Wednesday, September 22, 2010

கல்மாடி ஸ்பெசல் போட்டோ டூன்ஸ் 22-9-2010

மேலே இருக்கும் படம் கொசுறு!


போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்!
கோட்டுல பாக்கெட்டை இனிமே கொஞ்சம் பெருசா வைக்க சொல்லனும்!

இதேதான் வேணுமா? தீப்பந்தம் எல்லாம் வெச்சிக்கமுடியாதா?
பில்டிங்கும் ஸ்ட்ராங்கு இல்ல! பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு இல்ல!
அடுத்த பாலம் விழும் பொழுது நாய் ஒன்னுக்கு அடிச்சதால் பில்லர் கரைஞ்சு போய் விழுந்துசுன்னு நெக்ஸ்ட் டைம் சொல்லிடலாம்...





Sunday, September 19, 2010

ஹல்லோஓஓஓ பிரதர் மார்க் இருக்காரா?

முன்குறிப்பு:

ஒருபடத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் கேண்டினில் உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க, வடிவேலு ரூட் விடும் பொண்ணு வந்ததும், வடிவேலு போனை எடுத்து ஹலோ துபாயா? பிரதர் மார்க் இருக்காரா? என்னது நீதான் பேசுறீயா? ஹேய் How r u man?why r u crying யா?லீவ் இட்! பீ ஹேப்பி! கூல் டவுன் கூல் டவுன்! என்று சொல்லிட்டு போனை வெச்சதும் என்னடான்னு பிரபுதேவா கேட்ப்பார். அதுக்கு வடிவேலு சொல்லுவார் ஒன்னுமில்லை துபாயில் இருந்து என்னோட பிரதர் மார்க் பேசினான், அவனுக்கு துபாயில் 20 பெட்ரோல் கிணறு இருக்கு,டோட்டலா பயர் ஆயிட்டாம். ஆப்ட்ரால் 20 கோடிதான் லாஸ்ப்பா! அதுக்கு போய் சின்ன குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கான். HEY MONEY COME TODAY GO TOMMOROW YA !இவ்வளோ பெரிய கோடிஸ்வரன் வீட்டில் பிறந்துட்டு இதுக்கு போய் அழலாமா 20 கோடிங்கிறது டிப்ஸ் கொடுக்கும் காசு என்றதும் அருகில் இருக்கும் பிரபுதேவா அப்படியே கிராமத்தில் கியுவில் நின்று ரேசனில் வாங்கிய மண்ணென்னெய் கீழே கொட்டியதும் டேய் அஞ்சுக்கும் பத்துக்கும் கொட்டு அடிச்சிஆடி பாடி எவ்வளோ கஷ்டப்பட்டு சம்மாரிச்ச காசுடா என்று இந்த எண்ணெய் இருந்தால் தான் டா எங்க ஊட்டுல அடுப்பு எரியும் என்று அடிச்சிக்கிட்டு அழும் வடிவேலுவை நினைச்சி பார்ப்பார்...அதுமாதிரி...இங்க நீங்க யாரை வேண்டும் என்றாலும் மனசுக்குள் நினைச்சிக்குங்க... (இதுக்கு பேருதான் வாசகருக்கு கொடுக்கும் சுதந்திரம்)


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க் இந்த மாத கலா கபோதி சிற்றிதழ் இன்னும் வரவில்லை ya ! ரெண்டு நாள் ஆச்சு எப்பொழும் ஒவ்வொரு மாசமும் 3 தேதிக்குள் வந்துடும்! ஆனா இந்த மாசம் தேதி 5 ஆவுது, என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. போன் செஞ்சும் கேட்டுவிட்டேன்,போன வாரமே அனுப்பிட்டோம் என்று சொல்லுறாங்க!, போஸ்ட் மேனை புடிக்கதான் வெயிட்டிங், அதுல ஸ்பானீஸ் மொழி சிறுகதைகளை மொழிபெயர்த்து போடுவாங்க பாரு சான்சே இல்ல, அதுக்காகதான் அந்த சிற்றிதழுக்கு 20,000 ஆண்டு சந்தா கட்டியிருக்கேன் என்றால் பார்த்துக்கேயன். என்னது சிற்றிதழுக்கு 20,000மாவா? அட நீ வேற 20,000 என்பது எங்க ஊட்டுல ஒரு நாளைக்கு நாங்க வாங்கும் புக்கோட மதிப்பு yaa!.


