Tuesday, March 31, 2009

கார்ட்டூன் ஸ்பெசல் 1-4-2009




























டிஸ்கி: இப்ப புரிஞ்சுடுச்சு நம்மை ஏன் ஸ்டார் ஆக்கினாங்க என்று, இன்று ஏப்ரல் 1 இந்த தமிழ்மண முகப்பை நம்மை விட சிறப்பா அலங்கரிக்க யாரு இருக்கா!


காமத்தில் இருந்து கடவுளுக்கு

ஓஷோவை பற்றி எனக்கு அறிமுகம் கொடுத்தது என் சித்தப்பா, ஒஷோவை எல்லோரும் செக்ஸ் சாமியார் என்று சொல்வாங்க ஆனால் நிஜம் அதுவல்ல, அவரின் புத்தங்களை படிஎன்று சித்தப்பா கொடுத்த அறிமுகத்தினால் ஓஷோவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்தது, ”நான் உனக்கு சொல்கிறேன்” என்ற புத்தகம்.

பைபிள் வாசகத்துக்கு இவர் கொடுக்கும் விளக்கங்களால் கவரப்பட்டு இவரை பற்றிய புத்தங்களை தேடி, தேடி வாங்கினேன் ஒரு கட்டத்தில் ஓஷோவின் புத்தங்களுக்குமட்டும் என்று ஒரு அலமாரி ஒதுக்கும் படி ஆனது! அடிக்கடி திரும்ப திரும்ப படிக்கும் புத்தங்கள்

1)காமத்திலிருந்து கடவுளுக்கு

2)நான் உனக்கு சொல்கிறேன் 1&2

3)புத்தரின் பக்தி சூத்திரம்

என் அறை என் கம்யூட்டர் டெஸ்க்டாப் என்று, எங்கும் ஓஷோவின் படங்கள் நிறைய ஆரம்பித்த நேரம் வீட்டில் கொஞ்சம் கலவரமாக பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆன்மீகம் என்றால் சாமியாராய் போவது மட்டும் தான் தெரியும்! ஒரு முறை அம்மாவே கேட்டுவிட்டார் என்னடா..? இப்படியே போனால் சாமியாரா போய்டுவே போல் இருக்கிறதே என்று.

காமத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்த்த மனிதர்களில் ஒருவர்! அல்லது ஒருவரே ஒருவர் என்றும் சொல்லலாம் ஓஷோவை! அவரின் ”காமத்திலிருந்து கடவுளுக்கு...!” என்ற புத்தகம் ஒன்று போதும் காமத்தை பற்றி சரியான விளக்கம் கிடைக்க,காமத்தை பற்றி பேசினால்பாவம் என்று நினைக்கும் கால கட்டத்தில் சாமியார் ஆன்மீக குரு என்று அழைக்கப்படும் ஒருவர் செக்ஸை பற்றி பேசுவது என்பது அத்தனை எளிது அல்ல.அதில் அவர் சொல்லியதில் இருந்து சில...ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்.

அதுபோல் தான் காமமும், காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார். வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும் என்கிறார். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை ”நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும் என்று கொடுக்கும் விளக்கம். காமத்தை பற்றி ஒரு புதிய பார்வையை கொடுக்கும்!

மேலும் இந்த புத்தகத்தில் எங்கும் ஆன்மீகத்தை பற்றியோ கடவுளை பற்றியோ எதுவும் இல்லாததால் நாத்தீகர்கள் கூட படிக்கலாம் இதை.

ஓஷோவை சாமியாராக அனுகவேண்டாம் ஒரு ஆசிரியராக அனுகவும் எவ்வித முன் முடிவுகளும் இல்லாமல் காமத்திலிருந்து கடவுளுக்கு புத்தகதை வாங்கி படியுங்கள் காமத்தை பற்றி பல புரிதல் கிடைக்கும். ஏன் மனிதனுக்கு காமம் மேல் அத்தனை ஆசை என்று.

Monday, March 30, 2009

வலையுலக பிரபலங்களின் பார்வையில் குசும்பு ஒன்லி

குசும்பன் தொடர்ச்சியாக, படங்கள் கொண்ட பதிவைப் போடுங்கள். வாரத்துக்கு மூன்றாவது அப்படி வந்தால் உங்கள் பதிவின் தனித்தன்மை அதிகமாகும். ஏற்கெனவே வெளியான படத்துக்கு சிறப்பான, நகைச்சுவை கமெண்ட் எழுதுவது என்பது தனிக்கலை. அதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் (நமது அரசியல்வாதிகள் கில்லாடிகள், நமக்கு அற்புதமான வாய்ப்புகளை வாரி வழ்ங்குவார்கள்) அனைவராலும் அதனைச் செய்யமுடியாது. உங்களுக்கு முடிகிறது.


ஹ்யூமர் என்பது நமக்கு அதிகம் வராத கலை. அதை நீங்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.
--பத்ரி

***********************************

அன்பு குசும்ப சித்தரே!! நீ எழுதின பதிவு எல்லாமே படித்திருக்கேன்.அதை விட உன் பின்னூட்டமும் என்னை குபீர்ன்னி பல சமயம் ஆபீஸ்ல சிரிக்க வச்சு என்னை மற்றவர்கள் மத்தியில் பைத்தியகாரனா ஆக்கியிருக்கு. அதனால் தானோ என்னவோ உன் மேல் ஒரு ஸ்ஃப்ட் கார்னர் எனக்கும் என் குடும்பத்துக்கும்.அதனாலேயே உன் கல்யாண கொண்டாட்டம் என் வீட்டிலே அத்தனை ஒரு தடபுடலாய் இருந்துச்சு.

என் பதிவை என் மனைவியிடம் படிக்க சொன்னா படிச்சுட்டு அழுவாங்க. ஆனா அவங்க சொல்லி சொல்லி சிரிச்ச உன் ஒரு பின்னூட்டம்(இப்பவும் என்னை வெறுப்பேத்தும்) நான் ஒரு தடவை மனைவியை பத்தி எழுதும் போது 'நானோ உணர்சிபூர்வமாய் முடிவெடுப்பேன், நீயோ அறிவு பூர்வமாய் முடிவெடுப்பாய்" என எழுதியிருந்தேன். அதுக்கு நீ "யார் யாருக்கு எது எது இருக்கோ அதைத்தானே பயன்படுத்த முடியும்" என ஒரு பின்னூட்டம் போட்டாய்.

நான் துபாய் உயந்த கட்டிடத்தின் 160 மாடியில் நின்னு சிரிச்சேன். சிரிச்சேன் சிரிச்சேன். இப்படி காமடியை ஒரு கலையாக நினைக்கும் நீ திடீர்ன்னு "மாட்டு வண்டி" பத்தியும், என்னவோ பிரிண்டிங் மிஷின் பத்தியும் கூட எழுதி டபால்ன்னு "டேய் நானும் ரவுடி தான்"ன்னு அறிவு ஜீவியா மாறிடுவே. அது போல மொக்கை போட்டாலும் உன்னை அடிச்சுக்க முடியாது. "தமிழ்மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்" பதிவை தமிழ்மணமே கூட மறக்காது! உன்னை காமடியிலே அடிச்சுக்க இன்னும் ஒருத்தனோ ஒருத்தியோ பிறக்கனும்! அதுக்கு என் வாழ்த்துக்கள்!

அன்பு அண்ணன்


***********************************
குசும்பன் ரொம்ப நல்லவன். ரொம்ப ரொம்ப நல்லவன்.. ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன். அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம் வந்துடக் கூடாதேங்குறதுக்காக தான் ரொம்பக் கஷ்டப்படுவான்.அதிலும் குறிப்பாக தனது அலுவலகத்திற்கு வரும் இளம் பெண் வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்க குசும்பன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.

'இருங்க அண்ணாச்சி. அவங்களுக்கு ஏதோ பிரச்னை போலிருக்கு' என்று எழுந்து போய் சும்மா நின்று கொண்டிருக்கும் பெண்ணிடம் 'எனி ஹெல்ப் மேடம்?' என்று கேட்டு விட்டு , அந்தப் பெண் முறைத்ததும் 'பிரசனை ஒண்ணுமில்லயாம் அண்ணாச்சி' என்று திரும்பி வந்து சொல்லும்வரை குசும்பனின் வாடிக்கையாளர் விசுவாசம் பிரமிப்பு தருவது.

வேடிக்கை ஒரு புறமிருக்க எந்த அறிவுஜீவிச்சாயலும் இல்லாமல் இயல்பான பச்சை மனிதனாகத் தன்னை அடையாளம் காட்டுவதுதான் குசும்பனிடம் எனக்கு மிகப்பிடித்த விசயம். எப்போதும் காணப்படும் உற்சாகம். (ஒரே ஒரு முறை மட்டும் அவன் சங்கடப்படுவதைப் ப்கிர்ந்து கொண்டபோது அவனுக்கு ஆறுதல் சொல்லி தைரியம் சொன்னாலும் எனக்கே ஏதும் செய்யப் பிடிக்காமல் போனது ) எதையும் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கு.

போலித்தனமில்லாத அன்பு - இவையும் குசும்பனிடம் பிடித்தமானவை. அதையும் விட 'என்நஒ ரொம்ப நல்லவன்'ன்னு நினைக்குற ஒரே ஆளு குசும்பன் மட்டும்தாங்குறதை நினைக்கும்போதுதான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ. ஆனந்தக் கண்ணீர் வருது. மக்கா!! நல்லா இருடே!

***********************************
இந்தா வாங்கிக்க எனது வாழ்த்துப்பாவை..!
"குசும்பன் வலையுலகில் தவழும் பிள்ளை.. சவலைப்பிள்ளை.. செல்லப் பிள்ளை.. இவன் செய்கின்ற குசும்புகள்தான் வலையுலக வீட்டையும் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சிலும், விளையாட்டிலும் மயங்குவதைப் போல, நாங்கள் குசும்பனின் செல்லத்தில் சொக்கிப் போய் இருக்கிறோம்.. என்றென்றைக்கும் எங்களது குசும்பனுக்கு வயது ஏறாமல், இப்போது இருப்பது போலவே குழந்தையாகவே இருந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்..! "
நன்றி தம்பி

***********************************
குசும்பன் என்னும் பெயர் எனக்கு முதன் முதலில் அறிமுகமானது அபி அப்பாவின் பதிவிலோ அல்லது கும்மி பதிவிலோ இருந்த கமெண்டில் தான்.நறுக் என கமெண்ட் இருக்கவும் யாருடா இது என புரபைலை பார்த்து பின்னர் குசும்பு ஒன்லிக்குள் புகுந்தேன். பின்னர் நிரந்தர வாசகனானேன். ஆரம்பத்தில் பெரும்பாலான பதிவுகள் சக பதிவர்களான அய்யனார்,அபிஅப்பா, தம்பி ஆகியோரை கலாய்த்தே இருந்தன. தற்பொழுது அரசியல், விளையாட்டு, சினிமா என பரவலாக கலாய்ப்பது நன்றாக உள்ளது. எனக்கு உங்கள் வலைப்பதிவில் மிகவும் பிடித்தது ஊடகங்களில் வரும் புகைப்படங்களை தற்கால நிகழ்வுகளுக்கேற்ப கலாய்ப்பதே. பார்த்தவுடன் குபீரென சிரிப்பை வரவழைப்பது அதன் சிறப்பு. அமீரகங்களில் குடும்பங்களுக்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்பது பற்றி எழுதப்பட்ட கட்டுரையும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தொடரட்டும் உங்கள் குசும்பு. இடையிடையே சில சீரியஸ் கட்டுரைகளையும் எழுதுங்கள்.

