Tuesday, April 7, 2009

சிதம்பரம் மேல் ஷூ வீச்சு--- அதன் பின்விளைவுகள்+ கார்ட்டூன்


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார். ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.


இனி கற்பனை கார்ட்டூன் வரைய தெரியாததால் கார்ட்டூன் மாதிரி கற்பனை செஞ்சுக்குங்க:)))



கந்தசாமி: என்னங்க இங்க இவ்வளோ கூட்டம்?

பெரியசாமி:அதுவா குறைந்த நாட்களில் எப்படி குறி தப்பாமல் ஷூவை வீசுவது என்று கிளாஸ் எடுக்கிறார்களாம் கெஸ்டா ஈராக் நிருபரும் கிளாஸ் எடுக்கிறாராம். லைவ் டிரைனிங் வேற உண்டாம்!
***************
அப்பா: டேய் இது என்னடா நடுவீட்டில் பொம்மைய கட்டி அதன்மேல் இப்படி ஷூவை வீசிக்கிட்டு இருக்க?

மகன்: அப்பா இப்ப இதுதான் சீக்கிரம் சம்பாதிக்க வழி யார் மேலயாவது கரெக்டா ஷூவை வீசினா அவரை பிடிக்காதவங்க லட்சகணக்கில் பணம் தருவாங்க அதுக்குதான் ஷூவை வீசி பிராக்டிஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

*****************
மனைவி: என்னங்க நம்ம பையன திட்டிக்கிட்டே இருந்தீங்களே பாருங்க நம்ம எம்.பி மீது செருப்ப வீசி 5 லட்ச ரூபாய் சம்பாரிச்சுட்டு வந்து இருக்கான்
*****************

தொண்டன்1: என்னப்பா தலைவரை சுத்தி புதுசா ஒரு படை கருப்பு பூனை படை மாதிரி?

தொண்டன்2:அதுவா தலைவரை நோக்கி யாரும் செருப்பை வீசினா கரெக்டா கேட்ச் புடிக்கும் செருப்பு படையணி

*****************

தொண்டன்1: என்னங்க தலைவர் டெப்பாசிட் போயும் பயங்கர சந்தோசமா இருக்கார்.

தொண்டன்2:அட நீங்க வேற போற இடம் எல்லாம் வீசிய செருப்பை வச்சு
ஒரு கடை ஆரம்பிச்சு பெரும் கோடிஸ்வரர் ஆகிட்டார்.

*****************

நிருபர்: என்னங்க இது தலைவருக்கு பக்கத்தில் நான்கு நாய் இருக்கு?

தலைவர் பி.ஏ: அதுவா யாராவது ஒரு கால் செருப்பை மட்டும் வீசினா மோப்பம் புடிச்சு அது யாருதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு செருப்பையும் புடுங்கிட்டு வந்துடும்.

*****************

தொண்டன்1: என்னங்க கட்சி அலுவலகம் முன் புது கடையா இருக்கு.

தொண்டன்2:அதுவா தலைவர் பேட்டி கேட்கவரும் நிருபர்கள் அனைவரும் செருப்பை அங்க விட்டுவிட்டு டோக்கனை காட்டினாதான் தலைவரை பேட்டி எடுக்கும் அறைக்குள் போக முடியும். தலைவரோட மச்சான் தான் அந்த கடையே வெச்சு இருக்கார்.

*****************

நிருபர்: என்ன சார் பூமராங் மாதிரி வீசின செருப்பு திரும்ப வரும் மாதிரி
ஒரு செருப்பு கண்டுபுடிங்கன்னா முடியாதுன்னு சொல்லுறீங்களே

கடைகாரர்:ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே
*****************
வேலைவாய்பு செய்தி: சரியா செருப்பு வீச தெரிந்த நிருபர்கள் உடனடி தேவை! தினம் ஒரு ஜோடி செருப்பும் நல்ல சம்பளமும் வழங்கப்படும்.
முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
*****************
கோபு: என்ன புதுசா ஷூ பெட்டிங் ஊழலாம் என்னா அது?

