Saturday, April 4, 2009

ஆண்களின் குளியலறை



ஆண்களின் குளியலறை
எப்பொழுதும் கப்பு
மிக்கதாகவே இருக்கிறது
ஓடிச்செல்கையிலும்
மூக்கை பிடித்தபடி நுழைகையிலும்


அவர்களின் ஜட்டிகள் பனியன்களில்
இருக்கும் அழுக்குகளும்
ஆப்ரிக்கா மேப் கறைகளும்
கண்ணுக்கு புலப்படாத
கிருமிகளை பரப்புகின்றன


மயங்கி விழும் பல்லிகளுக்கு கபால மோட்சமும்
அரண்டு போய் ஒளிந்துக்கொள்ளும்
எலிகளுக்கு மயக்கமும்
ஆண்களின் குளியலின்
தண்டனையாக கிடைக்கின்றன


மூன்று சுவர்களும் கதவு
இல்லாத குளியலறையில்
ஆண்களின் ரகசியங்களை எவராலும்
பாதுக்காக்க முடிவது இல்லை
பாதுக்காக்க முனைவதும் இல்லை
எப்பொழுதும் தர்ம தரிசனம்


எப்பொழுதுதாவது நீங்கள்
பார்க்கலாம் சுவர்கள் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கின்றன
தாங்கள்சுவரில் மாட்டி இருந்த
ஜட்டியை எடுத்தபிறகு என்று!


இது ஆதவனின் கவிதைக்கு எதிர்கவுஜை

62 comments:

said...

//மூன்று சுவர்களும் கதவு இல்லாத குளியலறையில் ஆண்களின் ரகசியங்களை எவராலும்பாதுக்காக்க முடிவது இல்லை //

:((((

சுதந்திரம் இங்கில்லாயாம் என்ன தேசமடா....!

said...

:)

இதுதான் டிபிகல் குசும்பன்!

ஹெஹெ!

சூப்பர்!

said...

//மயங்கி விழும் பல்லிகளுக்கு கபால மோட்சமும்
அரண்டு போய் ஒளிந்துக்கொள்ளும்
எலிகளுக்கு மயக்கமும்
ஆண்களின் குளியலின்
தண்டனையாக கிடைக்கின்றன//

சான்ஸே இல்லை பின்றிங்க

said...

//வர்கள் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கின்றன
தாங்கள்சுவரில் மாட்டி இருந்த
ஜட்டியை எடுத்தபிறகு என்று!//

கலக்கல்ஸ்!

said...

குசும்பன் நட்சத்திரமாக மிளிரும் இந்த பொன்னான நாளில்

"எதிர் கவுஜ ஏகாம்பரம்" என்ற பட்டத்தைக் குசும்பனுக்கு வழங்கி கௌரவிப்பதில் பெருமை அடைகிறேன்!

"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!
"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!
"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!

said...

சூப்பரோ சூப்பர் சூப்பரோ சூப்பர்

குசும்பனின் குசும்பு கொப்பளிக்குது!

எதிர் கவுஜ ஏகாம்பரம் குசும்பர் வாழ்க வாழ்க!

said...

அட கொடுமையே! ஆதவா எங்க இருந்தாலும் கம்பு எடுத்துகிட்டு இங்க வாங்க:-))

said...

கலக்கல்ஸ்

said...

வந்துட்டோம்.....

Anonymous said...

ஆஹா...

"பாத்" ரூம் போட்டு யோசிக்கிறீங்களே...

said...

// ஆயில்யன் said...

//மூன்று சுவர்களும் கதவு இல்லாத குளியலறையில் ஆண்களின் ரகசியங்களை எவராலும்பாதுக்காக்க முடிவது இல்லை //

:((((

சுதந்திரம் இங்கில்லாயாம் என்ன தேசமடா....!/

ஆமாம். அதெல்லாம் வச்சுட்டாலும்.........ரோடு சைடுல மரத்த பார்த்தா ஒன்பாத்ரூம் போற குரூப்ப பத்தி எழுதுன தலைவன் தானே நீயி

said...

//நாமக்கல் சிபி said...

:)

இதுதான் டிபிகல் குசும்பன்!

ஹெஹெ!

சூப்பர்!/

சிபிண்ணே.. மெய்யாலுமா சொல்றீங்க. அப்ப உங்க கவிதையயையும் குசும்புக்கு அனுப்பி வைக்கட்டா :-)

said...

அய்யனார் எங்க ஈருந்தாலும் வந்து ஒரு அவசர கவிதை பதிவு போடவும்.

உங்க கவிதை பதிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

(அப்ப தான குசும்பரின் எதிர் கவுஜ கிடைக்கும்)

said...

//"எதிர் கவுஜ ஏகாம்பரம்" என்ற பட்டத்தைக் குசும்பனுக்கு வழங்கி கௌரவிப்பதில் பெருமை அடைகிறேன்!//

"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!
"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!
"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!

said...

//"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........

said...

//ஆண்களின் குளியலறை எப்பொழுதும் கப்பு மிக்கதாகவே இருக்கிறது//

எலேய்.. எல்லா பாத்ரூமுலயுமே கப்பு, பக்கெட் எல்லாம் இருக்கும்..

said...

//அவர்களின் ஜட்டிகள் பனியன்களில் இருக்கும் அழுக்குகளும் ஆப்ரிக்கா மேப் கறைகளும் கண்ணுக்கு புலப்படாதகிருமிகளை பரப்புகின்றன//

ஃபினாயில் தொளிச்சு காய வச்சு இதையெல்லாம் எரிச்சுடணும் அண்ணே.. பாத்து ரசிச்சு கவுஜ எழுதக்கூடாது.

said...

//மயங்கி விழும் பல்லிகளுக்கு கபால மோட்சமும்அரண்டு போய் ஒளிந்துக்கொள்ளும்எலிகளுக்கு மயக்கமும் ஆண்களின் குளியலின் தண்டனையாக கிடைக்கின்றன//

இவனுங்க குளிக்கலைன்னா வர்ற வாசனையில, அது மனுசனுக்கு மனுசன் தர்ற தண்டனையா இருக்குமே தலைவா

said...

//மயங்கி விழும் பல்லிகளுக்கு கபால மோட்சமும்அரண்டு போய் ஒளிந்துக்கொள்ளும்எலிகளுக்கு மயக்கமும் ஆண்களின் குளியலின் தண்டனையாக கிடைக்கின்றன//

மவனே. இது மட்டும் மேனகா காந்திக்கு தெரிஞ்சது எல்லாப்பயமக்கவும் குளிக்கறதுக்கு தடாதான்.. :)

said...

//
மூன்று சுவர்களும் கதவு இல்லாத குளியலறையில் ஆண்களின் ரகசியங்களை எவராலும்பாதுக்காக்க முடிவது இல்லை //


அண்ணே.. கேமராவுல ரெக்கார்டு பண்ணி யுடியுப்ல போடுங்கண்ணே.. பாதுகாப்பா இருக்கும்

said...

//எப்பொழுதும் தர்ம தரிசனம்//

பிரசாதம் என்ன கிடைக்கும்ன்னு எவனாச்சும் கேக்கப்போறான் :)

said...

//சுவர்கள் எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கின்றன தாங்கள்சுவரில் மாட்டி இருந்த ஜட்டியை எடுத்தபிறகு என்று!//

அம்மணமா சுவரு இருக்கேன்னு ஜட்டிய மாட்டினா அது உங்களுக்கு பொறுக்கலையா.

said...

// நாமக்கல் சிபி said...

//வர்கள் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கின்றன
தாங்கள்சுவரில் மாட்டி இருந்த
ஜட்டியை எடுத்தபிறகு என்று!//

கலக்கல்ஸ்!//

இது நல்லாயில்ல.. நிர்வாண சுவரை ரசிக்கறீங்கன்னு பதிவு போட வேண்டி வரும் சிபி :)

said...

//இது ஆதவனின் கவிதைக்கு எதிர்கவுஜை//

நான் இன்னும் அதை படிக்கல

said...

மீ த 25 :)

said...

இப்ப குசும்பன் கவுஜையில இருக்குற குறியீடுகளை தேடப்போறோம்..

குசும்பன்: சீச்சி கருமம் பிடிச்சவனே!

said...

//ஆண்களின் குளியலறை எப்பொழுதும் கப்பு மிக்கதாகவே இருக்கிறதுஓடிச்செல்கையிலும் மூக்கை பிடித்தபடி நுழைகையிலும்//

இதுல ஆசிரியர் வெளிக்காட்ட விரும்பற குறியீடு என்னன்னு தேடிப்பார்க்குறப்ப ஆண்கள் என்பது இங்க பிரம்மச்சாரிகளின் மேன்சன்களின் குளியலறையை குறிக்கிறது.

