Sunday, August 19, 2007

பாலபாரதிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா--- போட்டிக்கு

டாக்டர் பட்டம் நம்ம ஷில்பா செட்டிக்கு முதல்ல கொடுத்தாங்கபிறகு இப்ப நம்ம விஜய்க்கு, சங்கருக்கு இப்படி ஊர்ல இருக்கிற வீனாபோன பசங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் பொழுது நம்ம பாலபாரதிக்கு ஏன் கொடுக்க கூடாது? அப்படி எந்த விதத்தில்நம்ம பா.பா குறைஞ்சு போய்விட்டார்.(இதுக்கு ஏதும் உள் குத்து எல்லாம் கிடையாதுங்க).

எந்த வித்திலும் நம்ம தல விஜயைவிடவோ, அல்லது ஷில்பாவை விடவோகுறைந்தவர் அல்ல. அதற்காக அமீரக பா.க.ச சார்பில் டாக்டர் பட்டம் கொடுப்பது என்றுமுடிவு செய்யபட்டு உள்ளது.

இன்று மாலை ஆசிப் மீரான் முன்னிலையில், அபி அப்பா மேற்பார்வையில் திருமதி .டாக்டர் டெல்பின் அவர்கள் பட்டம் கொடுக்க, டாக்டர் பட்டம் பெறுகிறார் நம் பா.பா.

இந்த பட்டத்தை கொடுப்பது நிஜ டாக்டர் ஆகையால் இது டாக்டர் பட்டம்தானே?


நாங்கள் ஒரு பட்டம் அல்ல இரண்டு பட்டம் கொடுக்கிறோம் தல சந்தோசமா வச்சிக்க தல!!! வச்சிக்கிட்டு சும்மா ஜொய்ய்ய்ய்ன்னு பட்டத்தை விடு தல.
தொடரும்....

Saturday, August 18, 2007

புலி தோல் போர்திய பசு

காமெடியனாக இருப்பதில் இருக்கும் ஒரு கஷ்டம் சில விசயங்கள் சீரியசாக பேசும் பொழுதுமற்றவர்கள் அதையும் நகைசுவையாக எடுத்து கொள்வதுதான், ஒன்றுக்கு மூன்று முறை இல்லை நிஜமாகதான் சொல்கிறேன் என்று சொன்னாலும் அது மற்றவருக்கு நகைசுவையாகதான் தெரியும் பொழுதுகொஞ்சம் வலிக்கதான் செய்கிறது. இதை அதுபோல் எடுத்துகொள்ளாதீர்கள்.

முதன் முதலாக உன்னிடம் பேசிய நாளை நினைவில் வைத்து கொள்ளவில்லை ஆனால் என்ன பேசினேன் என்று நினைவு இருக்கிறது, அன்று எனக்கு தெரியவில்லை உன்னுல் விழபோகிறேன் என்று!
வழக்கம் போல் கிண்டலுடனே ஆரம்பித்த நம் அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து இன்று ஒரு புயலை போல் மையம் கொண்டு உள்ளது.

நம் சமுதாயத்துக்கு ஒரு நடிகன் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும், அரசியல்வாதி என்றால் இதைதான் செய்யவேண்டும் என்று ஒரு சட்டதிட்டங்களை வைத்து இருக்கிறார்கள், அதுபோல் ஒரு கவிஞன் என்றால்"அன்பே" "அமுதே" என்றுதான் எழுதவேண்டும் என்ற சட்டத்தை உன்மீதும் வைத்து பொருத்த முயலும் அதை நீ உன் வார்தைகளால் உடைக்கிறாய் பொறுத்துகொள்ள முடியாதவர்கள் உன்னை சாடுகிறார்கள்.

