தம்பி சீக்கிரம் கிளம்புடா.. நம்ம கந்தசாமி அண்ணாச்சி கும்பகோணம் வந்து இருக்கிறார் நம்மளை உடனே வர சொல்கிறார் என்றார் சித்தப்பா. சரி என்று கிளம்பி கும்பகோணம் போனோம் நாளை மறுநாள் எல்லோரும் வருகிறார்கள் அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ரெடி செஞ்சுடணும். தங்க இப்ப இடம் தான் முக்கியம் என்றார் சித்தப்பாவிடம்.நான் என்ன..? ஏது..? என்று புரியாமல் இருக்க பின்னர் தான் சித்தப்பா சொன்னார் அண்ணாச்சி ஒரு படம் தயாரிக்கிறார் அதுக்கு ஷூட்டிங்கு நாளை மறுநாளில் இருந்து நடக்கப்போவுது, நம்ம ஊரு சேங்காலிபுரத்திலும் ஷூட்டிங் இருக்கு என்றார்.
அப்புறம் அண்ணாச்சி சரவணனை கூடவே வெச்சுக்குங்க என்ன வேண்டும் என்றாலு சொல்லுங்க பார்த்துக்கலாம் நான் கிளம்புறேன்..! என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சித்தப்பா.பட்டாசு எங்கே கிடைக்கும், சவுக்கு மரம் காலேஜ் பாலத்தில் கடை செட் போட எங்கே கிடைக்கும் என்று பல தேவைகளுக்கும் அவர்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தேன், தட.. தட.. என்று சத்தத்தோடு வந்து நின்றன வரிசையாக பத்து பன்னிரெண்டு பஸ்கள்.
கும்பல் கும்பலாக இளைஞர்கள்பட்டாளம் என்று இறங்கிக்கொண்டு இருந்தது, அண்ணாச்சி ஹோட்டலில் ஹீரோ விக்ரம், ஹீரோயின் புதுசு, இளையராஜாதான்இசை என்று சொல்லிவிட்டு ஹோட்டலிலேயே ”கானஙகருங்குயிலே...”பாட்டை போட்டு காட்டினார். பின் அவர்புரொடெக்ஷன் மேனேஜர்,பாலா,இவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணன் பையன் இந்த ஊருதான் என்ன வேணும்னாலும்சொல்லுங்க..! என்று.
என்னடா..! இது ஒருத்தரும் தெரிஞ்ச முகமாகவே இல்லை, இதுல நம்ம ஊரில் வேற வந்து ஷூட்டிங் என்கிறார்கள் என்னத்த ஓட போவுது இந்த படம் என்று நினைச்சேன்,அதில் சுவாரஸ்யமான பல சம்பவங்களும் நடந்தன. காட்சிப்படி மோகன் வைத்யா அபிதா குஜலாம்பாலை ஒரு சின்ன மொபெட்டில் வைத்து ஓட்டிக்கிட்டு அந்த காலேஜ் பாலத்தை கடக்கணும்
அப்பொழுது விக்ரமும், மற்றவர்களும் கூப்பிட்டு வம்பிழுப்பது போல் காட்சி, மோகன் வைத்யா அப்பொழுதுதான் அந்த உண்மையைசொன்னார் பாலாவிடம், இதுவரை சைக்கிள் கூட ஓட்டியது இல்லை, எனக்கு எதுவும் ஓட்ட தெரியாது என்று, பாலாவும் சும்மா ஒரு ரெண்டு அடி ஓட்டுங்க அட்ஜெஸ்ட் செஞ்சுக்கலாம் என்று சொல்ல,ஒண்ணும் சொல்லமுடியாமல் ம்ம்ம் என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்காந்தால், ம்ம்ம்ம் ஒரு இன்ஞ் கூட காலை ஊன்றாமல் ஸ்டெடி செய்யமுடியவில்லை,பின்னாடி அபிதாவை உட்கார வெச்சு அப்படியேபின்னாடி இருந்து தள்ளி விட்ட கொஞ்ச தூரம் ஓடும் கொஞ்சம் ஸ்டெடி செய்யுங்க.. என்று சொல்லி பாலாவின் உதவியாளர் சண்முகமும்,இன்னொருவரும்தள்ளிவிட டொம்.. என்று வண்டி கீழே விழுந்தது.இது கதைக்கு ஆவாது என்று இரண்டு நாளில் ஓட்டி கத்துக்குங்க என்றார் பாலா! மோகன் வைத்யாவுக்கு வண்டி கத்துக்கொடுக்க யாரும் முன்வராததால் என்னிடம் கேட்டார் சரவணன் நீங்க கத்துக்கொடுங்க! என்று சரி என்று சொல்லிவிட்டு பழய TVS50 ஒன்றில் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்று கத்துக்கொடுத்தேன், கத்துக்கிட்ட பிறகுதான்அந்த காட்சி எடுக்கப்பட்டது.
