ஹ்யூமர் என்பது நமக்கு அதிகம் வராத கலை. அதை நீங்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.
--பத்ரி
***********************************
அன்பு குசும்ப சித்தரே!! நீ எழுதின பதிவு எல்லாமே படித்திருக்கேன்.அதை விட உன் பின்னூட்டமும் என்னை குபீர்ன்னி பல சமயம் ஆபீஸ்ல சிரிக்க வச்சு என்னை மற்றவர்கள் மத்தியில் பைத்தியகாரனா ஆக்கியிருக்கு. அதனால் தானோ என்னவோ உன் மேல் ஒரு ஸ்ஃப்ட் கார்னர் எனக்கும் என் குடும்பத்துக்கும்.அதனாலேயே உன் கல்யாண கொண்டாட்டம் என் வீட்டிலே அத்தனை ஒரு தடபுடலாய் இருந்துச்சு.
என் பதிவை என் மனைவியிடம் படிக்க சொன்னா படிச்சுட்டு அழுவாங்க. ஆனா அவங்க சொல்லி சொல்லி சிரிச்ச உன் ஒரு பின்னூட்டம்(இப்பவும் என்னை வெறுப்பேத்தும்) நான் ஒரு தடவை மனைவியை பத்தி எழுதும் போது 'நானோ உணர்சிபூர்வமாய் முடிவெடுப்பேன், நீயோ அறிவு பூர்வமாய் முடிவெடுப்பாய்" என எழுதியிருந்தேன். அதுக்கு நீ "யார் யாருக்கு எது எது இருக்கோ அதைத்தானே பயன்படுத்த முடியும்" என ஒரு பின்னூட்டம் போட்டாய்.
நான் துபாய் உயந்த கட்டிடத்தின் 160 மாடியில் நின்னு சிரிச்சேன். சிரிச்சேன் சிரிச்சேன். இப்படி காமடியை ஒரு கலையாக நினைக்கும் நீ திடீர்ன்னு "மாட்டு வண்டி" பத்தியும், என்னவோ பிரிண்டிங் மிஷின் பத்தியும் கூட எழுதி டபால்ன்னு "டேய் நானும் ரவுடி தான்"ன்னு அறிவு ஜீவியா மாறிடுவே. அது போல மொக்கை போட்டாலும் உன்னை அடிச்சுக்க முடியாது. "தமிழ்மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்" பதிவை தமிழ்மணமே கூட மறக்காது! உன்னை காமடியிலே அடிச்சுக்க இன்னும் ஒருத்தனோ ஒருத்தியோ பிறக்கனும்! அதுக்கு என் வாழ்த்துக்கள்!
அன்பு அண்ணன்
***********************************
குசும்பன் ரொம்ப நல்லவன். ரொம்ப ரொம்ப நல்லவன்.. ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன். அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம் வந்துடக் கூடாதேங்குறதுக்காக தான் ரொம்பக் கஷ்டப்படுவான்.அதிலும் குறிப்பாக தனது அலுவலகத்திற்கு வரும் இளம் பெண் வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்க குசும்பன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.
'இருங்க அண்ணாச்சி. அவங்களுக்கு ஏதோ பிரச்னை போலிருக்கு' என்று எழுந்து போய் சும்மா நின்று கொண்டிருக்கும் பெண்ணிடம் 'எனி ஹெல்ப் மேடம்?' என்று கேட்டு விட்டு , அந்தப் பெண் முறைத்ததும் 'பிரசனை ஒண்ணுமில்லயாம் அண்ணாச்சி' என்று திரும்பி வந்து சொல்லும்வரை குசும்பனின் வாடிக்கையாளர் விசுவாசம் பிரமிப்பு தருவது.
வேடிக்கை ஒரு புறமிருக்க எந்த அறிவுஜீவிச்சாயலும் இல்லாமல் இயல்பான பச்சை மனிதனாகத் தன்னை அடையாளம் காட்டுவதுதான் குசும்பனிடம் எனக்கு மிகப்பிடித்த விசயம். எப்போதும் காணப்படும் உற்சாகம். (ஒரே ஒரு முறை மட்டும் அவன் சங்கடப்படுவதைப் ப்கிர்ந்து கொண்டபோது அவனுக்கு ஆறுதல் சொல்லி தைரியம் சொன்னாலும் எனக்கே ஏதும் செய்யப் பிடிக்காமல் போனது ) எதையும் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கு.
போலித்தனமில்லாத அன்பு - இவையும் குசும்பனிடம் பிடித்தமானவை. அதையும் விட 'என்நஒ ரொம்ப நல்லவன்'ன்னு நினைக்குற ஒரே ஆளு குசும்பன் மட்டும்தாங்குறதை நினைக்கும்போதுதான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ. ஆனந்தக் கண்ணீர் வருது. மக்கா!! நல்லா இருடே!
***********************************
இந்தா வாங்கிக்க எனது வாழ்த்துப்பாவை..!
"குசும்பன் வலையுலகில் தவழும் பிள்ளை.. சவலைப்பிள்ளை.. செல்லப் பிள்ளை.. இவன் செய்கின்ற குசும்புகள்தான் வலையுலக வீட்டையும் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சிலும், விளையாட்டிலும் மயங்குவதைப் போல, நாங்கள் குசும்பனின் செல்லத்தில் சொக்கிப் போய் இருக்கிறோம்.. என்றென்றைக்கும் எங்களது குசும்பனுக்கு வயது ஏறாமல், இப்போது இருப்பது போலவே குழந்தையாகவே இருந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்..! "
நன்றி தம்பி
"குசும்பன் வலையுலகில் தவழும் பிள்ளை.. சவலைப்பிள்ளை.. செல்லப் பிள்ளை.. இவன் செய்கின்ற குசும்புகள்தான் வலையுலக வீட்டையும் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சிலும், விளையாட்டிலும் மயங்குவதைப் போல, நாங்கள் குசும்பனின் செல்லத்தில் சொக்கிப் போய் இருக்கிறோம்.. என்றென்றைக்கும் எங்களது குசும்பனுக்கு வயது ஏறாமல், இப்போது இருப்பது போலவே குழந்தையாகவே இருந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்..! "
நன்றி தம்பி
***********************************
குசும்பன் என்னும் பெயர் எனக்கு முதன் முதலில் அறிமுகமானது அபி அப்பாவின் பதிவிலோ அல்லது கும்மி பதிவிலோ இருந்த கமெண்டில் தான்.நறுக் என கமெண்ட் இருக்கவும் யாருடா இது என புரபைலை பார்த்து பின்னர் குசும்பு ஒன்லிக்குள் புகுந்தேன். பின்னர் நிரந்தர வாசகனானேன். ஆரம்பத்தில் பெரும்பாலான பதிவுகள் சக பதிவர்களான அய்யனார்,அபிஅப்பா, தம்பி ஆகியோரை கலாய்த்தே இருந்தன. தற்பொழுது அரசியல், விளையாட்டு, சினிமா என பரவலாக கலாய்ப்பது நன்றாக உள்ளது. எனக்கு உங்கள் வலைப்பதிவில் மிகவும் பிடித்தது ஊடகங்களில் வரும் புகைப்படங்களை தற்கால நிகழ்வுகளுக்கேற்ப கலாய்ப்பதே. பார்த்தவுடன் குபீரென சிரிப்பை வரவழைப்பது அதன் சிறப்பு. அமீரகங்களில் குடும்பங்களுக்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்பது பற்றி எழுதப்பட்ட கட்டுரையும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தொடரட்டும் உங்கள் குசும்பு. இடையிடையே சில சீரியஸ் கட்டுரைகளையும் எழுதுங்கள்.
