அட்சயத்ருதியை அன்னைக்கு தங்கம் வாங்கினா அந்த வருசம் முழுவது தங்கமா வந்து சேருமா சேராதா என்ற நம்பிக்கைக்குள் நாம் நுழைய வேண்டாம், இந்த தங்கம் விற்பனையில் நடக்கும் கொள்ளையை மட்டும் பார்ப்போம்.
8கிராம் தங்க நகை வாங்கினால் 1 கிராம் சேதாரம் என்று ஒன்னு போடுறாய்ங்க, என்னடா சேதாரம் என்றால் நகையை செய்யும் பொழுது கொஞ்சம் தங்கம் வேஸ்டா போவுமாம் அதுக்குதான் போடுவது சேதாரம் என்கிறார்கள், நகை செய்யும் பொழுது 0.01 மில்லி கிராம் தங்கத்தை கூட வேஸ்ட் ஆகவிடமாட்டார்கள். சரி அந்த வேஸ்டேஜையாவது கொடுங்க நாங்க உருக்கி தங்க பஸ்பம் சாப்பிட்டாவது கொஞ்சம் கலரை மெருகேத்திக்கலாம் என்றால் அதையும் கொடுக்க மாட்டார்கள்.
எல்லா பொருட்களுக்கும் இருக்கும் எடைக்கு மட்டுமே நாம் காசு கொடுத்து வாங்குகிறோம் ஆனா தங்கம் வாங்கும் பொழுது மட்டும் இருக்கும் எடையை விட எக்ஸ்ட்ரா காசு கொடுக்கிறோம்.
இங்கு (துபாயில்)நகை வாங்கும் பொழுது இருக்கும் எடைக்கு மட்டுமே காசு கொடுக்கிறோம் சேதாரம் என்ற ஒன்னுமே இல்லை, ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் வித்தியாசம் இல்லை, இந்தியாவில் என்ன விலையோ அதே விலைதான் கிட்டத்தட்ட இருக்கும். அது எப்படி இங்கு மட்டும் இப்படி விற்பனை செய்யமுடிகிறது???? இவ்விங்களுக்கு மட்டும் சேதாரம் ஆவது இல்லையா?
கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா? நம்ம ஊரில் மட்டும் ஏன்? இந்த கொள்ளையை கோர்ட்டில் ஏதும் வழக்கு மாதிரி போட்டு தடுக்க முடியுமா? இதில் இருக்கும் சூது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.
டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வான்னு யாரும் சொன்னா, அப்படியே என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!:)))
அதிஷாவுக்கு: பிளாக்குன்னு ஒன்னு வெச்சிருந்தா பொதுநலனுக்காக பொங்கனும் என்று பித்தானந்தசாமிகள் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இல்லாட்டி பிளாக்கரா சேத்திக்கமாட்டாய்ங்களாம், அதுக்காகதான் இந்த பொங்கலூர் பழனிசாமி அவதாரம். இன்னும் பல அவதாரம் எடுக்கலாம் என்று ஐடியா இருக்கு உங்கள் மேலான ஆலோசனைகள் வேண்டும்:)))) (மகனே இதுக்கு நன்றி நல்ல பதிவு கேபிள்ஜின்னு பின்னூட்டம் போட்ட கொன்னுபுடுவேன் கொன்னு)
37 comments:
So... துபாய்ல ஒரு தங்கமகன் வாழ்ந்துட்டு இருக்கான். சரி ரைட்டு...
என்னங்க இது,கிஸ்மத்துக்கு ஒரு போன் போட்டு கேட்டா சொல்கிறார்.
/டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வான்னு யாரும் சொன்னா//
வீட்டுக்கார அம்மாவினால் எனக்கு சேதாரம் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.
:)
Boss, ingae petrol velai kooda jasthi... dubai'le kammi.... adutha idea okieva?
குசும்பரே,
நீங்க தங்கமா ? சரி... தீப்பொறி ஆறுமுகத்த ஒரசுனா தீ வரும்னு வைக்கப் போர்ல உரசுவாங்களே.. அப்படி உம்மை உரைகல்ல நல்லா போட்டு உரசிப் பாத்துடுவோம்.
இதுக்கு யாராரு வரீங்கப்பா ? உரைகல்லுக்கு ( நல்லா ஒரு அஞ்சடி நீளத்துக்கு ) வாங்கனும். என் பங்குக்கு 50 ரூபா
இந்த விவரம் எல்லாம் முன்னாடியே சொல்லியிருந்தா ரங்ஸை துபாய் பக்கம் திரும்ப சொல்லியிபோம்ல :)
நன்றி,
நல்ல பதிவு அதிஷா.
நீங்க வேற.. இப்போ எல்லாம் தியேட்டர்ல படம் பாக்க போனா முதல் விளம்பரமே அட்சயத்ருதியைக்கு தான் வருது.. அதுலயும் அந்த ஜோஸியக்காரர டிவீல பாக்கவே சகிக்காது.. இதுல அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல வந்து வெண்மை தான் தூய்மை தெய்வீகம்னு லிஸ்ட் போட்டுட்டு கடைசில அட்சயத்ருதியைக்கு ப்ளாட்டினம் வாங்க சொல்வாரு பாருங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த கொசுத்தொல்லை நிஜமாவே தாங்கமுடியலை :(((
அவசியமான பதிவு கவிஞரே!! :-)))
//பொங்கலூர் பழனிசாமி அவதாரம்//
இந்த அவதாரத்த ஏன் செலக்ட் பண்ணியிருக்கீங்கன்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் :))
நம்ம ஊரில் மட்டும்தாங்க சேதாராம், சேதாரத்திற்கு சேதாரம், கூலி எல்லாம் போடுவாங்க.
8 கிராமுக்கு 1 கிராம் என்பது கம்மி. இது கிட்டதட்ட 12% தான் வரும். சில கடைகளில் 16% முதல் 18% வரை வாங்கறாங்க. அதுவும் KDM நகை, 22 CT என்று சொல்லி அதை வாங்குவாங்க.
ஒ... இதுதான் பொங்கலா...???
தல ரைட்டு ரைட்டு...
//என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!//
மொத்தமா வேண்டாம் பாஸ். உங்க குசும்புக்கார மூளை மட்டும் போதும் :)
/
Jeeves said...
குசும்பரே,
நீங்க தங்கமா ?
/
:))))))))
நன்றி நல்ல பதிவு.
ஒரு தங்கமே
தங்கத்தைப் பற்றி
எழுதுகிறதே
அடடே!
நன்றி மோனி!
நன்றி வடுவூர் குமார், அது ஆருங்க கிஸ்மத்?:)))அவரு கிளியனூர் இஸ்மத்துங்கோ!
நன்றி கோவி, அதைப்போய் சேதாரம் என்று
சொல்லமுடியுமா?:))
நாட்டி நன்றி சூப்பர் ஐடியா:))
ஜீவ்ஸ் சித்தா உரசுவதுக்கு முன்பே 8 அங்குல
உயர தங்கத்தை குறைச்சிட்டியே ராசா:)) என் உயரம்
5 அடி 8 அங்குலம் அதுக்கு தகுந்த மாதிரி நல்ல
கல்லா வாங்குங்க..தீபிகாபடுகோன் கூட ஓக்கேதான்:))
சின்ன அம்மிணி அடுத்த தபா வாங்க, இங்கு கிடைக்கும்
தங்கம் மிகவும் சுத்தமானது. இந்தியாவில் கிடைக்கும் தங்கத்தை
18k ரேட்டுக்குதான் எடுத்துப்பார்கள்.
நன்றி கிங்
நன்றி G3 நல்ல வேளை வெண்மைக்கு ரின் சோப்பு வாங்குங்க
இல்லாட்டி பால் அல்லது தயிர் வாங்குங்க டாய் பிளாட்டினமா??
ங்கொய்யா கொடுக்கிற காசுக்கு மேல கூவுவார் போல:))
லேகா மோதிர கையால் குட்டா? குட்டுங்க குட்டுங்க:)))
செந்தில்வேலன் சும்மாதான் விசேசம் ஒன்னுமில்லை:)))
இராகவன் அண்ணே 18% வரையா அவ்வ்வ்வ்
சுகுமார் புரியலிங்களே?
நன்றி rajasurian அவ்வ்வ்வ்வ்வ் இருக்கிறதை கேளுங்க பாஸ், இல்லாததை எப்படிங்க தரமுடியும்:)
நன்றி மங் சிங்
நன்றி இளா கவிஞரே:)))
// சுகுமார் புரியலிங்களே? //
தல.. பொதுநலனுக்காக பொங்கனும்னு சொல்லி இருக்கீங்களே அதைதான் சொன்னேன்...
உங்கள் கவனத்திற்கு...
http://wwwrasigancom.blogspot.com/2010/05/blog-post_07.html
நல்ல பதிவு. நன்றி கேபிள்ஜி.
இப்படிக்கு,
வாழப்பிடிக்காதோர் சங்கம்
முஸ்தபா ஜுவல்லரிக்கு எதிரான இந்தப் பதிவுக்கு ஆலுக்காஸ்ல எவ்ளோ பணம் வாங்கினிங்க மிஸ்டர் குசும்பன்? :)
ஒ... இதுதான் பொங்கலா...??? தல ரைட்டு ரைட்டு...
//
குசும்பன் ரொம்ப பொங்கிதான் தங்கம்”மாதிரி” ஜொலிக்கிறார்
நீங்களும் பொங்குங்க :)
என்னங்க இது,கிஸ்மத்துக்கு ஒரு போன் போட்டு கேட்டா சொல்கிறார்.
//
போன் போடுறது தான் போடுறீங்க 10 மாடியில் இருந்து கிழே போடுங்க :)
துபாயில் சேதாரம் இல்லையாம் வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வாங்கனு ”அன்போடு” தங்கமணி சொல்லி அனுப்பிருக்காங்க :)
இங்க சேதாரம் இல்லைனு தெரிஞ்ச உடன் நம்ம சேதாரம் ஆயிடுறோம் :)
நல்ல கேள்விதான். யாரு பதில் சொல்றது.?
