ஒருபடத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் கேண்டினில் உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க, வடிவேலு ரூட் விடும் பொண்ணு வந்ததும், வடிவேலு போனை எடுத்து ஹலோ துபாயா? பிரதர் மார்க் இருக்காரா? என்னது நீதான் பேசுறீயா? ஹேய் How r u man?why r u crying யா?லீவ் இட்! பீ ஹேப்பி! கூல் டவுன் கூல் டவுன்! என்று சொல்லிட்டு போனை வெச்சதும் என்னடான்னு பிரபுதேவா கேட்ப்பார். அதுக்கு வடிவேலு சொல்லுவார் ஒன்னுமில்லை துபாயில் இருந்து என்னோட பிரதர் மார்க் பேசினான், அவனுக்கு துபாயில் 20 பெட்ரோல் கிணறு இருக்கு,டோட்டலா பயர் ஆயிட்டாம். ஆப்ட்ரால் 20 கோடிதான் லாஸ்ப்பா! அதுக்கு போய் சின்ன குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கான். HEY MONEY COME TODAY GO TOMMOROW YA !இவ்வளோ பெரிய கோடிஸ்வரன் வீட்டில் பிறந்துட்டு இதுக்கு போய் அழலாமா 20 கோடிங்கிறது டிப்ஸ் கொடுக்கும் காசு என்றதும் அருகில் இருக்கும் பிரபுதேவா அப்படியே கிராமத்தில் கியுவில் நின்று ரேசனில் வாங்கிய மண்ணென்னெய் கீழே கொட்டியதும் டேய் அஞ்சுக்கும் பத்துக்கும் கொட்டு அடிச்சிஆடி பாடி எவ்வளோ கஷ்டப்பட்டு சம்மாரிச்ச காசுடா என்று இந்த எண்ணெய் இருந்தால் தான் டா எங்க ஊட்டுல அடுப்பு எரியும் என்று அடிச்சிக்கிட்டு அழும் வடிவேலுவை நினைச்சி பார்ப்பார்...அதுமாதிரி...இங்க நீங்க யாரை வேண்டும் என்றாலும் மனசுக்குள் நினைச்சிக்குங்க... (இதுக்கு பேருதான் வாசகருக்கு கொடுக்கும் சுதந்திரம்)
பதிவர் ஆன பிறகு:
ஹேய் பிரதர் மார்க் இந்த மாத கலா கபோதி சிற்றிதழ் இன்னும் வரவில்லை ya ! ரெண்டு நாள் ஆச்சு எப்பொழும் ஒவ்வொரு மாசமும் 3 தேதிக்குள் வந்துடும்! ஆனா இந்த மாசம் தேதி 5 ஆவுது, என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. போன் செஞ்சும் கேட்டுவிட்டேன்,போன வாரமே அனுப்பிட்டோம் என்று சொல்லுறாங்க!, போஸ்ட் மேனை புடிக்கதான் வெயிட்டிங், அதுல ஸ்பானீஸ் மொழி சிறுகதைகளை மொழிபெயர்த்து போடுவாங்க பாரு சான்சே இல்ல, அதுக்காகதான் அந்த சிற்றிதழுக்கு 20,000 ஆண்டு சந்தா கட்டியிருக்கேன் என்றால் பார்த்துக்கேயன். என்னது சிற்றிதழுக்கு 20,000மாவா? அட நீ வேற 20,000 என்பது எங்க ஊட்டுல ஒரு நாளைக்கு நாங்க வாங்கும் புக்கோட மதிப்பு yaa!.
பதிவர் ஆகும் முன்பு:
மச்சி டேய் இந்த வாரம் குமுதம் பார்த்தியா? அதுல நடு பக்கத்தில் போட்டு இருக்கான் பாரு ஒரு போட்டோ,அவ்வளோ அருமையா இருக்கு மச்சி, குமுதம் வாங்குவதே அந்த நடுபக்க மேட்டருக்குதான் ங்கொயாலே கொடுத்தகாசு வேஸ்டா போகல.
