Sunday, July 5, 2009

குற்ற உணர்ச்சி + பதிவர்சந்திப்பும்

பதிவர் சந்திப்பு என்றாலே அவரை சந்திக்க இயலாமல் போனது பற்றியும் என் அலட்சியம் பற்றியும் தான் குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. சிங்கையில் இருந்து அவர் வரும் முன்பே நண்பன் மூலம் அண்ணன் வருகிறார் பார்த்துக்க என்றான். சரி என்றேன் வந்ததும் போன் செய்தார் அவர்கள் சொந்தகாரர் வீட்டில்தான் தங்கி இருக்கிறேன் பார்க்கலாம் என்றார், அதன் பிறகு போனிலும் சாட்டிலும் மட்டுமே பேசிக்கிட்டு இருந்தோம், பல சமயம் அவராகவே போன் செய்தார் வெளியில் ஹோட்டலுக்கு போகலாம் என்றார், ஏனோ சந்திக்கமுடியவில்லை, என் கல்யாணநாள் அன்றுகூட போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு ட்ரீட் தருகிறேன் குடும்பத்தோடு வாங்க என்றார் அன்றும் முடியவில்லை . திரும்ப நான் போன் செய்திருக்கனும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் போன் செய்யமுடியாமல் போய்விட்டது. அத்தனை மாதத்தில் நானாவது அவரை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கனும் அதுவும் செய்யவில்லை, திரும்ப போன் செய்தாவது எங்கயாவது சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கனும் அதுவும் செய்யவில்லை ஏன் என்று தெரியவில்லை. அது எதனால் என்று ஆயிரம் காரணம் கண்டு பிடித்து காரணத்தை காட்டி தப்பிக்கலாம் என்றாலும் காரணம் எதுவும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்னை மன்னியுங்கள் வடுவூர் குமார் அண்ணாச்சி! உங்களிடம் அதன்பிறகு பேசினாலும் அடிக்கடி இது நினைவுக்கு வருகிறது. இங்கு நடந்த பதிவர் சந்திப்பு பற்றி கூட எழுத மனம் இல்லாமல் இருந்ததுக்கு இதுதான் காரணம்.

சில வாரங்களுக்கு முன்பு புதிய பதிவர்கள் சந்திப்புக்கு மாலை ஆறு மணிக்கு கராமா பார்க்கில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, வழக்கம் போல் என்னுடைய புது மொபைலான i-mate செத்துப்போச்சு, (ஓசியில் கொடுத்தாலும் இதை வாங்காதீங்க) பதிவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சரி சமாளிச்சுக்கலாம் என்று நான் என் நண்பர் சிவராமனும் பஸ் புடிச்சு கராமா பார்க்குக்கு சரியாக 6 மணிக்கு வந்தோம், அங்கு ஏற்கனவே கண்ணா,வினோத், கலை, சுந்தர்ராமன், ஆகியோ அங்கிருந்தார்கள், பார்த்ததும் தெரிஞ்சுவிட்டது இவர்கள்தான் புது பதிவர்கள் என்று, பின் அய்யனார், ஆசாத், அசோக்,அவருடைய நண்பர், பின் நாகா, செந்தில்வேலன், பிரதீப் மற்றும் லியோ சுரேஷ் ஆகியோருடன் சந்திப்பு துவங்கியது.

சுந்தர்ராமன் கொண்டு வந்திருந்த மசால்வடையை சாப்பிட்டுக்கிட்டே பேசிக்கிட்டு இருந்தோம், அய்யனார் கட்டுடைப்பு பற்றி போட்ட மொக்கை தாங்க முடியாமல் கலையும், பிரதீப்பும் ஜூஸ் வாங்கி வருகிறோம் என்று கிளம்பியவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வந்தார்கள் அப்பொழுதும் அய்யனார் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்க வேறு வழி இன்றி அமர்ந்தார்கள்.

மணி 8.30 ஆகிவிட வினோத் அலைன் போகனும் என்பதால் சீக்கிரம் முடிச்சோம். அய்யனார், ஆசாத் இருவரை தவிர அனைவரும் புதியவர்கள்
புதிய பதிவர்களை பார்ப்பது இதுதான் முதல் முறை. மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

கலந்துக்கொண்டவர்கள்

கலந்துகொண்ட பதிவர்கள் -
1. அய்யணார் 2. ஆசாத் 3. கண்ணா4. சுந்தர்ராமன்5. வினோத் கெளதம்6. பிரதீப் 7. செந்தில்வேலன்8. சிவராமன்9. கலையரசன் 10. லியோ சுரேஷ்
11 அஷோக் குமார்,12. நாகா,13. ஜெயக்குமார்

*****************
அடுத்த சந்திப்பு இராகவன் நைஜீரியா அவர்களால் நடந்தது, நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு போகும் வழியில் துபாய் வந்ததால் இந்த சந்திப்பு நடந்தது. ஹோட்டலுக்கு வந்ததும் போன் செய்தார் ஆபிஸில் கிளைண்ட் கூட மீட்டிங் என்று சொல்லிட்டு அப்படியே எஸ் ஆகி அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன் பின் அவர்களை அழைத்துக்கொண்டு கோல்ட் சூக் அழைத்து சென்று நகை வாங்கிக்கொண்டு பின் ரூமில் விட்டுவிட்டு திரும்ப அலுவலகம் வந்தேன், மாலை 7 மணிக்கு பதிவர்களை சந்திக்கலாம் என்று இராகவன் சொல்லி இருந்தார் அதன் படி நானும் சுந்தர் ராமன் இருவரும் சென்றோம், அங்கு ஏற்கனவே வந்திருந்த கலை தூரத்தில் நாங்கள் தூக்கி வரும் பார்சல்களை பார்த்துவிட்டு திரும்பி நின்னுக்கிட்டு கிட்டக்க போனதும் அப்பொழுதுதான் பார்த்த மாதிரி மெதுவாக ஓடி வந்து வடை இருந்த பையை மட்டும் வாங்கிக்கொண்டார். (நாலு வடை மிஸ்ஸிங்).


பின் இராகவனுக்கு கேமிராவும், சட்டையும் வாங்க சென்றோம் Sharaf DGயில் வாங்கி கொண்டு இருக்கும் பொழுதே ஆசாத் வந்துவிட அவசர அவசரமாக கிளம்பி போனோம், ஹோட்டலுக்கு அருகில் வந்துவிட்டோம் என்று நினைத்து ஒரு பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே காரை பார்க்கிங் கண்டதும் நிறுத்திவிட்டார் சுந்தர், பிறகுதான் தெரிஞ்சுது அது என் நடை அழகை ரசிக்க நடந்த சதின்னு, பதினாறு வயதினிலே கமல் மாதிரி இடுப்பில் இருந்த மூச்சுப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் நடந்ததை பார்த்து ரசிக்க கலையின் சதியினால் சுந்தர் செய்தது என்று பிறகு தெரிஞ்சுக்கிட்டேன்.


நாங்கள் அங்கு போன பொழுது பிரதீப்,கண்ணா,நாகா ஆகியோரும் வந்திருந்தார்கள் இராகவன் மகன் அரவிந் கூட அனைவரும் பேசிக்கிட்டு இருந்தார்கள். பின் அபுஅப்ஸர் வந்தார். இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.


இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???


டிஸ்கி: மகிழ்ச்சியான செய்தி திரும்ப என் மொபைல் செத்துபோனது அதனால் அதில் இருந்த நம்பர் அனைத்தும் போய்விட்டது, திரும்ப மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம். அல்லது போன் செய்யலாம்:)

21 comments:

said...

நண்பா, உன் குற்ற உணர்ச்சி இல்லாம போக வடுவூர் குமார் அண்ணாவே உனக்கு பின்னூட்டமிடுவார்.
கவலப்படாத.

said...

இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி.

நிச்சயம் இது ஒருவிதமான காரணம் புரியாத, எல்லோருக்குள்ளும் இருக்கும் ஈர்ப்புதான். சந்திப்பின் போது எடுத்த போட்டோக்கள் பார்த்துவிட்டாலும் நீங்களும் சாம்பிள் போட்டோ ஒன்னும் போட்டிருக்கலாம்

said...
This comment has been removed by the author.
said...

//முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி.
//

உண்மை தான்.

சென்னையிலும் ராகவன் அவர்களை சந்திக்க ஒரு பெரும்படையே காத்திருந்தது.

ஏறத்தாழ அனைவரும் முகம் பார்க்காத, எழுத்துக்களால் மலர்ந்த 'நட்பூ'க்கள்.பார்த்த மறுகணம்,
ஏதோ நாற்பதாண்டு பழக்கம் போல அனைவரும் கூடி மகிழ்ந்த தருணங்கள் அலாதியானது.

said...

போன் நம்பர் இல்லயா?

ஏ, போன் நம்பர் இல்லயாம்பா?

யாராவது கலாய்ங்க?

அவருக்கு போன் போட்டு, அவரு நாருன்னு கேட்டா,
"My name is Bond, James Bond" னு சொல்லுங்க.

said...