மேற்குறிப்பிட்ட ஒன்றைப்போல பிரியமுடன்
***********************************
குசும்பன்,"இரண்டு வருடங்களில் ஏறக்குறைய 270 பதிவுகள். மூன்று நாட்களுக்குள் ஒரு பதிவு - சராசரியாக. ('2.7 நாட்கள்' என்று கணிதப் புலிகள் வரவேண்டாம்). எல்லோரையும் கலாய்க்கும், யாரையும் புண் படுத்தாத பதிவுகள் குசும்பனுடையது.
எனக்குத் தெரிந்து குசும்பனிடம் சற்றேனும் மனவருத்தம் அடைந்தவர் என்று ஒருவரும் இருக்க முடியாது. அவர் கலாய்க்கிறார் என்றால நம்ம கிட்ட எதோ விஷயம் இருக்கு என்றோ, நாமளும் பிரபலம்தான் என்றோ பெருமைப்படலாம்.
சமயங்களில் சச்சரவுகள் தரும் ஆயாசத்தில், குசும்பனின் வலைப்பூவை மீள்வாசிப்பது ஒரு வைத்தியம். இதே நகைச்சுவை உணர்வு எப்போதும் அவரிடம் இருக்கவும், அது ஒரு தொற்று நோயாக நம் எல்லாரிடமும் ஒட்டிக்கொள்ளவும் பெரிதும் ஆசைப்படுகிறேன்.
வாழ்த்துகள் குசும்பா. "
***********************************
அறிமுகமான வெகு குறைந்த காலத்திலேயே பச்சக்கென்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டவர் குசும்பன். என்னைப்போலவே இவருக்கும் குசும்பு, கலாய்த்தல்கள் கைவந்த கலையென்றபோதும் கூட ஒருபோதும் தனது ஃபார்மிலிருந்து சிறிதும் குறையாது கலக்கிக் கொண்டிருப்பவர். தனிப்பட்டமுறையில் பதிவர்களை கலாய்ப்பதிலாகட்டும், தனது சமூக, அரசியல் பார்வைகளை கார்டூன்கள் மூலம் கலாய்ப்பதிலாகட்டும்.. ஒவ்வொரு பதிவுமே ரசிக்கும்படியாகவே கொடுத்துள்ளார். குறைந்த காலத்தில் பதிவர் வட்டத்திற்குள் மிகப் பிரபலமானவர்களுள் இவரும் ஒருவர் என்று கூறினால் மிகையாகாது!
முதன்முதலில் தொலைபேசி உரையாடில் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை இனிமையாகத் தொடர்கிறது! என்னை யாராவது கலாய்த்தால் குபீரென்று களத்தில் குதித்து சரி எனக்குத்தான் ஆதரவு தருவார் என்று பார்த்தால், திடீர் பல்டி அடிப்பார் பாருங்கள்..
குசும்பா! நீ நல்லவனா கெட்டவனா?:)
நட்புடன்,
நாமக்கல் சிபி.
முதன்முதலில் தொலைபேசி உரையாடில் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை இனிமையாகத் தொடர்கிறது! என்னை யாராவது கலாய்த்தால் குபீரென்று களத்தில் குதித்து சரி எனக்குத்தான் ஆதரவு தருவார் என்று பார்த்தால், திடீர் பல்டி அடிப்பார் பாருங்கள்..
குசும்பா! நீ நல்லவனா கெட்டவனா?:)
நட்புடன்,
நாமக்கல் சிபி.
***********************************
குசும்பனின் குசும்பு பெரும்பாலும் ரசிக்கத்தக்கவையே. இருப்பினும் சில நேரங்களில் ஓவர்டோஸாகவும் ஆகி பேதியாகிவிடுகிறது.நகைக்க வைக்க வேண்டும் என்ற ஒரே intension மட்டுமே இல்லாமல் பல்சுவைப் பதிவுகளையும் குசும்பன் எதிர்காலத்தில் படைக்க வேண்டுமென ஒரு தோழனாக வாழ்த்துகிறேன்,
லக்கி லுக்
லக்கி லுக்
***********************************
அக்கா புதுகைத் தென்றல் வலைப்பதிவு உலகத்திற்குச் செய்த மிகப் பெரிய துரோகம் என்னை வலைப்பூ எழுதச் சொன்னது. அவர் எனக்குச் செய்த மிகப் பெரிய துரோகம் அவர் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது குசும்பனின் பதிவுகளை அறிமுகம் செய்து லிங்க் குடுத்தது. :) மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை...அலுவலகத்தில் பணி நிமித்தம் ஏதேனும் மன அழுத்தம் நேரும் போது உடனடியாக நான் செய்யும் காரியம் முதலில் ஒரு குவளை தண்ணீர் அருந்துவது. அடுத்தது குசும்பனின் வலைப்பூவை படிப்பது. தமிழ்மண விருதை அவர் பெற்ற போது அனைவரும் சொன்ன வார்த்தை ”நகைச்சுவை கார்ட்டூன் பிரிவில் போட்டியே இல்லை, குசும்பன்தான் அதில் மோனோபோலி”. இதைவிட குசும்பு வலைப்பூவைப் பற்றிச் சொல்ல எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அப்புறம் மக்கள் எல்லாரும் அவர் ஒரு பிரபலப் பதிவரை புகழ்ந்து இருக்கும் இந்தப் பதிவைக் கட்டாயம் பாருங்க.