சரணம் பவ கருணாமயி பாட்டில், அபிதா பூ கட்டுவது போல் ஒரு காட்சி வரும் அதுக்கு பாலா ஒரு பூ சொன்னார், காம்பு மட்டும் பிங் கலரில்
இருக்கும் அந்த பூ தான் வேண்டும் என்றார், சேங்காலிபுரம் அக்ரஹாரத்தில் இருக்கும் பலரிடமும் கேட்டு பார்த்துவிட்டு வடவேர் என்ற ஊரில்ஒரு கோயிலில் அந்த மரம் இருக்கிறது என்று பைக் எடுத்து போய் அந்த பூவை எடுத்துவந்து கொடுத்தோம், பின்புதான் தெரிந்தது அந்தஅபிதாவுக்கு பூவே கட்டத்தெரியாது..! என்று.பின் கொஞ்சம் கட்டிய பூவை கையில் கொடுத்து மீதியை கட்டுவது போல் சும்மா ஆக்ட்டிங்கொடுத்தாங்க அம்மணி.
அதுபோல் அந்த அக்ரஹாரத்து வீட்டில் இருக்கும் ஊஞ்சல், பூஜை சாமான்கள், நாற்காலிகள் எல்லாம் நம்ம வீட்டு பொருட்கள்.கும்பகோணத்தில் விக்ரமிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்களை விட சீமானிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்கள் அதிகம் அப்பொழுது ஏதோ ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் அவர். விக்ரம் முழங்காலில் இருந்து தொடை வரை இருக்கும் ஒரு பெரிய பள்ளம் விபத்தில் ஏற்பட்டதாம், அது தெரியாமல் இருக்கதான் ”தில்”லில் காலில் அடிப்படுவது போல காட்சியும், அதன் பிறகு காலில் பேண்டேஜும் இருக்கும்.
பாலாவுக்கு சாப்பாடு தண்ணி எல்லாமே கிங்ஸ் பில்டர் தான்,தினம் நான்கு பாக்கெட்டுக்கு குறையாமல் பிடிப்பார்.அட்வைஸ் ஆறுமுகமா இருந்தவர் அபிதாவின் அப்பா பசி சத்யா, பாலாவுக்கு இந்த ஷாட் இப்படி வெச்சா...! என்று ஆரம்பிப்பார், அவரும் ம்ம்ம் ம்ம்ம் என்று கேட்டுவிட்டுஅவர் நினைத்ததை முடித்துவிட்டு போய்விடுவார், இவரிடம் மாட்டியது அதிகம் விக்ரமின் தோழராக வரும் ஸ்ரீராம் என்ற பையன் தான் கையில் எப்பொழுது ஒரு புத்தகத்தோடு அவருக்கு ஏதேனும் போதனைகள் சொல்லிக்கிட்டே இருப்பார்.மதியம் அவர்களோடு சாப்பாடு முடிந்ததும் கொஞ்சநேரம் ரத்தினவேலு,விக்ரம்,அவுங்க அஸிஸ்டண்டோடு அண்ராம்ஸ் போட்டுஒரு சின்ன கிரிக்கெட் நடக்கும். ஐந்து மாதம் ராஜ உபசாரத்தோடு நாட்கள் கழிந்தன!
அந்த டீமில் டைரக்டர் அமீர் கானகருங்குயிலே பாட்டில் குரூப்பாக ஆடி இருப்பார் அவரை நன்றாக நினைவு இருக்கிறது, அப்பொழுது சசி கிளாப் அடிப்பார் மிகவும் ஒல்லியாக இருப்பார் சசியும் அண்ணாச்சி கந்தசாமிக்கு உறவினர் என்பதால் இவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன் இவர்கள் எல்லாம் பெரிய ஆளாக வருவார்கள் என்று அப்பொழுது தெரியவில்லை.
