Monday, May 28, 2007

அடுத்த படம்

இன்றைய அரசியல் சூழ்நிலைகளை வைத்து பட டைரக்டர்ஸ் படம் எடுத்தால் என்ன படம் எப்படி எடுப்பார்கள்.

டைரக்டர்: சரவணசுப்பையா
நடிகர்: அஜித்
படம்: season
கதை: 2000 வருடங்களுக்கு முன்பு இருந்த பாலம் உலகவரை படத்துல இருந்து திடிர் என்று காணாமல் போய்விட்டுகிறது. அது எப்படி என்று கண்டுபிடிப்பதுதான் கதை கரு.


டைரக்டர்: சிலம்பரசன்
நடிகர்: சிலம்பரசன்
படம்: கண்றாவி கருமம்
கதை: M.L.A ஒருவர் ஊர்ல இருக்குற எல்லா நர்ஸையும் கடத்தி கடத்தி கொலை செய்கிறார், ஏன் எதற்க்கு என்று கண்டுபிடிப்பது தான் கதை.

டைரக்டர்: லிங்குசாமி
நடிகர்: விக்ரம்
படம்: பாம்மா!
கதை: திருமணபத்திரிக்கை அடிக்கும் ஆபிஸ் எரிக்கபடுகிறது அது ஏன் எதற்க்கு என்று கதாநாயகன் கண்டு பிடிக்கு போகிறார் அதில் பல பெருங்கைகள்,சில அல்ல கைகள் அதில் ஈடுப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. பயந்து ஜகா வாங்குகிறார இல்லை பந்தாடுகிறாரா..முடிவு 30 வருடங்களுக்கு பிறகு.

கதை டிஸ்கஸனில் நடக்கும் கூத்து விரைவில்...

0 comments: