Tuesday, February 23, 2010

கோபிநாத்துடன் ஒரு இனிய மாலை பொழுது

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழாவுக்கு "நீயா? நானா?" கோபிநாத் அவர்களை சிறப்புவிருந்தினராக அழைத்துவந்தால் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததோடு அல்லாமல் அவரை அழைத்துவர பலவித தடைகளையும் சிக்கல்களை சமாளித்து அழைத்து வந்த அமைப்பின் தலைவர் அண்ணாச்சி ஆசிப் மீரானின் எதிர்பார்ப்பை அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக நிறைவேற்றினார் என்று சொல்லலாம்.

நீயா? நானா? ஸ்டைலில் ஒரு டாக் ஷோ அதுக்கு செலக்சன் என்று பலகட்டமாக நடைப்பெற்றதில் அடியேனும் அதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. வியாழக்கிழமை இரவு 7.30க்கு தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. அதன் பிறகு ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன்,கஞ்சா கருப்பு ஆகியோரின் நிகழ்ச்சிகள் பின் அமைப்பின் ஆண்டுவிழா மலர், நினைவு பரிசுகள் போன்றவை எல்லாம் முடிந்து கோபி அவர்களின் நிகழ்ச்சி ஆரம்பம் ஆக மணி 10.30 ஆனது, இதற்கு முன்பு நடந்த ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் எல்லாம் நேரம் ஆக ஆக கூட்டம் கலைந்துவிடும், ஆனால் முதல் முறையாக நிகழ்ச்சி 12 மணிக்கு முடியும் வரை அனைவரும் இருந்தது கோபிநாத் அவர்களின் பேச்சை கேட்கதான் என்ற பொழுது ஆச்சர்யமாக இருந்தது. 1200 பேர் அமர்ந்து பார்க்க கூடிய அரங்கில் கிட்டத்தட்ட ஒரு 300 பேர் இடம் இல்லாமல் நின்று கொண்டு இருந்தார்கள்.
(கோட்டு போட்டு இருக்கிறவர் ஆசிப், அருகில் இருப்பவர் யாருன்னு பின்னூட்டம் போடுபவர்களுக்கு அண்ணாச்சி சிறப்பு பரிசு கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.)


டாக் ஷோவின் தலைப்பு வெளிநாட்டு வாழ்க்கை சுவையானதா? சுமையானதா? இந்த பக்கம் 10 பேர் அந்த பக்கம் 10 பேர். நான் இருந்தது சுவையானது என்ற பக்கம். அருகில் அமர்ந்து இருந்த ஜெஸிலாவிடம் என்ன ஜெஸிலா ரொம்ப ஸ்டைலா நான் கால் ஆட்டிக்கிட்டு உட்காந்து இருப்பது போல இருக்கான்னு கேட்டேன் அவுங்களும் ஆமா என்றார்கள் அப்ப பயத்தில் கால் நடுங்குவது போல இல்லையே என்று பேசிக்கிட்டு இருந்தேன்,கோபிநாத் ஒரு பதினைந்து நிமிடம் பேசிய பிறகு, எங்க போனாலும் பெண்கள் பர்ஸ்ட் என்று ஆரம்பிக்கிறார்கள்நாம் சேஞ்சுக்கு ஆண் பேசட்டும் என்று சொல்லி முதன் முதலில் பேச சொன்னது என்னை. அவ்வ்வ்வ்வ்வ்.


நானும் ரொம்ப சீரியஸாக எங்கிருந்தாலும் வேலை பார்க்கனும் கஷ்டப்படனும் ஆனா வெளிநாட்டில் இருந்தா அந்த வாழ்கை சுவையானதாக இருக்கும் ஏன்னா, களைப்பா பீல் செய்யுறப்ப திரும்பி பார்த்தா பிலிப்பைனி, அந்த பக்கம் திரும்பினா லெபனான், எக்கி பார்த்தா ரஸ்யா, அமெரிக்கா என்று விதவிதமான பெண்கள் நம்மை சுற்றி இருக்கும் பொழுது வெளிநாட்டு வாழ்கை எப்படியா சுமையா இருக்கும் என்றேன்? அதன் பிறகு நான் பேச நினைத்த பொழுது எல்லாம் அண்ணாச்சி நீ பிலிப்பைனியை சைட் அடிக்கிறவன் நீ பேசாத, எங்க கஷ்டம் உனக்குபுரியாது என்று என்னை அடக்கிவிட்டார். (சைட் அடிப்பதில் என்ன கஷ்டமோ?).


