Saturday, June 30, 2007

லொள்ளு பாட்டு...

பாட்டு: பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை...
லொள்ளு: யப்பா அந்த மத்தாப்பூவ பத்த வச்சு இவன் காதுல சொறுவு நல்லா கேட்கட்டும்.


பாட்டு: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது..
லொள்ளு: சிட்டுக்கு சிறகு முளைக்காம கொம்பா முளைக்கும்..


பாட்டு: என் சமையல் அறையில் நீ உப்பா சர்கரையா?
லொள்ளு: இரண்டும் இல்ல குப்ப தொட்டி...

பாட்டு: பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்..
லொள்ளு: ஏன் புடிச்சு தள்ள வசதியாக இருக்குமா?

பாட்டு: சுண்ட கஞ்சி சோறுடா, சுலும்பு கருவாடு டா, வாழ மீனு காலு டா...
லொள்ளு: மெனு என்னன்னு கேட்டா இப்படியா மரியாத இல்லாம பேசுவ..

பாட்டு: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..
லொள்ளு: பூவுல தென்றல் ஆடமா டென்டுல்கரா வந்து ஆடுவாரு?

பாட்டு: என்னை முதன் முதலா பார்த்தபொழுது என்ன நினைத்தாய்??
லொள்ளு: "நீ ஒரு லூசுன்னு" அப்பவும் சரி இப்பவும் சரி ஒரே நினைப்பு தான்.

பாட்டு: இளைய நிலா பொழிகிறது....
லொள்ளு: அப்ப மூத்த நிலா எங்க வெக்கேசன் போயிருக்கா?


புஷ் : அப்பா ஏன் அப்பா என்ன லூசா பெத்த...

w.புஷ்: டைட்டா பெத்தா லூசாவுறத்துக்கு டைம் ஆகும் அதானாலதான்..

Thursday, June 28, 2007

கூட்டாஞ் சோறு

அன்று பள்ளி விடுமுறை நான் எனது நண்பர்கள் எல்லாம் எங்க ஊரில் இருக்கும் இடைநிலை பள்ளி கட்டிடத்தில் கூடுவது வழக்கம், அந்த பள்ளி ரொம்ப சின்னதாக சுற்றிலும் மரத்துடன் இருக்கும் அதன் சுற்று சுவற்குள்ளே ஒரு பாழடைந்த ஒரு சின்ன பெருமாள் கோவில், ஐஸ் பாய், ஒளிந்தாகூடு, கபடி, கிட்டிபில், பம்பரம் எல்லாம் விளையாட எங்க விளையாட்டு மைதானம் அந்த பள்ளிகூடம் தான்.


அன்று விளையாட்டு போர் அடிக்கவே எல்லாரும் "கூட்டாஞ் சோறு" செய்வது என்று முடிவெடுக்க பட்டது, முதலில் வெஜ் பிரியாணி செய்யலாம் என்று நண்பன் சக்தி சொன்னான், அதற்கு தேவையான பாத்திரத்தை அவன் எடுத்து வந்துவிடுவதாகவும் அரிசி காய்கரி எல்லாம் காசு போட்டு வாங்கிவிடலாம் பள்ளிகூடத்துக்கு பின்னால் இருக்கும் சந்தில் சமைக்கலாம் என்றான் எல்லாம் சரி என்று சொல்லிவிட்டு கையில் இருக்கும் காசு எல்லாம் போட்டு பார்ததில் அரிசி கூட வாங்க முடியாது என்று தெரிந்தது. டேய் இருக்கிற காசுக்கு தகுந்த மாதுரி ஏதாவது செய்யலாம் என்றதற்க்கு இருந்து யாரோ ஒருவன் சூடுகாய் போடலாம் டா என்றான் நான் அது வரை அப்படி ஏதும் சாப்பிட்டது இல்லை. அதற்க்கு என்ன என்ன வாங்க வேண்டும் என்று பார்த்ததில் முதலில் ஒரு தேங்காய் பிறகு அரைகிலோ வெள்ளம், பொட்டுகடலை, ஏலக்காய் என்று முடிவானது சரி கடைக்கு போகலாம் என்ற போது காசு கம்மியா இருக்கு, எதுக்கு காசு கொடுத்து தேங்காய் வாங்கி கிட்டு "யார்" வீட்டு மரத்தில்லாவது பறித்து கொள்வோம் "திருட்டு தேங்காய்தான் ருசிக்கும்" என்று புது மொழி சொல்ல பட்டது.