அட! குசும்பன் இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்.
நானும் முதலில் உங்களிடம் சொல்லிய படி “பெரிய பதிவரோ” என்று நினைத்து விட்டு விட்டேன் இருந்தாலும் ஜோசப் பால்ராஜ் உங்களைப் பற்றி சர்டிபிகேட் வேறு கொடுத்திருக்கிறாரே? எப்படி தப்பாகும் என்ற நினைப்பு வேறு வந்து போனது.நான் யாரையும் இரண்டாவது முறை கூப்பிட்டு தொந்தரவு செய்ய மாட்டேன்(என்னுடைய குணம்) அவரவர் நேரம் அவர்களுக்கு, நாம் கூப்பிடு நபர் என்ன சூழ்நிலையில் இருக்கிறாரோ என்ற எண்ணம் கூட.
குற்ற உணர்ச்சியெல்லாம் தேவையில்லை குசும்பன்.இதை வெளிப்படையாக சொன்னதில் இருந்தே நீங்கள் எப்படிப்பட்டவர் எனபதை தெரிவித்துவிட்டீர்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.

said...

சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்


:)

said...

திரும்ப மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம்.
//


என்னோட நம்பர் : 999 கூப்பிட்டு மொக்கை போடவும்


அதற்கு முன்பு 998 க்கு போன் செய்து சொல்லி விடவும்

:)

said...

என்னது என் நம்பரும் இல்லையா?..ஒகே நோட் பண்ணிக்கிறேன். குசும்பனை கலாய்க்க ஒரு சந்தர்ப்பம்..

said...

ம்ம்ம்..

said...

//ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???//


எத்தனையோ புதியவர்களை சந்தித்திருக்கிறேன், பட் அன்றய சந்திப்பில் எல்லோரும் புதியவர்கள் என்ற எண்ணமே இல்லாமல் சிறுவயது நண்பர்கள் போல் அலாவிக்கொண்டு இருந்தோம்

குசும்பா லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டுட்டேல் போங்கோ..

said...

//மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம்//

ஆகா!! அதனாலதான் என் போன் நம்பர் கேட்டீங்களா ராசா?

//மூச்சுப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் நடந்ததை//

மூச்சுப்பிடிப்பை காரணத்தை சபையில சொல்லட்டுமா பாஸூ?
(இதுவரைக்கும் வாங்கி தரேன்னு சொன்ன Budweiser இன்னம் வரலை)

said...

நல்லது....

said...

என் நம்பரும் இல்லையா...

சரி!

said...

அன்னிக்கு வேகம் வேகமா தீர்த்தவாரி திருவிழாவிற்கு கிளம்பிட்டு என்னால தான் 8:30 மணிக்கு மாநாடு முடிஞ்சு போச்சுன்னு சொல்லுரிங்கலே..:))

கலையும் கண்ணாவும் காலி பண்ணது வடை டப்பாவ மட்டும் இல்லை அதுக்கு அப்புறமும் சுந்தர் சாரை எதோ ஹோடேல்க்கு அழைத்து சென்று மொக்கை போட்டு உள்ளனர்..

said...
This comment has been removed by the author.
said...

//
இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.
//
குசும்பு சக்ரவர்த்தினு உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம்..

ஊருக்கு போயிருந்ததால என்னால இராகவன் நைஜீரியா சந்திப்பிற்கு வரமுடியலை!

//
ஆயிரம் காரணம் கண்டு பிடித்து காரணத்தை காட்டி தப்பிக்கலாம் என்றாலும் காரணம் எதுவும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்னை மன்னியுங்கள் வடுவூர் குமார் அண்ணாச்சி!//


"மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனிதன்...." தலைவர் விருமாண்டில சொன்னது ஞாபகத்துக்கு வருது :)

said...

குத்திட்டேன்யா குத்திட்டேன் ... ( ஓட்டை தான் )

said...

//அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி.//

நானும் இப்போ உங்க சொந்தக்காரன் (பதிவர்) ஆகிட்டனே.. :)

said...

//இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.//

வெள்ளகாரன பழிவாங்க இதைவிட நல்ல வழி எனக்கு தெரியல!
உடனே கிளம்புங்க!

போட்டோ எடுக்கலையா!

said...

//
இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???
//
வாஸ்த்தவம் தான்..

கோயமுத்தூரில் எனக்கும் இப்படி பதிவர்கள் உடனான முதல் சந்திப்பனுபவம் ராகவன் அண்ணனால் கிடைத்தது..

பகிர்வுக்கு நன்றி அண்ணா..