மனைவி எங்கேயும் என்னை விட்டு போவது இல்லை ஆனா அவுங்க அம்மா அப்பா தங்கச்சிக்கிட்ட மட்டும் போனில் பேச மொபைல் எடுத்துக்கிட்டு மாடிக்கு போவாங்க அந்த கொஞ்ச நேர கேப்தான் கிடைக்கும் என்று சொல்பவரா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு மேட்ச் ஆவும்.
அவுங்க அம்மா வீட்டுக்கு போனில் பேச ஆரம்பிச்சா குறைஞ்சது ஒரு 2 மணி நேர கேப் உங்களுக்கு கிடைக்கும் அது போதும் சூப்பரா ரவா இட்லி செய்ய!
ரவா இட்லி செய்வது எப்படி?
இரண்டு டம்ளர் ரவாவை பொன் நிறமாக வறுக்கவும் கொஞ்சம் அசந்தாலும் ரவா நம்ம கலருக்கு வந்துடும் ஜாக்கிரதை! மனைவி இல்லாதப்ப ராவா மட்டும் தான் அடிக்க தெரியும் ரவா எல்லாம் வறுக்க தெரியாதுன்னா ஒன்னும் செய்யமுடியாது. உங்களை எல்லாம் உருட்டி உருட்டி அடிக்கனும்!
ஒரு கேரட்டை எடுத்து நைஸாக சிப்ஸ் கட்டரில் வைத்து சீவிக்கவும், ஒரு நாலு பச்சை மிளகாயை எடுத்து சின்னதாக வெட்டிக்கவும், கொஞ்சம் கொத்தமல்லி இலை, பீன்ஸ் ஒரு ரெண்டு பீன்ஸ் அதையும் சின்ன சின்னதாக வெட்டிக்கனும். (மெல்லிசாக என்பதைதான் சின்னதாகன்னு சொல்லி இருக்கேன்)
அடுப்பில் சட்டியை வைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, கடலைபருப்பு போட்டு வறுத்து பின் அதோடு வெட்டி வைத்த காய்கள் அனைத்தையும் போட்டு கொஞ்சம் வதக்கிக்கவும். பின் அது ஆறியதும் வறுத்துவெச்ச ரவாவோடு உப்பு போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தயிர்(புளிக்காத தயிர்) சேர்த்து பிசையவும். பின் அதோடு ஒரு பாக்கெட் Eno கொட்டி பிசையவும்
இட்லிமாவு பதம் வந்ததும் தயிர் சேர்ப்பதை நிறுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும் ரவா ஊறி கொஞ்சம் கெட்டியாக இருக்கும் பின் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் தயிர் போட்டு குழைத்துவிட்டு இட்லி தட்டில் கொஞ்சம் நெய் ஊற்றி அதன் மேல் மாவை ஊற்றவும். வெந்ததும் எடுத்துவிடவும்.
அப்படியே சுட சுட சாப்பிட்டா சும்மா கும்கதான்னு இருக்கும் தொட்டுக்க தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.
தேவையானவை:
ரவா இரண்டு டம்ளர்
பச்சை மிளகாய் 4
பீன்ஸ் 2
கேரட் 1
மிளகு
கடலைபருப்பு
தயிர்
Eno
டிஸ்கி: மங்களூரான், சஞ்சய் போன்ற ஆட்கள் அவசியம் செய்யவேண்டிய டிபன் ஐட்டம்!
டிஸ்கி2: சக்திவேல் போன்றவர்கள் கமெடி பதிவு எழுதும் பொழுது நாம எல்லாம் என்ன எழுதுவது அதான் சமையல் குறிப்பு பதிவு! ஒரே ஒரு பதிவின் மூலம் பதிவுல சூட்டை குறைத்த அண்ணன் சக்திக்கு ரசிகர்மன்றம் துபாயில் ஆரம்பிச்சாச்சு என்பதை உங்களுக்கு சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!
45 comments:
:)))))))))))
அனுபவம் பேசுகிறது.
நீங்க try பண்ணி பாத்தீங்களா? இல்லை எங்கள test பண்ணுறீங்களா?
சக்திவேல் போன்றவர்கள் கமெடி பதிவு எழுதும் பொழுது நாம எல்லாம் என்ன எழுதுவது அதான் சமையல் குறிப்பு பதிவு
:)
ரவா இட்லி நல்ல சாப்பாடு?
