Tuesday, June 30, 2009

வயல்வெளியில் நொந்தழல் கவி தோன்றும் லைவ் சாட்! (காமெடி ஷோ)

டிஸ்கி: இந்த பதிவை ரசிக்கனும் என்றால் உங்களுக்கு தமிழ்வெளியும் சிங்கை பதிவர்களும் இணைந்து நடத்தும் போட்டி பற்றி தெரிஞ்சிருப்பது அவசியம் (இங்கே கிளிக்கவும்), அதுபோல் சில நாட்களுக்கு முன் ரவியின் சாட்டிங் பற்றியும் தெரிஞ்சு இருக்கனும்.

இனி.............

குழிழ்மணம் ஒரு ஆண்டாக போட்டி அறிவிப்பு செஞ்சு ,அதை இரண்டு வருடமாக நடத்தி, பரிசை மூனுவருடம் கழிச்சு கொடுத்ததில் இருந்து ஒவ்வொரு திரட்டியும் பரிசு, போட்டின்னு அறிவிக்கிறாங்க. திரட்டி ஓனர்ஸ் எப்படிடா நம்ம திரட்டியை பேமஸ் ஆக்குவதுன்னு பாயபோட்டு பிரான்டிக்கிட்டு இருக்காங்க அதுபற்றி ஒரு கற்பனை...

வயல்வெளி ஓனர் மழலி தன் நண்பர் நொந்தழல் கவி கூட பேசுகிறார்

மழலி: நொந்தழல் கவி என்னய்யா இது புதுசு புதுசா திரட்டி ஆரம்பிக்கிரானுங்க விரட்டி.காம், கொல்லை தமிழ்.காம், குழிழர்ஸ்.காம் என்று ஆரம்பிச்சு நீங்கதான் இந்த வார வெள்ளைகாரன், ஆஸ்திரேலியா காரன், இந்த வார தொப்பி உங்களுக்குதான், இந்த வார குரீடம் உங்க தலையில்தான் அப்படி இப்படின்னு தலைப்பு வெச்சு என்ன என்னமோ செய்கிறானுங்க நாம ஏதும் செய்யனும் என்ன செய்யலாம் சொல்லு.

நொந்தழல்: ஆமாம் மழலி இப்ப எல்லாம் எழுதும் அனைவருக்கும் ஒரு பத்து பின்னூட்டமாவது கன்பார்ம் இப்ப எல்லாம் நானே எனக்கு பின்னூட்டம் போட்டுப்பது இல்லைன்னா பார்த்துக்குங்களேன் , ஒவ்வொரு திரட்டி ஆட்களும் எங்க கருவி பட்டைய நிருவினா உங்க போட்டோ எல்லார் பிளாக்கிளும் தெரியும், எங்க கூட இனைஞ்சா சோப்பு டப்பி இனாம் என்று எல்லாம் பின்னூட்டம் போட்டு விடுறாங்க, நாம என்ன செய்வது? கிளு கிளுப்பா ஏதும் செய்யனுமே! கொரிய பொண்ணுங்க பற்றி நான் வேணும்னா எழுதவா?

மழலி: ஆணிய புடுங்கவேண்டாம், நீதான் டெக்னிக்கலானா ஆளாச்சே அதுபற்றி ஒரு வயல்வெளியில் லைவ் சாட்டிங் வெச்சுட்டா என்ன?

நொந்தழல் கவி: சூப்பர் ஐடியா! அப்படியே செய்யுங்க.

வயள்வெளியில் ஒரு விளம்பரம் ”இலவசமாக கிடைக்கும் சுண்டல்களை வாங்குவது எப்படி? ” ” கூட்டம் அதிகமாக இருந்தாலும் தீர்ந்து போவதுக்கு முன்னாடி வாங்குவது எப்படி”எங்கு எங்கு இலவச சுண்டல் கிடைக்கு என்ற விவரங்கள் தெரியனுமா, நொந்தழல் கவி கூட ஞாயிறு காலை 11 மணிக்கு சாட்டுக்கு வாங்க” என்று விளம்பரம்.

காலை ரொம்ப உற்சாகமாக குளிச்சுட்டு மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்ட நொந்தழல் கவி சிஸ்டம் முன் உட்காந்து ஆன் லைன் சாட்டிங் விண்டோவையே பார்த்துக்கிட்டு இருக்கார் சரியாக 11.15 மணி ஆச்சு யாரையுமே கானும் ஒரே ஒரு ஆள் வருகிறார் எங்கு சுண்டல் வாங்கலாம்? எங்கு என்ன கிடைக்கும் என்று கேட்கிறார் பதில் சொல்லிக்கிட்டே கவி மழலிக்கு போன் செய்கிறார், என்னை 11மணிக்கு வர சொல்லிட்டு எங்கய்யா போய்ட்டீர் பாருங்க ஒரு ஒரு ஆள்தான் சாட்டிங்குக்கு வந்திருக்கான் சீக்கிரம் இங்க வாங்க ஏதாச்சும் செய்யனும்...

மழலி: யோவ் உன் கூட சாட்டிக்கிட்டு இருப்பதே நான் தான், இத விட்டுவிட்டு நான் எங்க வருவது?

நொந்தழல் கவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திடிர் என்று மூன்று நான்கு பேர் சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள், அப்பாடா புரோகிராம் சக்ஸஸ் ஆகிவிட்டது என்று கவி ரூமுக்கு சந்தோசத்தில் மழலி ஓடிவருகிறார்,சிஸ்டத்தை பார்த்து டரியள் ஆகிறார்...

(நொந்தழல் கவியே பல பெயர்களில் சாட்டிங் அவருடனே செஞ்சுக்கிட்டு இருக்கார்)

புது ஆள் ஒருத்தர் சாட்டிங்கில் வருகிறார்... ஆஹா லாகின் ஆயிட்டான் என்னமோ கேட்க போகிறான் என்று இருவரும் விண்டோவையே பார்க்கிறார்கள்.

sweet 16: வானா செக்ஸ் சாட்!

