Monday, September 15, 2008

முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ் பதிவு

எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.
இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.

நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக் இருக்கும்.

முட்டைகள் அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, பதிவானாலும் சரி முட்டைகள் எனக்கு பிடித்தவை. பதிவில் ஆம்லேட் போடுவதை வைத்து ஜோடி கண்டுபிடிப்பது என்று எழுதியது செம ஹிட் ஆனது, அதை போல் முட்டையை போட்டோ புடிச்சு போட்டது PIT போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு அழைத்து சென்றது இப்படி என் வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட முட்டையை பற்றிய கதை!!!

முன்பே சொன்னது போல் முட்டை வாங்குவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) .

உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி(பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த புள்ள.

ஸ்கூலில் எல்லாம் அடிஸ்னல் பேப்பர் கேட்டு வாங்கினா ஒரு தனி மரியாதை, நமக்கு எழுத தெரிஞ்ச மேட்டருக்கு தேதி, பெயர், தேர்வு எண் என்று மூன்று வரி போதும் இதில் எங்கே இருந்து முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி (நான்கு பக்கமும் முப்பதுவரி என்று எழுதிவிட்டால் இந்த பதிவின் பக்கத்தை எப்படி நிறப்புவது???) எழுதி அடிஸ்னல் பேப்பர் வாங்குவது????

இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடிஸ்னல் பேப்பர் வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நாம எல்லாம் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவோம். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு ஈயத்தின் பயன்கள் என்ன?என்று இருக்கும் கேள்விக்கு இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிறப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி மெயின் பேப்பரை முடிச்சுட்டானே என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் பேப்பர் என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்ம திரும்பி பார்க்கும் பாருங்க! நொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.

பேப்பரை நிறப்ப நான் செய்த டெக்னிக்ஸ்

1) பேப்பரின் நான்கு புறமும் மார்ஜின் விட்டு பொட்டி கட்டனும்.

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்





இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) கொஸ்டின் நம்பரை மட்டும் எழுதி பதில் எழுத கூடாது.

ஏதேனும் 3 க்கு சிறு குறிப்பு வரைக என்று கொஸ்டின் பேப்பரில் இருந்தால் அதையே திரும்ப எழுதி, கேள்வியை எழுதி பின் பதிலை எழுதவேண்டும்.

4)பொருத்துக என்று இருந்தால் கொஸ்டின் பேப்பரில் இருப்பதை அப்படியே எழுதி திரும்ப நாமும் நம் பங்குக்கும் அதை சரி செய்ய முயற்சிக்கனும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு
பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.

74 comments:

said...

ஆசிரியர் : கோழி முதலில் வந்ததா ? முட்டை முதலில் வந்ததா ?

சுட்டி மாணவன் (குசும்பன் தான்) : சார், முட்டை வரனும் என்றால் முதலில் ஒரு கோழியும், சேவலும் இருக்கனும் சார். ஒரு சேவலும், கோழியும் தான் சார் முதலில் வந்திருக்கனும், அப்பறம் தான் முட்டை.

said...

:)))))))))))))

said...

supero super. eppadi nanba muttai thinnukite yosichinkalaa :-)

said...

:):):)super

said...

//அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று//

:-)

கலக்கலான டிப்ஸ்

said...

முட்டைதானேனு அலட்சியம் செய்யாம வாங்கிய முட்டைய ஒன்னு மேல ஒன்னு அடுக்கி எட்டு ஆக்கியவன் நான்... இந்த பதிவுக்கு முட்டை மார்க் போட முடியாம கஷ்டத்தோட 100(அட,ரெண்டு முட்டை) போடுறேன்...

said...

ஓ.......


















ரொம்ப....

















நல்லா....



















எழுதி இருக்கிங்க....

said...

//ஆசிரியர் : கோழி முதலில் வந்ததா ? முட்டை முதலில் வந்ததா ?