ரூமுக்கு நாலு பேர்ன்னு வச்சுக்கிட்டாலும் (ஒரு பேச்சுக்கு) ஆளுக்கு ஒரு பக்கெட், ஒரு கப்புன்னு வச்சுக்கிட்டாலும் அங்க 40 ரூமுக்காகவும் கட்டியிருக்கற ஒத்த பாத்ரூமுல எத்தனை கப்பு எத்தனை பக்கெட் இருக்கும்.

இது ஒரு கப்படிக்கும் சிந்தனை குசும்பா..

ஆண்களின் வேதனையை பிரம்மசாரிகளின் கடினத்தை எழுத்தில் ஏற்றிவிட்டாய்..

said...

//ஆண்கள் என்பது இங்க பிரம்மச்சாரிகளின் மேன்சன்களின் குளியலறையை குறிக்கிறது. //

குடும்பத்துல ஆண்களுக்குன்னு தனியா பாத்ரூம் ஒதுக்காத சமூகத்துல நாம இருக்குறதால இந்த பாத்ரூம் கணக்க நாம 5 ரூவா கொடுத்து குளிக்குற இடத்தையும் சேர்க்கலாம். அங்கயும் அளவில்லாத கப்பு உண்டு. பக்கெட் மொண்டு குளிச்சா தண்ணி அதிகமா செலவாகுமுன்னு வெறும் கப்பு மாத்திரம் வச்சிருப்பாங்க.

இந்த சிந்தனை துளியோட்டத்த ஓட்டி பார்க்குறப்ப குசும்பன் பொதுக்கட்டண குளியறைய பத்திக்கூட சொல்லியிருப்பாருன்னு தோணுது.

வாசகப்பிரதிக்கு இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணங்களை தோற்றுவிப்பதால் இது ஒரு பின்நவீன பிரதித்துவ முன்நிலைப்படுத்தும் எழுத்து ஆகிறது.

said...

கவிதை, கவுஜை அர்த்தம் புரியாம
இருந்தது.

ஆதவா-குசும்பன் புண்ணியத்தால் புரிந்தது.

வாழ்த்துக்கள்...

said...

//அவர்களின் ஜட்டிகள் பனியன்களில் இருக்கும் அழுக்குகளும் ஆப்ரிக்கா மேப் கறைகளும் கண்ணுக்கு புலப்படாதகிருமிகளை பரப்புகின்றன//

இதோட குறியீட்டை தேடி நாம எழுத்துக்குள்ள நீந்துறதுக்கு முன்னாடி மூச்சை நல்லா இழுத்து பிடிச்சுக்கணும். கெட்ட நாத்தத்துல குறியீடு தேடுனா வேற ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்குது.

said...

எதிர் கவுஜையை மூக்கைப் பிடித்துக் கொண்டு படித்து
கவுஜை கலக்கல் குசும்பரே.

said...

//அவர்களின் ஜட்டிகள் பனியன்களில் இருக்கும் அழுக்குகளும்//

இந்த வார்த்தைய படிக்குறப்ப நாம தெரிஞ்சுக்க முடியறது மூலப்பிரதிக்கு (மூலம் வந்த பிரதின்னு பகடி பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன்) பனியன் ஜட்டி யூஸ் பண்ற பழக்கம் இருக்குற அளவுக்கு அதை துவைக்குற நாலெட்ஜ் இல்லைன்னு தெரியுது.

said...

:))

:))



கலக்கல் தல

said...

இந்த விஷயம் ஆதவனுக்கு தெரியுமா...

said...

மச்சான் நான் கூட இந்த பதிவ போடலாம்னு நினைத்தேன் நிங்க :-) தான் பர்ஸ்ட்

said...

kavithai, kavithai aruviyaa kottuthu!!

said...

@ குசும்பன்

# வாழ்த்துக்கள் சுரேஸ் #

ஒரு நட்ச்சத்திரம் என்னை :-) வாழ்த்திருக்கிறது ரொம்ப ரொம்ப சந்தோசம்

said...

கவித கவித !
சூப்பர்ப்பு!

said...

