Sunday, September 7, 2008

சஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் + சிவாவுக்கு மொய்

எல்லோருக்கும் பொடியனாக அறிமுகம் ஆகி பொடிப்போட்டு திகட்டாமல் பதிவு எழுதிக்கொண்டு வந்த நீங்கள் இன்று அனைவருக்கு தெரிந்த தொழிலதிபர்.சஞ்சய் ஆனபிறகு பதிவுகள் எல்லாம் செம காட்டு காட்டுகிறது.
விவசாய பதிவாகட்டும் , பட விமர்சனம் ஆகட்டும் எல்லாவற்றிலும் அரசியல் சூடுபறக்கிறது. நல்ல மாற்றம் அப்படியே அரசியலிலும் ஒருகலக்கு கலக்க வாழ்த்துக்கள்.


அடுத்த பிறந்தநாளை கல்யாணம் கட்டிக்கிட்டு மனைவியோடு கொண்டாடவும் வாழ்த்துக்கள்.
(நந்து: ”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா? சஞ்சய் மண்டையில் முடி முளைக்கவைக்கிறது கூட ஈசி இது அம்புட்டு ஈசி இல்ல குசும்பா”)


அரசியல் பதிவர் பர்த்டே கொண்டாட்டங்கள்.



என்னைமாதிரி ஒருவன் கேக் செஞ்சு இருக்கான் போல சஞ்சய் காந்திக்கு பதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ராகுல் காந்தின்னு போட்டு இருக்கான்.

********************************$$$$$$$$$$$*******************************

மங்களூர் மைனர் குஞ்சு சிவா உன் கல்யாணத்துக்கு என்னால் வரமுடியவில்லை என்ற வருத்தத்தைவிட சஞ்சய், நந்து எல்லாம் உன் கல்யாணத்துக்கு வருகிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது.(மொய் பணம் உசார்)

நந்து வருகிறார், ஜீவ்ஸ் வருகிறார் என்ற நம்பிக்கையில் போட்டோகிராப்பர்ஸ் யாரையும் வைக்காமல் இருந்து விடாதே, அவர்கள் எடுத்த போட்டோவுக்கு போஸ்ட் புரோடக்ஸன் செய்யுறேன் செய்யுறேன் என்று செய்வார்கள் அதுக்குள் உன் பொண்ணுக்கு புட்டு சுத்தும் விழாவுக்கு போட்டோ எடுக்க திரும்ப கூப்பிடும் படி ஆகிவிடும்.

உன் கல்யாணத்துக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நாங்கள் வைக்க போகும் மொய்.

தலை பாலபாரதி -----10001 ரூபாய்.

குசும்பன் -ரிப்பீட்டேய்

நந்து- ரிப்பீட்டேய்

ஆயில்யன்- ரிப்பீட்டேய்

ஜீவ்ஸ் -ரிப்பீட்டேய்

புதுகைத்தென்றல்-ரிப்பீட்டேய்

நிஜமாநல்லவன் -ரிப்பீட்டேய்

தமிழ்பிரியன் - ரிப்பீட்டேய்

பூங்கொடி அப்பா- ரிப்பீட்டேய்

சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்

32 comments:

said...

/
(நந்து: ”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா? சஞ்சய் மண்டையில் முடி முளைக்கவைக்கிறது கூட ஈசி இது அம்புட்டு ஈசி இல்ல குசும்பா”)
/

:))))))))))

said...

/
தலை பாலபாரதி -----10001 ரூபாய்.

குசும்பன் -ரிப்பீட்டேய்

நந்து- ரிப்பீட்டேய்

ஆயில்யன்- ரிப்பீட்டேய்

ஜீவ்ஸ் -ரிப்பீட்டேய்

புதுகைத்தென்றல்-ரிப்பீட்டேய்

நிஜமாநல்லவன் -ரிப்பீட்டேய்

தமிழ்பிரியன் - ரிப்பீட்டேய்

பூங்கொடி அப்பா- ரிப்பீட்டேய்

சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்
/

:))))))))))))))))

said...

