வழிதெரியாமல் தவிக்கும் ஒருவர் நம் வலைபதிவர்களிடம் வழிகேட்டால் எப்படி வழி சொல்வார்கள் என்று ஒரு கற்பனை. பெரிய தலைகள் எல்லாம் கோச்சுக்காதீங்க:)
அப்பாவியான அவர் எதிரே நம்ம ஜோசப் சார் எதிரில் வருகிறார்.
அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
ஜோசப் சார்: ம்ம்ம் இங்க வா இப்படியே நேரா போய் "திரும்பிபார்" ஒரு புலிய மரம் தெரியும்,அங்க இருந்து லெப்ட்ல போய் "திரும்பிபார்" ஒரு Bank போர்ட் தெரியும் அங்கே இருந்து, அங்க இருந்த ரைட்ல திரும்பி பார் ஒரு பழைய வீடு தெரியும், நேராக போய் "திருப்பி பார்" நான் இங்க நிற்பது தெரியும். திரும்பி பார்துக்கிட்டே வந்தின்னா நான் நிற்கும் இடத்தில் இருக்கும் எதிர் வீடுதான் அந்த வீடு.
அப்பாவி: ?????????????????
*****************************************
வீட்ட கண்டுபிடிக்க முடியாத அப்பாவி எதிரில் நம்ம செந்தழல் ரவி வருகிறார்.
அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
செந்தழல் ரவி: என்னய்யா என்னை பார்க்காம திரும்பி யார பார்த்து அட்ரெஸ் கேட்கிற?
அப்பாவி: இல்ல இதுக்கு முன்னாடி வேற ஒருத்த கிட்ட கேட்டேன் அடிக்கடி திரும்பி பார்க்க சொன்னார் அதனால கழுத்து சுலுக்கிக்கிச்சு.
ஹோ அப்படியா ! இப்படியே நேராக போ அங்க பச்சகலர் பெயிண்ட் அடிச்ச வீட்டு கொடியில நீலகலர் சுடிதார் காஞ்சிக்கிட்டு இருக்கும், அதுக்கும் பக்கத்தில் இருக்கும் ரோட்டில் ரைட்டில் கட் செஞ்சீன்னா ஒரு காலேஜ் பஸ்ட் இயர் படிக்கும் பெண் மொட்ட மாடியில் நின்னு படிச்சிக்கிட்டு இருக்கு. அந்த வீட்டுக்கு எதிர் பக்கம் போகும் ரோட்டில்....
செந்தழல் : இப்ப டைம் என்னா?
அப்பாவி: 12.30
செந்தழல்: அய்யயோ பிலிப்பைன்ஸில் 10 மாடலிங் பெண்களுடன் மீட்டிங் இருக்கு பிளைட்ட பிடிக்கனும், மீதி வழியை பிளைட்டில் போகும் பொழுது லேப் டாப்பில் டைப் செஞ்சு மெயில் செய்கிறேன் இப்ப பை.
************************************************
எதிரில் நம்ம அய்யனார் வருகிறார்
அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
அய்யனார்: இப்படியே நேரா போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... அங்கே இருந்து ரைட்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒரு டாஸ்மார்க் வரும் அங்கே இருந்து லெப்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ. ஒரு "குட்டி" சுவரு வரும் அங்கே இருந்துநேரா வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... பக்கத்தில் ஒரு நீலகலர் பெயிண்ட் அடிச்ச வீடு இக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
தம்பி டைம் என்னா? ஏன்னா நான் கால சக்கரத்தை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.
அப்பாவி: 6.30
அய்யனார்: சாரி சார் எனக்காக பல்லில் கிளிப் போட்ட பெண், ஜாக்கெட்டில் ஊக்கு போட்ட பெண், ராதிகா எல்லாம் வெயிட்டிங் வேற ஆள் கிட்ட கேளுங்க...
**********************************************
தம்பி கதிர் எதிரில் வருகிறார்
அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
தம்பி: வாய்யா! என் பேரு எப்படி தெரியும்?
அப்பாவி: உங்க பேரு தம்பிங்களா ரொம்ப சந்தோசம்... இந்த அட்ரஸை கொஞ்சம் சொல்லுங்களேன் காலையில் இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்
தம்பி: சரி வா ஒரு டீ சாப்பிட்டு கிட்டே அட்ரஸ் சொல்கிறேன். சரி உன் பேரு என்னா?
அப்பாவி: .................
தம்பி: கூட பிறந்தவுங்க எத்தனை பேர் என்னா வேலை செய்யுற? எத்தனை பிள்ளை எல்லா விவரத்தையும் கேட்டுகிறார். பின் நான் கிளம்புறேன் பை பை
அப்பாவி: தம்பி இன்னும் நீங்க அட்ரசை சொல்லவே இல்ல...
