வலைப்பதிவர்களே உங்கள் பதிவகளை சிலர் திருடி அங்கு இங்கு என்று போட்டுவிடுகிறார்கள், இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது, அதை தடுக்க வழி ஒன்று இல்லை. பேசாம எழுதாம இருக்கவேண்டியதுதான்.
இங்கு ஒவ்வொருவரும் அவர் அவர் ஸ்டைலில் பதிவு எழுதினால் எப்படி இருக்கும் என்று இனி இங்கு நானே எழுதப்போகிறேன்.
இன்று கோவி.கண்ணன் விபத்தும் உள்ளுணர்வும்!!!
எப்பொழும் நானும் நண்பர் எம்.எஸ் பாஸ்கரனும் குழந்தைகளுக்கு பென்சில் சீவ தோப்புக்கு செல்வோம்,கடந்த முறை அப்படி பென்சில் சீவ வருகிறேன் என்றார்நானும் என் பொண்ணுக்கு டிராயிங் காம்பெட்டிசன் இருக்கு,நிறைய பென்சில் சீவ வேண்டி இருக்கு நானும்வருகிறேன் என்றேன், தோப்புக்கு வந்தபிறகு அழையுங்கள் என்றேன்.
அதன் படி வந்த பிறகு என்னை அழைத்தார்,பின் நானும் அங்கு சென்றேன்.
அவர் தோப்புக்கு வந்த பிறகு பென்சில் சீவ கத்தியை எடுத்தார்!
கத்தியில் சீவலாமா?-எம்-எஸ் பாஸ்கர்
எனது உள் உணர்வு தடுக்கவே.
இப்பதாங்க சப்பாத்தி போட்டுவிட்டு வந்தேன், கை எல்லா ஆயில் வழுக்கும் கத்தி வேண்டாம் என்றேன்.
அவர் நீங்க வேற நான் பூரி, சப்பாத்தி,புரோட்டா எல்லாம் போட்ட கையோடு எல்லாம் பென்சில் சீவ கத்திதான்பயன்படுத்துவேன் நீங்க என்னாடான்னா சப்பாத்தி போட்டேன் கை வழுக்கும் என்று சொல்றீங்களே என்றார்.
இருந்தாலும் என் உள் உணர்வு தடுக்கவே!
வேண்டாம் பாஸ்கர், நாம் ஷார்பனர் வைத்தே சீவலாம் என்றேன்.
ஷார்பனரில் சீவுனா ரொம்ப நேரம் ஆகும் , நான் வந்தால் எப்பொழுதும் கத்தியை வைத்துதான் சீவுவேன்,நீங்க என்னடான்னா இப்படி பயப்படுறீங்களே என்றார்.
மற்ற நாளில் பயம் இல்லை, இன்று சப்பாத்தி போட்டு கை எண்ணெய் ஆக இருக்கிறது, அது மட்டும் இன்றி மீதி சப்பாதியும், அடுத்தமாதம் முழுவதும் நடக்க இருக்கும்பதிவர் சந்திப்புக்கு வேண்டிய பஜ்ஜியும் இப்பயே போட்டு வைக்கனும். அதான் என்று நான் சொன்னேன்.
இருந்தாலும் நீங்க ரொம்ப பயப்படுறீங்க- எம்.எஸ். பாஸ்கர்.
வேறு வழி இல்லாமல் ஷார்பனரை வைத்து சீவ ஆரம்பித்தோம்.
டக் என்று அருகில் இருந்த ஒருவன் கால் இடறி பாஸ்கர் மேல் விழ அவரோடு சேர்ந்து நானும் கீழே விழ, அவர் கையில் இருந்த ஷார்பர் உடைந்து அவர் கையில் குத்திவிட்டது.என் கையில் இருந்த பென்சில் முனை உடைந்து என் கையை குற்றிவிட்டது.எழுந்து பார்த்தார் அவர் கையில் ஒரு சொட்டு இரத்தம். என் கையிலும் காயம்.சட்டையில் வேறு பென்சில்கோடு போட்டுவிட்டது.
பார்த்தீங்களா பாஸ்கர் ஷார்பனர் வைத்து சீவியதால் தப்பித்தோம், இதுவே கத்தி வைத்து சீவி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? என்று அடிப்பட்ட நிலையிலும் கருத்து சொல்ல ஆரம்பித்தேன்.
ஆமாங்க நீங்க சொல்வது சரிதான் என்றார்- எம்.எஸ். பாஸ்கர்
சரி பரவாயில்லை ஒரு ரூலர் இருந்தால் கொடுங்க என்றேன், அவர் திரு திரு என்று முழித்துவிட்டு எடுத்து கொடுத்தார்.பின் கையில் கீறீயதை அளவு எடுத்து வைத்துக்கிட்டேன் பதிவு எழுத. அடிப்பட்டாலும் அங்கேயே இருந்து பென்சில் சீவிவிட்டுதான் வீட்டுக்குவந்தோம்.
வீட்டுக்கு வந்த பிறகு நடந்ததை சொன்னேன், ஆறுதலா கிடைக்கும். ஒரு பென்சிலை கூட ஒழுங்கா சீவி எடுத்துவரமுடியவில்லை அது இதுன்னு செம டோஸ்.
SMS: பென்சில் சீவினா கையில் கிளவுஸ் போட்டுக்குங்க.
(இனி இதுபோல் ஒவ்வொருவரும் எப்படி பதிவு எழுதுறாங்க என்று இங்கே எழுதப்படும், அடுத்து யார் ?)
இந்த பதிவு புரியாதவர்களுக்கு இங்கே கிளிக் செஞ்சு படிச்சுப்பாருங்க
Wednesday, September 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
அவ்வ்வ்வ்.... எதிர்பதிவு...