பதிவர் ஆகும் முன்பு:


மச்சி டேய் இந்த வாரம் குமுதம் பார்த்தியா? அதுல நடு பக்கத்தில் போட்டு இருக்கான் பாரு ஒரு போட்டோ,அவ்வளோ அருமையா இருக்கு மச்சி, குமுதம் வாங்குவதே அந்த நடுபக்க மேட்டருக்குதான் ங்கொயாலே கொடுத்தகாசு வேஸ்டா போகல.


**********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! இந்த உயிர்மை, மணல்வீடு, உயிர் எழுத்து,மீட்சி, அன்னம் விடு தூது, ழ, மணிக்கொடி, எழுத்து இவை எல்லாம்நான் விரும்பி படிக்கும் சிற்றிதழ்கள், இதுல என்ன பிரச்சினைன்னா முன்னாடி வந்துக்கிட்டு இருந்த ஃ, அமீபா,காலக்குறி எல்லாம் இப்ப வருவது இல்ல அதுல வரும் சிறுகதை, கவிதையை படிக்க எத்தனை லட்சம் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.திரும்பி இவை எல்லாத்தையும் அச்சில் பார்க்க முடியுமான்னு ஏக்கமா இருக்கு. மீதி இருக்கும் சிற்றிதழ்களையாவது காக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து இந்த வார இதழ்கள்,ஜன ரஞ்சக பத்திரிக்கைகள் அட்டைப்படத்தை கூட பார்த்தது இல்லை.


பதிவர் ஆகும் முன்பு:


மச்சி நம்ம மாதவன் புக் சர்க்குலேசன் ஆரம்பிச்சிருக்கான் டா, போனவாரம் வந்த ராணி,முத்தாரம்,குமுதம்,ஆனந்தவிகடனை எல்லாம் இந்த வாரம் கொடுப்பான், ஒவ்வொரு புத்தகத்துத்தையும் ரெண்டு நாள் வெச்சிக்கலாம். நமக்கு என்னா அதில் வரும் சினிமா மேட்டரையும், கிசுகிசுவையும் படிக்க அரை நாள் போதுமே.அதுனால படிச்சி முடிச்சிட்டு உடனே கொடுத்து விடுவேன்..மாசம் 30 ரூபாய் தான்.


*********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! இரண்டுநாள் லீவு போட்டு விட்டு பெங்களூரில் இருந்து சென்னையில் நடக்கும் புத்தககண்காட்சிக்கு சென்றேன் இந்த முறைவாங்கிய இலக்கிய நாவல்கள், 1. ஜெயமோகனின் கொற்றவை2. ஜே.டி. குரூஸின் ஆழி சூழ் உலகு3. சாரு நிவேதிதாவின் ராசலீலா4. கோணங்கியின் பிதிரா5. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்6. ஜே. டி. குரூஸின் கொற்கை7. *100.சுந்தரராமசாமி கதை கட்டுரை முழுத் தொகுப்பு ரஷ்யாவில் ஒரு உலக புத்தக கண்காட்சி இந்த மாசம் கடைசியில் இருக்காம் போய் வர டிக்கெட் புக் செஞ்சிட்டேன்.


பதிவர் ஆகும் முன்பு:


மச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி சரோஜாதேவியும் மருதத்தையும் பிரண்டு ஒருத்தன் கொடுத்தான் என்னாமா இருந்துச்சு தெரியுமா?அதுமாதிரி எழுத சரோஜாதேவியை தவிர வேற யாராலையும் முடியாதுடா...நோட்டுக்குள் மறைச்சி மறைச்சி எடுத்து வரங்காட்டியும் ரொம்பகஷ்டமா போச்சுடா மாமா!பழவந்தாங்கலில் ஒரு பழய புத்தக கடையில் இந்த புக்கை எல்லாம் எடை போட்டு விக்கிறானாம் ரொம்ப சல்லிசா வாங்கலாமாம் பிரண்டு ஒருத்தன் சொன்னான் இந்த வாரம் போகனும்...