ராமு: அதுவா வீசுற ஷூ தலைவர் மேல படுமா படாதான்னு பெட்டு கட்டி பெரும் அளவில் ஊழல் செஞ்சு சம்பாரிச்சு இருக்காங்க, இதுக்கு தலைவரும் உடந்தையாம்.

39 comments:

said...

:)

said...

கார்ட்டூன் பிலிம் காட்டலன்னு எல்லோருக்கும் கோபம்.கூட்டத்தக் காணோம்:)

said...

அத்தனையும் அருமை....

//அதுவா வீசுற செருப்பு தலைவர் மேல படுமா படாதான்னு பெட்டு கட்டி பெரும் அளவில் சம்பாரிச்சு இருக்காங்க, இதுக்கு தலைவரும் உடந்தையாம்.//

இது நடந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்... :)

said...

ஒரு வினாடில மூக்க நுழைச்சு ஜெகதீசன் முந்திகிட்டாரே!

said...

புதுமொழிகள்:
அரசியல்வாதிக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

நிருபருக்கு செருப்பும் ஆயுதம்

ஒருவர் உன்னை ஒரு செருப்பால் அடித்தால் அடுத்த செருப்பாலும் அடிவாங்கு

said...

:))

said...

அடடா மச்சான், தலைவர் ஜோக் முதலிடம்!

தலைவர், நாய் இரண்டாம் இடம்

எல்லாமே சூப்பர்

said...

//நிருபர்: என்ன சார் பூமராங் மாதிரி வீசின செருப்பு திரும்ப வரும் மாதிரி
ஒரு செருப்பு கண்டுபுடிங்கன்னா முடியாதுன்னு சொல்லுறீங்களே


கடைகாரர்:ங்கேங்கே
//


இது ஜூப்பரூ!!!!!!!

(செருப்பை வீசுனோமா ரிடர்ன் எடுத்தோமா காசு சம்பாதிச்சோமான்னு இருக்கும்! இல்லாங்காட்டி அம்புட்டு ஒத்தை செருப்பு வைச்சுக்கிட்டு இன்னா பண்றது...???)

said...

கருத்துகள் அனைத்தும் சுவை.

அவசரத்தில் எழுதியதுபோல தெரிகிறது.

எழுத்துப்பிழைகள் அதிகம்.

கவனிக்கவும்

Anonymous said...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!

said...

வாழ்நாளில் இப்படி ஒரு ஈனப்பிறவியை நான் பார்த்ததில்லை...
மக்கள் கொதினிலை...அதிகமாகி,இவனை சுந்நாம்பு காலவயில் போடவேண்டும்!

said...

வாழ்நாளில் இப்படி ஒரு ஈனப்பிறவியை நான் பார்த்ததில்லை...
மக்கள் கொதினிலை...அதிகமாகி,இவனை சுந்நாம்பு காலவயில் போடவேண்டும்!

Anonymous said...

நீதி துறையில் இது சாதரணமப்பா!
http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=704180872&cat=&n_date=20070418
3 months' imprisonment for hurling slipper at judge
Gwalior | April 18, 2007 6:38:10 PM IST

The Madhya Pradesh High Court's Gwalior Bench has sentenced a murder accused to three months' imprisonment and fined him Rs 1,000 for hurling slipper targetting a special court judge.
According to prosecution, accused constable Jagmohan had hurled his slipper on Additional Sessions Judge R K Mahajan on January 19 after he was awarded sentence in a murder case.
In this regard, the court transferred the contempt of court case to the High Court's division bench of Justice A K Gohil and Justice S A Naqvi.
Jagmohan admitted before the High Court that he lost his temper and threw slippers due to mental tension. He sought unconditional apology but the court rejected it saying his behavior tantamounted to rowdyism and disregard to the court.