அண்ணாச்சி என்னை பேச விடாமல் தடுத்ததால் நான் அங்கு பேச நினைத்தது இங்கே "குடிக்கிற டீ சுவையா இருக்கவே நிறம்,சுவை,திடம் என்று மூன்று தேவை படுது, வாழ்கையும் சுவையா இருக்க நிறம் முக்கியம், அதாவது "கலர்". வெளிநாட்டு வாழ்கை மிகவும் சுவையானது! ஏன்னா இங்க வாழ்கை ரொம்ப "கலர்"fullனதுன்னுசொல்றாங்க. ஊரில் இருந்தோம் என்றால் வாழ்கையில் ஒரே ஒருகலர்தான் இருக்கும், அதிகபட்சமாக வேறகலர் பார்க்கனும் என்றால், ஆந்திரா,பெங்களூர்,கேரளான்னு போகனும். அப்படியே கேரளா போனாலும் அங்க இருப்பது எல்லாம் ஒரிஜினல் கலரான்னு கேட்டா, இல்லை. ஏன்னா அங்கிருந்த சூப்பர் கலர் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி இங்க துபாயில் தான் இருக்கு.நம்பிக்கை இல்லை என்றால் ஒணம் அன்னைக்கு என் கூட வாங்க காட்டுறேன். பார்த்ததும் இனி எந்தன் நாடுகேரளா, எந்தன் சீப் மினிஸ்டர் அச்சுதானந்தன் என்று சொல்லாம இருக்கனும்.


இங்கிருந்து போட்டோஸ் எடுத்துக்கிட்டு ஊருக்கு போனப்ப ஒரு போட்டோவில் ஒரு பக்கம் தெரியிரமாதிரி ஒரு லெபணான் பெண்ணு இருந்துச்சு அதை பார்த்துட்டு மச்சி இது மாதிரிதான் அங்க பொண்ணுங்க இருக்குமா, என்றான் அவனிடம் லெபணான் பெண்ணின் அழகை எப்படி சொல்வதுன்னு தெரியாம மச்சி நம்ம ஊரில் சூப்பர் பிகரு எதுன்னு கேட்டேன், அவன் ஐஸ்வர்யா ராய் என்றான். ஒரு பத்து பதினைஞ்சு ஐஸ்வர்யா ராய் சேர்ந்த பொண்ணு மாதிரி இருக்கும் அந்த ஊரு அட்டுபிகரு என்றேன், அப்படியா அப்ப அந்த ஊரு சூப்பர் பிகரு எப்படிஇருக்கும் என்றான், அவனிடம் அது சொல்வது குருடனுக்கு கொக்கு எப்படி இருக்கும் என்று சொல்வதுக்கு சமம் என்று முயற்சியை விட்டுவிட்டேன்.இப்படி நாம நினைச்சாலும் பார்க்கமுடியாத பல கலர்கள் நம்வாழ்கைக்கு சுவையூட்டிக்கிட்டு இருக்கு இங்க, இதை எல்லாம் ரசிக்காம வாழ்கை சுமையா இருக்குன்னு சொல்ற உங்களை எல்லாம் நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு."


********************
ஆண்டுவிழா நிகழ்ச்சியில் என்னை கவர்ந்தவை
* ஆசிப் & ஜெஸிலா அவர்களின் ஆங்கிலம் கலக்காமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.
* கீழை ராசா செய்திருந்த வீடியோ கிளிப்பிங்ஸ்
* "அச்சம் அச்சம் இல்லை" என்ற பாட்டுக்கு சின்ன சின்ன குழந்தைகள் ஆடிய நடனம், அந்த நடனத்தின் சிறப்பே சின்ன சின்ன தவறுகள் அந்த குழந்தைகள் செய்வதும், அதை பின்னாடி ஆடும் குழந்தையை பார்த்து திருத்திப்பதும். அத்தனன அழகு. (மேடையில் ஜெஸிலா சொன்னது, குத்துபாட்டுக்கு குழந்தைகளை ஆடவிடுவது எங்கள் அமைப்பில் பழக்கம் இல்லை என்ற பொழுது எழுந்த கை தட்டல்)
* செந்தில்வேலன் மனைவி வடிவமைத்திருந்த ஆண்டுவிழா புத்தகத்தின் அட்டைப்படம்.

* கமல், கவிக்கோ,சிவக்குமார்,அப்துல்ஜப்பார் ஆகியோர் அமைப்பினை வாழ்த்தி பேசி அனுப்பியிருந்த வீடியோ கிளிப்பிங்ஸ்.


சிலபேரை டீவியில், சினிமாவில் பார்க்கும் பொழுது மனசில் ஒரு பிம்பம் இருக்கும் நேரில் பார்த்ததும் அது சுக்கு நூறாக உடைந்துவிடும், ஆனால் கோபிநாத் அவர்களின் பேச்சும்,பழக்கமும் அவர்மேல் இன்னும் மதிப்பை கூட்டிவிட்டது. பேச்சு வாக்கில் அண்ணாச்சி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டதுக்கு, இன்னும் கல்யாணம் ஆகவில்லைவரும் ஏப்ரலில் கல்யாணம் என்பதை செம காமெடியாக சொன்னார்.


உங்கள் நிகழ்ச்சிக்கு சீப் கெஸ்டாக வந்திருந்த செல்வேந்திரன் அண்ணாச்சியின் ஊர்காரர் நல்ல நண்பர்கள் என்றேன், செல்வேந்திரனின் ஒரு கவிதையை படித்துவிட்டு மிகவும் இம்ரஸ் ஆகி சீப் கெஸ்டாக கூப்பிட்டதாக சொன்னார். கவிதை படிச்சா எல்லாம் தெரிச்சு ஓடுவானுங்க இவரு கவிதைய படிச்சு கூப்பிட்டு இருக்கார் ஒருவேளை கவிதை புரியிர மாதிரி கவிதையா இருக்குமோ?.
ஒருமாதத்துக்கு மேலாக தூக்கம், ஓய்வை இழந்து வேலை செய்த ஆசிப், ஜெஸிலா ஆகியோருக்கு நன்றிகள்.

51 comments:

said...

செல்வேந்திரனின் ஒரு கவிதையை படித்துவிட்டு மிகவும் இம்ரஸ் ஆகி சீப் கெஸ்டாக கூப்பிட்டதாக சொன்னார். கவிதை படிச்சா எல்லாம் தெரிச்சு ஓடுவானுங்க இவரு கவிதைய படிச்சு கூப்பிட்டு இருக்கார் ஒருவேளை கவிதை புரியிர மாதிரி கவிதையா இருக்குமோ?.

............குசும்பு!!! :-)

said...

கலக்கல் பாஸ் !


இன்னும் பெரிய பெரிய லெவல்ல,- பயத்துல காலை ஆட்டாம - பர்பெக்டா பேசி பட்டைய கெளப்புங்க பாஸ்! :)

said...

supper........

said...

அருமையான பகிர்வு

said...

கலக்கல்ஸ் அண்ணா.......

:-)

said...

ரபிபெர்னாட் போல கோபிநாத் முகத்திலேயும் பொதுவான தமிழர் (எங்கேயோ பார்த்தது போல் இருக்கே என்னும்) அடையாளம் தெரிவதாலும், திறமையாக தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பேசுவதால் உடனேயே பிரபலம் ஆகிவிட்டார்.

said...

//அண்ணாச்சி என்னை பேச விடாமல் தடுத்ததால் நான் அங்கு பேச நினைத்தது இங்கே //

அங்க இருந்தவங்கள அண்ணாச்சி காப்பாத்திட்டாரு. எங்கள யாரும் காப்பாத்தாம போய்ட்டாங்களே? அவ்வ்வ்

:-)

said...

நல்ல தொகுப்பு தலைவரே.

said...

நானும் ஒரு முறை நீயா நானாவில் கலந்து கொண்டேன். நேரில் பார்க்கும் போது தான் கோபியின் அறிவின் விசாலம் தெரிகிறது. தொலை காட்சியில் பார்க்கும் போது அல்ல.

மேலும் இது போன்ற நிகழ்ச்சியில் பல முறை பேச நினைத்ததை பேச முடியாமல் போவதும் நடக்கவே செய்கிறது

said...

குவைத்திலும் இவரின் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் விறுவிறுப்பாக இல்லை.

ஆசிப், குசும்பன், ஜெஸிலா மற்றும் நண்பர்களின் கூட்டணியினால்தான் இந்நிகழ்ச்சி சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

பின்குறிப்பு: வட இந்திய பெண்களை குசும்பன் அதிகம் பார்க்கவில்லை போல

said...

மத்திய தரைகடல் நாடுகளில் உள்ள பெண்கள் அழகு தான். இல்லெயென்று சொல்லவில்லை. ஆனால் ஆபத்தான அழகு என்பது குசும்பனுக்கு தெரிய வாய்ப்பில்லை. பழகி பார்க்கவும்.

said...

குசும்பு டச்சே இல்லையே

said...

//ஒருமாதத்துக்கு மேலாக தூக்கம், ஓய்வை இழந்து வேலை செய்த ஆசிப், ஜெஸிலா ஆகியோருக்கு நன்றிகள்.//

என்னுடைய நன்றியும்..
:)

said...

//வெளிநாட்டு வாழ்க்கை சுவையானதா? சுமையானதா?//

இது ஒரு சுமையான சுவை தல..

said...

அந்த வீடியோ தொகுப்பையும் சீக்கிரம் வெளிவிடுங்க தல.....

said...

குசுமபரே மாட்னீரூ....

உங்க கண்ணு எங்க மேயுது??????

நாளைக்கு கார்ட்டூன் கமெண்ட்ஸ் ரெடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

said...

போட்டோல இருக்கறவரு...யூத்தா இருக்கறாரே... கேபிள் சங்கர்... சரியா???

said...

குசும்பரே! லெபனான் பொண்ணுங்க குறைந்தது ஏழு, எட்டு கோட்டிங் மேக் அப் போட்டு இருப்பாளுங்க. மேக் அப் எடுத்துட்டா உங்களுக்கு அடையாளமே தெரியாது. அவளுங்கள போய் ஐஸ்வர்யா ராய் கூட, ரொம்ப ஓவர் ஆமா. என்ன இருந்தாலும் நம்ம தமிழ் பொண்ணுங்க மாதிரி வருமா? இயற்கை அழகு.
உம்மை பிலிப்பினா பொண்ணுங்க கூட உக்கார வச்சி அவங்க சாப்பாட்டை சாப்பிட வைக்கணும்.

அழகு என்பது பார்க்கும் கண்களை பொறுத்து உள்ளது. ( நாங்களும் தத்துவம் சொல்வோம்ல .... எப்பூடி!)

said...

ஜேக் சொல்வதை ஆதரிக்கிறேன். ப்யூட்டி பார்லர் போகாத ஒரே ஒரு லெபனான், சிரியா, பாலஸ்தீன மற்றும் அரபு நாட்டுபெண்களை குசும்பனால் காண்பிக்க முடியுமா?

சவால் விடுகிறேன்

said...

சுவையான தொகுப்பு குசும்பன்.. நல்ல அனுபவமாய் இருந்திருக்கும்.

அந்த "நீயா நானா" விஜய் டிவியில் வருமா?

said...

//அந்த "நீயா நானா" விஜய் டிவியில் வருமா?//

வர்ரூம் ...ஆனா....வர்ராது......

said...

//முதல் முறையாக நிகழ்ச்சி 12 மணிக்கு முடியும் வரை அனைவரும் இருந்தது //

கோபிநாத்தின் பேச்சு ஆழுமை அனைவரையும் கட்டிப்போட்டது என்பது தவிர்க்கயியலாத உண்மை.. நான் அவருடைய தீவிர ரசிகன்

நல்ல தொகுப்பு

said...

ஹஹஹஹ லெபனான் கலர் பத்தி சொன்னது செம டாப்பு...தல

//ஆசிப், ஜெஸிலா ஆகியோருக்கு நன்றிகள்.//
நானும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

said...

பதிவு "சுவையானதா? சுமையானதா?" :))
சுவையானது.

said...

எல்லோருடைய உழைப்பையும் சொல்லும் உங்கள் உழைப்பைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டு தான் ஆகணும் குசும்பன், இந்த நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால் உங்களின் உழைப்பும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை...அதை அண்ணாச்சியும் அவ்வப்போது குறிப்பிட்டே உள்ளார்...வாழ்த்துக்கள்

said...