நொந்தழல்: ASL plz?

மழலி: யோவ் இது லைவ் சாட்டிங் யாராவது பார்த்துட போறாங்க

நொந்தழல்: ம்கும் அப்படியே பார்த்துட்டாலும் இதுவேலைக்கு ஆவாது வேறு ஏதாவது செய்யனும் என்று யோசிக்கிறார்கள்.

அப்பொழுது பாவி.கண்ணன் கங்கை மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து பேசுறாங்க..விளையாடல் அமைப்பு சிறுகதை போட்டி அறிவிச்சு அது பெரும் வெற்றி பெற்றுடுச்சு அதுபோல நாமும் ஒரு போட்டி வைக்கிறோம் கலக்குறோம் என்று. அப்ப மழலி பாவி.கண்ணனுக்கு போன் போட்டு அண்ணே நீங்களும் போட்டி நடத்தப்போவதாக சொன்னாங்க நாங்களும் வயல்வெளி சார்பாக போட்டி வைக்கப்போறோம் இதுவரை யாரும் செய்யாததா வித்தியாசமாக செய்யனும் பரிசும் அதுபோல் பெருசா இருக்கனும் என்கிறார்.

பாவி.கண்ணன் தன் சகாக்களுடன் பேசும் பொழுது அங்கிருக்கும் நரி என் தலைவர் குஜினியுடம் ஒரு நாள் டின்னர் சாப்பிடலாம் என்று போட்டி வெச்சா என்ன என்று கேட்கிறார்? அவரை அமுக்கி போட்ட பின் அனைவரும் வயள்வெளியுடன் கூட்டணிக்கு சரி என்று சொன்ன பிறகு ஊத்துகேணி2009 என்ற தலைப்பில் குருத்தாய்வு போட்டி பரிசு கூடுவாஞ்சேரி டூ வண்டுவாஞ்சேரி தலைப்புகள் பின்னர் வரும் என்று சொல்லிவிட்டு , தலைப்புக்கா ஆர்வமாக காத்திருந்த மக்கள் அவர்கள் அறிவித்த தலைப்புகளை பார்த்து தலைதெறிக்க ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறார்கள்

**************
தமிழகத்தில் பீர்க்கி,கரிசல்காரன்,பேதிமூலகிருஷ்ணன்,துன்பூ,குப்துல்லா எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு மீட்டிங் ரகசிய இடத்தில் கூட்டம் போடுகிறார்கள்

பீர்க்கி: எங்கபோனாலும் போட்டி , தொடர்பதிவுன்னு துரத்துறாங்கப்பா. ஏதாவது செஞ்சு மக்களை மிரட்டனும்..

பேதிமூலகிருஷ்ணன்: ஆமாய்யா இந்த பசும்பன் கூட புக்கு வாங்கு அதுவாங்கு இதுவாங்குன்னு தொல்லை கொடுக்கிறான் ஏதாவது செய்யனும் எல்லோரும் அரண்டு போகனும்...
துன்பூ: அதுக்கு ஒரே வழி என்று ஒரு ஐடியாவை சொல்கிறார்...

அதன்படி குப்துல்லா வீட்டில் கூடும் பதிவர்கள் குனஜன்யாவிடம் இருந்து கவிதை எழுதி வாங்கி அதை குப்துல்லாவை விட்டு பாடசொல்கிறார்கள் கரிசல்காரன் கீபோர்ட். (ஒரு கொடுமை பத்தாதுன்னு மூனு கொடுமை தாங்குமா இந்த உலகம்)

கரிசல்காரல்: லாலாலாலா லலாலா லா(வாசிக்க ஆரம்பிக்கிறார்)

பீர்க்கி: சகா இங்கயுமா லாலா லாலா வேறு ஏதும் வாசி சகா என்று சொல்லிவிட்டு காதில் பஞ்சை வெச்சுக்கிறார்...

குப்துல்லா பாடி முடிஞ்சதும் வீட்டு காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு குப்துல்லா போய் கதவை திறக்கிறார் அங்க ஒரு பத்து பேர் நிற்கிறார்கள் அதில் இருந்து ஒரு ஆள் முன்னாடி வந்து பாட்டு பாடியது யாருன்னு கேட்கிறார்

பேதிமூலகிருஷ்ணன் குப்துல்லான்னு போட்டு கொடுக்க... ஸ்வீட் எடுத்து கொடுக்கிறார் அவரிடம்... ரொம்ப நாளா இழுதுக்கிட்டு இருந்த பாட்டி உங்க பாட்டை கேட்டு கபால மோட்சம் அடைஞ்சுட்டு ரொம்ப நன்றிங்கோ என்று சொல்லிவிட்டு அவருக்கு மாலை எல்லாம் போட்டு மரியாதைசெய்துவிட்டு போகிறார்கள்...
இன்னும் வரும்..........:)

Sunday, June 28, 2009

கோலபாரதி, பாரு,கொக்கி,குதிஷா தோன்றும் லூசுப்பையன்

இது ஆனந்தவிகடனில் வரும் லூசுப்பையன் மாதிரி யாரும் தப்பா எடுத்துக்காதீங்க மக்கா...

கோலபாரதி நன்றாக தூக்கத்தில் இருக்கிறார் கோ.க.ச தலைவர் கோசிப் போன் செய்கிறார்...

தூக்கத்தில் இருந்த கோலபாரதி.. என்ன கோசிப்? காலைலங்காட்டியும் போன் செஞ்சு எழுப்பிவிடுறீர்.

கோசிப்: யோவ் தல ரொம்ப சந்தோசமான நியுஸ்யா, இது தெரியாம தூங்கிக்கிட்டு இருக்க!

