Wednesday, May 12, 2010

தேர்வுக்கு துணை வருவான் தென்றல் நண்பன்!

எங்கள் ஸ்கூல் கோ-எஜிகேசன் ஸ்கூல் ஆகையால் முழுபரிட்சை ரிசல்ட்டை விட கால் பரிட்சை,அரை பரிட்சை, மாத தேர்வுங்களுக்குதான் பயம் இருக்கும்.ஏன்னா? முழுபரிட்ச்சை ரிசல்ட் ஒன்லி பாசா?பெயிலான்னுதான் தெரியும் மார்க் வராததால் அந்தபயம் இருக்காது, ஆனா இந்த நடுவில் வரும் குட்டிசாத்தானுங்க என்றால் ஒரே டென்சன் தான். பேப்பரை கொடுக்கும் பொழுது மார்க்கை சொல்லி பொம்பள புள்ளைங்க முன்னாடி அடிவிழுமே அதுக்காக இருக்கும் டென்சன் தான், அப்படியே சில வருடங்களில் அது பழகி போய்விட்டது.இந்த டென்சன் ஒருபக்கம் என்றால் அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு வான்னு ஒரு அட்டைய கொடுப்பாய்ங்களே அது ஒரு பெரிய டென்சன் இதுக்காகவே பரிட்சை என்றால் ஒரு பயம் வந்துவிடும்.சரியா ஸ்கூல் கிளம்பும் நேரம் அவசர அவசரமாக அட்டைய காட்டி கையெழுத்து வாங்கிட்டு போனாலும் மாலை வீட்டுக்குவரும் பொழுது அர்சனை பலமா இருக்கும்.


இது எல்லாம் பத்தாவது வரும் வரைதான். அதன் பிறகு ஒரு டெக்னாலஜியை கண்டுபிடிச்சேன் முதலில் கொடுத்த பிராக்கிரஸ்ரிப்போர்ட் கார்ட் தொலைஞ்சுட்டுன்னு சொல்லி வேற புது பிராக்கிரஸ் ரிப்போர்ட் ஒன்னு வாங்கி அதில் இருக்கும் ஒரிஜினல் மார்க்கில் நான் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன், பழைய ரிப்போர்ட்டில் நல்ல மார்க்கா நானே அதில் போட்டு அதை அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு இருந்தேன்.


பத்தாம் வகுப்பு வரை எக்ஸாம் எழுதும் பொழுது பெஞ்சின் இரண்டு மூலைகளிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன், இப்படிதான் உட்கார வைப்பாங்க பெரியவங்களுக்கு அப்பவே தெரியும்போல ஒரு ஆணின் முன்னேற்றத்துக்கு பெண் எந்த வகையிலும் உதவி செய்யமாட்டா என்று:). அதுவும் பொண்ணுங்களிடம் நமக்கு இருக்கும் ரொம்ப நல்லபெயருக்கு பேப்பரை காட்டிட்டுதான் மறுவேலை பாப்பாங்க:( சரி இனி பொண்ணுங்களை நம்பினால் வேலைக்கு ஆவாதுன்னு எக்ஸ்ட்ரா ரெண்டு அடிஸ்னல் சீட் வாங்கி அதில் முதல் நாளே பித்தாகரஸ் தேற்றம் போன்ற கடினமான கேள்விகளுக்கு எல்லாம் பதிலை எழுதி அதை எடுத்து போய் திரும்ப வேறொரு பேப்பரில் எழுதி கொடுத்துக்கிட்டு இருந்தேன்,கூட படிச்ச ஒரு மாங்காமடையன் திரும்ப எழுத அலுப்பு பட்டுக்கிட்டு வராத கேள்விக்கு எழுதி வந்த பக்கத்தை மட்டும் அடிச்சிட்டு பேப்பரை கட்டி கொடுத்துட்டான், அதில் இருந்து அடிஸ்னல் ஷீட்டில் அப்பொழுது ஹாலுக்கு வரும் ஆசிரியரும் கையெழுத்து போட்டு தரனும் என்று ரூல்ஸ் போட்டுட்டாய்ங்க.