புதுகை அப்துல்லா
புதுகை அப்துல்லா
***********************************
இவர் கலாய்க்க ஆரம்பிச்சி ரெண்டு வருஷம் ஆயிடுச்சா? நாள் ஓடறதே தெரிய மாட்டீங்குது. தொடர்ந்து ரெண்டு வருஷமா நகைச்சுவைப் பதிவு எழுதறது எவ்வளவு கஷ்டம்னு நகைச்சுவை பதிவு எழுதறவங்களுக்கு தெரியும். கொஞ்ச நாள்லயே எழுதறவங்களுக்கும் போர் அடிச்சிடும், படிக்கிறவங்களுக்கும் போர் அடிச்சிடும். ஆனா குசும்பன் எழுதன (கார்டூன்) முதல் பதிவுல இருந்து நேத்து போட்ட கடைசி பதிவு வரைக்கும் நக்கல், நகைச்சுவை, கிண்டல், கேலி குறையாம எழுதறது பாராட்டுக்குரியது.
”பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்” அப்படினு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் அதை மெயிண்டெயின் பண்ணிட்டு வராரு. இதுல ஹைலைட் பார்த்தா, கோபம் ,வெறுப்பு, கடுப்பு இதைக் கூட நகைச்சுவையா சொன்னது தான். இது தான் குசும்பன் ஸ்பெஷல்னு எல்லாரையும் ரசிக்க வைக்கிறார். புதிதாக எழுதுபவர்கள், பழைய பதிவர்கள் என்று கொஞ்சமும் ஈகோ பார்க்காத குணமும் பாராட்டுக்குரியது.
அடுத்து அவர் பதிவுல எனக்கு பிடிச்சது இவர் முட்டையை வைச்சி பண்ண ரிசர்ச் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி இதுல என்ன ஹலைட்னு யோசிக்கறவங்களுக்கு, இந்த பதிவு போட்டு ஒரு வாரத்துல அவர் போட்ட பதிவு இது. என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க, ரெண்டையும் படிச்சி பார்த்தா உங்களுக்கே புரியும். அப்பறம் அவரோட பழைய பதிவை படிக்காம மிஸ் பண்ணவங்களுக்கு, நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. ஏன்னா இன்னும் ஒரு மாசம் நீங்க இந்த வலைப்பதிவுல இருக்குற எல்லா பதிவையும் ஜாலியா படிச்சிட்டு இருக்கலாம்.
எங்கயும் தடம் மாறாமல் இன்னைக்கு வரைக்கும் ரசி(ரி)க்கிற மாதிரி கொடுத்துட்டு வரதுக்கு பாராட்டுகள் + நன்றிகள். அதே சமயம் கார்டூன் எல்லாம் எப்படி பண்றாருனு ஒரு சில பதிவுகள் போட்டு நிறைய பேரை ஊக்கப்படுத்தினால் வலையுலகத்திற்கு மேலும் பயன் தரும்.
மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் குசும்பரே.
வெட்டிப்பயல் பாலாஜி
”பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்” அப்படினு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் அதை மெயிண்டெயின் பண்ணிட்டு வராரு. இதுல ஹைலைட் பார்த்தா, கோபம் ,வெறுப்பு, கடுப்பு இதைக் கூட நகைச்சுவையா சொன்னது தான். இது தான் குசும்பன் ஸ்பெஷல்னு எல்லாரையும் ரசிக்க வைக்கிறார். புதிதாக எழுதுபவர்கள், பழைய பதிவர்கள் என்று கொஞ்சமும் ஈகோ பார்க்காத குணமும் பாராட்டுக்குரியது.
அடுத்து அவர் பதிவுல எனக்கு பிடிச்சது இவர் முட்டையை வைச்சி பண்ண ரிசர்ச் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி இதுல என்ன ஹலைட்னு யோசிக்கறவங்களுக்கு, இந்த பதிவு போட்டு ஒரு வாரத்துல அவர் போட்ட பதிவு இது. என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க, ரெண்டையும் படிச்சி பார்த்தா உங்களுக்கே புரியும். அப்பறம் அவரோட பழைய பதிவை படிக்காம மிஸ் பண்ணவங்களுக்கு, நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. ஏன்னா இன்னும் ஒரு மாசம் நீங்க இந்த வலைப்பதிவுல இருக்குற எல்லா பதிவையும் ஜாலியா படிச்சிட்டு இருக்கலாம்.
எங்கயும் தடம் மாறாமல் இன்னைக்கு வரைக்கும் ரசி(ரி)க்கிற மாதிரி கொடுத்துட்டு வரதுக்கு பாராட்டுகள் + நன்றிகள். அதே சமயம் கார்டூன் எல்லாம் எப்படி பண்றாருனு ஒரு சில பதிவுகள் போட்டு நிறைய பேரை ஊக்கப்படுத்தினால் வலையுலகத்திற்கு மேலும் பயன் தரும்.
மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் குசும்பரே.
வெட்டிப்பயல் பாலாஜி
***********************************
தம்பி குசும்பனைப் பத்தி நாலு சொற்கள் நல்லதாகச் லொள்ளனும் என்றால் தம்பி வல்லவரு கார்டூன் போடறுதுல, நல்லவரு கலாய்ச்சி பதிவு எழுதுறதுலன்னு சொல்லனும்.
இவரு பதிவுல வாங்கிக் கட்டிக்காதவங்களே குறைவுதான், யாரையும் கலகலக்க கலாய்க்கத் தயங்காதவன் நம்ம குசும்பன். தொலைவில் இருந்து முகம்பார்க்காமல் பழகியதில் குசும்பன் தான் முதன் முதலில் நெருக்கமான பதிவர் ஆனான். குசும்பனால் கலாய்ப்பு, வம்பு தவிர்த்து எதாவது எழுத முடியுமா ? என்று கேட்டால் மூக்கு உடைந்துவிடும், அவனும் 'உருப்படியான' என்ற வகைப்படுத்தலில் இரு இடுகைகள் எழுதி இருக்கிறான். அதில் UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை! - இந்த இடுகையின் தகவல்கள் நம்ம வடூவூர் அண்ணன் துபாய் செல்ல மிகவும் பயனான தகவல்களை தந்தது என்று என்னிடம் தெரிவித்து இருந்தார். உருப்படியாக எழுதுவது வேறு, அதை பயன்படும் படி எழுதுவதே அதன் வெற்றி, அந்த வகையில் குசும்பனின் அந்த பதிவு பல தகவல்களை உள்ளடக்கி இருந்தது. டரியல் டக்ளஸ் என்ற தலைப்பில் குசும்பன் இடும் கார்டூன்கள் பல விகடன் புகழ் பெற்றவை. 200 பதிவு கண்ட குசும்பனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும், அவன் எனக்கு நெருக்கமான நண்பன் என்ற பெருமையும் அடைகிறேன் வாழ்க குசும்பன், வளர்க்க அவனது வாலு !