கோலபாரதி: என்ன கோசிப் திரும்ப நீர் துபாய் போக போகிறீரா?

கோசிப்: அது இல்லய்யா அப்படி நடந்தா அது உனக்கு சந்தோசம், அங்கிருக்கும் பசும்பனுக்கு துக்கமான செய்தி. நான் சொல்லப்போகும் செய்தி அனைவருக்கும் சந்தோசமான செய்தி!

கோலபாரதி: அப்படி என்னய்யா சந்தோசமான விசயம்?

கோசிப்: உன் பிளாக்கை யாரோ பிரஞ்சுகாரான் ஹேக் செஞ்சுட்டான். இனி நீ பதிவு போட முடியாதே...

கோலபாரதி: என்னது பிளாக்கை ஹேக் செஞ்சுட்டாங்கலா?

கோசிப்: ஆமாய்யா ரொம்ப சந்தோசமாக இருக்கேன், ரொம்ப நாள் வேண்டுதல் நிறைவேறிட்டு, உனக்கு கோ.க.ச சார்பாக அலகு குத்த போறோம்.

கோலபாரதி:கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(உலகம் முழுவதும் இருக்கும் பதிவர்கள்SMS செய்தும், போன் செய்தும் கோலபாரதிக்கு வாழ்த்துசொல்லிக்கிட்டு இருக்காங்க)

************
ஷார்ஜாவில் இருந்து குன்ஷி போன் செய்கிறான்...

குன்ஷி: தல உன் பிளாக்கை ஹேக் செஞ்சவன் போன் செஞ்சானா தல?, சொல்லு தல உன் பிளாக்கை திரும்ப கொடுக்க எவ்வளோ கேட்டான்?

கோலபாரதி: அவன் ஒருலட்ச ரூபாய் கேட்கிறான் குன்ஷி:(

குன்ஷி: கவலையவிடு தல அவன் போன் நம்பர் அக்கவுண்ட் நம்பர் கொடு தல! நான் பார்த்துக்கிறேன்

கோலபாரதி: அடேய் அப்பரண்டிஸ் இவ்வளோ நாளா எங்கடா போய் இருந்த ....

குன்ஷி: ரொம்ப உணர்சிவசப் படாத தல, முதலில் மேட்டரை முடிச்சுட்டு பேசுறேன்...

கோலபாரதி:8545774343 (அக்கவுண்ட் நம்பர் சொல்கிறார் )

குன்ஷி: கவலைய விடு தல நாங்க ரெண்டு லட்சமா அனுப்பிடுறோம் மாசா மாசம் அவனுக்கு சம்பளமும் தந்துடுறோம் ஆனா உன் பிளாக்கை திருப்பி தரவேண்டாம் என்று சொல்லிடுறோம். இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்.

கோலபாரதி: ங்கொயால....

**********
சிங்கபூரில் இருந்து மோர்ராஜ் போன் செய்கிறான்...

மோர்ராஜ்: தல நான் சாப்ட்வேரில் பெரிய ஆளு உன் பிளாக்கை ஹேக் செஞ்சவன் ஐடி எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன் அவன் பேசினா அவனிடம் நைசா பேசி அவனோட போட்டோவை மட்டும் கேட்டு வாங்கு தல மீதிய நான் பார்த்துக்கிறேன்.

கோலபாரதி: நீ ஒருத்தவன் தான்யா நல்லவனா இருக்க... அவன் போட்டோ கிடைச்சுதுன்னா அதை வெச்சு இண்ட்ர்நேசனல் போலீஸில் கேஸ் கொடுக்கதானே போற? சைபர் கிரைமில் அவனுக்கு பெரிய தண்டனையா வாங்கி தரனும்...

மோர்ராஜ்: அட நீங்க வேற தல இதுவரைக்கும் ஒரு 5 லட்ச ரூபாய் கலெக்சன் ஆகியிருக்கு அவனுக்கு தங்க சிலை வைக்கனுமாம், சிலை செய்ய போட்டோ வேணுமே அதான்...

கோலபாரதி: அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீயுமாஆஆஆஆ

(ரொம்ப சோகமான கோலபாரதி அண்ணன் குகுந்துவை பார்த்து விபரத்தை சொல்கிறார் ஒன்னும் பிரச்சினை இல்லை உன் பிளாக் தானா கிடைக்க வழி இருக்கு என்று காதில் ஒரு ரகசியத்தை சொல்கிறார்)

கோலபாரதி அதன்படி ஒரு அறிக்கை விடுகிறார் ஒரு பிளாக்தானே ஹேக் செய்யப்பட்டுவிட்டது அதனால் என்ன! நாளை முதல் கோலபாரதி. காம், கோலபாரதி.நெட், கோலபாரதி.ஓஆர்ஜி, கோலபாரதி.இன், கோலபாரதி.gov என்று பல வெப்சைட் உருவாக்கி ஒன்னு ஒன்னுலேயும் என் போட்டோவோடு விடுபட்டவை, அடிபட்டவை, உதைபட்டவை என்று எழுதப்போறேன் முக்கியமா ஒரு சைட்டில் கவிதை மட்டும் எழுதப்போறேன் என்று அறிக்கை கொடுக்கிறார்.

அடுத்த 30 நிமிடத்தில் ஒரு பிரஞ்சு காரன் ஓடி வருகிறான் ... அவன் என்னமோ பேச அதை மொழிபெயர்க கோண்டு வருகிறார். தல தெரியா தனமா உங்க பிளாக்கை ஹேக் செஞ்சுட்டானாம் இனி இப்படி தப்பு நடக்காதாம் அதனால நீங்க பல வெப்சைட்டில் எழுதும் முடிவை மாத்திக்கனும் என்று கேட்கிறான், இல்லேன்னா கோ.க.ச ஆட்கள் இவனை கொன்றுவிடுவாங்களாம்.