+1 +12 படிக்கும் பொழுது எல்லாம் ஆசிரியர் வெவரமா பொண்ணுங்க பக்கத்தில் நம்மை உட்காரவிடவில்லை. ஆனா பேப்பர் கொடுக்கும் பொழுது மட்டும் நல்லா நாக்கைபுடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டு அடிச்சு கொடுப்பாங்க ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் வடிவேல் மாதிரி நீ அடி நான் ஒரு கணக்கு வெச்சுக்க வேண்டாமா என்கிற லெவலுக்கு வந்துட்டோம். என்ன இருந்தாலும் எக்ஸாம் என்றால் கொஞ்சம் பயமாகதான் இருக்கும் நமக்கு பின்னாடி உட்காரும் செந்தில் ஒழுங்கா படிச்சுக்கிட்டு வரனுமே என்று ரொம்ப டென்சனா இருக்கும். அவனை மட்டும் நம்பி போக முடியுமா அவன் எழுதி முடிக்கும் வரை சும்மாவா உட்காந்திருக்க முடியும் என்று கொஞ்சம் பிட்டும் பிரிப்பேர் செஞ்சுக்கிட்டு போகனும் இப்படி ரொம்ப டென்சனா இருக்கும். நைட் முழுக்க கண் முழிச்சு கை வலிக்க எழுதிக்கிட்டு போன பிட்டில் இருந்து எந்த கேள்வியும் வராம இருந்தா மனசு எவ்வளோகஷ்டப்படும் என்று அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.


கல்லூரிக்கு வந்த பிறகு நாமலும் கொஞ்சம் இம்ரூவ் ஆகி புது புது மெத்தேட் எல்லாம் யூஸ் செய்ய ஆரம்பிச்சோம், எங்கள் பூண்டி கல்லூரியில் பிட் அடிச்சு பிடிச்சிட்டா 3 வருடம் முடிக்கும் வரை செமஸ்டர் எழுத முடியாது, இருந்தாலும் அடங்கவில்லை. ஸ்கூல் போல என் பின்னாடி உட்காரும் பையன் பெயர் ஆனந்த், அய்யர் வூட்டு புள்ளநல்லா படிப்பான் ஆனா பேப்பரை கொடுக்க பயப்படுவான், ரெண்டு மூனு முறை கேட்டு பாப்பேன் தர பயப்படுவான், அய்யரே பேப்பரை தரல பிட்டை உன் கால் அடியில் போட்டுவிடுவேன்என்று வலுகட்டாயமாக பேப்பரை புடுங்கி எழுதுவேன். ரிசல்ட் வரும் பொழுது அவனை விட கூட மார்க் வாங்கியிருப்பேன், வாய் ஓயாம திட்டிக்கிட்டே இருப்பான்.எலே நீ உன்னை மட்டும் நம்பி எக்ஸாமுக்கு வர, நான் உன்னை மாதிரி நாலு பேரை நம்பி வருகிறேன் எல்லோரிடம் இருந்தும் வாங்கி எழுதுவதால் தான் மார்க் கூட வருது நெக்ஸ்ட் டைம் வேண்டும் என்றால் நீயும் ட்ரை செய்யுன்னு சொன்னா போதும் ஓடிடுவான்.


ஒரு முறை எடுத்து போன பிட்டை வெச்சி 15 மார்க் கொஸ்டின் எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது, 5 மார்க் கொஸ்டின் பிட்டை கொடுக்க சொல்லி கேட்டான் பிரண்ட், இருடா எழுதிட்டு பேப்பரை தருகிறேன் என்றேன் இல்ல இப்பவே கொடு என்றான். சரின்னு பிட்டை கொடுத்தேன். வெளியில் வந்ததும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினான் ஏன் டா இந்த ஒரு பிட்டை படிச்சு எழுதங்காட்டியும் டைம் முடிஞ்சு போச்சுச்சு... பெரிசா எழுதினாலா என் கையெழுத்து என்னை மாதிரி அழகா இருக்கும், இதுல பிட் உன்னால புரிஞ்சுக்க முடியாதுன்னுதான் பேப்பரை தருகிறேன் என்றேன் நீதான் அடம்பிடிச்ச நான் என்ன செய்ய என்றேன்...

அப்புறம் ஒரு முறை பிராக்டிகளுக்கு எழுதிக்கிட்டு போன புரோகிராம் பிட்டில் அடுத்த லைன் என்று புரிய / போட்டு வரிசையாஎழுதி வெச்சேன், பிட்டை வாங்கி எழுதிய பிரண்ட் அந்த / சேர்த்து எழுதி அதை எண்டரும் செஞ்சு ஏகப்பட்ட எர்ரர் காட்டியதும் கடுப்பாகி வந்து அடிச்சான். இப்ப HCLல் வேலை பார்க்கிறான்:)

எழுதிட்டு போன பிட் எல்லாம் வந்துட்டா எதை முதலில் ஆரம்பித்து எதை கடைசியா முடிப்பதுன்னு ஒரு டென்சன் வரும் பாருங்க..அதை எல்லாம் சொன்னா புரியாது!அப்புறம் சில பேர் எந்த பிட் எங்க இருக்குன்னு அதுக்கு ஒரு பிட் எடுத்து வருவாங்க. இது உட்சக்கட்ட காமெடி.

இப்படிதான் நம்ம எக்ஸாம் வாழ்கை ரொம்ப டென்சனா இருந்தது.

டிஸ்கி: வினவு அண்ணா நீங்க ஆரம்பிச்சதுன்னு தெரியாம இப்படி விளையாட்டு தனமா, சந்தனமுல்லை கேட்டாங்கன்னு எழுதிட்டேன், இவன் சமூகத்தில் இருக்கும் களைன்னு இந்தியன் தாத்தா மாதிரி கிளம்பிடாதீங்க, இனி எக்ஸாம் எல்லாம் எழுத முடியாது:)

எக்ஸாம் டென்சன் பத்தி எழுதனுமாம்... இனம் இனத்தோடதான் சேரும் என்பதுமாதிரி என்னை மாதிரி பிர்லியண்ட் பாய்ஸ்

1)கார்க்கி (இவரு ஸ்டேட் அளவில் பர்ஸ்ட் மார்க் வாங்கியவர்)

2)அப்துல்லா (இவரு இந்திய அளவில் முதல் ரேங்க் வாங்கியவர்)

3) ஆதிமூலகிருஷ்ணன் (இவரு உலக அளவில் மெடல் வாங்கி சாதனை செய்தவர்) யோவ் இதிலும் வந்து சிக்சிக்மா இல்ல சிக்காம போவுமா அது இதுன்னு சீக்கு கோழியாட்டம் அனத்துன வாயிலேயே குத்துவேன்.

40 comments:

Anonymous said...

//இரண்டு மூளைகளிலும் இரண்டு பெண்கள் //

எல்லாருக்கும் ஒரு மூளைன்னா உங்களுக்கு மட்டும் ரெண்டு மூளை. அதான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க :)

said...

//எங்கள் ஸ்கூல் கோ-எஜிகேசன் ஸ்கூல் ஆகையால் //

me'க்கு பொறாமை பொறாமையா கம்மிங்க் :(

said...

/ஒரிஜினல் மார்க்கில் நான் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன், பழைய ரிப்போர்ட்டில் நல்ல மார்க்கா நானே அதில் போட்டு அதை அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு/

:-)))) நினைச்சே பாக்க முடியலை!! செம தைரியம்தான்!

said...

/வராத கேள்விக்கு எழுதி வந்த பக்கத்தை மட்டும் அடிச்சிட்டு பேப்பரை கட்டி கொடுத்துட்டான், /

அவ்வ்வ்வ்வ்வ்! :-) ஐடியாமணி!

said...

/நீ உன்னை மட்டும் நம்பி எக்ஸாமுக்கு வர, நான் உன்னை மாதிரி நாலு பேரை நம்பி வருகிறேன்/

என்னா தத்துவமப்பா! :-))

Anonymous said...

//1)கார்க்கி (இவரு ஸ்டேட் அளவில் பர்ஸ்ட் மார்க் வாங்கியவர்)

2)அப்துல்லா (இவரு இந்திய அளவில் முதல் ரேங்க் வாங்கியவர்//

இவங்க ரெண்டு பேரையும் இப்படி புகழ்ந்ததுக்குதான் வினவு கோபப்படணும் :)

said...

/வினவு அண்ணா நீங்க ஆரம்பிச்சதுன்னு தெரியாம சந்தனமுல்லை கேட்டாங்கன்னு எழுதிட்டேன்/

ஏங்க..வினவு போஸ்டை பார்த்தா அப்படியா தெரியுது...அந்த தேர்வு போஸ்ட்டும் செம கூல் போஸ்ட்தான்!
ஆனா, நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்க மாதிரி தெரியுதே...இதை ஆயில்ஸ் சொல்லலை...ஹிஹி...:))

said...

மிக்க நன்றி குசும்பன், மிகவும் பிடித்திருக்கிறது...இந்த இடுகை..செம ராக்கிங் போஸ்ட்! :-)

said...

kaarki, abdunne, aathinna moonu perumaaa? supparu... :-)

said...

இந்த பதிவு ரொம்ப பிடித்துள்ளது.நான் படித்தது பெண்கள் பள்ளி என்பதால் இதை படிக்கும் போது ரசித்து படித்தேன்.நன்றி!!

said...

//3) ஆதிமூலகிருஷ்ணன் (இவரு உலக அளவில் மெடல் வாங்கி சாதனை செய்தவர்) யோவ் இதிலும் வந்து சிக்சிக்மா இல்ல சிக்காம போவுமா அது இதுன்னு சீக்கு கோழியாட்டம் அனத்துன வாயிலேயே குத்துவேன்//

நம்ம ஆதி அண்ணே கேள்வித்தாளை வார்த்தை வார்த்தையா வரி வரியா படிச்சு முடிக்கிறதுக்குள்ளே பரிட்சை நேரமே முடிஞ்சிடுமாம் ;-)

said...

நைட் முழுக்க கண் முழிச்சு கை வலிக்க எழுதிக்கிட்டு போன பிட்டில் இருந்து எந்த கேள்வியும் வராம இருந்தா மனசு எவ்வளோகஷ்டப்படும் என்று அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்
//


சேம் பிளட் ::)))))))

said...

எந்த பிட்டு எந்த பகுதியில் இருக்குனு அதுக்கு தனியா ஒரு பிட்டு கொண்டு போயிருக்கேன் :))

said...

எக்ஸாமுக்கு முந்தின நாள் நோ கண்முழிச்சிங்.. நோ ரைட்டிங்..!

ஒன்லி, மினி ஜெராக்ஸ் ஆஃப் த புக்.
சிம்ப்ள் மெத்தடு.

said...

அம்மிணி சின்ன மிஸ்டேக் தானே அட்ஜஸ் செஞ்சுக்குங்க:))

ஆயில்யன் அதுல பல சிக்கல் இருக்குய்யா, அங்க படிச்சும் ஒரு புரோஜனமும் இல்ல, ஸ்விட் கடைகாரனுக்கு சர்கரை நோய் மாதிரி, நமக்கு இந்த புள்ளைங்க கூட சண்டை பிடிக்காம பழக இன்னைக்கு வரை தெரியல! அது ஒரு கலைபோல:((

சந்தனமுல்லை நாலு அடியில் இருந்து தப்பிக்கனும் என்றால் நாற்பது விதமா யோசிப்பதில் தப்பே இல்ல:))நன்றி

சின்ன அம்மிணி மூனாவது ஆள் பேரை கேட்டதுக்கே அடிவிழும் என்று முடிவு செஞ்சு விட்டுவிட்டீர்களா?:))

நன்றி முரளி

Mrs.Menagasathia நன்றிங்கோ!

KVR ஆதியை பற்றி தெரியாம பேசாதீங்க
அவரு பிட்ஸ் பிலானி, நட்ஸ் மாக்ரோனியில் எல்லாம்
கெஸ்ட் புரோபசர்.

மின்னல் என் இனம்மையா நீ!

ராஜூ, பிட்டுங்கிறது வீட்டில் சமைக்கு
சாப்பாட்டை போன்றது, மைக்ரோ ஜெராக்ஸ்என்பது ஹோட்டல் சாப்பாடு மாதிரி, அதில் ஒரு லவ்வ்வ் வராதுய்யா!

Anonymous said...

