Thursday, July 12, 2007

சிபி vs பால பாரதி

சிபி: என்ன தல


பா.பா: மொட்ட தல

சிபி: வேண்டாம் கடிக்கிறது நிறுத்துக்கிங்க

பா.பா: நீ கவுஜ போடுறத நிறுத்து.

சிபி: சரி நம்ம சண்டைய இப்ப நிறுத்திப்போம் டீவிக்கு பேட்டி கொடுக்க போறத சொல்லாம எப்படி போகலாம்.

பா.பா: சொன்னா எல்லாரும் டீவியா ஆப் செஞ்சுடுவீங்க அதனால தான்.

சிபி: நான் வெள்ளி கிழமை f tv யில் வர போவதை தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டீங்க.

பா.பா: என்னது f tv யிலயா?

சிபி: ஆமா கொங்கு மார்க பனியனுக்கு மாடலா வர போறேன். அத பார்த்து பிரிஞ்சு போன நயண் என் கூட வர போவுதா இல்லையான்னுபாருங்க.
சரி பேட்டியில என்ன கேட்டாங்க.

பா.பா: ஒருத்தன் போன் போட்டு நீங்க பாஸா இல்ல மொட்ட பாஸான்னு கலாய்கிறான்.

ஒருத்தன் நீங்க அடிக்கடி சொல்லுற ங்கொய்யால அப்படின்னா என்னான்னு கேட்கிறான்.

ஒரு பொண்னு போன போட்டு ரோஜாப்பூ, குஷ்பூ தெரியும் அது என்னா வலைப்பூன்னு கலாய்குது.

அப்பொழுது சிபியிடம் இரண்டு பேர் வந்து ஐயா நீங்க சொன்ன மாதிரி போன் போட்டு பாலபாரதிய கலாய்ச்சிட்டோம் பேசிய படி பணத்த கொடுங்க என்று கேட்க .

அதன் பிறகு எடுத்த போட்டோதான் இது...



(ஜெயிக்க போவது யாரு சிபி மேல ஐந்து வச்சா பத்து, பால பாரதி மேல பத்து வச்சா 30)

படம் அனுப்பி உதவிய : மகிக்கு நன்றி

Tuesday, July 10, 2007

மாட்டு வண்டி பயணம்

எங்க வீட்டுல ஒரு கூண்டு வண்டி இருந்தது, அப்ப சினிமா, ஆஸ்பிட்டல் என்று அருகில் இருக்கும் டவுனுக்கு போகனும் என்றால் மாட்டு வண்டிதான் ஒரே வழி. மாட்டு வண்டியில போறது என்றாலே ஒரு தனி குஷி வந்துடும். அதிலும் முன்னாடி வண்டி ஓட்டுபவர் சீட்டுக்கு பக்கத்திலும், பின்னாடி கடைசி சீட்டிலும் இடம் பிடிக்க ஒரு போட்டி இருக்கும், அப்படி என்ன முன் சீட்டுல விசேசம் என்றால் அவரு பக்கத்துல உட்காந்துக்கிட்டு அப்ப அப்ப தார் குச்சி வாங்கி மாட்டை லேசா ஒரு அடி அடித்து விட்டு ஹேய் ஹேய் என்று சத்தம் கொடுத்து கிட்டு உட்கார்ந்தா, நாம என்னமோ ஏரோ பிளேன் ஓட்டுர ஒரு சந்தோசம் வரும்,பின் சீட்டுல என்றால் கீழே விழாம இருக்க ஒரு கம்பி லாக் இருக்கும் அதை பிடித்து கொண்டு உட்காந்து நாம முன்னாடி போக பின்னாடி போகும் மரம் எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கலாம். பருவ பெண்கள் யாரும் வண்டிகுள் இருந்தால் முன்னும் பின்னும் திரை போட படும்.
இப்ப பைக்க ஸ்டார்ட் செய்யிறப்ப பெட்ரோல் இருக்கான்னு பார்கிற மாதிரி வண்டி சக்கர லாக் அச்சாணி இருக்கிறதா என்று சரி பார்பார்கள்.



மாட்டு வண்டியில் இரண்டு உண்டு ஒன்று கூண்டு வண்டி, மற்றொன்று கட்ட வண்டி கூண்டு வண்டிதான் வெளியே போய் வர பயன் படும் கார்,இதன் சக்கரத்தில் ரப்பர வளையம் பொருத்த பட்டு இருக்கும் அதனால் குலுங்கள் கொஞ்சம் குறையும்,கட்ட வண்டி விவசாயத்துக்கு பயண் படும் வண்டி உர மூட்டை, நெல் மூட்டை எல்லாம் அடுக்கி எடுத்து போகும் எங்கள் லாரி.

