கொஸ்டீன் டீன் கொஸ்டீன் என்ற ஒரு பகுதி ஆனந்தவிகடனில் வரும் அந்த பகுதியில் மட்டும் இன்றி பெரும்பால கேள்வி பதில் பகுதியில் பக்கத்துவீட்டு பையனுக்கும் எனக்கும் ஒரு “இது” அதை கண்டினியு செய்யலாமா வேண்டாமா? செய்வதால் என்ன பிரச்சினை என்று இளம் அம்மா ஒரு கேள்வி கேட்பார்கள்! இதுபோலவே பெரும்பாலும் அந்த கேள்வி பதில் பக்கம் இருக்கும், இன்னைக்கு என்ன மேட்டர் என்று படிக்கலாம் என்று பார்த்தால் இரண்டாவது கேள்வியில்
ஆலோசனை சொல்வபவர் நம்ம ஓசை செல்லா அண்ணாச்சி! இணைய கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவரும், நிஜ பிளாக் பெல்ட் வாங்கிய தமிழச்சியின் தோழர்.
அட ஓசை செல்லா அண்ணாச்சி கூளிங் கிளாஸ் இல்லாம இருக்கும் முதல் படம் போல:) சரி கேள்விக்கு வருவோம்!
”எனக்கு இனையத்தில் புதிதாக ஒரு வலைப்பூ(பிளாக்) தொடங்கி எழுத எண்ணம். பத்திரிகைகளில் எழுதினால் சன்மானம் கிடைப்பது போல்,இணையத்தில் எழுதுவதால் வருமானம் கிடைக்குமா?”
‘ஓசை' செல்லா
இணைய ஆலோசகர்
“தாராளமாக, ஏராளமாகக் கிடைக்கும். அதற்கு எழுத்தார்வத்தோடு கொஞ்சம் தொழில்நுட்பமும் தெரிந்திருக்கவேண்டும் கணேஷ். இரண்டு வருடம் மாங்கு மாங்கென்று எழுதியதில் எனக்கே ஒரு லட்சரூபாய்க்கு மேல் வந்துள்ளது. ஆனால் முன்பு போல இப்போது வருவாய் இல்லை. தமிழில் விளம்பரம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம். பப்ளிஷர் ஆக இருந்தால் மட்டுமே விளம்பர வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு ஆடியோ,வீடியோ கொண்ட வலைப்பூக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அவற்றுக்கு கூகுள் விளம்பரமும் கிடைக்கும் என்பதால் நல்ல வருமானம் வரும்.
உங்கள் எழுத்து மற்றவர்களை வசீகரிக்கும் என்று நம்பினால் இப்போதே,வலைப்பூவில் எழுதத் தொடங்குங்கள். பிளாக் என்பது நிச்சயம் வளர்ச்சி காட்டும் மீடியா. எனவே இப்பொழுதே எழுதத் தொடங்கி பிரபலமாகிவிட்டால் வருமானம் கிடைக்கும் காலத்தில் அறுவடை செய்யலாம். அதிக ஹிட்டுகள் காட்டும் பிளாக்குகளுக்கு கூகுள் விளம்பரமும் தேடி வரும். வாழ்த்துக்கள் கணேஷ்”
இதுதான் அண்ணாச்சியின் கருத்து!
ஏனுங்க அண்ணாச்சி உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்கும் பொழுது “எனக்கே ஒரு லட்ச ரூபாய்” என்று சொல்லலாமா? இந்த ”எனக்கே” என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, எனக்கு ஒரு லட்சரூபாய் வரை கிடைத்தது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்!
அதெல்லாம் இருக்கட்டும் அண்ணாச்சி, வருமானம் வருவது இருக்கட்டும் போகும் மானத்தை புடிச்சு வைப்பது எப்படி? அதுக்கு பதில் சொல்லுங்க!
(அப்பாலிக்கா எனக்கும் வருமானம் வருவது எப்படின்னு சொல்லி கொடுங்க, டீல் ஓக்கே ஆனது என்றால் கோவை வந்து சஞ்சய் மண்டையில் சூடம் ஏத்துறேன்!)
**********************************############*****************************
62 ஆம் பக்கத்தில் கட்டுப்பாடுக் கோடு சுயசிந்தனைக்குக் கேடு என்ற கட்டுரையில் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் பேட்டி!
“பொதுவாக பத்திரிகைகளில் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்ய வாய்ப்பு இல்லாதவர்களே இணையதளங்களில் எழுதுகிறார்கள். இணைய தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தெளிவான சட்டங்கள் நம்மிடம் கிடையாது. இருக்கும் ஒரே கேடயமான தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அதிகாரவரம்புகள் குறித்தும் தெளிவான வரையறைகள் கிடையாது. ஆர்குட்டின் பதிவுகளிலோ பிளாக்குகளிலோ கமெண்ட்டுகளைத் தணிக்கை செய்கிற உரிமை சம்பந்தப்பட்டவருக்கே உண்டு. எ னவே அ வரது வலைப்பக்கத்தில் உங்கள கமெண்டுகளுக்கு அவரே பொறுப்பு என்பது சட்டப்படி சரிதான். ஆனால் எல்லாவற்றுக்கும் சட்டத்தை துணைக்கு வைத்துக்கொள்ளமுடியாது. தணிக்கை என்ற பெயரில் கருத்துரிமையைப் பறித்தால் அது பன் முகத்தன்மையை அடக்கி ஒடுக்கிவிடும். ஒரே ஒரு கருத்துதான் அதுவும் குறிப்பிட்ட குழுவினருக்கே சாதகமாக தான் இருக்கவேண்டும் என்ற நிலமை வன்முறையில் விடியும் ஆபத்து இருக்கிறது.