http://www.techsupportforum.com/relaxation-room/offline/90037-life-throwing-slipper-judge.html
Jailed for life for throwing slipper at judge
An Indian judge has sentenced a robber to life imprisonment for hurling a slipper at him.
Judge C D Gongale managed to duck in time when Rajkumar Sharma threw his slipper at him, reports The Times of India.
The 19-year-old appeared before the judge in Mumbai after he was accused of robbing an auto rickshaw driver of £5.20.
Senior lawyer Mahesh Jethmalani said: "The punishment is excessive but the accused's conduct is unpardonable."
Using footwear as missiles is not new to courts in Mumbai and there have been several incidents where disgruntled convicts have flung their slippers at judges.
The paper said suspects are now produced without their shoes in some courts to avoid such incidents.


http://www1.timesofindia.indiatimes.com/articleshow/834274.cms
Man convicted for throwing slipper at judge
1 Sep 2004, 0110 hrs IST, TNN
Print Email Share Save Comment Text:
NEW DELHI: A city court has convicted a man for hurling a slipper on the table of a special executive magistrate and assaulting him in the
Patiala House court complex.

Chand Khan, a resident of Hazrat Nizamuddin, threw his slipper on the table of Harbans Singh, insulted him and interrupted the judicial proceedings on March 11.

Metropolitan Magistrate G P Singh held Khan guilty of assault or criminal force with intent to dishonour person, otherwise than on grave provocation. He was also convicted for obstructing a public servant in discharge of public functions. The convict Chand Khan was arrested on May 26 and he was in judicial custody.

The accused was even explained the consequences of his pleading guilty and still he persisted for pleading guilty.

said...

ரைட்டு...

லெஃப்ட்டு..

நேரா

பின்னாடி

ஓகே,.,..

said...

சஞ்செய் கொல வெறியோடு வரப்போறார்

said...

அடுத்த வார ஜீ.வி யில் குசும்பனா?

said...

கலக்கல்!

said...

//புதுமொழிகள்:
அரசியல்வாதிக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

நிருபருக்கு செருப்பும் ஆயுதம்

ஒருவர் உன்னை ஒரு செருப்பால் அடித்தால் அடுத்த செருப்பாலும் அடிவாங்கு//

இதுவும் கலக்கலா இருக்கு !!!! :)

said...

//தொண்டன்2:அதுவா தலைவர் பேட்டி கேட்கவரும் நிருபர்கள் அனைவரும் செருப்பை அங்க விட்டுவிட்டு டோக்கனை காட்டினாதான் தலைவர் பேட்டி எடுக்கும் அறைக்குள் போக முடியும்.தலைவரோட மச்சான் தான் அந்த கடையே வெச்சு இருக்கார்.//

தோடா.. இங்க கடைய வச்சிட்டு இருந்தா கள்ளக்குறிச்சில யார் வேலை பாக்கிறதாம். :))

said...

OK :-)

said...

// அதுவா யாராவது ஒரு கால் செருப்பை மட்டும் வீசினா மோப்பம் புடிச்சு அது யாருதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு செருப்பையும் புடுங்கிட்டு வந்துடும்.//

அப்படி ஒரு நாய் இருந்தா சொல்லுங்க
நமக்கு ஒன்னு தேவப்படுது.

said...

//கோபு: என்ன புதுசா ஷூ பெட்டிங் ஊழலாம் என்னா அது?

ராமு: அதுவா வீசுற செருப்பு தலைவர் மேல படுமா படாதான்னு பெட்டு கட்டி பெரும் அளவில் ஊழல் செஞ்சு சம்பாரிச்சு இருக்காங்க, இதுக்கு தலைவரும் உடந்தையாம்.

//
LOL!
swift post. great!

said...

//நிருபர்: என்னங்க இது தலைவருக்கு பக்கத்தில் நான்கு நாய் இருக்கு?
தலைவர் பி.ஏ: அதுவா யாராவது ஒரு கால் செருப்பை மட்டும் வீசினா மோப்பம் புடிச்சு அது யாருதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு செருப்பையும் புடுங்கிட்டு வந்துடும்.//

செம்ம கலக்கல் ;))

said...

:-))

said...