//தலை பாலபாரதி -----10001 ரூபாய்.//
பத்தாது .. பத்தாது....

என் பிறந்தநாள் கொண்டாட்டங்களை படம் பிடித்து காட்டிய குசும்பன் மாமாவுக்கு நன்றிகள்.. :)

( தலையில் முடியுடன் சஞ்சய் வழக்கத்தை விட கேவலமாக தெரிகிறான்.. :P )

said...

அடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா ?

சொந்தமாக யாரும் வைக்க மாட்டாங்களா ?

நான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்.

said...

//”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா//

!!!!!

said...

சிவா அண்ணே! குசும்பனின் திருமண போட்டோக்களை இப்படித்தான் ஜீவ்ஸும், நந்து சாரும் பிராஸஸில் வச்சு இருக்காங்களாம்... வாழ்த்துக்கள்!

said...

லேபிளில் பா.க.ச மட்டும் மிச்சம் இருக்கு போல... பா.கு.சன்னு கூட போட்டு இருக்கலாம்.. :)

said...

ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்!!!!

said...

ம்ம்ம்ம்ம் - சஞ்செய்க்குப் பிறந்த நாள் வாழ்த்தும் - சிவாவிற்கு இனிய இல்லற வாழ்க்கைக்கு வாழ்த்தும்

said...

//சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்//

ரிப்பீட்டேய்...

:)))))

said...

:)))))))))))))

said...

//ஆயில்யன்- ரிப்பீட்டேய்//

நண்பா!
!
!
!
!
!
!
!
!
நீதான்ய்யா நண்பன்!


நொம்ப தேங்க்ஸ்!

said...

//பூங்கொடி அப்பா- ரிப்பீட்டேய்//

அவுருமா??????

said...

//என்னைமாதிரி ஒருவன் கேக் செஞ்சு இருக்கான் போல சஞ்சய் காந்திக்கு பதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ராகுல் காந்தின்னு //


என்னிய மாதிரியே நண்பா நீங்களும் :))))

said...

//ஜீவ்ஸ் வருகிறார் என்ற நம்பிக்கையில் போட்டோகிராப்பர்ஸ் யாரையும் வைக்காமல் இருந்து விடாதே, அவர்கள் எடுத்த போட்டோவுக்கு போஸ்ட் புரோடக்ஸன் செய்யுறேன் செய்யுறேன் என்று செய்வார்கள் அதுக்குள் உன் பொண்ணுக்கு புட்டு சுத்தும் விழாவுக்கு /

ம்ம் கரீக்ட்டா சொன்னப்பா! :)

said...

//சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்
//

என்னங்க தொழில் அதிபர்ன்னு சொன்னீங்க ?????!!!!

said...

//கோவி.கண்ணன் said...
அடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா ?

சொந்தமாக யாரும் வைக்க மாட்டாங்களா ?

நான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்.
///

நாங்களும் சென்னையில் ”இருந்தால்” பிளைட்டு மேலயே ஏத்தி ஊர்வலம நடத்துவோமாக்கும் என்ன குசும்பா நான் சொல்லுறது கரீக்ட்டுதானே???

said...

//( தலையில் முடியுடன் சஞ்சய் வழக்கத்தை விட கேவலமாக தெரிகிறான்.. :P )//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

said...

ஹாஹாஹா!!

மங்களூர் சிவாவுக்கே ரிப்பீட்டா?? :) அதனாலதான் சஞ்சய் (மொய்யோடு) அப்பீட்டா?

said...

நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்

said...

//கோவி.கண்ணன் said...
அடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா ?//

ரிப்பீட்டே! :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணாச்சி!
BTW, அந்த கேக் வெட்டும் காட்சி, எந்தக் கட்சி-ண்ணே? :)

said...

மொய்க்கு நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுகிறேன்

said...

வருங்கால பிரதமர் சஞ்சய்னு போட மறந்துட்டீங்களே குசும்பன்.

