நீயா? நானா? ஸ்டைலில் ஒரு டாக் ஷோ அதுக்கு செலக்சன் என்று பலகட்டமாக நடைப்பெற்றதில் அடியேனும் அதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. வியாழக்கிழமை இரவு 7.30க்கு தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. அதன் பிறகு ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன்,கஞ்சா கருப்பு ஆகியோரின் நிகழ்ச்சிகள் பின் அமைப்பின் ஆண்டுவிழா மலர், நினைவு பரிசுகள் போன்றவை எல்லாம் முடிந்து கோபி அவர்களின் நிகழ்ச்சி ஆரம்பம் ஆக மணி 10.30 ஆனது, இதற்கு முன்பு நடந்த ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் எல்லாம் நேரம் ஆக ஆக கூட்டம் கலைந்துவிடும், ஆனால் முதல் முறையாக நிகழ்ச்சி 12 மணிக்கு முடியும் வரை அனைவரும் இருந்தது கோபிநாத் அவர்களின் பேச்சை கேட்கதான் என்ற பொழுது ஆச்சர்யமாக இருந்தது. 1200 பேர் அமர்ந்து பார்க்க கூடிய அரங்கில் கிட்டத்தட்ட ஒரு 300 பேர் இடம் இல்லாமல் நின்று கொண்டு இருந்தார்கள்.
(கோட்டு போட்டு இருக்கிறவர் ஆசிப், அருகில் இருப்பவர் யாருன்னு பின்னூட்டம் போடுபவர்களுக்கு அண்ணாச்சி சிறப்பு பரிசு கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.)
டாக் ஷோவின் தலைப்பு வெளிநாட்டு வாழ்க்கை சுவையானதா? சுமையானதா? இந்த பக்கம் 10 பேர் அந்த பக்கம் 10 பேர். நான் இருந்தது சுவையானது என்ற பக்கம். அருகில் அமர்ந்து இருந்த ஜெஸிலாவிடம் என்ன ஜெஸிலா ரொம்ப ஸ்டைலா நான் கால் ஆட்டிக்கிட்டு உட்காந்து இருப்பது போல இருக்கான்னு கேட்டேன் அவுங்களும் ஆமா என்றார்கள் அப்ப பயத்தில் கால் நடுங்குவது போல இல்லையே என்று பேசிக்கிட்டு இருந்தேன்,கோபிநாத் ஒரு பதினைந்து நிமிடம் பேசிய பிறகு, எங்க போனாலும் பெண்கள் பர்ஸ்ட் என்று ஆரம்பிக்கிறார்கள்நாம் சேஞ்சுக்கு ஆண் பேசட்டும் என்று சொல்லி முதன் முதலில் பேச சொன்னது என்னை. அவ்வ்வ்வ்வ்வ்.
நானும் ரொம்ப சீரியஸாக எங்கிருந்தாலும் வேலை பார்க்கனும் கஷ்டப்படனும் ஆனா வெளிநாட்டில் இருந்தா அந்த வாழ்கை சுவையானதாக இருக்கும் ஏன்னா, களைப்பா பீல் செய்யுறப்ப திரும்பி பார்த்தா பிலிப்பைனி, அந்த பக்கம் திரும்பினா லெபனான், எக்கி பார்த்தா ரஸ்யா, அமெரிக்கா என்று விதவிதமான பெண்கள் நம்மை சுற்றி இருக்கும் பொழுது வெளிநாட்டு வாழ்கை எப்படியா சுமையா இருக்கும் என்றேன்? அதன் பிறகு நான் பேச நினைத்த பொழுது எல்லாம் அண்ணாச்சி நீ பிலிப்பைனியை சைட் அடிக்கிறவன் நீ பேசாத, எங்க கஷ்டம் உனக்குபுரியாது என்று என்னை அடக்கிவிட்டார். (சைட் அடிப்பதில் என்ன கஷ்டமோ?).
அண்ணாச்சி என்னை பேச விடாமல் தடுத்ததால் நான் அங்கு பேச நினைத்தது இங்கே "குடிக்கிற டீ சுவையா இருக்கவே நிறம்,சுவை,திடம் என்று மூன்று தேவை படுது, வாழ்கையும் சுவையா இருக்க நிறம் முக்கியம், அதாவது "கலர்". வெளிநாட்டு வாழ்கை மிகவும் சுவையானது! ஏன்னா இங்க வாழ்கை ரொம்ப "கலர்"fullனதுன்னுசொல்றாங்க. ஊரில் இருந்தோம் என்றால் வாழ்கையில் ஒரே ஒருகலர்தான் இருக்கும், அதிகபட்சமாக வேறகலர் பார்க்கனும் என்றால், ஆந்திரா,பெங்களூர்,கேரளான்னு போகனும். அப்படியே கேரளா போனாலும் அங்க இருப்பது எல்லாம் ஒரிஜினல் கலரான்னு கேட்டா, இல்லை. ஏன்னா அங்கிருந்த சூப்பர் கலர் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி இங்க துபாயில் தான் இருக்கு.நம்பிக்கை இல்லை என்றால் ஒணம் அன்னைக்கு என் கூட வாங்க காட்டுறேன். பார்த்ததும் இனி எந்தன் நாடுகேரளா, எந்தன் சீப் மினிஸ்டர் அச்சுதானந்தன் என்று சொல்லாம இருக்கனும்.