//3) ஆதிமூலகிருஷ்ணன் (இவரு உலக அளவில் மெடல் வாங்கி சாதனை செய்தவர்) //

உலகநாயகனை மிஸ் பண்ணீட்டனே :)

said...

ச்சே எப்படி எல்லாம் பிட் அடிச்சு முன்னேறி இருக்கீங்க மக்களே..பிட் அடிக்காமல் தான் நான் முன்னேறவே இல்லை போல...

said...

//ராஜூ, பிட்டுங்கிறது வீட்டில் சமைக்கு
சாப்பாட்டை போன்றது, மைக்ரோ ஜெராக்ஸ்என்பது ஹோட்டல் சாப்பாடு மாதிரி, அதில் ஒரு லவ்வ்வ் வராதுய்யா!//

சான்ஸே இல்ல :))))

said...

ஹா ஹா கலக்கல்

said...

//முதலில் கொடுத்த பிராக்கிரஸ்ரிப்போர்ட் கார்ட் தொலைஞ்சுட்டுன்னு சொல்லி வேற புது பிராக்கிரஸ் ரிப்போர்ட் ஒன்னு வாங்கி அதில் இருக்கும் ஒரிஜினல் மார்க்கில் நான் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன், பழைய ரிப்போர்ட்டில் நல்ல மார்க்கா நானே அதில் போட்டு அதை அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு இருந்தேன்.//

அடப்பாவி மக்கா.. என்ன கொடும சரவனா இது@@@@!!

said...

யோவ் கோத்துவுடுறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கேக்கப்படாதா??

said...

இடுகை பாதியில் முடிந்து விட்டது. பிட் அடித்து ஆளானவர்கள் இன்று அதை அசைபோடும்போது அந்தக் கல்வி எதற்கு உதவியிருக்கிறது என்று கொஞ்சம் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். குசும்பன், காமடிக்கு சார்லி சாப்ளினை ரோல்மாடலா வச்சுக்குங்க. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!

said...

சரவணா,

செல்லாது! செல்லாது!!!

""இப்படி பிட் எழுதி பாஸ் பண்ணவர்தான் இன்னைக்கு வெளிநாட்டுல பெரிய வேலைல இருக்காராருக்கும்""

said...

நண்பா,

ஆனா அந்த கோ எஜுக்கேஷன் .. ம்ம்ம் அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்.

said...

நன்றி குசும்பன்
மிகவும் பிடித்திருக்கிறது

:)

said...

மச்சி,
நாம எம்.எஸ் படிக்கிறப்ப மூணாவது செமஸ்டர்ல கொஸ்டின் அவுட் ஆச்சே. அதுக்கும் பிட் மட்டும் எழுதிட்டு வந்தானுங்களே சில பேரு. அதப்பத்தி ஏண்டா எழுதல?

said...

நீ பெரிய கேடி ஃபெலோ அண்ணே.! உலக மெடல் வாங்கிய கதை நாளை..

said...

நல்லாருக்கு இந்த குசும்பும்.

said...

தென்றல் நண்பன் யாருன்னு சொல்லவே இல்ல :)

said...

//இது எல்லாம் பத்தாவது வரும் வரைதான். அதன் பிறகு ஒரு டெக்னாலஜியை கண்டுபிடிச்சேன் முதலில் கொடுத்த பிராக்கிரஸ்ரிப்போர்ட் கார்ட் தொலைஞ்சுட்டுன்னு சொல்லி வேற புது பிராக்கிரஸ் ரிப்போர்ட் ஒன்னு வாங்கி அதில் இருக்கும் ஒரிஜினல் மார்க்கில் நான் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன், பழைய ரிப்போர்ட்டில் நல்ல மார்க்கா நானே அதில் போட்டு அதை அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு இருந்தேன்.
//

Boss, en friend oruthanum ithe mathiri seyvaan..

said...

போட்டாச்சு போட்டாச்சு..

http://www.aathi-thamira.com/2010/05/blog-post_12.html

said...

வாய்ப்புகளே இல்லை செமைய இருக்கு. நானெல்லாம் பிரின்சிபால் கையெழுத்துயையே போட்டு இருக்கிறோம் பாஸ் ......

நான் இது வரைக்கும் பிட், மைக்ரோ ஜிராக்ஸ் எல்லாம் நம்பியதில்லை....நாங்க எல்லாம் take it easy policy ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம் ல

said...

:)பிட்டெல்லாம் தென்றல் பாத்து தான் தயார் செய்வீங்களா ?

said...

உலகநாயகன் என்னா இம்புட்டு.. விடுங்க
ஆதி மனசு கஷ்ட்டப்படும்:)))

நன்றி அமுதா!

நன்றி ஆதவா

நன்றி பிள்ளையாண்டான்

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி அப்துல்லா, கேட்டேன் உங்களிடம் இருந்து
பதில் வரலை மெளனம் சம்மதம் என்று எடுத்துக்கிட்டேன்.

வினவு அண்ணா,இது சும்மா ஜாலிக்காக எழுதியது. நிஜமா
சொல்லனும் என்றால் டென்சனால் எழுத்துவராம ஒரு எக்ஸாம்
கோட் அடிச்சு அதன் பிறகு எக்ஸாம் என்றாலே பயம் வந்து
அதில் இருந்து மீண்டது ஒரு சோக கதை, அது ஏன் இங்கேன்னு
விட்டுவிட்டேன்!

உலகநாதன் நன்றி, (இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது)
கோ எஜீக்கேஷனில் படிச்சும் நம்ம ராசி ஒரு புள்ளைங்களும்
நம்மிடம் நட்பு பாராட்டாது பாஸ் அதுக்கு மச்சம் வேண்டும் போல,
நம்மை பார்த்தா எப்ப பார்த்தாலும் நாயை கண்ட பூனை மாதிரி மூஞ்சை
வெச்சிப்பாங்க!:(((

மச்சி நாம MS IT படிச்சதே ஒரு அதிசயம் அதை பற்றி எழுதினா
உ.த பதிவுக்கு போட்டியா வந்துடும் என்றுதான்:))

ஆதி மேன் குட் பாய்:))

இராமசாமி அண்ணே நன்றி

தென்றல் நண்பன் என்கிறது தமிழ் நோட்ஸ்ங்க! ராஜசூரியன்

முகிலன் நன்றி பாஸ்:)

டம்பி மேவி பிரின்ஸ்பால் கையெழுத்தா அடபாவி:))))

முத்துலெட்சுமி தமிழுக்கு பிட் என்றால் தென்றல், வேதியலுக்கு என்றால்
வெற்றி இப்படி ஒன்னு ஒன்னுக்கும் ஒரு நோட்ஸ்:))

said...

நல்ல பகிர்வு தல.

@ அப்துல்லா அண்ணே..

ப்ளீஸ் எழுதுங்கண்ணே.

said...

போஸ்ட் முழுக்கக் கலக்கல். என் பள்ளி, கல்லூரி நினைவுகளும் வந்து விட்டன.

யோவ் இதிலும் வந்து சிக்சிக்மா இல்ல சிக்காம போவுமா அது இதுன்னு சீக்கு கோழியாட்டம் அனத்துன வாயிலேயே குத்துவேன். //
ஹாஹாஹா... பாவம்ங்க அவரு.

said...

/

சின்ன அம்மிணி said...

//இரண்டு மூளைகளிலும் இரண்டு பெண்கள் //

எல்லாருக்கும் ஒரு மூளைன்னா உங்களுக்கு மட்டும் ரெண்டு மூளை. அதான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க :)/

ரிப்பீட்டு:))

said...

கோனார் நோட்ஸ் செமகடி...நான் பிட் அடிக்க எடுத்திட்டு போனது தென்றல் நோட்ஸ் தான்:))

said...

எக்ஸாம் - எந்த மொழியிலும் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை..

அது பிடிக்கனும்னா பாஸ் ஆகனுமாம்ல.. போங்கடா டேய்...

said...

//எங்கள் பூண்டி கல்லூரியில் பிட் அடிச்சு பிடிச்சிட்டா 3 வருடம் முடிக்கும் வரை செமஸ்டர் எழுத முடியாது, //

அட நம்ம பூண்டி புஷ்பம் மாணவரா நீங்க. நானும் அந்த கல்லூரி மாணவந்தாங்க.