மேற்குறிப்பிட்ட ஒன்றைப்போல பிரியமுடன்

***********************************
குசும்பன்,"இரண்டு வருடங்களில் ஏறக்குறைய 270 பதிவுகள். மூன்று நாட்களுக்குள் ஒரு பதிவு - சராசரியாக. ('2.7 நாட்கள்' என்று கணிதப் புலிகள் வரவேண்டாம்). எல்லோரையும் கலாய்க்கும், யாரையும் புண் படுத்தாத பதிவுகள் குசும்பனுடையது.

எனக்குத் தெரிந்து குசும்பனிடம் சற்றேனும் மனவருத்தம் அடைந்தவர் என்று ஒருவரும் இருக்க முடியாது. அவர் கலாய்க்கிறார் என்றால நம்ம கிட்ட எதோ விஷயம் இருக்கு என்றோ, நாமளும் பிரபலம்தான் என்றோ பெருமைப்படலாம்.

சமயங்களில் சச்சரவுகள் தரும் ஆயாசத்தில், குசும்பனின் வலைப்பூவை மீள்வாசிப்பது ஒரு வைத்தியம். இதே நகைச்சுவை உணர்வு எப்போதும் அவரிடம் இருக்கவும், அது ஒரு தொற்று நோயாக நம் எல்லாரிடமும் ஒட்டிக்கொள்ளவும் பெரிதும் ஆசைப்படுகிறேன்.

வாழ்த்துகள் குசும்பா. "

***********************************
அறிமுகமான வெகு குறைந்த காலத்திலேயே பச்சக்கென்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டவர் குசும்பன். என்னைப்போலவே இவருக்கும் குசும்பு, கலாய்த்தல்கள் கைவந்த கலையென்றபோதும் கூட ஒருபோதும் தனது ஃபார்மிலிருந்து சிறிதும் குறையாது கலக்கிக் கொண்டிருப்பவர். தனிப்பட்டமுறையில் பதிவர்களை கலாய்ப்பதிலாகட்டும், தனது சமூக, அரசியல் பார்வைகளை கார்டூன்கள் மூலம் கலாய்ப்பதிலாகட்டும்.. ஒவ்வொரு பதிவுமே ரசிக்கும்படியாகவே கொடுத்துள்ளார். குறைந்த காலத்தில் பதிவர் வட்டத்திற்குள் மிகப் பிரபலமானவர்களுள் இவரும் ஒருவர் என்று கூறினால் மிகையாகாது!
முதன்முதலில் தொலைபேசி உரையாடில் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை இனிமையாகத் தொடர்கிறது! என்னை யாராவது கலாய்த்தால் குபீரென்று களத்தில் குதித்து சரி எனக்குத்தான் ஆதரவு தருவார் என்று பார்த்தால், திடீர் பல்டி அடிப்பார் பாருங்கள்..
குசும்பா! நீ நல்லவனா கெட்டவனா?:)
நட்புடன்,
நாமக்கல் சிபி.

***********************************

குசும்பனின் குசும்பு பெரும்பாலும் ரசிக்கத்தக்கவையே. இருப்பினும் சில நேரங்களில் ஓவர்டோஸாகவும் ஆகி பேதியாகிவிடுகிறது.நகைக்க வைக்க வேண்டும் என்ற ஒரே intension மட்டுமே இல்லாமல் பல்சுவைப் பதிவுகளையும் குசும்பன் எதிர்காலத்தில் படைக்க வேண்டுமென ஒரு தோழனாக வாழ்த்துகிறேன்,
லக்கி லுக்
***********************************
அக்கா புதுகைத் தென்றல் வலைப்பதிவு உலகத்திற்குச் செய்த மிகப் பெரிய துரோகம் என்னை வலைப்பூ எழுதச் சொன்னது. அவர் எனக்குச் செய்த மிகப் பெரிய துரோகம் அவர் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது குசும்பனின் பதிவுகளை அறிமுகம் செய்து லிங்க் குடுத்தது. :) மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை...அலுவலகத்தில் பணி நிமித்தம் ஏதேனும் மன அழுத்தம் நேரும் போது உடனடியாக நான் செய்யும் காரியம் முதலில் ஒரு குவளை தண்ணீர் அருந்துவது. அடுத்தது குசும்பனின் வலைப்பூவை படிப்பது. தமிழ்மண விருதை அவர் பெற்ற போது அனைவரும் சொன்ன வார்த்தை ”நகைச்சுவை கார்ட்டூன் பிரிவில் போட்டியே இல்லை, குசும்பன்தான் அதில் மோனோபோலி”. இதைவிட குசும்பு வலைப்பூவைப் பற்றிச் சொல்ல எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அப்புறம் மக்கள் எல்லாரும் அவர் ஒரு பிரபலப் பதிவரை புகழ்ந்து இருக்கும் இந்தப் பதிவைக் கட்டாயம் பாருங்க.
புதுகை அப்துல்லா

***********************************
இவர் கலாய்க்க ஆரம்பிச்சி ரெண்டு வருஷம் ஆயிடுச்சா? நாள் ஓடறதே தெரிய மாட்டீங்குது. தொடர்ந்து ரெண்டு வருஷமா நகைச்சுவைப் பதிவு எழுதறது எவ்வளவு கஷ்டம்னு நகைச்சுவை பதிவு எழுதறவங்களுக்கு தெரியும். கொஞ்ச நாள்லயே எழுதறவங்களுக்கும் போர் அடிச்சிடும், படிக்கிறவங்களுக்கும் போர் அடிச்சிடும். ஆனா குசும்பன் எழுதன (கார்டூன்) முதல் பதிவுல இருந்து நேத்து போட்ட கடைசி பதிவு வரைக்கும் நக்கல், நகைச்சுவை, கிண்டல், கேலி குறையாம எழுதறது பாராட்டுக்குரியது.
”பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்” அப்படினு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் அதை மெயிண்டெயின் பண்ணிட்டு வராரு. இதுல ஹைலைட் பார்த்தா, கோபம் ,வெறுப்பு, கடுப்பு இதைக் கூட நகைச்சுவையா சொன்னது தான். இது தான் குசும்பன் ஸ்பெஷல்னு எல்லாரையும் ரசிக்க வைக்கிறார். புதிதாக எழுதுபவர்கள், பழைய பதிவர்கள் என்று கொஞ்சமும் ஈகோ பார்க்காத குணமும் பாராட்டுக்குரியது.
அடுத்து அவர் பதிவுல எனக்கு பிடிச்சது இவர் முட்டையை வைச்சி பண்ண ரிசர்ச் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி இதுல என்ன ஹலைட்னு யோசிக்கறவங்களுக்கு, இந்த பதிவு போட்டு ஒரு வாரத்துல அவர் போட்ட பதிவு இது. என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க, ரெண்டையும் படிச்சி பார்த்தா உங்களுக்கே புரியும். அப்பறம் அவரோட பழைய பதிவை படிக்காம மிஸ் பண்ணவங்களுக்கு, நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. ஏன்னா இன்னும் ஒரு மாசம் நீங்க இந்த வலைப்பதிவுல இருக்குற எல்லா பதிவையும் ஜாலியா படிச்சிட்டு இருக்கலாம்.
எங்கயும் தடம் மாறாமல் இன்னைக்கு வரைக்கும் ரசி(ரி)க்கிற மாதிரி கொடுத்துட்டு வரதுக்கு பாராட்டுகள் + நன்றிகள். அதே சமயம் கார்டூன் எல்லாம் எப்படி பண்றாருனு ஒரு சில பதிவுகள் போட்டு நிறைய பேரை ஊக்கப்படுத்தினால் வலையுலகத்திற்கு மேலும் பயன் தரும்.
மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் குசும்பரே.
வெட்டிப்பயல் பாலாஜி

***********************************

தம்பி குசும்பனைப் பத்தி நாலு சொற்கள் நல்லதாகச் லொள்ளனும் என்றால் தம்பி வல்லவரு கார்டூன் போடறுதுல, நல்லவரு கலாய்ச்சி பதிவு எழுதுறதுலன்னு சொல்லனும்.
இவரு பதிவுல வாங்கிக் கட்டிக்காதவங்களே குறைவுதான், யாரையும் கலகலக்க கலாய்க்கத் தயங்காதவன் நம்ம குசும்பன். தொலைவில் இருந்து முகம்பார்க்காமல் பழகியதில் குசும்பன் தான் முதன் முதலில் நெருக்கமான பதிவர் ஆனான். குசும்பனால் கலாய்ப்பு, வம்பு தவிர்த்து எதாவது எழுத முடியுமா ? என்று கேட்டால் மூக்கு உடைந்துவிடும், அவனும் 'உருப்படியான' என்ற வகைப்படுத்தலில் இரு இடுகைகள் எழுதி இருக்கிறான். அதில் UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை! - இந்த இடுகையின் தகவல்கள் நம்ம வடூவூர் அண்ணன் துபாய் செல்ல மிகவும் பயனான தகவல்களை தந்தது என்று என்னிடம் தெரிவித்து இருந்தார். உருப்படியாக எழுதுவது வேறு, அதை பயன்படும் படி எழுதுவதே அதன் வெற்றி, அந்த வகையில் குசும்பனின் அந்த பதிவு பல தகவல்களை உள்ளடக்கி இருந்தது. டரியல் டக்ளஸ் என்ற தலைப்பில் குசும்பன் இடும் கார்டூன்கள் பல விகடன் புகழ் பெற்றவை. 200 பதிவு கண்ட குசும்பனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும், அவன் எனக்கு நெருக்கமான நண்பன் என்ற பெருமையும் அடைகிறேன் வாழ்க குசும்பன், வளர்க்க அவனது வாலு !
கோவி.கண்ணன்

***********************************

அன்பின் சரவணன் என்னிடம் பதிவினைப்பற்றிய கருத்தினைக் கேட்டதற்கு நன்றி அருமை நண்பர் சரவணன் பல வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். அவரது கொள்கையாக " பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்." என்ற சொற்றொடரையே வைத்திருக்கிறார். அவரது வலைப்பூக்களில் அதிகம் நகைச்சுவையும் கலாய்ப்புகளூம் குசும்புகளும் மொக்கைகளுமே இடம் பெறும். சீரியஸ் பதிவுகளும் அவ்வப்போது போடுவார். அவரது பதிவுகளில் கார்டூன்கள் - கருத்துப் படங்கள் மிகப் பிரபலம். அதில் வரும் குறிப்புகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுபவை. அவர் ஒரு சிறந்த நண்பர். அவரது திருமணத்திற்கு எனக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பினார். கலந்து கொள்ள இயலவில்லை-