அண்ணாச்சி கந்தசாமி, அபிதா,ஆர்ட் டைரக்டர் ஆகியோரை தவிர மீதி அனைவரும் சக்ஸஸ் ஆகிவிட்டனர்.பாலாவின் அசிஸ்டண்டாக இருந்து டயலாக் எல்லாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த சண்முகம் என்பவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை, எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வார். இன்று அவர்களுக்கு என்னை நினைவு இருக்காது! ஆனால் அந்த நினைவுகள் சேது ஒரு வெற்றிப்படமாகவும் இன்று பாலாவும் விக்ரமும் ஒரு வெற்றியாளர்களாக இருப்பதாலும், என் நினைவில் அவர்கள் இருக்கிறார்கள்!
டிஸ்கி: இன்று விடுமுறை ஆகையால் ஒரே நேரத்தில் இரு போஸ்ட் இனி இன்றைக்கு இனையம் பக்கம் வரமுடியாது ஆகையால் நாளை சந்திக்கலாம்.
Thursday, April 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
me the first? :)
ரெண்டு போஸ்ட் ஒரே நேரத்துல?? மறந்து போயி எழுதிவேச்சத போஸ்ட் பண்ணீட்டீங்களா அண்ணா??
Shall i send this to tamilmanam??
அட...!
Super.. :))
அபிதா தங்கமான புருஷன் நடிச்சிட்டிருக்காங்க இல்ல...
சேது புகழ் குசும்பன் :))
நினைவடுக்குகளில் காட்சிகளாய் நிற்கிறதோ...!
கண்டிப்பாக உங்களின் செய்கைகள் அவர்களின் மனதில் இன்றளவும் வீட்டிருக்ககூடும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மீண்டும் சந்திக்க....!
வாழ்த்துக்கள் நண்பா...!
//ஸ்ரீமதி said...
Shall i send this to tamilmanam??
//
நான் இந்த பதிவினை தமிழ்மணத்திற்கு அனுப்பவா என்று கேட்கிறார்கள்..?
//ஸ்ரீமதி said...
Super.. :))
//
அருமையாக இருக்கிறது என்பதின் தற்கால தமிழ் உச்சரிப்பு :)))))))))
//தமிழன்-கறுப்பி... said...
அபிதா
//
தம்பி
உன்னைய வைச்சு ஒரு பி.ஹெச்டி யே செய்யலாம் போல....!
நிறைய விசயங்கள் இருக்கே!!!
மோகன் வைத்யாக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுத்தது பிரபல வலைப்பதிவாளர் குசும்பன்.
அறியாத சினிமா கிசுகிசு :)))
ஏன் ஒரே நேரத்தில் இரண்டு பதிவு?
//ஆயில்யன் said...
சேது புகழ் குசும்பன் :))//
நானும் வழிமொழிகின்றேன் :)
////ஆயில்யன் said...
சேது புகழ் குசும்பன் :))//
நானும் வழிமொழிகின்றேன் :)//
நானும் :))))
சார்..
வணக்கம் சார்.
உங்களைப் பத்தி தெரியாம கலாய்ச்சுட்டு இருந்தோம் சார்.
சல்யூட் சார்!!
//சீமானிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்கள் அதிகம் //
அவர் பெயர் ஸ்ரீமன் :)
//அண்ணாச்சி கந்தசாமி, அபிதா,ஆர்ட் டைரக்டர் ஆகியோரை தவிர மீதி அனைவரும் சக்ஸஸ் ஆகிவிட்டனர்//
நீங்க என்ன ஆனீங்கன்னு சொல்லவே இல்லையே..!
ரொம்ப நல்ல அனுபவம்.
//பாலா ஒரு பூ சொன்னார், காம்பு மட்டும் பிங் கலரில்
இருக்கும் அந்த பூ தான் வேண்டும் என்றார், //
பூவை தேர்ந்தெடுக்க குறிப்பிட்ட காரணம் இருக்கா? இப்படி கஷ்டப்பட்டு இந்த பூ தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி அந்த சீன் எடுக்கப்பட்டு இருந்தாலும் கண்டிப்பாக இப்போது பார்க்கும் போது பூக்கள் கவனத்தை ஈர்க்கவில்லையே. .?!! :( அபித்துவ தானே பார்த்தோம்.. :(
சேது புகழ் குசும்பனான்னு தெரியாது. ஆனால் குசும்பன் ஒரு ”சேது”...அதுமட்டும் தெரியும்.