சரி முதலில் தேங்காய் பறித்துவிடலாம் பிறகு பறிக்கமுடியவில்லை என்றால் பொருள் எல்லாம் வீனாக போய்டும் என்று சொன்னதால். சரி என்று தேங்காய் திருட கிளம்பினோம், அதில் நிறைய விதிமுறை இருந்தது மரம் சின்னதாக இருக்க வேண்டும் அப்பதான் யாரும் வந்தால் சீக்கிரம் இறங்கி ஓடி போக முடியும்,மரம் இருக்கும் இடம் யாரும் அடிக்கடி வந்து போகாத இடமாக இருக்க வேண்டும், அந்த மரம் தேங்காய் நல்ல முற்றலாக இருக்க வேண்டும்.இப்படி நிறைய விதிமுறைகளை வைத்து கொண்டு மரத்தை தேடி போனோம் ஒரு வழியாக ஒரு தென்னத்தோப்பில் நல்ல மரத்தை கண்டுபிடித்து எல்லாம யாரும் வருகிறார்களா என்று காவல் காக்க ஒருவன் மேலே ஏறி இரண்டு தேங்காய் பற்றித்து போட்டு விட்டு இறங்கும் போடு தலையாறி (ஊர் காவல் காரர்) வர எல்லாத்தையும் அவசரம் அவசரமாக எடுத்து கொண்டு ஓடினோம்,அவரும் துரத்தி கொண்டு ஓடிவர நாங்க வேலிமுல்,நாயுருவி எல்லாம் காலில் கிழிக்க ஓடி வந்து பள்ளி கூடத்தில் பின் புறம் தேங்காயை பதுக்கி வைத்துவிட்டு ஓடிவந்த களைப்பாறினோம்.



தேங்காயை நாங்க கூர்மையான கருங்கல் கொண்டு குத்தி உறித்து கொண்டு இருந்தோம்,இருவர் மட்டும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வந்தனர்.தேங்காயை திருடி விட்டதால் கொஞ்சம் மீதி இருந்த காசுக்கு தேன் மிட்டாய்யும் முறுக்கும் வாங்கி வந்தனர். சாப்பிட்டு கொண்டே "சூடுகாய்" செய்ய ஆரம்பித்தார்கள் சக்தியும், முரளியும். என்ன செய்கிறாகள் என்று அருகில் இருந்து பார்த்து கொண்டு இருந்தேன், முதலில் அந்த தேங்காய் மேல் இருக்கும் குடுமியை பிய்த்து விட்டு அங்கு இருக்கும் மூன்று கண்னில் ஒரு கணில் ஓட்டை போட்டுவிட்டு அதில் வெள்ளம் பொட்டுகடலை ஏலக்காய் எல்லாம் பொடி செய்து அது வழியாக உள்ளே திணித்து கொண்டு இருந்தார்கள் பின் அந்த கண்னை ஒரு குச்சியை வைத்து அடைத்தார்கள்.



