திரும்பவும் நம்ம ஹீரோ வருகிறார். எங்கே? திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக! அப்படின்னா என்னா? பேக் போர்சனை காட்டிக்கிட்டா? ச்சே ச்சே அவரு என்னா ஹீரோயினா அப்படி எண்ட்ரி ஆக? இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காரு!
ஏன் இப்படி ஒரு நிலமை? சொய்ங்ங்ங்ங்ங்.. சில பல வருடங்களுக்கு முன்னாடி, இண்டர்நெட்டில் எல்லாம் ரிசல்ட் பார்க்கும் பழக்கம் வராத காலகட்டத்தில் +12 படிச்சார் நம்ம ஹீரோ. எங்கே படிச்சாரு படிக்கிறமாதிரி நடிச்சார். ஹீரோ ஸ்டேட் பர்ஸ்ட் ரேங் வாங்கனும் பேப்பரில் அவரு போட்டோ வரனும் என்று கனவும் கானும் அம்மா. அந்த அம்மாவின் கனவில் ஒரு லாரி டிப்பர் மண்ணை கொண்டுவந்து கொட்டினார் நம்ம ஹீரோ! எப்படி?
ஹீரோவின் போட்டோ பேப்பரில் வரனும் என்று ஆசைப்பட்டா, நம்ம ஹீரோ அவரோட நம்பரையே பேப்பரில் வராம செஞ்சுட்டார்! எப்படி பார்த்தாலும் நம்ம ஹீரோ நம்பர் பேப்பரில் மிஸ் ஆகியிருக்கு, சரி மாலை பேப்பரில் தான் மிஸ் ஆகிட்டு காலை பேப்பரிலாவது வந்திடும் என்று நினைச்சா அதிலும் மிஸ் ஆயிட்டு, ஹீரோ பெயில் ஆன விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு, நம்ம ஹீரோவை யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் நம்ம ஹீரோவுக்கு சேம் சேம் பப்பி சேம்மா போச்சு...அப்படியே கொல்லை பக்கம் போனவரு வயலுக்கு அடிக்க வெச்சிருந்த டெமக்ரானையும் இன்னொரு மருந்தையும் மிக்ஸ் செஞ்சு கருமாந்திரமா இருந்த அந்த கலவைய மூக்க பொத்திக்கிட்டு ஒரே கல்பா குடிச்சிட்டு சமத்து புள்ளையா போய் அவுங்க சித்தப்பா வீட்டில் உட்காந்துக்கிட்டார்.அவுங்க எல்லாம் பெயில் ஆன கவலைய காட்டிக்காம ஹீரோவை தேத்துவதிலேயே குறியா இருந்தாங்க, டக்குன்னு பூச்சி மருந்து ஸ்மெல் அடிச்சதை சித்தப்பா மோப்பம் புடிச்சு, ரெண்டு அறை விட்டு வண்டியில் தூக்கி முன்னாடி வெச்சிக்கிட்டு கொண்டு போய் போட்டாரு அருகில் இருந்த ஹாஸ்பிட்டலில், ஹீரோவுக்கு கொஞ்சம் கொஞ்சமா எங்கேயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு, ஒரு பக்கெட்டில் உப்பை கொட்டி கரைச்சு வாயில் ஊத்தவந்தா ஹீரோ வாயை திறக்க மாட்டேங்கிறார்.
இது சரியாவராதுன்னு டாக்டர் ஒரு புனலில் டியூப் கனெக்ட் செஞ்சமாதிரியும் அதில் ஒரு மரக்கட்டையும் இருந்ததை ஹீரோ வாயில் உட்டு அதில் உப்பு கரைசலை ஊத்தி வாந்தி எடுன்னா, ஹீரோ என்ன மாசமாவா இருக்கிறார் வாந்தி எடுக்க? ஹீரோவுக்கு வாமிட் வரல. டாக்டர் அந்த புனலை அப்படியோ ஒரு சுத்து சுத்தினா அடியிறு வரை போய் நின்ன டியூப் அப்படியே உள்ளே ஒரு சுத்து சுத்தி பிரட்டிக்கிட்டு வாமிட் வந்துச்சு திரும்ப உடுடாங்கடா அந்த டீயுபை, திரும்ப ஊத்துங்கடா அந்த உப்பு கரைசலைன்னு விளையாடிக்கிட்டு இருக்காங்க, ஹீரோ குடம் குடமா வெளியில் எடுக்கும் உப்பு கரைசலை புடிச்சு மோந்து பார்த்துட்டு இன்னும் பூச்சி மருந்து ஸ்மெல் இருக்கு இருக்குன்னு அந்த ஸ்மெல் இல்லாம தண்ணி வரும் வரை இந்த விளையாட்டு நடந்துச்சு.