கூண்டு வண்டி
பயணம் மிகவும் இனிமையாக இருக்கும் மாலை படத்துக்கு போக வேண்டும் என்றால் மதியம் முதல் மாட்டுக்கு தண்ணி காட்டுறது, குளிப்பாட்டுறது என்று ஆரம்பித்து விடும். வண்டியில் உட்காரும் இடத்தில் வைக்கோலை மெத்தை மாதிரி அழகாக நிரவி அதன் மேல் ஒரு ஜமுக்காலம் (போர்வை) ஒன்றை விரித்து வைத்துவிடுவார். வைகோலை அப்படி போடுவதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று உட்காரும் பொழுது மெத்தை மேல் உட்காருவது போல் இருக்கும்,மற்றொன்று நாம் படம் பார்த்துவிட்டு வரும் வரை மாட்டுக்கு சாப்பிட உணவு.

சினிமா தியேட்டரில்(??) இப்பொழுது கார்,பைக் நிறுத்துவது போல் அப்ப மாட்டு வண்டி நிறுத்து என்று பெரிய இடம் இருக்கும். அங்க போய் மாட்டு வண்டியை நிறுத்தலாம், பின் இரவு படம் முடிந்த பிறகு இருட்டில் வண்டி வருகிறது என்று எதிரில் வருபவற்களுக்கு தெரிய ஒரு அரிக்கேன் விளக்கு ஏற்றி கட்டி தொங்க விட்டு பின் பயணம் தொடரும், மாட்டு காலில் கட்டி இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்ற சத்தம் , கரு வேல மரத்தில் இருந்து கத்தும் குறட்டை பூச்சி என்று இரவு பயணம் அருமையாக இருக்கும். மாட்டின் காலில்,கழுத்தில் கட்டும் சலங்கை வெறும் அழகுக்காக மட்டும் கட்டுவது இல்லை இரவு பயணத்தின் போது அது கொடுக்கும் ஜல் ஜல் சத்தம் வண்டி ஹாரனாகவும் உபயோக படும். தியேட்டரில் வாங்கி வைத்த முறுக்கை அப்படியே கொறித்துக் கொண்டு சிலு சிலு என்று குளிர் காற்றில் போனது எல்லாம் மிகவும் சுகமான அனுபவம்.

கட்டை வண்டி
பயணம் கரடு முரடாக இருக்கும், வீட்டில் அறுவடையின் பொழுது நெல் மூட்டைகளை வண்டியில் அடுக்கி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு வந்தது, பள்ளி கூடம் போய்விட்டு வரும் பொழுதுரோட்டில் போகும் யார் வீட்டு கட்டை வண்டியிலாவது தலையில் மாட்டி வரும் ஜோல்னா பை புத்தக மூட்டையைவண்டியில் போட்டு விட்டு வண்டி பின்னாடி கொஞ்ச தூரம் தொங்கி கொண்டு சென்றது,பொங்கல் சமயத்தில் கட்டை வண்டி கட்டிக்கிட்டு போய் தாத்தா வீட்டுக்கு மாமா வீட்டுக்கு சித்தப்பா வீட்டுக்கு என்று எல்லாருக்கும் கரும்பு வாழைதார் என்று எல்லாம் வாங்கி கொண்டு வந்தது என்று நிறைய மாட்டு வண்டி பயனங்கள் சுகமான அனுபவங்கள்,இப்பொழு ஊரில் எல்லாத்துக்கும் டிராக்டர், மினி லோடு வண்டி என்று மாட்டு வண்டியின் தேவையை குறைத்து விட்டது.

வண்டி ஓட்டுபவர் குரலுக்கு மாடு அப்படியே கட்டுபடும் அதட்டி ஹய் ஹய் என்றால் ஓட்டம் பிடிக்கும், மூக்கனாங் கயிறை லேசாகஇழுத்து ஹோ ஹோ ஹோ என்றால் அப்படியே நிற்க்கும் பிரேக் பெயிலியர் எல்லாம் கிடையாது.

மாட்டு வண்டியின் பாகங்கள்:

அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

தார் குச்சு: மெலிய மூங்கில் கம்பில் ஊசி ஆனி அடித்து வைத்து இருப்பார்கள் மாடு மெதுவாக போகு பொழுது லேசாக ஒரு குத்து குத்துவார்கள்.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

Monday, July 9, 2007

விஜயகாந் சொக்க தங்கம்...

நான் இதை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன், நீங்களும் அது போல் சிரிக்க இதை கிளிக் செய்யவும்.

http://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

http://www.youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

http://www.youtube.com/watch?v=ypGI3NecLc0&search=balayya

http://www.youtube.com/watch?v=WMJ_y936XoU&search=balayya

குறிப்பு : எனக்கு மிகவும் பிடித்தது நான்காவதாக உள்ள லிங்க் தான். இதை பக்கத்தில் யாரையும் வைத்துகொண்டு பார்க்கவும் தனியாக பார்த்து சிரிக்கும் பொழுது யாரும் நம்மை ஒரு மாதிரியாக பார்க்க வாய்ப்பு இருப்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவும்.

Thursday, July 5, 2007

அய்யனாரின் மகிமை

இது நம்ம அய்யனாரின் மகிமை. நம்ம தம்பியும், காயத்ரியும் அழுது புரண்டு கேட்டுக்கிட்டதால் அவரின் மகிமையை உங்களுக்கு உனர்த்த கடமை பட்டு இருக்கிறேன்..
இந்த படம் கவிதை சொல்லும் முன்பு:

பொம்மை: யப்பா யாருப்பா நீ


அய்யனார்: நான் தான் அய்யனார்

பொம்மை: என்ன கிண்டலா அய்யனார் என்றால் சிலையாக தானே இருக்கனும்...