**********
பதிவர் ஆன பிறகு:
ஹேய் பிரதர் மார்க்! இந்த உயிர்மை, மணல்வீடு, உயிர் எழுத்து,மீட்சி, அன்னம் விடு தூது, ழ, மணிக்கொடி, எழுத்து இவை எல்லாம்நான் விரும்பி படிக்கும் சிற்றிதழ்கள், இதுல என்ன பிரச்சினைன்னா முன்னாடி வந்துக்கிட்டு இருந்த ஃ, அமீபா,காலக்குறி எல்லாம் இப்ப வருவது இல்ல அதுல வரும் சிறுகதை, கவிதையை படிக்க எத்தனை லட்சம் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.திரும்பி இவை எல்லாத்தையும் அச்சில் பார்க்க முடியுமான்னு ஏக்கமா இருக்கு. மீதி இருக்கும் சிற்றிதழ்களையாவது காக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து இந்த வார இதழ்கள்,ஜன ரஞ்சக பத்திரிக்கைகள் அட்டைப்படத்தை கூட பார்த்தது இல்லை.
பதிவர் ஆகும் முன்பு:
மச்சி நம்ம மாதவன் புக் சர்க்குலேசன் ஆரம்பிச்சிருக்கான் டா, போனவாரம் வந்த ராணி,முத்தாரம்,குமுதம்,ஆனந்தவிகடனை எல்லாம் இந்த வாரம் கொடுப்பான், ஒவ்வொரு புத்தகத்துத்தையும் ரெண்டு நாள் வெச்சிக்கலாம். நமக்கு என்னா அதில் வரும் சினிமா மேட்டரையும், கிசுகிசுவையும் படிக்க அரை நாள் போதுமே.அதுனால படிச்சி முடிச்சிட்டு உடனே கொடுத்து விடுவேன்..மாசம் 30 ரூபாய் தான்.
*********
பதிவர் ஆன பிறகு:
ஹேய் பிரதர் மார்க்! இரண்டுநாள் லீவு போட்டு விட்டு பெங்களூரில் இருந்து சென்னையில் நடக்கும் புத்தககண்காட்சிக்கு சென்றேன் இந்த முறைவாங்கிய இலக்கிய நாவல்கள், 1. ஜெயமோகனின் கொற்றவை2. ஜே.டி. குரூஸின் ஆழி சூழ் உலகு3. சாரு நிவேதிதாவின் ராசலீலா4. கோணங்கியின் பிதிரா5. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்6. ஜே. டி. குரூஸின் கொற்கை7. *100.சுந்தரராமசாமி கதை கட்டுரை முழுத் தொகுப்பு ரஷ்யாவில் ஒரு உலக புத்தக கண்காட்சி இந்த மாசம் கடைசியில் இருக்காம் போய் வர டிக்கெட் புக் செஞ்சிட்டேன்.
பதிவர் ஆகும் முன்பு:
மச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி சரோஜாதேவியும் மருதத்தையும் பிரண்டு ஒருத்தன் கொடுத்தான் என்னாமா இருந்துச்சு தெரியுமா?அதுமாதிரி எழுத சரோஜாதேவியை தவிர வேற யாராலையும் முடியாதுடா...நோட்டுக்குள் மறைச்சி மறைச்சி எடுத்து வரங்காட்டியும் ரொம்பகஷ்டமா போச்சுடா மாமா!பழவந்தாங்கலில் ஒரு பழய புத்தக கடையில் இந்த புக்கை எல்லாம் எடை போட்டு விக்கிறானாம் ரொம்ப சல்லிசா வாங்கலாமாம் பிரண்டு ஒருத்தன் சொன்னான் இந்த வாரம் போகனும்...
**********
பதிவர் ஆன பிறகு எழுதும் கவிதை!
ஹேய் பிரதர் மார்க்! ஒரு கவிதை எழுதியிருக்கேன் கேளேன்!
அகிரா,பிரஸ்ஸோன் மற்றும்
மொராக்கோ சகோதரர்களிடம்
சிக்கியிராத
தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவை
ஒளிப்படச் சுருளில்
பொதிந்துவைக்க
குளிர் விரவிய
தெருக்களில் மிதந்தபடி
விரல்சுடும் சிகரெட்டை
காற்றில் சுண்டி விடுகிறான்
பொறிகளை
சிதறவிட்டு
மெல்ல அணைகிறது
கங்கு.
