Friday, October 24, 2008

துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசு
அனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர் பயிற்சிக்காக வந்தவர் என்று சொல்வார், அங்கு அவர் அண்ணன்,அண்ணி இருவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் அங்க தமிழ் ஆட்களை கண்டால் சிங்களருக்கு பிடிக்காது மிகவும் கொடுமை படுத்துவார்கள்
என்று சொன்னது நினைவு இருக்கிறது. மேலும் அங்கு நடக்கும் சண்டைகள் பற்றி விளக்கமாக சொல்வார். அவர் கண் புருவத்தின் மேல் கருப்பாக காச்சி போய் இருக்கும் என்ன என்றால் துப்பாக்கி டிரிகர் குறிபார்க்கும்
பொழுது அது கண்ணை அழுத்தி அழுத்தி அந்த இடம் காய்சிபோய்விடும் என்றார். இதனால் தான் பலரும் போலீஸில் பிடிபடுவார்கள் என்று சொல்வார்.

துபாயில் இருந்து டிராண்சிட் பிளைட்டில் வந்த பொழுது 4 மணி நேரம் ஸ்ரீலங்காவில் இருக்க நேரிட்டது, தாழ்வாக விமானம் பறந்த பொழுது அந்த நாட்டின் அழகு ஈடு இனை இன்றி இருந்தது. சண்டை மட்டும் இல்லை என்றால் சுற்றுலா தலங்களில் முதன்மையாக வருவாய் ஈட்டும் வாய்பு உள்ள நாடு!

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

தமிழீழம் சீக்கிரம் மலரவேண்டும் ஆனால் அப்படி மலரும் பொழுது தமிழ் மக்கள் அதை கொண்டாட இருக்கவேண்டும்,இப்பொழுது நடக்கும் சண்டைகளை பார்த்தால் குறைந்தது அதிகார பகிர்வு மூலம் அதிகாரத்துக்கு வந்தாவது உயிர்பலியை தடுக்கவேண்டும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

http://www.lankasrinew.com/

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரசியல் அரசியல் அரசியல்!, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கொடுக்கும் குரல்கள் சீசன் பிஸினஸ் போல் சீசன் அரசியல்!

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

சொல்ல வார்தைகள் ஏதும் இல்லை! காலேஜில் படிக்கும் பொழுது பிரபாகரன் படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அந்த அளவுக்குஅவரை பிடிக்கும், சில வருடங்களுக்கு முன்பு பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின் பொழுது அவருடைய செக்யூரிட்டி இருவர் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருந்தார்கள் அது எக்ஸ்ரே கிளாஸ் என்றும் அது போல் இந்திய தலைவர்களுக்கு கூட பாதுக்காப்புகிடையாது என்றும் சொன்னார்கள், அப்பொழுதும் முதன் முதல் வான் வழி தாக்குதல் நடத்திய பொழுதும் இருந்த மகிழ்ச்சி, பெருமை எல்லாம்கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது, இப்பொழுது எதைப்படித்தாலும் புலிகளுக்கு பின்னடைவு என்றே செய்திகள் வருகிறது.தமிழ்ச்செல்வன் இல்லாத குறை நன்றாக தெரிகிறது. பழயபடி புலிகளின் கை விரைவில் ஓங்க வேண்டும்.

மூன்று பேரை அழைக்கவேண்டும் என்பது தூயாவின் கட்டளை!

1) இலங்கை அரசியலை பற்றி மிகுந்த அனுபவம் உடையவரும், பிரபாகரனை நேரில் சந்தித்தவருமான ஆசிப் அண்ணாச்சியின் அப்பா திரு. அப்துல் ஜப்பார் http://smabduljabbar.blogspot.com/ (அண்ணாச்சி அப்பாவுக்கு கேள்வியை அனுப்பி பதில் வாங்கி போடுங்க, அவுங்க அனுபவத்தில் சொல்வது சிறந்ததாக இருக்கும்).

2) பினாத்தல் சுரேஸ் அவர்கள் இவரின் அரசியல் நிலைப்பாடு வித்தியாசமாக இருக்கும்.

3) பாரி அரசு அரசியல் பதிவுகளில் அதிரடி போடும் இவர் கொஞ்சம் நாட்களாக எழுதாமல் இருக்கிறார் அவரும் இதைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

8 comments:

Anonymous said...

பதிவிற்கு நன்றி சகோதரா..

said...

எப்படியாவது இந்த உயிர் பலி நிறுத்தப்படவேண்டும், சகோதரி தூயா நிஜமாகவே இவ்வளவு நகைகளோடு ஈழத்தில் வாழவேண்டும்.

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது

said...

//
எப்படியாவது இந்த உயிர் பலி நிறுத்தப்படவேண்டும், சகோதரி தூயா நிஜமாகவே இவ்வளவு நகைகளோடு ஈழத்தில் வாழவேண்டும்.
//

ரிப்பீட்டு

Anonymous said...

நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்...

said...

குசும்பு,

இது தான் முதல் சீரியச் பதிவா? நல்லா இருக்கு.

said...

குசும்பு,

இது தான் முதல் சீரியச் பதிவா? நல்லா இருக்கு.

yes i repeat the same

Anonymous said...

http://thooya.blogspot.com/2008/11/blog-post.html

Anonymous said...

//அங்க தமிழ் ஆட்களை கண்டால் சிங்களருக்கு பிடிக்காது மிகவும் கொடுமை படுத்துவார்கள்
என்று சொன்னது நினைவு இருக்கிறது. //
இபபோது அறிந்து கொள்ளுங்கள் புலிகளை ஏற்று கொள்ளாத தமிழ் ஆட்களை கண்டால் புலிகளுக்கு பிடிக்காது தமிழ்துரோகி என்று கொன்று விடுவார்கள்.