டிஸ்கி : அன்புல மட்டும்
சேது படத்தின் முக்கிய திருப்புமுனையே நீங்கதான்னு சொல்லுங்க!
//பாலாவுக்கு சாப்பாடு தண்ணி எல்லாமே கிங்ஸ் பில்டர் தான்//
பாருயா என்ன மாதிரியே ஒரு ஜீவன்!
நீங்க பெரிய ஆளுண்ணே.... ஆச்சரியமா இருக்கு !!
பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் !!
//என்னத்த ஓட போவுது இந்த படம் என்று நினைச்சேன்//
இவ்ளோ கஷ்டப்பட்ருக்கீங்க, அதுக்காகத்தான் ஒடியிருக்கணும்...
மோஹன் வைத்யாவுக்கு பதிலா அபிதா மோபெட் ஒட்ற சீன் வெச்சிருந்தா, நல்லா இருந்திருக்கும் இல்ல..
அட.. மகிழ்ச்சி! இனி சேது புகழ் குசும்பன் என்று அழைக்கப்படுவீர்!
ஜித்தனய்யா நீர்
ஜாலியா இருந்தது குசும்பன் :-)
\\அட.. மகிழ்ச்சி! இனி சேது புகழ் குசும்பன் என்று அழைக்கப்படுவீர்!\\
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்
திரு குசும்பு(a)சரவணன்
கும்பகோணம் குசும்பா? அதான் கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...
ம்.. சேது வெற்றிய தொடர்ந்து, கும்பகோணத்துல எக்கச்சக்கமா சினிமா எடுப்பாங்க இதுவும் ஒரு பொள்ளாச்சி மாதிரி ஆவும்னு நெனச்சேன். அந்த அளவுக்கு இல்லைனாலும் ஏதோ ஆனந்தம் முதல் மலைகோட்டை வரை ஓடிக்கிட்டிருக்கு.
after reading this post i just recollected my good time memories of absconding from skools to see the shootings. thanks
:)
30
அட...!
Super.. :))
//
G3 said...
////ஆயில்யன் said...
சேது புகழ் குசும்பன் :))//
நானும் வழிமொழிகின்றேன் :)//
//
நானும் :))))
ஏப்ரல் ஃபூல் தான் போலன்னு படிச்சுக்கிட்டே வந்தேன்! :-) நல்ல நினைவலைகள்!
அபிதா இப்ப திருமதி செல்வம் தொடரில் நடிக்கிறாங்க
அட அட அட நல்ல நினைவலைகள்! சூப்பர் குசும்பா! இதை எனக்கு நீ முன்னமே சொல்லியிருந்தாலும் எழுதும் போது ஒரு அழகாவே தான் இருக்கு!
குசும்பன், சுவையான பின்னனிகளுடன் அருமையான பதிவு !
//ஆயில்யன் said...
சேது புகழ் குசும்பன் :))//
நானும் வழிமொழிகின்றேன் :)//
நானும் மொழிந்து செல்கிறேன் :-)
நினைவலைகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். சுவையான பதிவு
சேது புகழ் குசும்பரே நட்சத்திர வாரத்தில் கலக்கிட்டீறய்யா கலக்கி.. இம்முட்டு நாளா ஆணியை ஆப்ரிக்காவில் இருந்து இறக்கி கொட்டியதால் இந்த பக்கம் வர முடியல.. சாரி பா..
அருமையான நினைவலைகள்.
நீ கூட அப்டியே பால கூட இருந்துருந்தன்னு வைய்யி, ஒரு வேளை ஆர்யாவுக்கு பதிலா நான் கடவுள் படத்துல நீ கடவுள் ஆகிருக்கலாம்.
appo naan manjakudila 12 th paduchuttu irunthen
kusumbare
ஸ்ரீமதி ஆல்வேஸ் நீங்கதான் பர்ஸ்ட், அது நேற்று எனக்கு விடுமுறை
வீட்டில் இப்பொழுது நெட் இல்லை, ஆகையால் நண்பர் வீட்டுக்கு போய் போஸ்ட்
போட்டேன் திரும்ப திரும்ப தொல்லை கொடுக்ககூடாது என்று ஒரே நேரத்தில் போட்டாச்சு!
