Tuesday, May 22, 2007

கோவையின் தமாசு தமாசு


செய்தி: விடுதலைப்புலிகளை பற்றி பேசக்கூடாது என மிரட்டினால் அதிகமாக பேசுவோம்- கோவை கோமாளி ஆவேசம்.


அடேங்கப்பா இந்த கோவை கோமாளி செய்யுற அலப்பறைக்கு அலவே இல்லாம போச்சு பா. தூக்கி ஒன்றரை வருடம் சிறையில் போட்டு களி திங்க வைத்த பின்பும், சர்கரை வியாதி இருக்கிறது என்பதற்காக எல்லாரையும் கூட்டி கொண்டு நடை பயிற்சி போன போது எல்லாம் இப்படி ஆவேசமா பேசமுடியாத எலி இப்பொழுது தாத்தா மூக்கில் வாலை விட்டு ஆட்டுகிறது, ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சிங்கம் சுனங்கிடுச்சினா எலி மூக்குல வால விட்டு ஆட்டுமாம் என்று. கொஞ்ச மாதங்களுக்கு முன்பு வரை நீ ஊருக்கு வருகிறாய் என்றால் சேது சமுத்திர நாயகனே என்று போஸ்டர் அடித்து ஒட்டுவார்களே , இப்ப எங்கங்கயா அந்த போஸ்டர் போச்சு? அம்மா எதிர்கிற திட்டம் என்பதால் அது பற்றி மூச்சு விடாத நீ இன்று இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறாய், என்ன காமெடியா இது உள்ளூர் தமிழர்களுக்கே குரல் கொடுக்க முடியவில்லையாம், இவரு இலங்கை தமிழர்களுக்காக போராட போகிறாராம்... கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போக போறாராம்.

3 comments:

Anonymous said...

தமிழக அரசியலில் நம்பர் 1 பச்சோந்தி இந்த ஆள்தான்.

said...

தல இத்தனை நாளா உங்க பதிவ மிஸ் பண்ணீட்டேன்.

எல்லா பதிவும் அருமை.

கிளப்புங்கள்

said...

வணக்கம் அணானி அண்ணா!

நன்றி வெங்கட்ராமன், நீங்க மிஸ் பண்ணவெல்லாம்
இல்லீங்க, ரொம்ப போராட்டத்துக்கு அப்புறம் இப்பதான்
தமிழ்மணத்துல இனைப்பு கொடுக்க முடிஞ்சுது.

தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

நன்றி
குசும்பன்