சனியா: பன்மோகன் நான் கேட்ட லிஸ்ட் எங்கே?
பன்மோகன்: இதோ வந்துடும் மேடம்!
சனியா: நீங்க ஒருமுறை அதை செக் செஞ்சுடுங்க குரணாப்!
குரணாப்: நிச்சயமா அதானே வழக்கம்.
பன்மோகன்: பப்புபட்டேல் எங்கே நான் கேட்ட லிஸ்ட்?
பப்புபடேல்: இதே எடுத்துக்கிட்டே இருக்கோம் சார், ஒரு 2 நிமிடத்தில் வந்துடும்.
பன்மோகன்: மேடம் லிஸ்ட் கைக்கு வந்துட்டு, அப்படி யாரும் இல்லை ஆனா ஒரே ஒரு பேர் மட்டும் குழப்பமா இருக்கு.
சனியா: குரணாப்கிட்ட கொடுங்க, அந்த ஆளோட நேட்டிவ் எங்க என்னா என்று செக் செஞ்சுட்டுங்க.
குரணாப்: ஆமாம் மேடம் பன்மோகன் சொல்ற மாதிரி "அசோக்" என்ற பெயர் கொஞ்சம் குழப்பமா இருக்கு.
சனியா: சீக்கிரம் டைம் ஆகிட்டே இருக்கு வேற உலகத்தலைவர்கள் ஏதும் சொல்லும் முன்பு நாம சொல்லனும்.
குரணாப்: அப்படி அவரோட நேட்டிவ் நாம பயப்படுற மாதிரி இருந்துட்டா?
சனியா: நானே டென்சனில் இருக்கேன் நீங்க வேற ஏன் குரணாப், நல்லபடியாவே நினைப்போம்!
(பல போன்கால்கள், பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு)
குரணாப்: கவலைப்படாதீங்க நீங்க பயந்த மாதிரி இந்த விமான விபத்தில் எந்த தமிழரும் இல்லை.
சனியா: அப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு, நாளைக்கு தமிழன் இறந்ததுக்கு வருத்தம் தெரிவிச்ச சனியா என்று வரலாறு தப்பா சொல்லிடுமோன்னு ரொம்ப பயத்தில் இருந்தேன்.
குரணாப்: இனி அந்த கவலையே வேண்டாம் நீங்க தாராளமாக வருத்தம் தெரிவிக்கலாம் விமான விபத்தில் இறந்தவங்க அனைவரும் கேரளா, கர்நாடகா ஆட்கள் தான்.
சனியா: அப்ப விபத்து நடந்த இடத்துக்கும் போய்விடலாம் கிளம்புங்க!
Subscribe to:
Post Comments (Atom)
57 comments:
ஒரு அப்பட்டமான உண்மையை கூறிவிட்டு ஹ்யூமர் என்று எழுத எப்படித் தான் மனசு வருமோ? ஆனாலும் ரொம்.......பக் குசும்பு உமக்கு!
உட்ச பட்ச தாக்குதல்...
பார்த்துங்கோவ்..
:))
இதுக்கு எத்தனை கும்மாங்குத்து வருதோ தெரியல...ஆனாலும் துரோகிகள் அல்லாத தமிழர்கள் அனைவருக்கும் உவப்பே...
சாட்டையடி !!!!!!!!!!!!!!!!!!
... பிளாக் ஹூயுமர் ...
உங்களின் ப்ளாக் ஹ்யுமருக்கு எனது ராயல் சல்யூட் குசும்பனாரே...
:((((
Excellent "GUTS"
Cheers! Man
:((((
:))))
//நாளைக்கு தமிழன் இறந்ததுக்கு வருத்தம் தெரிவிச்ச சனியா என்று வரலாறு தப்பா சொல்லிடுமோன்னு//
சனியன் ...
நாக்கை புடிங்கிட்டீரு அண்ணாத்த...
//மேடம் மன்மோகன் சொல்ற மாதிரி "அசோக்" என்ற பெயர் கொஞ்சம் குழப்பமா இருக்கு.//
பெயரில் எழுத்துப்பிழை. கவனிக்கவும்.
//நாளைக்கு தமிழன் இறந்ததுக்கு வருத்தம் தெரிவிச்ச சனியா என்று வரலாறு தப்பா சொல்லிடுமோன்னு ரொம்ப பயத்தில் இருந்தேன்.//
செருப்படி கொடுத்திருக்கிங்க
சரியாகச் சொன்னீங்க குசும்பனாரே.
தமிழன் என்று சொல்லடா... தலை குனிந்து நில்லடா...
Good Ji...
ரொம்பத்தான் தைரியம் குசும்பா உமக்கு, அவனவன் கூகுள் சட்டம், அமீரக சட்டத்திற்கு பயந்தே டரியள் ஆகிக் கொண்டிருக்கும் வேளை, இப்படியா..:-)
Blogger கீழை ராஸா
//
::))
கும்க்கி said...
உட்ச பட்ச தாக்குதல்...
//
டெலிபோனில் ஒட்டு கேட்டத்தல்ல..
இது கற்பனையேனு போட்டுடுங்க ::))
நச்!!!!
:(
:(
:*(
ம்...
:)))
அவ்வப்போது நீங்கள் சுழற்றும் இந்த சாட்டையின் வீச்சு அபாரமாக இருக்கிறது நண்பரே.
சரியான குசும்பு...
malayali gang which went against tamil community:
Oh,horrible!
hoe many innocent tamil community was massacred by sl army,due to the encouragement of dirty malayali indian team
//நாளைக்கு தமிழன் இறந்ததுக்கு வருத்தம் தெரிவிச்ச சனியா என்று வரலாறு தப்பா சொல்லிடுமோன்னு//
Very Excellent Punch
சகிக்கலை. ஒரேவேளை ப்ளாக் ஹியூமர்ன்னா கேவலமா தான் இருக்குமோ ?
கிழிஞ்சது போங்கோ!
நீங்க-ங்கறதால எல்லாரும் அமைதியா இருக்காங்க ... இல்லேன்னா பாஞ்சு பிராண்டி இருப்பாங்க. ஹாஸ்பிடல் பார்ட் 3 வந்திருக்கும் :-)))))))))
சரவணன்
இன்று காலை வண்டியில் வரும்பொழுது தோழி ( அவரும் travel agency வேலை செய்கிறார் ) ஒரு மிக குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவருக்கு கிங் பிஷெர் விமானத்தில் மங்கலூறேக்கு டிக்கெட் கொடுத்து இருக்கிறார் அந்த நபர் இரண்டு மணிநேரம் கழித்து ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் டிக்கெட் 200 திர்கம் சீப்பாக இருக்கிறது என்று மாறி எடுத்து மரணித்து விட்டார்
லியோ சுரேஷ்
நெத்தியடி...............செருப்..........அடி
இது கண்டிப்பா கற்பனையா இருக்க வாய்ப்பே இல்ல. பொய் சொல்லாம சொல்லுங்க.. அவங்க பேசுனதை ஒட்டுக் கேட்டுத்தானே எழுதியிருக்கீங்க?
இது கண்டிப்பா கற்பனையா இருக்க வாய்ப்பே இல்ல. பொய் சொல்லாம சொல்லுங்க.. அவங்க பேசுனதை ஒட்டுக் கேட்டுத்தானே எழுதியிருக்கீங்க?
என்ன மாப்பி சஞ்சய் மட்டும் இன்னும் வரலை..!?
ஒருவேளை பிரிண்ட் அவுட் எடுத்திட்டு ஆத்தாவை பார்க்க டெல்லிக்குப் பறந்திட்டானோ..?
excellent thinking...
Feel different thoughts :(((
சாரி மாப்பி ரொம்ப மோசமான ஒரு கற்பனை..
அதுக்குத்தானுங்க தமிழரெல்லாம் தமிழ்ல பேரு வெக்கோணும். பாவம் அந்தம்மாவை இப்படிக் கொளப்பிப் போட்டீங்களே!
எதுக்குங்க குழப்பம்.இருக்கவே இருக்காங்க நம்ப டமில் நாட்டு அரசியல்வாதிகள், கேட்டா காட்டி குடுத்துட போறாங்க.
:(
:)
கேபிள் சங்கர்
Tamil nadu tamilanukum srilanka tamilanukum difference iruku boss , neenga srilanka tamilans ku support panratha ninachikitu india va kevalapaduthureenga. first we are indians then only tamilans , firt accidentla setha indians ku kavala padunga apram srilanka la irukura tamilanuku kavala padalam.
