Sunday, April 5, 2009

சொடலையின் லீலை

அவன் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் எம்.ஜி.ஆர் பேசுவது போல இருக்கும், சொடலை என்கிற அவன் பெயரை சொதலை என்றுதான் சொல்வான் இருபது வயது ஆன அவன். பேச்சு கொஞ்சம் சரியாக வராது. ட வரிசை சுத்தமாக வராது ட வரும் இடத்திலும் மற்றும் பல இடங்களில் எல்லாம் "த" வரிசைதான்.

உடல் உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்காது,வீட்டில் கடைசியாக பிறந்தவன் என்பதாலும் ஒரே ஆண் மகன் இப்படி பிறந்துவிட்டானே என்று இவன் அம்மா வேண்டாத கோயில் இல்லை போகாத அரசு மருத்துவமனை இல்லை கடைசியாக காதில் போட்டு இருந்த கம்மலை விற்று சென்னை போய் வந்த பிறகு இனி விக்க ஒன்று இல்லை என்று ஆன பிறகுதான் அவள் பஸ் ஏறுவது நின்றது.இப்பொழுது கம்மல் இருந்த இடத்தில் கவரிங் தோடு போட்டு பார்த்து ஒத்துக்காமல் ஓட்டை துந்துவிடாமல் இருக்க ஓட்டையில் ஒரு வெளக்கமாத்து குச்சு சொருகி இருக்கும் தங்கமாள் தான் அவன் அம்மா!

ஒழுங்கா வேலை செய்யும் ஆட்களுக்கே என்பது ரூபாய் சம்பளத்துக்கு அறுபது ரூபாய் கொடுக்கும் கருப்பையா பண்ணையில் தான் வேலை இவனுக்கும் இவன் குடும்பத்துக்கும்.இவனுக்கு வேலை என்றால் சும்மா உப்புக்கு சப்பாணி வேலை, முடியவில்லை என்றாலும் அடுத்தவர்கள் செய்யும் வேலையை தன்னாலும் செய்யமுடியும் என்று காட்டுவதற்காகவே, கஷ்டப்பட்டும் வேலை செய்ய முயற்சி செய்வான் சொடலை, நெல் அறுவடையின் பொழுது கதிர் அறுக்க போனால் மற்றவர்கள் பத்து அடி போனால் இவன் ஒரு அடியிலேயே நின்று, ஒரு கையில் பிடித்த கதிரை இன்னொறு கையால் மரம் அறுப்பது போல் அறுப்பான், இவன் உலுக்கும் உலுப்பில் பாதி நெல் கொட்டிவிடும், இருந்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள் மற்றவர்கள், அதுபோல் இரு கைகளாலும் சேர்த்து ஒன்றாக கீழே கிடக்கும் நெல்லை குவிக்கமுடியாது ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு பக்கம் நிற்கும்.எல்லோருக்கும் ஐந்து மரக்கா கூலி என்றால் இவனுக்கு இரண்டு மரக்கா கூலி! ”எநாதூ எக்கு மத்தும் இதண்து மரக்கா மத்...” மற்றவர்களுக்கு மட்டும் ஐந்து மரக்கா நெல் கொடுக்குறீங்க? என்று அவன் சொல்லி கேட்பதுக்கு கூட பொறுமை இல்லாமல் போதும், போதும் நீ கிழிச்ச கிழிக்கு என்று விரட்டிவிடுவார் கங்காணியார்.

அந்த சமயத்தில் அவன் கண்களில் தெரியும் தோல்வியோ அல்லது இயலாமையோ அதை வார்தைகளில் சொல்லமுடியாது.ஒரு முறை ரோட்டில் ஓஓஓஓன்னு அழுதுக்கிட்டு இருந்தவனை ஏன் என்று கேட்டேன் கீழே கிடந்த பொட்டுகடலையை காட்டினான். கைகளில் தோல் வயன்றிருந்தது போல இருந்தது, என்னடா என்று கேட்டதுக்கு ”அம்ம பொத்துகதலை வாங்கி வத சொன்னது கீதே போத்துத்தேன்” என்று சொன்னான் ஏன் டா கை எல்லாம் தேஞ்சு இருக்கு என்றதுக்கு,கீழே ஓரமாக கொஞ்சமே கொஞ்சமாக குவிஞ்சு கிடக்கும் பொட்டுகடலைய காட்டினான். இருவிரல்களால் பொறுக்கமுடியாததால் தர தரன்னு கைய தரையில் போட்டு தேச்சு குவிச்சு வெச்சு இருந்தது புரிஞ்சுது. சரி இது வேண்டாம் மண்ணாகி விட்டது வேறு வாங்கி தருகிறேன் என்று சொல்லி அழைத்து சென்று பொட்டு கடலையும், அவனுக்கு திங்க ஏதும் வேண்டுமா என்று கேட்டதுக்கு ஐந்து பைசாவுக்கு தேன் மிட்டாய் வேண்டும் என்றான்,அதை வாங்கி கொடுத்ததும் சந்தோசமாக சென்றான்.

