அப்படி என்ன பார்த்தாய் என்கிறீர்களா, குழந்தையை வைத்து தள்ளி போகும் தள்ளு வண்டி, ஒரு 1 வயது குழந்தை அழகா, கொழு கொழுன்னு இருந்துச்சு. பார்க்கவே ஆசையா இருந்துச்சு தள்ளிக்கிட்டு போய் கிட்டு இருந்தவன் பெடஸ்ட்ரீயன் கிராஸ்யை கவனிக்காமல் இறங்கினப்ப டப்புன்னு வண்டி
குப்புற விழுந்துட்டு, விழுந்ததுல குழந்தைக்கு அடி பட்டுச்சா இல்லையான்னு தெரியவில்லை வண்டியை தூக்கி நிமிர்த்தி விட்டு அப்படியே அந்த குழந்தையை அதிலேயே வைத்து ரெண்டு பேரும் சண்டை, அட பாவிங்களா தூக்கி புள்ளைய எங்க அடி பட்டு இருக்குன்னு பார்பீங்களா அத விட்டுட்டு சண்டை.
மிஞ்சி மிஞ்சி போனா அந்த குழந்தை என்ன ஒரு ஐந்து கிலோ இருக்குமா, கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறந்து சில மாசமே ஆன குழந்தைகளை அந்த வண்டியில் வச்சு தள்ளிக்கிட்டு
போற அழகை பார்கனுமே, அப்படியே பத்திக்கிட்டு வரும்.
பச்ச புள்ளய அந்த வண்டியில் போட்டு கைகளை ஒரு டேப்பால் அசைக்க முடியாத படி கட்டி, கால்களை கட்டி,பார்க்க ஏசுவை சிலுவையில் அறைந்த மாதிரி. அந்த வண்டிய ரோட்டுலேந்து நடை பாதைக்கும், பின் ஷாப்பிங்
மால்க்கும் அங்க இங்கன்னு போட்டு அலைகழிச்சு, அந்த பிஞ்சு குழந்தைகளை பார்த்தா பாவமா இருக்கு, வண்டியில் போகும் பொழுது குலுங்கினா நமக்கே இப்படி இருக்கே குட்டி பாப்பாங்களுக்கு எப்படி இருக்கும், அத அழகா அம்மா கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போன பெண்கள் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொடிந்து போய் விடும் போல...
போற அழகை பார்கனுமே, அப்படியே பத்திக்கிட்டு வரும்.
பச்ச புள்ளய அந்த வண்டியில் போட்டு கைகளை ஒரு டேப்பால் அசைக்க முடியாத படி கட்டி, கால்களை கட்டி,பார்க்க ஏசுவை சிலுவையில் அறைந்த மாதிரி. அந்த வண்டிய ரோட்டுலேந்து நடை பாதைக்கும், பின் ஷாப்பிங்
மால்க்கும் அங்க இங்கன்னு போட்டு அலைகழிச்சு, அந்த பிஞ்சு குழந்தைகளை பார்த்தா பாவமா இருக்கு, வண்டியில் போகும் பொழுது குலுங்கினா நமக்கே இப்படி இருக்கே குட்டி பாப்பாங்களுக்கு எப்படி இருக்கும், அத அழகா அம்மா கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போன பெண்கள் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொடிந்து போய் விடும் போல...
27 comments:
ஆமாம்! நம்ம ஊர்ல தான் அதல்லாம் அதாவது தாய்பாசம் எல்லாம். இங்க தொட்டில் கைதிதான் குசும்பா!
ஏன் தொட்டில இருக்கிற குழந்தய அப்பா தூக்க மாட்டாராமா???? அதான் பத்து மாசம் அம்மா வயித்துல சுமக்கும் போது கொஞ்ச நாள் அப்பா கைல சுமக்கலாம்ல அதைக் கேக்க மாட்டிங்க இதுக்கெல்லாம் வந்துருவிங்க தாய்பாசம் உள்ள பெண்கள் எல்லாம் அழிச்சுட்டாங்க அப்படினு
அபி அப்பா said...
" இங்க தொட்டில் கைதிதான் குசும்பா! "
என்னமோ போங்க..
"இதுக்கெல்லாம் வந்துருவிங்க தாய்பாசம் உள்ள பெண்கள் எல்லாம் அழிச்சுட்டாங்க அப்படினு "
அனானி
பாசம் என்றால் அம்மாதான், குழந்தைய அம்மா பார்த்துகுறதுக்கு அப்பா பார்த்துகுறதுக்கும் வித்தியாசம் இருக்கு.