பெண்களை பற்றியும் மதுவை பற்றியும் எழுதுவதால் நிஜத்திலும் அப்படிதான் என்று முடிவு கட்டும் மக்களை பார்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது வாய் வழியாக அல்ல! ஏன் ஒருவன் வெளிப்படையாக இருந்தால் அவன் மோசமானவனாகதான் இருக்கவேண்டுமா? என்ன? உன் வெளிபடையான பேச்சுதான் எனக்கு மிகவும்பிடித்தது. உண்மையாக பழகியவர்களுக்கு தெரியும் நீ நல்லவன் என்று.

எனக்கும் தெரியும் நீ நல்லவன் என்று!!! நீ வெறும் புலி தோல் போர்திய பசுதான் என்று வேறு யாருக்கு தெரியவேண்டும்?

......................அய்யனாருக்கு

Thursday, August 16, 2007

இன்னாள் நண்பனுக்கு - எதிர் கவுஜ



நீயோ அல்லது நானோ சில
கணங்களேனும் தாமதித்திருந்தால்
(அந்த லாரி மேல மோதி இருக்கும்).
நிச்சயம் தவிர்த்திருக்கலாம் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட நம் சந்திப்பை....

(ஆமா என்ன செய்ய காலையில் கழுதை முகத்தை பார்த்தா நல்லது என்றார்கள்)


எனக்கான பார்வைகள் எதுவும்

உன்னிடமோ

உனக்கான வார்த்தைகள் ஏதும்

என்னிடமோ

மிச்சமிருக்கவில்லை அப்போது..

(நாங்க இலையில் வச்ச புல் மீல்சையே மிச்சம் வைக்க மாட்டோம் , பக்கத்து இலையையும் சேர்த்து காலி செய்வோம் இதுல பார்வை மிச்சம் இல்லை வார்தை மிச்சம் இல்லை என்று சொல்லிக்கிட்டு).


தப்பித்தல்களின் அவசரத்தோடு(ஜெயில் இருந்தா???)

நொடியொன்று இறக்கும்

அவகாசத்திற்குள்

விரைந்து கடந்தாய் என்னை..

(மின்னல் போல மறைந்தான் என்று சொல்ல என்னவெல்லாம் சொல்வீங்க, நொடி இறக்குது, நிமிசிசம் பிறக்குதுன்னு).


உன் முதுகில் பட்டுத்தெறித்த

என் பார்வைகள்

முனை மழுங்கி

மண்ணில் விழ....

(அதனால் என்ன ஸார்பினர் வச்சு திரும்ப சீவிக்கிட்டா போச்சு)


ஒப்பனைகள் கலைந்து

(உங்க மேக்கப் கலைஞ்சு போச்சா அய்யோ பாவம் மக்கள்)

விகாரமாய்ப் பல்லிளிக்கிறது

(அய்யனார் கிட்ட சொன்னா அந்த பெண் மாட்டி இருந்த கிளிப் ஒன்று ஆர்டர் செய்வார்)

என்றோ வெகு

புனிதமென

நான் கொண்டாடிய

உன் நட்பு...

(தீபாவளி கொண்டாடுவோம், பொங்கல் கொண்டாடுவோம் அது என்னா புச்சா)


டிஸ்கி: ஜெஸிலா நீங்க காயத்ரி பதிவில் போட்ட மாதிரியே இங்கும் அதே பின்னூட்டம் போட வேண்டும் :) அதுக்குதான் நம்ம அய்யனார் போட்டோ.



Wednesday, August 15, 2007

ஒரு அப்பாவி நம் வலைபதிவர்களிடம் விலாசம் கேட்கிறார்

வழிதெரியாமல் தவிக்கும் ஒருவர் நம் வலைபதிவர்களிடம் வழிகேட்டால் எப்படி வழி சொல்வார்கள் என்று ஒரு கற்பனை. பெரிய தலைகள் எல்லாம் கோச்சுக்காதீங்க:)

அப்பாவியான அவர் எதிரே நம்ம ஜோசப் சார் எதிரில் வருகிறார்.

அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

ஜோசப் சார்: ம்ம்ம் இங்க வா இப்படியே நேரா போய் "திரும்பிபார்" ஒரு புலிய மரம் தெரியும்,அங்க இருந்து லெப்ட்ல போய் "திரும்பிபார்" ஒரு Bank போர்ட் தெரியும் அங்கே இருந்து, அங்க இருந்த ரைட்ல திரும்பி பார் ஒரு பழைய வீடு தெரியும், நேராக போய் "திருப்பி பார்" நான் இங்க நிற்பது தெரியும். திரும்பி பார்துக்கிட்டே வந்தின்னா நான் நிற்கும் இடத்தில் இருக்கும் எதிர் வீடுதான் அந்த வீடு.

அப்பாவி: ?????????????????

*****************************************
வீட்ட கண்டுபிடிக்க முடியாத அப்பாவி எதிரில் நம்ம செந்தழல் ரவி வருகிறார்.

அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

செந்தழல் ரவி: என்னய்யா என்னை பார்க்காம திரும்பி யார பார்த்து அட்ரெஸ் கேட்கிற?

அப்பாவி: இல்ல இதுக்கு முன்னாடி வேற ஒருத்த கிட்ட கேட்டேன் அடிக்கடி திரும்பி பார்க்க சொன்னார் அதனால கழுத்து சுலுக்கிக்கிச்சு.

ஹோ அப்படியா ! இப்படியே நேராக போ அங்க பச்சகலர் பெயிண்ட் அடிச்ச வீட்டு கொடியில நீலகலர் சுடிதார் காஞ்சிக்கிட்டு இருக்கும், அதுக்கும் பக்கத்தில் இருக்கும் ரோட்டில் ரைட்டில் கட் செஞ்சீன்னா ஒரு காலேஜ் பஸ்ட் இயர் படிக்கும் பெண் மொட்ட மாடியில் நின்னு படிச்சிக்கிட்டு இருக்கு. அந்த வீட்டுக்கு எதிர் பக்கம் போகும் ரோட்டில்....

செந்தழல் : இப்ப டைம் என்னா?

அப்பாவி: 12.30

செந்தழல்: அய்யயோ பிலிப்பைன்ஸில் 10 மாடலிங் பெண்களுடன் மீட்டிங் இருக்கு பிளைட்ட பிடிக்கனும், மீதி வழியை பிளைட்டில் போகும் பொழுது லேப் டாப்பில் டைப் செஞ்சு மெயில் செய்கிறேன் இப்ப பை.

************************************************
எதிரில் நம்ம அய்யனார் வருகிறார்

அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

அய்யனார்: இப்படியே நேரா போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... அங்கே இருந்து ரைட்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒரு டாஸ்மார்க் வரும் அங்கே இருந்து லெப்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ. ஒரு "குட்டி" சுவரு வரும் அங்கே இருந்துநேரா வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... பக்கத்தில் ஒரு நீலகலர் பெயிண்ட் அடிச்ச வீடு இக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

தம்பி டைம் என்னா? ஏன்னா நான் கால சக்கரத்தை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.

அப்பாவி: 6.30

அய்யனார்: சாரி சார் எனக்காக பல்லில் கிளிப் போட்ட பெண், ஜாக்கெட்டில் ஊக்கு போட்ட பெண், ராதிகா எல்லாம் வெயிட்டிங் வேற ஆள் கிட்ட கேளுங்க...

**********************************************

தம்பி கதிர் எதிரில் வருகிறார்

அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

தம்பி: வாய்யா! என் பேரு எப்படி தெரியும்?

அப்பாவி: உங்க பேரு தம்பிங்களா ரொம்ப சந்தோசம்... இந்த அட்ரஸை கொஞ்சம் சொல்லுங்களேன் காலையில் இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்
தம்பி: சரி வா ஒரு டீ சாப்பிட்டு கிட்டே அட்ரஸ் சொல்கிறேன். சரி உன் பேரு என்னா?

அப்பாவி: .................

தம்பி: கூட பிறந்தவுங்க எத்தனை பேர் என்னா வேலை செய்யுற? எத்தனை பிள்ளை எல்லா விவரத்தையும் கேட்டுகிறார். பின் நான் கிளம்புறேன் பை பை

அப்பாவி: தம்பி இன்னும் நீங்க அட்ரசை சொல்லவே இல்ல...