**********


பதிவர் ஆன பிறகு எழுதும் கவிதை!

ஹேய் பிரதர் மார்க்! ஒரு கவிதை எழுதியிருக்கேன் கேளேன்!

அகிரா,பிரஸ்ஸோன் மற்றும்
மொராக்கோ சகோதரர்களிடம்
சிக்கியிராத
தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவை
ஒளிப்படச் சுருளில்
பொதிந்துவைக்க
குளிர் விரவிய
தெருக்களில் மிதந்தபடி
விரல்சுடும் சிகரெட்டை
காற்றில் சுண்டி விடுகிறான்
பொறிகளை
சிதறவிட்டு
மெல்ல அணைகிறது
கங்கு.


பதிவர் ஆகும் முன்பு எழுதிய கவிதை:

கவிதை தலைப்பு: ஸ்டிக்கர் பொட்டு!

நிலவில்
ஒட்டியிருக்கும்
நட்ச்சத்திரம்!


கவிதை தலைப்பு: அம்மாவாசை

இன்று என்
தேவதை
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை!

*********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! கடந்த வாரம் பார்த்த குவாண்டினின் டெரோண்டோவின் Death Proof படம் பார்த்தேன் அதுல வரும் பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். வரும் விடுமுறையில் குவாண்டி டெரோண்டோ, கிம்கிடுக் ஆகியோரின் படங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்த்து முடிச்சிடனும்.


பதிவர் ஆகும் முன்பு:


நண்பன்: மச்சி உலகப்படம்ன்னா என்ன டா? போனவாரம் நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டரில் பார்த்தோமேடா? சிராக்கோன்னு ஒரு படம் அதுதான் உலகப்படம், பிட்டே போடனும் என்ற அவசியம் இல்லாம படம் முழுக்க பிட்டாவே இருந்துச்சு பார்த்தியா? அதுதான். இந்த வாரம் ஏதோ பிரெஞ் மொழி படம் ஒன்னு ரிலீஸ் ஆவபோவுதாம் என் பிரண்டு அங்கிருக்கும் ஆப்புரேட்டருக்கு தெரிஞ்சவன் செம கில்மாவா இருக்காம் முதல் ஷோவே போய்விடனும்.


************


பதிவர் ஆன பிறகு:


ஹல்லோ பிரதர் மார்க், ஆக்ஸ்வலி நான் தமிழ்படம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு, பிரண்டு ஒருத்தன்ரொம்ப தொல்லை செஞ்சானேன்னு யாவரும் நலம் படம் பார்த்தேன் பிசி ஸ்ரீராம் கேமிரா ஆங்கிள் சரியில்லை சுத்த வேஸ்ட், அதுமாதிரி மணிரத்தனம் என்றுயாரோ ஒருத்தர் ரொம்ப நல்லா தமிழ்படம் எல்லாம் எடுப்பார் என்று அவரோட பட DVDயை கொடுத்தான் படமா அது லைட்டிங் சரியில்லை...


பதிவர் ஆகும் முன்பு:


பதிவரின் நண்பர்( டேய் அக்காவோட நிச்சயத்துக்கு போட்டோ எடுடான்னு சொல்லி கேமிராவை கொடுத்தா பரிசம் போட்டவங்க தலையையும் காணும், உட்காந்திருக்கும் அக்கா மூஞ்சும் தெரியவில்லை யாரைடா போக்கஸ் செஞ்ச? இல்ல உன்கிட்ட போய் கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்)