சுட்டி மாணவன் (குசும்பன் தான்) : சார், முட்டை வரனும் என்றால் முதலில் ஒரு கோழியும், சேவலும் இருக்கனும் சார். ஒரு சேவலும், கோழியும் தான் சார் முதலில் வந்திருக்கனும், அப்பறம் தான் முட்டை.//

அந்த கோழியும் சேவலும் எங்க இருந்து வந்தது கோவியாரே????

said...

சார்: கோழி முன்னால வந்துதா இல்ல முட்டை முன்னால வந்துதா?

குசும்பன் : சார், முட்டை எப்பவும் பின்னாலதான் சார் வரும்..

said...

கலக்கல் குசும்பு பதிவு... :))))

said...

மி

வு
ம்

தெ
ளி
வா


வி

க்
கி
யி
ரு
க்
கி
றீ
ர்

ள்
!


ன்
றி!!!

said...

கோவி பதிவை படிக்காமல் பின்னூட்டம் இடும் கலைய எப்ப கத்துக்கிட்டீங்க:)))

said...

நன்றி ஆயில்யன்.

நண்பா இரவு கவி உனக்கு எக் பப்ஸை தவிர வேறு எதுவுமோ பிடிக்காதே:)))

நன்றி ராப்:)

said...

சரவணகுமரன் said...
கலக்கலான டிப்ஸ்//

கலக்கத்தை தரும் டிப்ஸ்ங்க!!!

**********************
நன்றி கார்கி

நாங்க எல்லாம் டோட்டல் மார்கிலேயே பாஸ் செய்ய ரொம்ப கஷ்ட்டப் படுவோம்! நீங்க என்னவென்றால் 100 மார்க் போட்டுவிட்டீர்கள்:))

***********************
விக்னேஸ் பதில் மரியாதையா?:)))
நல்லா இருங்க!!!
************************
கார்கி அந்த சேவலும், கோழியும் கூடைக்குள்ளே இருந்துதான் வந்தது பின்னே அது என்னா ஏசி ரூம் போட்டு லாட்ஜிலேந்தா வரும்?:)))

******************************
வெண்பூ நன்றி!
*****************************
பரிசல் கவிதை அருமை!!!
(இப்படி ஒன்னுங்கீழ் ஒன்னு எழுதினா இங்க அது கவிதையாகவே கருதப்படும்!!!
(அதுபோல் கவிதை எழுதியதை எல்லாம் படிக்கவேண்டுமா?:)))

said...

//கார்கி அந்த சேவலும், கோழியும் கூடைக்குள்ளே இருந்துதான் வந்தது பின்னே அது என்னா ஏசி ரூம் போட்டு லாட்ஜிலேந்தா வரும்?:)))
/

இந்த காலத்து கோழிங்க எல்லாம் ரூம் போட்டா ஏ.ஸி.ரூம்தான் கேட்குதுங்க.. அதுக்கு வேற எக்ஸ்ட்ரா செலவு)


நீங்க அந்த கோழிய பத்திதானே சொன்னீங்க? இல்ல, நான் ஏதாவது உளறிட்டேனா?

said...

ஆசிரியர்: கோழியில இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில இருந்து கோழி வந்ததா?

குசும்பன்: கோழியில இருந்துதான் முட்டை வந்தது சார். ஏன்னா முட்டையில இருந்து கோழிக் குஞ்சுதான் வரும் கோழி வராது..

said...

//பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.//

same blood

said...

அந்த கோழியும் சேவலும் எங்க இருந்து வந்தது கோவியாரே????

யாரவது கோழித் திருடர்களிடம் கேளுங்க, யாரும் கிடைக்கலைன்னா குசும்பனிடம் கேளுங்க

said...

// VIKNESHWARAN said...



ஓ.......


















ரொம்ப....

















நல்லா....



















எழுதி இருக்கிங்க....//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டு
:))))))

said...

ஹா ஹா ஹா!!

குசும்பன், கலக்கல்!

said...

