முதல் காதலியை மறக்கவும் முடியாமல் அவள் வேறு ஒருவன் மனைவி ஆன பிறகு அவளை நினைக்கவும் முடியாமல், அவளின் திருமண நாள் அன்று சாப்பிடவும் பிடிக்காமல் தூங்கவும் முடியாமல், அவளோடு சுற்றிய
இடங்களுக்கு திரும்ப போகும் பொழுது எல்லாம் அவளின் நினைவுகளும் அப்பொழுது பேசிய பேச்சும் நினைவுக்கு வந்து பாடாய் படுத்தும் பொழுது வரும் கண்ணீர் துளிகளும், எல்லோரும் காதலர் தினம் கொண்டாடும் பொழுது நான் மட்டும் இறந்த என் காதலுக்காக அஞ்சலி செலுத்த, கட்டிய
புது மனைவியோடு முதல் திருமணநாள் கொண்டாடுவது என்பது எத்தனை கொடுமை???
இப்படி எந்த கொடுமையும் இல்லாமல் முழுக்க முழுக்க சந்தோசத்தோடு திருமணநாளை கொண்டாடவைத்த இறைவனுக்கும் என் காதல் திருமணத்தில் முடிய பெரிதும் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
திருமணத்தன்று வந்து வாழ்த்திய நம் பதிவர்களுக்கு தெரியும் அன்று எத்தனை சந்தோசமாக இருந்தேன் என்று, அன்று போல் இன்றும் உணர்கிறேன் திரும்பவும் அதேபோல் உங்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
இருநாட்கள் விடுமுறை அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை பதிவு போட்டு வாழ்த்திய வடகரை வேலன் அண்ணாச்சி ,பரிசல், நாமக்கல் சிபி, புதுகை தென்றல், தூயா, சஞ்சய், புதுகை அப்துல்லா, சென்ஷி, ஜோசப் பால்ராஜ், சங்கமம் ,காயத்ரி (G3), கார்க்கி பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் ,போன் போட்டு வாழ்த்து சொன்ன மகேஷ், அப்துல்லா , G3 ஆகியோருக்கும், தனியாக மெயில் அனுப்பியும், கிரீட்டிங் கார்ட் அனுப்பியும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி நன்றி!
டிஸ்கி: ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே? என்ன கொடுமையா இது??? பதிவு எழுதி வாழ்த்து சொன்ன மக்கள் ஒவ்வொருவரும்
ஆளுக்கு 10000ரூபாய் வீதமும், பின்னூட்டத்தில் வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 5000ரூபாய் வீதமும், போன் போட்டு வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 2500ரூபாய் வீதமும் இவனுக்கு எதுக்கு இத்தனை வாழ்த்து பதிவு என்று நிச்சயம் டென்சன் ஆகியிருப்பார்கள் சிலர் அவர்களுக்கு சிறப்பு சலுகையாக 1000ரூ மட்டும் அனுப்பினால் போதும் அனைவரும் என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு அனுப்பிவிடவும்.
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
என்னோட பர்ஸ்ட் மொய்
10,000 ரியால்
வைச்சுக்கோங்க நண்பா சந்தோஷமா இருங்க :))))
கலெக்ட் ஆகுற மொய் பணத்துல தியாகி மஞ்சு அக்காவுக்கு ஒரு சிலை வச்சிடுங்க:)
உங்க வீட்டுக்கு ரொக்கமாக அனுப்பவா அல்லது..... ஆட்களிடம் கொடுத்து அனுப்பவா!
ஆமா உங்க வீடு எங்கே இருக்கு?
குசும்பா,
1 லட்ச ரூவா ஜிம்பாப்வே கரன்சியில எடுத்து வச்சிருக்கேன். இந்தியா வரும்போது சொல்லு. பாராட்டு விழா நடத்தித் தருகிறேன்.
:) இதெல்லாம் தெரியாம நாலு பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனே..
அய்யய்யோ எஸ்கேப்?!