தம்பி: போய்யா இப்பதான் பதிவு போட மேட்டர் உன் கிட்ட இருந்து வாங்கி இருக்கேன் அது மறக்கும் முன் நான் பதிவு போடனும் பை பை.
*********************
எதிரில் ஜீ.ராவு கையில் அர்சனை தட்டோடு வருகிறார்.
சார் சார் உங்கள பார்தா ரொம்ப நல்லவுங்க போல தெரியுதுகொஞ்சம் இந்த அட்ரஸ் எங்க இருக்கு சொல்ல முடியுமா?
ஜீ.ரா : ஓம் முருகா! இப்படியே நேரா போனா, ஒரு முருகன் கோயில் வரும் அங்க இருந்துலெப்டில் திரும்பினா ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்கே இருந்து நேராக போனா ஒரு அம்மன் கோயில் வரும் அதுக்க அடுத்த சந்தில்....
மணி என்னா ஆச்சு?
அப்பாவி: 8.30
ஜீ.ரா: கோயில் நடை சாத்தும் முன் நான் போக வேண்டும் பை பை.
**********************
எதிரில் நம்ம அண்ணாச்சி வருகிறார்.
அப்பாவி: அண்ணே அண்ணே இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?
அண்ணாச்சி : எலே செவுத்து மூதி எங்கன நின்னுக்கிட்டு என்ன விலாசத்த கேக்குதியபோலே போய் வட பழனி பஸ் ஸ்டாண்டில் கும்பகோணம் பஸ் புடிச்சு ஊருக்கு போய் அங்கன கேளுலே, வந்துட்டாங்கிய எங்கன இருந்துதான் இப்படி கிளம்புவானுகிய!!!
அந்த அப்பாவி அபி அப்பா!!!!
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
குசும்பனுக்கு நிகரா காமெடி பண்ண குசும்பனேதான் திரும்ப வரணும்!
அப்பாவி : சார் சார் இந்த அட்ரஸ் எங்க இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க
குசும்பன் : உன் கையில தான்
அப்பாவி : விளையாடாதிங்க சார்
குசும்பன் : நேரா போயி ரைட்டுல திரும்பு அங்க ஒரு நாயி படுத்து கிடக்கும் அங்க இருந்து பத்தடி போயி ரைட்டுல கட் பண்ணு....
அப்பாவி குறுக்க பூந்து சார் நாய் அங்க இல்லைனா ?
இது மாதிரி குறுக்க கேள்வி கேட்டா நான் சொல்ல மாட்டேன் போ...
:) :)
யோவ்வ்வ்வ்வ்....
நல்லா வருது வாயில.
:-) வழக்கம் போல கலக்கிட்டீங்க. அய்யனாருக்காக செஞ்ச கற்பனைதான் சூப்பர். அதுல அரூப வெளியை தேடி நேரா போஓஓஓஓ, சிட்டுக்குருவி வழிக்காட்டும்னு சேர்த்திருக்கணும் மறந்திட்டீங்க :-)). நெல்லை தமிழில் செய்த முயற்சி சுமார்தான் :-)
எலே அடங்க மாட்டியால நீ
மாசாமாசம் செக் அனுப்பிட்டு என்ன வேணா பண்ணித் தொல
:(
அப்பாவி ஒரு 61 வயது இளைஞனிடம் மாட்டுகிறார்.
61 வயது இளைஞன்: கையில் ஒரு எலிக்குட்டியை எடுத்து கொள்ளவும்.
அப்பாவி: எலிக்குட்டி? எதுக்கு?
61: சமீபத்தில் 1963-ல் நான் இந்தப் பக்கம் கடைசியா வந்தேன். நீங்க சொன்ன முகவரிக்கு பக்கத்துல ஒரு ராயர் காப்பி கிளப் இருந்தது. எலிக்குட்டி கையிலே இருந்தா மசால் வடை வாசனையை காண்பித்து கொடுக்கும்.
அப்பாவி:??????????
61:போகும்போது எலிக்குட்டியை சொடுக்கிக் கொண்டே போகவும். அங்கே என்னை மாதிரியே ஒருத்தன் இருப்பான். அவன்கிட்டப் போய் என்னோட பேசினதைச் சொல்லாதீங்க.
அப்பாவி: சொன்னா என்ன ஆகும்?
61: உங்களுக்கு முன்னாலே உள்ள உங்க 3 தலைமுறைகள் சம்பந்தமா வசவுகள் கேட்கலாம்.
அப்பாவி தலைச் சுற்றி விழுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
LOL!!
super post!! :-D
//நாமக்கல் சிபி said...