கோவி.கண்ணன்
இவரு பதிவுல வாங்கிக் கட்டிக்காதவங்களே குறைவுதான், யாரையும் கலகலக்க கலாய்க்கத் தயங்காதவன் நம்ம குசும்பன். தொலைவில் இருந்து முகம்பார்க்காமல் பழகியதில் குசும்பன் தான் முதன் முதலில் நெருக்கமான பதிவர் ஆனான். குசும்பனால் கலாய்ப்பு, வம்பு தவிர்த்து எதாவது எழுத முடியுமா ? என்று கேட்டால் மூக்கு உடைந்துவிடும், அவனும் 'உருப்படியான' என்ற வகைப்படுத்தலில் இரு இடுகைகள் எழுதி இருக்கிறான். அதில் UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை! - இந்த இடுகையின் தகவல்கள் நம்ம வடூவூர் அண்ணன் துபாய் செல்ல மிகவும் பயனான தகவல்களை தந்தது என்று என்னிடம் தெரிவித்து இருந்தார். உருப்படியாக எழுதுவது வேறு, அதை பயன்படும் படி எழுதுவதே அதன் வெற்றி, அந்த வகையில் குசும்பனின் அந்த பதிவு பல தகவல்களை உள்ளடக்கி இருந்தது. டரியல் டக்ளஸ் என்ற தலைப்பில் குசும்பன் இடும் கார்டூன்கள் பல விகடன் புகழ் பெற்றவை. 200 பதிவு கண்ட குசும்பனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும், அவன் எனக்கு நெருக்கமான நண்பன் என்ற பெருமையும் அடைகிறேன் வாழ்க குசும்பன், வளர்க்க அவனது வாலு !
கோவி.கண்ணன்
***********************************
அன்பின் சரவணன் என்னிடம் பதிவினைப்பற்றிய கருத்தினைக் கேட்டதற்கு நன்றி அருமை நண்பர் சரவணன் பல வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். அவரது கொள்கையாக " பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்." என்ற சொற்றொடரையே வைத்திருக்கிறார். அவரது வலைப்பூக்களில் அதிகம் நகைச்சுவையும் கலாய்ப்புகளூம் குசும்புகளும் மொக்கைகளுமே இடம் பெறும். சீரியஸ் பதிவுகளும் அவ்வப்போது போடுவார். அவரது பதிவுகளில் கார்டூன்கள் - கருத்துப் படங்கள் மிகப் பிரபலம். அதில் வரும் குறிப்புகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுபவை. அவர் ஒரு சிறந்த நண்பர். அவரது திருமணத்திற்கு எனக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பினார். கலந்து கொள்ள இயலவில்லை-
வாழ்த்து அனுப்பினேன். நல்வாழ்த்துகள் குசும்பன் நட்புடன்
..... சீனா
***********************************
குசும்பன் இந்த பெயரை ஒரு சின்ன புன்னகை தோன்றும். பொதுவா அலுவலகத்துல வேலை பளு காரணமாக டென்ஷனா இருக்கும் பொழுது அதை குறைக்க படிக்க வரும் பதிவுகளில் முக்கியமானது குசும்பனோடது.. இவனோட பதிவுக்கு வந்து பழைய பதிவோ புதிய பதிவோ ஏதோ ஒண்ணோ ரெண்டோ படிச்சுட்டு போனா மனசு லேசாயிடும்.. அதுவும் முக்கியமா இவனோட கார்டூனை பதிவுகளை பார்க்கும் பொழுது எப்படியெல்லாம் யோசிக்கிறாண்டா ங்கொய்யாலன்னு தோணும். தொடர்ந்து இரண்டு வருசமா நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாம தொடர்ந்து சிரிப்பு வெடியா பதிவு எழுதுறது சாதாரண விஷயம் இல்லிங்க.. கலக்குறடா குசும்பா..மொக்கையை கொஞ்சம் குறைச்சி குசும்பையும், நகைச்சுவையையும் கூட்டி இன்னும் பலவருசங்களுக்கு பட்டையை கிளப்பு.. இவனோட குசும்புக்கு ஒரு அளவே இல்லிங்க..பாருங்க பிரபலங்கள் பார்வையில் குசும்பு அப்படிங்கிற தலைப்புல யாருக்குமே தெரியாத என்னைய எழுத சொல்லியிருக்கான்..
சந்தோஷ்
சந்தோஷ்
***********************************
எனக்குப் பிடிக்கவே பிடிக்காத வலைப்பதிவுகளில் முதலாவது 'குசும்பு' தளம். காரணம் இருக்கு.ஏதாவது பாராட்டி பின்னூட்டம் போடலாம், புள்ள சந்தோஷப்படட்டும்னு பாத்தா, பதிவு வந்த அஞ்சாவது நிமிஷமே 183 கமென்ட்ஸ் என்று காட்டும். இவ்வளவையும் தாண்டி நம்ம கருத்தை எங்கே கவனிக்கப்போறார்னு பின்னூட்டம் போடறதில்லை. நமக்கு எப்போவாவது கரன்ட் அஃபையர்ஸ் ல ஜோக் தோணி எழுதலாம்னு ஒக்காந்தா, இந்தாளு எழுதி வச்சிருப்பாரு. அசுரமொக்கை, மரண மொக்கை எல்லாம் தாண்டிய புனிதமான மொக்கைகள் அப்பப்பா... (அவ்வப்போது தன் போட்டோவைப் போடுகிறாரே, அதைச் சொல்லவில்லை.) அது எப்பிடித்தான் இவுரு ஒரு பதிவு போட்டவுடனே கூடிக்கும்மி ஆடிக்க ஜனக்கூட்டம் சேருதோ..?(மற்றபடி ஒவ்வொரு பதிவுலேயும் பின்னூட்டங்கள்லேயும் தெரியும் பிரில்லியன்ஸ் பத்தி வெளியே சொல்வேனா, என்ன?) சீக்கிரத்திலேயே அச்சுக்கு வந்துவிடுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக இருக்கிறது
ரமேஷ் வைத்யா
ரமேஷ் வைத்யா
***********************************
குசும்பனை எனக்கு மிகவும் பிடிக்கும்.வகை தொகை இல்லாமல் எல்லோரையும்கலாய்ப்பது நன்றாக இருக்கிறது.சில சமயங்களில் ”அதீதமாகிவிட்டதோ “என நினைத்திருக்கிறேன்.ஆனால் குசும்பனுக்கும் நல்ல பதிவுகள் இடத் தெரியும் என நீங்கள் நிரூபத்திருக்கிறீர்கள்.டெக்னிகலாக சமீபத்திய உங்கள் ப்ரிண்டிங்மிஷன் பற்றிய பதிவு அதற்கு ஒரு உதாரணம்.