என்னா ஆச்சி தல
விழுந்ததை இன்னும் மறக்கலையா நீங்க ஒரே ஃபிளிங்க்ஸ் பதிவா வருது.. :)
//
பாசம் என்றால் அம்மாதான், குழந்தைய அம்மா பார்த்துகுறதுக்கு அப்பா பார்த்துகுறதுக்கும் வித்தியாசம் இருக்கு
//
இந்தக் கதைய சொல்லி ஏமாத்தப் பாக்காதிங்க வித்யாசம் இருக்கலாம் ஆனா அதுக்காக குழந்தய அம்மாதான் தூக்கனும் அப்பா கைவீசிக்கிட்டு வரனும் அப்படிங்கறிங்களா
அது இருக்கட்டும் குழந்தய தொட்டில்ல தூக்கி வர்றதுக்கு ரெண்டு பேர் மேலயும் தப்பு சொல்லாம பெண்கள் மேல மட்டும் ஏன் தப்பு சொல்றிங்க
தொட்டில் கைதிகளுக்கு காரணம் பெண்களோட பாசக்குறைவு காரணம் இல்ல ஆண்களோட எஸ்கேபிஸம் தான்
mr.kusumpan, this is the first time unka eluthai padikiren.Peraiparthal kusumpaga ethaiyum eluthi irupeerkal entu parthal alagana sentimental one -kulandaiyai parents eppadi aravanaikavendum entu feel pannee irukireergal - antha incident unkalin manathai thottirukirathu
ithil pavam kulanthaithan - udane attend seyamal, sandai pottathu orutharai oruthar nan munthi nee munthi entu blame pannuvathile irunthirukirarkal - using pram, a sympol of rich people - kulanthaikkum mother ikkum ulla nerukkathai ithu kulaikkum .
அனானி அக்கா நீங்க ரொம்ப உணர்சிவசப் படுறீங்க.
அவர் சொல்ல வந்த விஷயத்த பாருங்க.
பாராட்டி பின்னூட்டம் போட்டு பெயர் வாங்கும் பதிவர்களும் உண்டு
குற்றம் கண்டுபிடித்தே பின்னூட்டம் போட்டு பெயர் வாங்கும் பதிவர்களும் உண்டு
குசும்பன் இது நாகரீக விங்ஞான வளர்ச்சி
மனித தன்மையின் வீழ்ச்சி . . . .
ஆமாம் குசும்பா குழந்தைங்களை தொட்டிலில் கொண்டு செல்வது சரியில்லை தான். ஆனாலும் அதுக்காக பாசம் இல்லைன்னு சொல்ல முடியாது.ஒரு சவுகிர்யம் தான் வேற என்ன.
ஏன் இந்த கொலை வெறி???
ஏனுங்க...
இந்த தொட்டில் பெண்கள் இடுப்பை விட ( இப்போ எல்லாம் அப்படி ஒரு அம்சத்தையே பார்க்க முடியலை ஓய்...மேலிருந்து கீழா ஒரே பேரல் மாதிரி இருக்கு ) இந்த தொட்டில் எவ்வளவோ மேல்...
குழந்தைக்கு தேவையான சூடு தரும் தொட்டி, ஆய் போனா அலாரம் அடிக்கிற தொட்டி, ஆட்டிவுடுற தொட்டி எல்லாம் வந்துருச்சு...
இது எல்லாம் வசதிதான் கானும்..பெண்கள் தொட்டில்ல போட்டுட்டு அழகா அடுத்த வேலைகளையும் செஞ்சுட்டு வருவதற்கு இது வசதி...
புள்ளையப்பெத்துப்பாரும் ஓய்...சும்மா டென்ஷனாகி ப்ளாக் போடாதேயும்...
போன கமெண்டுட லேடீஸ் இடுப்பை பத்தி போட்டதுக்கு ஏதும் தனிப்பதிவு போட்டு கும்மி அடிக்காதேள்...
சந்தோஷ் said...
"ஆனாலும் அதுக்காக பாசம் இல்லைன்னு சொல்ல முடியாது."
எங்கய்யா பாசம் இல்லைன்னு சொல்லி இருக்கேன். அப்படி நான் ஏதும் சொல்லவே இல்லையே!!!!
:(( அவ்வ்வ்வ் அண்ணாச்சி உங்களுக்கு உள்ள இப்படி ஒரு பக்கம் இருக்கா?
கருத்து கந்தசாமி!
நமக்கு எதுக்குய்யா இந்த வேலையெல்லாம். ஒரு வேளை உனக்கு கொழந்த பொறந்து நீ எப்படி தூக்கிட்டு போறேன்னு பாக்கலாம்.
//கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போனா/
நல்லாத்தான் இருக்கும்...
என்ன பண்ண???...
குசும்பு... இதுல இருக்க வசதி தெரியுமா,... சின்ன குழந்தை அம்மா இடுப்புல இருக்குறத விட, இந்த தொட்டில இருக்குறது தான் நல்லது...