அடப்பாவிகளா..(சென்ஷியையும் சேர்த்து)

said...

:-)))))))))))))))

said...

:))))))))

said...

super!

said...

Kalakkal!

said...

"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!

said...

ஆஹா...

"பாத்" ரூம் போட்டு யோசிக்கிறீங்களே...

said...

//"எதிர் கவுஜ ஏகாம்பரம்" குசும்பன் வாழ்க!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........

said...

எதிர் கவுஜையை மூக்கைப் பிடித்துக் கொண்டு படித்து
கவுஜை கலக்கல் குசும்பரே.

said...

50??

said...

வர்ட்ட்ட்ட்டா!

said...

குசும்பா.... :)))


உன் பாத்ரூமும் இதே கதிதானா....


அவ்வ்வ்வ்
உன்னைய போயி லவ் பண்ண பார்த்தேனே

!!!

said...

அவர்களின் ஜட்டிகள் பனியன்களில் இருக்கும் அழுக்குகளும் ஆப்ரிக்கா மேப் கறைகளும்....

///


ஆதவா'க்கும் உங்களுக்கும் வாய்க்கால் தகறாறு ஒன்னும் இல்லையே...??

said...

குடவாசல் குசும்புய்யா...

said...

:))

said...

//மகிழ்ச்சியாக இருக்கின்றன
தாங்கள்சுவரில் மாட்டி இருந்த
ஜட்டியை எடுத்தபிறகு என்று!
//

சூப்பரப்பு ;-)

said...

குசும்பனாரின் குசும்பின் விசுவரூபம் இதுதான்..!

கொளுத்து.. கொளுத்து..!

said...

அவர்களின் ஜட்டிகள் பனியன்களில்
இருக்கும் அழுக்குகளும்
ஆப்ரிக்கா மேப் கறைகளும்
கண்ணுக்கு புலப்படாத
கிருமிகளை பரப்புகின்றன“

லுங்கியிலதான் ஆப்பி்ரிக்கா அன்டார்டிக்கா மேப் எல்லாம் இருக்கும்..

பட் பதிவு சூப்பர்

said...

சூப்பர் கலக்கிட்டீங்க! //எப்பொழுதுதாவது நீங்கள்பார்க்கலாம் சுவர்கள் எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கின்றன தாங்கள்சுவரில் மாட்டி இருந்த ஜட்டியை எடுத்தபிறகு என்று!// சான்ஸே இல்லை!. :))))

said...

/மயங்கி விழும் பல்லிகளுக்கு கபால மோட்சமும்
அரண்டு போய் ஒளிந்துக்கொள்ளும்
எலிகளுக்கு மயக்கமும்
ஆண்களின் குளியலின்
தண்டனையாக கிடைக்கின்றன//

hahahahahahaha

said...

அபி அப்பா said...

அட கொடுமையே! ஆதவா எங்க இருந்தாலும் கம்பு எடுத்துகிட்டு இங்க வாங்க:-))

hahahahahahha

said...

பெண்களின் குளியலறையைப் பற்றியும் எழுதியிருக்கலாம் படத்துடன்.

said...

உங்களது குசும்பை ரசித்தேன் குசும்பன் அவர்களே!

இது ஒருவகையிலான பதில் கவிதை உத்தி. சொல்லப்பட்ட வார்த்தைகளை அப்படியே எதிராக மாற்றி சொல்லப்படும் கவிதைப் பாணி! அதை நன்றாக கொஞ்சம் கிண்டலாக செய்திருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது!!

சில உணர்வுபூர்வ கவிதைகளுக்கு இவ்வித பாணி ஒத்துவராது!!!

said...

//ஆதவா said...

உங்களது குசும்பை ரசித்தேன் குசும்பன் அவர்களே!

இது ஒருவகையிலான பதில் கவிதை உத்தி. சொல்லப்பட்ட வார்த்தைகளை அப்படியே எதிராக மாற்றி சொல்லப்படும் கவிதைப் பாணி! அதை நன்றாக கொஞ்சம் கிண்டலாக செய்திருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது!!

சில உணர்வுபூர்வ கவிதைகளுக்கு இவ்வித பாணி ஒத்துவராது!!!/

எந்த வித கவிதையாயிருந்தாலும் குசும்பன் பின்னி பெடலெடுப்பாருன்னுதான் எனக்கு தோணுது :-)