:)))))))))

said...

//நான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்.//

அவரே தூக்கிட்டு போவாருனு சொல்ல வர்றாருப்பா... அன்டர்ஸ்டுட் கோவி...

said...

நன்றி சிவா

SanJai said...
தலையில் முடியுடன் சஞ்சய் வழக்கத்தை விட கேவலமாக தெரிகிறான்.. :P )

அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்! அவர் வருங்கால பெரும் புள்ளி!!

கோவி.கண்ணன்
சொந்தமாக மொய் வைக்க நாங்க என்ன கோவி.கண்ணனா? நீங்க நினைச்சா யானை என்னா டயனோசர்
மேலேயே ஊர்வலம் வைக்கலாம்:)

நன்றி நரசிம், அது என்னா !!!! கல்யாணம் ஆன பிறகு கொண்ட்டமாக இருக்குமுடியுமா?

தமிழ் பிரியன்
ஆமாம் இதுக்காகவே வேறு ஒரு நல்ல போட்டோ கிராப்பருங்களை வெச்சு ஸ்ரேயாகோசலை கல்யாணம் செய்யலாமா
என்று யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

நன்றி விஜய், வாழ்த்து சொல்ல நிறையப்பேர் பதிவு போட்டு இருக்காங்க இது இவுங்க ரெண்டு பேரை கும்ம மட்டும்.:))

சீனா சார் நீங்களுமா?

தஞ்சாவூரான் நன்றி: சஞ்சய் வருங்கால அரசியல் தலை இல்லையா அதான் இப்பொழுதில் இருந்தே டிரைனிங்.

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி ஆயில்யன். பூங்கொடி அப்பாவையும் சொல்லவெச்சுட்டா போச்சு:)))

ஜ்யோவ்ராம் சுந்தர் ஜீ என்ன செய்வது இப்ப கும்மினாதா இவுங்களை உண்டு இல்லை என்றால் எஸ் ஆகிவிடுவார்கள்.

நன்றி தாமிரா

நன்றி KRS, அந்த கட்சி நம்ம காமெடி கிங் மன்மோகன் ஜீ இருக்கும் கட்சி!

வால்பையன் நன்ற்

புதுகைத்தென்றல் அவரு அமெரிக்க அதிபர் ஆகபோறேன் என்று சொல்லிட்டு இருக்கார்.

said...

:):):)

said...

////கோவி.கண்ணன் said...
அடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா ?

சொந்தமாக யாரும் வைக்க மாட்டாங்களா ?

நான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்//

சிவா என்ன தண்ணி லாரியா? யனை மேல ஏத்த? என்ன கோவியாரே.. :))

said...

நான் பொறந்ததை எல்லாம் ஒரு மேட்டரா எடுத்துகிட்டு வாழ்த்து சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..நன்றி..நன்றி.. :)

said...

//புதுகைத் தென்றல் said...

வருங்கால பிரதமர் சஞ்சய்னு போட மறந்துட்டீங்களே குசும்பன்.

:)))))))))//

உங்க தம்பிய பார்த்து அவருக்கு பொறாமைக்கா.. :)

said...

//ஆயில்யன் said...

//சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்
//

என்னங்க தொழில் அதிபர்ன்னு சொன்னீங்க ?????!!!!//

தொழிலதிபர்னு காமெடி பண்ணா சும்மா சிரிச்சி வைக்கனும்.. காமெடியில லாஜிக் எல்லாம் பாக்க கூடாது மிஸ்டர் ஆயில்ஸ்.. :)

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹாஹாஹா!!

மங்களூர் சிவாவுக்கே ரிப்பீட்டா?? :) அதனாலதான் சஞ்சய் (மொய்யோடு) அப்பீட்டா?//

சுந்தர் சார் .. நீங்களுமா? :(

குசும்பா விநாயகர் சதுர்த்திக்கு நீங்க செஞ்ச கொழுக்கட்டையாலயே உம்ம அடிக்கனும்யா.. :(