Wednesday, September 15, 2010

கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார்

கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார் வழங்கும் குறும்பட விமர்சனம்.

ஆதி எடுக்கும் குறும்படங்களில் இருக்கும் ஈயடிச்சாங் காப்பிகளை பத்தி எழுதினாலும் எழுதினேன், ஏகப்பட்ட பாராட்டு கடிதங்கள் வந்து குவிஞ்சிக்கிட்டே இருக்கிறது. இனி அவனுங்களை படம் எடுக்க விடாம எப்படியாவது தடுத்து விடுங்க உங்களுக்கு கோயில் கட்டுகிறோம் என்ற அளவுக்கு நண்பர்கள் சொல்கிறார்கள்.

இனி இந்த புது குறும்படம் கடிதத்தில் வரும் ஈயடிச்சாகாப்பிகளை பட்டியலிட்டு பார்ப்போம்.
1)முதல் சீன் கார்க்கி கட்டை சுவத்து மேல் உட்காந்திருப்பது போல் காட்டப்படுகிறது, இது பாய்ஸ் படத்தை நக்கல் அடிச்சு சந்தானம் & சொட்டை மனோகர் நடித்த லொள்ளு சபாவில் சொட்டை மனோகர் ஒரு சீனில் தனியாக சுவத்து மேல் உட்காந்துக்கிட்டு நண்பர்களுக்காக காத்திருப்பார் அதை அப்படியே உருவி அதே மாதிரி ஹீரோவையும் புடிச்சு சுவத்து மேல உட்காரவெச்சிருக்கார் இந்த குறும்படத்தின் டைரக்டர் ஆதி.
2)அடுத்த சீனில் இலைகளை காட்டுகிறார் இது அப்படியே பாரதிராஜா படத்தில் ஹீரோவை காட்டும் முன்பே மண்வாசனையோடு கிராமத்தை காட்ட எப்பொழுதும் இலைகளை செடி, கொடி, கோழிகளை காட்டுவார் அது அப்படியே இங்கு காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது.
3)இதுக்கு அடுத்த சீனில் ஹீரோ ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறார், இந்த சீன் கிங்காங் படத்தில் கிங்காங்கை கூண்டில் அடைச்சு எடுத்துக்கிட்டு போகும் பொழுது ஹீரோயின் வருகிறாளா என்று கிங்காங் கூண்டு கம்பி வழியே அப்படியே பாவமாக பார்க்கும் கிங்காங். அந்த சீனை அப்படியே எடுத்திருக்கிறார். ஹீரோவும் இதுக்காக பலமுறை ஹோம் ஒர்க் செய்து கிங்காங் படத்தை பார்த்திருப்பார் போல அப்படியே அச்சு அசலாக கிங்காங் எக்ஸ்பிரசனை ஹீரோவின் முகத்தில் பார்க்கமுடிகிறது, பார்க்கும் நமக்கு படத்தில் இருப்பது கார்க்கியா அல்லது கிங்காங்கான்னு குழப்பம் வரும் அளவுக்கு அப்பட்டமான காப்பி நடிப்பிலும்.

