மச்சான் டேய் இன்னைக்கு நைட் நம்ம கோழி இருக்கான்ல அவன் புது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி தருகிறான் வாடா நைட் நம்ம உலக்கை வீட்டுல எல்லோரும் ஊருக்கு போறாங்க அங்க வந்துடு என்று சொல்லிவிட்டு போவான்.
சரக்கு சைடிஸ் எல்லாம் வந்ததும் கிளிங் சத்தத்தோடு உற்சாகமாய் ஆரம்பிக்கும் பார்ட்டி. பேச்சுகள் மச்சான் அந்த மாலதி இருக்காளே அவ என்ன ஒரு மாதிரி பாக்குறாடா! டேய் அவளே ஒரு மாதிரிதான் போடா போ என்று எதிர் குரல் விட, போடா உன்னைய ஒருத்தியும் லுக்கு விடமாட்டேங்கிறான்னு காண்டு என்று பிகரில் ஆரம்பிக்கும் பேச்சு, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுதி ஏறி டேய் மச்சான் அந்த பக்கத்து வீட்டு ஆண்டி இருக்குல்ல அதோட போன வாரம் என்று விவரிக்கும் பொழுது கிளு கிளுப்படையும். எல்லோரும் ஆர்வமாய் கதை கேட்பார்கள்.
அடுத்து எல்லா பார்ட்டியிலும் அஞ்சலைய நினைச்சு அழும் சூர்யா போல் ஒரு பெக் அடிச்சதும் ஓடி போன பழய காதலி நினைவு வந்து ஒப்பாரி வைக்கும் படலமும் நடக்கும். மச்சான் அவள எவ்வளோ சின்சியரா லவ் செஞ்சேன் தெரியுமாடா? என்னை அவ புரிஞ்சுக்கலடா! என்னை அவ கல்யாணம் செஞ்சிருந்தா , "இந்தா இந்தா இப்படி இப்படி உள்ளங்கையில் வெச்சு தாங்குவேண்டா" அவளை என்று குடிச்சுக்கிட்டு இருக்கும் பீர் பாட்டிலை கீழே வெச்சு உள்ளங்கைய காட்டிக்கிட்டு இருப்பான், உள்ளங்கையில் ஒரு சிக்கன் பீஸ் வெச்சதும் அப்படியே எரிக்கும் பார்வை பார்ப்பான். டேய் என்னா டா ஓவரா சலம்புற நான் கூடதான் லவ்வினேன் போய்டா அதுக்கு நான் என்ன பொட்டையாட்டம் அழுதுக்கிட்டா இருக்கேன் போடா போ எங்களுக்கு வலி இல்லை இவருதான் பெருசா லவ் செஞ்சாராம் என்று சொல்லிக்கிட்டே ஓ வென்று ஆரம்பிக்கும் அடுத்த பார்ட்டி. மச்சான் டேய் பாருடா நாம ஜாலியா இருக்கதானே கோழி ஜட்டி வாங்கினதுக்குன்னு பார்ட்டி கொடுக்கிறான் இப்படி அழுதா கஷ்டமா இருக்குல வாடா வா சீக்கிரம் முடி அந்த ரவுண்டை என்று அவனை ஒரு வழியா தேத்தி அடுத்த பெக் ஆரம்பிக்கும் பொழுது அடுத்தவன் ஆரம்பிப்பான்.
அடுத்து ஒரு மூடிய குடிச்சதுமே பாட்டு பாட ஆரம்பிக்கும் படலம் அதில் எப்பவும் குண்டன் ஆரம்பிப்பான் ”வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை” என்று பழய பாட்டா பாட ஆரம்பிப்பான், டேய் மச்சான் அப்படி பாக்காத டா எனக்கு போதை இல்லை சும்மா ஜாலிக்கு பாடுறேன்.. பாரு நான் எவ்வளோ ஸ்டெடியா இருக்கேன் என்று டக்கென்று நின்னுக்கிட்டு பெண்டுலம் மாதிர் ஆடிக்கிட்டே, பாருடா நான் ஸ்டெடியா இல்லையா என்பான். சரி டா சரி நீ ஸ்டெடிதான் மச்சான் என்று அவனை அமுக்கி போட்டு விட்டு அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கும்.
டேய் பாருடா இவன் சிக்கன் சாப்பிட்ட கையோட என் சைடிஸ் பிளேட்டில் கைய வெச்சு மிக்ஸர் எடுக்கிறான் என்று புகார் கொடுப்பான் ஐயர். டேய் ஐய்யரே அதான் பீர் குடிக்கிறீல்ல அப்படியே ஒரு சிக்கன் பீஸை உள்ள விட்டா என்ன என்று அவனை சீண்டும் படலம் ஆரம்பம் ஆகும். பொருத்து பொருத்து பார்த்துவிட்டு டேய் உனக்கு முதலிரவில் உனக்கு ஸ்டார்டிங் டிரபுள் வரும் டா என்று ஹைடெக் சாபம் விடுவான். அதெல்லாம் சுத்தமான ஐயர் சாபம் தான் பலிக்கும் நீ டூப்ளீகேட் ஐய்யர் அதனால பலிக்காது போடா என்று அவனை சீண்டுவதும் அதுக்கு அவன் திரும்ப டென்சன் ஆவதும் என்று ஓடிக்கிட்டு இருக்கும்.
டேய் மச்சான் இத்தனை ரவுண்ட் அடிச்சும் நான் எவ்வளோ ஸ்டாராங்கா இருக்கிறேன் பாரு என்று நான் சொல்லும் பொழுது அப்படியே ஒரு டெரரர் லுக் விடுவானுங்க சரி சரி மிக்ஸிங்க்கு அந்த வாட்டர் பாட்டிலை எடு என்று மிக்ஸ் செஞ்சு ஒருமடக்கில் குடிச்சுட்டு தலைய உலுக்கி ஸ்ஸ்ஸ்ஸ் அந்த சிக்கன் பீஸை எடுடா என்றதும் அப்படியே திமு திமு திமுன்னுபோட்டு சாத்துவானுங்க. நாயே குடிப்பது பெப்ஸி அதுக்கு மிக்ஸிக்குங்கு தண்ணி அதோடு சிக்கன் பீஸுமா டேய் குடிக்கிற நாங்களே இதுவரை ஒரு சிக்கன் பீஸ் தான் சாப்பிட்டு இருக்கோம் இதோட நீ சாப்பிட்டது நாலுடா , டேய் ரொம்ப ஓவரா போர மகனே இனி சிக்கன் பீஸ்ல கைய வை கைய வெட்டுறேன் என்று மிரட்டல்.அதுக்காக நான் சைடிஸ் சாப்பிடுவதை விட மாட்டோம்!
அடுத்து கடைசியா வாமிட் எடுக்கும் படலம். நம்ம மக்களுக்கு தண்ணி அடிச்சுட்டு வாமிட் எடுப்பது என்பது சூப்பர் பிகருங்களுக்கு மத்தியில் சத்தமா டுர்ர்ர்ர்ர்ர் விடுவதற்கு சமம். டேய் ஏன் டா அதுக்குள்ள எழுந்திருச்சுட்ட எங்கே டா போற என்ற கேள்விகளுக்கு சைகாயாலே ஒன்னுக்குன்னு சொல்லிக்கிட்டு பாத்ரூம் போய் அங்க யாருக்கும் தெரியாமல் வாமிட் எடுக்க சத்தம் கேட்டு டேய் இங்க பாருடா கழுதை கக்கூஸ் போற மாதிரி நம்ம பழம் சவுண்ட் கொடுத்துக்கிட்டு வாந்தி எடுக்கிறான், என்ன மச்சான் நீ ஒன்னுக்கடிச்சா மட்டும் உவ்வே உவ்வேன்னு சவுண்ட் வருது? மச்சான் வாழ்த்துகள் அப்பா ஆக போறீயா டா என்று வெளியே வந்தவனை சீண்டுவானுங்க, டேய் இதுவரை என் லைப்பில் இதுதான் பர்ஸ்ட் டைம் வாமிட் எடுக்கிறது, அந்த சைடிஸ் ரொம்ப ஆயில், அதோட ரெண்டு பிராண்ட் மிக்ஸ் செஞ்சது ஒத்துக்கலை என்று சாமாளிபிகேசன் நடந்துக்கிட்டு இருக்கும்பொழுதே அடுத்த ஆள் உவ்வே... டேய் இவன் ஒரு மோந்து பாத்தாலே பிளாட் ஆவும் ஆள் இவனுக்கு எவன் டா ஊத்திக்கொடுத்தது என்று பேசிக்கிட்டே இடத்தை சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கும் பொழுது எல்லாம் ஒவ்வொரு ஆளும் அப்படியே இருக்கும் இடத்திலேயே பிளாட் ஆகும்.