உங்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான்.
குசும்பு கொப்பளிக்கவும் எழுதுங்கள்,அத்தோடு சமூகத்துக்கு சில நல்ல கருத்துக்கள் தரும் பதிவையும் தாருங்கள்.
உங்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான்.
குசும்பு கொப்பளிக்கவும் எழுதுங்கள்,அத்தோடு சமூகத்துக்கு சில நல்ல கருத்துக்கள் தரும் பதிவையும் தாருங்கள்.
***********************************
நல்லபடி எழுதாவிட்டால் என்னையும் டரியல் ஆக்கக் காத்திருக்கும் டக்ளஸுக்கு அஞ்சாமல் எழுதுகிறேன். கலாய்க்கப்பட்ட ஆட்கள் ஆட்டோ அனுப்பலாமா சுமோ அனுப்பலாமா என யோசித்து அரை செகண்டு முன்னர் நாமே சிரித்துவிட்டோமே என்று எதையும் அனுப்பாமல் விட்டுவிடும் கலாய்ப்பு குசும்பனுடையது. வெறும் வசனங்களை நம்பி இராமல் கற்பனை, கார்ட்டூன் குசும்பு என்றெல்லாம் செய்து எப்படியாவது சிரிக்கவைத்துவிடவேண்டும் என எவ்வளவோ முயற்சித்தாலும் சுலபமாக சிரிப்பு வருவது அவர் வாங்கிய கேமராவில் தப்பித் தவறி விழுந்துவிட்ட கோட்சூட் அணிந்த நபர் படம்தான்! “அங்கதத்தின் நுட்ப பரிணாம வரையறுப்பின் கூறுகளில் விரவியதாய்க் காணப்படும் மனிதக்கூட்டத்தின் மேலான தாக்குதலாய் அன்றி மனிதக்குழுமத்தின் இயல்புகளைத் தாக்கியதாய் வெளிப்படும் இலக்கிய வகையின் தேர்ந்த வெளிப்பாடாக விளங்குகின்றன குசும்பன் படைப்புகள்” என்று எழுதினால், அய்யனார் ஐந்து நாட்களுக்குள் குசும்பனுக்கு விளக்கிவிடுவார் :-) உலக வரலாற்றை புரட்டிப்போட்ட தினத்தில் வலைப்பதிவை ஆரம்பித்து இரண்டு வருடங்களை நிறைவு செய்திருக்கும் குசும்பனுக்கு வாழ்த்துகள். (அதென்ன புரட்சி தினம் என்பவர்களுக்கு குசும்பன் பதிலளிப்பார்).
பினாத்தல் சுரேஷ்
பினாத்தல் சுரேஷ்
***********************************
நான் பதிவெழுத வந்த ஆரம்பகாலகட்டத்தில்பின்னூட்டங்களில் அதிரடி சரவெடியாய் ஒரு சில பதிவர்களைக் கண்ணுற்றேன். அதில் விடுபடாமல் குறிப்பிடப்பட வேண்டிய, தவிர்க்க இயலாத ஒரு பெயர் - குசும்பன்.
’என்னடா.. பதிவு எவ்ளோ சீரியஸா இருந்தாலும் போய்க் கும்மீட்டு வர்றாரே இந்த மனுஷன். இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லயா’ என்று போனால்... வலைப்பூவின் உரலே சொல்லிற்று.. குசும்பு ஒன்லி - என்று!
பதிவுகளைப் படித்தால் அவ்வளவு சுவாரஸ்யம், ஹாஸ்யம்.
அதன்பின்... அலுவலகத்தில், வீட்டில், பதிவுலகில் சில மனஅழுத்தக்கணங்களைக் கடக்க... எங்கெல்லாம் இவரின் பின்னூட்டம் இருக்குமோ அங்கெல்லாம் தேடிச் செல்ல ஆரம்பித்தேன்.
’என்னடா.. பதிவு எவ்ளோ சீரியஸா இருந்தாலும் போய்க் கும்மீட்டு வர்றாரே இந்த மனுஷன். இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லயா’ என்று போனால்... வலைப்பூவின் உரலே சொல்லிற்று.. குசும்பு ஒன்லி - என்று!
பதிவுகளைப் படித்தால் அவ்வளவு சுவாரஸ்யம், ஹாஸ்யம்.
அதன்பின்... அலுவலகத்தில், வீட்டில், பதிவுலகில் சில மனஅழுத்தக்கணங்களைக் கடக்க... எங்கெல்லாம் இவரின் பின்னூட்டம் இருக்குமோ அங்கெல்லாம் தேடிச் செல்ல ஆரம்பித்தேன்.
ஃபோட்டோ அனுப்பி கலாய்த்துக் கொள்வது போக... அவரே நம் போட்டோவை எடுத்துக் கலாய்க்கும்போது நாம் ஒரு வி.ஐ.பி. ரேஞ்சுக்கு ஆகிவிடுவதை உணரமுடியும்.என் பதிவை சரோஜாதேவி மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று எதிர்ப்பதிவாக்கி குண்டுவைத்து குஜாலாக்கிய இவரது நகைச்சுவை உணர்வை மறக்க முடியுமா?
நகைச்சுவை உணர்வோடே அரசியல்வாதிகளில் அறிக்கைகள் எதற்கு லாயக்கு என்று வெஸ்டர்ன் டாய்லெட் படத்தைப் போட்டு ‘விளக்கிய’ இவரது சமூக நலனையும் நாம் மறந்துவிடக்கூடாது. இன்றளவும் ஒரு பத்திரிகை எடுத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேடி அவசர அவசரமாகப் படிக்கும் வாசகர்கள் போல... இவரது கார்ட்டூன்களுக்கு ஒரு தனி ரசிகர் படையே இருக்கிறதென்பது ஊரறிந்த உண்மை.
பரிசல் காரன்
நகைச்சுவை உணர்வோடே அரசியல்வாதிகளில் அறிக்கைகள் எதற்கு லாயக்கு என்று வெஸ்டர்ன் டாய்லெட் படத்தைப் போட்டு ‘விளக்கிய’ இவரது சமூக நலனையும் நாம் மறந்துவிடக்கூடாது. இன்றளவும் ஒரு பத்திரிகை எடுத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேடி அவசர அவசரமாகப் படிக்கும் வாசகர்கள் போல... இவரது கார்ட்டூன்களுக்கு ஒரு தனி ரசிகர் படையே இருக்கிறதென்பது ஊரறிந்த உண்மை.
