
ஆனந்தவிகடனில் ஒன்னும் ஜூவியில் ஒன்னும் இவன் கார்ட்டூன் வந்திருக்குங்க!
கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...
எங்கிருந்து வருகிறார்கள் என்பதை இருதினங்களுக்கு முன் என் வலைப்பூவில் நான் நிறுவிய Google Analytics எங்கிருந்து வருகிறார்கள், எப்படி தேடியதால் எத்தனை நபர்கள் வந்தார்கள், எத்தனை நேரம் இருந்தார்கள் என்ற விவரத்தை எல்லாம் தருகிறது சரோஜா தேவி என்று தேடும் பலருக்கு என் பிளாக் லிங் போகிறது போல முன்பு பரிசல்காரர் கேபிள் சங்கரோடு மல்லுகட்டிய பொழுது நான் எழுதிய எதிர்பதிவை தேடிதான் பலர் வருகிறார்கள். காமசூத்ராவை பற்றி எப்பொழுது எழுதினேன் என்று நினைவு இல்லை, சாருவின் குட்டிக்கதைகளுக்கும் நான் லிங் கொடுக்கவில்லை, ஜ்யோராம் கதைகளுக்கும் நான் லிங் கொடுக்கவில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி காமசூத்ராவினை தேடி என் பதிவுகளுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை.
அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன், கிளாசுக்கு போனா ஊஊஊஊஊஊன்னு சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா, என்ன டா இது அவளும் தான் அடிச்சா நாம என்னா இப்படியா ஊரகூட்டினோம் என்ன இது சின்னபுள்ள தனமா ராஸ்கல்ஸ் என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே அப்படியே கொத்தா கோபால் சார் தூக்கிட்டு போனதுதாங்க தெரியும் சட சடன்னு ஒரே சத்தம், டின்னு கட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கேன் அன்னைக்குதான் வாங்கினேன்.
சரி சரி விடு விடு பெண்ணீயத்தை எதிர்த்து போர் செய்யும் வீரனுக்கு இது எல்லாம் சகஜம் என்று வந்து பார்த்தா இஇன்ன்னு சிரிக்கிறா அவ, அடி பாவி நடிச்சியாடின்னு மனசுக்குள்ளே கருவிக்கிட்டு. உடனே நண்பர்களை எல்லாம் கூட்டி டேய் இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்துக்கே வந்த இழுக்கு இனி அவளுங்க யாரும் டா போட்டு கூப்பிட்டா நீங்களும் டி போட்டுகூப்பிடனும் என்று சொல்லி சபதம் எடுத்து விட்டு கலைந்தோம்.
கொஞ்சநாட்களில் சுமதி, கவிதா, புனிதவள்ளி என்று எதிரிகள் லிஸ்ட் அதிகமாகிட்டே போனது டெய்லி அவளுங்களும் அடிவாங்கமா இருக்க மாட்டாளுங்க,அவுங்க வீட்டுபாட நோட்டில் இங்கை ஊற்றி மூடி வைத்து விடுவது புஸ்த பையில் இருக்கும் புத்தகத்தை வேறு யாரோட பைக்காவது மாற்றிவிட்டு அந்த பையில் மண் குப்பை எல்லா கொண்டு நிரப்பி வைப்பேன்.கிளாஸ் சாரிடம் போய் புகார் கொடுப்பாங்க ஆனால் குற்றத்தை நான் தான் செஞ்சேன் என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் நான் விடுதலை ஆகிவிடுவேன்,இப்படியே ஒரு ரெண்டு வருசம் ஆனது.
7 வது 8 வது படிக்கும் பொழுது பேச்சு வார்த்தை கட் ஆனது பேசிக்க மாட்டோம். கிளாசுக்கு வரும் நடராஜ் சார் என்ன செய்யவார் கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்றால் பொண்ணுங்களை விட்டு குட்ட சொல்லுவார் அது அப்ப பெரிய அவமானம். ஒரு பொண்ணு கையால அடிவாங்குறியே புத்திவரவில்லை என்றுவேறு திட்டுவார்.
நம்ம எப்ப கரீட்டா பதில் சொல்லி இருக்கோம் அங்க பொண்ணுங்க எப்ப டா நான் மாட்டுவேன் என்று காத்துக்கிட்டு இருப்பாளுங்க,அங்கேருந்து வந்து முக்கி முக்கி ஓங்கி வேகமா குட்டுவாளுங்க அது அவளுங்களுக்கு வேகம் ஆனா நம்ம மண்டை தான் ஸ்டாராங்கான மரமண்டையாச்சா அதனால் வலி இருக்காது.என்னமோ ஒரு சிங்கத்தை குட்டி சாச்சுட்ட நிம்மதியில் போய் உட்கார்ந்து இருப்பாளுங்க.
அடுத்த முறை அவுங்க பதில் சொல்லாத பொழுது அதிகமாக கொட்டு வாங்கியது யார் என்ற தகுதியின் அடிப்படையில் நமக்குதான் அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க வீங்கி இருக்கான்னு மற்ற பொண்ணுங்க எல்லாம் குட்டு வாங்கியவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு என்னை ஒரு முறை முறைப்பாங்க பாருங்க அப்ப நமக்கு அது ஒலிம்பிக்கில் மெடல் கொடுத்த மாதிரி.
நம்ம கூட்டதில் சில குள்ள நரிங்க இருப்பானுங்க போய் குட்டுங்கடான்னா அந்த பக்கம் போய் காசு கொடுத்தா யானை தும்பிக்கையை தலையில் வைக்கும்ல்ல அதுபோல நைசா வலிக்காம குட்டுவது போல் நடிச்சுட்டு வந்துடுவானுங்க. அவளுங்களும் அந்த நன்றி கடனை கிளாஸ் டெஸ்டில் காட்டுவாளுங்க பெஞ்சின் இரு மூலையிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன் என்று உட்கார வெச்சு டெஸ்ட் வைப்பாங்க. அப்பவே தெரிஞ்சு இருக்கு பொண்ணுங்க ஆண்களின் முன்னேற்றத்துக்கு உதவமாட்டாங்க என்று, குட்டுவது போல் நடிச்ச குள்ள நரிங்களுக்கு மட்டும் பேப்பரை காட்டிடுவாளுங்க.
அப்புறம் 9வது படிக்கும் பொழுது தனி தனி கிளாசில் போட்டுவிட்டானுங்க, பிறகு ரெண்டு வருசம் கழிச்சு 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது, ஆமாங்க அழகா தாவணி போட்டுக்கிட்டு அம்சமா இருந்தாளுங்க போய் பிரண்ட் ஆகிக்கலாம் என்று பார்த்தால் அப்பயும் நம்ம மேல இருந்த கோவம் தீரல போல! பேச மாட்டாளுங்க சரி இப்ப யாரும் குட்ட சொன்னா போய் நானும் குள்ள நரி ஆகி சமாதானம் ஆகிடலாம் என்று பார்த்தா கடைசிவரை அதுக்கு வாய்பே இல்லாம போச்சுங்க.
டிஸ்கி: தலைப்புக்கு பதில் கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்!அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று பார்க்க சென்னையில் வந்து இறங்கியதும் கார் அனுப்பி என்னை அழைத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் விட்டு பின் தினம் போனும் ஒரு முறை நேரிலும் வந்து பார்த்துவிட்டு தைரியம் சொன்ன அப்துல்லாவுக்கும்
மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் நனைந்த படி மருத்துவமனை வந்த லக்கி, பாலபாரதி இருவருக்கும், அவர்கள்வரும் பொழுது கூடவே வந்த டாக்டர் புரூனோவுக்கும்
ஊருக்கு போகும் வேலை இருந்தாலும் அம்மாவை பார்க்க வந்து சென்ற தம்பி உமா கதிருக்கும்,
பொங்கல் அன்றும் ஹாஸ்பிட்டலில் எங்களோடு இருந்த அண்ணன் உண்மை தமிழனுக்கும்
ஒரு நாள் முழுவதும் எங்களுக்கு அவரின் கார் அனுப்பியது மட்டும் இன்றி மதியம் எங்களை வந்து சந்தித்த நர்சிமுக்கும்,
பல வேலைகளுக்கும் இடையில் நேரில் வந்த அண்ணன் சிபிக்கும்,
புதிய இடம் என்றாலும் கொஞ்சமும் தயங்காமல் வந்த கவிதாயினி காயத்ரிக்கும்
வீட்டுக்கு அழைத்து சென்று கனிவாக உபசரித்த முரளி கண்ணன்,
யார் என்றே தெரியாவிட்டாலும் அண்ணனுக்காக வந்து பார்த்த நிஜமா நல்லவனின் தம்பி,
தன் நண்பரை அனுப்பி பார்த்து வர சொன்ன சுரேகா, அவரின் நண்பர்