கோலபாரதி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு பாசக்கார பயபுள்ளைங்க இருக்காங்களா?

*****************
பாரு சோகமே உருவாக டாஸ்மாக்கில் உட்காந்து சரக்கடிச்சுக்கிட்டு இருக்கார் அங்கு வரும் அவரது தீவிர ரசிகர்கள் கொக்கியும், குதிஷாவும் என்ன தலைவரே ஏன் சோகமாக உட்காந்து தண்ணி அடிக்கிறீங்க, நீங்க படம் பாக்காம விமர்சனம் எழுதிவிட்டதாக குய்யனார் எழுதினதை நினைச்சு சோகமாக இருக்கீங்களா? சொல்லுங்க தலைவரே குய்யனாரை வூடு கட்டிவிடுவோம், கோசிப் உங்களை திட்டி எழுதினார் அவரை வீரப்பனா மாத்தியாச்சு சொல்லுங்க அதுபோல வேற யாரையும் மாத்தனுமா? உங்களை யார் என்ன சொன்னாங்க சொல்லுங்க அந்தர் செஞ்சுடுவோம் என்கிறார்கள்...



அதுக்கு பாரு சொல்கிறார் "இல்லப்பா இந்த தயமோகனுக்கு மட்டும் சினிமா சான்ஸ் கிடைக்குது, அமெரிக்கா போக சான்ஸ் கிடைக்குது நம்ம ஒரு பயபுள்ளயும் மதிச்சு கூப்பிடமாட்டேங்கிறானுங்களே".



கொக்கி: சினிமாவில் சான்ஸ் கிடைக்குனும் என்றால் நீங்க யாரோடயாவது நட்பு வெச்சுருந்திருக்கனும், தமிழ் பட ஆட்கள் அனைவரையும் திட்டுறீங்க குவாஜிக்கு நடிக்க தெரியலைன்னு சொல்றீங்க, பமல்ஹாசனுக்கும் நடிக்க தெரியலைன்னு சொல்றீங்க, கோலாவுக்கு படமே எடுக்க தெரியலைன்னு திட்டுறீங்க, கோலா எடுத்த ”சோதாமகன்” திரைப்படத்தை குப்பைன்னு திட்டுன்னா, கோலா அடுத்தபடத்துக்கு தயமோகனுக்கு சான்ஸ் கொடுக்காம உங்களுக்கு எப்படி கொடுப்பார்.



பாரு: இல்ல கொக்கி கோலாவோட கடைசி படம்மான ”நான் லூசு”வுக்கு நல்லபடியாதானே விமர்சனம் எழுதினேன்.



குதிஷா: இல்ல தலைவரே ”நான் லூசுவை” படிச்ச பலபேரு அது உங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சுக்கிட்டாங்க.



பாரு: சரி கொக்கி இப்ப என்ன செய்யலாம் சொல்லு...



கொக்கி: ”பாரு வேட்டி பறக்குதடான்னு” நான் உங்களை பத்தி எழுதுறேன்



பாரு: இல்ல கொக்கி இன்னும் பெருசா ஏதாச்சும் செய்யனும் இந்த தயமோகனையும் திட்டனும் அதே சமயம் அமெரிக்காவுக்கும் போகனும். தயமோகனை திட்டனும் என்றால் சும்மா திட்டமுடியாது...ஏதாவது ஒரு காரணம் வேண்டும், அதுக்கு ஒரே வழி லெட்டர் எழுதுவதுதான் இரு லெட்டர் எழுரேன் இந்த மப்புல எழுதினாதான் நல்லா திட்டமுடியும்...



குதிஷா: யாருக்கு எழுத போறீங்க தலைவரே?



எனக்கு நானே எழுதிக்கபோறேன் என்று சொல்லிட்டு பாரு ஒரு சுண்டல் பேப்பரில் எழுத ஆரம்பிக்கிறார்...
அன்புள்ள பாரு
”நான் தொன்னையில் கடந்த பத்தாண்டுகளாக வேலை வெட்டி இல்லாமல் அலைந்துகொண்டிருப்பவன்.(உங்களுக்கு கடிதம் எழுதும்பொழுதே தெரிந்திருக்கும் இருந்தாலும் ஒருமுறை சொல்லிவிடலாமே என்றுதான் சொல்கிறேன்.) உங்களை ஒருமுறை சந்தித்து பேசியதில் இருந்து அதன் பிறகு நேரில் சந்திக்க வாய்பு கிடைத்தும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி இருக்கிறேன். இந்த தயமோகன் நான் லூசுவில் வசனம் எழுதவே இல்லை அப்பொழுது அவர் பேனா நிப்பு உடைஞ்சு போச்சு அதனால் அவர் சொல்ல சொல்ல வேறு ஒருவர் எழுதினார், இதை நான் என் கண்ணால் பார்த்தேன். ஆனால் ”நான் லூசு”வில்அவர் வசனம் எழுதியதாக வந்தது. இது ஒரு மோசடி இதற்கு காக்கா புராணம் படி என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
இப்படிக்கு
பத்திரிநாத்



தயமோகனை திட்டு திட்டுன்னு திட்டி பதில் கடிதமும் எழுதிவிடுகிறார். கடைசியாக தயமோகனுக்கு தண்டனையாக காக்கா தயமோகன் மேல கக்கூஸ் போகட்டும் என்று தண்டனையும் கொடுக்கிறார்.



***********



பதிவர்கள் எல்லாம் கூடி நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க என்ன ஆச்சு வைத்தியகாரனுக்கு என்று, (வைத்தியகாரன் பாருவை திட்டி எழுதின பதிவு எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சாம் அதான் எல்லோரும் வைத்தியகாரனுக்கு எதோ பிரச்சினைன்னு பேசிக்கிட்டு இருக்காங்க.)