பரிசல் காரன்
***********************************
நிறைய பேர் நகைச்சுவையா நல்லா எழுதுறாங்களே நாமும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு ரெண்டு மூணு தடவை அந்த மாதிரி பதிவு எழுதி 'சூடு' பட்டுக்கிட்டேன். அந்தப் பதிவுகளை நானே வாசித்தால் என்னைப்பார்த்து எனக்கே சிரிப்பு வந்தது. ரொம்பவே பாவமாவும் இருந்திச்சி. அதுக்குப் பொறவு அந்தப் பக்கம் தலை வைக்கிறதேயில்லை. எழுதுறவங்களை பொறாமையோடு பாத்துக்கிறது; படிச்சிக்கிறது. குசும்பனப் பார்த்தா ரொம்பவே பொறாமை. . மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா! நல்ல சிரிப்பு நடிகர்கள் பலரும் நல்ல நடிப்புத்திறனோடு இருப்பார்கள்; அவர்களால் சிரிக்க வைக்கவும் முடியும். நம்மை அழவைக்கவும் முடியும். நல்ல நகைச்சுவைப் பதிவுகளைக் கும்மி என்ற பெயரில் போடும் பதிவர்களில் சிலர் நடுநடுவே நம்மை வேறெங்கோ எடுத்துச்செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இதில் டக்கென்று என் நினைவுக்கு வரக்கூடியவர்கள் இருவர். அம்மாவுக்கு கையில் சர்ஜரி. :சின்னப் பதிவு ரொம்ப ஒண்ணும் எழுதிடலை. ஆனா குசும்பன் எழுதின நாலு வரியும் மனச தொடுதே .. அங்கதான் இந்த மாதிரி ஆளுக நிக்கிறீங்க'ப்பா.நிறைய சொல்லலாம் - நல்லா எழுதத் தெரிஞ்சா! அதனால் இந்த ரெண்டோட நிப்பாட்டிக்கிறேன். நல்லா இருங்க ...நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்
தருமி
தருமி
***********************************
குசும்பன் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லலாம். "குசும்பன்". அவ்ளோ தானா என்று தெறிக்கவேண்டாம்...முதலில் குசும்பன் வலையுலகிற்கு வந்த புதிதில் ஆர்வமாக எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருந்தார். பின்னூட்டம் கூட போட தயங்குவார். வலைப்பதிவர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, அதில் எடுத்த படங்களை எல்லாம் கொஞ்சம் எடிட்டி, ஆங்காங்கே சில கொமண்டுகளை தூவி அனைவருக்கும் அனுப்பினார். அனைவரும் அதை ரசித்தது உற்சாகப்படுத்தியதுதான் அவரது இப்போதைய 'கார்ட்டூன்' குசும்பன் என்ற ட்ரேட் மார்க்குக்கு காரணம்..அவரது வேலையில் அவருக்கு இருக்கும் மென்பொருட்கள் - போட்டோஷாப் மாதிரியான அயிட்டங்களை உபயோகப்படுத்தி படங்களை, கமண்டுகளை மெருகேற்றுகிறார் என்று நினைக்கிறேன்... குசும்பனிடம் நான் ரசிக்கும் இரண்டு விஷயங்கள், தோழமை உணர்வு மற்றும் நகைச்சுவை உணர்வு. இந்த இரண்டு உணர்வுகளும் இயல்பிலேயே - 'தானா வர்து' மாதிரி இருப்பதால் சினிமாவில் ஒட்டவைக்கும் காமெடி பீஸ் மாதிரியில்லாமல் கதையோடினைந்த காமெடிபோல, செம்புலப்பெயர்நீர் போல...ப்ளா..ப்ளா... நான் மட்டுமல்ல..குசும்பனை நமக்கு தெரியாமல் படிக்கும் பலரும் இதையே நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்... இந்த இரண்டாவது வருட தொடக்கத்தில் கார்ட்டூன்களை இன்னும் சிறப்பாக மெருகேற்றி தரவேண்டும்- வேண்டுமானால் படங்களை குமுதம் கார்ட்டூன் பாலாவை வரைஞ்சு தரச்சொல்லுங்க..கமெண்டுகளை நீங்க சேருங்க...வெகுஜன ஊடகங்களுக்கான பாதையை வகுத்துக்கொள்ளுங்க...முறையாக ரெண்டு முட்டை போட்டு வாத்து வரைய கத்துக்கோங்க...அப்பத்தான் அத்வானிஜி, கலைஞர்ஜி, அம்மாஜி படம் எல்லாம் வரையமுடியும். வாழ்த்துக்கள்
செந்தழல் ரவி
செந்தழல் ரவி
*****************************
குசும்பன்...இந்தப்பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது இவரது தளத்துக்குள் சென்றாலே தெரியும்.பெயருக்கும் நடத்தைக்கும் சம்பந்தமில்லாத மனிதர்களிருக்கும் உலகத்தில், பெயரும் நடத்தையும் ஒன்றாக உள்ள நல்லவர்!
அடுத்தவர்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ளத்தக்கவர்.!அதனால் கலாய்ப்பதிலும் கண்ணியம் இருக்கும்!
அடுத்தவர்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ளத்தக்கவர்.!அதனால் கலாய்ப்பதிலும் கண்ணியம் இருக்கும்!
கருத்துப்படம் வெளியிட்டே அனைவரையும் கவர்ந்தவர்!இவரது படைப்பை வெகுஜன இதழ்களும், இணைய இதழ்களும் பயன்படுத்தும் அளவுக்கு வல்லவர் !
பதிவுலக நண்பர்களுக்கு பழகுதற்கு இனியவர்! எல்லோரிடமும் அன்பாக, உரிமையுடன் பழகக்கூடியவர்!அரட்டைக்கச்சேரி ஆரம்பித்தால் அசராமல் , அசரவைப்பவர்! ஒரு எதிர்கால விளம்பரப்பட இயக்குநர்!
வாழ்வில் நல்ல மனிதர்களைச் சந்திக்கத் துடிக்கும் சாதாரணனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டிய அன்புச் சரவணவேலன்!
இதற்கும் மேல் சொல்லிக்கொண்டேபோகலாம்.! எங்களுக்குள் ஒரு ஒற்றுமை!நாங்க ரெண்டுபேரும் ஒரே டெம்ப்ளேட்டுதான் பயன்படுத்துறோம்..! ஹி..ஹி..! வந்ததுக்கு ஒரு வெளம்பரம்தான்!