4) அடுத்த சீனில் மழையையும் மழை பெய்ததால் இலையில் இருந்து சொட்டும் மழைத்துளியையும் காட்டுகிறார், காலங்காலமாக படத்தில் ரேப் நடக்கும் பொழுது மான் மேல் பாயும் புலி போட்டோவையும் பிறகு ரேப் முடிந்த பிறகு இரத்த களறியான மானையும் காட்டுவார்கள், இதே ஹீரோ ஹீரோயின் சம்மதத்துடன் ஜல்சா செய்கிறார் என்றால் மழை பெய்யும் சீனை காட்டுவார்கள் மேட்டர் முடிந்த பிறகு ஓலை குடிசையின் மேல் இருந்து தண்ணீர் சொட்டுவதை காட்டுவார்கள்.அப்படி அந்த சீனை அப்படியே உருவியிருக்கிறார் ஆதி.
5)அடுத்து அடுத்து வரும் சீன்களில் மோட்டுவலை,தாவங்கட்டையை எல்லாம் சொறிந்தும், கட்டிலில் உருண்டு புரண்டு ஹீரோ பேப்பரில் ஏதோ கிறுக்குவது போல் காட்டுகிறார் இதை எல்லாம் காலம் காலமாக ஹீரோ ஹீரோயினுக்கு கவிதை எழுதி கொடுக்கும் காட்சிகளில் இந்த சீன்களை பார்த்திருக்கிறோம். அதே மாதிரி ஹீரோ பரிட்சை அட்டையில் பேப்பரை வைத்து கவிதை எழுதுவது என்று இன்னும் 80களின் படப்பாதிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. கற்பனை வறட்சி.
6)இந்த சீனில் ஹீரோ கண்ணாடிக்கு முன்னாடி நின்னு தலையை சரி செய்வது போல் காட்டுகிறார், இது எந்த படத்திலிருந்து உருவியது என்று உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்ல,தனுஷ் ,சோனியா அகர்வால் நடிச்ச துள்ளுவதோ இளமை படத்திலிருந்து இதை பார்த்துவருகிறோம். 7) கண்ணாடிக்கு முன்னாடி நிற்கும்பொழுது போட்டு இருந்தது ஒரு ட்ரஸ் பிறகு கடிதத்தை எடுத்து பார்க்கும் பொழுது வேற ஒரு ட்ரஸ், ஹீரோயின் தலை சீவுவதை எல்லாம் காட்டிவிட்டு டிரஸ் மாத்துவதை மட்டும் காட்டாமல் போகும் எல்லா தமிழ் சினிமாக்களில் இருந்து இந்த சீன் உருவப்பட்டுயிருக்கிறது. இதே ஆங்கிலப்படங்களில் என்றால் சர்வசாதாரனமாக பேசிக்கிட்டே ட்ரஸ் மாத்தும் சீனை காட்டியிருப்பார்கள், இன்னும் இவர்கள் இந்த குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவில்லை.


8)ஹீரோவின் நண்பராக சென் வருகிறார், ஒரு சூப்பர் பிகருக்கு சப்பை பிகர் ஃபிரண்டாக காட்டுவது தமிழ்பட மரபு மட்டும் இல்லை ரியல்டைமிலும் பல சூப்பர் பிகருங்க ஒரு அட்டு பிகரை ஃபிரண்டாக வெச்சிருப்பாங்க அதுபோல் இங்கு மொக்கை ஹீரோவுக்கு, சூப்பர் ஃபிரண்ட்டாக சென் வருகிறார் இங்கு மட்டும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆதி.

********************************
ஜக்கி குமார்
முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன் ஏன்னா கடைசிவரை யாரும் படிப்பது இல்லை.என்ன சொல்லப்போறேன் என்றால் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு, படத்தின் பாதிப்பில் நம்ம நேட்டிவிட்டியை கலந்து கொடுப்பது என்பது வேறு...இதே ஜக்கி குமாரும் ஈயடிச்சாங்காப்பி அடிச்சிருக்கிறேன் நான் ஒன்னும் மகான் அல்ல.ஆனால் தமிழ் பிளாக்கில் புதிய முயற்சியாக ஆதி கொடுப்பதை பாராட்டியே ஆகவேண்டும், குறும்படம் என்றாலே நல்ல ஹீரோ, நல்ல கேமிரா நல்ல இசை எல்லாம் இருக்கவேண்டும் என்ற மரபை உடைத்தவர், திராபை சவுண்ட், மொக்கை ஹீரோ, மொக்கை கதை என்று இவைகளை வைத்தும் படம் என்று ஒன்னுஎடுத்து அதுக்கு குறும்படம் என்றும் பெயர் வைக்கமுடியும் என்று தில்லாக நிரூபித்தவர் நம்ம ஆதி. அதுக்காகவே நாம் ஆதியை பாராட்டிதான் ஆகவேண்டும், இதுவரை குறும்படமே பார்க்காதவங்களையும் பார்க்கவைத்த பெருமையும் இனி அவர்கள் குறும்படம் என்றாலே சொன்னவன் வாயிலேயே குத்தும் அளவுக்கு கொலைவெறியையும் ஏற்படுத்திய பெருமை ஆதியையே சேரும்.

இப்ப அமெரிக்கா காரன் வெஸ்டர்ன் டாய்லட்டில் உட்காந்து போகிறான் நாமும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காந்துதானே போகிறோம் இது காப்பியில்லையா? அதை குறை சொல்கிறோமா? வித்தியாசமாக செய்கிறோம் என்று அதுமேல ஏறி உட்காந்துக்கிட்டா போகிறோம்?

சீனாக்காரன் நூடுல்ஸை வாயால் சாப்பிடுகிறான், அதே நூடுல்ஸை நாமும் வாயல்தான் சாப்பிடுகிறோம் இது காப்பியில்லையா?

திரும்ப திரும்ப சொல்கிறேன் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு பில்டர் காப்பி என்பது வேறு.

அப்புறம் இவ்வளோ தூரம் படிச்சிட்டிங்க பார்த்து எதாவது செஞ்சிட்டு போங்க மக்கா! என்னது இது எல்லாம் ஒரு குறும்படம் இதுக்கு எல்லாம் ஒரு விமர்சனம் என்று துப்பிட்டுதான் போவீங்களா கருமம் அதையாவது செஞ்சிட்டு போங்க .எத்தனை நாள் கழிச்சி படிச்சாலும் துப்பிட்டு போக மறக்காதீங்க மக்கா!
இந்த குறும்படத்தை பார்த்து தொலைய http://www.aathi-thamira.com/2010/09/blog-post_14.html

39 comments:

Anonymous said...

சாரி கார்க்கி, இதுல கும்மியே ஆகனும் :))

Anonymous said...

ஆஹா இன்னைக்கும் நாந்தான் பர்ஸ்டா :)) குசும்பு உங்க நிஜ ரசிகை ஆயிட்டேனோ ??

Anonymous said...

கிங்காங் படத்தில் கிங்காங்கை கூண்டில் அடைச்சு எடுத்துக்கிட்டு போகும் பொழுது ஹீரோயின் வருகிறாளா என்று பாவமாக பார்க்கும் கிங்காங் அந்த சீனை அப்படியே எடுத்திருக்கிறா//
ஒரு சின்ன ஒலக படம் ஒரு பெரிய ஒலக படத்தை காப்பி அடிச்சா என்ன தப்பூண்ணேன் :)) ( ஆனா தனியா சிரிக்க வச்சுட்டீங்களே )

Anonymous said...

டுத்த சீனில் மழையையும் மழை பெய்ததால் இலையில் இருந்து சொட்டும் மழைத்துளியையும் காட்டுகிறார், காலங்காலமாக ரேப் சீனின் பொழுது மான் மேல் பாயும் புலி போட்டோவையும் பிறகு ரேப் முடிந்த பிறகு இரத்த களறியான மானையும் காட்டுவார்கள், இதே ஹீரோ ஹீரோயின் சம்மதத்துடன் ஜல்சா செய்கிறார் என்றால் மழை பெய்யும் சீனை காட்டுவார்கள் மேட்டர் முடிந்த பிறகு ஓலை குடிசையின் மேல் இருந்து தண்ணீர் சொட்டுவதை காட்டு// இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, பாரதிராஜால இருந்து பேரரசு வரைக்கும் ஒரு படத்தையும் ஒரு சீனையும் விடாம பார்த்து இப்படி ஒலக பட விமர்சன் எழுத உங்களால தான் முடியும் குசும்பு ::)

Anonymous said...

கற்பனை வறட்சி // யூரியா போட்டு பார்க்கலாமா? வளருதான்னு

Anonymous said...

ஹீரோயின் தலை சீவுவதை எல்லாம் காட்டிவிட்டுடிரஸ் மாத்துவதை மட்டும்//// ஹிஹிஹிஹி:))

Anonymous said...

இதுல மிஸ் பண்ணீன சீன் பேப்பர் ஹீரோவை சுத்தி பறக்கற மாதிரி காட்டிருக்கலாமே ஆதி..மிஸ் பண்ணிட்டீங்க :)))

Anonymous said...

ஜக்கி குமார் உங்க லெட்டரை வெளியிடலைன்னு கோவம் தெரியுது # கோர்த்து விடுதல் :))

Anonymous said...

ஆதி படம் நல்லாருக்கு, இங்க கும்மினது குசும்பு பதிவு என்பதால் :)) கார்க்கி நிஜ சினிமாக்கு ட்ரை பண்ணுங்க (சும்மா உசுப்பேத்தல் )

Anonymous said...

திரும்ப திரும்ப சொல்கிறேன் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு பில்டர் காப்பி // முடிஞ்சா அடுத்த பதிவில் விளக்கவும் :))

பிரபல பதிவர் said...

ரியல் குசும்பு

☀நான் ஆதவன்☀ said...

ஜக்கு குமாரின் வாசகர்கள் உங்களை கும்முவதற்கு ரெடியா இருக்காங்களே :)

முதல்ல இதை படிச்சது கோபம் வரும் ஜக்கி குமாரின் முதன்மையான வாசக(ர்)ன் அமீரக்த்தை சேர்ந்த காசீப் ஊரான் :))

gulf-tamilan said...