போனில் பேசி தைரியம் சொன்ன
சஞ்சய்
சுப்பையா அய்யா
நந்து
ஜ்வோராம் சுந்தர்
வால் பையன்
அதிஷா
பரிசல்
கபீஷ்
பட்டாம்பூச்சி
G3
மங்களூர் சிவா
புதுகை தென்றல்
தாமிரா
வெண்பூ
நிஜமா நல்லவன்
கார்க்கி
இளைய கவி
பிராத்தனை செய்த
வெட்டிப்பயல்
சந்தனமுல்லை
விக்னேஷ்வரன்
அதிரை ஜமால்
ஆயில்யன்
மது
வித்யா
நானானி
நான் ஆதவன்
நண்பன்
வெங்கட்ராமன்
Busy
படகு
திகழ்மிளிர்
அன்புடன் அருணா
எம்.ரிஷான் ஷெரீப்
கைப்புள்ள
smile
ராஜ நடராஜன்
சுரேஷ் - ஆப்ரிக்காவில் ஒரு தமிழன்
கண்மணி
selvanambi
ச்சின்னப் பையன்
Thusha
ஜே கே
nagoreismail
நாகராஜன்
PoornimaSaran
Jeeves
T.V.Radhakrishnan
முத்துலெட்சுமி-கயல்விழி
கார்த்திக்
Shakthiprabha
ILA
gulf-tamilan
Kavitha Senthil
BalasBits s
இராம்/Raam
குடுகுடுப்பை
ஆளவந்தான்
பிரேம்ஜி
Pondy-Barani
கிரி
பிரேம்குமார்
சின்ன அம்மிணி
வடுவூர் குமார்
Nice time
Balakumar
கோவி.கண்ணன்
துரியோதனன்
A N A N T H E N
sriram s
வடகரை வேலன்
நாகை சிவா
Varadaradjalou .P
நையாண்டி நைனா
அமிர்தவர்ஷினி அம்மா
இரவு கவி
LOSHAN
ஈ ரா
ராம்.CM
K.USHA
Muhammad Ismail .H
ஜோசப் பால்ராஜ்
syed rahman
bbPreethi
பிராத்தனை செய்த வாசக நண்பர்களுக்கும்!, அனானிகளுக்கும் இங்கு கூடவே இருந்து சொந்த சகோதரன் போல பாவித்து உதவிகள் பல செய்யும் உள்ளூர் சொந்தங்கள் ஆசிப், அய்யனார், கோபி, சென்ஷி, அபி அப்பா, சுல்தான், ஜெஸிலா, பினாத்தல், லொடுக்கு ஆகியோருக்கும் நன்றி என்று சொல்ல மனசு வரவில்லை. தம்பிக்கு உதவி செய்யும் அக்காவுக்கு அல்லது அண்ணனுக்கு நன்றியா சொல்கிறோம் அல்லது தினம் நம்மை கவனித்துக்கொள்ளும் அம்மா,மனைவிக்கு நன்றியா சொல்கிறோம் பிறகு எதுக்கு நான் சொல்லவேண்டும்.
வலைப்பூவில் எழுதுவதால் என்ன கிடைத்தது என்று கேட்பவர்களுக்கு, இதுக்கு மேல் வேறு என்ன கிடைக்கவேண்டும் இந்த நண்பர்களுக்கு மேல் வேறு என்ன இருக்கிறதுகிடைக்க.
காதல் என்பது பரத்தும், சந்தியாவும் நடிச்ச படம்.
அதுல பரத் பின்னாடி கட்டி வந்தது போல உட்காந்துக்கிட்டுதான் வண்டி ஓட்டுவார் அதன் மூலம் காதல் வந்தா ஒரு இடத்தில் ஒழுங்கா உட்காரக்கூட முடியாது என்பதை சிம்பாளிக்கா சொல்லி இருப்பாங்க.
இதுதாங்க காதல் பற்றிய விளக்கம் மேலும் காதலை பற்றி தெரிஞ்சுக்கனும் என்றால் காதல் சி.டி அல்லது டி.வி.டி பார்த்து தெரிஞ்சுக்குங்க!
இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் ஒண்ணுக்கு அடிக்கும் பொழுதுதான் நம்ம தல நர்சிம் உள்ளேவருகிறார் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று!. ச்சே அவுங்க ஒண்ணுக்கு அடிக்கிற இடத்துக்கு இல்லைங்க. என் நினைவில் வருகிறார் என்று சொல்ல வந்தேன்.
இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கு அடிச்சு இடத்தை நாற அடிப்பதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று மல்லாக்க படுத்துக்கிட்டுயோசிச்சதில் பல ஐடியா தோன்றியது.