அன்றில் இருந்து என்னை கண்டதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான் அண்ணே..! அண்ணே..! என்று!மற்றவர்கள் போல அலட்சியம் காட்டாமல் அக்கறையோடு பேசியதோ,அல்லது தேன்முட்டாயோ தெரியவில்லை! ரொம்ப பாசமாக இருக்க ஆரம்பித்தான், சில நேரங்களில் நண்பர்களோடு இருக்கும் பொழுது அவன் பேசுவது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்,ஒரு சமயம் அவனை கிண்டல் செய்ததை நான் கோவமாக திட்டியதில் இருந்து அவர்களும் இவனை கிண்டல் செய்வதை நிறுத்தினர்.

ஒரு முறை அவனிடம் என்ன வேலைக்கு போய் வருகிறாய்..? என்றேன். அவனும் “என்ண்ணா பாத்தாஆ தெயில சொங்கல் சூளைக்கு” என்றான். தெரியலை என்றேன்.பின் அடுத்த நாள் வரும் பொழுது செங்கல் பொடியில் விழுந்து பிரண்டது போல் சிகப்பாக வந்து நின்றான், சொடலை சொல்லமலேயே நான் செங்கல் சூளைக்கு போய் வருகிறாயா..?என்றதும் ரொம்ப சந்தோசம் தானும் வேலை செய்ததை சொல்லாமல் கண்டு பிடித்தது அவனுக்கு பெருமையாக இருந்திருக்கவேண்டும், அதுபோல் ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு மாதிரி வந்து நின்றான், சாந்து வேலை என்றால் சேறோடு,எரு அடிப்பது என்றால் சாணியோடு இப்படி எந்த பாகுபாடும் கிடையாது,அவனை பார்த்ததும்என்ன வேலைக்கு சென்று வருகிறான் என்பதை கண்டுபிடிப்பதே அன்று அவன் வேலை செய்ததுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆனது.அதனால் எந்த வேலைக்கு சென்றாலும்அதன் மேல் ஒரு முறை விழுந்து புரண்டுதான் வருவான்.

ஒரு நாள் நண்பர்களோடு நான் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது ஓடி வந்தான்; வந்தவன் ”அண்ணே னேத்து பண்ணஆரும் நதவாள் அமுடாவும் மோத்தார் செத்துக்குள்ளமுண்தகத்தையாக கிதந்தார்கள்” என்று சொன்னதும் அவன் என்ன சொல்லவருகிறான் என்று எனக்கு புரிந்தது பண்ணையார் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி என்று பலர் சொல்லி கேள்விப்பட்டு இருந்ததால் அவன் சொன்னது டக்கென்று புரிஞ்சது , மற்றவர்கள் என்னது ”முண்தகத்தையா” அப்படின்னா என்றார்கள் அம்மன குண்டியாக என்று சரியாக சொல்லி புரியவைத்தான், டேய்..! சும்மா எல்லாரிடமும் சொல்லிக்கிட்டு இருக்காத பேசாம போ.. என்று சொன்னதும் ஏன்னா..! என்றான், போடா பேசாம போ..! என்றேன் கோவமாக.

இருதினங்கள் கழித்து பண்ணையார் வீட்டு செப்டிக்டேங்கில் குப்புற படுத்த நிலையில் மிதந்தான் அம்மணகுண்டியாக சொடலை, லூசு பய சுத்தம் செய்யுடா..! என்றேன் டவுசரையும் அவுத்து வெச்சுட்டு குதிச்சு இருக்கான் பாரு லூசு பய என்றார் பண்ணையார். கட்டி தூக்க கயிறு எடுக்க உள்ளே சென்ற பொழுது பண்ணையார் கட்டில் கீழே கிடந்தது சொடலையின்
கிழிந்த காக்கி டவுசர்.

சில மாதங்களில் எனக்கு பெங்களூரில் வேலை கிடைக்க குடும்பம் முழுவது பெங்களூருக்கு மாற்றம் ஆனது. வருடத்துக்கு ஒரு முறைமட்டும் அப்பா போய் வீட்டை எல்லாம் பார்த்துவிட்டு வருவார். எட்டு வருடங்களுக்கு பிறகு இன்றுதான் கோயில் திருவிழாவுக்கும் அண்ணன் மகள் காது குத்து விசேஷத்தை குல தெய்வ கோவிலில் வைக்கவேண்டும் என்பதாலும், ஊருக்கு நான் வர நேர்ந்தது.