:)))

M.G.ரவிக்குமார்™..., said...

செம செம செம!.........இனிமே காகிதத்தை கசக்கி எறியவே மாட்டங்கன்னு நம்புவோம்!...

சித்தன்555 said...

ஜக்கி குமாரின் எழுத்துப்பிழையைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?

அப்துல்மாலிக் said...

::))))

Prathap Kumar S. said...

//முதல்ல இதை படிச்சது கோபம் வரும் ஜக்கி குமாரின் முதன்மையான வாசக(ர்)ன் அமீரக்த்தை சேர்ந்த காசீப் ஊரான் :)//

காசிப் ஊரான் மட்டுமில்ல ராசா... பார்திகேயன் என்பவரும் இருக்கிறார்...என்பதை நினைவூட்ட
கடமைப்படிக்கிருக்கிறேன் :)

surivasu said...

இந்த மாதிரி ஒரு சூப்பர் விமர்சனத்த படிச்சி இதுவரை நான் இப்படி சிரிச்சதில்ல. நன்றி குசும்பன்.

என்னது நானு யாரா? said...

நக்கல் செய்றதே தெரியாத மாதிரி நக்கல் செய்றது ஒரு கலை! நல்லா எழுதி இருக்கீங்க! பாராட்டுக்கள்!

கார்க்கிபவா said...

பொறாமை இருக்க வேண்டியதுதான். அதுக்குன்னு இவ்வளவா?

முடிஞ்சா நீங்க ஒரு குறும்படம் எடுத்துட்டு பேசுங்க..

கார்க்கிபவா said...

என்னைக் கூட கம்மியாத்தான் கிண்டல் செஞ்சிருக்கிங்க. ஆனா இய்க்குனர் ஆதியை?

ச்சே.. எவ்ளோ நல்ல மனுஷன் தெரியுமா? அவரை இப்படி மானத்த வாங்க எப்படி முடிந்தது?

இதை படிச்சா அவர் தாங்க மாட்டாரே.. அய்யோ

Unknown said...

கலா கலா கலக்கலா

Thamira said...

இதுவரை குறும்படமே பார்க்காதவங்களையும் பார்க்கவைத்த பெறுமையும் இனி அவர்கள் குறும்படம் என்றாலே சொன்னவன் வாயிலேயே குத்தும் அளவுக்கு கொலைவெறியை ஏற்படுத்திய பெருமை ஆதியையே சேரும்.//

இது உண்மையிலேயே சாதனைதான் இல்ல மாமா. ஹிஹி.. அயம் வெரி ஹேப்பி. அயம் வெரி ஹேப்பி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

’கிங் காங்’ உங்களுக்குக் கம்மியான கலாய்த்தலா கார்க்கி :)

Thamira said...

அப்புறம் பதிவு என்னையா கலாய்க்குது.? ஹிஹி.. அடப் போ மாமா, நீ வேற..!! உனக்கு எப்பயுமே விளாட்டுதான்.!

மின்னுது மின்னல் said...

:::)))))))))))))

சுசி said...

இது கூட படத்துக்கான விளம்பரம்னு தெரியாம விழுந்து விழுந்து சிரிச்சிட்டேனே..

குசும்பன் அசத்திட்டிங்க.. :))

கண்ணா.. said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

’கிங் காங்’ உங்களுக்குக் கம்மியான கலாய்த்தலா கார்க்கி :)
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

:))

Ŝ₤Ω..™ said...

கண்டனங்கள்::

** என்னையும் ஒரு நடிகனா அறிமுகப்படுத்திய எங்கள் குறும்பட இயக்குனர் இமயமலை ஆதி அண்ணனின் கடிதம் படத்தை பார்த்து காப்பி என்று சொன்னதற்கு..

** குறும்பட உலகின் சூப்பர் ஸ்டார் அண்ணன் கார்க்கியையும் அவரது நடிப்பையும் கிண்டலடித்தமைக்கு..

------
அண்ணே.. உங்க வாயால (கையால) என்னை பாராட்டினதுக்கு நன்றி..
------

நன்றியை முன்னாடி சொல்லி இருக்கனும்.. ஆனா உங்க வார்த்தைகளால நீங்களே பின்னுக்கு தள்ளிட்டீங்க.. என்ன தான் இருந்தாலும் இப்படி பேசி இருக்க கூடாது..