1) எங்க ஊரில் திறமையான பசங்க நிறைய பேர் இருக்கானுங்க சும்மா டைம் பாஸ்க்கு ஸ்கூலுக்கு போய்ட்டு படிப்பு வராம ஒரு நிலையான வருமானமும் இல்லாமசுத்திக்கிட்டு இருப்பானுங்க, அவனுங்களுக்கு பொழுது போக்கு வேலியில் போகும் ஓணானை எட்டி நின்னு ஒரு சின்ன கல்லால் அடிச்சு அது வாயில புகையிலை வெச்சு டான்ஸ் ஆட உடுவது, அது வாயில் பீடிய வெச்சு பீடி அடிக்கவிடுவது என்று பைசா பிரோஜனம் இல்லாத வேலைய பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. அப்படி ஓணான் அடிப்பதில் திறமையான ஆளுங்களை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட் பக்கம் உட்கார வெச்சு கையில கொஞ்சம் கல்லை கொடுத்தோம் என்று வெச்சுக்குங்க எவனாவது ஒண்ணுக்கு அடிக்க ஜிப்பை திறந்து வெளியே எடுத்தானுங்க “டிங்காண”வை ஓணான் அடிப்பது போல் ஒரே அடி அடிச்சுடுவானுங்க. இப்படி அதிகமாகஅடிச்சு விரட்டுபவர்களுக்கு மாதம் ஒரு சம்பளம் போட்டு கொடுத்தா அவன் பொழப்பும் ஓடும் பஸ் ஸ்டாண்டும் கிளீனா இருக்கும். (ஓணான் பிடிக்க இன்னொரு முறை வெளக்கமாத்து குச்சியில் சுருக்கு போட்டு புடிப்பது அந்த முறையில் கை தேர்ந்தவர்கள் இந்த வேலையில் வாய்ப்பு வழங்கபடாது)
2) முதலில் சொன்ன யோசனையில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் கல்லு கொஞ்சம் வேகமாக போய் பட்டுவிட்டால், அதனால் அதுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள் நிறப்பிய டுப்பாக்கி கொடுக்கலாம், பிளாஸ்டிக் குண்டு என்பதால் ரிஸ்க் கம்மி, அதோடு மட்டும் இன்றி விவேக்கிடம் கேட்பது போல் எதடா சுட்ட? என்று கேட்டால் மைனர் குஞ்ச சுட்டேன் என்று டயலாக் வேற சொல்லிக்கலாம். (இதுக்கு டிரைனிங் அக்டாமி ஆரம்பிப்பது, ”குறி” தவறாமல் சுடுபவர்களுக்கு பதக்கம் வழங்குவது என்று பல ஐடியா இருக்கு)
3) கால் வெச்சா வெடிக்கும் கண்ணி வெடி போல் ஜொய்ங்ங்ங் என்று உச்சா அடிக்கும் பொழுது உச்சா பட்டா ”டமார்” என்று வெடிக்கும் சில பல வெடிகளை கண்டுபிடிக்கவேண்டும், அப்படி வெடிச்சுது என்றால் பயத்தில் வந்த உச்சாவும் ரிவர்ஸ் கியர்போட்டு உள்ளே ஓடிவிடும்.
4)ஒருவித கெமிக்கல் கண்டுபிடிக்கவேண்டும் அதை பொது இடங்களில் தூவ வேண்டும் அந்த கெமிக்கலுக்கு இரு பயன்கள் இருக்கவேண்டும்
4.1) டிங்கானாவின் அளவு ஒருமுறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மி.மீ குறையவேண்டும். நம்ம பயபுள்ளைங்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஒரு டவுட் “அளவை” பற்றியது இது போதுமா போதாதா? இதை வெச்சு வாழ்கைய ஓட்டமுடியுமா? எத்தனை முறை மாத்ரூபூதம் டீவியில் தோன்றி யானைய அடக்கும் அங்குசம் சின்னதுதான் என்று சொன்னாலும் என்று ஒருவித குழப்பத்தோடயே உலாவிக்கிட்டு இருப்பானுங்க அப்படி இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஒரு மி.மீ குறையும் என்றால் உள்ளதும் போச்சுடாநொல்லகண்ணா என்று பப்ளிக்கா வெளியே எடுக்கவே பயப்படுவானுங்க!
4.2) இரண்டாவது பலனாக ஒரு முறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மூன்று நாளைக்கு ”ஒன்னியும்” செய்யமுடியாதபடி அந்த கெமிக்கல் பவுடர் வேலை செய்யனும்.
5) பஸ் ஸ்டாண்டில் பெரிய ஸ்கிரீன் வெச்சு மாய லென்ஸ் மூலம் ரொம்ப சின்னதா புரோஜெக்ட் செஞ்சா பயந்து போய் ஓடி போய்டுவானுங்க.
இப்படி டிராப்பிக்கை, எச்சில் துப்புவதை, சிகரெட் பிடிப்பதை எல்லா தடுக்க பல யோசனை வெச்சு இருக்கேன், இதுக்கு மேலும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று யாராவது கேட்டிங்கன்னா ஒன்னு ஒன்னாக வெளியே வரும்.
டிஸ்கி: உங்களுக்கும் ஏதும் இதுபோல் யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கூச்சப்படாம சொல்லுங்க பாஸ்!