*********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! கடந்தவாரங்களில் என் எழுத்தை பாரட்டி வந்த கடிதங்களை எல்லாம் உனக்கு படிச்சிக்காட்டினேன் நினைவு இருக்கா?... ஆப்பிரிக்காவில் இருந்து உராங் உட்டான் எழுதிய கடிதம், அண்டார்ட்டிக்காவிலிருந்து பாண்டா எழுதிய கடிதம். இந்த வரிசையில் துபாயிலிருந்து குசும்பன் எழுதிய இந்த "வரம் கடிதம்..." உங்கள் எழுத்தை படித்தால் தான் காலையில் எனக்கு கக்காவே போவுது, மஜாமல்லிகா சைட்டுக்கு அடுத்து அடிக்கடி பார்க்கும் பிளாக் உங்களுடையதுதான்" சென்னை வரும் பொழுது உங்களை ஒரு முறையாவது தொட்டு பார்த்துவிடனும் என்று என் ஆசை, உங்க எழுத்தை Phd, செய்யனும்என்று நினைக்கிறேன் அது முடியாவிட்டால் உங்க எழுத்தை பிரிண்ட் எடுத்து அட்லீஸ்ட் பச்சடி செய்தாவது தினம் தினம் கொஞ்சம் சாப்பிடுவேன் இது என் தாய்மொழி மீது சத்தியம். விரைவில் உங்களுக்கு துபாய் ஷேக் சாயித் ரோட்டில் ஒரு கட் அவுட்வெச்சி அதுக்கு பாலாபிஷேகம் செய்யலாம் என்று இருக்கிறேன். உலகிலேயே முதன் முறையாக பத்து கோடி ஹிட் வாங்கிய பதிவர் ஒருவருக்கு கட் அவுட் வெச்சாங்க என்ற பெருமை உங்களுக்கு கிடைப்பதை விட அதை வெச்சவன் என்ற பெருமையை எனக்கு நீங்கள் தரவேண்டும். அதுக்கு உங்கள் அனுமதி வேண்டும்.


பதிவர் ஆகும் முன்பு: வாரமலர் அன்புடன் அந்தரங்கத்துக்கு எழுதிய கடிதம்:


அன்புள்ள வாரமலர் அந்தரங்கம் அக்கா,


நான் எதிர் வீட்டில் இருக்கும் ராணி என்ற பெண்ணை 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன், போன வாரம் நாங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது முத்தம் கொடுத்துவிட்டேன், பின்பு எப்பொழுதும் அதே நினைப்பாக இருக்கிறது, படிக்க முடியவில்லை தூங்க முடியவில்லைஆனால் இரண்டு நாட்களாக என்னிடம் பேசமாட்டேங்கிறாள் செத்தே விடலாம் போல இருக்கிறது.வீட்டில் யாரும் இல்லாத பொழுதுதான் பேச முடியும் என்கிறாள், தினம் அவளிடம் பேசனும் இல்லை என்றால் எனக்கு பைத்திய்யம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. அதனால் எங்கயாவது அவளோடு ஓடிவிடலாமா? 11 வது படிச்சிக்கிட்டு இருக்கேன் எனக்கு கலெக்டர் வேலை கிடைக்குமா? அரசு சலுகை ஏதும் கிடைக்குமா?

Wednesday, September 15, 2010

கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார்

கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார் வழங்கும் குறும்பட விமர்சனம்.

ஆதி எடுக்கும் குறும்படங்களில் இருக்கும் ஈயடிச்சாங் காப்பிகளை பத்தி எழுதினாலும் எழுதினேன், ஏகப்பட்ட பாராட்டு கடிதங்கள் வந்து குவிஞ்சிக்கிட்டே இருக்கிறது. இனி அவனுங்களை படம் எடுக்க விடாம எப்படியாவது தடுத்து விடுங்க உங்களுக்கு கோயில் கட்டுகிறோம் என்ற அளவுக்கு நண்பர்கள் சொல்கிறார்கள்.

