Sunday, May 20, 2007

சென்னை வந்த ராமன்


கடைகாரர்: ஐயா தெய்வமே! எப்படி இருக்கீங்க! எங்க இந்த பக்கம்?

ராமர்: நாங்க அடிக்கடி இலங்கைக்கை போக வர பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பாலத்தை இடிக்க போவதாக செய்தி வந்தது, அதான் பாலத்தின் கன்ஸ்ட்ரக்சன் இன்சினியர் அனுமனையும் கூப்பிட்டு வந்தேன்.

அனுமன்: நியாமா பார்த்தா அந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியேமே இல்லை, கொஞ்சம் தள்ளி நோண்டிக்கலாம், அதுக்காக ஒரு மாற்று வரைவு திட்டத்தை தயாரிச்சி இருக்கோம் அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அத டி.ஆர்.பாலு கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு இப்படி வந்தோம்.

கடைகாரர்: தெய்வமே எனக்கு ஒரு டவுட், லாஸ்ட் டைம் நீங்க பாலம் கட்டிக்கிட்டு இருக்கும் பொழுது டையர்டா, தாகமாக இருக்குன்னு சொன்னப்ப ஓனான் ஒன்னுக்கு அடிச்சு கொட்டாங்கிச்சில கொடுத்துச்சு என்றும் அணில் தான் ரொம்ப ஹல்ப் பண்ணிச்சு என்று பாராட்டி முதுகுல கோடு போட்டிங்க என்று சொல்லுறாங்கலே நிஜமா??

ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.

0 comments: