன்னு திட்டுறீங்க, கோலா எடுத்த ”சோதாமகன்” திரைப்படத்தை குப்பைன்னு திட்டுன்னா, கோலா அடுத்தபடத்துக்கு தயமோகனுக்கு சான்ஸ் கொடுக்காம உங்களுக்கு எப்படி கொடுப்பார்.பாரு: இல்ல கொக்கி கோலாவோட கடைசி படம்மான ”நான் லூசு”வுக்கு நல்லபடியாதானே விமர்சனம் எழுதினேன்.குதிஷா: இல்ல தலைவரே ”நான் லூசுவை” படிச்ச பலபேரு அது உங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சுக்கிட்டாங்க.பாரு: சரி கொக்கி இப்ப என்ன செய்யலாம் சொல்லு...கொக்கி: ”பாரு வேட்டி பறக்குதடான்னு” நான் உங்களை பத்தி எழுதுறேன்பாரு: இல்ல கொக்கி இன்னும் பெருசா ஏதாச்சும் செய்யனும் இந்த தயமோகனையும் திட்டனும் அதே சமயம் அமெரிக்காவுக்கும் போகனும். தயமோகனை திட்டனும் என்றால் சும்மா திட்டமுடியாது...ஏதாவது ஒரு காரணம் வேண்டும், அதுக்கு ஒரே வழி லெட்டர் எழுதுவதுதான் இரு லெட்டர் எழுரேன் இந்த மப்புல எழுதினாதான் நல்லா திட்டமுடியும்...குதிஷா: யாருக்கு எழுத போறீங்க தலைவரே?எனக்கு நானே எழுதிக்கபோறேன் என்று சொல்லிட்டு பாரு ஒரு சுண்டல் பேப்பரில் எழுத ஆரம்பிக்கிறார்...
அன்புள்ள பாரு
”நான் தொன்னையில் கடந்த பத்தாண்டுகளாக வேலை வெட்டி இல்லாமல் அலைந்துகொண்டிருப்பவன்.(உங்களுக்கு கடிதம் எழுதும்பொழுதே தெரிந்திருக்கும் இருந்தாலும் ஒருமுறை சொல்லிவிடலாமே என்றுதான் சொல்கிறேன்.) உங்களை ஒருமுறை சந்தித்து பேசியதில் இருந்து அதன் பிறகு நேரில் சந்திக்க வாய்பு கிடைத்தும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி இருக்கிறேன். இந்த தயமோகன் நான் லூசுவில் வசனம் எழுதவே இல்லை அப்பொழுது அவர் பேனா நிப்பு உடைஞ்சு போச்சு அதனால் அவர் சொல்ல சொல்ல வேறு ஒருவர் எழுதினார், இதை நான் என் கண்ணால் பார்த்தேன். ஆனால் ”நான் லூசு”வில்அவர் வசனம் எழுதியதாக வந்தது. இது ஒரு மோசடி இதற்கு காக்கா புராணம் படி என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
இப்படிக்கு
பத்திரிநாத்தயமோகனை திட்டு திட்டுன்னு திட்டி பதில் கடிதமும் எழுதிவிடுகிறார். கடைசியாக தயமோகனுக்கு தண்டனையாக காக்கா தயமோகன் மேல கக்கூஸ் போகட்டும் என்று தண்டனையும் கொடுக்கிறார்.***********பதிவர்கள் எல்லாம் கூடி நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க என்ன ஆச்சு வைத்தியகாரனுக்கு என்று, (வைத்தியகாரன் பாருவை திட்டி எழுதின பதிவு எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சாம் அதான் எல்லோரும் வைத்தியகாரனுக்கு எதோ பிரச்சினைன்னு பேசிக்கிட்டு இருக்காங்க.)
அங்கு வரும் குய்யனார் வைத்தியகாரனிடம் பிரச்சினை இதுதான் பாருவுக்கும் பிஸ்கோத்து வேண்டும் தயமோகனுக்கும் பிஸ்கோத்து வேண்டும் இது பிஸ்கோத்துக்காக அவர்கள் போட்டுக்கும் சண்டை என்று விளக்கம் கொடுக்கிறார்.
அங்கு வரும் குரேஸ் கண்ணன் கொக்கியிடம் இப்படி தயமோகனை திட்டி எழுதிய பாருவை இந்த முறையாவது நீங்க ஆதரிக்காமல் இருக்கனும் என்கிறார்...
அங்கு வந்த அய்யோராம் சுந்தர் இது தப்பு வைத்தியகாரன் நீங்க பாருவை பார்த்து இப்படி சொல்லி இருக்ககூடாது என்கிறார் அவரு ஒன்னாம் வாய்ப்பாடு எல்லாம் படிக்கவில்லை என்று எப்படி நீங்க சொல்லலாம்? என்று கேட்கிறார்..எல்லோரும் என்ன என்னவோ சொல்லிக்கிட்டு இருக்க அங்கு வரும் இளர்மதி பிரச்சினைய சரியா புரிஞ்சுக்கிட்டவன் குய்யனார் மட்டும் தான் இது பிஸ்கோத்துக்கான சண்டை இதில் நாம் தலையிடதேவை இல்லை என்கிறார்.இதை தெரிஞ்சுக்கிட்ட ஏர்சிம் இரு பை முழுவதும் பிஸ்கோத்து வாங்கி வருகிறார் ஒரு பைய பாருவுக்கும் ஒரு பைய தயமோகனுக்கும் கொடுக்க சொல்லி பிரச்சினையை சுபம் ஆக்கிவிடுகிறார்.
டிஸ்கி: இந்த பதிவு புரியாதவர்கள் அண்ணன் பாலபாரதியின் இந்த பதிவையும், செகண்ட் பார்ட்டுக்கு அண்ணன் பைத்தியகாரன் அவர்களின் இந்த பதிவையும் படிக்கவும்.