பதிவர் ஆகும் முன்பு எழுதிய கவிதை:
கவிதை தலைப்பு: ஸ்டிக்கர் பொட்டு!
நிலவில்
ஒட்டியிருக்கும்
நட்ச்சத்திரம்!
கவிதை தலைப்பு: அம்மாவாசை
இன்று என்
தேவதை
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை!
*********
பதிவர் ஆன பிறகு:
ஹேய் பிரதர் மார்க்! கடந்த வாரம் பார்த்த குவாண்டினின் டெரோண்டோவின் Death Proof படம் பார்த்தேன் அதுல வரும் பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். வரும் விடுமுறையில் குவாண்டி டெரோண்டோ, கிம்கிடுக் ஆகியோரின் படங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்த்து முடிச்சிடனும்.
பதிவர் ஆகும் முன்பு:
நண்பன்: மச்சி உலகப்படம்ன்னா என்ன டா? போனவாரம் நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டரில் பார்த்தோமேடா? சிராக்கோன்னு ஒரு படம் அதுதான் உலகப்படம், பிட்டே போடனும் என்ற அவசியம் இல்லாம படம் முழுக்க பிட்டாவே இருந்துச்சு பார்த்தியா? அதுதான். இந்த வாரம் ஏதோ பிரெஞ் மொழி படம் ஒன்னு ரிலீஸ் ஆவபோவுதாம் என் பிரண்டு அங்கிருக்கும் ஆப்புரேட்டருக்கு தெரிஞ்சவன் செம கில்மாவா இருக்காம் முதல் ஷோவே போய்விடனும்.
************
பதிவர் ஆன பிறகு:
ஹல்லோ பிரதர் மார்க், ஆக்ஸ்வலி நான் தமிழ்படம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு, பிரண்டு ஒருத்தன்ரொம்ப தொல்லை செஞ்சானேன்னு யாவரும் நலம் படம் பார்த்தேன் பிசி ஸ்ரீராம் கேமிரா ஆங்கிள் சரியில்லை சுத்த வேஸ்ட், அதுமாதிரி மணிரத்தனம் என்றுயாரோ ஒருத்தர் ரொம்ப நல்லா தமிழ்படம் எல்லாம் எடுப்பார் என்று அவரோட பட DVDயை கொடுத்தான் படமா அது லைட்டிங் சரியில்லை...
பதிவர் ஆகும் முன்பு:
பதிவரின் நண்பர்( டேய் அக்காவோட நிச்சயத்துக்கு போட்டோ எடுடான்னு சொல்லி கேமிராவை கொடுத்தா பரிசம் போட்டவங்க தலையையும் காணும், உட்காந்திருக்கும் அக்கா மூஞ்சும் தெரியவில்லை யாரைடா போக்கஸ் செஞ்ச? இல்ல உன்கிட்ட போய் கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்)
*********
பதிவர் ஆன பிறகு:
ஹேய் பிரதர் மார்க்! கடந்தவாரங்களில் என் எழுத்தை பாரட்டி வந்த கடிதங்களை எல்லாம் உனக்கு படிச்சிக்காட்டினேன் நினைவு இருக்கா?... ஆப்பிரிக்காவில் இருந்து உராங் உட்டான் எழுதிய கடிதம், அண்டார்ட்டிக்காவிலிருந்து பாண்டா எழுதிய கடிதம். இந்த வரிசையில் துபாயிலிருந்து குசும்பன் எழுதிய இந்த "வரம் கடிதம்..." உங்கள் எழுத்தை படித்தால் தான் காலையில் எனக்கு கக்காவே போவுது, மஜாமல்லிகா சைட்டுக்கு அடுத்து அடிக்கடி பார்க்கும் பிளாக் உங்களுடையதுதான்" சென்னை வரும் பொழுது உங்களை ஒரு முறையாவது தொட்டு பார்த்துவிடனும் என்று என் ஆசை, உங்க எழுத்தை Phd, செய்யனும்என்று நினைக்கிறேன் அது முடியாவிட்டால் உங்க எழுத்தை பிரிண்ட் எடுத்து அட்லீஸ்ட் பச்சடி செய்தாவது தினம் தினம் கொஞ்சம் சாப்பிடுவேன் இது என் தாய்மொழி மீது சத்தியம். விரைவில் உங்களுக்கு துபாய் ஷேக் சாயித் ரோட்டில் ஒரு கட் அவுட்வெச்சி அதுக்கு பாலாபிஷேகம் செய்யலாம் என்று இருக்கிறேன். உலகிலேயே முதன் முறையாக பத்து கோடி ஹிட் வாங்கிய பதிவர் ஒருவருக்கு கட் அவுட் வெச்சாங்க என்ற பெருமை உங்களுக்கு கிடைப்பதை விட அதை வெச்சவன் என்ற பெருமையை எனக்கு நீங்கள் தரவேண்டும். அதுக்கு உங்கள் அனுமதி வேண்டும்.