அங்கு வரும் குய்யனார் வைத்தியகாரனிடம் பிரச்சினை இதுதான் பாருவுக்கும் பிஸ்கோத்து வேண்டும் தயமோகனுக்கும் பிஸ்கோத்து வேண்டும் இது பிஸ்கோத்துக்காக அவர்கள் போட்டுக்கும் சண்டை என்று விளக்கம் கொடுக்கிறார்.




அங்கு வரும் குரேஸ் கண்ணன் கொக்கியிடம் இப்படி தயமோகனை திட்டி எழுதிய பாருவை இந்த முறையாவது நீங்க ஆதரிக்காமல் இருக்கனும் என்கிறார்...




அங்கு வந்த அய்யோராம் சுந்தர் இது தப்பு வைத்தியகாரன் நீங்க பாருவை பார்த்து இப்படி சொல்லி இருக்ககூடாது என்கிறார் அவரு ஒன்னாம் வாய்ப்பாடு எல்லாம் படிக்கவில்லை என்று எப்படி நீங்க சொல்லலாம்? என்று கேட்கிறார்..



எல்லோரும் என்ன என்னவோ சொல்லிக்கிட்டு இருக்க அங்கு வரும் இளர்மதி பிரச்சினைய சரியா புரிஞ்சுக்கிட்டவன் குய்யனார் மட்டும் தான் இது பிஸ்கோத்துக்கான சண்டை இதில் நாம் தலையிடதேவை இல்லை என்கிறார்.



இதை தெரிஞ்சுக்கிட்ட ஏர்சிம் இரு பை முழுவதும் பிஸ்கோத்து வாங்கி வருகிறார் ஒரு பைய பாருவுக்கும் ஒரு பைய தயமோகனுக்கும் கொடுக்க சொல்லி பிரச்சினையை சுபம் ஆக்கிவிடுகிறார்.
டிஸ்கி: இந்த பதிவு புரியாதவர்கள் அண்ணன் பாலபாரதியின் இந்த பதிவையும், செகண்ட் பார்ட்டுக்கு அண்ணன் பைத்தியகாரன் அவர்களின் இந்த பதிவையும் படிக்கவும்.

Monday, June 15, 2009

ஒரு நல்லசெய்தி+ஒரு கெட்டசெய்தி...



Tuesday, June 9, 2009

கார்ட்டூன்ஸ்10-6-2009



மேலும் சில கார்ட்டூன்ஸ் பார்க்க இங்கே கிளிக்கவும்!



Monday, June 8, 2009

அய்யனாருக்கு ஆண் குழந்தை



ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எங்க கட்டபுள்ளைக்கு ஒரு குட்டி புள்ள பிறந்து இருக்குதுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ...


அய்யனார்-கல்பனா தம்பதிகளுக்கு இன்று(9/6/2009) காலை 8.30 மணிக்கு ஆண் மகன் பிறந்து இருக்கிறான். சுகப்பிரசவம் இருவரும் மிக நலமாக இருக்கிறார்களாம்.

குழந்தை அப்பா போல் இல்லாமல் அம்மா போல் இருப்பதாக வரும் செய்திகள் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. அப்படியே அம்மா போலவே வளர வாழ்த்துவோம்!

Sunday, June 7, 2009

ராமன் சைக்கிள் --சிறுகதை போட்டிக்கு!

ஒழுங்கான ஒரு ரோடு கிடையாது, பக்கத்துல ஒரு கடைகண்ணி கிடையாது, நல்ல ஊரு இது. இந்த ஊருக்கு ஒரு போஸ்ட் ஆபிஸ், அதுக்கு ஒரு போஸ்ட் மேன் ஒண்ணுதான் குறைச்சல் என்று கருஞ்சாபுதூருக்கு மாற்றல் ஆகிவரும் பொழுது புலம்பிக் கொண்டே வந்தார் ராமன்.

கருஞ்சாபுதூரைப் பற்றி உங்களுக்கு சொல்லிவிடுவது நல்லது. கருப்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தூரம். ஒரு நாளைக்கு இருமுறை வரும் அந்த வெள்ளை தகர பேருந்தை தவிர ரோட்டின் நடுவில் யாரும் போக மாட்டார்கள் கப்பிகல் கிளம்பி கிளம்பி கிடக்கும். ரோட்டில் இரண்டு ஓரத்திலும் ஒத்தயடி பாதை அகலத்துக்கு செம்மண் இறுகி போய் இருக்கும். அதில் ஒருபக்கம் போக இன்னொருபக்கம் வர.



ஒரு ஓட்டு வீட்டின் சைட் போர்சனை 75 ரூபாய்க்கு வாடகைக்கு பிடிப்பதில் ராமனுக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஒரு டெம்போ வைத்து ஒரு கட்டில், ஒரு மர பீரோ, அதோடு கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்களோடும், தன் ஒரே மகனோடு வந்திறங்கினார். மனைவி எவ்வளவோ சொல்லியும் தன்னுடைய சைக்கிளை அந்த வண்டியில் ஏற்ற மறுத்துவிட்டார். தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிய இங்கிலாண்ட் ரலே சைக்கிள். அதில் ஒரு கோடு விழுந்தாலும் துடிதுடிச்சு போய்விடுவார் என்பது சந்திராவுக்கு தெரியும். அதானால் அதுக்கு மேல் பேசவில்லை.