என்கிறார் இனையத்தின் மூலம் பிரபலமான படைப்பாளிகளில் ஒருவர் 'லிவிங் ஸ்மைல்' வித்யா.
******************************
நேற்றே ஜூவியில் வந்த நர்சிம் ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்!
Sunday, March 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
விகடனில் வந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. எல்லாரும் நல்லா இருங்க.. :)
நானும் சஞ்சை நாக்கிலே சூடம் ஏத்தறேன்!
விகடனில் வந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..
எல்லாருக்கும் வாழ்த்துகள்.
குசும்பரே உங்களுக்கு இதுவரைக்கும் எவ்ளோ கிடைச்சுது? (பணமா இல்ல அடியான்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க)
விகடனில் வந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..
ஏம்ப்பா சரவணா,
மத்தவிகளுக்கு வாழ்த்து சொல்லும்போதுகூட சஞசய வம்புக்கிழுக்கனுமா?
//பக்கத்துவீட்டு பையனுக்கும் எனக்கும் ஒரு “இது” அதை கண்டினியு செய்யலாமா வேண்டாமா//
டீன்கொஸ்டின் கலாய்ப்பு கலக்கல்..
நன்றி..
'போகும் மானம்' புடிச்சு வைப்பதா? 'போன மானத்தை திரும்பப் பெற முப்பது வழிகள்' ஏதாவது இருக்கானு கேட்டிருக்கணும் :)
மூவருக்கும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
விகடனில் வந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
//சஞ்சய் மண்டையில் சூடம் ஏத்துறேன்
நானும் சஞ்சை நாக்கிலே சூடம் ஏத்தறேன்!//
ஹை இது ரெண்டும் நல்லா இருக்கே
கற்பூரம் நான் ஸ்பான்சர் செய்யறேன் :)
Thanks for collection. I am still laughing. My colleagues are look at me something different. விகடனில் வந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
விகடனில் வந்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..
நன்றி தொழிலதிபரே
அபி அப்பா நான் தான் சூடம் ஏத்துறனே நீங்க ஏன் சூலம் ஏத்தக்கூடாது?
நன்றி ஆயில்ஸ்
ஆதவா ஒன்னும் இதுவரை கிடைக்கவில்லை:))
நன்றி தமிழ் பிரியன்
வடகரை வேலன் அண்ணாச்சி அது என்னமோ சஞ்சய் வம்பிழுத்தாதான் தூக்கம் நல்லா வருது!
நன்றி நர்சிம் தல
நன்றி யூத் அனுஜன்யா, அதுபோல ஒரு பதிவும் போட்டுவிடலாம்:)
தாரணிபிரியா அல்ரெடி சூடம் ரெண்டு பேர் ஏத்துறோம் நீங்க கொஞ்சம் டிபரண்டா ஏதும் வேண்டிக்குங்க!!!
நன்றி சன்னி!
நானும் பார்த்தேன்.
எல்லா ப்ளாக்கும் ஒரு நாள் பத்திரிக்கையில வந்துரும் போல!
வேற எடத்துல கச்சேரி நடக்குதா?நடக்கட்டும்!நடக்கட்டும்!வாழ்த்துக்கள்.
//வடகரை வேலன் அண்ணாச்சி அது என்னமோ சஞ்சய் வம்பிழுத்தாதான் தூக்கம் நல்லா வருது!//
விகடன்ல கலக்க வேண்டிய ஆளுக எல்லாம் பதிவுல குப்பையக்கொட்டிகிட்டு...
//எனக்கும் வருமானம் வருவது எப்படின்னு சொல்லி கொடுங்க, டீல் ஓக்கே ஆனது என்றால் கோவை வந்து சஞ்சய் மண்டையில் சூடம் ஏத்துறேன்!//
மாப்பி, அந்த வருமானம் மேட்டர எனக்கும் சொல்லி குடு, நானும் நீயும் நல்ல பெரிய்ய்ய்ய்ய்ய சூடமா பார்த்து வாங்கி, சஞ்செய் மண்டையில ஏத்திருவோம்.
ஆமா சூடத்த அங்க வைச்சா நிக்குமா? இல்ல வழுக்கி விழுந்துராது? எதுக்கும் ஃபெவிக்கால் போட்டு ஒட்டி அப்பாலிக்கா கொளுத்துவோமா?
இணையத்தில் மேய்ந்த போது கண்ணில்பட்டது! நன்றி ! எவ்வளவு ஒரு காலதாமதம்! ;-)
முதல்ல போட்டது என்னுடையது தான்!
நன்றி..
ஓசை செல்லா
Post a Comment