காய்ந்த மரத்தில் இருந்து கீழே விழுந்து இருந்த குச்சி அனைத்தையும் பொருக்கி தீயை மூட்டி அதில் தேங்காய்யை போட்டு வாட்டினார்கள், அப்ப அப்ப நடு நடுவே அந்த தேங்காய் தண்ணியில் வெல்லமும் பொட்டுகடலையும் கலந்து இருப்பதால் அது வற்றும் வரை சூடு படுத்த வேண்டும் அதன் பிறகு எடுத்து உடைத்து சாப்பிட்டா!எப்படி இருக்கும் தெரியுமா என்று நாக்கை சப்புகொட்டி காண்பித்தான் ஒரு அரை மணி நேரம் கழித்து தேங்காய் தீ பிடிக்க ஆரம்பித்தது, சரி இனிமேல் இருந்தால் முதலுக்கே(?) மோசம் ஆயிடும் என்று சொல்லி விட்டு தேங்காயை துண்டு சுற்றி எடுத்து கொண்டு பள்ளி கூடம் முன்பக்கம் வந்தோம், வந்து தேங்காயை உடைத்தால் தண்ணி வற்றவும் இல்லை ஒன்றும் இல்லை, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு எங்கே தவறு நடந்தது என்று ஆராய்சி செய்தார்கள் கடைசியாக தேங்காய் முற்றல் இல்லை என்றாகள்,பின் உடைத்து ஆள் ஆளுக்கு பங்கு பிறித்து சாப்பிட்டோம், வெல்லத்தை சாதாரன தேங்காயில் சாப்பிடுவது போல் இருந்தது அப்படி இருந்தும் ஒன்றும் மிச்சம் ஆகவில்லை எல்லாம் காலியாகி விட்டது.

மதியம்வீட்டுக்கு போனால் அம்மா, அப்பா எனக்காக காத்துகொண்டு இருந்தார்கள் போனவுடனே கை,கால கழுவிட்டு வாடா தம்பி சாப்பிடலாம் என்றார்கள் இல்லமா இப்ப வேண்டாம் என்றேன் ஏன் இன்னும் தேங்காய் செறிக்கலையா என்றார்கள்நான் அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்று சமாளிக்க பார்த்தேன் வாய் ஓரத்தில் தேங்கா ஒட்டி இருக்கு பாரு என்றார்கள் நானும் பார்த்தேன் ஒன்னும் ஒட்டி இல்லை பொய் சொல்லி இருக்கிறார்கள் அப்பா என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார். அம்மா அது சரி தேங்காய் ஏது என்று கேட்டுச்சு, ம்ம்ம் அது வந்து வந்து முரளி வீட்டு கொள்ளையில் பறித்து எடுத்து வந்தான் என்றேன்.

அவுங்க எப்படா தம்பி நம்ம தென்னந் தோப்பை அவுங்க வாங்குனாங்க என்று அம்மா கேட்டுச்சு, அப்பா சரி போதும் விடு தம்பி அடுத்தமுறை வேனும்னா சொல்லு நம்ம தலையாரியே பறித்து கொடுப்பான் அவனை பார்த்து ஓடி கை,காலை ஒடிச்சுக்காதே என்றார்.அடுத்த ஒரு வாரம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள், என்ன சின்ன பிள்ளை நம்ம தோப்புல தேங்கா திருட சொல்லிட்டு நீங்களே காவல் நின்னீங்கலாமே! என்று கிண்டல் செய்தார்கள். அதில் இருந்து சூடுகாய் என்றாலே தென்னாலி ராமன் பூனை போல் ஓடிவிடுவேன்.

Monday, June 25, 2007

இளா


நம்ம இளா இப்ப என்ன செஞ்சு இருக்காருன்னா இப்ப கோடை காலம் தண்ணி இல்லை அதனால் விவசாயம் பார்க்க முடியாது அதனால் கொத்தனார் வேலைக்கு (இலவச கொத்தனார் ஜாக்கிரதை போட்டிக்கு ஒரு ஆள்). போய் இருக்கிறார் அங்கு வளைஞ்சு நெளிஞ்ச சுவர் கட்டும் வேலை அதுக்கு கலவையை இருட்டுல போடசொல்லி இருக்கிறார்கள் அதனால் பயந்து போனேன் என்பதை முதல் இரண்டு பத்திகளில் சொல்லி இருக்கிறார்.

இப்ப மூனாவது பத்தியில என்ன சொல்ல வருகிறார் என்றால் அங்கு வேலை செய்ய முடியாமல் அங்கிருந்து தப்பித்து மறைந்து மறைந்து ஓடுகிறார், என் முடிய கூட புடிச்சு சிறை வைக்க முடியாது என்று வேறு சவால் விடுகிறார்.