”இரவு போய் நானே ஓட்டிக்கிட்டு வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு, எல்லா சாமான்களையும் இறக்கி வைத்துவிட்டு, டேம்போவிலே சென்று அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டே காலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். கருப்பூரில் இருந்து கப்பிகல் ரோட்டில் வரும்பொழுது சைக்கிளுக்கு ஒன்னும் ஆகிவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக ஓட்டிவந்தார். இரவு முழுவதும் சைக்கிள் மிதித்த களைப்பில் அடித்து போட்டது போல் தூங்கியவரை காலை சாப்பிட கூட எழுப்பவில்லை. மதியம் எழுந்தவருக்கு அப்பொழுது சூடாக வடிச்ச சாதத்தை போட்டு மிளகு பொடி நல்லெண்ணெயும் சுட்ட அப்பளம் அதோடு வடகதுவையல் வைத்து மனைவி சந்திரா போட்ட சாப்பாடை நன்றாக சாப்பிட்டார்.வீட்டை எல்லாம் ஒழுங்குப்படுத்திவிட்டு, மகன் சம்மந்தப்பட்ட டி.சி எல்லாம் எடுத்து R.Kமுதலியார் சன்ஸ் ஜவுளி கடை மஞ்சள் பையில் வைத்துவிட்டு மனைவி சுட்ட கோதுமை தோசை சாப்பிட்டு படுக்க 9 மணி ஆனது.


இப்ப வந்து இறங்கியது போல் இருந்தது சந்திராவுக்கு. பன்னிரண்டு வருடம் ஓடியதே தெரியவில்லை மகனை காலேஜ் படிக்க ஹாஸ்டலில் சேர்த்துவிட்டபிறகு இருவருடைய சாப்பாட்டு அளவும், பேசிக்கொள்ளும் நேரமும் குறைந்து போனது. ஒவ்வொரு மழைக் காலத்தின் பொழுது வீட்டு ஓனரிடம் ஓடு மாற்ற சொல்வது இவர்களுடைய வழக்கம். அவரும் இதோ இதோன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஒழுகும் இடத்தில் எல்லாம் பாத்திரங்களையும், சாரல் அடிக்கும் சன்னலில் யூரியா சாக்கு போட்டு கட்டியும் அந்த மழைக்காலத்தையும் ஓட்டிவிட்டார்கள். மகன் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்கு போய்விட்டால் எல்லா கஷ்டங்களும் போய்விடும் என்று எல்லா தந்தையைப் போல நினைத்து கொண்டு இருந்தவருக்கு, மகன் ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு வந்து, ”இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்” என்று நின்ற பொழுதே எல்லா நாடிகளும் அடங்கிவிட்டன. இருவாரங்கள் கூட ஆகவில்லை முனுமுனுத்துக்கிட்டு இருந்த புது பொண்ணுக்கிட்ட, ”என்னடி சொன்ன! இந்த கிழவிக்குன்னு ஏதோ ஆரம்பிச்ச, சொல்லுடி, என்ன சொன்ன?” என்று கேட்டுக்கிட்டு வந்த சந்திராவை, ”என்னமா தாண்டிக்கிட்டு வர, அவளும் எவ்வளோ தான் பொருத்து போவா?”என்று தள்ளினான் கோபி. இதை ஏதிர்பார்க்காததால் சந்திரா கீழே விழ, அதைப் பார்த்து ஓடிவந்த ராமன், சந்திராவை தூக்கிவிட்டு, கோபிக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தார். நினைவு தெரிந்து மகனை அடிக்கும் முதல் அடி, ”வயசானவரு என்று பார்க்கிறேன் இல்லேன்னா” என்று சொல்லிவிட்டு பொட்டியை கட்டினான் கோபி.


நினைவு தெரிந்த நாளாக ஆசைப்பட்டு எதுவுமே கேட்காத மனைவி காலை எழுந்ததும், ”என்னங்க ஆஞ்சனேயர் கோயிலுக்கு போய்ட்டு வரலாமங்க” என்றதுக்கு மறுபேச்சு சொல்லாமல்கிளம்பினார். அவருக்கு தெரியும் எதுக்கு இன்று கேயிலுக்கு போகனும் என்று சந்திரா கேட்டாள் என்று. இன்றோடு இருபத்து நான்கு வருடம் ஆகிறது கோபி பிறந்து. வீட்டைவிட்டு போய் ஒருவருடத்துக்கு மேல் ஆகுது. பிறசவ வலி வந்த பொழுது இதே சைக்கிளில்தான் தாராசுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் அங்கு தவிப்போடு நிற்றதும், தவழும் மகனே ஹேண்ட்பேரில் ஒயரால் பின்னிய கூடைய முன்னாடி மாட்டி அதில் கோபியை வைத்துக்கொண்டு கும்பகோணம் செல்வம் தியேட்டரில் தங்கபதக்கம் பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது. கோயிலில் மனைவி சாமிபேருக்கு அர்சனை என்றதும் உதட்டோரம் சின்னபுன்னகை தோன்றி மறைந்தது ராமனுக்கு.


”என்னங்க ஏதோ சுறு சுறுங்குது ஒரு சோடா வாங்கிவாங்களேன்” என்று தன் இடதுபக்க மார்பை புடிச்சுக்கிட்டு சொன்னதும், ஓடி போய் வாங்கிவந்து கொடுத்தார்.குடித்ததும் வியர்க்க ஆரம்பித்தது சந்திராவுக்கு. பயந்துபோனவர் தன் சைக்கிளில் உட்கார வைத்து ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்றார். பிரவவத்துக்கு பிறகு சந்திராவை ஆஸ்பத்ரிக்கு அழைத்து செல்வது இப்பொழுது தான். போன சிறிது நேரத்தில், ”சிவியர் ஹார்ட் அட்டாக்” ”சாரி ராமன் எவ்வளோ முயற்சி செய்துபார்த்துவிட்டோம். முடியல.சம்பிராதயமான டயலாக்கை சொல்லிவிட்டு போனார் டாக்டர்.