துர்ர்ர் துர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொடலை போலவே ”டு” வராத அதே போல் உடல் அசைவுகளோடு ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருந்தான்! அச்சு அசலாக சொடலை தெரிந்தான்..!

யார் இவன் என்று கேட்டதுக்கு அவன் பண்ணையாரின் மகன் என்று மாரி சொன்னான்.

நான் சிரித்தேன் அதன் அர்த்தம் புரியாமல் மாரி விழித்தான்!

37 comments:

said...

sabaash!

Anonymous said...

மணிக்கு ஒரு பதிவு போடும் குசும்பனை கண்டிக்கின்றோம்

said...

ஹேய்... கலக்கல் குசும்பா :-)

said...

really a touching story

said...

சொடலையின் உடல்மொழியை பற்றிய விவரிப்பு நேரில் காண்பது போல இருந்தது. தங்கம்மாள் காதில் செருகியிருக்கும் ஈர்க்குச்சி, சொடலை வேலை செய்துவிட்டு வந்திருப்பதை கண்டுணரும் பாங்கு என்று நல்ல விவரணம்.

மிக முக்கியமாக இவனைப்பற்றி மனதில் தாழ்வு மனப்பான்மை கொண்டு வராத எழுத்து சாத்தியப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் மாத்திரம் சொல்வது உன் விஷயத்தில் கடினம் என்பது மீண்டும் நிரூபணமாகிறது..!!

said...

நன்று

said...

:-))

said...

சபாஷ்..

said...

//நான் சிரித்தேன் அதன் அர்த்தம் புரியாமல் மாரி விழித்தான்!//
நானும் சிரிக்கிறேன். ஆனால் பாவம் அப்பன் செய்த தவறுக்கு இன்னொரு சொடலை வாழ்க்கையில் சிக்கி சீரழியப் போகிறானோ என்று கூடவே கவலையும்.
சின்ன வயதில் படித்த இது போன்ற சிறு கதை நினைவுக்கு வருகிறது.

said...

துர்ர்ர் துர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொடலை போலவே ”டு” வராத அதே போல் உடல் அசைவுகளோடு \\ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருந்தான்! அச்சு அசலாக சொடலை தெரிந்தான்..!

யார் இவன் என்று கேட்டதுக்கு அவன் பண்ணையாரின் மகன் என்று மாரி சொன்னான்.\\

சொடலை பெரிய ஆள்தான்...

said...

சிறுகதைக்கான தரம் மிளிர்கிறது.கூடவே நிகழ்வுகள் உண்மையைப் பிரதிபலிக்கின்றது.

said...

ஒரு அருமையான சிறுகதை தலைவா

said...

அருமை குசும்பா!


//உடல் உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்காது,வீட்டில் கடைசியாக பிறந்தவன் என்பதாலும் ஒரே ஆண் மகன் //


கிராமத்துக்கு ஒரு ஆண் இந்த மாதிரி இருப்பது என்ன ஒரு சாபக்கேடோ...?

said...

நல்லாயிருக்குண்ணே ;)

\\சில மாதங்களில் எனக்கு பெங்களூரில் வேலை கிடைக்க குடும்பம் முழுவது பெங்களூருக்கு மாற்றம் ஆனது. வருடத்துக்கு ஒரு முறைமட்டும் அவன் அப்பா போய் வீட்டை எல்லாம் பார்த்துவிட்டு வருவார். \\

அண்ணே ஒரு டவுட்டு இதுல அவன் அப்பா அப்படின்னு சொல்றிங்களே அந்த அவன் யாரு!??

எட்டு வருடங்களுக்கு பிறகு இன்றுதான் கோயில் திருவிழாவுக்கும் அண்ணன் மகள் காது குத்து விசேஷத்தை குல தெய்வ கோவிலில் வைக்கவேண்டும் என்பதாலும், ஊருக்கு அவன் வர நேர்ந்தது.
\\

இங்கையும் அதே டவுட்டு அந்த அவன் யாரு...புரியல தயவு செய்து விளக்கவும்.

said...

இன்னும் படிக்கலை தல

:)

said...

கதை நன்கு உள்ளது இரசித்தேன்..

அட நமிதா இங்கயும் வந்திட்டு....

said...

அருமைங்க.... இது புனைவா இல்ல நிஜமா?

said...

அருமை!

said...

பிரமாதம்..

said...

இங்கையும் அதே டவுட்டு அந்த அவன் யாரு...புரியல தயவு செய்து விளக்கவும்.
//


பதிவ படிச்சமா பின்னுட்டம் போட்டமானு இல்லாம என்னயிது சின்னபிள்ளதனமா..?

said...