என்ன செய்றது பாஸ் நம்ம நிலமை அப்படி.
சாட்டைஅடி வார்த்தைக்கு விமான விபத்த பயன்படுத்தியது என்னை பொறுத்த வரைக்கும் நெருடலே., ( இதற்காக சிகப்பு தமிழன் நான் இல்லை என்ற பட்டம் வந்தாலும் பரவாஇல்லை )
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி கும்க்கி
நன்றி மோனி
நன்றி சென்ஷி
நன்றி கார்க்கி
நன்றி பருப்பு
நன்றி எறும்பு
நன்றி செந்தில்
நன்றி நாஞ்சில்
நன்றி மஞ்சூர் ராசா
நன்றி கேவிஆர்
நன்றி இராகவன்
நன்றி ராஸா
நன்றி மின்னல்
நன்றி நேசமித்ரன்
நன்றி Subankan
நன்றி கன்கொன்
நன்றி சரவணக்குமார்
நன்றி Soundar
நன்றி ttpian
நன்றி புதுவை சிவா
நன்றி மணிகண்டன், அப்படி இல்லை சில சமயம் பார்வைகள் வேறுபடும்.
நன்றி பனங்காட்டான்
நன்றி பிரதீபா
நன்றி லியோ, பெருங்கொடுமை.
நன்றி அத்திரி
நன்றி விந்தைமனிதன்
நன்றி உ.த , மாப்பி ஊருக்கு போய் இருக்கார்.
நன்றி ச்சின்னப் பையன்
நன்றி அபுஅஃப்ஸர்
என்ன செய்வது சந்தோஷ் இப்படி ஒரு கற்பனை தோன்றுவதுக்கும் அரசு ஒரு காரணம் தானே?
நன்றி அக்கினி சித்தன்
நன்றி தரிசு
நன்றி கேபிள்
நன்றி சரத், நாம மட்டும் தான் இப்படி முதலில் இந்தியன் அப்புறம்
தமிழன் என்று பேசிக்கிட்டு இருப்போம், மலையாள நியூஸ் சேனலில் எப்படி நியுஸ் சொல்லுவாங்க தெரியுமா? மங்களாபுரம் விமான அபகடத்தில்
45 மலையாளிகள் மரிச்சு" நம்ம நியூஸ் எப்படி இருக்கும் தெரியுமா? விமான விபத்தில் 156 பேர் இறந்தனர்
அதில் 2 தமிழர்கள் என்று நியுஸ் வரும்.
நன்றி அக்பர்
நன்றி ஷர்புதீன், மன்னிக்கவும்.
இன உணர்வின் வழியே இதைப் பார்ப்பது தவறானது. நேற்று இரவு ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது ’இந்த விமான விபத்தில் இறந்தவர்களின் அதிகம் பேர் மலையாளிகள். அதனால்தான் இதை நாட்டின் துக்க தினம் என்கிற அளவுக்கு பெரிது படுத்துகின்றனர். 159 பேர் இறந்ததற்கு கண்ணீர் விட்டு தேசிய ஊடகங்கள் தொடர்ந்து கண்ணீர் விடுவதன் காரணம் என்ன? இன்று தேசிய ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பது அதிகமும் மலையாளிகள்தான். இவர்கள் இறந்தவர்களுக்காக கண்ணீர் விடுவதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இலங்கையில் இதை விட பன்மடங்கு எண்ணிக்கையில் தமிழர்கள் செத்தபோது இவர்கள் ஏன் கண்ணீர் விடவில்லை? இதே விமான விபத்தில் இறந்து போனவர்கள் தமிழர்களாக இருந்தால் இவ்வளவு பெரிதாக இது ஆக்கப்பட்டிருக்குமா?’ என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினார். நான் இதை மறுத்தேன், மறுக்கிறேன்.