பதிவர் ஆகும் முன்பு: வாரமலர் அன்புடன் அந்தரங்கத்துக்கு எழுதிய கடிதம்:
அன்புள்ள வாரமலர் அந்தரங்கம் அக்கா,
நான் எதிர் வீட்டில் இருக்கும் ராணி என்ற பெண்ணை 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன், போன வாரம் நாங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது முத்தம் கொடுத்துவிட்டேன், பின்பு எப்பொழுதும் அதே நினைப்பாக இருக்கிறது, படிக்க முடியவில்லை தூங்க முடியவில்லைஆனால் இரண்டு நாட்களாக என்னிடம் பேசமாட்டேங்கிறாள் செத்தே விடலாம் போல இருக்கிறது.வீட்டில் யாரும் இல்லாத பொழுதுதான் பேச முடியும் என்கிறாள், தினம் அவளிடம் பேசனும் இல்லை என்றால் எனக்கு பைத்திய்யம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. அதனால் எங்கயாவது அவளோடு ஓடிவிடலாமா? 11 வது படிச்சிக்கிட்டு இருக்கேன் எனக்கு கலெக்டர் வேலை கிடைக்குமா? அரசு சலுகை ஏதும் கிடைக்குமா?
57 comments:
பெயருக்கேத்த பதிவு......
ஹி.....ஹி....
சிரிப்போ சிரிப்புதான் :)
அக்மார்க் குசும்பு!
அதுலேயும் அந்த அந்தரங்கம் கடிதம், சான்சே இல்ல!
:)))))))))))
எல்லாமே ஓக்கேன்னாலும் அந்த கடைசியில வந்த வாசகர் கடிதம் மனசை ரொம்பவே நெக்குருக வைச்சிடுச்சு குசும்பன். மிக நேர்த்தியான பதிவு என்பதற்கான அடையாளம் தாங்கிய இடுகைகளை தாக்கியோ தள்ளியோ வைக்காமல் அவற்றின் ஆதி’மூலத்தை பிட்டு எடுத்துப் போட்டு கொட்டிக்கவிழ்த்த உங்கள் பின்னவீனத்துவத்திறம் வியப்புக்குரியதாகிறது.
குசும்பன் பதிவு எழுதுகின்ற காலத்தில், நேரத்தில், ஊரில் வாழ்வது மனதுக்கு மிக மகிழ்ச்சியளிக்கின்றது.
என்ன தவஞ் செய்தனையோ சென்ஷி!
என்னது? 11 வதா?
இது எப்ப எழுதி இப்ப வெளிவருது??
//கவிதை தலைப்பு: ஸ்டிக்கர் பொட்டு!
நிலவில்
ஒட்டியிருக்கும்
நட்ச்சத்திரம்!
கவிதை தலைப்பு: அம்மாவாசை
இன்று என்
தேவதை
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை!//
ச்ச்ச்சான்ஸே இல்லை மச்சி.. செம்மயா இருக்குது. வாரமலருக்கு அனுப்பினா 50 ரூவா கிடைக்கும். குடும்ப மலருக்கு 20 ரூவான்னு நினைக்கறேன்...