தம்பி: போய்யா இப்பதான் பதிவு போட மேட்டர் உன் கிட்ட இருந்து வாங்கி இருக்கேன் அது மறக்கும் முன் நான் பதிவு போடனும் பை பை.

*********************
எதிரில் ஜீ.ராவு கையில் அர்சனை தட்டோடு வருகிறார்.

சார் சார் உங்கள பார்தா ரொம்ப நல்லவுங்க போல தெரியுதுகொஞ்சம் இந்த அட்ரஸ் எங்க இருக்கு சொல்ல முடியுமா?

ஜீ.ரா : ஓம் முருகா! இப்படியே நேரா போனா, ஒரு முருகன் கோயில் வரும் அங்க இருந்துலெப்டில் திரும்பினா ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்கே இருந்து நேராக போனா ஒரு அம்மன் கோயில் வரும் அதுக்க அடுத்த சந்தில்....

மணி என்னா ஆச்சு?

அப்பாவி: 8.30

ஜீ.ரா: கோயில் நடை சாத்தும் முன் நான் போக வேண்டும் பை பை.
**********************

எதிரில் நம்ம அண்ணாச்சி வருகிறார்.
அப்பாவி: அண்ணே அண்ணே இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?

அண்ணாச்சி : எலே செவுத்து மூதி எங்கன நின்னுக்கிட்டு என்ன விலாசத்த கேக்குதியபோலே போய் வட பழனி பஸ் ஸ்டாண்டில் கும்பகோணம் பஸ் புடிச்சு ஊருக்கு போய் அங்கன கேளுலே, வந்துட்டாங்கிய எங்கன இருந்துதான் இப்படி கிளம்புவானுகிய!!!

அந்த அப்பாவி அபி அப்பா!!!!

Tuesday, August 14, 2007

தமிழ்மண நுழைவு தேர்வு முடிவு

நடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம ஜெஸிலாதான் முதல் இடத்தை பிடிக்கிறார். அவரை அடுத்து இரண்டாம் இடத்தை நம்ம வெங்கட்ராமனும் மூன்றாம் இடத்தை நம்ம ராம் நான்காம் இடம் இம்சையும் பெற்று இருக்கிறார்கள்.

தினதந்தி முதல் பக்கம்
நடந்து முடிந்த நுழைவு தேர்வில் முதல் இடம் பெற்ற ஜெஸிலா போட்டோவும் பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது.

கேள்வி: இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

பதில் : ஆபிஸில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் கூட வீனாக்காமல் தமிழ் மணத்திலேயே செலவிட்டேன்.

கேள்வி:இதுக்கு பின்னால் யார் இருக்கா?

பதில்: என் பின்னால் யாரும் இருந்தால் தமிழ்மணதை படிக்க முடியாமல் போய் இருக்கும். அதனால் பின்னால் யாரும் இல்லை.

கேள்வி: முதல் மார்க் வாங்கிட்டீங்க அடுத்து உங்கள் லட்சியம் என்ன?
பதில்: டாக்டர் ஆவது தான் என் லட்சியம். (எல்லாம் அப்படிதானே சொல்லுவாங்க).


தினகரன் முதல் பக்க செய்தி
பல சோதனைகளையும் தாண்டி சாதனை புரிந்த மாணவர் வெங்கட்ராமன்.

கேள்வி : நீங்க அதிக அளவில் சோதனைகளை சந்தித்து இருக்கிறீர்களாமே அப்படி என்ன?

முதலில் லக்கி கிட்ட மாட்டினேன் என்ன காரணம் என்றே தெரியவில்லை அவரு என் மேல கோவமா ஆயிட்டார். அடுத்து இளவஞ்சிக்கிட்ட சிக்கிசின்னா பின்னமானேன், அவருக்கும் என் மேல என்ன கொலை வெறியோ தெரியல. இரண்டு நாள் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா? இப்படி பல சோதனைகலை கடந்துதான் இந்த சாதனையை செஞ்சு இருக்கிறேன்.