இறுதிகாரியத்துக்காவது புள்ள வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து தானே கொள்ளிவைத்துவிட்டு வந்தார். தேவையே இல்லாமல், சந்திராவை ஒழுங்கா வெச்சிருந்தேனா?ஒரு நல்ல புருசனா இருந்தேனா? உடம்பு முடியாமல் சுரம் என்று படுத்து இருந்தாலும் ஒருநாள் கூட ஆறிய சோறை போட்டது இல்லையே, ஆனா நான் என்ன செஞ்சேன்?என்று எல்லாம் தோனியது. கடைசியாக சந்திராவோடு வாழ்ந்த வீடு என்பதால் அங்கிருந்து எங்கும் மாற ராமனுக்கு பிடிக்கவில்லை.


சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக உயிர் விடும் பொழுதுதான் தனக்கு வயதாவதை உணர்ந்தார் கடைசியில் பெடல் இருக்கும் இடத்தில் ஒரு கம்பியும் ஒரு பக்க பெடலுமேஇருந்தது, மனைவி கடைசியா அமர்ந்து வந்த சைக்கிள் என்று யாரையும் தொடவிடாமல் வைத்திருந்தார். தானே எல்லா ரிப்பேரையும் செய்தார், பக்கத்து வீட்டு ஓனர் பேரபுள்ளைங்க விளையாட்டு அந்த சைக்கிள் தான். சன்னல் ஓரத்தில் இருக்கும் சைக்கிள் மேல் ஏறி கம்பிய புடிச்சுக்கிட்டு அது மேல ஏறி, குதிப்பது. கேரியரில் உட்காந்து கீங்கீன்னுஹாரன் அடிப்பது என்று அதுங்களுக்கு சைக்கிள் ஒரு விளையாட்டு சாமான். பலமுறை இதுமேல ஏறாதீங்க, ஏறாதீங்க என்று சொல்லி சொல்லி பார்த்துவிட்டு சைக்கிளைவீட்டுக்குள் போட ஆரம்பித்தார். ஏதோ நினைப்பில் அன்று சைக்கிளை உள்ளே போட மறந்து படுத்து இருந்தவர், வெளியில் டமார் என்று சத்தம் கேட்க ஓடி போய் பார்த்தார். பக்கத்துவீட்டு பசங்க சைக்கிள் மேல் ஏறி விளையாடி கீழே தள்ளிவிட்டுவிட்டார்கள். கோவத்தில் நாலு முதுகில் போட்டு விரட்டியும் கோவம் அடங்காமல் கேரியரை கழட்டிவைத்தார். பசங்க விளையாட வருவது குறைந்தது.


ஞாயிறு காலை சைக்கிள் எடுத்துக் கொண்டு கடைக்கு இட்லி வாங்க போனவர் பெல் அடிக்க நினைத்து, அழுத்திய பொழுது சத்தம் வராமல் கிரிச், கிரிச் என்று சத்தம்தான் வந்தது.பார்த்தவருக்கு பெல்லு மேல் இருக்கும் கப்பு காணாமல் போய் இருந்தது. சைக்கிளை எடுக்கும் முன் பக்கத்துவீட்டு பசங்க சைக்கிள் கிட்ட விளையாடியது நினைவுக்கு வர,அது அவர்கள் வேலையாகதான் இருக்கும் என்று கோபமாக பக்கத்துவீட்டு பசங்களை தேடிக்கிட்டுவந்தார் தேடிவந்தவர் மாமரத்தடியில் மணலை குழைத்து அந்த சைக்கிள் மூடியில் வைத்து பூவரசு இலையில் கப்பு கப்பாக செஞ்சு இட்லி சுட்டுக்கிட்டு இருந்தார்கள்.


”ஏய் ஏன் இத்தனை இட்லி சுடுற போதும் போதும்” என்று சொன்னதும், ”உனக்கு ஒரு இட்லி, எனக்கு ஒரு இட்லி, அம்மாவுக்கு ஒன்னு,அப்பாவுக்கு ஒன்னு...”

“அப்படியும் இன்னும் மீதி ஒன்னு இருக்கே”


”அப்ப அது சாமிக்கிட்ட போன சந்திரா மாமிக்கு ஒன்னு” என்று குழந்தை சொல்வதை கேட்ட ராமன், வீட்டுக்கு வந்து தேடி எடுத்தார், கழட்டிபோட்ட கேரியரை!

Tuesday, June 2, 2009

எப்பூடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

இது சந்தோஷ் கடன்...

நமக்கு இந்த கடன் என்றாலே அலர்ஜிங்க அதன் பாதிப்பு ரொம்ப அதிகம் என்பதால் சில மாதங்களுக்கு முன் சந்தோஷ் மாப்பி என்னை தொடர் பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார். சிலபல காரணங்களால் எழுதமுடியவில்லை இருந்தாலும் அவர் அழைப்பை ஏற்காமல் இருப்பது சரி இல்லை என்பதால் முதலில் அவர் கடனை முடித்துவிடுகிறேன். இளைஞர்கள் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து எழுதியிருந்தார் அதுமாதிரி நானும் எழுதனும் என்றார்...



ஓட்டு போடுவது என்பது ரொம்ப முக்கியம், அதுவும் நல்ல பதிவுகளுக்கு ஓட்டு போடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழ்மணத்திலும், தமிழிஸிலும் ஓட்டு போடுவதால் பதிவுகளை அதிகம் பேர் படிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஓட்டு போடுங்க, ஓட்டு போடுங்க , ஓட்டு போடுங்க:))(மாப்பி நீ சொன்னது மாதிரியே அனைவரையும் ஓட்டு போட சொல்லிட்டேன் மாப்பி)



********************
இனி சஞ்சய் கடன்...
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னமோ கூரியரில் வந்தமாதிரி கேள்வி கேட்குறீங்க, என் முழு பெயரான சரவணவேல் முருகனின் பெயர் என்பதாலும் அழகு என்ற சொல்லுக்கு முருகா என்ற மீனிங் இருப்பதாலும் இந்த பெயர் வந்தது. பிடிக்கும்


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அம்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணத்துக்காக அலைந்த அன்று...