இந்தியாவில் இதைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் மரணமுற்ற விபத்துகள் இதற்கு முன்பு நடக்கவே இல்லையா? சமீபத்தில் கூட தேக்கடியில் படகு கவிழ்ந்து 40 பேரோ, 50 பேரோ செத்துப் போனார்கள். மலையாளிகள் டாமினேஷன் என்றால் அதை ஏன் இந்த அளவுக்கு பெரிதாக்கவில்லை? எத்தனையோ விபத்துகளில் கொத்து கொத்தாக மக்கள் சாகத்தானே செய்கிறார்கள்... அவர்கள் மலையாளி, கன்னடன், மராட்டிய, தெலுங்கன் என ஏதோ ஒர் இனத்தை சேர்ந்தவர்கள்தான் இல்லையா? பிறகு ஏன் அவை வெறும் விபத்துகளாக அத்தோடு முடங்கிவிட்டன? காரணம் எளிதானது. இதர விபத்துகளில் சாகும் மக்கள் சாதாரண வொர்க்கிங் கிளாஸை சேர்ந்தவர்கள். இந்த விமான விபத்தில் செத்தவர்கள் மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இதே மங்களூரில் ரெயில் கவிழ்ந்து 250 பேர் செத்திருந்தாலும் ஒரு ‘சாதாரண’ விபத்தாக மட்டுமே பேசப்பட்டிருக்கும்.
சோனியா, இலங்கையில் தமிழர்கள் இறந்ததற்காக மட்டுமல்ல... தண்டகாரன்யா காட்டில் பழங்குடி மக்கள் கொல்லப்படுவது பற்றியும் வருத்தம் தெரிவிக்க மாட்டார். சமீபத்தில் டெல்லியில் திடீரென பிளாட்ஃபார்ம் மாற்றப்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் செத்துப்போனார்கள். இப்போது விமான விபத்தில் இறந்து போனவர்களுக்கு லட்ச லட்சமாகக் கொட்டித்தரும் அரசு இந்த நெரிசலில் சிக்கியவர்களுக்கு சொன்ன பதில் என்ன தெரியுமா? டெல்லி முதல்வர் ஷீலா ராணி தீட்சித் சொன்னார், ‘மக்கள்தான் தங்களை தற்காத்துக் கொல்ல வேண்டும்’. எனவே தமிழ் இன உணர்வின் வழியே இதைப் பார்ப்பது குறுகியப் பார்வையாகவே இருக்கும்.
அரசியல் வியாதிகளின் சார்பு எதிர்ப்பு நிலை நம்மையும் அப்படியாக சிந்திக்க வைத்துவிடுகிறது.
உங்கள் பதிவில் உடன்படுகிறேன்.
//இதர விபத்துகளில் சாகும் மக்கள் சாதாரண வொர்க்கிங் கிளாஸை சேர்ந்தவர்கள். இந்த விமான விபத்தில் செத்தவர்கள் மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.// சரியான பார்வை இதை ஆமோதிக்கிறேன்.
:-(
சரியான கிழி...
மெதுவா ஆரம்பிச்சு...காட்டமா இருக்கு! நன்று குசும்பரே! ஒத்துக்கவேண்டிய விஷயம்தான்...!
ஆனால்..
ஆழியூரான் சொன்னதிலும் கொஞ்சம் விஷயமிருக்கு!
படத்தில் சொல்லி இருந்த உண்மையை மத்தியில் உணர்ந்தால்.... அவர்களுக்கு பிய்ந்த செருப்பால் மாறி மாறி அடித்தது போல் இருந்தது இருக்கும்
நன்றி ஆழியூரான், தங்கள் விரிவான பதிலை படித்ததும் கொஞ்சம் குற்ற உணர்வு வருகிறது.:((
நன்றி கோவி
நன்றி சே.வெங்கடசுப்ரமணியன்
நன்றி ராஜி
நன்றி பாலகுமார்
நன்றி சுரேகா
நன்றி ஜாக்கி
இப்படியா ? நெஜம்மா இந்த ஆங்கில் ரொம்ப பயமாவும் அருவருப்பாவும் இருக்குங்க .நம் எல்லார் முகத்திலேயும் தான் ஒட்டி வச்சுருக்கே இளிச்சவாயின்னு
Exactly this is a black humour!!
போக்கிரி படத்துல நெப்போலியன் சொல்வார் " வாய்யா, அங்க செத்தவன் குடும்பம் அழுதுட்டு இருக்கு. உனக்கு எதுகை மோனை கேக்குதா?". அந்த பத்திரிக்கை காரனுக்கு, அது ஒன்னும் சொந்த குடும்பம் இல்லயே. யரோ தான? அவனுக்கு தேவை அவன் பத்திரிக்கை விற்கனும். அதுக்கேத்த மாதிரி எழுதனும் அவ்வளவுதான். குசும்பன் என்ற Blog Humor பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்
Post a Comment