//ஆப்பிரிக்காவில் இருந்து உராங் உட்டான் எழுதிய கடிதம், அண்டார்ட்டிக்காவிலிருந்து பாண்டா எழுதிய கடிதம். இந்த வரிசையில் துபாயிலிருந்து குசும்பன் எழுதிய இந்த "வரம் கடிதம்..." //
கரெக்டா நீ உன் கேங்குக்கு கூட சேர்ந்துக்கறியே மச்சி.. எப்படி இப்படில்லாம்...!
கமெண்ட் போடாம நகர விடாத பண்ணீட்டீங்களே?
சூ சூ சூப்பர்
:))))))))))))))))))))))
:-))
ஹல்லோஓஓ..... அருமை !!
ஹேய் பிரதமர் மார்க்!
சக தமிழ்ப் பதிவனைப் போற்றிப் பாராட்டத் தெரியாத தமிழ்ச் சமூகம் என்றைக்கு உருப்படப் போகிறது.
மச்சி நீ சொல்லுற நிறைய பேரை எனக்கு தெரியும்
::)))))))))))
:))))))))))))))))))))))
இந்த பதிவுக்கு கமெண்ட் போடவே ஒரு ப்ளாக் உருவாக்கி வந்திருக்கேன் குசும்பு :)))))))))))) செம... சிரிச்சுட்டே இருக்கேன் :))
கவிதையில கலக்குறீங்களே. :))
பதிவரா ஆனப்பின்னாடி ரொம்பத் தான் Peterish-ஆ மாறிடறாங்க போல! நல்லா இருக்கு நண்பா!
L))))
உன் அழும்புக்கு கூடி வச்சு கும்மப் போறாங்க.. சாக்குறதை. அளவுல்லாம போயிகிட்டிருக்குது. அம்புடுதான் சொல்லிப்புட்டேன்.
ஹிஹி.. அதே சமயம் நீ குத்து வாங்குனா சந்தோஷப்படுற முதல் ஜீவன் நாந்தான் மாமா.! :-)))))))
இதுநாள் வரைக்கும் வாரமலர் அந்தரங்க கடிதம்லாம் யாரு எழுதுவானு தெரியாம இருந்துச்சு... நிறைய முறை படித்து யாரை பாராட்டவென்றெ தெரியாமல் இருந்திருக்கிறேன்.
இப்போது நீங்கள்தான் எனத்தெரிந்ததால் உங்களை வாழ்த்துக்கிறேன்....
நீங்கள் எழுதும் கடிதம் ஒவ்வொன்றும் தூள் :))))))))
:))))))))))))))
:)))))
கலக்கல் :)
//நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டரில் பார்த்தோமேடா? சிராக்கோன்னு ஒரு படம் அதுதான் உலகப்படம், பிட்டே போடனும் //
அண்ணாச்சி பர்வீன் தியேட்டர் நாஞ்சிக்கோட்டையில இல்லை. அண்ணாநகர்ல இருக்கு. wrong information கொடுத்து உங்கள் வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.
//நான் தமிழன். said...
//நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டரில் பார்த்தோமேடா? சிராக்கோன்னு ஒரு படம் அதுதான் உலகப்படம், பிட்டே போடனும் //
அண்ணாச்சி பர்வீன் தியேட்டர் நாஞ்சிக்கோட்டையில இல்லை. அண்ணாநகர்ல இருக்கு. wrong information கொடுத்து உங்கள் வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.//
இவருதான் சாரு(வு)க்கு லெட்டர் எழுதற பார்ட்டி போல.. :))
குசும்பா....கொஞ்சம் காலைக்காட்டுங்க, வாரிவுடறதுக்கு இலலதல கும்பிடறதுக்கு...
வாரமலர் வாசகர் கடிதம் யப்பா...வயிறுவலிக்குது...:))
:)))))))))
//சென்ஷி said...
//நான் தமிழன். said...
//நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டரில் பார்த்தோமேடா? சிராக்கோன்னு ஒரு படம் அதுதான் உலகப்படம், பிட்டே போடனும் //
அண்ணாச்சி பர்வீன் தியேட்டர் நாஞ்சிக்கோட்டையில இல்லை. அண்ணாநகர்ல இருக்கு. wrong information கொடுத்து உங்கள் வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.//
இவருதான் சாரு(வு)க்கு லெட்டர் எழுதற பார்ட்டி போல.. :))
//
அப்படி என்றால் என்ன அர்த்தம்.
தவறை சுட்டிக்காட்டுவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம்.
இது அண்ணன் குசும்பன் மேல் ஆணை.
தம்பி..
அப்படியே நான் செஞ்சது, செய்றது மாதிரியே இருக்குடா ராசா..!
எப்படிடா..? உனக்கு மன்ச்சுக்குள்ள புகுந்து வர்ற வித்தையும் தெரியுமா..? சரி.. சரி.. பொழைச்சுக்குவ..
அப்புறம் அந்த சிராக்கோ படம் உலகப் படம் தம்பி.. பிட்டு படம் இல்லை..!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பி..
அப்படியே நான் செஞ்சது, செய்றது மாதிரியே இருக்குடா ராசா..!//
போங்கண்ணே.. விளையாடாதீங்கண்ணே... நீங்க செஞ்சா இவ்ளோ சின்னதாவா இருக்கும்....குசும்பனை விட உங்க இந்த காமெடிதான் டாப்பு :)))))
:)))))))
ROFL :-)
:)))))))))
:)))))))))
ஐயோ அந்த வாரமலர் விஷயம் அதி பயங்கரம் ..
இப்பூடி எல்லாமா எழுதறது ..?!?
உங்க பதிவை படிச்சு ஒரே சிரிப்பு தான்..அலட்டல் பதிவர்களின் அந்தரங்கங்களை(ஹீ..ஹீ) புட்டு..புட்டு..சை..பிட்டு..பிட்டு..ஏதோ ஒன்னு வட்சுருக்கிங்க குசும்பன்.பதிவும் சூப்பர்..இதற்க்கு வந்த பின்னூட்டங்களும் சூப்பர்..எல்லாரும் ராவடி பண்ணிருக்கிங்க..நல்ல காமடி பார்த்த திருப்தி..
உலகிலேயே முதன் முறையாக பத்து கோடி ஹிட் வாங்கிய பதிவர் ஒருவருக்கு கட் அவுட் வெச்சாங்க
//
ஏங்க இது ஜா.கி குமாரா இருக்குமோ ???
துபாயிலிருந்து குசும்பன் எழுதிய இந்த "வரம் கடிதம்..."
//
ஆசிப் என்ற பதிவருக்கு போட்டியா நீங்களும் எழுத ஆரம்பிச்சிட்டிங்களா ??
//வண்ணான் said...
துபாயிலிருந்து குசும்பன் எழுதிய இந்த "வரம் கடிதம்..."
//
ஆசிப் என்ற பதிவருக்கு போட்டியா நீங்களும் எழுத ஆரம்பிச்சிட்டிங்களா ??/
ஆசிப் என்பவர் பதிவரா????
//ஆசிப் என்பவர் பதிவரா????//
அவர் சன் டீவி புகழ் இணையத்தள எழுத்தாளர் என்ற வரலாறு தெரியாமல் வளரும் தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது நாவலாசிரியர் சென்ஷி அவர்களே :))
ஆசிப் என்பவர் பதிவரா????
//
ஆசிப்மீரான்
http://asifmeeran.blogspot.com/
நாவலாசிரியர் சென்ஷி அவர்களே :))
//
என்னது சென்ஷி நாவலாசிரியரா ??
மொக்கைகவிஞர் இல்லையா?
சென்ஷி நாவல் எழுதியிருக்காரா?
பொன்னின் செல்வன்,கடற்புறா மாதிரி இருக்குமா??