வாழ்த்து அனுப்பினேன். நல்வாழ்த்துகள் குசும்பன் நட்புடன்

***********************************

குசும்பன் இந்த பெயரை ஒரு சின்ன புன்னகை தோன்றும். பொதுவா அலுவலகத்துல வேலை பளு காரணமாக டென்ஷனா இருக்கும் பொழுது அதை குறைக்க படிக்க வரும் பதிவுகளில் முக்கியமானது குசும்பனோடது.. இவனோட பதிவுக்கு வந்து பழைய பதிவோ புதிய பதிவோ ஏதோ ஒண்ணோ ரெண்டோ படிச்சுட்டு போனா மனசு லேசாயிடும்.. அதுவும் முக்கியமா இவனோட கார்டூனை பதிவுகளை பார்க்கும் பொழுது எப்படியெல்லாம் யோசிக்கிறாண்டா ங்கொய்யாலன்னு தோணும். தொடர்ந்து இரண்டு வருசமா நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாம தொடர்ந்து சிரிப்பு வெடியா பதிவு எழுதுறது சாதாரண விஷயம் இல்லிங்க.. கலக்குறடா குசும்பா..மொக்கையை கொஞ்சம் குறைச்சி குசும்பையும், நகைச்சுவையையும் கூட்டி இன்னும் பலவருசங்களுக்கு பட்டையை கிளப்பு.. இவனோட குசும்புக்கு ஒரு அளவே இல்லிங்க..பாருங்க பிரபலங்கள் பார்வையில் குசும்பு அப்படிங்கிற தலைப்புல யாருக்குமே தெரியாத என்னைய எழுத சொல்லியிருக்கான்..
சந்தோஷ்
***********************************
எனக்குப் பிடிக்கவே பிடிக்காத வலைப்பதிவுகளில் முதலாவது 'குசும்பு' தளம். காரணம் இருக்கு.ஏதாவது பாராட்டி பின்னூட்டம் போடலாம், புள்ள சந்தோஷப்படட்டும்னு பாத்தா, பதிவு வந்த அஞ்சாவது நிமிஷமே 183 கமென்ட்ஸ் என்று காட்டும். இவ்வளவையும் தாண்டி நம்ம கருத்தை எங்கே கவனிக்கப்போறார்னு பின்னூட்டம் போடறதில்லை. நமக்கு எப்போவாவது கரன்ட் அஃபையர்ஸ் ல ஜோக் தோணி எழுதலாம்னு ஒக்காந்தா, இந்தாளு எழுதி வச்சிருப்பாரு. அசுரமொக்கை, மரண மொக்கை எல்லாம் தாண்டிய புனிதமான மொக்கைகள் அப்பப்பா... (அவ்வப்போது தன் போட்டோவைப் போடுகிறாரே, அதைச் சொல்லவில்லை.) அது எப்பிடித்தான் இவுரு ஒரு பதிவு போட்டவுடனே கூடிக்கும்மி ஆடிக்க ஜனக்கூட்டம் சேருதோ..?(மற்றபடி ஒவ்வொரு பதிவுலேயும் பின்னூட்டங்கள்லேயும் தெரியும் பிரில்லியன்ஸ் பத்தி வெளியே சொல்வேனா, என்ன?) சீக்கிரத்திலேயே அச்சுக்கு வந்துவிடுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக இருக்கிறது
ரமேஷ் வைத்யா

***********************************
குசும்பனை எனக்கு மிகவும் பிடிக்கும்.வகை தொகை இல்லாமல் எல்லோரையும்கலாய்ப்பது நன்றாக இருக்கிறது.சில சமயங்களில் ”அதீதமாகிவிட்டதோ “என நினைத்திருக்கிறேன்.ஆனால் குசும்பனுக்கும் நல்ல பதிவுகள் இடத் தெரியும் என நீங்கள் நிரூபத்திருக்கிறீர்கள்.டெக்னிகலாக சமீபத்திய உங்கள் ப்ரிண்டிங்மிஷன் பற்றிய பதிவு அதற்கு ஒரு உதாரணம்.
உங்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான்.
குசும்பு கொப்பளிக்கவும் எழுதுங்கள்,அத்தோடு சமூகத்துக்கு சில நல்ல கருத்துக்கள் தரும் பதிவையும் தாருங்கள்.

உங்கள் பெயர் போட்டு தேடும்பொழுது நல்லபதிவுகளும் வரவேண்டும் என விரும்பும்
புதுகை தென்றல்
***********************************
நல்லபடி எழுதாவிட்டால் என்னையும் டரியல் ஆக்கக் காத்திருக்கும் டக்ளஸுக்கு அஞ்சாமல் எழுதுகிறேன். கலாய்க்கப்பட்ட ஆட்கள் ஆட்டோ அனுப்பலாமா சுமோ அனுப்பலாமா என யோசித்து அரை செகண்டு முன்னர் நாமே சிரித்துவிட்டோமே என்று எதையும் அனுப்பாமல் விட்டுவிடும் கலாய்ப்பு குசும்பனுடையது. வெறும் வசனங்களை நம்பி இராமல் கற்பனை, கார்ட்டூன் குசும்பு என்றெல்லாம் செய்து எப்படியாவது சிரிக்கவைத்துவிடவேண்டும் என எவ்வளவோ முயற்சித்தாலும் சுலபமாக சிரிப்பு வருவது அவர் வாங்கிய கேமராவில் தப்பித் தவறி விழுந்துவிட்ட கோட்சூட் அணிந்த நபர் படம்தான்! “அங்கதத்தின் நுட்ப பரிணாம வரையறுப்பின் கூறுகளில் விரவியதாய்க் காணப்படும் மனிதக்கூட்டத்தின் மேலான தாக்குதலாய் அன்றி மனிதக்குழுமத்தின் இயல்புகளைத் தாக்கியதாய் வெளிப்படும் இலக்கிய வகையின் தேர்ந்த வெளிப்பாடாக விளங்குகின்றன குசும்பன் படைப்புகள்” என்று எழுதினால், அய்யனார் ஐந்து நாட்களுக்குள் குசும்பனுக்கு விளக்கிவிடுவார் :-) உலக வரலாற்றை புரட்டிப்போட்ட தினத்தில் வலைப்பதிவை ஆரம்பித்து இரண்டு வருடங்களை நிறைவு செய்திருக்கும் குசும்பனுக்கு வாழ்த்துகள். (அதென்ன புரட்சி தினம் என்பவர்களுக்கு குசும்பன் பதிலளிப்பார்).
பினாத்தல் சுரேஷ்

***********************************
நான் பதிவெழுத வந்த ஆரம்பகாலகட்டத்தில்பின்னூட்டங்களில் அதிரடி சரவெடியாய் ஒரு சில பதிவர்களைக் கண்ணுற்றேன். அதில் விடுபடாமல் குறிப்பிடப்பட வேண்டிய, தவிர்க்க இயலாத ஒரு பெயர் - குசும்பன்.
’என்னடா.. பதிவு எவ்ளோ சீரியஸா இருந்தாலும் போய்க் கும்மீட்டு வர்றாரே இந்த மனுஷன். இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லயா’ என்று போனால்... வலைப்பூவின் உரலே சொல்லிற்று.. குசும்பு ஒன்லி - என்று!
பதிவுகளைப் படித்தால் அவ்வளவு சுவாரஸ்யம், ஹாஸ்யம்.
அதன்பின்... அலுவலகத்தில், வீட்டில், பதிவுலகில் சில மனஅழுத்தக்கணங்களைக் கடக்க... எங்கெல்லாம் இவரின் பின்னூட்டம் இருக்குமோ அங்கெல்லாம் தேடிச் செல்ல ஆரம்பித்தேன்.

ஃபோட்டோ அனுப்பி கலாய்த்துக் கொள்வது போக... அவரே நம் போட்டோவை எடுத்துக் கலாய்க்கும்போது நாம் ஒரு வி.ஐ.பி. ரேஞ்சுக்கு ஆகிவிடுவதை உணரமுடியும்.என் பதிவை சரோஜாதேவி மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று எதிர்ப்பதிவாக்கி குண்டுவைத்து குஜாலாக்கிய இவரது நகைச்சுவை உணர்வை மறக்க முடியுமா?
நகைச்சுவை உணர்வோடே அரசியல்வாதிகளில் அறிக்கைகள் எதற்கு லாயக்கு என்று வெஸ்டர்ன் டாய்லெட் படத்தைப் போட்டு ‘விளக்கிய’ இவரது சமூக நலனையும் நாம் மறந்துவிடக்கூடாது. இன்றளவும் ஒரு பத்திரிகை எடுத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேடி அவசர அவசரமாகப் படிக்கும் வாசகர்கள் போல... இவரது கார்ட்டூன்களுக்கு ஒரு தனி ரசிகர் படையே இருக்கிறதென்பது ஊரறிந்த உண்மை.
பரிசல் காரன்
***********************************
நிறைய பேர் நகைச்சுவையா நல்லா எழுதுறாங்களே நாமும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு ரெண்டு மூணு தடவை அந்த மாதிரி பதிவு எழுதி 'சூடு' பட்டுக்கிட்டேன். அந்தப் பதிவுகளை நானே வாசித்தால் என்னைப்பார்த்து எனக்கே சிரிப்பு வந்தது. ரொம்பவே பாவமாவும் இருந்திச்சி. அதுக்குப் பொறவு அந்தப் பக்கம் தலை வைக்கிறதேயில்லை. எழுதுறவங்களை பொறாமையோடு பாத்துக்கிறது; படிச்சிக்கிறது. குசும்பனப் பார்த்தா ரொம்பவே பொறாமை. . மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா! நல்ல சிரிப்பு நடிகர்கள் பலரும் நல்ல நடிப்புத்திறனோடு இருப்பார்கள்; அவர்களால் சிரிக்க வைக்கவும் முடியும். நம்மை அழவைக்கவும் முடியும். நல்ல நகைச்சுவைப் பதிவுகளைக் கும்மி என்ற பெயரில் போடும் பதிவர்களில் சிலர் நடுநடுவே நம்மை வேறெங்கோ எடுத்துச்செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இதில் டக்கென்று என் நினைவுக்கு வரக்கூடியவர்கள் இருவர். அம்மாவுக்கு கையில் சர்ஜரி. :சின்னப் பதிவு ரொம்ப ஒண்ணும் எழுதிடலை. ஆனா குசும்பன் எழுதின நாலு வரியும் மனச தொடுதே .. அங்கதான் இந்த மாதிரி ஆளுக நிக்கிறீங்க'ப்பா.நிறைய சொல்லலாம் - நல்லா எழுதத் தெரிஞ்சா! அதனால் இந்த ரெண்டோட நிப்பாட்டிக்கிறேன். நல்லா இருங்க ...நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்
தருமி