இங்கிருந்து போட்டோஸ் எடுத்துக்கிட்டு ஊருக்கு போனப்ப ஒரு போட்டோவில் ஒரு பக்கம் தெரியிரமாதிரி ஒரு லெபணான் பெண்ணு இருந்துச்சு அதை பார்த்துட்டு மச்சி இது மாதிரிதான் அங்க பொண்ணுங்க இருக்குமா, என்றான் அவனிடம் லெபணான் பெண்ணின் அழகை எப்படி சொல்வதுன்னு தெரியாம மச்சி நம்ம ஊரில் சூப்பர் பிகரு எதுன்னு கேட்டேன், அவன் ஐஸ்வர்யா ராய் என்றான். ஒரு பத்து பதினைஞ்சு ஐஸ்வர்யா ராய் சேர்ந்த பொண்ணு மாதிரி இருக்கும் அந்த ஊரு அட்டுபிகரு என்றேன், அப்படியா அப்ப அந்த ஊரு சூப்பர் பிகரு எப்படிஇருக்கும் என்றான், அவனிடம் அது சொல்வது குருடனுக்கு கொக்கு எப்படி இருக்கும் என்று சொல்வதுக்கு சமம் என்று முயற்சியை விட்டுவிட்டேன்.இப்படி நாம நினைச்சாலும் பார்க்கமுடியாத பல கலர்கள் நம்வாழ்கைக்கு சுவையூட்டிக்கிட்டு இருக்கு இங்க, இதை எல்லாம் ரசிக்காம வாழ்கை சுமையா இருக்குன்னு சொல்ற உங்களை எல்லாம் நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு."
********************
ஆண்டுவிழா நிகழ்ச்சியில் என்னை கவர்ந்தவை
* ஆசிப் & ஜெஸிலா அவர்களின் ஆங்கிலம் கலக்காமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.
* கீழை ராசா செய்திருந்த வீடியோ கிளிப்பிங்ஸ்
* "அச்சம் அச்சம் இல்லை" என்ற பாட்டுக்கு சின்ன சின்ன குழந்தைகள் ஆடிய நடனம், அந்த நடனத்தின் சிறப்பே சின்ன சின்ன தவறுகள் அந்த குழந்தைகள் செய்வதும், அதை பின்னாடி ஆடும் குழந்தையை பார்த்து திருத்திப்பதும். அத்தனன அழகு. (மேடையில் ஜெஸிலா சொன்னது, குத்துபாட்டுக்கு குழந்தைகளை ஆடவிடுவது எங்கள் அமைப்பில் பழக்கம் இல்லை என்ற பொழுது எழுந்த கை தட்டல்)
* செந்தில்வேலன் மனைவி வடிவமைத்திருந்த ஆண்டுவிழா புத்தகத்தின் அட்டைப்படம்.
* கமல், கவிக்கோ,சிவக்குமார்,அப்துல்ஜப்பார் ஆகியோர் அமைப்பினை வாழ்த்தி பேசி அனுப்பியிருந்த வீடியோ கிளிப்பிங்ஸ்.
சிலபேரை டீவியில், சினிமாவில் பார்க்கும் பொழுது மனசில் ஒரு பிம்பம் இருக்கும் நேரில் பார்த்ததும் அது சுக்கு நூறாக உடைந்துவிடும், ஆனால் கோபிநாத் அவர்களின் பேச்சும்,பழக்கமும் அவர்மேல் இன்னும் மதிப்பை கூட்டிவிட்டது. பேச்சு வாக்கில் அண்ணாச்சி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டதுக்கு, இன்னும் கல்யாணம் ஆகவில்லைவரும் ஏப்ரலில் கல்யாணம் என்பதை செம காமெடியாக சொன்னார்.
உங்கள் நிகழ்ச்சிக்கு சீப் கெஸ்டாக வந்திருந்த செல்வேந்திரன் அண்ணாச்சியின் ஊர்காரர் நல்ல நண்பர்கள் என்றேன், செல்வேந்திரனின் ஒரு கவிதையை படித்துவிட்டு மிகவும் இம்ரஸ் ஆகி சீப் கெஸ்டாக கூப்பிட்டதாக சொன்னார். கவிதை படிச்சா எல்லாம் தெரிச்சு ஓடுவானுங்க இவரு கவிதைய படிச்சு கூப்பிட்டு இருக்கார் ஒருவேளை கவிதை புரியிர மாதிரி கவிதையா இருக்குமோ?.
ஒருமாதத்துக்கு மேலாக தூக்கம், ஓய்வை இழந்து வேலை செய்த ஆசிப், ஜெஸிலா ஆகியோருக்கு நன்றிகள்.