விட்டா சக்திவேலை மிஞ்சிட்வ போலிருக்கே? :-)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நாலு ரவா இட்லி சாப்பிட்டிட்டு
பத்தாதுன்னு சிவ்ஸ்டார்பவன்ல
நான் வெஜ் மீல்ஸ்ம், சிக்கன் சுக்கா
சாப்பிட்டா மலை பாம்பு மாதிரி தான் இருக்கனும் :)))
//கொடுத்து வெச்சு இருக்கணும்//
ஆமா, இந்த மாதிரி இட்லி செஞ்சு யாருகிட்ட கொடுக்கணும், அதை யார் எங்க வெச்சு இருக்கணும்????
ஒரே குழப்பல்ஸ் ஆஃப் தி இண்டியாவா இருக்கு.
அது எதுக்குங்ணா Eno கலக்குறது. கெமிக்கல் ஏதும் வம்பு பண்ணிறாது?. இட்லி சாப்பிட்டுட்டு தனியா Eno சாப்டுக்கலாம்.
ஏய்யா குசும்ப்ஸ்,
தேவையான பொருட்களில் உப்பைக் காணோமே!!!!
வேணுமுன்னுதான் விட்டீரா?:-))))
உங்க பதிவைப் படிச்சிட்டு ஓட்டுப் போடாம போனா சக்திவேல் அண்ணாச்சி கோவிச்சிக்குவாரு!
அதனால உங்களுக்கு முதல் முதலா ஒரு + குத்து!
//ஏய்யா குசும்ப்ஸ்,
தேவையான பொருட்களில் உப்பைக் காணோமே!!!!
வேணுமுன்னுதான் விட்டீரா?:-)))//
கண்டனப் பதிவு, எதிர்ப்பதிவு, தனிமனிதத்தாக்குதல் இதற்கெல்லாம் டென்ஷன் ஆகாம இருக்கும்னா உப்பு போட முடியுமா என்ன?
:)
அங்கதான் குசும்பன் நிக்கிறார்!
// ஏய்யா குசும்ப்ஸ்,
தேவையான பொருட்களில் உப்பைக் காணோமே!!!!
வேணுமுன்னுதான் விட்டீரா?:-))))//
ரீச்சர்’கிறதே நிருபிச்சிட்டாங்க.... :))
ரீச்சர்,
உப்பு போட்டாலும் சரி போடாமே விட்டாலும் சரி அது சாப்பிடுறமாதிரியா இருக்க போகுதுன்னு நினைச்சிட்டாரு குசும்பரு.. :)
//ஆமா, இந்த மாதிரி இட்லி செஞ்சு யாருகிட்ட கொடுக்கணும், அதை யார் எங்க வெச்சு இருக்கணும்????//
இட்லி செஞ்சி எலிப்போறிக்குள்ளே வைக்கணும்னு நினைக்கிறேன்!
என் அன்புத் தங்கை தூயா சார்பாக இதை நான் வரவேற்கிறேன்.
ஈநோ எதுக்கு மாப்பி சேர்கனும்?
ஒரு வேளை இந்த பதிவுக்கு நோ வந்துரக்கூடாதுன்னு ஈநோ சேர்த்தியா?
//நாமக்கல் சிபி said...
//ஆமா, இந்த மாதிரி இட்லி செஞ்சு யாருகிட்ட கொடுக்கணும், அதை யார் எங்க வெச்சு இருக்கணும்????//
இட்லி செஞ்சி எலிப்போறிக்குள்ளே வைக்கணும்னு நினைக்கிறேன்!//
வாசத்துல ஒரு எலி கூடக் கிட்ட வராதே
//இரண்டு டம்ளர் ரவாவை பொன் நிறமாக வறுக்கவும் கொஞ்சம் அசந்தாலும் ரவா நம்ம கலருக்கு வந்துடும் ஜாக்கிரதை! //
அது உங்க கலரு, நம்ம கலரில்ல!நாங்கெல்லாம் ஒருகூடை சன் லைட்டையும், மூன்லைட்டையும் கலந்து கட்டியவங்க!
//மங்களூரான், சஞ்சய் போன்ற ஆட்கள் அவசியம் செய்யவேண்டிய டிபன் ஐட்டம்//
அங்கிள் சஞ்சயை இதில் இழுப்பது கண்டத்துகுறியது!
தொழிலதிபர் கோவை அண்ணப்பூர்னாவை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளார், அவர் ஏன் இதை செய்து சாப்பிடனும்!