எதிர்பதிவுக்கு மவுசு குறைஞ்சிடுச்சுனு தலைப்ப மாத்திட்டிங்களா?
பாவம் பரிசல்..
:)))))))))))
யோவ் குசும்பா.. உம்ம குசும்புக்கு ஒரு அளவில்லாம போயிடுச்சி. ஒரு மனுசன் கீழ விழுந்து பத்திரமா எழுந்து வந்து பதிவு போட்டா அதையும் கலாய்க்கிறீரே??? :))))
:)))))))))))))
அடப்பாவி, நீ நல்லா இருப்பியா ?
எல்லாத்தையும் காமடி செய்து....
கடுமையான கோபம், கடுமையான கண்டனம் ? இப்ப நான் என்ன செய்யனும் .......
:) :) :)
அடி ஆத்தீ........ எங்கனெ உக்காந்து யோசிக்கிறீர்?
:-)))))
வேண்டாம்ணே...பாவம்
//கோவி.கண்ணன் said...
அடப்பாவி, நீ நல்லா இருப்பியா ?
எல்லாத்தையும் காமடி செய்து....
கடுமையான கோபம், கடுமையான கண்டனம் ? இப்ப நான் என்ன செய்யனும் .......//
சப்பாத்தி போட்ட கையால் குசும்பனுக்கு முன்னால்(நின்று) கத்தியால் சீவிறது............
பென்சிலைத்தன்.
ஹா ஹா ஹா குசும்பன் உங்க ரவுசு தாங்க முடியல :-)))))))))))))))))
ஒன்றுமே புரியவில்லை சகோதரா...மறுபடி வாசித்து பார்க்கின்றேன்.
ஹி..ஹி..
யப்பா குசும்பா,
தாங்க முடியல. அடக்க முடியாம சிரிச்சா, ஆபிஸ்ல இருக்கவனெல்லாம் ஜந்துவப் பாக்குறா மாதிரிப் பாக்குறாங்க உன்னால.
அய்யோ பாவம் அந்த அண்ணா...கிகிகிக்கிகி
எதிர்ப்பதிவிற்கு ஒரு புதிய வடிவம் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்
:)
ரொம்ப நாளைக்குப் பிறகு முடிந்தளவுக்கு பல பதிவர்களின் பதிவுகளை படிpபதென்று நினைத்தேன் ....
இப்பிடி பின்னூட்டம் போடுற மாதிரிப் பண்ணிட்டீங்களே..
உங்கள நம்பி வந்து 2 பதிவையும் பார்த்து....ஏனுங்க இதுகெல்லாமா பதிவு போடுவாங்க..அதுக்கு எதிர்ப் பதிவு வேற இவ்வளவு லாங்கா (Long) :)இருக்கணுமா..?
ROTFL!
எஸ்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏப்!
//சோமி said...
ரொம்ப நாளைக்குப் பிறகு முடிந்தளவுக்கு பல பதிவர்களின் பதிவுகளை படிpபதென்று நினைத்தேன் ....
இப்பிடி பின்னூட்டம் போடுற மாதிரிப் பண்ணிட்டீங்களே..
உங்கள நம்பி வந்து 2 பதிவையும் பார்த்து....ஏனுங்க இதுகெல்லாமா பதிவு போடுவாங்க..அதுக்கு எதிர்ப் பதிவு வேற இவ்வளவு லாங்கா (Long) :)இருக்கணுமா..//
யாருங்க இந்த அப்பாவி?
கொய்யால இருடி இருக்கு :)
வெடிகுண்டு
முருகேசன்
( coming soon blogger :) )
ஆகா, செம எதிர்பதிவா இருக்கே,,,, வெயிட்டிங்.. அடுத்தது என்ன?
அடங்க மாட்ட போல?
அவரு அடிபட்டது தப்புல்ல. ஆனா காயத்தோட அளவ எல்லாம் தப்புத்தப்பா அளந்து எழுதியிருந்தாரு பாருங்க, அதுதான் தப்பு, பதிவர் சந்திப்புல அவரோட காயத்த எல்லாம் பார்த்த நாங்க, அந்த அளவுகள் தப்புன்னு கண்டுபிடிச்சுட்டோம். சொல்ல மறந்து போயிடுச்சு.
ஆனாலும் குசும்பா, உன் குசும்புக்கு அளவே இல்லாம போயிடுச்சு நண்பா.
பென்சில் சீவினா கையில் கிளவுஸ் போட்டுக்குங்க.
உடல் நிலையைப்பார்த்துக்கொள்ளுங்கள்!
சிங்கப்பூர்லேருந்து ஆட்டோ வரலைன்னாலும்
லோக்கல் துபாய் ஆட்டோஸ்டாண்டிலேருந்து வரும்!
:)))))))))))))))))))
:-))))))))
//கோவி.கண்ணன் said...
அடப்பாவி, நீ நல்லா இருப்பியா ?
எல்லாத்தையும் காமடி செய்து....
கடுமையான கோபம், கடுமையான கண்டனம் ? இப்ப நான் என்ன செய்யனும்//
இப்போ யார் மேலயாச்சும் விழுந்து பந்திரமா எழுந்து வந்து இன்னொரு பதிவு போடனும்.. :P
அடுத்து யார்?
மங்களூர் சிவாவுக்கு சிரிப்பு.. சாரி சிறப்பு கல்யாணப் பரிசு தர வேண்டும் என்று சொல்லி 11 ரூபாய் அன்பளிப்பாக குசும்பனுக்குத் தரப் படுகிறது.
கலக்கலாய் கலாச்சிட்டீங்க!
அவ்வ்வ்வ்.... கலாச்சிட்டீங்க!
Post a Comment