தினமலர் செய்தி.

ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

கேள்வி: நீங்க இந்த வெற்றிய எதிர் பார்தீங்களா?

பதில்: ஜாகிர்கான் நன்றாக பால் போடும் பொழுதே வெற்றிய எதிர் பார்தேன். இந்தியா வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தேன்அது போலவே நடந்தது.

கேள்வி: நான் அத கேட்கலீங்க நீங்க மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருப்பதை கேட்கிறேன்?

பதில்: ஹோ அதுவா இது எல்லாம் சாதாரணம், எங்க ஊரில் நான் படிக்கும் பொழுது நான் தான் முதல் மார்க் வாங்குவேன். ஏன்னா நான் ஒருத்தவன் தானே எங்க ஊர் பள்ளி கூடத்தில் படித்தது.

கேள்வி: இந்த வெற்றிக்கு யார் யார் எல்லாம் காரணம்?

பதில் : எங்க மேனேஜர்தாங்க!

கேள்வி: எல்லாரும் அம்மா அப்பா டீச்சர் என்று சொல்லுவாங்க நீங்க வித்தியாசமா மேனேஜர் என்று சொல்றீங்க?

பதில்: ஆமாங்க அவருதானே என்ன ஆபிஸில் சும்மா உட்கார வச்சு இருக்கிறார் அதனால் தானே என்னால் படிக்க முடியுது. அப்ப அவருதானே காரணமாக இருக்க முடியும்.

மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.

Monday, August 13, 2007

சன் டீவியில் வலைபதிவர்கள்

அனித்தா கந்தசாமி உங்களை திரும்பவும் சின்ன மொட்டுகள் பகுதியில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன். (அங்கு வரிசையாக சிபி, லக்கி, செந்தழல் ரவி, டோண்டு, ஓசை செல்லா எல்லாரும் அமர்ந்திருக்க நிழச்சி ஆரம்பம் ஆகிறது.

சிபி குட்டி வாங்க வாங்க...இங்க ஆண்டி பக்கத்துல உக்காருங்க ஏய் பக்கத்துல உட்கார சொன்னேன் மடியில் இல்லை இறங்கி அங்க எட்டி உட்காந்துக்குங்க)

அனி: இன்னைக்கு என்ன சொல்ல போறீங்க

சிபி: ம்ம்ம் A, B, C, D

அனி: யார் சொல்லி குடுத்தா

சிபி : ம்ம்ம் பக்கத்து வீட்ல இருக்கிற என் சைட்டு

அனி: ம்ம்ம் செல்லுங்க பார்ப்போம்

சிபி : அதான் முன்னாடியே சொல்லிட்டேன்னே!

அனி: இல்லப்பா முழுசா சொல்லுங்க!

சிபி : நான் இப்ப என்ன அரை குறையாவா சொன்னேன்!

அனி: ஸ்ஸ்ஸ்ஸ் ய்பா திருப்பி சொல்லு

சிபி: எனக்கு அந்த பொண்ணு A யில் இருந்துதான் சொல்லி கொடுத்துச்சு z ல் இருந்து சொல்லி கொடுக்கல!!!

அனி: முடியல ராசா? இன்னொரு முறை சொல்லுப்பா

சிபி: ம்ம்ம் இப்படி தெளிவா கேட்கனும்.

A for Aruna B for Banu C for chithra D for Devi E for Eazlil Araci... சரி சரி போதும் போதும் போய் சமத்தா உட்காந்துக்கோ!!!

-------------------------
அனி: அடுத்து யாரு லக்கி யா இங்க வாங்க வாங்க வாங்க

லக்கி முடியாது போ!!!!

அனி: ஆண்டிய அப்படி எல்லாம் சொல்ல கூடாதும்மா வாங்க இங்க

லக்கி முடியாதுன்னா முடியாது!