குழந்தையை அம்மா தூக்கி வச்சிகிட்டா கொஞ்ச நேரத்துல அம்மாவுக்கும் உடம்பு வலிக்கும், குழந்தைக்கும் உடல் வலிக்கும். இந்த தொட்டி இருந்தா குழந்தை வசதியா தூங்கும், அம்மா இடுப்புல தூங்க முடியாது...
4 /5 மாசத்துல போட்டு பழகினாதான் 3-4 வயசுவரை குழந்தைங்க அதுல உக்காரும்..இல்லனா அப்புறம் அதுல உக்காரவே உக்காராது...
5 மாசத்துல அம்மா இடுப்புல உக்காரலாம்.. 2 வயசு ஆனபிறகு குழந்தை 10-12 கிலோ இருக்கும், அப்போ தூக்கி இடுப்புல வச்சா என்ன ஆகும் தெரியுமா...
இதில இன்னும் நிறைய விஷயம் இருக்கு.. அதெல்லாம் அனுபவத்துல தான் இன்னும் நல்லா புரியும்
இப்படிக்கு
அனுபவஸ்தன்
\\தம்பி said...
கருத்து கந்தசாமி!
நமக்கு எதுக்குய்யா இந்த வேலையெல்லாம். ஒரு வேளை உனக்கு கொழந்த பொறந்து நீ எப்படி தூக்கிட்டு போறேன்னு பாக்கலாம்.\\
இது சரியான போட்டி....என்ன க.கந்தசாமி ரெடியா? ;)
\\செந்தழல் ரவி said...
போன கமெண்டுட லேடீஸ் இடுப்பை பத்தி போட்டதுக்கு ஏதும் தனிப்பதிவு போட்டு கும்மி அடிக்காதேள்...\\
ஆஹா...சொல்லிட்டிங்கல்ல....கண்டிப்பா................ம் ;)
\\
J K said...
//கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போனா/
நல்லாத்தான் இருக்கும்...
என்ன பண்ண???...\\
அய்யோ...அய்யோ...இதை கூட குசும்பர் தான் சொல்லும் போல.
வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
வெங்கட், அனானி மட்டும் தான் நான் சொல்ல வந்ததை புரிந்து இருக்கிறார்கள். நான் இங்கு பாசத்தையோ,ஆண்கள் தூக்காததையோ பற்றி பேச வில்லை, அம்மாவின் நெருக்கம் மட்டுமே அந்த குழந்தைக்கு சுகம் தரும் என்பது என் கருத்து.
உங்களுக்கு குழந்தை இருக்கிறதா :)
கையில் கசகசவென்று வேர்வை வழிய, குழந்தையும் சௌகரியமாக இல்லாமல் இருப்பதை விட, ஹாயாக, காற்றோட்டமாக வருவதே உசிதம்.
இதே ரீதியில் நானும் யோசித்தால் :)
* கார் எதற்கு... அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு காலாற நடந்தே போகலாம். நடுவில் கடல் வந்தால், நீச்சலடித்தால் உடற்பயிற்சியும் செய்த மாதிரி இருக்கும் ;)
* தட்டச்சு எதற்கு... எண்ணூறு பக்க நாவலை பேனாவில் எழுதினால்தான் திருப்தி!
* டிவி எதற்கு... விளையாட்டோ, கேளிக்கையோ நேரடியாக பார்ப்பதற்கு ஈடாகுமா?
அட குசும்பன் மாமா, இவ்ளோ சென்சிடிவ்வா நீங்க?குழந்தை மனசுதான்.
உண்மைதான்ன் அம்மாவின் பாசத்துக்கு மாற்று இல்லை.அப்பா எவ்வளவு பாசம்காட்டினாலும்
கோட்டுப் போட்ட குசும்பன், குழந்தைய இடுப்புல வச்சுத் தூக்கிகிட்டு போகட்டும், அல்லது பட்டுப்புடவை கட்டிய அவர் மனைவி தூக்கட்டும், பாசத்துக்கு அவர்தான் வரையறைன்னு வச்சுக்கலாம்..
யோவ்.. இதுக்கும் பாசத்துக்கும் என்னய்யா சம்மந்தம்? குழந்தைக்கும் வசதி, பெத்தவங்களுக்கும் வசதி இந்த ஸ்ட்ராலர்கள்.. எதோ ஒரு டைம் குழந்தை விழுந்ததைப் பார்த்தாராம்.. பாசம் இல்லைன்னு கோவம் வந்துடுச்சாம்.. அடங்கு மாமேய்!
அய்யோ பாவம்..
( அந்த குழந்தையும் ,,, இப்படி ஒரு பதிவு போட்ட நீங்களும்)
:)
குசும்பா பதிவுகள் போட்டுட்டு நடுவில் ஒரு கோபமா பதிவு போடனும்ன்னு வேண்டுதலா...
Post a Comment