Sunday, August 5, 2007

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

அன்புள்ள அண்ணி
இதோ இன்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. உங்கள் முகத்தை பார்க்காமல் நாட்களை ஓட்டிவிட்டேன். உங்கள் முகத்தை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. இன்று நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்பதால்.

அவன் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னான் உங்கள் காதலை பற்றி. அண்ணி பெயர் என்ன என்று கேட்ட பொழுது சமீரா பானு என்றான், என்ன டா எப்படி டா மதம் விட்டு மதம் கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா என்றதற்கு அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

முதன் முதலாய் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்து வந்த பொழுது நீங்கள் முகத்தைமறைக்க முயன்றீர்கள், அப்பொழுது உங்களை தடுத்து இவன் எனக்கு தம்பி இது போல் மீண்டும்
ஒரு முறை செய்யாதே என்றான். அப்பொழுது கேட்டிர்கள் "ஏங்க கொஞ்சம் இவங்க கிட்ட சொல்ல கூடாதா இந்த அடிதடி எல்லாத்தையும் விட சொல்லி. இத பாருங்க கையில் எப்படி அடி பட்டு இருக்கு என்று அவன் அடி பட்ட கையை காட்டினீர்கள்" நேற்று நடந்த சண்டையே எனக்காகத்தான் என்று எப்படி நான் உங்களிடம் சொல்ல முடியும்.

அன்று தேதி சரியாக தெரியவில்லை டேய் மாப்பிள்ள பானுவ கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று நினைக்கிறேன் அவுங்க வீட்டுல ஓக்கே சொல்லிட்டாங்க இதுக்கு மேல காத்திருக்க முடியாதுன்னுட்டாங்க. அடுத்த மாசம் அவுங்க அப்பா இந்தியா வருகிறார் அப்ப கல்யாணம் வைக்கனும் என்கிறார்கள். என்ன சொல்கிறாய் என்றான். எப்படி டா இன்னும் நீயும் செட்டில் ஆகல முஸ்லீமா மாறி கல்யாணம் செஞ்சா பின்னாடி நம்ம வீட்டில் பிரச்சினை என்றேன். அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

சரி டா அண்ணனுக்கு தெரிந்தால் என்றதற்கு அவன் ரிலீஸ் ஆகி வருவதற்கு இன்னும் ஒரு 6 மாசம் ஆகும் அத பிறகு நாகூர் போய் கல்யாணம் நம்ம வீட்டுல தங்கச்சி கல்யாணம் முடியும் வரை சொல்லவேண்டாம், அதன் பிறகு சொல்லிக்கலாம் பானு கல்யாணத்துக்கு பிறகு அங்கேயே இருக்கட்டும் என்றான்.

அன்று மதம் மாறும் சடங்குகள் முடிந்த பின் அன்று உங்கள் கல்யாணம் நடந்தது. வீட்டுக்கும் வந்தோம், அவன் வீட்டில் என்னோடு ஊட்டிக்கு போவதாக சொல்லிவிட்டு இரவு உங்கள் வீட்டுக்கு வந்து விட்டு விட்டு ஏதோ பெரிய சாகசம் நடத்தியது போல் மகிழ்ச்சியோடு திரும்பினேன்.
அந்த மகிழ்ச்சி 1 வருடம் கூட நிலைக்க வில்லை ஆகஸ்ட் 6 காலை 11.30 மணிக்கு நண்பனிடம் இருந்து போன், மாப்பிள்ளை நம்ம நம்ம செந்தில் பானு, வீட்டுக்கு போய்ட்டு திரும்ப வரும் பொழுது .........

உன் காதல் கல்யாணம் சீக்கிரம் முடிந்தாலும் நீ செய்து வைத்த காதல் திருமணங்களில் இன்னும் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய டா என் அருமை நண்பனே.

(என்றும் உன் நீங்காத நினைவுகளுடன், பூண்டி கல்லூரி நண்பர்கள்).

8 comments:

said...

நல்ல முயற்சி.

நல்லா கதை சொல்ல(எழுத) வருகிறது உங்களுக்கு. பாராட்டுக்கள்.

தொடர்ந்து எழுதுங்க குசும்பன்.

said...

:(
இது கதையா நிஜமா,பொதுவானவைன்னு
வகைப்படுத்தி இருக்கீங்களே!

எப்போதும் ...... போட்டு கதைய ரெண்டா பிரிச்சிருப்பீங்க..இந்த முறை .... அப்புறம் கதையை க்காணோமே..

said...

சிபி கதையல்ல இது இன்று என் உயிர் நண்பனின் நினைவு நாள்.

said...

(-:

said...

குசும்பன் எப்பொழுதும் சிரிக்க வைப்பீர்கள்.
இன்று வருத்தப் பட வைத்துவிட்டீர்கள். . . .

மிகவும் கஷ்டமாக இருக்கிறது. . . .

said...

\\(என்றும் உன் நீங்காத நினைவுகளுடன், பூண்டி கல்லூரி நண்பர்கள்). \\

;-(

Anonymous said...

it is so touching

neengal marakkamal antha naalai ninaivu koornthu unkal nanbarukku
anjali seluthukireerkal

ethanai ethanai uravukal ippadi...

thottuviteerkal
mano

said...

:(( என்ன சொல்றதுன்னு தெரியல...