------
மாமா.. இப்படி ஒரு சூப்பர் பப்ளிசிட்டி எங்க படத்துக்கு கிடைக்கும்ன்னு நாங்க நினைக்கவே இல்ல.. நன்றி.. நன்றி.. நன்றி..

Jey said...

குறும்படம் அருமை. அதைவிட இந்த விமர்சனம் அருமையோ அருமை.
( இதுக்கு நேரடியா துப்பிட்டு போயிருக்கலாமேனு கேக்குறது காதுல விழுது..., என்ன பன்றதுண்ணே... இப்படி உசுப்பேத்திவிடுரதே வேலையாப் போச்சி...)

வெட்டிப்பயல் said...

Excellent :)

Anonymous said...

super;-))

DR said...

மன்னிப்பு கேள்...4

Jackiesekar said...

அன்பின் தம்பி குசும்பனுக்கு...
நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வரிகள் கலாய்த்தால் என்ற பெயரில் சிக்கி ரணபடுவதை பார்க்க வருத்தமாக இருக்கும் காரணத்தால் இந்த பதிவோடு என்னை வைத்து கலாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்...

நான் கலாய்த்தலுக்கு உட்பட்டாலும் எனது நண்பர்கள், எனக்கு கடிதம் போட்டவர்கள் கலாய்ப்பில் மாட்டுவதை நான் ரசிக்கவில்லை....


நான் ஒன்றும் கலாய்த்தலுக்கு எதிரி இல்லை...இரண்டு தினங்களுக்கு முன் இரும்புதிரை அரவிந் என்னை கலாய்த்து இருந்தார்... ஆனால் வரிக்கு வரி என்பதிவில் இருந்து எடுத்து போட்டு கலாய்பதில் எனக்கு உடன்பாடு இல்லை....



பிரியங்களுடன்..
ஜாக்கிசேகர்...

Jackiesekar said...

எவ்வளவு அடிச்சாலும் இந்த பயபுள்ள தாங்கறான்னு நீ தப்பா நினைச்சிக்கிட்டு இருக்க கூடாது இல்லை...

குசும்பன் said...

நன்றி மயில், ஆமாம் அது என்ன கடைசியா
குறும்படம் நல்லாயிருக்குன்னு கமெண்ட் செஞ்ச பாவத்துக்கு
பரிகாரமா?

நன்றி சிவகாசி மாப்பிள்ளை

நன்றி ஆதவா? இந்த வருசம் உனக்கு பிரியாணியில்
சிக்கன் பீஸ் கிடையாது வெறும் சோறுதான்...

நன்றி Gulf-tamilan

நன்றி ஜெகதீசன்

நன்றி MGரவிக்குமார்

நன்றி சித்தன்555

நன்றி அப்துல்மாலிக்

நன்றி நாஞ்சில்

நன்றி VSP

நன்றி சின்ன அம்மிணி

நன்றி என்னது நானு யாரா?

நன்றி ஹீரோ கார்க்கி

நன்றி முகிலன்

நன்றி ஆதி, சாதனை இல்லை எங்களுக்கு வந்த சோதனை.

நன்றி குருஜி

நன்றி மின்னல்

நன்றி சுசி

நன்றி கண்ணா

நன்றி மங்களூர் சிவா

நன்றி இராமசாமி கண்ணன்

நன்றி சென், அண்ணே ஓவரா பம்மினா ஹீரோவாக்கிடுவார் பார்த்துக்குங்க
அப்புறம் ஆதி குறும்பட ஹீரோ சென் என்று வெளியே சொன்னால்
எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும் தெரியுமா?:))))

நன்றி Jey

நன்றி வெட்டிப்பயல்

நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி தனுசுராசி

அன்பின் அண்ணன் ஜாக்கி சேகருக்கு...

அண்ணே லொள்ளு சபா மாதிரி, தமிழ் படம் மாதிரிதான்
இந்த பதிவும்:) இதுல நீங்கள் வருத்தப்பட ஒன்னுமில்லை.
இதில் நான் மெயினாக கலாய்த்திருப்பது கார்க்கியையும்
ஆதி எடுத்த குறும்படத்தையும் தான், அதுக்கு உங்க பதிவு ஒரு இன்ஸ்பிரேசன் ஈயடிச்சாங்காப்பியில்லை.

அன்புடன்
குசும்பன்

வடுவூர் குமார் said...

செம குசும்பு.கலக்கல்.

Santhosh said...

மரண வெறியோட தான் இருக்க போல.. அடிச்சி ஆடு...