செம்ம கலக்கல் ;))

said...

ஒரெ கு"ஷூ"ம்பு :)))))

said...

அருமைங்க பின்னீட்டிங்க..


அப்படியே டைம் இருந்தா என் கடைக்கும் வந்துட்டு போங்கோ http://muttalpaiyan.blogspot.com/

said...

மாப்பி, வழக்கம் போல செருப்பையும் சிரிப்பாக்கிட்ட.
அது சரி, எப்ப, எங்க, யாரு சிதம்பர அப்பச்சி மேல ஷீ வீசுணது? எனக்கு செய்தியே தெரியாது அதுக்குள்ள அகாலிதளம் என்னடான்னா 2 லட்சம் பரிசு அறிவிச்சுருக்கு, நீ என்னடான்னா பதிவே போட்டுட்ட
நீ நெம்ப வேகம் மாப்பி.

said...

Congress Deserves it as they are ready for and involving in the next genocide in Srilanka!!

said...

:-)

said...

:-)

said...

நல்ல கற்பனை :)

இது ஆவாது ஆவாது...குசும்பனோட ஸ்பெசல் கார்டூன் எங்க?

said...

//நிருபர்: என்னங்க இது தலைவருக்கு பக்கத்தில் நான்கு நாய் இருக்கு?

தலைவர் பி.ஏ: அதுவா யாராவது ஒரு கால் செருப்பை மட்டும் வீசினா மோப்பம் புடிச்சு அது யாருதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு செருப்பையும் புடுங்கிட்டு வந்துடும்.//

இது தூள்...

said...

இந்த ஷூ..முட்டை..இந்த மாதிரி சர்ச்சைக்குரிய வஸ்துக்களின் அலம்பல் தாங்க முடியலப்பா !!!!!

said...

"வென்ற பிறகும் விளங்காமல் போவோர்க்கு
சென்ற இடமெல்லாம் செருப்பு"

Anonymous said...

கிகிகிகிகி

said...

வழமையான கார்ட்டூன்கள் இல்லாதது குறை தான். ஆனால் ஒவ்வொரு ஜோக்கும் நச்..:)

உங்க அனுமதியில்லாமலேயே இன்று எனது காலை நிகழ்ச்சியிலே சிரிக்க வைச்சேன்.. (உங்க பெயரை அழகாக சொல்லி நன்றியும் சொன்னேன்)

நன்றி..

said...

நன்றி ஜெகதீசன்

நன்றி ராஜ நடராஜன்

நன்றி பதி

நன்றி thanjai gemini அருமை புதுமொழியும்

நன்றி வித்யா

நன்றி அபி அப்பா

நன்றி ஆயில்யன்

நன்றி மஞ்சூர் ராசா

நன்றி certifiedasshole

நன்றி ttpian

நன்றி கார்க்கி

நன்றி கோவி.கண்ணன்

நன்றி நாமக்கல் சிபி

நன்றி தமிழ் பிரியன்

நன்றி SanjaiGandhi

நன்றி Venkatesh subramanian

நன்றி கார்த்திக்

நன்றி Sundar

நன்றி சென்ஷி

நன்றி Suresh

நன்றி Busy (காப்பி பேஸ்ட் செய்யும் பொழுது ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளதையா காப்பி
பேஸ்ட் செய்யனும்:)))

நன்றி Mahesh கிரியேட்டிவிட்டி:)

நன்றி லோகு

நன்றி ஜோசப் பால்ராஜ்

நன்றி Ferdin Joe

நன்றி பழூர் கார்த்தி

பட்டாம்பூச்சி அவ்வ் வரைய தெரிஞ்சா வரையமாட்டேனா?:))

நன்றி நவநீதன்

நன்றி அ.மு.செய்யது

நன்றி இப்னு ஹம்துன்

நன்றி தூயா

நன்றி LOSHAN ஆஹா தலைவரே என் பெயர் இலங்கை முழுவது ஒலித்ததா? அடா அடா நன்றிங்கோ!

said...

:)))
superb!