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கல்லூரியில் விழுந்து விழுந்து படிக்கும் நண்பர்களை விட அதிக மார்க் வாங்கும் பொழுது அவர்கள் சொல்வார்கள், டேய் உனக்கு ஏன் மார்க் அதிகம் கிடைக்குது தெரியுமா? உன் கையெழுத்தால் தான் என்பார்கள்.

பெயில் ஆக்கினா திரும்ப இந்த கையெழுத்தை பார்க்கவேண்டி இருக்குமே என்பதால் அதிகமார்க் போட்டு பாஸ் ஆக்கிவிடுகிறார்கள் என்பார்கள்.

அப்படி இருக்கும் என் கையெழுத்து இன்று எழுதியதை இரண்டு நாள் கழிச்சு பார்த்தா எனக்கே புரியாது...


4).பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் விரால் மீன் வறுவல்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

மேல்தட்டு மக்களுடன் என்றால் மிகவும் யோசிப்பேன்... நம்மை மாதிரி பய புள்ளைங்க என்றால் உடனே வச்சுக்குவேன்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சுற்றிலும் கோபியர் கூட்டம் என்றால் குட்டையில் கூட குளிக்க பிடிக்கும் :)


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆணா பெண்ணா என்பதை பொருத்து பதில் மாறும். ஆண் என்றால் மோட்டுவளைய பார்ப்பேன். பெண்ணாக இருந்தால் நான் சொல்லும் பதிலை பார்த்து சிரிக்காம இருக்கனும் சரியா! ஆபிஸ்க்கு பிரிண்ட் செய்யவரும் லெபனிஸ் பெண்களையும், ரஸ்ய அழகிகளையும் கண்களை மட்டுமே பார்ப்பேன். (ஒவ்வொரு ஊருக்கும் ஒன்னு ஒன்னு ஸ்பெசல் போல! இருந்தாலும் நான் நல்ல பிள்ளை சாமியோவ்வ்வ்வ்)


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது---கோபம்

பிடிக்காதது---கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

கமலை ஏன் பிடிக்கும் என்றால் நடிப்புக்காக என்று சொல்லலாம், மனைவிக்கிட்ட பிடித்த விசயம் ஏன் அவர்களை பிடிக்கும் என்று ஆராய்வது அபத்தமாக தோன்றும்... ஓஷோ சொன்னது ...”If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.”

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

குடும்பத்தோடும் நண்பர்களோடும்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

எப்படி இப்படி எல்லாம்? முடியல...


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒரு பிகரை பார்த்துக்கிட்டு இருக்கேன்...


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இப்பொழுது இருக்கும் அதே கருப்பு கலரில்...எல்லா பொருட்களிலும் கருப்புக்கு ஒரு கம்பீரம் இருக்கும் BMW கருப்பு கலர் கார், கருப்பு கலர் பைக், கருப்பு கலர் பேனா இப்படி பல ... ஆனால் தோலில் மட்டும் கருப்புக்கு மரியாதை கிடையாது.


14.பிடித்த மணம்?

தலைகுளித்துவிட்டு பெண்கள் தலையில் வைக்கும் சந்தனமுல்லையோடு மரிக்கொழுந்து வாசம் இருந்தாலே...ம்ம்ம்ம்ம்ம் நரம்பு எல்லாம் முறுக்கேறும்!


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

இதை அவர்களும் படிப்பார்கள் அந்த காரணம் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் நேசிப்பதற்கு அழகு


நாமக்கல் சிபி

அனுஜன்யா

மகேஷ்

ஆதிமூலகிருஷ்ணன்


மற்றவர்களை பரிசலும் மற்ற நண்பர்களும் கூப்பிட்டுவிட்டார்கள்...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?



17. பிடித்த விளையாட்டு?

உள்ளேவா வெளியேவா?


18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, ஆனால் போஸ் கொடுப்பவர்:)


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கருத்து கந்தசாமியாக இல்லாமல் இருக்கும் படங்கள் பிடிக்கும்...


20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்


21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம்---சிலு சிலுக்கும் காற்றோடு வரும் சாரல், மழை விட்டதும் தேங்கி கிடக்கும் தண்ணியில் ஆட்டம் போடும் குழந்தைகள்., கரண்ட் இல்லாமல் அரிக்கேன் வெளிச்சத்தில் சாப்பிடும் சாப்பாடு, படுக்கும் தரையில் இருக்கும் ஒரு வித சிலீர் சில்லுப்பு, குளித்து முடித்து தலை துவட்டாத மரங்கள் என்று பல காரணங்களுக்காக மழைகாலம் ரொம்ப பிடிக்கும்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புலிநக கொன்றை


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பொழுதும் ஓஷோ


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ச்ச்ச்!

குழந்தையின் அழுகை சத்தம், தகரத்தை டர டரன்னு அறுக்கும் சத்தம்.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய்


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சமா கிரியேட்டிவாக யோசிக்கும் திறமை...


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நடத்தையில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு பெண் இவன் தான் காரணம் என்று முழு பழியையும் ஆடவனின் மீது போடும் பொழுது. உதாரணம் கொடுக்கலாம் ஆனால் விரும்பவில்லை.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

மை டியர் குட்டிசாத்தான்


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிம்லா


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இல்லை என்று கேட்டபர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கனும் என்று ஆசை!


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி ஒன்றும் இல்லை...


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

:) :(


நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

******************
இது கண்ணன் கடன்
அமீரகத்தில் இருக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் சேர்ந்து பழய பதியவர்களுக்கு ட்ரீட் தரவிரும்புவதால் அவர்கள் சந்தோசத்துக்காக நண்பர்களும் வாசகர்களும் கராமா சிம்ரன் ஆப்ப கடைக்கு எதிரில் இருக்கும் பார்க்குக்கு வந்துவிடவும்.
நாள்: வெள்ளி கிழமை
நேரம்: மாலை 6 மணி