அனி: ஏன்

லக்கி: என் டவுசர் கிழிஞ்சு போச்சு.

அனி: அப்ப சரி சரி அங்கயே உட்காந்துக்குங்க
-----------------------------


அனி: அடுத்து யாரு டோண்டுவா வாங்க வாங்க !!!

அனி: என்னது இது புது துணியில் இருந்து நீங்க பிரைஸ் லேபிள எடுக்கலையா!

டோண்டு இல்ல அது எல்லாம் லேபிள் இல்ல நான் தான் ஒரிஜினல் கண்டு பிடிக்க நான் போட்டு இருக்கும் நம்பர் tag.

அனி: சரி சரி என்ன சொல்ல போறீங்க!

ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் அதை தான் எப்பவும் சொல்லுவேன்!

இங்கு பேசியது நான் தான் என்பதை என் பதிவில் பின்னூட்டமாக போட்டுவேன். !

அனி :(

-----------------------------------

அடுத்து யாரு செந்தழல் ரவியா வாங்க வாங்க

அனி: என்ன சொல்ல போறீங்க

ரவி: ரைம்ஸ்

அனி: என்ன ரைம்ஸ்

ரவி: டிவிங்கில் டிங்கில் லிட்டில் ஸ்டார்

அனி: யார் சொல்லி கொடுத்தா?

ரவி: கொரிய அழகி

அனி:சொல்லுங்க

ரவி: டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
எங்க கொரியன் பிகர் சூப்பர் பார்!

அனி: ரொம்ப சமத்து போய் உட்கார்ந்துக்கோ

---------------------------------------------

அனி: அடுத்து யாரு ஓசை செல்லாவா வாங்க வாங்க
என்ன சொல்ல போறீங்க!

ஓசை செல்லா: இருங்க ஒரு நிமிசம்

அனி: இது சொல்லவா அங்க இருந்து வந்தீங்க!

ஓசை செல்லா: யோவ் கேமிரா மேன் கேமிராவ அங்க வச்சா படம்
நல்லா விழாது..
ஏய் இப்படி பிடிக்கனும்,
லெப்ட்ல திருப்பு...
இல்லய்யா கொஞ்சம் ரைட்டுல திருப்பு...
இல்லையா ரொம்ப திருப்பிட்ட...
கொஞ்சம் மேல அப்படியே தூக்கு அந்த லைட்டிங் சரி இல்ல பாரு...
இம் இப்பதான் சரியா இருக்கு
இப்ப எடு பார்கலாம்.

அனி: யோவ் நீ சொல்லி கிட்டு இருகிறது கேமிரா மேன் இல்ல செக்யூரீட்டி கையில் துப்பாக்கி வச்சு குறி பார்த்துக்கிட்டு இருக்கான் அவன் கிட்ட போய்...
கேமிரா மேன் இங்க நிக்கிறான் பாரு.

ஓசை செல்லா : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் உணர்ச்சிவேச பட்டுட்டேன்!!

Sunday, August 12, 2007

தமிழ்மணம் நுழைவு தேர்வு

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி மதிப்பெண் 12 X 1= 12

1) நாள் ஒன்றுக்கு 5 பதிவுகளுக்கு மேல் போட்டு தாக்குபவர் யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) செந்தழல் ரவி இ) ஓசை செல்லா ஈ) இவை அனைத்தும்


2) கீழ்கண்டவர்களில் யாருக்கு கராத்தே தெரியும்

அ) நாமகல் சிபி ஆ) பொட் டீ கடை இ)வரவணையன் ஈ) தமிழச்சி

3) பத்து பக்கத்துக்கு மேல் ஒரு பதிவு போடுபவர் யார்?

அ) அபி அப்பா ஆ) யோசிப்பவர் இ) பால சந்தர் கனேசேன் ஈ) உண்மை தமிழன்

4) முதல் பின்னூட்டம் போடுபவர் யார்?