***********************************
குசும்பன் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லலாம். "குசும்பன்". அவ்ளோ தானா என்று தெறிக்கவேண்டாம்...முதலில் குசும்பன் வலையுலகிற்கு வந்த புதிதில் ஆர்வமாக எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருந்தார். பின்னூட்டம் கூட போட தயங்குவார். வலைப்பதிவர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, அதில் எடுத்த படங்களை எல்லாம் கொஞ்சம் எடிட்டி, ஆங்காங்கே சில கொமண்டுகளை தூவி அனைவருக்கும் அனுப்பினார். அனைவரும் அதை ரசித்தது உற்சாகப்படுத்தியதுதான் அவரது இப்போதைய 'கார்ட்டூன்' குசும்பன் என்ற ட்ரேட் மார்க்குக்கு காரணம்..அவரது வேலையில் அவருக்கு இருக்கும் மென்பொருட்கள் - போட்டோஷாப் மாதிரியான அயிட்டங்களை உபயோகப்படுத்தி படங்களை, கமண்டுகளை மெருகேற்றுகிறார் என்று நினைக்கிறேன்... குசும்பனிடம் நான் ரசிக்கும் இரண்டு விஷயங்கள், தோழமை உணர்வு மற்றும் நகைச்சுவை உணர்வு. இந்த இரண்டு உணர்வுகளும் இயல்பிலேயே - 'தானா வர்து' மாதிரி இருப்பதால் சினிமாவில் ஒட்டவைக்கும் காமெடி பீஸ் மாதிரியில்லாமல் கதையோடினைந்த காமெடிபோல, செம்புலப்பெயர்நீர் போல...ப்ளா..ப்ளா... நான் மட்டுமல்ல..குசும்பனை நமக்கு தெரியாமல் படிக்கும் பலரும் இதையே நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்... இந்த இரண்டாவது வருட தொடக்கத்தில் கார்ட்டூன்களை இன்னும் சிறப்பாக மெருகேற்றி தரவேண்டும்- வேண்டுமானால் படங்களை குமுதம் கார்ட்டூன் பாலாவை வரைஞ்சு தரச்சொல்லுங்க..கமெண்டுகளை நீங்க சேருங்க...வெகுஜன ஊடகங்களுக்கான பாதையை வகுத்துக்கொள்ளுங்க...முறையாக ரெண்டு முட்டை போட்டு வாத்து வரைய கத்துக்கோங்க...அப்பத்தான் அத்வானிஜி, கலைஞர்ஜி, அம்மாஜி படம் எல்லாம் வரையமுடியும். வாழ்த்துக்கள்
செந்தழல் ரவி
*****************************
குசும்பன்...இந்தப்பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது இவரது தளத்துக்குள் சென்றாலே தெரியும்.பெயருக்கும் நடத்தைக்கும் சம்பந்தமில்லாத மனிதர்களிருக்கும் உலகத்தில், பெயரும் நடத்தையும் ஒன்றாக உள்ள நல்லவர்!
அடுத்தவர்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ளத்தக்கவர்.!அதனால் கலாய்ப்பதிலும் கண்ணியம் இருக்கும்!

கருத்துப்படம் வெளியிட்டே அனைவரையும் கவர்ந்தவர்!இவரது படைப்பை வெகுஜன இதழ்களும், இணைய இதழ்களும் பயன்படுத்தும் அளவுக்கு வல்லவர் !

பதிவுலக நண்பர்களுக்கு பழகுதற்கு இனியவர்! எல்லோரிடமும் அன்பாக, உரிமையுடன் பழகக்கூடியவர்!அரட்டைக்கச்சேரி ஆரம்பித்தால் அசராமல் , அசரவைப்பவர்! ஒரு எதிர்கால விளம்பரப்பட இயக்குநர்!
வாழ்வில் நல்ல மனிதர்களைச் சந்திக்கத் துடிக்கும் சாதாரணனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டிய அன்புச் சரவணவேலன்!
இதற்கும் மேல் சொல்லிக்கொண்டேபோகலாம்.! எங்களுக்குள் ஒரு ஒற்றுமை!நாங்க ரெண்டுபேரும் ஒரே டெம்ப்ளேட்டுதான் பயன்படுத்துறோம்..! ஹி..ஹி..! வந்ததுக்கு ஒரு வெளம்பரம்தான்!

அன்புடன்நட்புடன்
சுரேகா
*****************************
இரண்டுவருடங்களில் உருப்படியாக எழுதியது என்ன என்று கேட்டால் விரல் விட்டு சொல்லிவிடலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் இருக்கும்
எனக்கு இந்த பப்பூன் முகம் ரொம்ப பிடிச்சு இருக்கு, என்னால் இருவர் சிரிக்கிறார்கள் அவர்கள் கவலையை மறக்கிறார்கள் எனும் பொழுது கிடைக்கிற சந்தோசத்தை எழுத்தில் சொல்லமுடியாது.
இவை எல்லாத்தையும் விட நான் பெருமையாக நினைப்பது இரண்டு வருடத்தில் இதுவரை யாரும் அனானியாக கூட என்னை திட்டியது இல்லை.
அதுபோல் இதுவரை நான் யாருக்கும் அனானியாகவோ, மற்றவர்கள் மனம் வருத்தும் படியோ கமெண்ட் போட்டது இல்லை. இனி வரும் காலமும் இப்படியே எனக்கு அமையவேண்டும் நண்பர்கள் மட்டுமே இருக்கவேண்டும்.

ஜாலி டைம்--சும்மா ஒரு டெஸ்ட்!

எல்லா கேள்விகளுக்கும் விடையளி 10 x 1= 10

1) தமிழ்மணம் ஸ்டார் ஆக என்ன செய்யவவேண்டும்?

அ) எனக்கு தெரியாது

ஆ) உனக்கு தெரியாது

இ) யாருக்கும் தெரியாது

ஈ) தமிழ்மணத்துக்கே தெரியாது



2) யார் பிரபல பதிவர்கள்?

அ) யாருக்கும் பின்னூட்டம் போடாதவர்கள்

ஆ) ஸ்மைலி மட்டும் போடுபவர்கள்

இ) பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாதவர்கள்

ஈ) இவை அனைத்தும்

3) எது பின்நவீனத்துவம்?

அ) படித்தால் பீதியாகும்

ஆ) படிக்கும்பொழுதே பேதியாகும்

இ) அடுத்தமுறை அங்கு போக பயம் வரும்

ஈ) இவை அனைத்தும்

4)மூன்று தமிழ்மண விருதுகள் வாங்கியவர்
அ)டாக்டர்.புருனோ

ஆ)டாக்டர்.புருஎஸ்

இ)டாக்டர்.நெஸ்கபே

ஈ)டாக்டர்.நரசூஸ்நோ!

5)குறுந்தொகைக்கு விளக்கம் கொடுப்பவர்
அ) ஏர்டெல்சிம்

ஆ) ஏர்செல்சிம்

இ)ஓடோபோன்சிம்

ஈ) நர்சிம்

6)அவியல் எழுதி மக்களை அலறவிடுபவர்
அ) ஓடக்காரன்

ஆ) சமையல்காரன்

இ) பரிசல்காரன்

ஈ) கப்பல்காரன்


7) கதம்பம் எழுதி மக்களை கதறவைப்பவர்
)ஏரிகரை சூலன்

ஆ) தென்கரை பாலன்

இ)வடகரைவேலன்

ஈ)யாரும் இல்லை

8) காக்டெயில் எழுதி மக்களை காண்டாக்குபவர்
அ) கார்க்கி

ஆ) சைக்கிள் கீ

இ) பைக் கீ

ஈ)பீரோக்கி


9) சமையல் குறிப்பு பதிவுகள் எழுதி டாக்டர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பவர்

அ) தூயா

ஆ) பாயா

இ)சாயா

ஈ) மோயா


10)சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதியவர்

அ) யுவான் சுவாங்

ஆ)பான் கின் மூன்

இ)புதுகை.அப்துல்லா

ஈ)ஒளரங்கசீப்



பொருத்துக 5 x 1= 5 (பலருக்கும் நெப்போலியன்,விக்கை பொருத்தலாம் ஆனால் மிகச்சரியாக பொருத்தவேண்டும்)

சஞ்சய் காந்தி--- --------அதீதா
நந்து ---------------------நெப்போலியன்
ஆதிமூலகிருஷ்ணன்-- விக்
ஜ்யோவோராம் சுந்தர்--தங்கமணி
வால்பையன்-------------கேமிரா



கோடிட்ட இடங்களை நிரப்புக 3 x 1= 3
1) திரைவிமர்சனம் என்ற பெயரில் முழு திரைக்கதையையும் எழுதுபவர்...................


2) சுஜாதா என்ற ஒரு எழுத்தாளர் நன்றாக கதைகள் எழுதுவார் என்று புத்தக கண்காட்சியின் பொழுது போய் சுஜாதா புத்தகம் வாங்கி விமர்சனம் எழுதியவர்..............பூ


3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ம்பன்



சரியா தவறா? 2 x 1= 2
1) சாரு புத்தகவெளியீட்டின் பொழுது கூட்டம் கடைசிவரை கலையாமல் இருந்ததுக்கு காரணம் வெளியில் பெய்த மழை.

2) அனுஜன்யாவை பெண் என்று நினைத்து பலர் காதல் கடிதம் அனுப்பினர்!

அருஞ்சொற்பொருள் தருக 5x1=5
1)கும்மி

2)மொக்கை

3)கவுஜை

4)பின்நவீனத்துவம்

5)பியர் போத்தல்கள்

டிஸ்கி: அதிக மதிப்பெண் வாங்குபவர்களுக்கு இந்த வார முடிவில் ஒரு பரிசு காத்திருக்கிறது! ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே மதிப்பெண் வாங்கி இருந்தால் வெற்றிப்பெற்றவர் சீட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கனவுகள் விற்பனைக்கு--- விளம்பர உலகம்!

மருத்துவம் முதல் அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் வாடிக்கையாளர்களை கவர தேவைப்படுவது விளம்பரம்,விளம்பரம் என்றவுடன் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது டிவியில் வரும் விளம்பரங்கள்,டிவியில் வரும் விளம்பரங்கள் கடல் போன்றது அதில் நாம் வித விதமான வித்தியாசங்கள் கொடுக்கலாம், பிடித்தமானஹீரோயினோ, அல்லது ஹீரோவோ அல்லது நல்ல மியூசிக்கோடு கொஞ்சம் கற்பனை சேர்த்தால் போதும் விளம்பரம் நம்மை கவர்ந்து விடும். ஆனால் கொஞ்ச நாட்களாக கற்பனை வறட்சி போல விளம்பர உலகிலும் போட்டிகள் பொறாமைகள் இதுவரை மற்ற போட்டியாளர்களின் பொருட்களை நேரடியாக தாக்கி விளம்பர வந்தது இல்லை ஆனால் சமீபத்தில் காம்ப்ளான் ஹார்லிக்ஸ் விளம்பரம் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது,அதுபோல் பைக் விளம்பரத்தை அப்படியே காப்பி அடித்து வரும் சன் டி.டி.எச் விளம்பரம் ஆகியவை கொஞ்சம் எரிச்சலை தருகின்றன.

சிலசமயங்களில் விளம்பரங்கள் நம் நினைவில் நிற்கும் ஆனால் எந்த கம்பெனிக்கான விளம்பரம் என்று மறந்துவிடும் அந்த கான்செப்ட் மட்டும் நினைவில் இருக்கும், ம்ம்ம் அந்த சின்னபையன் உண்டியலை எடுத்துக்கிட்டு போவானே என்பது மட்டும் நினைவு இருக்கும் அந்த பேங்கின் பெயர் மறந்துவிடும்அந்த வகையில் ஒரு விளம்பரமும் இருந்தால் அது ஒரு தோல்வியடைந்த விளம்பரமே.