இனி இந்த புது குறும்படம் கடிதத்தில் வரும் ஈயடிச்சாகாப்பிகளை பட்டியலிட்டு பார்ப்போம்.
1)முதல் சீன் கார்க்கி கட்டை சுவத்து மேல் உட்காந்திருப்பது போல் காட்டப்படுகிறது, இது பாய்ஸ் படத்தை நக்கல் அடிச்சு சந்தானம் & சொட்டை மனோகர் நடித்த லொள்ளு சபாவில் சொட்டை மனோகர் ஒரு சீனில் தனியாக சுவத்து மேல் உட்காந்துக்கிட்டு நண்பர்களுக்காக காத்திருப்பார் அதை அப்படியே உருவி அதே மாதிரி ஹீரோவையும் புடிச்சு சுவத்து மேல உட்காரவெச்சிருக்கார் இந்த குறும்படத்தின் டைரக்டர் ஆதி.
2)அடுத்த சீனில் இலைகளை காட்டுகிறார் இது அப்படியே பாரதிராஜா படத்தில் ஹீரோவை காட்டும் முன்பே மண்வாசனையோடு கிராமத்தை காட்ட எப்பொழுதும் இலைகளை செடி, கொடி, கோழிகளை காட்டுவார் அது அப்படியே இங்கு காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது.
3)இதுக்கு அடுத்த சீனில் ஹீரோ ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறார், இந்த சீன் கிங்காங் படத்தில் கிங்காங்கை கூண்டில் அடைச்சு எடுத்துக்கிட்டு போகும் பொழுது ஹீரோயின் வருகிறாளா என்று கிங்காங் கூண்டு கம்பி வழியே அப்படியே பாவமாக பார்க்கும் கிங்காங். அந்த சீனை அப்படியே எடுத்திருக்கிறார். ஹீரோவும் இதுக்காக பலமுறை ஹோம் ஒர்க் செய்து கிங்காங் படத்தை பார்த்திருப்பார் போல அப்படியே அச்சு அசலாக கிங்காங் எக்ஸ்பிரசனை ஹீரோவின் முகத்தில் பார்க்கமுடிகிறது, பார்க்கும் நமக்கு படத்தில் இருப்பது கார்க்கியா அல்லது கிங்காங்கான்னு குழப்பம் வரும் அளவுக்கு அப்பட்டமான காப்பி நடிப்பிலும்.

4) அடுத்த சீனில் மழையையும் மழை பெய்ததால் இலையில் இருந்து சொட்டும் மழைத்துளியையும் காட்டுகிறார், காலங்காலமாக படத்தில் ரேப் நடக்கும் பொழுது மான் மேல் பாயும் புலி போட்டோவையும் பிறகு ரேப் முடிந்த பிறகு இரத்த களறியான மானையும் காட்டுவார்கள், இதே ஹீரோ ஹீரோயின் சம்மதத்துடன் ஜல்சா செய்கிறார் என்றால் மழை பெய்யும் சீனை காட்டுவார்கள் மேட்டர் முடிந்த பிறகு ஓலை குடிசையின் மேல் இருந்து தண்ணீர் சொட்டுவதை காட்டுவார்கள்.அப்படி அந்த சீனை அப்படியே உருவியிருக்கிறார் ஆதி.
5)அடுத்து அடுத்து வரும் சீன்களில் மோட்டுவலை,தாவங்கட்டையை எல்லாம் சொறிந்தும், கட்டிலில் உருண்டு புரண்டு ஹீரோ பேப்பரில் ஏதோ கிறுக்குவது போல் காட்டுகிறார் இதை எல்லாம் காலம் காலமாக ஹீரோ ஹீரோயினுக்கு கவிதை எழுதி கொடுக்கும் காட்சிகளில் இந்த சீன்களை பார்த்திருக்கிறோம். அதே மாதிரி ஹீரோ பரிட்சை அட்டையில் பேப்பரை வைத்து கவிதை எழுதுவது என்று இன்னும் 80களின் படப்பாதிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. கற்பனை வறட்சி.
6)இந்த சீனில் ஹீரோ கண்ணாடிக்கு முன்னாடி நின்னு தலையை சரி செய்வது போல் காட்டுகிறார், இது எந்த படத்திலிருந்து உருவியது என்று உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்ல,தனுஷ் ,சோனியா அகர்வால் நடிச்ச துள்ளுவதோ இளமை படத்திலிருந்து இதை பார்த்துவருகிறோம். 7) கண்ணாடிக்கு முன்னாடி நிற்கும்பொழுது போட்டு இருந்தது ஒரு ட்ரஸ் பிறகு கடிதத்தை எடுத்து பார்க்கும் பொழுது வேற ஒரு ட்ரஸ், ஹீரோயின் தலை சீவுவதை எல்லாம் காட்டிவிட்டு டிரஸ் மாத்துவதை மட்டும் காட்டாமல் போகும் எல்லா தமிழ் சினிமாக்களில் இருந்து இந்த சீன் உருவப்பட்டுயிருக்கிறது. இதே ஆங்கிலப்படங்களில் என்றால் சர்வசாதாரனமாக பேசிக்கிட்டே ட்ரஸ் மாத்தும் சீனை காட்டியிருப்பார்கள், இன்னும் இவர்கள் இந்த குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவில்லை.