58 comments:

said...

குசும்பன் பேக் :)

said...

கலக்கல்!

said...

// மின்னுது மின்னல் said...

குசும்பன் பேக் :)//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

கலக்கல்! :))

said...

ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே..

said...

முடியல.. தல

said...

:-)))...

said...

எத்தன நாளாச்சு மக்கா... இப்படி சிரிச்சு... வீட்டம்மாவ திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்க... :-) :-) :-)

தோழமையுடன்
தவறுதலாக ஒரே பதிவை புரியும் படி பதிவு எழுதிவிட்ட
வைத்தியக்காரன்

said...

ஹா ஹா ஹா..முடியலையடா! :)

said...

டெர்ரரா ரிட்டர்ன் ஆயிருக்கீங்க !!! என்னாச்சு?

said...

கலக்கல்!
வெல்கம் பேக்!

said...

நமக்கு தெளிவா சொன்னாலே புரிய 3 நாளு ஆகும், இவரு வேற பிஸ்கோத்து பேர சொல்லி என்னவோ சொல்லுராரு.

நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனு மட்டும் புரியுது.

எழுத்தாளர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சண்டை இடுகிறார்கள், பதிவர்கள் ஏன் அவர்கள் பின்னால்2அணியாக அணிவகுத்து அடித்துக்கொள்ள வேண்டும்?

said...

//இதை தெரிஞ்சுக்கிட்ட ஏர்சிம் இரு பை முழுவதும் பிஸ்கோத்து வாங்கி வருகிறார் ஒரு பைய பாருவுக்கும் ஒரு பைய தயமோகனுக்கும் கொடுக்க சொல்லி பிரச்சினையை சுபம் ஆக்கிவிடுகிறார்.//

பதிவு முடியப்போகுது நம்ம பேரு தப்பிச்சுச்சுன்னு நினைச்சா... கடைசி வரில..ஹும்ம்ம்.. கலாய் கலாய் கலக்கலாய்..கலக்கல் தல.

said...

உன் ப்ளாக்க முதல்ல என் ஆபிஸ்ல படிக்க முடியாதபடி தடை பண்ணணும்லே.
தனியா உக்காந்து சிரிக்கிறத ஒருத்தன் பார்த்துட்டுப் போயிட்டான்.

said...

:-)))

said...

அப்படியே கார்ட்டூனும் போட்டிருந்தால் அசத்தலா இருந்திருக்கும்.

said...

அப்படியே கார்ட்டூனும் போட்டிருந்தால் அசத்தலா இருந்திருக்கும்.

said...

என் கடன் குசும்பு செய்து கொண்டு கிடப்பதே...அப்படீன்றீங்க. ம்.. ஜமாய்ங்க...:-))

said...

பட்டாசா இருக்கு பதிவு.

சிங்கம் களத்தில இறங்கீடுச்சே

said...

ஹியர் குசும்பன் பேக் !!!


பட் ஆல் பிலாக்கர் பேக் டோட்டல் டேமெஜ் !!!:)


வித் லவ்
நமிதா..!

said...

ha ha ha super...

Anonymous said...

குசும்பன்னா சும்மாவா?

said...

துபாய் திரும்பியாச்சா

கலக்கல்

குகுந்துவை இவர் தான் தெரியல

said...