:)
naanga mooyi kudukoom. neenga kalyana saapadu maathiri saapadu podanum ilaa
உங்க வீட்டு முகவரியான
6, விவேகானந்தர் தெரு...... விற்கு
5000 dirham அனுப்பி இருக்கேன்..
வந்து சேர்ந்துச்சா.....
வரலைன்னா, Emirates post அலுவலகத்தில் விசாரிக்கவும்......
:))))
வருகின்ற எல்லா பணத்தையும் சேர்த்து என்னோட பேங்க் டிரான்ஸ்பர் பண்ணிடுங்க தல
நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்
Wish you a very happy Anniversary!. Wish you both a long, happy , prosperous married life
பெரிய சைஸ் பதிவும், மேக்ஸிமம் எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமும், இண்டர்நேஷனல் எஸ்ஸெம்மெஸ்ஸும் அனுப்பிய எனக்கு சலுகை ஏதுமில்லையா குசும்பா?
//ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே? //
கல்யாணத்துக்கு கல்யாண சாப்பாடு போட்ட மாதிரி நீங்க கல்யாண நாளுக்கு சாப்பாடு போடலியே.. அதனால தான் நாங்களும் மொய் எழுதலை :P
இஃகி, இஃகி...
இன்னிக்கு எல்லோரும் மொய் வச்சுடுவாங்க...
ஆனால் நீங்க திரும்பவும் மொய் எழுதணும் இல்லையா, அதனாலத்தான் யாரும் மொய் வைக்கவில்லை.
அண்ணாச்சி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன் என்ன ஒன்னு தமிழ்மணத்துல வரல அம்புட்டுதான் அதுக்காக கண்டுக்காம விடப்பிடாது.
/
G3 said...
//ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே? //
கல்யாணத்துக்கு கல்யாண சாப்பாடு போட்ட மாதிரி நீங்க கல்யாண நாளுக்கு சாப்பாடு போடலியே.. அதனால தான் நாங்களும் மொய் எழுதலை :P
/
கன்னா பின்னாவென ரிப்பீட்டு
அண்ணாச்சி
மொய் தானே.... நம்ம நண்பர் ஒருவர் இருக்கிறார்
சொன்னால் 10,000 மறுமொழிகளை போட்டு விடுவார்
சொல்லட்டா :) :)
தல
நேத்து நான் உங்களக்கு கால் பண்ணேன் வாழ்த்து சொல்வதற்கு..
ஆனா ரிங் போய்கிட்டே இருந்துச்சு..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்....ஒரு வருஷம் கடந்துட்டீங்க..பெரிய ஆளு தான் போங்க..
இந்த வருடம் போல இனி வரும் எல்லா வருடமும் சந்தோஷமா அமைய வாழ்த்துக்கள்
மொய் வைக்க நான் ரெடி, ஆனா உங்க வீட்டுக்கு வந்து தான் வைப்பேன். எனக்கும் ரங்கமணிக்கும் துபாய்க்கு டிக்கெட் போட்டு மட்டும் குடுங்க. :)
ஆட்டோ அனுப்பியாச்சு!!!!!
அன்புடன் அருணா
ஓ இதுக்கு பேர்தான் குசும்பு only யா?
//அனைவரும் என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு அனுப்பிவிடவும்.
#6, vivekananthar cross street,
Dubai
இந்த துபாய் பஸ்ஸெல்லாம் நிக்குமே அங்கே அனுப்பிட்டேன் தலை.
அனுப்பியது வரலைன்னா வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாதீங்க. வரும் பொறுமையா - வரும்.
நட்புடன் ஜமாலைக் கூப்பிடுவோமா? 10000 பின்னூட்டங்களைக் கடந்த மாபெரும் புயல்.
வாழ்த்துக்கள் திரு. குசும்பன்.
மொய்.. :)
நாங்க எல்லாம் கல்யாணத்துக்கு போனாலே சாப்புட்டுட்டு அந்த சாப்பாட்டோட சுவைக்கு தகுந்தமாதிரித்தான் மொய் வைப்போம். நீ சுவையான சாப்பாடு போடு மாப்பி, நான் மொய் அனுப்புறேன்.