8)ஹீரோவின் நண்பராக சென் வருகிறார், ஒரு சூப்பர் பிகருக்கு சப்பை பிகர் ஃபிரண்டாக காட்டுவது தமிழ்பட மரபு மட்டும் இல்லை ரியல்டைமிலும் பல சூப்பர் பிகருங்க ஒரு அட்டு பிகரை ஃபிரண்டாக வெச்சிருப்பாங்க அதுபோல் இங்கு மொக்கை ஹீரோவுக்கு, சூப்பர் ஃபிரண்ட்டாக சென் வருகிறார் இங்கு மட்டும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆதி.

********************************
ஜக்கி குமார்
முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன் ஏன்னா கடைசிவரை யாரும் படிப்பது இல்லை.என்ன சொல்லப்போறேன் என்றால் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு, படத்தின் பாதிப்பில் நம்ம நேட்டிவிட்டியை கலந்து கொடுப்பது என்பது வேறு...இதே ஜக்கி குமாரும் ஈயடிச்சாங்காப்பி அடிச்சிருக்கிறேன் நான் ஒன்னும் மகான் அல்ல.ஆனால் தமிழ் பிளாக்கில் புதிய முயற்சியாக ஆதி கொடுப்பதை பாராட்டியே ஆகவேண்டும், குறும்படம் என்றாலே நல்ல ஹீரோ, நல்ல கேமிரா நல்ல இசை எல்லாம் இருக்கவேண்டும் என்ற மரபை உடைத்தவர், திராபை சவுண்ட், மொக்கை ஹீரோ, மொக்கை கதை என்று இவைகளை வைத்தும் படம் என்று ஒன்னுஎடுத்து அதுக்கு குறும்படம் என்றும் பெயர் வைக்கமுடியும் என்று தில்லாக நிரூபித்தவர் நம்ம ஆதி. அதுக்காகவே நாம் ஆதியை பாராட்டிதான் ஆகவேண்டும், இதுவரை குறும்படமே பார்க்காதவங்களையும் பார்க்கவைத்த பெருமையும் இனி அவர்கள் குறும்படம் என்றாலே சொன்னவன் வாயிலேயே குத்தும் அளவுக்கு கொலைவெறியையும் ஏற்படுத்திய பெருமை ஆதியையே சேரும்.

இப்ப அமெரிக்கா காரன் வெஸ்டர்ன் டாய்லட்டில் உட்காந்து போகிறான் நாமும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காந்துதானே போகிறோம் இது காப்பியில்லையா? அதை குறை சொல்கிறோமா? வித்தியாசமாக செய்கிறோம் என்று அதுமேல ஏறி உட்காந்துக்கிட்டா போகிறோம்?

சீனாக்காரன் நூடுல்ஸை வாயால் சாப்பிடுகிறான், அதே நூடுல்ஸை நாமும் வாயல்தான் சாப்பிடுகிறோம் இது காப்பியில்லையா?

திரும்ப திரும்ப சொல்கிறேன் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு பில்டர் காப்பி என்பது வேறு.

அப்புறம் இவ்வளோ தூரம் படிச்சிட்டிங்க பார்த்து எதாவது செஞ்சிட்டு போங்க மக்கா! என்னது இது எல்லாம் ஒரு குறும்படம் இதுக்கு எல்லாம் ஒரு விமர்சனம் என்று துப்பிட்டுதான் போவீங்களா கருமம் அதையாவது செஞ்சிட்டு போங்க .எத்தனை நாள் கழிச்சி படிச்சாலும் துப்பிட்டு போக மறக்காதீங்க மக்கா!
இந்த குறும்படத்தை பார்த்து தொலைய http://www.aathi-thamira.com/2010/09/blog-post_14.html