கடைசியா என்ன ஆச்சின்னா இளாவ புடிச்சு...இருட்டு அறைக்குள்ள போட்டு அடைச்சிட்டாங்க அங்க ரூம்ல புகையவேறவிட்டுடாங்க...(வாழபழம் பழுக்க வைக்க செய்வாங்களே அதுமாதிரி) ...இவரு பிஞ்சு அதனால் வெதும்பிகிறேன் என்கிறார்.

பெட்லேயே படுத்து பழக்க பட்ட இளா...கோரை பாயில் படுத்டு இருக்கிறேன் என்கிறார். (பாய் மஞ்சலாக இருக்கும்),யாராவது வந்து காப்பாற்ற மாட்டாங்களா என்று ஏக்கமாக விடியலை நோக்கி இருக்கிறார்...யாரோ உவமை என்கிறவுங்க (ஆணா பெண்ணா என்று தெரியவில்லை) அவர்கள் காப்பாற்றுவதாக சொல்வது பொய்யோ என்று சந்தேகம் வேறு படுகிறார்...

நீதி: ஒன்னும் இல்ல (நான் எதுவும் இங்க சொல்லவில்லை)

புணர்வென்னும் கலவையில்
சுருக்கமான நெளிவுகளுக்குள்

நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே கலைந்து
போகிறேன் வக்கிரத்தை!

புணர்வென்னும்
கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா உவமை?


இளா கவிதையும் அதன் விளைவும்

இளா வேண்டாம் இளா சொன்னா கேளு இளா இளா வேண்டாம் இளா சொன்னா கேளு இளா (வேட்டையாடு விளையாடு கமல் டயலாக் இல்லீங்க)
குசும்பனின் கதறல் ...ஏன் என்று தெரியவேண்டுமா????
இது நான் கண்மணி அக்காவின் குட்டிஸ் ஜங்சனில் அடுத்த டிரைனுக்காக காத்திருக்கும் பொழுது அக்கா கொடுத்த கிலுகிலுப்பையுடன்...(அக்கா உங்க ஜங்சனில் டிரைன் வரும் தானே????)
கவிதைய படிக்கனுமா?????




இது மின்னல் கவிதையின் விளைவு....


இது கவிதாயினி காயத்ரியால் வந்தது...



இது ராமின் குருட்டு புலியால் வந்தது. (சேதாரம் கம்மியாதான் இருக்கு)


இது அயானாரின் அவனும் அவளும் .......அதனால் வந்தது.


இது சிபிக்கு உரை எழுதிய பிறகு...



இது இளா கவிதைய படிச்சதால் வந்தது , சிங்கத்தை சாச்சுபுட்டீங்களே இளா..
ஒரு பச்ச புள்ளைய போய் ஒத்தைக்கு ஒத்தை கூப்பிட்ட இளாவை வன்மையா கண்டிக்கிறோம்...
இங்கனம்
அபி, அபி தம்பி மற்றும் குசும்பன் (வயது வாரியாக லிஸ்ட்).


அடிச்சிட்டேன் 50

இதோ வெற்றிகரமாக 50 பதிவுகள் போட்டு முடித்துவிட்டேன், எத்தனை பதிவுகள்உங்களை சிரிக்கவைத்தன என்று தெரியவில்லை, இருந்தாலும் உங்களை சிரிக்கவைத்து இருக்கும் என்றநம்பிக்கையில் அடுத்து அடுத்து பதிவு போட்டு இதோ இன்று 50 பதிவை போட்டு முடித்து இருக்கிறேன்.

எனக்கு நீங்கள் கொடுத்த ஊக்கம் தான் குறுகிய காலத்தில் 50 பதிவு போடவைத்தது... நீங்கள் யாரும் கண்டுக்காமல்போய் இருந்திருந்தால் சீசீ இந்த பழம் புளிக்கும் என்று ஓடி போய் இருப்பேன் (தப்பு செய்துவிட்டமே என்று வருந்துவதுதெரிகிறது).

குசும்பன் என்று ஒருவன் காமெடியாக எழுதுகிறான் என்று பலபேரிடம் சத்தம் போடாமல் சொல்லி என் பதிவிற்க்கு வரசெய்த சிபி அவர்களுக்கும் தானாக வந்து உதவி செய்த பொண்ஸ் அக்காவிற்க்கும் நன்றி.