டிவியில் வரும் விளம்பரத்தை விட கஷ்டமாக நான் நினைப்பது புத்தங்கங்களில் அல்லது வெளியில் வைத்து இருக்கும் ஹோர்டிங்ஸ் விளம்பரங்கள். புத்தகத்தில் இருக்கும் நூறு பக்கத்தில் நாற்பது பக்கம் விளம்பரம் இருக்கும், படிப்பவர் சுலபமாக அந்த குறிப்பிட்ட விளம்பரம் வந்த பக்கத்தைதவிர்க்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கு, தொடர்ந்து ஒரு கதை படித்து வரும் பொழுது அடுத்த பக்கத்தில் விளம்பரம் இருந்தால் டக்கென்று புரட்டிகதையை படிக்க ஆரம்பித்துவிடுவார்! அந்த சமயத்தில் அவர் அப்படி கடந்து செல்லாமல் இருக்க, அங்கு வரும் விளம்பரம் மிகவும் சிரத்தையோடுதயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டியது மிக அவசியம், அதே போல் ரோட்டு ஓரத்தில் வைக்கப்படும் விளம்பர ஹோர்டிங்ஸ் அடுத்த முறை அந்த பக்கம் போகும் பொழுது பாரேன் அந்த விளம்பரத்தை என்று நண்பனிடம் சொல்லும் அளவுக்கு இருக்கவேண்டும்.அப்படி என்னை கவர்ந்த சில விளம்பரங்கள்!

Axe ஸ்ப்ரேவுக்கு டிவியில் வரும் விளம்பரம் எப்பொழுதும் Axe ஆணை பெண்கள் துரத்துவது போலவே இருக்கும் அதை எப்படிபிரிண்டிங்கில் கொண்டுவருவது? கீழே இருக்கும் விளம்பரத்தை பாருங்கள்.
Van Heusen வெளியிட்ட இந்த விளம்பரத்தில் அந்த கம்பெனி சட்டைகளை காட்டாமலேயே நம்மை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும்விளம்பரம்!
டயட் பெப்ஸியின் இந்த விளம்பரம், பூனை பெப்ஸி குடிக்குமா..? என்ற லாஜிக்கை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு யோசித்தால்எலியின் வலைக்குள் நுழையும் இளைத்த பூனை!
கையை மட்டும் காட்டி அந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத உருளை கிழங்கையும் பீளரையும் காட்டி நம்மை ஒரு நிமிடம் யோசிக்கவைக்கும் இந்த விளம்பரம், அடுத்த கையில் இருக்கும் மொபைலை காட்டி இருந்தால் இது ஒரு சாதாரண விளம்பரமாக ஆகி இருக்கும்!
பிளே யுவர் செல்ப்,9 இன்ச் பிளசர் என்று கொஞ்சம் விவகாரமாக இந்த வெர்ஜின் பிளைட் விளம்பரங்கள் வந்தன
உரத்துக்கான இந்த விளம்பரம்


இதன் பிறகு வருபவை நான் செய்தவை! பல இருக்கின்றன அதில் கொஞ்சம்...இவை அனைத்தும் என் கற்பனைகள்! என் கனவுகள்! யாரும் என் அனுமதி இன்றி உபயோகித்துவிடாதீர்கள் என்பதை மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


வோடபோன் போல் இதையே கண்டினியுவாக எடுக்கலாம் செஸ் போர்ட், டைல்ஸ் என்று கருப்பு வெள்ளை சேரும் இடங்களில் எல்லாம் இனி கருப்பு வெள்ளை காம்பினேசனுக்கு வாய்பு இல்லை என்று இந்த சாயத்தை காட்டலாம்.


டிஸ்கி: இது சும்மா ஒரு ஆர்வத்தில் போட்ட பதிவு நீங்க எதிர்பார்க்கு ஆப்பு பதிவுகள் இனி...இடை இடையே சில நல்ல பதிவுகளும் வரும்:)

Sunday, March 29, 2009

டும் டும் டுமாங்கி- அப்படின்னா?

ஒரு பிரபல தொழிலதிபரின் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரபல இசைக்கலைஞரின் இன்னிசை கச்சேரி நடைப்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இனி அவர் தன் உதவியாளருடன்...

தம்பி ஒரே மகள் திருமணம் எல்லா பிரபலங்களும் வருவார்கள் அதனால் ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹுமான் கச்சேரி வைத்தால் நல்லா இருக்கும் அவரை புக் செய்ய முடியுமா பாரு!

உதவியாளர்: இல்ல சார் அவருக்கும் அந்த தேதிகளில் ஜப்பான் படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் இருக்காம்.

தொழிலதிபர்: அப்படியா,சரி இளையராஜாவை புக் செய்யமுடியுமா பாரு!

உதவியாளர்: அவர் இதுபோல் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கமிட் ஆவது இல்லை சார்!

தொழிலதிபர்: ம்ம்ம், ஹாரிஸ் ஜெயராஜ்

உதவியாளர்: அவருக்கு மலேசியாவில் புரோகிராம் இருக்காம் பிஸியாம்

தொழிலதிபர்: யுவனை புக் செய்யமுடியுமா பாருப்பா!

உதவியாளர்: அவருக்கு கை நிறைய படம் இருக்காம் பிஸியாம்

தொழிலதிபர்: தேவா!

உதவியாளர்: அவரும் கமிட் ஆகிட்டாராம் பிஸியாம்...

தொழிலதிபர்: என்னப்பா இது...யாராவது பிரபல ஆர்கெஸ்ட்ராவையாவது புக் செய்யுங்க!

உதவியாளர்: சார், அங்கிங்கு, சாதகப்பறவைவகள் எல்லோரும் பிஸியாம் பருத்திவீரன் டிரம்ஸ் புகழ் டும்டும் டுமாங்கின்னு ஒரு குருப் மட்டும்தான் ஃபிரியா இருக்காங்க!

தொழிலதிபர்: பருத்திவீரன் புகழா? அதுக்கு யுவன் சங்கர் ராஜாதானே மீயுசிக்?

உதவியாளர்: ஆமாம் சார் ஆனா பாட்டுக்கு நடுவில் ஒரு குரூப் டிரம்ஸோட டான்ஸ் ஆடுவது போல் காட்டுவாங்களே, அவுங்க சும்மா டிரம்ஸை மட்டும் வெச்சுக்கிட்டு தட்டுவது போல் காட்டுவாங்க.அவுங்கதான் டும் டும் டுமாங்கி குருப்.

தொழிலதிபர்: சரி சரி புக் செய்யுப்பா!
**********************
தொழிலதிபருக்கு பதில் தமிழ்மணத்தையும், மியூசிக் டைரக்டருக்கு பதில், பிரபல வலைப்பதிவர்களையும் வைத்து படித்துவிட்டு கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!
இதுதான் நாம ஸ்டார் ஆன கதை! எப்படி இருந்தா என்னா?ஸ்டார்ட் மியூஜிக்!
**********************
டிஸ்கி1:தமிழ்மணமே இந்த வாரம் மட்டுமாவது செத்து செத்து விளையாடுவதை கொஞ்சம் ஒத்திவை அல்லது இந்த விளையாட்டை சவுத் ஆப்பிரிக்காவுக்கு மாத்து!

Saturday, March 28, 2009

ஸ்டார் மாதவராஜால் நான் டேமேஜ் ஆன கதை!

வீடு மாறியதால் கடந்த ஒரு மாதமாக நெட் வீட்டில் இல்லை, மனைவி படிக்க என்று மிகவும் அருமையாக இருக்கும் பதிவுகளை வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம், இந்த வார ஸ்டாராக இருக்கும் மாதவராஜ் அவர்களின் “எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்!பதிவை எடுத்து சென்றேன் பதிவை படிச்ச மனைவி நம்ம காதல் மாதிரியே இருக்குல்ல என்றார்கள், ம்கும் உங்க அப்பா பெரிய ஜெயகாந்தன் பாரு என்று நக்கல் அடிச்சேன். ச்சே நம்மளோடதும் ஸ்கூலிலேயே ஸ்டார்ட் ஆகியது இவரோடதும் ஸ்கூலிலேயே ஸ்டார்ட் ஆகி இருக்கு என்று சொன்னார்கள்.

ம்ம்ம் அவரோட மனைவி ஸ்கூல் முடிச்சு கல்லூரிக்கும் போய் இருக்காங்க நீதான் சார் அழகில் மயங்கி படிப்பை ஸ்கூலோட விட்டுவிட்டீயே என்றேன்.
அருந்ததீ அனுஸ்கா மாதிரி எரிக்கும் பார்வை பார்தார்கள்.

சரி சரி தண்ணிய குடி தண்ணிய குடின்னு வேறு பேச்சை மாற்றினேன்!

நேற்று திரும்பவும் அவர் போட்டு இருந்த பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி” என்ற பதிவை எடுத்துக்கிட்டு போனேன் படிச்சுட்டு ரொம்ப நல்லா இருக்கு என்றவர்கள், உடனே சிரித்தார்கள் ஏன் என்று கேட்டதற்கு இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க ...

என்னா ஒரு வில்லத்தனம்!

***********************
நேற்றோடு குசும்பு ஒன்லி ஆரம்பிச்சு இரண்டு வருடம் முடிந்துவிட்டதால் ஒரு கூடை கேக் மேல் 2 என்று இருக்கும் மெழுகுவத்தி போட்டு போஸ்ட் போட்டு இருந்தால் ஆள் ஆளுக்கு கல்யாண நாள் என்று வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாங்க, ஏனுங்க கல்யாணநாள் என்றால் கேக் போட்ட போட்டோவா போடுவாங்க? ஆடு கழுத்தில் மாலை மாட்டி இருக்கும் போட்டோல்ல போடனும்.
***********************
ப்ரூட்டிக்கு விளம்பரத்தில் வரும் வளராதோ கண்ணா ஏன் இடம் மாறி இருக்கு என்று தெரியவில்லை ஒருவேளை விளம்பத்தை பற்றி பேச இது ஒரு யுத்தியா என்று தெரியவில்லை என்று பேசிக்கிட்டு இருந்த பொழுது சொன்னது ஒருவேளை உங்க கூட படிச்சவரா இருக்கும், உங்க பிரண்டும் உங்கள மாதிரிதானே இருப்பார்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில் ஐயாவ தட்டிக முடியாதுல்ல:)

விஜய் நடிக்கும் குளிர் பானவிளம்பரத்தில் பின்னாடி போக்கிரி பட ஸ்டில் இருப்பது போல் வந்தது மனைவி சொன்னாங்க இது ரொம்ப பழய விளம்பரமோ என்று, நான் சொன்னே இல்லை இல்லை கடைசியா ஓடிய படம் அவருக்கு போக்கிரிதானே அதான் போக்கிரி போஸ்டர் வெச்சு இருக்காங்க என்று, என்ன நான் சொன்னது சரிதானே?
*************************
நண்பன் ஒருவனும் வீடு தேடிக்கிட்டு இருந்தான் அவனும் ஷேரிங் டைப்பில் வீடு பார்த்ததால் அவன் என்னிடம் டேய் நீயும் நானும்சேர்ந்து ஒரு வீடு எடுத்துடலாமா டா என்றான்?

டேய் தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா என்றேன்.

ஒரு நிமிடம் குழம்பி போய் யோசித்தவன் ஏன் டா, ஏன் இப்படி என்றான்...

விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!

Friday, March 27, 2009

இது எதுக்கு? ஏன்?