பதிவு சூப்பர் அதைவிட லேபிள் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்......!! :)))))

said...

//ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டு
:))))))
//
ஆஹா புது மாப்பிள்ளையோட கடமையுணர்ச்சியை பார்த்தீங்களா:):):)

said...

யோவ் புது மாப்பிள்ளை இனி உன் கமெண்டை எங்கேயாவது ஒரு மாசத்துக்கு பார்த்தேன் அப்புறம் வெச்சுக்கிறேன் கச்சேரி. ஒழுங்கா பதிவு பக்கம் அது இதுன்னு வராம ஒழுங்கா இரு.

said...

நான்தான் 25

Anonymous said...

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்ங்கிறது சரியாத்தான் இருக்கு, குசும்பா.

இப்ப நீ போடுற மொக்கைக்கெல்லாம் அப்ப வாங்குன முட்டைதான் புரதம், ஊட்டம் எல்லாம். நல்லாவே இரு.

said...

//Blogger குசும்பன் said...

யோவ் புது மாப்பிள்ளை இனி உன் கமெண்டை எங்கேயாவது ஒரு மாசத்துக்கு பார்த்தேன் அப்புறம் வெச்சுக்கிறேன் கச்சேரி. ஒழுங்கா பதிவு பக்கம் அது இதுன்னு வராம ஒழுங்கா இரு.//

ரிப்பீட்டேய் :P

குசும்பன பாத்தாச்சும் திருந்துங்கடே

said...

/நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்///

நண்பா நீயுமா???

நானெல்லாம் இப்படித்தான் பட் இன்னொரு மேட்டர் வுட்டுபுட்டீங்க நல்லா உருளை கணக்கா ஒரு பேனா வாங்கி அதுல ஒரு பாட்டில் இங்க் அளவுக்கு நிரப்பி அதை வைச்சுக்கிட்டு கிட்டதட்ட 18 பாண்ட் சைசுல எழுதியும் நிரப்பியிருக்கேனாக்கும் :))

(ஆனா எம்புட்டு ராசா மார்க் எடுத்தேன்னு மட்டும் கேக்கப்படாது ஆமாம்!)

said...

நாங்கள்லாம் ஹால்டிக்கெட் ல இருக்க terms and conditions மட்டும் திருப்பி திருப்பி எழுதி நாலு இங்கிலிஸ் பேப்பர்லயும் பாஸான ஆளுங்க.

said...

எச்சுச்ச் மீ.. மே ஐ கம் இன்? டைம் முடியற வரைக்கும் கொஸ்டின் பேப்பரை அப்டியே திரும்ப திரும்ப எழுதினா ஏகப் பட்ட "அடி"ஷனல் பேப்பர் வாங்கலாம்.... நானெல்லாம் இப்டி தான் பள்ளிகூடத்துக்கு செலவு வச்சிரூக்கேன்.. :))

... முட்டை போண்டா சாப்ட்டுட்டே இந்த பதிவை படிக்கிறது கூட நல்லாத் தான் இருக்கு ... :))

said...

அடப்பாவி விக்கி.. இங்க எல்லாம் அடிஷனல் பேப்பர் தரமாட்டாங்கய்யா.. :))

said...

//முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி (நான்கு பக்கமும் முப்பதுவரி என்று எழுதிவிட்டால் இந்த பதிவின் பக்கத்தை எப்படி நிறப்புவது???) //

இந்த புத்தி அந்த காலத்துலயே இருந்துருந்தா பேரு, தேதி, பிள்ளையார் சுழி எல்லாத்தையும் விரிவா எழுதி பக்கத்தை நிரப்பிருக்கலாம்.

said...

//எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை//

எவ்ளோ ஈசி இல்ல?

said...

//முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.//
ஆமா ஆமா.. அடுத்த ஒலிம்பிக்ல இதை சேக்க போறாங்களாம்.. :)

said...

//இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது //
யோவ் மாமா.. முட்டை வெஜ்ல சேத்தாச்சி.. இப்போ அது நான் வெஜ் கெடையாது.. அதனால வித்தியாசம் இருக்கு..

said...