இருக்குமென்றால் காலை நன்றாக ஆட்டடும்
கல்கியும்,சாண்டிலியனும் ஆவியா வந்துட்டாங்க என்று கொளுத்திட போறாங்க :)
நன்றி விசுவநாதன்
நன்றி அம்மிணி
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி சென்ஷி..கடிதம் எழுதுவதும் அதை பிளாக்கில் போடுவதும் தான் பேமஸ்
மச்சி:)
நன்றி வடுவூர் குமார்
நன்றி அஹமது இர்ஷாத்
நன்றி யாசவி
நன்றி Anbu
நன்றி மகேஷ்
நன்றி வெயிலான் அண்ணே!
நன்றி மின்னல்
நன்றி ஜெகதீசன்
நன்றி விஜி! அன்புக்கு நன்றி!
நன்றி சுல்தான்பாய்:))
நன்றி என்னது நானு யாரா?
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி கும்க்கி
நன்றி ஆதி, வாங்குவதில் ஆளுக்கு பப்பாதி:))
நன்றி கண்ணா
நன்றி சிவகாசி மாப்பிள்ளை
நன்றி வித்யா
நன்றி தாரணி பிரியா
நன்றி நான் தமிழன், பிட்டு பரவசத்தில் எல்லைய மறந்துட்டேன்:))
நன்றி நாஞ்சில்
நன்றி ராஜசூரியன்
நன்றி உ.த என்னது சிராக்கோ உலகப்படமா? அதுமாதிரிதான் உலகப்படம் இருக்கும் என்றால்
எத்தனை வேண்டும் என்றாலும் பார்க்கலாமே:))
நன்றி தர்ஷன்
நன்றி லேகா
நன்றி பதி
நன்றி அப்துல்மாலிக்
நன்றி செல்வக்குமார்
நன்றி ஆனந்தி
நன்றி வண்ணான் ஏன்யா சும்மா இருக்கும் சிங்கத்தை சீண்டுற:)))
கடைசியில் உள்ள கடிதம்.......... RIALLY SUPERB....!
//அதனால் எங்கயாவது அவளோடு ஓடிவிடலாமா? 11 வது படிச்சிக்கிட்டு இருக்கேன் எனக்கு கலெக்டர் வேலை கிடைக்குமா?//
பட்டை..:))))
// அரசு சலுகை ஏதும் கிடைக்குமா?//
ROTFL
//வாங்குவதில் ஆளுக்கு பப்பாதி:))//
ஹஹஹஹா
கொன்னுட்டடா! வாரமலர் கடிதம் மாஸ்டர் பீஸ்ல லெக் பீஸ்!!
அசத்தல் :))))
கவிதையும்,அந்தரங்கம் கடிதமும் சரியான satire.. நினைத்து நினைத்து சிரித்துகொண்டிருக்கிறேன். சூப்பர்,
மச்சி,
Back to Kalakkal form..சூப்பர்டா....பஸ்ஸை விட்டு இறங்கியதுமே கலக்குற... இதுக்கு மேல அந்த பக்கம் எல்லாம் வந்துடாத..
ஆமா இலக்கியவாதி சென்ஷிக்கு என்னா ஆச்சி அவரு சொல்லுறது ஒண்ணிமே புரியலை...
//வண்ணான் said...
சென்ஷி நாவல் எழுதியிருக்காரா?
பொன்னின் செல்வன்,கடற்புறா மாதிரி இருக்குமா??//
வண்ணான்,
அதுக்கு நீங்க மறுபடியும் பொன்னியின் செல்வன், கடல்புறாவையே படிச்சிட்டுப் போயிடலாமே ;))
பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :-)
வழக்கம் போல் கலக்கியிருக்கீங்க !!!
-விமல்
//வண்ணான் said...
நாவலாசிரியர் சென்ஷி அவர்களே :))
//
என்னது சென்ஷி நாவலாசிரியரா ??
மொக்கைகவிஞர் இல்லையா?/
உங்களுக்குத் தெரியுது. கண்ணா நம்ப மாட்டேங்கறாரு :((
Wow!
SuperB!
:)) சூப்பர்...:)))
பிரமாதங்க.
ஒவ்வொண்னும் செம குசும்பு
Post a Comment