//////டிஸ்கி: என்னது துபாயில் சேதாரம் இல்லையா வரும் பொழுது எனக்கு தங்கம் வாங்கி வான்னு யாரும் சொன்னா, அப்படியே என்னையே நானே எடைபோட்டு மொத்தமாக கொடுத்துவிடுவேன் ஜாக்கிரதை!:)))//////////
அப்படினா நீங்க நடமாடும் தங்க சுரங்கம் என்று சொல்லுங்க !
ஏலே மக்கா பார்த்துல நெறய பயபுள்ளைக ரொம்ப பேரு கச்சப்பாடுல இருக்காணுவ . அப்பறம் தங்கக் கைய காணம் தங்கக் பய்யக் காணம் என்று கத்தினாலும் வராதுல .
சமீபத்துல எங்க வூட்டுல போயி தங்கம் வாங்கினப்ப 20% சேதாரம் போட்டிருக்கானுவ. யாரு கேக்குறது?
உங்கள எடை போடுறப்ப சேதாரம் உண்டா?
உங்கள எடை போடுறப்ப சேதாரம் உண்டா//////
ஆதாரத்துக்கே ஆபத்தான கேள்வி.
நல்ல பதிவு. நன்றி பத்ரி.
நல்ல பதிவு,
நன்றி ரவி.
இங்கயெல்லாம் அப்படிதான்....
//அவசியமான பதிவு கவிஞரே!! //
:)))))))))
//இங்கு (துபாயில்)நகை வாங்கும் பொழுது இருக்கும் எடைக்கு மட்டுமே காசு கொடுக்கிறோம் சேதாரம் என்ற ஒன்னுமே இல்லை, ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் வித்தியாசம் இல்லை, இந்தியாவில் என்ன விலையோ அதே விலைதான் கிட்டத்தட்ட இருக்கும். அது எப்படி இங்கு மட்டும் இப்படி விற்பனை செய்யமுடிகிறது???? இவ்விங்களுக்கு மட்டும் சேதாரம் ஆவது இல்லையா?
//
சேதாரமும் இல்லை.தங்கமும் கலப்படமில்லை.22 கேரட் தங்கம்ன்னா 20 கேரட் முத்திரையோட சரியாக இருக்கும்.
இந்தியாவுல தங்க வியாபாரிகள்,தங்கம் செய்பவர்கள் தங்கத்தை பார்த்தவுடனே இந்தியாவா?வெளிநாடா கண்டுபிடிச்சிருவாங்க போல இருக்குது.ஒரு தடவை கையில இருந்த பிரேஸ்லெட் பார்த்துட்டு இந்தியா இல்லைன்னுட்டார் கடைக்காரர்:)
அப்புடின்னா நீங்க ஒரு நடமாடும் தங்க சிலைன்னு சொல்லுங்க...
யாரும் சேதாரம் பன்னாம
பாத்துக்குங்கையா
ஒருகுறுப்பாவே அழையராங்கிய
தங்கம்... தங்கம்...ம்னு...
//அதுக்காகதான் இந்த பொங்கலூர் பழனிசாமி அவதாரம். //
எப்ப இருந்து பொங்கலூர் பழனிசாமி ஆதரவாளரா மாறுனீங்க? நீங்க எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
பொங்கலூர் பழனிசாமி கோவையை சேர்ந்தவர். தற்போதய ஊரக தொழில் மற்றும் கால்நடை துறை அமைச்சர்.
அவதாரம் பலமாதான் இருக்கு :-)
:)..:)
தோழர் குசும்பன் ஓவராக பொங்கிவிட்டீர்களோ.. பதிவர்கள் அனைவரும் உடனடியாக உலக தங்க கவுன்சிலுக்கு தந்தி அடிக்கவோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்பவோ ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கலாம்! ச்சே வடை போச்சே
சுகுமார் பனிதுளியில் உங்கள் கமெண்டை
பார்த்தேன் மிக்க நன்றி!
நன்றி ஏழு
மாமா என் பெயரில் நானே கடை வெச்சிருக்கும்
பொழுது ஏன் மாம்ஸ் மத்த கடையில் பணம் வாங்கனும்!
நன்றி மின்னல், உங்க போனை கொடுங்க போட்டுவிடலாம்!
நன்றி ஆதி
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி முகிலன்
நன்றி ரவி அண்ணாச்சி
நன்றி அசோக்
நன்றி ராஜ நடராஜன், 22kன்னுதானே முத்திரை போட்டு இருக்கும்!
நம்ம ஊர் ஆட்களுக்கு நன்றாக தெரியும் துபாய் தங்கம் பற்றி உரசி
பார்க்காமலே கண்டுபிடிச்சிடுவாங்க!
நன்றி செந்தில்குமார்
நன்றி குறும்பன்
நன்றி கண்ணகி
நன்றி பா.ராகவன்
அது ஏன் துபாய் தங்கம் மட்டும் பளிச்சினு, கலரா இருக்கு????
Post a Comment