காலையில் எழுந்ததும் மச்சான் ஸ்மெல் வருதா பாரு என்று குளேசப் விளம்பர மாடல் மாதிரி ஊதி ஊதி பாத்துக்கிட்டு இருப்பானுங்க. டேய் பாருடா இந்த நாதாறி இங்கயே வாமிட் எடுத்து வீட்டை நாறடிச்சு இருக்கிறான் என்று வீட்டுக்காரன் சத்தம் போட, சுத்தம் செய்ய கொடுத்துவெச்சு இருக்கனும் என்று வாமிட் எடுத்தவன் தலைய சீவிக்கிட்டே...சரி சரி ஒழுங்கா துடைச்சு வை நைட் வருகிறோம் என்று அலப்பறைய கொடுத்துக்கிட்டு முடியும் பார்ட்டி.
இங்கு என்னதான் நண்பர்களோடு ஹைடெக் பாருக்கு போனாலும் அந்த சந்தோசம் வரமாட்டேங்குது.
Thursday, April 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
\\இங்கு என்னதான் நண்பர்களோடு ஹைடெக் பாருக்கு போனாலும் அந்த சந்தோசம் வரமாட்டேங்குது. \\
அண்ணே ஒரு டவுட்டு இந்த பதிவுக்கும் உங்களுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா!!!? ;)
பார்ட்டி அப்படின்னா வாழையிலையில சோறு போடுவாங்களே அதானேனு கேட்குற ஆளு நீங்க...அதான் டவுட்டு ;)
தம்பி கோபி மறந்துவிட்டாயா என் ரூமில் நடந்த பார்ட்டியை! எப்படி நானும் அதில் கலந்துக்கிட்டு ஒரு கோக்கை முழுவதும் ராவாக அடிச்சுவிட்டு உங்க எல்லோருக்கும் முட்டை பொறியல் தோசை எல்லாம் செஞ்சு கொடுத்தேனே:(( மறந்துவிட்டாயா?
// உங்க எல்லோருக்கும் முட்டை பொறியல் தோசை எல்லாம் செஞ்சு கொடுத்தேனே:(( மறந்துவிட்டாயா?//
அவுங்களும் பதிலுக்கு ஆம்லேட் போட்டாங்களாம்ல அதை சொல்லவே இல்ல :)))
//அடுத்து ஒரு மூடிய குடிச்சதுமே பாட்டு பாடா ஆரம்பிக்கும் படலம் அதில் எப்பவும் குண்டன் ஆரம்பிப்பான் ”வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை” என்று பழய பாட்டா பாட ஆரம்பிப்பான்///
அடப்பாவிகளா!
அந்த சிச்சுவேஷனுக்கு அந்த பாட்டா பாடியிருக்கீங்க ஹய்யோ ஹய்யோ
என்னோட ப்ரெண்ட்ஸெல்லாம்
குத்தடி குத்தடி ஜைனக்கா
குனிஞ்சு குத்தடி ஜைனக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
இதுல்ல பாடுவானுங்க :))
உங்க சுவத்துல நம்ம கதிர் தம்பி ஓவியம் வரைஞ்சானாமே - வாயாலேயே. அதயா சொல்லுதீங்க?