அடுத்து நெய்க்காரன்பட்டிக்கு வேலை மாற்றல் உத்தரவு விரைவில் வரும் குசும்பன். ரெடியாக இருக்கவும்.

(ஃபிகர் பற்றி சொல்லி கடுப்பேத்துறயா? இருடி..)

said...

நன்றி சித்ரா!

நன்றி ஆயிலு

நன்றி கலை

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி அகல்விளக்கு

நன்றி கோவி, அவருக்கு வயது 34தானாம்
நம்பவே முடியவில்லை!

நன்றி வரதராஜலு

நன்றி ஆதவா

நன்றி மோகன் குமார், என்ன தலைப்பில் கலந்துக்கிட்டீங்க?


நன்றி மஞ்சூரார், வட இந்திய பெண்கள் வெளுப்பாக இருக்கிறார்களே
தவிர முகத்தில் அழகு இல்லை:) ஏகபத்தினி விரதன் இந்த வாங்க
பழகலாம் சமாச்சாரமே கிடையாது!

KVR சித்தப்பு டச் குட் டச்சா பேட் டச்சா?

நன்றி கண்ணா

கார்க்கி கண்ணு மேயலாம், மனசுதான் மேய கூடாது. வித்தியாசம்
புரியுதா?:)

அசோக் உம் கண்ணை தயவு செய்து யாருக்கும் தானம் செஞ்சுடாத
ராசா! புண்ணியமா போவும்!

ஜாக் அக்கரைக்கு இக்கரை பச்சை, தமிழ் பெண்கள் அழகு இல்லைன்னு
எங்கயாச்சும் சொல்லி இருக்கேனா? எப்பவும் அழகுன்னா கேரளாதான்
அதுக்கு நிகர் எதுவும் இல்லீங்கோ!

மஞ்சூரார் ஏன் ஏன் இப்படி பொங்குறீங்க? ஏதும் லெபணான் அல்வா வாங்கிட்டீறா?

புபட்டியன் வராதுங்கோ:)

அபுஅஃப்ஸர் நன்றி

நாஞ்சில் நன்றி

நன்றி மாதேவி

நன்றி கீழைராஸா சித்தப்பு புரியுது, நான் ஒன்னும் செய்யாம
இருந்ததே பெரும் உதவின்னு சொல்ல வருகிறீர். போதும்
நிறுத்திக்குவோம்!

ஆதி நெய்க்காரன்பட்டியில் இருந்தாலும் அழகை ரசிக்கலாம்.
இருந்தாலும் உங்களுக்கு எப்படி லெபணான் பெண் அழகை சொல்வது?
ம்ம்ம்ம்

said...

தலைவர் அண்ணாச்சி ஆசிப் மீரானின் எதிர்பார்ப்பை அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக நிறைவேற்றினார் என்று சொல்லலாம்.,///வாங்கின காசுக்கு மேல ரொம்ப கூவிட்டாரா.....

said...

யோவ் விழா பற்றிய பதிவில் என் கவிதைகளையும் ஒரு வாரு வாரலண்ணா உமக்கு தூக்கம் வராதய்யா...?!

சென்ற ஆண்டு விழா மலரில் என்னுடைய கதை இருந்தது :( அற்றைத் திங்கள் புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது.

கோபிநாத் - தனியே புகழ என்ன இருக்கிறது. பேச்சரங்கில் அவர் ஒரு சச்சின்!

said...

முழு வீடியோ எப்போது கிடைக்கும்!?

said...

\\வால்பையன் said...
முழு வீடியோ எப்போது கிடைக்கும்//

Repeat

said...

நம்ம ஆசிப் அண்ணாச்சியோட சேர்ந்து கேடயத்தை பிடிச்சிக்கிடு நிக்கிற ஆளு யாருண்ணே.

said...

நல்ல கலர்புள்ளா எழுதியிருக்கீங்க! நிறைய தகவலுடன் வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

said...

\\அடியேனும் அதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. \\

இந்த வருஷம் உங்களுக்கு நிறைய செலவுண்ணே ;)))

said...

