இதோ இன்றய தினம் வரை பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் நடந்து வரும் தாக்குதலில் பலியானோர் 500 என்றும் 1000க்கும் அதிகமானோர் காயம்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
பாலஸ்தீனத்தை சுற்றி இருப்பது அனைத்தும் இஸ்லாம் நாடுகள், அங்கே தினம் இறந்து கொண்டு இருக்கும் அனைவரம் சகோதரர்கள் ஆனால் எப்படி இங்கிருக்கும் அரசுகள் அதை வேடிக்கை பார்க்க மனசு வருகிறது என்று தெரியவில்லை.
ஈழத்தில் தமிழன் தாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து 1000 முறை எதிர்கட்சிகூட்டம் நடத்தி ஒன்றும் கிழிக்க முடியாததுக்கு 101 காரணம் இருக்கிறது, பதவியை காப்பாற்றனும், நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும், கண்கள் அடிக்கடி பனிக்கும் பொழுது கண்ணை தொடைக்கனும், காங்கிரசை அனுசரிச்சு போகனும் இப்படி பல காரணங்கள் இருக்கிறது அதனால் தான் ஈழத்துக்காக நம்மால் ஒன்னும் செய்யமுடியாமல் போய்விட்டது.
பிரணாப் முகர்ஜி அங்கு போய் இருந்தால் சிங்கள டாங்கிகளுக்கு முன் தலை வைத்தாவது சண்டையை நிறுத்தி இருப்பார் ஆனால் நம்முடைய போதாத நேரம் அவர் அங்கு போவதற்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை.
ஆனால் இந்த பாழாப்போன அரபு நாட்டு ராஜாங்களுக்கு ஒன்னும் பிரச்சினையே இல்லை எதிர்கட்சி இல்லை, எதிர்த்து குரல் கொடுக்க ஆள் இல்லை, உலகமே எரிபொருள்களுக்கு தங்களைதான் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொழுது. பாலஸ்தீனத்தில் தினம் சாகும் சகோதர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க திராணி இல்லாத அரபுதேசங்களை என்ன சொல்வது... இன உணர்வு கூட வேண்டாம் மனிதாபிமான உணர்வு கூடவா இல்லாமல் போய்விட்டது.
பாலஸ்தீனத்தில் தாக்குதலை நிறுத்தி அங்கு அமைதியை நிலை நாட்டும் வரை எண்ணெய் பேரல்கள் உற்பத்தி குறைக்கபடும் என்று சொன்னால் ஒரு தீர்வு சீக்கிரம் கிடைக்காதா?
********************************************************************
அம்மாவின் உடல் நிலைக்காக பிராத்தனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, நாளை சென்னை வருகிறேன். வந்ததும் தொடர்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்கிறேன். மற்றவர்கள் தங்கள் நம்பரை மெயில் அனுப்பினால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்!
Sunday, January 4, 2009
Subscribe to:
Posts (Atom)