Tuesday, October 14, 2008

தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!

பரிசல்காரன் தாங்கள் அருமையாக எழுதுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் தாங்கள் எழுதிய கடந்த சில பதிவுகள் என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!

1) தாங்கள் எழுதும் பதிவுகள் வர வர பெரிதாகிகொண்டே போகிறது.
2) அப்படி எழுதிய பதிவை என்னை படிக்க வெச்சது( என்னை எழுத அழைத்ததால்)
3)படிக்க வெச்சது மட்டும் இன்றி இம்மாம் பெரிய பதிவை என்னை எழுத வெச்சது.

பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.

இனி உங்கள் கேள்விகளுக்கு பதில்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது நினைவு இல்லை வீட்டுக்கு அருகிலேயே சித்தப்பாவின் டூரிங் டாக்கிஸ் இருந்ததால் தினம் படம் தான்.நினைவு தெரிந்து பார்த்த படம் என்று சொல்வதை விட விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ் கும்பகோணம் விஜயாவில், படம் பேருக்கு ஏத்தமாதிரி கணுக்காலுக்கு மேல கூட காட்டவில்லை. தியேட்டரில் மூட்டைபூச்சி கடி அதனால் வீக்கத்தை உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -ஷார்ஜா கான்கோர்டில்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து பொல்லாதவன் படம் ஒரிஜினல்பிரிண்டில் பார்த்தேன். என்ன உணர்ந்தேன் என்றால், வயிறு புல் ஆனது போல் உணர்ந்தேன் மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா!
வீரம் விளைஞ்ச மண்ணு- எப்படி தாக்கினுச்சின்னு சொல்றேன். அன்று வழக்கம் போல் காலேஜ்க்கு போய் எல்லா புரொபசரும்ஒழுங்கா வந்து இருக்காங்களான்னு ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம். நான் பேசிக்கா நடக்க அலுப்பு படும் சோம்பேறி,அதனால் ரயிலை விட்டு இறங்கியதும் தஞ்சை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இருக்கும் ராஜராஜன் தியேட்டருக்கு போகலாம் விஜயகாந்து படம் ரிலீஸ் ஆகி இருக்கு போகலாம் என்றேன், நாங்க மொத்தம் 20 பேர் சரி என்று வந்தார்கள் படம் போட்டு அரை மணி நேரம் கூட ஓடவில்லை,அத்தனை பேரும்போட்டு கும்மி எடுத்தானுங்க. அன்னைக்கு விட்டது விஜயகாந்து படம் பார்ப்பதை.ரொம்ப தாக்கிடுச்சு:(

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன். நம் பிளாக்கர் தமிழ் சினிமா அவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்கிறேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன். சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம் , அடிக்கடி அதோட டிக்கியில் கொசு கடிச்சுது போல அடிக்கடி டிக்கியில் அடிச்சு அடிச்சு டான்ஸ் ஆடினது பாருங்க ம்ம்ம் செம பாட்டு செம டான்ஸ்!(கடைசி வரை அந்த கொசு அடிப்பட்டுதா இல்லையான்னு தெரியலை) பாட்டை பற்றி விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(ஒரு நேரத்தில் ஒரு கேள்வி கேட்டாலே பேபேன்னு முழிக்கும் ஆள் இப்படி வரிசையா கேட்டா எப்படி?)

நேரடி தொடர்பு இருந்தது, சேது படத்து தயாரிப்பாளர் குடும்ப நண்பர் அதுக்காக படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா? பாலா திரும்ப எங்க ஊருக்கு படம் எடுக்க வந்தால் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? இப்ப தமிழ் மேம்பட பிளாக் எழுதுவது போலவா!!!:)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள். ராகுவில் ஜே.கே ரித்திஸ் இருப்பதால் அடிக்கடி நல்ல காமெடி படம் கிடைக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நோ பிராபளம், யாரடி நீ மோகினி படத்தில் நடிச்ச அந்த குட்டி பொண்ணு போட்டோவை வெச்ச ஒரு வருடத்தை ஓட்டிவிடலாம்.தமிழர்களுக்கு என்ன ஆகும் பணம் மிச்சம் ஆகும், பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.

இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்

1)அகில உலக குறும்பட வித்தகரும், குறும்பதிவரும் ஆன -- அண்ணன் உண்மை தமிழன் (உங்க பெயருக்கு பின்னாடி நீங்க போடும் நம்பர் தெரியவில்லை கோச்சுக்காதீங்க)

2) சிங்கப்பூர் தமிழ்குடிதாங்கியும், அநியாயத்துக்கு எதிரா பொங்கும் பொங்கல்பாண்டியும், பதிவர் மாநாடு ஆர்கனைசரும், சிங்கப்பூர் பதிவர் சங்க போர் வாளும் ஆன நண்பர்- ஜோசப் பால்ராஜ்

3) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மது மதி

4) ஷங்கரின் அடுத்தப்படத்துக்கு கேமிரா மேன் ஆக வேலை செய்யப்போகிறவரும், நோய்யினில் விழுந்தவரும், வலையுலக மார்கண்டேயனுமான நந்து தாத்தா of நயன்தாரா

5) ஆராய்சி கட்டுரையும், அறிவியல் சிறுகதையும் எழுதும் இளம் சைன்டிஸ்டும் ,விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன்

57 comments:

said...

ஹிஹிஹி.. இருங்க சிரிச்சிட்டு வந்து மீதிய சொல்றேன்

said...

படம் ஹை ஹீல் கேர்ள்ஸ்கும்பகோணம் விஜயாவில், படம் பேருக்கு ஏத்தமாதிரி கணுக்காலுக்கு மேல கூட காட்டவில்லை.- ஹா! ஹா! இது தான் செம காமெடி.

said...

:):):)

Anonymous said...

:)

said...

//கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -ஷார்ஜா கான்கோர்டில்.

மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா!
வீரம் விளைஞ்ச மண்ணு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க ரொம்ப நல்லவரு

said...

கலக்கல் ...பொல்லாதவன் கிஷோர் நடிப்பு அதிரடி

நர்சிம்

said...

வீரம் வெளஞ்ச மண் படத்தோட திரைவிமர்சனத்தை அடுத்த பதிவில் போட முடியுமா?

said...

:-)))

said...

:-)))...

ஹா ஹா ஹா!!!

// காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான் //

அவ்வ்வ்வ்....என்னாதிது???

// விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன் //

பாவம்....விக்கிய இப்படி சொல்லிட்டீங்களே...

said...

தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல‌ ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.

said...

//அடா அடா என்னா ஆட்டம் , அடிக்கடி அதோட டிக்கியில் கொசு கடிச்சுது போல அடிக்கடி டிக்கியில் அடிச்சு அடிச்சு டான்ஸ் ஆடினது பாருங்க ம்ம்ம் செம பாட்டு செம டான்ஸ்!(கடைசி வரை அந்த கொசு அடிப்பட்டுதா இல்லையான்னு தெரியலை)//

நான் கேட்டுப் பார்த்தேன்... இன்னும் கொசுவை அடிக்கலையாம். அவுங்க மேல சூனியம் ஏவிவிட்டிருக்கதால அவுங்க டான்ஸ் ஆடும் போது மட்டும் வந்து கடுச்சிட்டு போய்டுதாம்... அதான் இன்னிக்கு வரைக்கும் அடிச்சிகிட்டு இருக்காங்க... அதுவும் ஒரு தொடர் சூனியம் போல அவுங்க நடிக்காததால் மற்ற நடிகைகளை கடித்துக் கொண்டிருக்குது கொசு...

said...

பயமுறுட்தீட்டியே நண்பா...!

இருங்க முழுசா படிச்சுட்டு வரேன்..!

said...

சூப்பர் :))

said...

//எல்லாமே செம தாக்குதான்.//

என் ஞான திருஷ்டியில் என்ன படம் என்பது சற்றே தெரிகிறது... எல்லா மொழி படங்களும் ஒரே பாணியில் இருக்கும் போல இருக்கே...

said...

//பாவம்....விக்கிய இப்படி சொல்லிட்டீங்களே...//

குசும்பன் விஜய் ஏன் உங்க பேர பாவம்னு சொல்றாரு...

said...

//பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.//

அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி அசராம அடிக்கிறது அந்த பாபா பாலிஸி... அப்படினு சொல்றாரே கவனிச்சிங்களா இல்லையா... படம் ஓடலைனாலும் இன்சுரன்ஸ் கிடைச்சிருக்கும் போல...

said...

சினிமா பற்றி் நி்றையக் கற்றுக்கொ ண்டேன்:)

said...

எல்லா பதிலும் சூப்பர்.. சிரிச்சிட்டே படிச்சேன்.. :)))

said...

பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ் கும்பகோணம் விஜயாவில்
//


தல நீங்களும் படம் பாத்திங்களா..!!

நானும் சீட் நம்பர் B4 என்ன ஒற்றுமை தல

:)

Anonymous said...

காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா and Animal என்று பல உலக படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.


Animal Life ??????????????????

said...

நினைவு தெரிந்து பார்த்த படம் என்று சொல்வதை விட விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம்
//

கேள்வி கேட்ட பதில் சொல்லனும்
புது கேள்வி நீயே கேட்டு அதுக்கு நீயே பதில் சொல்வது ட்ட்டு மச் :)

said...

லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும்
////

அசின்..!!!???
ரயில நிப்பாட்ட ஓடிவருவாங்களே :)

பாவனாவை விட்டுடிங்களே..:(
தம்பி கோவிச்சிக்க போறாரு

said...

//தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!//
:-)))

said...

//அன்னைக்கு விட்டது விஜயகாந்து படம் பார்ப்பதை.ரொம்ப தாக்கிடுச்சு:(/

:-P

said...

//5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது./

ஆஹா.. :-P

said...

//பரிசல்காரன் தாங்கள் அருமையாக எழுதுவது அனைவரும் அறிந்ததே,//

உடுக்கை உடுக்கை

said...

//சில பதிவுகள் என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.//

நிஜமா தான்
எனக்கு தூக்கம் தூக்கமா வருது

said...

//அதனால் வீக்கத்தை உணர்ந்தேன்.//

malena மாதிரி படம் பார்த்தா வேற மாதிரியெல்லாம் உணரலாம்

said...

//கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -//

கடைசியாக உங்களை வெறுப்பேற்றிய படமும் இது தானாமே

said...

//பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.//

உண்மையில் பா.ம.க ரஜினிக்கு செய்து இலவச விளம்பரம் அது

said...

//எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.//

உங்க தொழில் நுட்ப ஆர்வத்தை பாராட்டுறேன்

said...

கார்க்கி நன்றி

****************************
வடுவூர் குமார் முதல் முதலாக ஆசை ஆசையா போய் ஏமாந்து வந்தேன்:((
****************************
ராப் நன்றி
*****************************
நன்றி தூயா
****************************
ராப் இப்பயாவது ஒத்துக்கிட்டீங்களே:)
****************************

said...

ஆமாம் narsim அவரு செமயா நடிச்சு இருந்தாரு! ஆமா யாரு அதுல கிஷோர்:))))

***************************
ராப் விஜயகாந்தே மறந்து போய் இருப்பார் அப்படி படம் நடிச்சத
அது கொழுக்கட்ட, வாழமட்ட என்று குஷ்பூ பாடும் பாட்டு இருக்கு பாருங்க அது காலத்தையும் கடந்து காது வலிக்கும் பாட்டு.
****************************
நன்றி கிரி
*************************
விஜய் ஆனந்த் said...
// விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன் //

பாவம்....விக்கிய இப்படி சொல்லிட்டீங்களே...//

இருங்க இருங்க ஒழுங்கா படிங்க விஜய்க்கு அடுத்தபடியா என்று சொன்னது சரிதான் நீங்கதான் அந்த விஜய் என்பது தெரியாதா!!!
(என்னமோ தெரியலை ஒவ்வொருமுறையும் கரீட்டா வந்து ஆப்ப வாங்கிட்டு போறீங்க)

உங்களுக்கு பிறகு கொடுத்து முடிஞ்சு ஏதும் மிச்சம் மீதி பட்டம் இருந்தாதான் அது விக்கிக்கு
***********************************

said...

கார்க்கி said...
தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல‌ ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.//

அப்ப குமுதத்துக்கு நம்ம போட்டோவை அனுப்புவோம் ஆறு வித்தியாசங்கள் போட்டி வைப்பாங்க:)))
******************************
விக்கி அந்த பாட்ட பத்தி கேட்டுப்பாத்ததோட நிப்பாடிக்கனும் பார்த்தீங்க அப்புறம்........:)
********************************

said...

கார்க்கி said...
தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல‌ ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.//

அப்ப குமுதத்துக்கு நம்ம போட்டோவை அனுப்புவோம் ஆறு வித்தியாசங்கள் போட்டி வைப்பாங்க:)))
******************************
விக்கி அந்த பாட்ட பத்தி கேட்டுப்பாத்ததோட நிப்பாடிக்கனும் பார்த்தீங்க அப்புறம்........:)
********************************

said...

பரிசல் இன்னுமா படிக்கீறீங்க:))))

**********************************
நன்றி ஆயில்யன்

**********************************
VIKNESHWARAN said...
// எல்லா மொழி படங்களும் ஒரே பாணியில் இருக்கும் போல இருக்கே...//

நீங்க ஏதோ டபுள் மீனிங்கில் பேசுவது போல் இருக்கு, எனக்கு புரியவில்லை.

said...

க்கும் என்ன சிக்க உடரதே உனக்கு வேலையா போச்சு.
நான் போஸ்ட் போடரதே எப்பவாச்சும்.சரி
எழுதலாம்தான். நிறய சென்சார் பண்ணி வேண்டி வரும். எக்ஸ்பீரியன்ஸ் அப்படி. எல்லாத்தையும் சென்சார் பண்ணிட்டா பதிவுல 10 வரிதான் மிஞ்சும். அதான் யோசிக்கறேன்.

said...