//குதிஷா: இல்ல தலைவரே ”நான் லூசுவை” படிச்ச பலபேரு அது உங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சுக்கிட்டாங்க. //

:)

said...

ஏன் இந்த பீர்க்கி,
வெத்தலைக்காரன் போன்றவர்களை விட்டுட்டீங்களே...

said...

குசும்பா

ட்ரிபிள் ஷாட் கேள்விப்பட்டிருக்கேன்.

இன்னைகுத் தாம்பா வெடிச்சதப் பார்த்தேன்

said...

எல்லோரையும் தாளிச்சு எடுக்கறீங்க...வெல்கம் பேக்.

said...

//ஏன் இந்த பீர்க்கி,
வெத்தலைக்காரன் போன்றவர்களை விட்டுட்டீங்களே.//

ஏன்யா ஏன்? ஏனிந்த சட்டக்கல்லூரித்தனம்?

said...

//குசும்பா

ட்ரிபிள் ஷாட் கேள்விப்பட்டிருக்கேன்.

இன்னைகுத் தாம்பா வெடிச்சதப் பார்த்தேன்
//


Repeattttttttttttttttttttttteaaaaaaaaiiiiiiiiii..........

Anonymous said...

தலைக்காக தனிப்பதிவு போடாமல பாருவோடு சேர்த்து போட்டதை க்ண்டிக்கிறேன் பாகச சார்பாக :-)

தலைக்கு தங்கச்சிலை ஐடியா சூப்பரப்பு

said...

அடிச்சா சிக்ஸர் மட்டும்தான்.. அது குசும்பன் மட்டும்தான். வெல்கம் பேக்கு வசும்பன்.! இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..

said...

:))))))))))))))))

said...

அடேங்கப்பா.....:-)))

Anonymous said...

சான்ஸே இல்லை, இந்த மாதிரி சிரிக்க வைக்க வசும்பனால மட்டும் தான் முடியும். அதுலயும் நான் லூசு சூப்பர். :)

said...

தலைக்கு தங்கச்சிலை ஐடியா சூப்பரப்பு
///


தலை’க்கு னா இருக்கு ?


புதசெவி :)

said...

பாலபாரதியின் "நன்றி" பதிவு, சாருவின் பதிவு, பைத்தியகாரன் பதிவு, ஜ்யோவ்ராம் சுந்தர் பதிவு, சீமாச்சு அண்ணா பதிவு எல்லாத்தையும் பின்னூட்டங்களோடு சேர்த்து படித்த எல்லோரும் சங்கம் அமைத்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்.

நான் சிரித்து கொஞ்ச நாள் ஆச்சு. என் உடம்புக்கே கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருக்கு.

பொதுவா நான் யாரையும் அத்தனை சீக்கிரம் பாராட்டிட மாட்டேன். அதுவும் போன் செஞ்ஜ்சு எல்லாம் பாராட்டினதே இல்லை.

குசும்பா இனி 10 நாள் விடுப்பு எல்லாம் தமிழ்மணத்திலே எடுக்காதே. 10 நாள் கழிச்சு வந்து அசத்திட்டே.

இந்த பதிவு உன் கிரீடத்தில் இன்னும் ஒரு வைரக்கல்!!நல்லா இரு. பைத்தியகாரன் சொன்னது போல திருஷ்டி சுத்தி போட்டுக்கோ!

said...

கலக்கல்! :))

said...

குசும்பன் செய்த குசும்பு என்று சோடை போயிருக்கிறது!

said...

கலக்கல்,
எப்படிய்யா இப்படி அதகளம் பண்ற...

said...

அடேய்.. அடங்கவே மாட்டியா நீயு..?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

என்னமோ நடக்குது

இருந்தாலும் கலக்கலா இருந்தது படிக்க‌

said...

கலக்கல்..

ரெண்டு வாரம் கண்ணை மூடி இதத்தான் யோசிச்சீங்களோ?

அன்புடன்,

கறிவிலி...

said...

குசும்பு

வெங்கல கடையில யானை புகுந்தது போல எல்லாரையும் அந்தர் பண்ணீட்டிங்க

said...

ஆஹா ......ஆ .... என்னமாய் பூந்து விளையாடறீங்களே , நீ பசும்பன் இல்லையப்பா ...பசு தோல் போர்த்திய புலி. ... நீ குசும்பனபபா , குசும்பன்

said...

அண்ணே நல்லாயிருக்கிங்களா? ;)

said...