இட்லி செஞ்சி எலிப்போறிக்குள்ளே வைக்கணும்னு நினைக்கிறேன்!
:)))))))))))
ம்ஹூம்...உங்க ரூமுக்கே வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் ;;)
எல்லாம் சரி போட்டோ கூட நல்லாயிருக்கு...நீங்க தான் செய்திங்க...ஆனா யாரு சாப்பிட்டா?
அதை சொல்லவேல்ல ;)
Eno ????
அப்படினா என்ன??? அதை எதுக்கு சேர்க்கனும்?
நன்றி சென்ஷி
நன்றி குடிகாரன் நான் செஞ்சதுதான் அது:)
நன்றி சுரேஷ்
அண்ணாச்சி தானே தலைவன் சக்தியை மிஞ்ச யாராலும் முடியாது!
உங்கள் ஆசை பலிக்காது! ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சக்தி!
ஆதவா கோதுமையில இராவுல இராட்டி தட்டுனீங்களே செரிக்கலையா? அவ்வ்வ்ன்னு ஏப்பம் விடுறீங்க! அதுக்கு என்ன பேரு சொன்னீங்க ச..
J நேற்று மதியம் சாப்பிட்டது மட்டன் சுக்கா!
நன்றி ஐந்தினை
தராசு ரொம்ப பேசுனீங்க இட்லிய ஊட்டிவிட்டுவிடுவேன்:)
eno மாவை கொஞ்சம் புளிக்கவைக்கும் அதோடு மென்மையாக்கும், சோடாப்புக்கு eno பெட்டர்!
டீச்சர் அவ்வ்வ்வ்வ்வ்:)
அண்ணே சிபி அண்ணே இன்னைக்கு நானா?:))
இராம் சின்ன தல சாப்பிட புண்ணியம் செஞ்சு இருக்கனும்:)))
சிபி அண்ணே அந்த எலியும் யாருன்னு சொல்லிடுங்க!
சோசப்பு நன்றி ஈனோ பற்றி சுல்தானுக்கு சொல்லி இருக்கேன் பாரு
Subankan நன்றி
//ஒருகூடை சன் லைட்டையும், மூன்லைட்டையும் கலந்து கட்டியவங்க!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//அண்ணப்பூர்னாவை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளார்//
யார் அது அண்ணப்பூர்னா?
நன்றி gulf tamilan
கோபி ரூம் நண்பரிடம் கேட்டு பாரு அவரு சொல்வாரு!
பதி நன்றி உங்கள் கேள்விக்கு பதில் மேலே!
//யார் அது அண்ணப்பூர்னா? //
அய்யய்யோ!
அப்ப நானா தான் உளரிட்டேனா!
//மங்களூரான், சஞ்சய் போன்ற ஆட்கள் அவசியம் செய்யவேண்டிய டிபன் ஐட்டம்!//
Mangalooraar ok... Sanjaikku eppo kalyaanam aachu??? Sollavae illa !!!!
Oru kalyaana saapattai izhandha varuththathil G3 :-(((
தல இன்னும் ஒரு இளிச்ச்வாய்ன் மாட்டினா 300 ஆகிடும்.. வாழ்த்துக்கிறேன்..
என்னது? இட்லியா? போங்க பாஸ்...
\\\வாசத்துல ஒரு எலி கூடக் கிட்ட வராதே///
செத்தே போயிரும். அதுக்குதான் இந்த இட்லி
\\\ யார் அது அண்ணப்பூர்னா ///
பதிவருன்னு நெனச்சீங்களா அது ஹோட்டல் ம்மா
//கொடுத்து வெச்சு இருக்கனும்!!!
//
என்ன கடனா??
300 க்கு வாழ்த்துகள்
:)
வால்பையன் said...
அப்ப நானா தான் உளரிட்டேனா!//
பிகரு எப்படி? மாமா மாதிரியே அழகா?:))
G3 உங்களுக்கு சொல்லவில்லையான்னு சஞ்சய்க்கிட்ட கேட்டேன், இல்லை அன்று ஹோட்டலில் ஆர்டர் செஞ்சு இருந்ததே 20 பேருக்கு சாப்பாடுதான் உங்களை கூப்பிட்டா மத்தவங்களுக்கு பத்தாதுன்னுதான் கூப்பிடவில்லையாம்!:)
//கார்க்கி said...