//குசும்பன் said...
கார்க்கி said...
தல நானும் ஒன்னும் போட்டு இருக்கேன்.. சிலபல‌ ஒத்துமை இருக்கு நமக்குள்ள. யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.//

அப்ப குமுதத்துக்கு நம்ம போட்டோவை அனுப்புவோம் ஆறு வித்தியாசங்கள் போட்டி வைப்பாங்க:)))//

தல உருவத்துல நமக்குள்ள ஒற்றுமை இல்லையே.. எனக்கு கொஞ்சம் அதிகம்.. அழக சொன்னேன்...(என்ன பல்பு வாங்கப் போறேனோ)

said...

//பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.//

இதுக்குப் பேரு எச்சரிக்கையா..? வயித்தெரிச்சல்.. எனக்கும் நல்லா புரியுது.. என்ன செய்யறது குசும்பா.. கை நிக்க மாட்டேங்குதே..

said...

//விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ்//

கிழிஞ்சது.. இந்தப் படமெல்லாம் பார்த்துத்தான் புள்ளைக்கு 'விவரம்' தெரிஞ்சுச்சாக்கும்..? கொடுமை..

said...

//திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து 'பொல்லாதவன'் படம் ஒரிஜினல ்பிரிண்டில் பார்த்தேன்.//

அடுத்த தடவை வா.. நடிகர் சங்கத்துல சொல்லி ஒரு பாராட்டு விழா நடத்தச் சொல்றேன்..

said...

//மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.//

அப்பப்ப வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகிக்க சாமி.. பின்னாடி உதவும்.. உக்காந்தே தின்னேன்னு வைச்சுக்க அப்பால தொந்திதான் முன்னால வரும்.. நீ பின்னாலதான் வருவ..

said...

//ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம்.//

அடப்பாவி மக்கா.. இப்படியெல்லாம் கட் அடிச்சு நல்ல சினிமாவுக்கா போறது.. நான் இந்தத் தப்பையெல்லாம் பண்ணினதேயில்லை.. ஒன்லி பார் அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்காக மட்டுமே கட் அடிச்சேன்..

said...

//பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.//

இதுதான் குசும்பன் ஸ்டைலு.. கலக்குது போ..

said...

//ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது//

இதை ஏற்கெனவே ஆர்.கே.செல்வமணி 'செம்பருத்தி' படத்துல வைச்சிருந்தாரு.. சிம்புவும் காப்பியடிச்சாரா..?

said...

//அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன்.//

குத்தூசி மாதிரி சின்னச் சின்னதா கமெண்டு போடும்போதே தெரியுது.. அதையெல்லாம் உருட்டுக்கடி படிச்சிருப்பன்னு..

said...

//ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன்.//

குத்துப் பாட்டுக்கு ரசிகனா நீ.. அப்ப அவனா நீயி..?

said...

//தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.//

எல்லாமே மேப்புல பார்த்தைத்தான சொல்லிருக்க ராசா..?

said...

//படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா?//

படம் எடுக்கும்போது கூட இருந்தியா..? உனக்கு ஒண்ணும் ஆகலியே..? இன்னொரு தடவைன்னா நீதான் சேதுவா நடிச்சாகணும்.. பரவாயில்லையா..?

said...

//லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள்.//

அதான் ஜோஸ்யம் சொல்றதுக்கு வாத்தியார் ஒருத்தர் இக்காருல்ல.. பின்ன நீ எதுக்கு முந்திக்கிட்டு முந்திரிக்கொட்டையாட்டம்.. ஆமா எனக்கு 4-ல் சனியும், 7-கேதுவும் இருக்கிறார்களாம்.. எப்போது நமீதாவும், ஷ்ரேயாவும் வருவார்கள்.?

said...

//பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.//

)))))))))))))))))))

said...

ண்ணா..... எப்படி ... இப்படி... .. கலக்ஸ்...

said...

\\ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.\\

:))

said...

// சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம்//

மந்த்ரா சார்மி பாட்டா?? Black Eyed peasஓட தெலுங்கு வெர்சன்.. அது அப்படியே தமிழ் வெர்சனாயிடிச்சு... இருந்தாலும் சார்மிக்காக மன்னிச்சு விட்டுடலாம் :))

said...

ண்ணா...எப்டிங்ண்ணா இப்படில்லாம்???

சூப்பர் தல :))))))))))))))))))

said...

சான்ஸே இல்ல போங்க.

பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.

ஐயோ. ஆபீஸில எவ்வளவு நேரம்தான் சிரிக்காத மாதிரியே நடிக்கறது.

said...

nalla karpanai