குசும்பனுக்கு நிகரா காமெடி பண்ண குசும்பனேதான் திரும்ப வரணும்!
//
repeatu!!! B-)
//குசும்பனுக்கு நிகரா காமெடி பண்ண குசும்பனேதான் திரும்ப வரணும்!//
அதான் வந்துட்டமில்ல அப்றம் என்னா
நாமக்கல் சிபி said...
"குசும்பனுக்கு நிகரா காமெடி பண்ண குசும்பனேதான் திரும்ப வரணும்! "
இது உங்க நல்ல மணசை காட்டுகிறது சிபி:)
பின்னிய மின்னல் நல்லா இருய்யா:)
முத்துலெட்சுமி said...
:) :)
நன்றி:)
தம்பி said...
யோவ்வ்வ்வ்வ்....
நல்லா வருது வாயில.
ஹி ஹி ஏன் சாப்பாடு ஒத்துகலையா:)
ஜெஸிலா said...
":-) வழக்கம் போல கலக்கிட்டீங்க. அய்யனாருக்காக செஞ்ச கற்பனைதான் சூப்பர். அதுல அரூப வெளியை தேடி நேரா போஓஓஓஓ, சிட்டுக்குருவி வழிக்காட்டும்னு சேர்த்திருக்கணும் மறந்திட்டீங்க :-))."
அடுத்த முறை சேர்திடலாம்:)))
நெல்லை தமிழில் செய்த முயற்சி சுமார்தான் :-)
பழக்கம் இல்லையே அதான்:))))
அய்யனார் said...
எலே அடங்க மாட்டியால நீ
மாசாமாசம் செக் அனுப்பிட்டு என்ன வேணா பண்ணித் தொல
:(
அடங்க மாட்டோம் அடங்க மாட்டோம் அடங்க மாட்டோம்:))))
dondu சார் நன்றி
CVR said...
LOL!!
super post!! :-D
//நாமக்கல் சிபி said...
குசும்பனுக்கு நிகரா காமெடி பண்ண குசும்பனேதான் திரும்ப வரணும்!
//
repeatu!!! B-)
நன்றி நீங்களுமா????
குசும்பன் said...
//குசும்பனுக்கு நிகரா காமெடி பண்ண குசும்பனேதான் திரும்ப வரணும்!//
அதான் வந்துட்டமில்ல அப்றம் என்னா
வாய்யா போலி மக்கள் இது போலி அங்க போய் கிளிக் செஞ்சா வேறு ஏதோ புது சைட்டுக்கு போகுது அங்க என்னைய போலவே ஒரு டெம்ளேட் போட்டு இருக்கிறார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நேற்று என்கிட்டயே சாட் செய்கிறார் போலி யாரப்பா நீ:(((((((( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குசும்பன், சூப்பர்.
கடைசீல அப்பாவி அபி அப்பாதான் மாட்டறாரு எல்லார்த்துகிட்டயும்.
குசும்பு என்னா நடக்குது இங்க. உங்கள மாதிரியே ஒருத்தர் இருக்கார் போல.
உங்க ஒரிஜினல் இது http://kusumbuonly.blogspot.com
இது போலி http://kusumbonly.blogspot.com (கவனிக்கவும் குசும்புவில் 'u'இல்லை.
மறுபடியுமாஆஆஆஆஆஆஆஆஅ??
வெங்கட்ராமன் said...
குசும்பன், சூப்பர்.
நன்றி வெங்கட்ராமன்
"சின்ன அம்மிணி said...
கடைசீல அப்பாவி அபி அப்பாதான் மாட்டறாரு எல்லார்த்துகிட்டயும். "
ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்:)
"விஜயன் said...
குசும்பு என்னா நடக்குது இங்க. உங்கள மாதிரியே ஒருத்தர் இருக்கார் போல.
உங்க ஒரிஜினல் இது http://kusumbuonly.blogspot.com
இது போலி http://kusumbonly.blogspot.com (கவனிக்கவும் குசும்புவில் 'u'இல்லை.
மறுபடியுமாஆஆஆஆஆஆஆஆஅ?? "
ஆமாங்க :((((((((((((((((((((
:))))))))))
ஒரு ஹைக்கூ...
போலிப்பதிவில்...
என் படம்...
அழகாகவே இருக்கிறது...!!!!
//இது உங்க நல்ல மணசை காட்டுகிறது சிபி:)//
என் மனசு என்ன அவ்ளோ பெரிசாவா இருக்கு? மூணு சுழி மணசு போட்டிருக்கீங்களே!
இதுல கூட குசும்புத்தான் உங்களுக்கு!
;-)
Post a Comment