//என்ன வாங்க தனி தில் வேண்டும்.//
என்ன வாங்க தனி தில் வேண்டும்.?

said...

//நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல//

நாங்க எதுமே கேக்கலையே

said...

//எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று//
வெறும் பேபப்ர் குடுத்தால் தலைல தான் போடுவாங்க... அட்லீஸ்ட் ரெக் நம்பர், பேர், சப்ஜெக்ட் எல்லாம் எழுதி தந்தா தான் முட்டையாவது போடுவாங்க..

said...

//அதில் அத்தனை கிக் இருக்காது. //

தண்ணி ஜாஸ்தி கலந்தா அப்டி தான் மாமா.. :)

said...

//முட்டைகள் அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, பதிவானாலும் சரி முட்டைகள் எனக்கு பிடித்தவை//
0000000000000000000000000
0000000000000000000000000
0000000000000000000000000
0000000000000000000000000
0000000000000000000000000

ஃப்ரீயா வச்சிக்கோங்க மாம்ஸ்.. :)

said...

//பதிவில் ஆம்லேட் போடுவதை வைத்து ஜோடி கண்டுபிடிப்பது//

ஓ.. இப்போ பதிவுல கூட ஆம்லெட் போடறாங்களா?.. பதிவில் ஆஃப்பாயில் கூட போட முடியுமா?

said...

//முன்பே சொன்னது போல் முட்டை வாங்குவது ஒரு கலை,//

அப்போ இதை இதை பத்தி இஞ்சினியரிங் காலேஜ்ல படிக்க முடியாதோ? :(

said...

//அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.//

பக்கத்து வீட்ல முட்டை திருடறதுக்கு பேர் கலையா? அதுக்கு பார்ன் ஜீனியஸ்னு ஒரு பட்டமா?

said...

//எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் //

தினமும் பள்ளிக்கு வர சொல்றாங்களா?

said...

//தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள்//

பரிட்சை எழுதும் போது தானே கேப் விட்டு உக்கார முடியும்? மத்த சமயங்கள்ல நெருக்கி உட்காரனும்? உங்கள எல்லாம் நம்பி ஒரு பொண்ண பக்கத்துல உக்கார வைக்க முடியுமா? :)

said...

//உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு//

சும்மா கதை விடாதிங்க... இவரு சாமி பேரை எல்லாம் எழுதினாராம்... ஒவ்வொரு சப்ஜெக்ட்டிற்கும் ஒரு பொண்ணு பேர எழுதின மேட்டர் எங்களுக்கு தெரியாதாக்கும்? :P

said...

//இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல்//

அய்யய்யோ.. இதுக்கும் அதுக்கும் நிஜமா சம்மந்தம் இல்லையா?.. நானும் இப்டி தான் மாமா எழுதினேன் :((

said...

//அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.//

இப்டி பண்ணியே அந்த பள்ளி கூடத்தை கடனில் ஆழ்த்தினதை விட்டுட்டிங்களே :)

said...

ஐம்பது அடிச்சிடறேன் இருங்க.. :)

said...

ஹய்யா.. 50 அடிச்சாச்சி.. வர்ட்டா.. :))

Anonymous said...

:)

said...

;-)))...

வீட்ல தலை மேல அடிச்சு முட்ட வாங்கிட்டு வரச்சொன்ன காண்டுல போட்ட பதிவா இது???

இதுல விளக்கம் வேற..'நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல'-ன்னு...

said...

உஸ்!அப்பாடி....இப்பவே கண்ணக் கட்டுதே :))))

said...

0

said...

00

said...

o

said...

:))))))))))))))))

said...

000000000000000

ooooooooooooooo

said...