தல இன்னும் ஒரு இளிச்ச்வாய்ன் மாட்டினா 300 ஆகிடும்.. வாழ்த்துக்கிறேன்..//
கார்க்கி என் வாசகர்களை இளிச்சவாயன் என்று சொல்வது அதிகாரத்தின் உச்சக்கட்டம், ஆணவத்தில் பிரதிபலிப்பு!
நாஞ்சில் திரும்ப கிளம்பிட போறாங்க!:)
நன்றி அப்துல்லா அண்ணாசி
//அண்ணாசி //
யோவ் நான் அண்ணாசி இல்லய்யா...அண்ணாச்சி
:)
இட்லி ஓ.கே., ஊட்டிவிடுறது யாரு?
அப்படியே ரவாவுல சப்பாத்தி செய்யறது
எப்படின்னு எழுதிட்டீங்கன்னா.. புன்னியமாபோகும்!!
//கார்க்கி என் வாசகர்களை இளிச்சவாயன் என்று சொல்வது அதிகாரத்தின் உச்சக்கட்டம், ஆணவத்தில் பிரதிபலிப்பு//
நான் எல்லோருடைய ஃபாலொயர்சயும் அப்படித்தான் சொல்வேன்
அதனால் இது சமத்துவம்தான் சகா
//நான் எல்லோருடைய ஃபாலொயர்சயும் அப்படித்தான் சொல்வேன்
அதனால் இது சமத்துவம்தான் சகா//
கார்க்கி பதிவு திரும்ப கிடைச்சிடுச்சா இல்லை இன்னும் ஹேக்கிங்க்ல தான் இருக்கா!?
photo தெளிவா வரலையே.. :)
நாங்களாம் எம் டி ஆர் ரவா மிக்ஸ் தான்..
ஈனோ போடறது புது விசயமா இருக்கே.. சாப்பிடவாங்க தளத்தில் இணைந்து ரெசிப்பி எழுத சம்மதமென்றால் சொல்லவும் ...
குடிகாரன்
அனுபவம் பேசுகிறது.
///
இருந்தாலும் குசும்பனை இப்படி பப்ளிக்குல மானத்தை வாங்க கூடாது
:)
ஈனோ போடறது புது விசயமா இருக்கே..
//
ரவா(குசும்பு) இட்லி செறிக்க ENO போட்டுக்கனும்
இல்லைனா மலைபாம்பு மாதிரி சாப்பிட்டுவிட்டு நெளிய வேண்டியிருக்கும்
:)))
நேத்துலேந்து இட்லி அப்படியே இருக்கே எலியும் சாப்பிடல நீயும் சாப்பிடல...?
ம் சம்திங்க் ராங்
//ஒரு கேரட்டை எடுத்து நைஸாக //
இப்படி நைஸா (ஒளிந்து கொண்டு) செய்றதுனாலதான்
சக்திவேல் போன்ற புலனாய்வினரிடம் மாட்டிக் கொள்றீங்க :)
தோடா.. சமயல் வல்லுனாரு சொல்லிட்டாரு... :)
குடிகாரன்
அனுபவம் பேசுகிறது.
///
இருந்தாலும் குசும்பனை இப்படி பப்ளிக்குல மானத்தை வாங்க கூடாது
:)
அண்ணன் இதுக்கெல்லாம் கோபித்துக்கொ(ல்ல)ள்ள மாட்டார்
ரவா இட்லியா..?
நான் கேள்விப்பட்டதே இல்லியேப்பா..!
எப்படி இதையெல்லாம் சாப்பிடுற..?!!
Eno - அப்பிடின்னா என்ன மாம்ஸ்??
பதிவுக்கு மிக்க நன்றி.
/
Monks said...
//ஒரு கேரட்டை எடுத்து நைஸாக //
இப்படி நைஸா (ஒளிந்து கொண்டு) செய்றதுனாலதான்
சக்திவேல் போன்ற புலனாய்வினரிடம் மாட்டிக் கொள்றீங்க :)
/
ரிப்பீட்டேய்
// கொஞ்சம் அசந்தாலும் ரவா நம்ம கலருக்கு வந்துடும் ஜாக்கிரதை.//
சும்மா செவ செவன்னு தக்காளிப்பழம் மாதிரியா தல
சிம்ரன் ஆப்பக்கடை பக்கத்துல "குசும்பன் இட்லிக் கடை"யா?
Post a Comment