விலைமதிக்க முடியா தங்கச்சிய உனக்கு குடுத்தாச்சு, அப்றம் இன்னம் என்ன பணம் வேற கேக்குற நீ?
Hi, it's a very great blog.
I could tell how much efforts you've taken on it.
Keep doing!
ஆயிலு நன்றி
வித்யா சிலைய தங்கத்துல செய்யலாம் என்று
இருக்கிறேன் கொஞ்சம் இன்னும் பணம் தேவைப்படுது!:)
மஞ்சூரார் எப்படி வேண்டும் என்றாலும் உங்கள் இஷ்டம்
என் வீடு முன்பு இருந்த அதே இடத்தில் தான் இருக்கு!
வடகரை வேலன் அண்ணாச்சி நான் கூட பத்து லட்ச ரூபாய்
ஈரான் கரண்சி வெச்சு இருக்கிறேன்:)
முத்துலெட்சுமி யக்கோவ் அதெல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ
போட்டாச்சு 10,000 அனுப்புங்க!
தர்ஸினி எஸ்கேப் ஒய்??
தமயந்தி திரும்ப ஒரு கல்யாணம் செஞ்சு வையுங்க:) சாப்பாடு போட்டுவிடலாம்:)
கதிர் அது ஆபிஸ் முகவரி வீட்டு முகவரி
மம்ஸார் பீச் அருகில் சென்சூரி மால்:)
அபு அஃப்ஸர் ம்கும் கம்பெணியே அபராதத்துல போய்க்கிட்டு இருக்கு!
Azhagan நன்றி
பரிசல் உங்களுக்கு ஸ்பெசல் சலுகையாக ஒரே ஒரு தங்க செயின் என் உயரத்துக்கு வாங்கி
கொடுத்துவிடுங்க!
திரும்ப கல்யாண சாப்பாடு போட நான் ரெடி G3:)
இராகவன் நைஜிரியா இது ஒன்வே:) ஒன்லி இன் கம்மிங் மட்டும் தான்!
யோச் சிவா இப்பதான் போய் பாத்தேன் பதிவையும் காப்பி பேஸ்ட் செஞ்சு இருக்க! அடிங்க!
புருனோ தலைவரே அவ்வ்வ்வ் அவரே ஏதோ பெரிய மனசு செஞ்சு என் பக்கம் வராம இருக்கிறார்:)
ஆமாம் அவரு உங்க நண்பரா சொல்லவே இல்ல:)
வினோத் வீட்டுக்கு போனதும் என்னை மாதிரி அன்று என் மொபைலையும் சைலண்டில் போட்டுவிட்டேன்:)
நிலாவும் அம்மாவும் மிக்க நன்றிங்க!
சின்ன அம்மிணி மொய்யாக ஒரு வைர நெக்லஸ் மனைவிக்கும் எனக்கு ஒரு 20 பவுனில் செயினும் வாங்கி வருகிறேன்
என்று சொல்லுங்க இப்பவே டிக்கெட் புக் செஞ்சுடலாம்:)
அன்புடன் அருணா மொய்யாக புது ஆட்டோவா? ரொம்ப நன்றிங்க ஆட்டோ
ஓட்டியாவது இனி பொழைச்சுப்பேன்!
தமிழ்நெஞ்சம் வீட்டுக்கு அனுப்ப சொன்னா எல்லாம் பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்புறீங்களே!
வரும் ஆனா வராது:)
கையேடு மொய் என்றால் இப்படி சிரிக்கிறீங்களே என்ன அர்த்தம்:)
சோசப்பு எங்க முகத்தை காட்டு ம்ம்ம்ம் ஓக்கே ஓக்கே அப்படியே மொய் வெச்சுட்டாலும்:(
ஓலிவ் மரமே: சைனாகாரன் எல்லாம் என் பிளாக் படிக்கிறானுங்கய்யா:)
Post a Comment