அன்பான அய்யனார்(நேர்ல பார்க்கும் பொழுது அடிக்காம இருக்கனும்ல அதுக்குதான்), அடாவடியான தம்பி, குஜாலான மின்னல்,ஜாலியான சந்தோஷ் என்று குறுகிய காலத்திற்க்குள் ஒரு நல்ல நட்பு வட்டத்தை தந்த தமிழ் மணத்திற்க்கு நன்றி...

மேலும் தொடந்து என் பதிவுக்கு வருகை தரும்
வெங்கட்ராமன்
siva
காயத்ரி
அய்யனார்
துர்கா
மின்னுது மின்னல்
இராம்
பொன்ஸ்~~Poorna
CVR
கண்மணி
ஜி
சந்தோஷ்
அபி அப்பா
மை ஃபிரண்ட்
தம்பி
Sathia
G3
செல்வேந்திரன்
நந்தா
குட்டிபிசாசு
பினாத்தல்
சுரேஷ்
லக்ஷ்மி
tbr.joseph
நளாயினி
பாலபாரதி

அனைவருக்கும் நன்றி, நன்றி,நன்றி...

Saturday, June 23, 2007

விடுதலை எப்போது?

இந்த கவிதைக்கு விளக்கம் சொல்லாமல் ஏன் இந்த கவிதையை சிபி எழுதினார் என்று உங்களுக்கு சொன்னால் தானாக உங்களுக்கு கவிதை அர்த்தம் புரியும் .

அன்று ஒரு நாள் மாலைவேளையில் பார்க்கில் மல்லாக்க படுத்து அடுத்த கவிதைக்கு கருவை தேடிக்கொண்டு இருக்கும் பொழுது...மரத்தின் மேல் இருந்த காக்கா அண்ணன் மேல் கக்கா (காக்காவின் கக்காவைதான் எச்சம் என்கிறார்) போய்விட ஆத்திரத்தில் ஒரு கல்லை எடுத்து காக்காவை அடிக்க அடிபட்ட காக்கா கீழே விழுவதற்க்குள் எதிர் பக்கம் இருந்து ஒரு குரல் தள ஏன் இந்த கொலை வெறி ஏன் என்றால் அருகில் இருந்த ராம் தலை மீது மண்டையை பதம் பார்த்தது அருகில் இருந்த போலீஸ்கார் விலங்கு வதை தடுப்பு சட்டம், கொலை முயற்ச்சி வழக்கில் அண்ணனை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது...அங்கிருந்து அண்ணன் கேட்டது தான் கவிதையின் முதல் வரி...(அலைபாயுதே பட ஸ்டைலில் கவிதை எழுதி இருக்கிறார்).

மின்னலும்,குசும்பனும் தான் இந்த கொலை முயறச்சிக்கு சாட்சி அதனால் தான் பயந்து போய் இருக்கிறார் (அரண்டவனுக்கு இருண்டதுஎல்லாம் பேய் என்று சொல்வார்களே அதுபோல்).. சிபி ஜெயிலில் இருக்கும் சேதி கேட்டு தெல்கியாரும், கிழ்மத்துர் எக்ஸ்பிரஸ் இருவரும்மகிழ்ச்சி கடலில் திளைக்கின்றனர்.

ஜெயில் இருப்பது நினைவு இல்லாமல் சண்டைக்கு அழைக்கிறார், சக கைதிகள் போட்டு வெளுத்து வாங்கி விடுகின்றனர், அடிப்பட்டு (காக்க காக்கவில் சூர்யா கிடப்பது போல் கிடக்கிறார்) ..அப்பொழுது சத்தம் போட்டு சொல்கிறார் "விடு! தலை கிடைக்கும்ஒரு நாள்" (காந்தி ஜெயந்தி எல்லாம் முடிஞ்சு போச்சு ...இப்ப விடுதலை கிடையாது).

இப்பொழுது கவிதை


வீறிட்ட அலறலுடன்கேட்டுக் கொள்கிறேன்
என்னை நானே!"விடுதலை எப்போது?"
என் கேள்விவான் மீது
மோதிபறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!
எதிர்ப்படுக்கை
ஒன்றிலிருந்துமுனகல்வருகிறது!