அப்புறம் என்ன என்னமோ செஞ்சு ஹீரோவை டயர்ட் ஆக்கி கொண்டு போய் படுக்கையில் போட்டுவிட்டார்கள். மயக்கம் எல்லாம் தெளிஞ்சு கண் முழிச்சு பார்த்தா ஹாஸ்பிட்டல் முழுவது ஊர் சனங்க மற்றும் சொந்தகாரனுங்க கவலையோட நிக்கிறாய்ங்க. ஹீரோ பிழைச்சதுக்காகயா இல்லை இப்படி செஞ்சதுக்காகயா என்று தெரியாம ஹீரோ அப்படியோ தூங்க ஆரம்பிக்கிறார்.
வீட்டுக்கு போனாலும் சாப்பாடு எல்லாம் கிடையாது எது குடிச்சாலும் தொண்டையில் இருந்து வயிறு வரை ஒரே எரிச்சல், அடபாவிங்களா இனி எத்தனை சப்ஜெக்டில் பெயில் ஆனாலும் பூச்சிமருந்தை மட்டும் குடிக்கமாட்டேன் டா என்ற சபதத்தோடு ஊரை விட்டு போய் ஒருவருடம் அவரோட மாமாவீட்டில் இருந்து படிச்சி பாஸ் ஆகி காலேஜில் சேர்ந்தபிறகுதான் ஊர் பக்கமே வந்தார்.. அதன் பிறகு சக்கையா படிச்சு ஹீரோ காலேஜ் படிப்பை முடிச்சார்.
பெயில் ஆனவன் இனி என்ன படிச்சு உருப்பட போறான் என்று நினைச்சவங்க எல்லாம் ஊரில் அவனை நல்லபடியா உதாரணமாக காட்டும் அளவுக்கு கஷ்டப்பட்டு முன்னேறி இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார். 7G ரெயிண்போ காலனியில் ஹீரோவிடம் உனக்குன்னு ஒரு தனி திறமை இருக்கும் அதை கொண்டுவந்து நீ பெரிய ஆளா ஆகனும் என்று சொன்ன ஹீரோயினையே லவ்ஸ் & டூயட் எல்லாம் பாடி ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு கல்யாணமும் செஞ்சு இப்ப ஜாலியா இருக்கார் ஹீரோ, அப்ப அப்ப +12 ரிசல்ட் வரும் பொழுது மட்டும் இந்த ப்ளாஸ் பேக் அவருக்கு நினைவுக்கு வந்துட்டு போகும்.
நொட்ட நீதி: பெயில் ஆனால் தான் இப்படி டேமேஜர் ஆக முடியும்:))
நல்ல நீதி: தோல்வியினால் எதுவும் முடிந்துவிடுவது இல்லை...
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
இப்ப எல்லாம் வருசம் வேஸ்ட் கூட ஆகுறதில்லண்ணே. உடனே எழுதச் சொல்லிடுறாய்ங்க..
முகிலன் அப்ப நான் மட்டும் தான் இளிச்சவாயனா என்று கேட்டுவிடுவேன் என்றுதானே நினைக்கிறீங்க...ஹி ஹி ஹி
கதைக்கும் எனக்கும் வழக்கம் போல் சம்மந்தம் இல்லை:)))
செம்ம குசும்பு கொப்பளிக்கிறது உங்கள் எழுத்துக்களில்..... சரி இது சொந்தக்கதையா????
சரி சரி .. எப்டின்னாலும் “கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜர்னா” சொல்லவே வேனாம்.. நடத்துங்க.. நடத்துங்க..
தேர்வுன்னாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது மனசில. இன்னும்கூட எனக்கு கனவு வரும் பரிட்சை ஹாலில் உட்கார்ந்து விடை தெரியாமல் முழிக்கின்றமாதிரி!!!!
::)))
ஹீரோயினையே லவ்ஸ் & டூயட் எல்லாம் பாடி ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு கல்யாணமும் செஞ்சு இப்ப ஜாலியா இருக்கார்
//
யாரு சோனியா அகர்வால் ???
தோல்வியினால் எதுவும் முடிந்துவிடுவது இல்லை...
//
நீங்க உயிரோட இருக்கும் போதே தெரியுது எதுவும் முடிந்துவிடவில்லைனு :)))
//நீ பெரிய ஆளா ஆகனும் என்று சொன்ன ஹீரோயினையே லவ்ஸ் & டூயட் எல்லாம் பாடி ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு கல்யாணமும் செஞ்சு இப்ப ஜாலியா இருக்கார் ஹீரோ//
இப்படி சொன்ன ஹீரோ, இதோ இப்படி சொல்றாரே,
//இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார்//
இதைப் படிச்சப்புறமும் காதல் மனைவி சந்தோஷமா இருக்காங்களா....(ஏதோ, நம்மால் முடிந்த நாரதர் வேலை!)