இது எதுக்கு? பதில் சிலதினங்களில்!

Wednesday, March 25, 2009

கார்கால நினைவு குறிப்புகளும் -துபாயில் ஆலங்கட்டி மழையும்!

சரியாக அறுவடை நடக்க இருக்கும் சமயம் மழை வந்து வர இருக்கும் நஷ்டத்தை தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திவிட்டு போகும்,"பேஞ்சும் கெடுக்குது காஞ்சும் கெடுக்குது" என்ற புலம்பல்கள் ஐப்பசி அடைமழை மாதம் என்று தெரிந்தாலும் அனைவர் வீட்டிலும் கேட்கும்.
ஸ்பிக் யூரியா சாக்குகள் தான் மழைக்கால ரெயின் கோட்டுகள் பலருக்கும்.

வடிகால் எல்லாம் தண்ணி நின்னா எப்படி வயல் தண்ணி வடியும், நெல் எல்லாம் தண்ணியில் மூழ்கி கிடக்கு இன்னும் இரண்டு நாள் இப்படியே இருந்தா ஒரு குண்டு மணி நெல் கூட வீட்டுக்கு வராது அப்படியே சேத்து உழவு அடிச்சுட்டு போகவேண்டியதுதான் என்று கவலையோடு சித்தபாவிடம் அப்பா சூடா டீ குடிச்சுக்கிட்டே பேசிக்கிட்டு இருப்பார்.

மாலை 5 மணிக்கு எல்லாம் கும்மிருட்டாக ஆகிவிடும் அதுக்கு முன்பே சிம்னி விளக்குக்கு திரிமாத்துவது,கரி படிஞ்ச அரிக்கேன் விளக்கை பேப்பரும்,விபூதி போட்டு துடைத்துவிட்டு பளிச் என்று ஆக்கி அதில் கொஞ்சம் மண்ணென்ய் ஊற்றி ஏற்றி வைத்து மிகவும் சின்னதாக எறியவிட்டு விடுவார். சாப்பிடும் பொழுது வெளிச்சம் அதிகம் இருக்க காண்டா விளக்கு அதில் சணல்தான் திரியாக இருக்கும், எறிய விட்டால் நல்லா வெளிச்சம் கொடுக்கும், ”காண்டா விளக்கு மண்ணென்னய் அதிகம் குடிக்கும் அதனால் சாப்பிடும் பொழுது மட்டும் ஏத்தினா போதும்” இதுவும் அம்மா.

லைட்டு இருக்கும் பொழுது எல்லாம் படி படின்னா படிக்காத இப்ப இந்த சிம்னி வெளக்கு வெளிச்சத்தில் படிச்சு கண்ண கெடுத்துக்காத என்று அம்மாவின் திட்டு எப்படா விழும் என்று காத்திருந்தவன் போல டக்கென்று மூடி வைத்துவிடுவேன். அக்கா வா தாயக்கட்டை விளையாடலாம் என்று கோலகட்டியால் கோடு போட்டு விளக்கு வெளிச்சத்தில் தாயக்கட்டை விளையாடுவோம். உள்ளே ஒழுவாத இடமாபார்த்து ஆணி அடிச்சு கொடிகயிறு கட்டி ஈர துணியும் காயும். ஒரு நாள் வெக்காளிச்சா காயவெச்சுடலாம் தலைகாட்டுவேனாங்குது என்று சூரியனுக்கும் திட்டு விழும்.

இரவு படுக்க பாய் போடும் பொழுது பாய்க்கு கீழே இரண்டு சணல் சாக்கு போட்டு அதன் மேல் பாய் போட்டுவார் அப்பா, தரையின் ஈரம் பாயில் சட்டென்று ஏறிவிடும் ஆனால் சணல் சாக்கு போட்டு அதன் மேல் போட்டால் கதகதப்பு இருக்கும்.படுத்தபின் இந்த குறுவை நெல்லை போட்டு ஓடு மாற்றிவிடலாம் என்று காலையில் அம்மா திட்டியதுக்கு அப்பா பதிலை என்னிடம் சொல்வார், ”ம்கும்” என்ற ஒரு பதில் அம்மாவிடம் இருந்து வரும்.இப்படியே மழை காலையிலும் பேஞ்சா ஸ்கூல் லீவ் என்று கனவோடு படுக்க போவேன் ஆனால் காலையில் எழுந்தா துடைத்துவிட்டது போல் வானம் பளீர் என்று இருக்கும்.

அடுத்தவருடம் மழை காலத்திலும் மேலே சொன்ன அனைத்தும் தவறாமல் இடம் பெறும் அம்மாவின் ஓடு மாற்றும் புலம்பல் உட்பட.
***********************************************
நேற்று இரவு வீட்டுக்கு காரில் போய் கொண்டு இருக்கும் பொழுது டம் டம் என்று கார் மேலே கல் விழுவது போல் சத்தம்,பார்த்தால் ஆலங்கட்டி மழைஎல்லா கார்களும் நிறுத்தப்பட்டு டிராபிக் ஜாம், ரோடு முழுவது சின்ன சின்ன கல்கண்டு மாதிரி ஐஸ் கட்டிகள் முதன் முதலாக ஆலங்கட்டி மழையை பார்த்தேன்.பின் இரவு முழுவது மழை பெய்தது கார் டயர் மூழ்கும் அளவுக்கு பல இடங்களில் தண்ணீர்.





Tuesday, March 24, 2009

ஜூனியரில் வந்த என் பதிவும் + கார்ட்டூனும் + டரியள் டக்ளஸ்



படம் அனுப்பிய நர்சிம், வெண்பூவுக்கு நன்றி! நன்றி!













செய்தி : நேர்காணல் வந்தவர்களிடம் ஆங்கிலம் ஹிந்தி தெரியுமா என்று சரமாரி கேள்விகள் கேட்டார் விஜயகாந்த்!


டரியள்: நாம் எல்லாம் தார் பூசிய ”தமிழர்கள்” என்பதை மறந்துவிட்டார் போல!


செய்தி: நானோ கார் முன்பதிவு தொடங்கியது,மூன்று மாதங்களில் விற்பனைக்கு வருகிறது!


டரியள்: கொஞ்சம் முன்னாடியே வந்தா மதுரை மக்களுக்கு ஒரு வாய்பு இருக்கு!



டரியள்: ஜூவியில் குசும்பன் பதிவு வந்ததுக்கு வாழ்த்துக்கள்!


டக்ளஸ்: முதலில் நான் இந்த பதிவு தமிழ்மணத்தில் இனைஞ்சதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், அதை விட இதுதான் கஷ்டமா இருக்கு!

Wednesday, March 18, 2009

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009


உள்ளத்தை அள்ளிதா கவுண்டமணி ஸ்டைலில் சோனியா டயலாக்கை படிக்கவும்!!






செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!

செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!

Sunday, March 15, 2009

கார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு கற்பனை!

ஓடுங்க ஆனா போலீஸ் ஸ்டேசன் பக்கமா மட்டும் ஓடாதீங்க!


ஆச்சர்யம் ஆனால் உண்மை!
அம்மா சீரியஸா சொல்லும் பொழுது இப்படியா சிரிப்பது?

****************************************************
சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காக
நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனி!

இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?

சரத்: இல்லீங்க ராதிகா அரசி ஷூட்டிங் போய் இருக்காங்க!

இல.கனேசன்: எங்க கட்சி தொகுதி பங்கீட்டு விசயமாக பேச இருவர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து இருக்கிறது, அதில் நானும் திருநாவுகரசும் இருக்கிறோம்!


சரத்: (மனசுக்குள் ஆள் இல்லாத கடையிலும் பொருப்பா டீ ஆத்துவீங்க போல) எங்கேங்க அவர் இல்லையா?

இல.கனேசன்: இல்லீங்க அவரு வேறு ஏதும் கட்சிக்கூட பேச முடியுமான்னு பார்க்க போய் இருக்கிறார்.


சரத்:சரி நேரா மேட்டருக்கு வருவோம்!

இல.கனேசன்: இருக்கிறது 40 தொகுதி, இதை எப்படி பிரிச்சுக்கிறது!

சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துவிடுங்க மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

இல.கனேசன்: அய் அய்! எங்களுக்கு 2 போதும் மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க இதுவரை எங்க கட்சியில் இருப்பது நானும் என் மனைவி ராதிகாவும் தான் இரண்டு பேருக்கு இரண்டு சீட் போதும்!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க உங்க மனைவி நடிக்கும் தொடரில் இருப்பவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கொடுத்தாலே நீங்க ஈசியா 38 சீட்டுக்கு
ஆள் புடிச்சுடலாம்! எங்களால அது முடியாது!

சரத்: அட நீங்க வேற இன்னைக்கு அரசி தொடரை இயக்குரவங்க நாளைக்கு இருப்பாங்களான்னு டவுட்டா இருக்கு இதுல நீங்க சீட்டை அவுங்களுக்கு கொடுக்க சொன்னா,
அதெல்லாம் சரி வராதுங்க, என் கட்சிக்கு 2 சீட் போதும், மீதிய நீங்க வெச்சுக்குங்க!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க எங்க கட்சிக்கு 2 சீட் போதும் மீதிய நீங்கதான் வெச்சுகனும்...

சரத்: இல்லீங்க அதெல்லாம் சரி வராது...கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கிட்டினால் முறிந்தது என்று ரிப்போட்டருக்கு சொல்லிடுங்க!எங்களுக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கு, எங்களுக்கு யார் சரியாக இரண்டு சீட் தருகிறார்களோ அவர்களோடுதான் நாங்கள் கூட்டணி! இல்லையேல் இரு தொகுதியில் மட்டும் நாங்களே போட்டி இடுவோம்!

இந்த வார ஆனந்த விகடன் புத்தகத்தில் ஓசை செல்லாவும், லிவ்விங் ஸ்மைல் வித்யாவும்!

கொஸ்டீன் டீன் கொஸ்டீன் என்ற ஒரு பகுதி ஆனந்தவிகடனில் வரும் அந்த பகுதியில் மட்டும் இன்றி பெரும்பால கேள்வி பதில் பகுதியில் பக்கத்துவீட்டு பையனுக்கும் எனக்கும் ஒரு “இது” அதை கண்டினியு செய்யலாமா வேண்டாமா? செய்வதால் என்ன பிரச்சினை என்று இளம் அம்மா ஒரு கேள்வி கேட்பார்கள்! இதுபோலவே பெரும்பாலும் அந்த கேள்வி பதில் பக்கம் இருக்கும், இன்னைக்கு என்ன மேட்டர் என்று படிக்கலாம் என்று பார்த்தால் இரண்டாவது கேள்வியில்
ஆலோசனை சொல்வபவர் நம்ம ஓசை செல்லா அண்ணாச்சி! இணைய கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவரும், நிஜ பிளாக் பெல்ட் வாங்கிய தமிழச்சியின் தோழர்.


அட ஓசை செல்லா அண்ணாச்சி கூளிங் கிளாஸ் இல்லாம இருக்கும் முதல் படம் போல:) சரி கேள்விக்கு வருவோம்!

”எனக்கு இனையத்தில் புதிதாக ஒரு வலைப்பூ(பிளாக்) தொடங்கி எழுத எண்ணம். பத்திரிகைகளில் எழுதினால் சன்மானம் கிடைப்பது போல்,இணையத்தில் எழுதுவதால் வருமானம் கிடைக்குமா?”