அன்புடன்நட்புடன்
சுரேகா
*****************************
இரண்டுவருடங்களில் உருப்படியாக எழுதியது என்ன என்று கேட்டால் விரல் விட்டு சொல்லிவிடலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் இருக்கும்
எனக்கு இந்த பப்பூன் முகம் ரொம்ப பிடிச்சு இருக்கு, என்னால் இருவர் சிரிக்கிறார்கள் அவர்கள் கவலையை மறக்கிறார்கள் எனும் பொழுது கிடைக்கிற சந்தோசத்தை எழுத்தில் சொல்லமுடியாது.
இவை எல்லாத்தையும் விட நான் பெருமையாக நினைப்பது இரண்டு வருடத்தில் இதுவரை யாரும் அனானியாக கூட என்னை திட்டியது இல்லை.
அதுபோல் இதுவரை நான் யாருக்கும் அனானியாகவோ, மற்றவர்கள் மனம் வருத்தும் படியோ கமெண்ட் போட்டது இல்லை. இனி வரும் காலமும் இப்படியே எனக்கு அமையவேண்டும் நண்பர்கள் மட்டுமே இருக்கவேண்டும்.
51 comments:
மீ த பர்ஸ்ட்டூ :))
மீ த செகண்டு
வலையுலக பிரபலங்களின் ஆசிகளோடு...!
இன்னும் பல கலக்கல் பதிவுகளோடு காத்திருக்கும்
குசும்பன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் :)))
(ரைமிங்கா டிரைப்பண்ணுனேன் பட் முடியலப்பா :)
Good.
Keep it up saravanaaaaaa!
All the very best
கலக்கல்..தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
எல்லாருடைய விமர்சனங்களும் நன்றாக இருந்தது.. ஆசிப் சொன்ன இயல்பாய் .. போலி இல்லாத மனிதன் என்பதற்கு அடிக்கோடு போட்டு வழிமொழிகிறேன்..
அடப் பாவி. எழுதினதுல கொஞ்சம் எடிட் பண்ணலாம். இந்த அளவு உல்டா பண்ணலாமா குசும்பா? இப்பிடித்தான் எல்லோர் கிட்டயும் மிரட்டி எழுதி வாங்கினியா!
அனுஜன்யா
//ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் இருக்கும்
எனக்கு இந்த பப்பூன் முகம் ரொம்ப பிடிச்சு இருக்கு, என்னால் இருவர் சிரிக்கிறார்கள் அவர்கள் கவலையை மறக்கிறார்கள் எனும் பொழுது கிடைக்கிற சந்தோசத்தை எழுத்தில் சொல்லமுடியாது.//
எனக்கென்னமோ பப்பூன் முகம் ஒரிஜனல் மாதிரி தெரியவில்லை.
எனக்கு கஷ்டமா இருக்குங்க
அண்ணே இது ஒன்னும் காமெடி பதிவில்லையே???
எப்படிண்ணே எல்லார் எழுதி கொடுத்ததையும் மாத்தி நமக்கு சாதகமா எழுதிகிட்டீங்க...
Jokes apart....
எங்கள் மனதில் உள்ளதை எல்லோரும் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் குசும்பன்
:)))))))))))))))))))))
ஆயில்யனைப் பாராட்டி நீங்க எழுதுன பதிவிற்கு லிங்க் குடுத்து இருந்தேன். அத நீங்க போடவேயில்லையே.
:(
//“அங்கதத்தின் நுட்ப பரிணாம வரையறுப்பின் கூறுகளில் விரவியதாய்க் காணப்படும் மனிதக்கூட்டத்தின் மேலான தாக்குதலாய் அன்றி மனிதக்குழுமத்தின் இயல்புகளைத் தாக்கியதாய் வெளிப்படும் இலக்கிய வகையின் தேர்ந்த வெளிப்பாடாக விளங்குகின்றன குசும்பன் படைப்புகள்” என்று எழுதினால், அய்யனார் ஐந்து நாட்களுக்குள் குசும்பனுக்கு விளக்கிவிடுவார் :-)//
குசும்பனையே கலாய்க்கிறீங்களே?
நன்று!
//நிஜப்பெயர்: சரவணவேல் சுருக்கமாக சரவணன்.
இனைய பெயர்: குசும்பன், சுருக்கமாக எல்லாம் வேண்டாமே பிளீஸ்..//
எங்கேயும் குசும்பு தானா?!!!!!!!!!!
:)
:))))))))
நானும்...
வாழ்த்துக்கள் அண்ணே..!
உங்க அருமை பெருமையெல்லாம் நம்ம நட்பு கூட்டங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரியனுமா!
அதான் தமிழ்நாடே சொல்லுதே!
வாழ்த்துக்கள்
எல்லாத்தையுமே கொஞ்சம் எடிட் பண்ணி போட்டிருக்கலாம். ரொம்பப் பெரிசா இருக்கு.
ஆனா...
உங்க சந்தோஷத்தை நான் உணர்கிறேன்!
அதுதான் உங்க பலம்.
இன்னொண்ணு படிக்கறப்போ எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு சந்தோஷத்துல.. எவ்ளோ பெரிய ஆளுக கூட என்னையும் சேர்த்து....
கலக்கலோ கலக்கல்...
உங்க நகைச்சுவைய அடுத்த கியர் போட்டு இன்னும் வேகத்தோடு தொடருங்கள்...
valthukkal kusumban :-) nanum puthusu eppo than vanthu irukaen unga pathivugalil kusumbu romba jasthithan ha ha
அதெல்லாம் முடியாது.. அய்யனார் கிட்ட எழுதி வாங்கி அதையும் போடுங்க... அவருக்கும் ஒரு சான்ஸ் குடுங்க...
அடப்பாவி மாமா.. நானும் எழுதி வச்சிருக்கேனே.. :(
தகுதிக்கேற்ற வாழ்த்துக்கள்.
சைடுல நின்னு நானும் வாழ்த்திக்கிறேன் நண்பரே.
வாழ்த்துக்கள்
அப்புரமா அனானியா வந்து திட்டுறேன்.
அனானி ஆப்சனைக்கானோம் எப்படி திட்டுறது.அனானி ஆப்சன ஓப்பன் பண்ணுப்பா திட்டனும்
அன்பு குசும்பன்...
வாழ்த்துக்கள் :)))
பெருமையா இருக்குண்ணே! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் குசும்பரே. ஒரு சின்ன சந்தேகம் நாளைக்கு தானே ஏப்ரல் 1 ;-)
வாழ்த்துக்கள் குசும்ப சித்தரே! கடேசில படுக்க வச்சி நெஞ்சை நக்கீட்டீரே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
சூப்பர் எனக்கு யாருய்யா எதிரி? (உன்னை தவிர):-)))))
அடே நண்பா, இங்க எழுதிருக்கவங்களுக்கு எல்லாம் நீ எழுத ஆரம்பிச்சதுல இருந்துதான் உன்னையத் தெரியும் , ஆனா நீ தேர்வு எழுதுற அழகுல இருந்தே நீ பெரிய எழுத்தாளானா வருவன்னு எனக்கு அப்பவே தெரியுமே.