மின்னல் நன்றி

சிபி நன்றி

ஆயிலு நன்றி

குறை ஒன்றும் இல்லை நன்றி

நன்றி குதிஷா

நன்றி விஜய்

நன்றி வைத்தியக்காரன் ரொம்ப சந்தோசம்!

நன்றி குன்ஷி

நன்றி மகேஷ் சும்மா:)

நன்றி சிவா

நன்றி ஜானி புரியலையா? அவ்வ்வ்வ்

நன்றி தல ஏர்சிம்

நன்றி மோர்ராஜ்

நன்றி சரவணகுமரன்

நன்றி வெயிலான் கார்ட்டூன் போட தெரியாதே தல:(

நன்றி சுரேஷ் கண்ணன், அப்படி இருப்பதுதான் பிடிச்சு இருக்கு!

நன்றி முரளி

நன்றி நமிதா

நன்றி அர்விந்

நன்றி வடகரைவேலன் அண்ணாச்சி

நன்றி j நான் இங்கனயேதான் இருக்கேன் ஊருக்கு எங்கும் போகல:)

நன்றி தருமி ஐய்யா

கும்க்கி அடுத்த பார்ட்டில் அவர்கள் எல்லாம்( கரிசல்காரன், நிழலான், பம்க்கி,பேதிமூலகிருஷ்ணன்,குப்துல்லா) இவுங்க எல்லாம் நெக்ஸ்ட் பார்ட்டில:)))


நன்றி கார்க்கி

நன்றி பரிசல்

பா.க.ச தலைவரே பதிவை படிக்காம பின்னூட்டம் போடலாமா?:))

நன்றி ஆதி (இருக்குடி உமக்கு, எல்லா கோவத்தையும் காட்டுறேன்டி நற நற:)))

நன்றி பதி

நன்றி டொன்லீ

நன்றி சின்னஅம்மிணி

நன்றி அபி அப்பா ரொம்ப சந்தோசம்

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி வால்

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி பாலபாரதி

நன்றி அபுஅப்சர்

நன்றி அறிவிலி அப்படி எல்லாம் இல்லை:)

நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி சுந்தர் சார்

said...

வெல்கம் பேக் தலைவா!!

நான் என்னைக்கு சைன் இன் ஆகலையோ..
அன்னைக்குதான் நீ பதிவ போடுவ!

பதிவு போடும்போது, போன் பண்ணி சொல்லிட்டு
போடுங்க.. அப்பதான் முன்னாடியே ஓடிவந்து,

கலக்கிட்டடீங்க!,

சிரிக்கமுடியல!,

சான்ஸே இல்லை!,

வயிரு புண்ணாபோச்சின்னு

எதாவது பின்னூட்டம் போட்டு
"எஸ்" ஆகிடலாம்.
இப்ப பாருங்க வார்த்தையை பிராய வேண்டியதா இருக்கு!!

said...

தம்பி டேய்.....இரவு ஒரு மணிக்கு படிச்சுட்டு...என்னோட சிரிப்பு சத்தம் கேட்டுவிட்ட எங்க வீட்டுக்கார அம்மா வையிராங்க.
:))))))))

said...

அலுவலகத்தில் படிக்காமல் நல்ல விடயம் செய்தேன்;சிரிப்பை அடக்கவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் திண்டாடியிருப்பேன்.

செம கலக்கல்...

said...

//ஏன் இந்த பீர்க்கி,//

பெயர் படு பொருத்தம்!

said...

50 எப்பூடி!

said...

கலாய்ப்பு டாப்பு !!!நல்ல கிசும்பு!!

said...

:)))

said...

:) :) :)

said...

கலை நெக்கல்??? இருக்கட்டு இருக்கட்டும்:)))


கோவி அண்ணாச்சி அடிவிழுந்துச்சா இல்லீயா?:)

நன்றி மணிநரேன்!

நன்றி வால்

நன்றி thevanmayam

நன்றி ஜெகதீசன்

நன்றி நாதஸ்

அப்புறம் ஓட்டு போட்டு முதன் முறையாக தமிழ்மண மகுடத்தில் ஏற செய்த நண்பர்களுக்கு அதுக்கு காரணமான சென்ஷிக்கும் நன்றிங்கோ!!!

said...

மைதானத்தில் நுழைஞ்சவுடனேயே கோல் போடும் ஒரே வீரர் நீர்தான்!

வாழ்க வாழ்க!

டுசும்பன் வாழ்க!

said...

மீண்டும் மகுடத்தில் தன்னிகரில்லாத தலைவனாய் குசும்பன் :)))))


-சென்ஷி

said...

:)))

said...

கலக்கல் முதலாலி