காமெடியனாக இருப்பதில் இருக்கும் ஒரு கஷ்டம் சில விசயங்கள் சீரியசாக பேசும் பொழுதுமற்றவர்கள் அதையும் நகைசுவையாக எடுத்து கொள்வதுதான், ஒன்றுக்கு மூன்று முறை இல்லை நிஜமாகதான் சொல்கிறேன் என்று சொன்னாலும் அது மற்றவருக்கு நகைசுவையாகதான் தெரியும் பொழுதுகொஞ்சம் வலிக்கதான் செய்கிறது. இதை அதுபோல் எடுத்துகொள்ளாதீர்கள்.
முதன் முதலாக உன்னிடம் பேசிய நாளை நினைவில் வைத்து கொள்ளவில்லை ஆனால் என்ன பேசினேன் என்று நினைவு இருக்கிறது, அன்று எனக்கு தெரியவில்லை உன்னுல் விழபோகிறேன் என்று!
வழக்கம் போல் கிண்டலுடனே ஆரம்பித்த நம் அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து இன்று ஒரு புயலை போல் மையம் கொண்டு உள்ளது.
நம் சமுதாயத்துக்கு ஒரு நடிகன் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும், அரசியல்வாதி என்றால் இதைதான் செய்யவேண்டும் என்று ஒரு சட்டதிட்டங்களை வைத்து இருக்கிறார்கள், அதுபோல் ஒரு கவிஞன் என்றால்"அன்பே" "அமுதே" என்றுதான் எழுதவேண்டும் என்ற சட்டத்தை உன்மீதும் வைத்து பொருத்த முயலும் அதை நீ உன் வார்தைகளால் உடைக்கிறாய் பொறுத்துகொள்ள முடியாதவர்கள் உன்னை சாடுகிறார்கள்.
பெண்களை பற்றியும் மதுவை பற்றியும் எழுதுவதால் நிஜத்திலும் அப்படிதான் என்று முடிவு கட்டும் மக்களை பார்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது வாய் வழியாக அல்ல! ஏன் ஒருவன் வெளிப்படையாக இருந்தால் அவன் மோசமானவனாகதான் இருக்கவேண்டுமா? என்ன? உன் வெளிபடையான பேச்சுதான் எனக்கு மிகவும்பிடித்தது. உண்மையாக பழகியவர்களுக்கு தெரியும் நீ நல்லவன் என்று.
எனக்கும் தெரியும் நீ நல்லவன் என்று!!! நீ வெறும் புலி தோல் போர்திய பசுதான் என்று வேறு யாருக்கு தெரியவேண்டும்?
......................அய்யனாருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
!?
உண்மையிலேயே அய்யனார் அபிஅப்பாவை காட்டிலும் நல்லவரா....:)
அபிஅப்பா நல்லவரா ????????????
நாமக்கல் சிபி said...
!?
சும்மாதான் தள வெளிபடையாக பேசுபவர்கள் எல்லாம் தப்பானவர்கள் இல்லை என்று சொல்லதான்:)
சும்மா அதிருதுல said...
உண்மையிலேயே அய்யனார் அபிஅப்பாவை காட்டிலும் நல்லவரா....:)
இரண்டு பேரையும் தராசில் போட்டால் ஒரு எடையைதான் காட்டும்
இம்சை said...
அபிஅப்பா நல்லவரா ????????????
இதுல என்ன இம்சை சந்தேகம் உங்களுக்கு அவருக்காவும் ஒரு பதிவு போட்டுவிடலாம்.
சித்த"ஆப்பு" ...என்ன டென்சன்? யாருக்கு இப்ப இந்த விளக்கம்?
என்ன சொல்லவற்றீங்க.
அய்யனார் நல்லவருன்னு யாருக்காவது புரியனுன்மா. . . .?
இல்ல
வேறு யாரோ நல்லவருன்னு அய்யனாருக்கு புரியனுமா. . .?
நீங்க சொல்லவற்றது எனக்கு புரியுது.
(இளவஞ்சியிடம் இருந்து எஸ்கேப் : -)) )
யாருக்கு சொல்ல வந்தீங்கன்னு தான் புரியல. . ..
Post a Comment