‘ஓசை' செல்லா
இணைய ஆலோசகர்

“தாராளமாக, ஏராளமாகக் கிடைக்கும். அதற்கு எழுத்தார்வத்தோடு கொஞ்சம் தொழில்நுட்பமும் தெரிந்திருக்கவேண்டும் கணேஷ். இரண்டு வருடம் மாங்கு மாங்கென்று எழுதியதில் எனக்கே ஒரு லட்சரூபாய்க்கு மேல் வந்துள்ளது. ஆனால் முன்பு போல இப்போது வருவாய் இல்லை. தமிழில் விளம்பரம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம். பப்ளிஷர் ஆக இருந்தால் மட்டுமே விளம்பர வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு ஆடியோ,வீடியோ கொண்ட வலைப்பூக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அவற்றுக்கு கூகுள் விளம்பரமும் கிடைக்கும் என்பதால் நல்ல வருமானம் வரும்.
உங்கள் எழுத்து மற்றவர்களை வசீகரிக்கும் என்று நம்பினால் இப்போதே,வலைப்பூவில் எழுதத் தொடங்குங்கள். பிளாக் என்பது நிச்சயம் வளர்ச்சி காட்டும் மீடியா. எனவே இப்பொழுதே எழுதத் தொடங்கி பிரபலமாகிவிட்டால் வருமானம் கிடைக்கும் காலத்தில் அறுவடை செய்யலாம். அதிக ஹிட்டுகள் காட்டும் பிளாக்குகளுக்கு கூகுள் விளம்பரமும் தேடி வரும். வாழ்த்துக்கள் கணேஷ்”

இதுதான் அண்ணாச்சியின் கருத்து!

ஏனுங்க அண்ணாச்சி உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்கும் பொழுது “எனக்கே ஒரு லட்ச ரூபாய்” என்று சொல்லலாமா? இந்த ”எனக்கே” என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, எனக்கு ஒரு லட்சரூபாய் வரை கிடைத்தது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்!

அதெல்லாம் இருக்கட்டும் அண்ணாச்சி, வருமானம் வருவது இருக்கட்டும் போகும் மானத்தை புடிச்சு வைப்பது எப்படி? அதுக்கு பதில் சொல்லுங்க!
(அப்பாலிக்கா எனக்கும் வருமானம் வருவது எப்படின்னு சொல்லி கொடுங்க, டீல் ஓக்கே ஆனது என்றால் கோவை வந்து சஞ்சய் மண்டையில் சூடம் ஏத்துறேன்!)

**********************************############*****************************

62 ஆம் பக்கத்தில் கட்டுப்பாடுக் கோடு சுயசிந்தனைக்குக் கேடு என்ற கட்டுரையில் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் பேட்டி!

“பொதுவாக பத்திரிகைகளில் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்ய வாய்ப்பு இல்லாதவர்களே இணையதளங்களில் எழுதுகிறார்கள். இணைய தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தெளிவான சட்டங்கள் நம்மிடம் கிடையாது. இருக்கும் ஒரே கேடயமான தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அதிகாரவரம்புகள் குறித்தும் தெளிவான வரையறைகள் கிடையாது. ஆர்குட்டின் பதிவுகளிலோ பிளாக்குகளிலோ கமெண்ட்டுகளைத் தணிக்கை செய்கிற உரிமை சம்பந்தப்பட்டவருக்கே உண்டு. எ னவே அ வரது வலைப்பக்கத்தில் உங்கள கமெண்டுகளுக்கு அவரே பொறுப்பு என்பது சட்டப்படி சரிதான். ஆனால் எல்லாவற்றுக்கும் சட்டத்தை துணைக்கு வைத்துக்கொள்ளமுடியாது. தணிக்கை என்ற பெயரில் கருத்துரிமையைப் பறித்தால் அது பன் முகத்தன்மையை அடக்கி ஒடுக்கிவிடும். ஒரே ஒரு கருத்துதான் அதுவும் குறிப்பிட்ட குழுவினருக்கே சாதகமாக தான் இருக்கவேண்டும் என்ற நிலமை வன்முறையில் விடியும் ஆபத்து இருக்கிறது.

என்கிறார் இனையத்தின் மூலம் பிரபலமான படைப்பாளிகளில் ஒருவர் 'லிவிங் ஸ்மைல்' வித்யா.

******************************
நேற்றே ஜூவியில் வந்த நர்சிம் ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்!

Tuesday, March 10, 2009

சர்வேசன் பதிவில் சந்தேகமும் எனக்கு வேண்டிய விளக்கமும்!!!

நேற்று சர்வேசன் அவர்கள் ஒரு பதிவு போட்டு இளையராஜாவை டாக்டர் புருனோ கும்முவது ஏன் என்று விளக்கம் கேட்டு இருந்தார், ஒத்தை ஆளா நின்னு நாலா பக்கத்தில் இருந்தும் வரும் பால்களை அடிச்சு துவம்சம் செய்துக்கிட்டு இருக்கார்!

எனக்கு இருக்கும் சந்தேகம் அந்த பதிவில் வரும் இரு வார்த்தைகள்

1)ஒரடோரியா

2)சிம்பொனி

ஓட்டேரி நரி கில்லியில் வரும் கேரக்ட்டர் அது தெரியும் அது என்னாது ஒரடோரியா?

கரண்டு போனா சிம்னி கொளுத்துவாங்க அது என்னாது சிம்பொனி, நண்பனிடம் கேட்ட பொழுது திருவாசகத்தில் வரும் வயலின் இசையை போட்டுகாட்டினான், ஏன் டா இந்த வயலினை வாசிக்கவா ஹங்கேரி போகனும் என்றேன், பதில் இல்லை, தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்!

என் சந்தேகத்தை அலட்சியம் செய்தால் உங்க புள்ளையும் இதுபோல் அறிவு பூர்வமாக சந்தேகங்கள் உங்களை கேட்டு இம்சை செய்யும் ஜாக்கிரதை!
***********************

அப்புறம் ஜெட் போன்ற விமானங்கள் போகும் பொழுது மட்டும் புகை அடர்த்தியாக மேகம் போல் வானத்தில் இரு கோடாக வெகு நேரம் இருக்கிறது, இங்கு கீழே வாகனங்கள் விடும் தம்மாதுண்டு புகையால் ஓசோன் ஓட்டை விழுகிறது என்கிறார்களே, விமானம் மேலேயே போய்
புகைய விடுகிறதே அதனால் ஏதும் பாதிப்பு கிடையாதா? அது ஏன் மேகம் போல் அடர்த்தியாக நிற்கிறது.

நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் செந்திலுக்கு சித்தப்பூ முறை, இன்னும் பல சந்தேகங்கள் இருக்கு:))

Wednesday, March 4, 2009

கிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்!

சில பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது, சிறுநீரக கல் பிரச்சினையால் டாக்டரிடம் சென்ற பொழுது அவரும் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு இடது கிட்னியில் 2 கல்,வலது கிட்னியில் ஒரு கல், பிளாடரில் ஒன்று, பிளாடருக்கும் கிட்னிக்கும் இடையே ஒன்று என்று வீடு கட்ட தேவையான அளவுக்கு கல் இருக்கும் நல்ல செய்தியை சொன்னார்! வலி நாளுக்கு நாள் அதிகமாகவே ஊருக்கு போய்விடலாம் என்றால் சென்னை டிக்கெட் அனைத்தும் முடிந்துவிட்டன!

சரி மும்பை போய் அங்கிருந்து சென்னை போய்விடலாம் என்று முடிவெடுத்து மும்பைக்கும் அங்கிருந்து சென்னைக்கு கிங் பிஷரிலும் டிக்கெட் புக் செய்து இரவே மும்பை கிளம்பினேன்.மும்பையில் இருந்து சென்னை விமானத்துக்காக 3 மணி நேரம் காத்துக்கொண்டு இருக்கனும். வலி வேறு பிரிச்சு எடுக்குது எப்படி 3 மணி நேரத்தை ஓட்டபோகிறோமே என்று வந்தால் பிளைட் 1 மணி நேரம் தாமதம் என்றார்கள் என்ன கொடுமை இது என்று அங்கு வெயிட்டிங் ஏரியாவில் உட்காந்து இருந்தேன்.


(படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!)

என்னே ஆச்சர்யம் எல்லா வலியும் குறைந்து போய்விட்டது, அன்று தான் உணர்ந்தேன் இயற்கையை ரசித்தால் எல்லாம் மறந்து போகும் என்று, ஆம் ஏர்போர்ட்டு உள்ளே கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர்வேன், பாராமவுண்ட்என்று பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அங்கு இங்கும் போய் கொண்டு வந்தார்கள் அடா அடா என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கொட்டிய அழகு என்று அத்தனை அழகு பதுமைகள், அடா அடா எத விடுவது எத பார்ப்பது? இப்படி இயற்கையை ரசித்துக்கொண்டு இருந்ததில் வலி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பொழுதும் நன்றாக போய்கொண்டு இருந்தது, இது பத்தாததுக்கு பெங்களூரில் இருந்து வந்த கல்லூரி மாணவியர் கூட்டமும் ...எதற்கு வந்தோம் என்றே மறந்து போய்விட்டது!!!

அப்பொழுதுதான் என்னை கடந்து கிங் பிஷரில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் கூட்டம் கடந்து சென்றது அதில் ஒரு பெண்ணின் அழகு வெகுவாக கவர அட இந்த பொண்ணும் நாம போகும் பிளைட்டிலேயே வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்! என் ராசி தான் எனக்கு தெரியுமே அதனால் ரொம்ப ஆசைப்படாமல் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன்.

நான் போக வேண்டிய விமானத்துக்கான அழைப்பு வரவே கிளம்பி போனேன், பிளைட்டில் ஏறினால் வெல்கம் செஞ்சது நான் பார்த்த அதே பெண்! என்ன ஆச்சர்யம் முதன் முதலாக நாம் நினைத்தது எல்லம் நடக்கிறதே என்று நினைச்சு சீட் நம்பர் தெரிஞ்சாலும் அவர்களே சொல்லி காதால் கேட்டு போய் உட்காரலாம் என்று நினைத்தேன் அது போலவே அவர்களும் நான் அமரவேண்டிய இடத்தை சொல்ல போய் அமர்ந்தேன். அப்பொழுதுதான் நினைத்தேன் குஷியில் விவேக் போட்டு வரும் ஒரு கருப்பு கண்ணாடியபோட்டு வந்திருந்தாலவது மும்தாஜ் கூட போவது போல் இவுங்க கூட போய் இருக்கலாமே என்று!

பிளைட் கிளம்பியதும் வாட்டர் பாட்டில் கொடுக்க அந்த பெண் ஒரு டிராலிய தள்ளிக்கிட்டு வர,என் இதயம் துள்ளிக்குதிக்க, டக் டக் என்று அந்த பெண் நடக்க என் இதயம் திக்திக் என்று துடிக்க...(கொஞ்சம் ஓவராத்தான் தோணும் ஆனா அந்த பெண்ணை பார்த்தா இது எல்லாம் பத்தாதுன்னு தோனும்!)ஒவ்வொருவரா கொடுத்துக்கிட்டு வந்த பெண் எனக்கு முதல் வரிசையோடு சடன் பிரேக் போட்டு நின்றுவிட்டு திரும்ப போய்விட்டது, சரி தீர்ந்து விட்டது போல அதான் எடுக்க போய் இருப்பார்கள்என்று நினைச்சேன், பின்னாடி இருந்து வந்த இட்லி குண்டன் தண்ணி பாட்டிலை கொடுத்தான் நான் அமர்ந்து இருக்கும் வரிசை வரைக்கும் அவன் ”சப்ளையர்” என்று!

