Saturday, July 28, 2007

வேக்கன்சி - விமர்சனம்

ஐந்தே ஐந்து பேர் + ஒரு மோட்டலில் ஒரே ஒரு ரூம் இதை வைத்து என்ன செய்யமுடியும்,என்று நிர்மோட் அன்டெல் (இந்த படத்தின் டைரக்டர்)யிடம் கேட்டால் உங்களை பயப்படும் படி படம் எடுக்க என்னால் முடியும் என்று சொல்வார் போல் இருக்கிறது.

நள்ளிரவில் நெடுந்தொலைவு பயனிக்கும் லக் வில்சனும் (ஹீரோ) கேட் பெக்னீசல் (ஹீரோயினும்) வென்ஹெல்சிங், அன்டர் வேர்ல்ட் படங்களில் நடித்தவர்.


பாதி தூரத்தில் மலை பாதையில் போகும் காருக்கு குறுக்கே பூனை ஓடி வர சடன் பிரேக் போட்டு நிறுத்திய அவர்கள் நம்ம டைரக்டர் சங்கருக்கு போன் போட்டு இனி பயனத்தை தொடரலாமா கூடாதா என்று கேட்டு இருந்தால் அவர்கள் அத்தனை பெரிய பிரச்சினையில் மாட்டி இருக்க மாட்டார்கள்.

கேஸ் நிரப்ப ஒரு மோட்டலில் நிறுத்துகிறார்கள்அங்கு வண்டியை சரி செய்யும் அவர்கள் கையில் மத்தா"ஆப்பு" ஒன்றை கொடுத்து அனுப்புகிறான் மெக்கானிக் கொஞ்ச தூரம் போன கார் ரிப்பேர் ஆகிவிட திரும்பவும் மோட்டலுக்கு வருகிறார்கள், அங்கு ரூம் எடுத்து தங்கும் அவர்கள்அறையின் கதவை தட தட என்று தட்டும் சத்ததில் அவர்கள் மட்டும் அல்ல நாமும் கொஞ்சம் அரண்டு தான் போகிறோம்.


அறையில் இருக்கும் டீவியை போட அது வேலை செய்யாததால் அங்கு இருக்கும் V.C.R ல் (நம்ம C.V.R அல்ல) கேசட்டை போட அந்த அறையில் அதற்கு முன் தங்கி இருந்தவர்கள் எப்படி கொலை செய்யபட்டார்கள் என்பது ஓடுகிறது, அடுத்து நாம் தான் என்றும் அவர்களுக்கு தெரிய வருகிறது, அறை முழுவதும் கேமிராவால் கண்கானிப்பது தெரிந்தவுடன் மேலும் கலவரமாகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகின்றன.

கொல்பவர்கள் யார் ஏன் கொல்கிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து "கொல்லு"ங்கள்.

ஆரம்பத்தில் சுமாராக போகும் படம் போக போக வேகம் எடுக்கிறது.
படம் முழுவதும் இருவர் மட்டுமே வந்தாலும் அதன் பாதிப்பு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அருமையாக போர் அடிக்காமல் என் பணி உங்களை பயமுறுத்துவது மட்டுமே என்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார் டைரக்டர்.


ரொம்ப வித்தியாசமான, அதிகமான கிராப்பிக்ஸ், தலைவலிக்கும் படி சத்தம், மிக பிரம்மாண்டம் அப்படி ஏதும் இல்லாமல் அழகாக எடுத்து இருக்கிறார். பாதி நேரம் மீயுசிக் இல்லாமல் இருப்பதே நம்மை கலவரப் படுத்துகிறது. மீதி நேரம் நம்மை பயமுறுத்துவதும் மியுசிக் தான்.

படத்தை மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்பது நல்லது.

10 comments:

said...

\\றையில் இருக்கும் டீவியை போட அது வேலை செய்யாததால் அங்கு இருக்கும் V.C.R ல் (நம்ம C.V.R அல்ல) \\

சித்தஆப்பு உங்க அடுத்த ஆப்பு சி.வி.ஆர்க்கு தானா? சொல்லவேல்ல ;-)))

said...

//பாதி நேரம் மீயுசிக் இல்லாமல் இருப்பதே நம்மை கலவரப் படுத்துகிறது.

படத்தை மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்பது நல்லது.// பாதி நேரம் மியூசிக் இல்லாதப் படத்த ஏன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்க்கணும்? திகில் படத்தை திகிலோடு எழுதியிருந்தால் பார்க்க ஆவலாக இருந்திருக்கும். அதையும் இப்படிலாம் காமெடி செய்து விமர்சித்தால் எப்படிப்பா பார்க்க தோணும். நல்லா இருங்க :-)

said...

"அதையும் இப்படிலாம் காமெடி செய்து விமர்சித்தால் எப்படிப்பா பார்க்க தோணும். நல்லா இருங்க :-) "

மீதி இருக்கும் பாதி மீயுசிக்கால் நம்மை பயமுறுத்துகிறார் அதனால் தான் நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியட்டரில் பார்கனும் என்று சொன்னேன். காமெடி செய்யவில்லை.

said...

கோபிநாத் said...
"சி.வி.ஆர்க்கு தானா? சொல்லவேல்ல ;-))) "

யார் ஆப்பு வைப்பவர், யாரிடம் பேசுகிறீர்கள் கோபி.

Anonymous said...

கதை என்னாச்சு?/?? பேயா??

said...

தூயா [Thooya] said...
கதை என்னாச்சு?/?? பேயா??

இன்னும் இரண்டு வரி சொன்னால் கதை விளங்கி விடும் என்பதற்காக தான் படத்தின் கதை பற்றி ஏதும் சொல்லவில்லை, சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும்.

பேய் படம் அல்ல! திரில்லர்

said...

இன்னும் இரண்டு வரி சொன்னால் கதை விளங்கி விடும் என்பதற்காக தான்
//

க்கும் பார்த்தா மட்டும் புரிஞ்சுடுமா என்ன..?


அம்புட்டு அறிவாளியா என்னை நினைத்தால் நான் என்ன சொல்வது..:(

said...

மின்னுது மின்னல் said...
"அம்புட்டு அறிவாளியா என்னை நினைத்தால் நான் என்ன சொல்வது..:("

சந்தேகமே இல்ல சித்தப்பு நீ அறிவாளிதான் சும்மா இருந்த அய்ஸ தூண்டி பேச விட்டு ரெக்காட் செஞ்ச நீ அறிவாளி இல்லாம என்ன ராசா?

said...

படம் சூப்பர்

said...

எலே உன் சேர்க்கை சரியில்ல.. இது திகில் படம் ஓகே விட்டுடலாம். அடுத்ததா எதாச்சும் சைபீரிய, ரஷ்ய,ப்ரான்சு மொழி கலைப்படங்களை பாத்துட்டு அதுக்கும் காமெடியா விமர்சனம் எழுதிடாத குசும்பா!

அய்யனார் ஆட்டோல வந்து அடிப்பாரு.