அய்ய்னார் கூட தலைகீழா நடக்குறது சுலபம்னு சொல்லிட்டு அகோரி சாமியார் மாதிரி தலைகீழா நின்னாராமே? அதச் சொல்றீங்களா?
என்னமோ போஙக்டே! நலலா இருந்தா சரிடே!!
பாஸ் நண்பர்கள் நம்மளை (நோட் பண்ணியிருப்பீங்க!) மாதிரி நல்லவங்க கிட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கும் படலம் அரங்கேறுவதும் (பின்னே அம்புட்டு திட்டு வாங்கியிருப்போம்ல!)
அதை நாம் ப.சிதம்பரம் ஸ்டைலில் சிரித்துக்கொண்டே தவிர்ப்பதும் பத்தி சொல்லவேஏஏஏஏஎ இல்ல!
ம்.. இந்தக் குசும்பன் இன்னும் எத்தனை பேரை மாட்டிவிடப் போறானோ..?
எப்படிய்யா இவனை பக்கத்துல வைச்சுக்கிட்டு சமாளிக்கிறீங்க..?
அய்யனாரை அகோரியாக நினைத்துப் பார்த்தேன் :))))))
குசும்பா, அப்ப வெறும் கோக்/பெப்சி பார்ட்டியா நீ!
'கலக்கல்' பதிவு
அனுஜன்யா
எங்க பசங்க தண்ணி அடிக்கும் போது ஒக்காந்து பாத்த மாதிரியே எழுதியிருக்கீங்க!
superb nanbaaa
:))
மலரும் நினைவுகளை மறுபடியும் ஞாபகப்படுத்திட்டெயே நீ உருப்படுவியா?
\\ நம்ம மக்களுக்கு தண்ணி அடிச்சுட்டு வாமிட் எடுப்பது என்பது சூப்பர் பிகருங்களுக்கு மத்தியில் சத்தமா டுர்ர்ர்ர்ர்ர் விடுவதற்கு சமம். \\
Unga comparison super :)).
//காலையில் எழுந்ததும் மச்சான் ஸ்மெல் வருதா பாரு என்று குளேசப் விளம்பர மாடல் மாதிரி ஊதி ஊதி பாத்துக்கிட்டு இருப்பானுங்க//
பேஸ்ட்ட திங்கிறதும் உண்டு..
ஆயிலு அது பெரிய சோக கதை!:)
அவரு பெரும் கத்துவான் பழய பாட்டா பாடி கொல்லுவான்:)
ஆசிப் அண்ணாச்சி தம்பி ஓவியம் வரைஞ்சது லியோ சுரேஷ் வீட்டில்!
நம்ம வீட்டில் வரைஞ்சது வேற ஒரு ஆள்!
அய்யனார் எப்பவுமே இப்படி பல வித போஸ் கொடுத்து அதையும் தொடர்ந்து பார்த்ததால் மனதுக்கு ஒரு விதமாக தாங்கும் சக்தி வந்துவிட்டது!
படிக்க சிரமமா இருக்கு குசும்பு.நான் விஷயத்த சொல்லல.ஸ்டைல மாத்தணும்.அப்புறம் போதுமான இடைவெளி விட்டு டைப்புனீங்கன்னா ரொம்ப நல்லாருக்கும்.எதோ தீஸிஸ் மாதிரி இருக்கு அமைப்புல.
நீங்க சொல்ற எல்லா கேரக்டரும் எங்க க்ரூப்ல உண்டு. எக்ஸ்ட்ராவா இன்னொன்னு... முதல் மூடிக்கு அப்புறம் ஃபுல் இங்க்லிபீஸ்தான்.