ஏன்,+2 தேர்வு முடிவு வந்ததும் உங்க ஹீரோவுக்கு ஞாபகம் வந்துட்டதா? :-)
அடப்பாவி!!!
ஒருகொலகாரப் பயபுள்ள சாவகாசமா இத்தனைநாளா வச்சிக்கிட்டு இருந்தேன்?!?!?!
(அடுத்தவனை செஞ்சா என்ன,தன்னையே அழிச்சுக்க நெனச்சா என்ன??)
எம்.எம்.அப்துல்லா said...
அடப்பாவி!!!
ஒருகொலகாரப் பயபுள்ள சாவகாசமா இத்தனைநாளா வச்சிக்கிட்டு இருந்தேன்?!?!?!
(அடுத்தவனை செஞ்சா என்ன,தன்னையே அழிச்சுக்க நெனச்சா என்ன??)/
ரிப்பீட்ட்டூஊஊஊஊஊஊஉ!
//கதைக்கும் எனக்கும் வழக்கம் போல் சம்மந்தம் இல்லை:)))
//
மேனேஜர் சார் சொல்லிட்டா நம்பிட வேண்டியது தான்
//கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார்//
நாதிர்தினா திரணணா திரணா
அப்போ நான் டேமேஜர் ஆகாததுக்கு இது தான் காரணமா???
இப்பவே போய் இன்னொரு தடவை +2 எழுதி பெயில் ஆகிறேன்..
//இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார்.//
ஒத்துக்கறேன் பாஸ்.. அந்த ஹீரோ நீங்க இல்லனு :))))
//இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார்.//
அண்ணே உங்க கம்பெனியில மாருதி வேனும் செல்போனும் கொடுத்திருக்காங்க போலயே? :)))
//அண்ணே உங்க கம்பெனியில மாருதி வேனும் செல்போனும் கொடுத்திருக்காங்க போலயே? :)))///
ஆது இது அது இல்லை...
சீரியஸான பதிவு... நன்றி
(அறியப்படும் நீதி: வழக்கமான குசும்பு இதில் குறைவு :))
அறியப்படும் நீதி: டெமக்ரானை குடிச்சா கரடி சாவாது :)
////ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார்.////
பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு பியூன் வேலை கொடுங்களேன் டேமேஜர்!
//ஒத்துக்கறேன் பாஸ்.. அந்த ஹீரோ நீங்க இல்லனு :))))
//
குசும்பா, இன்னுமாய்யா இந்த உலகம் உன்னை நல்லவன்னு நம்புது!!!!!!!!
sir ennaku oru job vaangi kodunga .. as a test engineer.. since u r damager....can u ..? Banu
நீயுமா மாமா பெயிலான.? சேம்.. சேம் பப்பி சேம்.!
நானு பெயிலானதும் சாந்திரம் வரைக்கும் வீட்டுக்குப் போகாம மத்த பெயிலானதுங்களோட சேந்துகிட்டு சிகரெட் புடிச்சு ஊதித் தள்ளிவிட்டு அப்புறமா சோகமா மூஞ்சியை வச்சிக்கிட்டு 'துடைப்பக்கட்டைக்கு' பயந்துகிட்டே போனேனா?
'ஐயோ பாவம் புள்ளையே சோகமா இருப்பான், மேக்கொண்டு ஏன் ஏசிக்கிட்டு.. ரைட்டு விடு'ன்னு சொல்லி முட்டை தோசை பண்ணிக்கொடுத்தாங்க எங்க அம்மா.!
அப்பாலிக்கா எப்பிடியோ பெரிய படிப்பெல்லாம் படிச்சு, இன்னிக்கு ஒரு பெரிய கரண்டு கம்பெனில டேமேசரா இருக்கேன்னா பாத்துக்கயேன். இதுலயும் சேம் சேம்..!!
:)) சம்மந்தமே இல்லாம ஏன் சம்மந்தம் பத்தி கமெண்ட் போடறீங்க..? :)))
டெமக்ரான் எல்லாம் குடிச்சா பூச்சி தான் சாகும்; ஹீரோவுக்கு வேற வேற வேற .... :-)
"மயக்கம் எல்லாம் தெளிஞ்சு கண் முழிச்சு பார்த்தா ஹாஸ்பிட்டல் முழுவது ஊர் சனங்க மற்றும் சொந்தகாரனுங்க கவலையோட நிக்கிறாய்ங்க. ஹீரோ பிழைச்சதுக்காகயா இல்லை இப்படி செஞ்சதுக்காகயா என்று தெரியாம ஹீரோ அப்படியோ தூங்க ஆரம்பிக்கிறார்."
ஊர் சனங்க பிழைச்சதுக்காகத்தான் கவலைப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்தக் கலாய்ப்பு கலாய்க்கிறீங்க... அவங்கள மட்டும் சும்மா விட்டா வைச்சிருந்திருப்பீங்க..:)
Post a Comment