நன்றி தமிழன் கறுப்பி
நன்றி ஆயில்யன் சிலர் மறந்து இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!
நன்றி G3
நன்றி பரிசல்காரர் சார்:)
நன்றி பிரேம்குமார் கொஞ்சம் சிலிப் ஆகிவிட்டது!
நன்றி கவிதா நாம எப்ப சக்ஸஸ் ஆகி இருக்கோம் இப்ப துபாய் வந்து ஒட்டகம் மேய்க்கிறோம்!
எனக்கு அந்த டவுட் அப்பொழுது இருந்தது ஏன் இப்படி பூவைகேட்டார் என்று அட்லீஸ்ட் பூ கலர்
அப்படி இருந்தாலாவது நன்றாக தெரியும் ஆனால் காம்பு கலர் ஏன் அந்த நிறத்தில் வேண்டும் என்று
கேட்டார் என்று யோசிப்பது உண்டு!
அப்துல்லா அண்ணாச்சி நான் உங்க கிட்ட இருந்து
விக்ரம் கூட நீங்க ஒரு ஷாட் நடிச்சு இருந்தீங்களே குசும்பன் பச்சை சட்டை போடுக்கிட்டு
என்று கமெண்ட் வரும் என்று நினைச்சேன்:)))
பரவாயில்லை சேதாரம் கம்மிதான்:)
வால் திருப்புமுனையா? அவ்வ்வ்வ்
நன்றி மகேஷ் உங்கள் வாழ்த்துக்கு.
அறிவிலி அவுங்க அப்பிராணி மாமியாக நடிக்கும் பொழுது எப்படி மொபட் ஓட்டுவார்கள்!
நன்றி தமிழ் பிரியன்
நன்றி முரளி கண்ணன்
நன்றி லக்கி லுக்
நன்றி டக்ளஸ் நீங்களுமா?
நன்றி வாழவந்தான் சரத் படம் ஒன்னு எடுத்தாங்களே அதுவும் ஓடியது.
நன்றி மாஸ்டன்
நன்றி மங்களூர் மாப்பி
நன்றி சந்தனமுல்லை
நன்றி அரவிந்தன்
நன்றி அபி அப்பா
நன்றி கோவி
நன்றி சென்ஷி பின்னூடம் படிக்காத பதிவை படி!
நன்றி டொக்டர் எம்.கே முருகானந்தன்
நன்றி சந்தோஷ் ஆப்பிரிக்கா போனீயா நீ?அங்கயே செட்டில் ஆகிடு!
நன்றி சோசப்பு ரொம்ப பாசகார பயபுள்ளயா நீ!
நன்றி சாயர்பாலா அப்ப ஒரு வருடம் ஜூனியரா நீங்க
அப்படின்னா ஸ்கூலில் பார்த்து இருக்கலாம் நீங்க எந்த பிரிவு?
அட..இது நல்லாருக்கே? :)
சமீபத்தில் சசிக்குமார் கூட இதுபோல தன்னோட நினைவலைகளைப் பகிர்ந்துக்கிட்டார். அடுத்த சசிகுமார் நீங்கதான்னு நினைக்கிறேன் குசும்பன் !
//பின்புதான் தெரிந்தது அந்தஅபிதாவுக்கு பூவே கட்டத்தெரியாது..! என்று.பின் கொஞ்சம் கட்டிய பூவை கையில் கொடுத்து மீதியை கட்டுவது போல் சும்மா ஆக்ட்டிங்கொடுத்தாங்க அம்மணி. //
அடடா..இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா? இப்ப உள்ள எந்த நாயகிக்குத்தான் பூக்கட்டத் தெரிஞ்சிருக்கு..அட..பூவை விடுங்க..புடவை கூட ஒழுங்காக் கட்டத்தெரியாது..
//அபிதாவின் அப்பா பசி சத்யா //
பசி சத்யாவா? அது ஒரு நடிகை பெயராச்சே? கமலின் 'மகளிர் மட்டும்', 'அன்பே சிவம்' படங்கள்ல பார்த்திருக்கிறேன் !
அழகா சொல்லியிருக்கீங்க !
ஷூட்டிங் அனுபவமே தனிதான்..!
ஒரு நாளில் 10 நாள் அனுபவம் கிட்டும்..!
:)
அட..!
செம!
Post a Comment