//துர்ர்ர் துர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொடலை போலவே ”டு” வராத அதே போல் உடல் அசைவுகளோடு ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருந்தான்! அச்சு அசலாக சொடலை தெரிந்தான்..!//

பண்ணையார் வெளில செஞ்ச லீலைய சொடலை அவர் வீட்டிலேயே காட்டிட்டானா :-)? இருந்தாலும் கதைக்கு "சொடலையின் லீலை"ன்னு பேர் வச்சிருக்க வேண்டாம், வேற எதாவது வச்சிருக்கலாம்.

said...

அட உங்கள்ளுக்கு இப்படியும் கதை எழுத வருமா

said...

200 அடிச்சாச்சு போல வாழ்த்துக்கள்

said...

நல்ல கதை குசும்பரே!

said...

ராஜா said...

பண்ணையார் வெளில செஞ்ச லீலைய சொடலை அவர் வீட்டிலேயே காட்டிட்டானா :-)? இருந்தாலும் கதைக்கு "சொடலையின் லீலை"ன்னு பேர் வச்சிருக்க வேண்டாம், வேற எதாவது வச்சிருக்கலாம்.

பாருங்க எப்படில்லாம்
புரிஞ்சிக்கிறாங்கன்னு........

said...

முடிவு மட்டும் கொஞ்சம் நன்றாய் இருந்திருக்கலாம். ஏதோ சட்டென்று முடிந்துவிட்டது போலிருக்கிறது.

said...

அருமை.. அருமை..
வித்தியாசமான முயற்சி..

said...

கதை சொல்லிய பாங்கு சிறப்பாக இருந்தது.

said...
This comment has been removed by the author.
said...

ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!


நெம்போ டச்சு பண்ணி போட்டீங்கோ தம்பி......!!! ஆவ்வ்..!! ஆவ்வ்....!! ஆவ்வ்....!!


ஏனுங்கோ தம்பி.....!! உங்கூருல இன்னுமா பண்ணையாரு கொடும தீருல......???

ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!! நீங்கோ நெம்போ நல்லவருங்கோ தம்பி..........!!!!

அடுத்த தடவ இந்தியா வந்தீங்கன்னா .. மறக்காம ஈரோட்டுக்கு வாங்கோ தம்பி....!!
இந்த மேடி அண்ணன் சந்தைக்கு கூட்டிட்டு போயி குச்சி முட்டாயும்.. காக்கா ரொட்டியும் வாங்கி தரமுங்கோ தம்பி....!!! அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!!!!

said...

நம்ம சொததை பண்ணயாத வித கில்லாதியா இதுந்துதுக்கான். கத நெதமாவே தூப்பதா இதுந்துச்சி நல்ல முதிவு. கீப் இத் அப்பு.

said...

கலக்கல் குசும்பா??

said...

நண்பா,
நெகிழ்சியான பதிவு.
மிக அருமையா, மிக நேர்த்தியான வகையில் கதைய வழிநடத்தியிருக்க.
உடல் ஊனத்த கேவலப்படுத்தாம விவரிச்சதுக்கு ஒரு வாழ்த்து.

நீ இனிமே அடிக்கடி கதையும் எழுது மாப்ள.

said...

கதை மாதிரியே தெரியால.
ரொம்ப இயல்பாக இருக்கிறது.
நல்ல முயற்சி.

said...

simply superb!

said...

♥ தூயா ♥ Thooya ♥ said...
மணிக்கு ஒரு பதிவு போடும் குசும்பனை கண்டிக்கின்றோம்

//

haa haa

said...

நன்றி ரமேஷ் வைத்யா அண்ணாச்சி

நன்றி தூயா:)

நன்றி சென்ஷி

நன்றி கார்த்திக்

நன்றி புலி

நன்றி கும்க்கி

நன்றி கார்க்கி

நன்றி சுல்தான்

நன்றி அறிவே தெய்வம்

நன்றி ராஜ நடராஜன்

நன்றி ஆயில்யன்

நன்றி சுரேஷ்

நன்றி கோபி

நன்றி நமிதா

நன்றி விக்கி

நன்றி Mahesh புனைவுன்னா?:)) இது கற்பனைகதை:)


நன்றி Sundar


நன்றி அறிவிலி

நன்றி ராஜா

நன்றி தர்ஷன்

நன்றி ஜெஸிலா

நன்றி கேபிள் சங்கர் சும்மா முதல் முயற்சிதானே போக போக கரெக்ட் செஞ்சுடுவோம்:)

நன்றி லோகு

நன்றி மஞ்சூர் ராசா

நன்றி லவ்டேல் மேடி

நன்றி thanjai gemini

நன்றி அகமது சுபைர்

நன்றி ஜோசப் பால்ராஜ்

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி Poornima Saravana kumar