கார்க்கி said...
இந்த காலத்து கோழிங்க எல்லாம் ரூம் போட்டா ஏ.ஸி.ரூம்தான் கேட்குதுங்க.. அதுக்கு வேற எக்ஸ்ட்ரா செலவு)//

கல்யாணத்துக்கு பெண் பார்க்கும் பொழுது இதையே எக்ஸ்பிரியன்ஸ் சர்டிபிக்கேட்டா காட்டலாமா?:)))


///நீங்க அந்த கோழிய பத்திதானே சொன்னீங்க? இல்ல, நான் ஏதாவது உளறிட்டேனா?///

எனக்கு தெரிஞ்சு கோழின்னா போ போ போன்னு கொல்லை பக்கம் மேயுமே!!! அதான்:))))

said...

ஆமாம் மதுவதனன் மௌ. சரியாகதான் சொன்னீங்க!!!

****************************
கார்த்திக் அப்ப நீங்க நம்ம கூட்டாளி
****************************
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
*****************************
ஸ்ரீமதி said...
பதிவு சூப்பர் அதைவிட லேபிள் //

அவ்வ்வ் அப்ப அடுத்த முறை லேபிள் மட்டும் போட்டுவிடுகிறேன்:))
*********************************
நன்றி ராப்!
*********************************
வடகரை வேலன் said...
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்ங்கிறது சரியாத்தான் இருக்கு, குசும்பா.//

ஆமாங்க சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க!!!
**********************************
நந்து f/o நிலா said...
ரிப்பீட்டேய் :P

குசும்பன பாத்தாச்சும் திருந்துங்கடே//

ஆங்..எம்புட்டு நாள் கழிச்சு வந்தேன் தெரியுமா? லீவ் முடிஞ்சு 50 நாட்கள் ஆச்சு!!
********************************

ஆயில்யன் என்ன இருந்தாலும் நாம எல்லாம் ஒரு பக்கத்து ஆளுங்க அப்படிதான் இருப்போம்!!!
*********************************
தம்பி நீங்கதான் ஸ்டேட் பஸ்ட் என்று சொல்லிட்டு இருந்தாங்க அது நிஜம் இல்லையா?
*****************************

said...

SanJai said...
கொஸ்டின் பேப்பரை அப்டியே திரும்ப திரும்ப எழுதினா ஏகப் பட்ட "அடி"ஷனல் பேப்பர் வாங்கலாம்//

ஆனா சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்!!!

***************************
ஜோசப் பால்ராஜ் said...
இந்த புத்தி அந்த காலத்துலயே இருந்துருந்தா பேரு, தேதி, பிள்ளையார் சுழி எல்லாத்தையும் விரிவா எழுதி பக்கத்தை நிரப்பிருக்கலாம்.//

அப்ப சின்ன பிள்ளை அப்ப புத்தி அம்புட்டு வேளை செய்யலைன்னே!!!

******************************
SanJai said...
எவ்ளோ ஈசி இல்ல?//

எவ்ளோ ஈசி இல்ல???
எவ்ளோ ஈசி இல்ல???
எவ்ளோ ஈசி இல்ல???
எவ்ளோ ஈசி இல்ல???
எவ்ளோ ஈசி இல்ல???
எவ்ளோ ஈசி இல்ல???

என்ன வாங்க தனி தில் வேண்டும்.?
என்ன வாங்க தனி தில் வேண்டும்.?
என்ன வாங்க தனி தில் வேண்டும்.?என்ன வாங்க தனி தில் வேண்டும்.?என்ன வாங்க தனி தில் வேண்டும்.?என்ன வாங்க தனி தில் வேண்டும்.?

(கொஸ்டினையே நீங்கதானே மாம்ஸ் திரும்ப திரும்ப எழுத சொன்னீங்க:)))


//தண்ணி ஜாஸ்தி கலந்தா அப்டி தான் மாமா.. :)//

அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கதான் செய்யனும்:((((

****************************
SanJai said...
அப்போ இதை இதை பத்தி இஞ்சினியரிங் காலேஜ்ல படிக்க முடியாதோ? :(//

என்ன இது சத்தியராஜ் சொல்வது போல் டக்குன்னு டாக்டர் ஆகிடலாமா என்பது போல் கேட்கிறீங்க???