ஒன்னுமே படிக்காம வந்தே 50 பக்கம் எழுதுறவன் நீ, இப்ப வசமா படம் எல்லாம் சிக்குனா சும்மாவ விடுவ?
எல்லாரும் ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க மாப்பி. நெம்பப் பெருமையா இருக்குடே.
இருந்தாலும் வருங்காலப் பிரதமர் எழுதி வைச்சுருந்தத வாங்கிப் போடாம விட்டுப்புட்டியே நீ.
வாழ்த்துகள் சரவணவேல்.
வாழ்த்துக்கள்!!!
ஆஹா.. ஒரு விஐபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிற பிரபலங்களிடம் பேட்டி வாங்கியதைப்போல இருந்தது.
மெயினில் இல்லாட்டாலும் பின்னூட்டத்திலாவது என் பேட்டியை எழுதிவிடுகிறேன். (வேறு வழி? ஒரு விளம்பரம்தான்.. பின்னே நாமும் விஐபின்னு எப்படித்தான் காட்டுறது?)
குசும்பனின் ஒவ்வொரு பின்னூட்டங்களையும் பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு ஜோக்குக்கு நிகராகவே நான் கருதுகிறேன். பின்னூட்டமே இப்படி என்றால் பதிவுகள் எப்படின்னு நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.. (எப்பிடி நம்ம பேட்டி? பின்னூட்டத்துல அவ்வளவுதான் சொல்ல முடியும்ப்பா..)
வாழ்த்துக்கள் சரவணன்....
உண்மையைதானே எல்லாரும் சொல்லுறாங்க
keep it UP !!
நட்சத்திர பதிவருக்கு என் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்!
யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???யோவ் அப்போ நான் வலை உலக பிரபலம் இல்லையா ? என் கிட்ட ஏன்யா கருத்து கேக்கல ???
பின்னூட்டப் புயல் கணேஷ் ஒரிஜினல் பேர்ல கமெண்ட் போட்டிருக்கார் போல.. :))
இளையகவி நிஜப் பெயர் கணேஷ்குமார்
இவ்ளோ நாளா நம்மளை இம்சை பண்ண ஆள் யார்ன்னு தெரியுதா மக்களே.. :))
இளையகவி.. இப்டி வந்து மாட்டிக்கிட்டிங்களே ராசா. :))
செந்தழல் ரவியை குரு என்று சொல்லும் போதே எனக்கு உம்ம மேல தான்யா டவுட்டு வந்தது,. ;)))
அதெல்லாம் சரி, இந்த பதிவுக்கு எவ்வளவு செலவாச்சு ;)
ஏங்க சஞ்ஜெய் நீங்க எதுக்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க ?????
u r the best!
//இரண்டு வருடத்தில் இதுவரை யாரும் அனானியாக கூட என்னை திட்டியது இல்லை. //
naturally!
\\இளைய கவி said...
ஏங்க சஞ்ஜெய் நீங்க எதுக்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க ?????\\
இளைய கவியை கண்டிக்கிரேன்! ஏன் இப்படி தனி மனித தாக்குதல்! மொட்டை தலை - சஞ்சய்ன்னு?????????:-_)))))))))))))
// அபி அப்பா said...
\\இளைய கவி said...
ஏங்க சஞ்ஜெய் நீங்க எதுக்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க ?????\\
இளைய கவியை கண்டிக்கிரேன்! ஏன் இப்படி தனி மனித தாக்குதல்! மொட்டை தலை - சஞ்சய்ன்னு?????????:-_)))))))))))))//
ஏன் இப்படி நல்லாதான போய்கிட்டு இருக்கு
மற்றவர் மனம் கோணாமல், கலாய்ப்புத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதால்தான் குசும்பனால் எல்லோருடைய மனதையும் கவர முடிகிறது.
குசும்பன் படித்தக் கல்லூரியில்தான் நானும் படித்தேன் என்பதைக் கூறி பேருவகை கொள்கிறேன். (இப்பவே ஐஸைக் கொட்டி வச்சுடுவோம், நாள பின்ன குசும்பன் இன்னும் பெரிய ஆளாயிட்டா ஒதவும்ல?)
மேலும் மேலும் கலாய்க்க வாழ்த்துக்கள், சரவணா.. :)
ஆயில்யன்
சென்ஷி
மங்களூர் சிவா
சந்தனமுல்லை
முத்துலெட்சுமி
அனுஜன்யா-அவ்வ்வ்வ்வ்
ராஜ நடராஜன் -ஏன் அப்படி?
கார்க்கி-y???
நான் ஆதவன்
G3
அப்துல்லா- லிங் மிஸ் ஆகிட்டு இப்ப ஓக்கே!
வடகரை வேலன்
புலி
தருமி---எங்கேயும் எப்பொழுதும்:)
ஸ்ரீமதி
தமிழன்-கறுப்பி
வால்பையன்
முரளிகண்ணன்
பரிசல்-எடிட் செஞ்சே இவ்வளோ வருது!
ச்சின்ன பையன்
சுரேஸ்
அறிவிலி--அவருக்கும் அனுப்பியாச்சு அவர் சில்வண்டுகளுக்கு சிற்றுரை எழுதுவது இல்லையாம்:)
சஞ்சய்--உங்க பார்ட்னர் மாதியே இருங்க!
கும்க்கி
குடுகுடுப்பை- அனானி மூடி இப்பதான் கொஞ்ச நாள் ஆவுது!
இரா.வசந்த குமார்
தமிழ் பிரியன்
உஷா -அதில் என்ன டவுட்டு:))
அபி அப்பா
சோசப்பு நீ சொல்வது முற்றிலும் சரி:)
பாலரஜன்கீதா
விஜய் ஆன்ந்த்
ஆதிமுலகிருஷ்ணன் -- மன்னித்தருள்க ஆனாலும் மிக்க நன்றி
கதிர்
மின்னுது மின்னல்
கீழை ராஸா
நிஜமா நல்லவன்
இளயகவி நீங்க பிரபலம் இல்லைன்னு யார் சொன்னது?:)
பிளீச்சிங் பவுடர்--அவ்வ்வ்
சுந்தர்
s-team
தஞ்சாவூரான் கலாய்க்கிறீங்களே:)
வருகை தந்த அனைவருக்கும் நன்றி!!!
Post a Comment