ம்ம்ம் என்ன கொடுமைங்க இது!

அதன் பிறகு யூட்ரோஸ்கோப்பி செஞ்சு கல்லை எல்லாம் உடைச்சு என் வீடு கட்டும் கனவையும் தகர்த்துவிட்டார்கள் டாக்டர்கள்!
**************************************************
நேற்று நண்பர் ஒருவரிடம் சாட்டிக்கிட்டு இருக்கும் பொழுது தல நீங்க எப்பொழுது பாலோயர்சில் எப்பொழுது 200 போட போறீங்க என்றார்!

அட போங்க தல, இதுவரைக்கு பாலோயரா ஆயி அதன் பிறகு அத்துக்கிட்டு ஓடி போனவர்கள் எண்ணிக்கைய சேர்த்தாலே இன்னேரம் 200 தாண்டி இருக்கும் என்றேன்!

என்ன தல ஏன் அப்படி சொல்றீங்க என்றார்!

ஆமாம் தல ஏதாவது ஒரு பதிவை படிச்சுட்டு ஆர்வத்தில் சரி இவன் ஒழுங்கா எழுதுவான் போல என்று பாலோயரா ஆயிடுறாங்க, அதன் பிறகு நம்மை பற்றி உண்மை தெரிஞ்சதும் இவன் சகவாசமே வேண்டாம் என்று அத்துக்கிட்டு ஓடி போய்விடுகிறார்கள் என்றேன்.

கவலைய விடுங்க தல நான் உங்க பாலோயரா ஆகிறேன் என்றார்...

அவரிடம் சொன்னே, குறைந்த பட்சம் என் மொக்கையை எல்லாம் பொருத்துக்கிட்டு 3 மாசமாவது அத்துக்கிட்டு போக மாட்டேன் என்று உறுதி கொடுக்கவேண்டும் என்றேன்!

அவரு இறுதி மூச்சு வரை என்றார்!

அவரின் நம்பிக்கை சல்யூட்!!

Monday, March 2, 2009

என் கன்னி ராசியும் அனுபவங்களும்!!!

பூவரசு அல்லது கருவேலிக் கிளைய வெட்டி, அழகா தோல் சீவி ஸ்டெம்ப் எல்லாம் ரெடி செஞ்சு, மரத்தில் செதுக்கினபேட்டோடு உமா வீட்டுக்கு முன்னாடி இருக்கும் காலி இடத்தில் ஆட்டத்தப் போடுவது எங்கள் பழக்கம். அந்த புள்ளைக்குமுன்னாடி சீனைப் போடுவோம் என்று கரெக்டா அந்த புள்ள வெளியில் வரும் பொழுது, அதுக்கு முன்னாடி நம்ம திறமைய காட்ட, பவுலிங் செஞ்சுக்கிட்டு இருப்பவனை பேபி கட் ஓவராக்கி மீதி பந்தை நாம போடலாம் என்று போட்டால் அதுவரை தடவிக்கிட்டு இருந்த பன்னாடை இறங்கி வந்து மொடேர் என்று அடிப்பான் சிக்ஸ்ராக போய் அந்த புள்ள வீட்டில் விழும்! என் இதயம் அப்படியே நொறுங்கி கீழே விழும்:(


சரி பவுலிங்கில தான் சொதப்பிட்டோம் அதுக்கு முன்னாடி பேட்டிங்கிலாவது பவரைக் காட்டுவோம் என்றுஇறங்கி வந்து அடிக்கலாம் என்று அடிக்க வந்தா அதுக்குள்ள அந்த பந்து மூனு குச்சியையும் கிளப்பிக்கிட்டுப் பறக்கும் பப்பறக்கான்னு, சரி அவுட் ஆகிட்டோம் வந்ததும் தெரியாம அவுட் ஆனதும் தெரியாம போய்விடலாம் என்று நினைச்சா! கிளீன் போல்ட், அவுட் சாட் என்று ஊருக்கே கேட்கும் படி அலறுவானுங்க அதுவும் டக் அவுட் என்று சொல்லி!


சரி விளையாட்டில் தான் இப்படி முடிஞ்சு போச்சு ஸ்கூல் போகும் பொழுது அப்படியே அய்யா திறமையக் காட்டி உசார் செய்யலாம் என்று நினைப்பேன். ஸ்கூல் முடிஞ்சு வரும் பொழுது அண்ணே அண்ணே நானும் வரேன்னே
உங்க கூட, அந்த முருகன் பய சைக்கிளில் போகும் பொழுது மண்டய தட்டிட்டுப் போறான்னே உங்க சைக்கிளில்அழைச்சுக்கிட்டுப் போங்கன்னே என்பான், நம்மளும் லிப்ட் கொடுத்து அந்தப் பக்கம் போகும் புள்ளைங்க மனசில்ஒரு துண்டை போட்டுவிடலாம் என்று வாடா என்று ஏத்திக்கிட்டு கிளம்பினா, அண்ணே வேகமாப் போண்ணேஅண்ணே வேகமா போண்ணே என்று சவுண்ட் கொடுப்பான், நாமளும் வேகமா ஏறி நின்னு மிதிப்போம் கரீட்டா அந்த புள்ளைக்குப் பக்கத்துல போய் டபக்குன்னு செயின் கழண்டுக்கும் அப்படியே தலைக்குப்புறக்ககீழே விழுந்து எழுந்தாக் கூட வந்த குட்டிசாத்தான் போன்னே போயும் போயும் உன் சைக்கிளில் ஏறினேன்
பாரு என்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிடும்!


ஸ்கூலில் கூட படிக்கும் புள்ளைங்களோடதான் ஒட்டோ உறவோ கிடையாதுன்னு காச வெட்டி போட்டு உறவை முறிச்சுக்கிட்டதால பக்கத்து கிளாஸ் காமர்ஸ் பொண்ணுங்களை உசார் செய்யலாம் என்று அதுங்களுக்கு முன்னாடி பந்தா காட்டிக்கிட்டு இருக்கும் பொழுது, கரெக்டா அதுங்க நம் கிளாசை கிராஸ் செய்யும் பொழுதுதான் கணக்கு வாத்தியார் உள்ளே வெச்சு அடிச்சதும் மட்டும் இல்லாம கிளாஸ் ரூமுக்கு வெளியேயும் அடிச்சு இழுத்துட்டு போவார், க்ளுன்னு ஒரு சிரிப்பு சிரிப்பாளுங்க பாருங்க, அப்படியே ஒரு கருங்கல்லைஎடுத்து வாத்தியார் மண்டய உடைச்சுவிடலாம் என்று தோனும். கணக்கு வாத்திக்கும் நமக்கும் ஜென்ம பகை ஏன்னா, கிளாஸில் ஒரு முறை மச்சான் வாத்தியார் புள்ள மக்கு என்றபழமொழிய மாத்த போறேன் டா என்று சொல்ல, எப்படி என்றான் கனேஷ், கணக்கு வாத்தி மருமகனும் மக்கு என்றுமாத்த போறேன் டா என்று சொன்னேன். கூடப்படிக்கும் சுந்தரி அவர் பெண் அது காதில் விழுந்துவிட்டது இதுக்கு மேல என்ன வேண்டும்!


சரி ஸ்கூல் லைப்தான் இப்படி போச்சு காலேஜ்க்கு டிரைனில் போகும் பொழுது கூட வரும் அஞ்சலையம்மாள் காலேஜ் பெண்களுக்கு முன்னாடியாவது ஒரு இத கிரியேட் செஞ்சு வைப்போம் என்று லைப்ரரியில் இருந்து ஆட்டைய போட்ட ஜாவா புக்கை வெச்சுபடம் காட்டிக்கிட்டு வரும் பொழுதுதான் வருவான் ஒரு கிராதகன் மச்சான் முடிஞ்ச செம்மில் 4 ல் கப்பாமே ஆமாம் ஜாவாவில் 90% என்று சொன்ன ஆனால் 4 மார்க்தான் வாங்கி இருக்கியாமே என்பான், அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்!


சரி இதோட முடிஞ்சுதா என்றால் அதான் இல்லை இந்தியாவை விட்டு துபாய் வந்த பிறகு இப்பொழுது இருக்கும் கம்பெணியில் பிரிண்டிங் அவசரமாக செய்யவேண்டும் என்று வரும் சூப்பர் கில்மாங்கி கல்லூரி பெண்களிடம் நம்ம அப்ரெண்டிஸ் சாரி மேடம் நாங்க பிஸி ரெண்டு நாளைக்கு ஒன்னும் செய்யமுடியாது என்று சொல்லுவானுங்க.

உடனே அந்த பொண்ணுங்களும் உங்க மேனேஜர் கிட்ட பேசனும் என்றதும் நம்மை கை காட்டிவிட்டுவிடுவானுங்க சரி இந்த மாசம் அவனுக்கு சம்பளத்தை ஏத்திக்கொடுக்கனும் என்று நினைச்சுக்கிட்டு எஸ் மேடம் How can i help you என்று கேட்டு பீட்டர் விட்டுக்கிட்டு டேய் அந்த வேலைய நிறுத்தமுடியுமா? என்றால் முடியாது என்பான் இதுவும் பிளீஸ் ஐ நீட் இட் வெரி அர்ஜெண்ட், டூ சம்திங் பார் மீ! என்று கெஞ்சி கொஞ்சி சொல்லும், என்ன டா செய்யலாம் என்று ஒரு பெரிய பில்டப்பை கொடுத்துக்கிட்டு சரி நம்ம பிராஞ்சில் எல்லாம் என்னா செய்யமுடியுமான்னு போன் போட்டு பாரு, அதான் என்னிடம் சொல்லிட்டில்ல கவலைய விடு என்பது போல் ஒரு இமேஜ் கிரியேட் செஞ்சுக்கிட்டு இருக்கும் பொழுது வருவான் ஒரு கிராதகன் டேய் நீதானே 9 மணிக்கு எல்லாத்தையும் முடிச்சு டெலிவரி வேற செய்வோம் என்று சொன்ன, ஆனா இப்பொழுதுதான் பிரிண்டிங் ஓடிக்கிட்டு இருக்கு என்னா டா நினைச்சுக்கிட்டு இருக்க, இது இல்லாம நான் எப்படி ஒபாமை மீட் செய்வது என்ற ரேஞ்சுக்கு பாட்டு விழும்... அப்படியே பம்மி பதுங்கி சாரிங்க நோரிங்க எல்லாம் சொல்லி அவனை தாஜா செஞ்சு அனுப்பிவிட்டு பார்த்தா இந்த புள்ள விடும் பாரு ஒரு கேவலமான லுக்கு....ம்ம்ம்




காசிக்கு போனாலும் கருமம் விடாது என்பது போல துபாய் வந்தாலும் இந்த ராசி விடாது போல!