"தள!ஏனிந்தகொலைவெறி?
""உமக்கேது விடுதலை?"எகத்தாள ஒலிசுவரில்
பட்டுஎதிரொலிக்கிறது!எரிச்சலுற்று
திரும்பிப் பார்க்கிறேன்!மின்னலும்
குசும்பும்மாறி மாறிகண்ணில்
தெரியவிழிகளின் பாப்பாக்கள்
பப்பரப்பே என்றுசுழலத் தொடங்குகின்றன!

கெக்கெபிக்கேசிரிப்பொலியொன்று
கவனத்தைச் சிதறடிக்கஎங்கோ தொலைவில்
தெக்கியாரைக்கிச்சு கிச்சு மூட்டிவிட்டுவிரைந்து
செல்கிறதுஅதிவேகபுகை வண்டி!

எனக்கென்றுஎதிரிகளைநானே தெரிவுசெய்து
சண்டைக்குஅழைக்கிறேன்!வாளைச்
சுழற்றியபடிபிச்சுவாக் கத்தியுடன்
எனைச் சூழ்ந்துநெருங்குகின்றனர்!
நானும்சண்டையிடத்தயாராகிறேன்!

சமாதானம் எங்கிருக்கிறது?
திமிறித் திமிறிப்பார்த்தும்பிடியிலிருந்து
நழுவ முடியவில்லை! சுய நினைவைக்கொஞ்சம்
கொஞ்சமாய்இழந்துகொண்டேசூளுரைக்கிறேன்!
"விடு! தலை கிடைக்கும்ஒரு நாள்"
நின்றுவிட்ட இயந்திரத்தைப்பொல
தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்உணர்கிறேன்சுரீரென்ற வலி!


Friday, June 22, 2007

அண்ணன் பால பாரதிக்கோர் கடிதம்!!!

அண்ணன் பால பாரதி

நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! நான் நண்பர் சிபி அவர்களிடம் அது என்னா பா.க.ச என்று அடி வெலுத்து எடுத்துவிட்டார், இங்கு புதிதாக கலாய்க்கும் பதிவு போட யார் வந்தாலும் அவர் கையில் பாபா துணை (பால பாரதி துணை) என்று பச்சை குத்தி காதில் 1)பால பாரதி 2)பால பாரதி 3)பால பாரதி என்று மூன்று முறை பெயரை சொல்லி அவர் சங்கத்தில் உறுப்பினறாக ஆன பின்பே பதிவு போடுவது வழக்கம், இதுவரை எப்படி நீ அவரை தெரியாமல் இருந்தாய் என்று அடித்தார்.

பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க). நீங்களே அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொன்னார். நான் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மண வாசகராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்து முன் தேதி இட்டு உறுப்பினர் அட்டை வழங்கி (அத்தனை மாதங்களுக்கும் சந்தா தொகையும்) என்னையும் அதில் உருப்பினர் ஆக்கிகொள்ளும் படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

என்னை பா.க.ச வில் சேர்த்துவிட்டதற்காண மார்கெட்டிங்(MLM) ராயல்டி பீஸ்சும் சிபி வேண்டாம் அதையும் குசும்பன் நீங்களேவாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார், ஆகையால் அந்த பணத்தையும் சேர்த்து என் பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கழுத்தில் கத்தி வைத்து பணிவோடு கேட்டுகொள்கிறேன்.....

உறுப்பினர் அடையாள அட்டையில் தாங்கள் இரத்ததினால் உறுப்பினர் பெயரை எழுதி அடையாளஅட்டை தருவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் என்று சிபி சொன்னார் என் பெயரை குசும்பன் என்று எழுதி விடாதீர்கள்.... திருவாடு துறை சிவ சிதம்பர கோவிந்த சாமி புஷ்பவனம் குப்புசாமி முனியசாமி கோவிந்தன் குசும்பன் என்று எழுதும் படி கேட்டுகொள்கிறேன்.

அன்புடன் குசும்பன்
பா.க.ச,
திருமங்கலம்,சென்னை
(பதிவு எண் : 1245678/07)