அய்யனார்: அட போய்யா நீ வேற நான் மண் சிலையாக எல்லாம் இருந்து இருக்கிறேன்.

பொம்மை: சரி என்ன செய்யுறே...

அய்யனார்: தனிமையின் இசைன்னு வலை பதிவு ஒன்னுல கவிதை எழுதிக்கிட்டு இருக்கேன்.

பொம்மை: எங்க ஒரு கவிதை சொல்லு பார்கலாம்

அய்யனார்: இப்ப லேட்டஸ்டா

குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின் மீது
படிந்திருக்கும் புனிதங்களைஎதைக்
கொண்டழிப்பதெனத் தெரியவில்லை

இந்த படம் கவிதை சொன்ன பிறகு

அய்யனார்: அடச்சே எங்கப்பபா இங்கதானே நின்னுக்கிட்டு இருந்தானுங்க....

அசரி: கொடுத்த வச்ச பொம்மைங்க ஓடி போச்சு...பாவம் வலை பதிவர்கள்...

Wednesday, July 4, 2007

கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்

கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்
கும்மியடிக்கும் பதிவர்கள், நல்ல அனானிகள் மற்றும் கும்மியை விரும்பும் பதிவர்கள் ஆகியோரின் பேராதரவோடு
நேற்று முதல்
இனிய உதயம்
கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்
இங்க வாங்க கும்முங்க

Tuesday, July 3, 2007

பார்க்க சிரிக்க

மலேசியாவில் இருக்கும் நண்பனின் போட்டோவில் நான் செய்த குசும்பு, இதை அவன் மிகவும் ரசித்தான், அது உங்களுக்காக... எதை வைத்து அவனை கிண்டல் செய்வோம் என்பது உங்களுக்கே பிறகு புரியும்...


இது காலையில் டிபன் சாப்பிட (மேய) போனப்ப எடுத்தது...ம்ம்ம் என்னத்த இருந்தாலும் நம்ம ஊரு தென்னை மட்டைய போல வருமா?


ம்ம்ம் இது பாத்திர கடைக்குள்ள புகுந்தா பழமொழி இருக்கு, ஆனா இது ஹோட்டல் என்ன சொல்லுறது???? ம்ம்ம ஊர்ல கோவிலுக்கு முன்னாடி நிறுத்தி வைப்பாங்க ஆனா மலேசியாவில் கடை போல...
அட அங்க சாமிக்கு பின்னாடியும் நிறுத்திவச்சு இருக்காங்கப்பா!!!

ம்ம்ம ஊர் சர்கஸ்ல சைக்கிள் ஓட்டும், மலேசியாவில் டேபிள் டென்னிஸ் போல...


இது ஆபிஸ்ல வேலை செய்யும் பொழுது நண்பன் எடுத்தது, சாரி முழுவதும் கவர் பண்ண முடியல...


டேய் குசும்பா என்ன வச்சு காமெடியா செய்யுற உன்ன தூக்கி போட்டு மிதிக்காம விடமாட்டேன்...



Sunday, July 1, 2007

இது எப்படி!!! உங்கள் பார்வைக்கு

கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் ...(இது நான் தூங்கும் பொழுது விடும் குறட்டை) இப்ப காயத்ரி என்ன செய்யுறாங்க எனக்குள் ஒரு கவிஞன் குப்புற படுத்து தூங்குறானான்னு டெஸ்ட் செய்யுறாங்க. ஆனா அவன் மல்லாக்க படுத்து தூங்குகிறான் (அப்ப அவன் கவிஞனா இல்லையா அத அவர்கள் முடிவுக்கே விட்டுவிடுவோம்???) அவுங்க எதுக்கும் அவன எழுப்பி கிளாஸ் எடுக்குறாங்க.( சீசீ...அந்த கிளாஸ் இல்லப்பா) இது வேற படிப்பு சம்பந்த பட்டது...

அதன் பிறகு அவனிடம் நிறைய மாற்றம்...

கவிதாயினி காயத்ரி அவர்கள் ஆதரவுடனும் , சிபி, கீழ்மத்தூர் எக்ஸ்பிரஸ் மகியின் ஆசியுடனும், மேலும் அய்யனார், இளா, குருட்டு புலி இராம், மின்னல்
வாழ்த்துகளுடன் இதோ ஒரு அரிய படைப்பு...

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் சென்னை
அம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு சென்னை
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்

செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் சென்னை
வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள்

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் சென்னை
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள்

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் சென்னை
இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர்

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் சென்னை
கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்

சும்மா கிடந்த என்ன சிபியும், மகியும் எழுப்பி விட்டுட்டாங்க... திட்டுகள் குட்டுகள் எல்லாம் அவர்களுக்கே சமர்பனம்...காயத்ரியும் திட்டனும் போல ஆசையா இருந்தா
நீங்க திட்டலாம் அதையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.