\\(கோட்டு போட்டு இருக்கிறவர் ஆசிப்,\\

நல்லவேளை கோட்டுன்னு சொன்னிங்க..;))

said...

\\ஆனால் கோபிநாத் அவர்களின் பேச்சும்,பழக்கமும் அவர்மேல் இன்னும் மதிப்பை கூட்டிவிட்டது. \\

அட எதுக்குண்ணே நமக்குள்ள...நம்ம பெயரை வச்சவுங்க எல்லாம் நல்லா மதிப்பாக தான் இருக்காங்க ;)))

said...

\\பேச்சு வாக்கில் அண்ணாச்சி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டதுக்கு, இன்னும் கல்யாணம் ஆகவில்லைவரும் ஏப்ரலில் கல்யாணம் என்பதை செம காமெடியாக சொன்னார்.
\\\\

இந்த கோபிநாத்துக்கே இப்பதான் கல்யாணாமா!!!!...அப்போ...!!??

said...

அப்புறம் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))

said...

40 சும்மா ஒரு பழைய ஞாபகம் ;;)

said...

குசும்பா, கோபிநாத் மட்டுமல்ல...புதுகையில் பிறந்த எல்லாருமே டேலண்டான ஆட்கள்தான்

;)

said...

appo jeyaram thappa ethuvum sollalle. unga
veetta yarum udaikka mattanga.

http://www.virutcham.com

said...

க.இராமசாமி நன்றி

shabi கூவுவதுக்கு அவரு ஒன்னும் கோழி அல்ல.

செல்வேந்திரன் அண்ணாச்சி இருந்தாலும் முடியலத்துவ புகழ்
கவிஞரை ஏதும் சொல்லாட்டி பதிவு நிறைவடையாதே:)

வால் முழுவீடியோ ஊருக்கு வரும் பொழுதுதான்:)

நன்றி ரோமியோ

நன்றி அக்பர் ஆசிப் அண்ணாச்சிக்கு உங்க அட்ரஸை மெயில் அனுப்பிடுங்க:)

நன்றி மதுரை சரவணன்

கோபி அதில் சில விதிவிலக்குகளும் உண்டு!

அப்துல்லா அண்ணே, தூத்துக்குடியில் இருந்து ஒரு அப்துல்கலாம் தான்!

விருச்சம் என் வீட்டையும் இடிச்சாங்களே:( ரெண்டு மாசத்துக்கு
முன்னாடி ரோட்டை அகலப்படுத்தனும் என்று முன்னாடி கொஞ்சம் இடிச்சாங்க!:(

said...

kusumban, thangaludan pangu kondadhil mahilchi, neengal thaan kusumban endru enakku maedayil theriyadhu, adutha naal thaan theriyum, maedaiylaeyae therinjirundhuchi........... :-) oru intro koduthirupaen "nan RASEEM, panbudan kulumathin theevira vasahan" endru. nanum 2 points thaan paesa mudinjidhu adhuvum gap le kada vetna madri, but any ways, indha maeday aera vaaipu kidaithadhae mikka sandhosam adhum out of 120 candidates.. thanks to ATM

said...

//சேஞ்சுக்கு ஆண் பேசட்டும் என்று சொல்லி முதன் முதலில் பேச சொன்னது என்னை. //

இப்டியா அபசகுணமா ஆரம்பிக்கிறது? :)

said...

//எம்.எம்.அப்துல்லா said...

குசும்பா, கோபிநாத் மட்டுமல்ல...புதுகையில் பிறந்த எல்லாருமே டேலண்டான ஆட்கள்தான்

;)//

இவர் ஒருவரைத்தவிர.. :)

said...

அமீரக தமிழ் மன்றத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

said...

///வால் முழுவீடியோ ஊருக்கு வரும் பொழுதுதான்:)///

Kusumbs - Why don't you upload the video in web... we are waiting for that...

said...

அட கலக்கிருக்கீங்க!

said...

ஹலோ! நான் அன்பு செல்வன் ஐபிஎஸ் பேசறேன். உங்கள தனியா ஒரு நாள் ரூம் போட்டு விசாரிக்கணும். என்ன சொல்றீங்க ஓகேவா?

Anonymous said...

நல்லாதானே போய்கிட்டுருந்துச்சு....?

said...

குசும்பு பதிவு டீ கலரு ,எல்லாமே சுவையாக இருக்கு