:))))
லேட்டா வீட்டுக்கு போற ஆட்கள்
ஹால்ஸ் வாங்கி கடிச்சு தின்னுட்டு, இரண்டு கடலை மிட்டாய் சாப்பிட்டு ஒரு பாஸ் பாஸ் மெனுட்டு ஊதி காட்டும் போது எல்லாம் சேர்ந்து வரும் பாருங்க ஒரு வாசம்...
:)))))
:-)
neenga theivam anne
மலரும் நினைவுகள் மறக்க இயலாதவை
// அடுத்து கடைசியா வாமிட் எடுக்கும் படலம். நம்ம மக்களுக்கு தண்ணி அடிச்சுட்டு வாமிட் எடுப்பது என்பது சூப்பர் பிகருங்களுக்கு மத்தியில் சத்தமா டுர்ர்ர்ர்ர்ர் விடுவதற்கு சமம். //
பிரண்டோட கல்யாணத்துக்கு போயிருந்தோம். லாட்ஜில மூணாவது மாடில தங்கிருந்தோம். நைட் ரூம்ல பாட்டில் பாட்டில அடுக்கி வச்சுருந்தாங்க. மப்பு மண்டைக்கு ஏற ஏற அப்பிடியே எல்லா பயபுள்ளயும் பிளாட், எதோ ஒரு கல்பிரேட் மூணாவது மாடியில இருந்து கீழ வாமிட் (பெரிய ஆறே இருந்த்தது) எடுத்துபுட்டான் காலையில விசாரனை ஆரம்புச்சு கடைசில தீர்ப்பு நம்மளத்தான் குற்றவாளி ஆக்கிபுட்டனுங்க. இதுல என்ன காமெடினா அன்னைக்கி நான் 7-UP மட்டுந்தான் குடிச்சேன். எந்த சுவத்துல போய் நான் முட்டிக்க.
கிகிகி...அட்டகாசமான பதிவு :)
போகிற போக்குல, அய்யனாரத்தான் எல்லோரும் டேமேஜ் பண்ணிட்டாங்க ;)
பழைய நினைவுகளை தூண்டிவிட்டு என்னை மீண்டும் டாஸ்மாக்கையும் என் நண்பர்களையும் தேடவைத்த குசும்பனுக்கு
65+10 ருபாய் அபராதம் விதிக்கிறேன்
உண்மைத் தமிழன் நன்றி
அனுஜன்யா அது என்னாது வெறும் கோக் பெப்சி பார்ட்டியா நீன்னு
ரொம்ப நெக்கல்! குடிக்கிறவங்க குடுக்கும் சேட்டைய அனுப்பவச்சா
அதை விட காமெடி ஊர் உலகில் இல்லை:)ஆமா அய்யனாரை ஏன் அப்படி நினைச்சு பார்க்கிறீங்க? பழசு எல்லாம் மறந்துவிடும்:)
டக்ளஸ் எல்லா பசங்களுக்கும் அப்படிதான் போல!
இரவு கவி எங்க ஆளயே காணும்?
நிஜமா நல்லவன் நன்றி
மஞ்சூர் ராசா நன்றி
கெஸ்மீ நன்றி
நர்சிம் ஆமாங்க கொய்யா இலை அது இதுன்னு தின்பார்கள்!
கும்க்கி அது ஏன்னு தெரியலை போஸ்ட் போடும் முன் வரை
ஒழுங்கா இருக்கு போட்ட பிறகு அலைன்மெண்ட் மாரி
கசமுசான்னு ஆயிடுது, சரி செய்கிறேன்.
அறிவில் அந்த இங்கிலீஸ் மேட்டர் யுனிவர்சல் ரூல்!
நாகைசிவா கருமம் கருமம்:)
சுரேஸ் நன்றி
செந்தில் நன்றி
சீனா நன்றி
விஷ்ணு ரொம்ப பாவம்ங்க நீங்க:)
பிரேம்குமார் நன்றி
தஞ்சை ஜெமினி ஊருக்கு வரும் பொழுது கவனிச்சுடுறேன்.
வேனாம் ஞாபகபடுத்தாத அழுதுடுவேன்..
Post a Comment