உங்க வயசுக்கு இதுக்கு மேல ஒன்னாம் வாய்ப்பாடு கூட உங்க ..... மண்டையில் ஏறாது!!!

(......அங்க என்ன வரும்?)

said...

SanJai said...
உங்கள எல்லாம் நம்பி ஒரு பொண்ண பக்கத்துல உக்கார வைக்க முடியுமா? :)//

உட்கார வெச்சதைதான் நீங்களும் பார்த்தீங்களே மாம்ஸ்!!!
*****************************
மாம்ஸ் நான் அப்ப ரொம்ப பக்தி பழமாக்கும்:))
*****************************

சஞ்சய் நீங்களும் நானும் பேசிக்கா பார்ன் ஜீனியஸ் அப்படிதான் எழுதுவோம்!!

என் பதிவிலும் 50 பின்னூட்டம் வரை போட்ட சஞ்சய்க்கு நன்றிகள்!!!
*****************************

நன்றி தூயா

*******************************
நன்றி விஜய் ஆனந்த்

******************************
நன்றி புதுகை அப்துல்லா

******************************
நன்றி அனானி

*******************************

நன்றி தமிழன்

said...

//எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, //

நான் முதல்ல ஓசி இல்லைன்னு படிச்சிட்டேன்

said...

//முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.//

இன்னைக்கு எத வாங்க்குனும்னாலும் தனித்திறமை வேண்டும்,
அதாவது உதை வாங்கணும்னாலும்

said...

//என்ன வாங்க தனி தில் வேண்டும்.//

திறமை வேணும்னு சொன்னிங்க, இப்போ தில்.
எனக்கு ஃபுல்லு தான் தெரியும், அதென்ன தில்லு

said...

//நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில்,//

இது தான் மேட்டரா, நான் எதோ பெருசா சொல்ல போறிங்கன்னு நினைச்சேன், நாங்கெல்லாம் முட்டை கதையே வாங்குனவங்க

said...

//அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக் இருக்கும்.//

கிக் என்ற வார்த்தையை இரண்டு உபகொகித்தத்தில் இருந்தே தெரிகிறது.
ஃபுல் ஃபாமில் இருக்கிங்க

said...

//முட்டைகள் அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, பதிவானாலும் சரி முட்டைகள் எனக்கு பிடித்தவை.//

ஆசிட் முட்டை புடிக்குமா, அதை பத்தி சொல்லலையே

said...

//எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம்,//

உண்மைதானே, கண்டிப்பா நீங்க பேப்பர பார்த்து எழுத முடியாது தானே,

said...

இதுக்கு மேல படிக்கும் போது எனக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துருச்சு,
கண்ணுல பொலபொலன்னு தண்ணி ஒன்னும் முடியல, இருங்க ஒரு கட்டிங் போட்டுட்டு வந்துர்றேன்

said...

//கல்யாணத்துக்கு பெண் பார்க்கும் பொழுது இதையே எக்ஸ்பிரியன்ஸ் சர்டிபிக்கேட்டா காட்டலாமா?:)))

ரங்கமணியே சமாளிக்க முடியல.. இதுல தங்கமணியா????????????



//எனக்கு தெரிஞ்சு கோழின்னா போ போ போன்னு கொல்லை பக்கம் மேயுமே!!! அதான்:))))//

அப்போ தெரு பக்கம் வர்ற கோழி தெரியாதா?

said...

அய்யா என்னால தாங்கமுடியல....

said...

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சி....

said...

ரொம்ப நாள் கழிச்சு இந்த பதிவு மின்னஞ்சல்-ல forward ஆகிட்டிருக்கு குசும்பன்! வாழ்த்துகள்!

said...

சூப்பர் ,,சூப்பர் ,,வருங்கால சந்ததிகள் படிச்சு பயனுலாத ஆகிக்கட்டும்