அ) மை பிரண்ட் ஆ) அபி அப்பா இ) G3 ஈ) இலவச கொத்தனார்

5)பின்னூட்டம் மட்டுமே போடுபவர் யார்?

அ)மின்னுது மின்னல் ஆ) மின்னாத மின்னல் இ) மினுக்கும் மின்னல் ஈ) பின்னிய மின்னல்

6) சட்னி வடை யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) பெ.மகேந்திரன் இ) மகேந்திரன் ஈ) எல்லாம் ஒன்றுதான்


7) கருப்பு யார்?


அ) நெல்சன் மண்டேலா ஆ) மைக்கேல் ஜாக்ஸன் இ) முத்தையா முரளிதரன் ஈ) இவர்கள் அனைவரும்

8) அய்யனாரின் கவிதைகளில் அதிக இடம் பெறும் வார்தை

அ) மது ஆ) குறி இ) ராதிகா ஈ) இவையனைத்தும்


9) யாருடைய பின்னூட்டத்தில் அங்கங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும்

அ) டோண்டு ஆ) போலி டோண்டு இ) மகேந்திரன்.பெ ஈ)இவை அனைத்தும்

10) போனில் பேசுவதை அல்லது ரோட்டில் அட்ரஸ் கேட்ட ஒரு நிகழ்வை பதிவாய் போடுபவர் யார்?

அ)தம்பி ஆ) அண்ணன் இ) சித்தப்பா ஈ) மாமா

11) வீனை வாசிக்க போவதாக சொல்லி தமிழ்மணத்தில் இருந்து விடைபெற்றவர்?

அ) ஓசை செல்லா ஆ) ஆசை செல்லா இ) பூசை செல்லா ஈ) தோசை செல்லா

12) யாருக்கு பின்னூட்டம் போட்டால் வீட்டை பற்றி திட்டி பதில் பின்னூட்டம் வரும்.

அ) தாண்டு ஆ) நோண்டு இ) பூண்டு ஈ) யாருக்கும் இல்லை

பொருத்துக 5 x 2 =10

1) அய்யனா------------ கேமிரா

2) கவிதாயினி காயத்ரி--------ஆவி

3) நாமக்கல் சிபி --------- நடணமங்கை,காலி கோப்பை

4) ஓசை செல்லா ------- ரிப்பீட்டேய்

5) கோபி ------- டீ கடை காரன்


கோடிட்ட இடங்களை நிரப்புக 8 X 1 =8

1) பதிவர் பட்டறையில் -----------------என்பவருடைய --------------------காணாமல் போனது.

2) -------------------பார்கிறேன் தொடரை 100 வாரங்கள் எழுதியவர்----------------

3) -------------------சோதனை தமிழ் மணத்தில் பிரபிலம்.

4) பதிவர் சந்திப்பு என்றால் ------------------------கண்டிப்பாக இடம்பெறும்.

5) ---------------------டைய டவுசர் கிழிந்து போனது.

6) திசையதிர ------------விட்டதை பற்றி எழுதியவர் ----------------------------

7) இளவஞ்சியிடம் வகையாக வாங்கி கட்டிகொண்டவர்---------------------------

8) ஜட்டியின் கதை எழுதியவர் ---------------------------

odd வார்தைகள்

1) அ)அய்யனார் ஆ) சுகுனாதிவாகர் இ) தமிழ்நதி ஈ) குசும்பன்

2) அ)நாமகல் சிபி ஆ)ராம் இ) நாகைசிவா ஈ) பெயரிலி

3) அ) அபி அப்பா ஆ)சென்ஸி இ) தம்பி ஈ) ஜெஸிலா

4) அ)கண்மனி ஆ) அபி அப்பா இ) முத்துலெச்சுமி ஈ)மாலன்

விளக்கி எழுதுக

1) பா.க.ச என்றால் என்ன?

2) வ.வா சங்கம் என்றால் என்ன?

3) ப.பா சங்கம் என்றால் என்ன?

4) அ.மு.க என்றால் என்ன?

5) கு.மு.க என்றால் என்ன?